வைகோ சீமான் தொழில் போட்டி

நீண்ட நாட்களாக சீமான் ஈழம் என சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றார், அதை தாங்கள் இனிமேலும் அனுமதிக்கமாட்டோம் : வைகோ

இதுதான் தொழில்போட்டி, தன் தொழிலை அழித்தவனை எப்படி சும்மா விடுவார் வைகோ, எப்படி அனுமதிப்பார்

அமைதிபடை காலத்திலே உயிருக்கு அஞ்சாமல் பிரபாகரனை சந்தித்தவருக்கு கல்லா கட்டும் உரிமை இருக்கும் போது, திடீரென வந்த சீமான் எப்படி கல்லா கட்டலாம், தொழில் ரீதியான கோபம் வருமல்லவா?

எப்படியோ ராஜதந்திரம் இரண்டாம் இன்னிங்க்ஸ் வெளிப்பட போகும் நேரம்.

கவிஞர் நா. முத்துகுமார்

இனி நா.முத்துகுமார் எனும் கவிஞன் இல்லை, அநாசயமாக பாடல்களை எழுதும் அந்த கவிஞன் இனி இல்லை.

காஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை.

FB_IMG_1471177886130

1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது.

அவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொற் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை

12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் கொட்டிய கவிமழை கொஞ்சமல்ல. காதலும், தாலாட்டும், சில தத்துவங்களும் அவன் பாடல்களில் கலந்திருந்தன‌

இன்னும் உச்சம் பெறுவார், நிச்சயம் அற்புதமான பாடல்களை கொடுப்பார், ஒரு உயரம் சென்றுவிட்ட அவர், இன்னொரு உயரம் கொடுப்பார் எனும்பொழுதுதான் இந்த பெரும் துயரம் நடந்துவிட்டது.

பொதுவாக கவிஞர்கள் அற்புதமான எழுத்தாற்றல் கொண்டிருப்பார்கள். எழுத்துதான் அவர்கள் திறமை, அதுதான் பாடலாக, அழகான சொற்களோடு வரும்.

அப்படி கவிஞர்கள் எல்லாம் எழுத்தாளராகவும் மிளிர்வார்கள், எல்லா கவிஞர்களும் பின்னாளில் எழுதுவார்கள், விதியினை அறிந்தாரோ முத்துகுமார் தெரியாது, சில புத்தகங்களையும் எழுதியிருந்தார். காலம் வழிவிட்டிருந்தால் முத்திரை புத்தகங்கள் பின்னாளில் கிடைத்திருக்கலாம். விதி அது அல்ல.

பாடல் எழுதுவது மகா சிரமமானது, ஒரிரு ஹிட் பாடலை எழுதிவிட்டு கவிஞர்கள் காணாமல் போகும் திரையுலகது, 12 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் நிற்பது பெரும் சாதனை, மனதில் பெரும் ரசனை இருந்தால் ஒழிய அது சாத்தியமில்லை, அந்த ரசனையே உருகி உருகி கவி ஆறாய் கொட்டும்

இன்று அந்த மலையினையே காலம் தகர்த்து எறிந்துவிட்டது.

தமிழ் பாடல் உலகிற்கு அது ஒரு சாபம். அற்புதமான கவிஞர்கள் பலர் நீண்ட காலம் உயிரோடு வாழ்வதில்லை

பாரதி அப்படி 36 வயதிலே செத்தான்.

பெரும் கவிஞன் என கொண்டாடபட்ட பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் 28 வயதில் உலகைவிட்டு மறைந்தார்.

கவியரசர் கண்ணதாசன் 52 வயதில் காலமானார்.

அதே கொடும்விதி நா.முத்துகுமாருக்கு 41 வயதில் இருந்திருக்கின்றது.

என்ன சொல்லி அழுவது, என்ன சொல்லி ஆறுதல் தேடுவது என்றே தெரியவில்லை.

நமக்கு நாமே ஆறுதல் சொல்லுமுன் அவர் குடும்பத்தாரை நினைத்தால் எப்படி இரங்கல் சொல்வது?

ஆனந்தயாழை மீட்டுகிறாய், ஆரிரோ இது ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு என சொன்ன அந்த கவிஞன் பிள்ளைகளிடம் எப்படி இருந்திருப்பான்.

அதனை நினைத்தாலே நெஞ்சு கலங்குகின்றது.

எல்லா கலைஞனுக்கும் ஒரு ஆசை இருக்கும், அதனை வித்தை கர்வம் அல்லது தொழில்பற்று என்றே சொல்லலாம்

பதவியில் இருக்கும்போதே மரணம் அடைய நினைப்பான் அரசியல்வாதி, பிரார்த்தனையின் போதே உயிர்பிரிய வேண்டும் என்பான் பக்தன். கேமரா முன் நடித்துகொண்டிருக்கும் பொதே செத்துவிட வேண்டும் என்பான் நல்ல நடிகன்.

அதாவது புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

தமிழகத்து புகழ்மிக்க கவிஞர்கள் சிலருக்கு வாய்த்த அது முத்துகுமாருக்கு வாய்த்தது, கொடிகட்டி பறந்த காலத்திலே அவர் இறந்திருக்கின்றார்.

பாடல் ரசனை மிகுந்த தமிழுலகம் இன்று கதறி துடிக்கின்றது. இப்படி பெரும் திறமைசாலி விரைவில் போய்விடுவான் என்றுதானோ காலம் அவனுக்கு கடைசிநாட்களில் இப்படி உச்சத்தில் வைத்து பார்த்திருக்கின்றது

ஒன்றா இரண்டா நினைவுகள்?

கண்ணதாசனின் இடத்தினை வாலியும், வைரமுத்துவும் நிரம்ப்பினார்கள். வாலியின் இடத்தினை ஒருவன் நிரப்பிகொண்டிருந்தான் என்றால் சந்தேகமே இன்றி சொல்லலாம் அது முத்துகுமார். அந்த இடத்தினை நிரப்புவது சாதாரண விஷயம் அல்ல.

வைரங்கள் மின்னிய இடத்தில் இன்னொரு வைரம்தான் மின்ன முடியும், அவர் மின்னினார்.

அந்தோ பரிதாபம் இனி அவர் பாடல் வானில் மின்னும் நட்சத்திரமாக நினைவுகளில் மின்னிகொண்டிருப்பார்.

நல்லதோர் வீணை செய்தே..அதை நலங்கெட தீயில் எரிப்பதுண்டோ…

ஆனால் எரிந்துவிட்டது காலம். அந்த கொடும்காலத்தால் முடிந்தது அதுதான், மற்றபடி அதே காலத்தில் அவன் முத்திரையும் பதித்துவிட்டான்.

நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன‌

2009 வாக்கில் வெயில்மிகுந்த நமது கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் மழை மட்டும் பார்க்கும் நாட்டில் வாழ்ந்த மனிதரை சந்திக்கும்பொழுது, “வெயிலோடு விளையாடி..” பாடல் ஒலித்துகொண்டிருந்தது

அம்மனிதர் அப்பாடலை கவனித்துகொண்டே இருந்தார், “வெயிலை தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்” என அப்பாடல் முடியும் பொழுது அவர் கண்கள் கலங்கி இருந்தன.

வெயில் மிகுந்த கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையினை அதனை தவிர வேறு வார்தைகளில் சொல்லிவிட முடியாது.

கண்களை துடைத்துகொண்டே கேட்டார், “எழுதியது யாரய்யா? வைரமுத்தா?”

இல்லை இது நா.முத்துகுமார் எனும் புதிய இளைஞர்

“பிரமாதமாய் எழுதியிருக்கான்யா, மனச தொட்டுபார்க்கிற சக்தி அவன் பாட்டுல இருக்கு, நம்ம ஊர் வாழ்க்கைய்யா, வெயில தவிர என்ன இருந்து, அசால்ட்டா சொல்லிட்டான் பாருய்யா, இருந்து பாரு, இன்னும் பெரிசா வருவான்.”

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள்.

அப்படியே பிரகாசமாய் வந்தார் முத்துகுமார், பிரகாசம் என்றால் பெரும் பிரகாசம்.

ஆனால் அது விளக்கு அணையும் முன் வந்த‌ பிரகாசம் என நினைக்கும்பொழுது நெஞ்சு உடைந்து மறுபடியும் அழ தோன்றுகின்றது.

முகநூலில் கருத்து சுதந்திரம் ஆபத்தானது என்கிறார் தந்தி டிவி பாண்டே

முகநூல் தளங்களின் கருத்து சுதந்திரம் ஆபத்தானது என்கிறார் தந்தி டிவி பாண்டே.

FB_IMG_1471148987358

எப்படி? ஊடக சுதந்திரம் மிக சரியாக இருக்கிறது ஆபத்து இல்லை என்றால், முகநூல் சுதந்திரம் எப்படி ஆபத்தாகும்?

சீமானை இவர் வளர்த்துவிட்டதும், கேட்க வேண்டிய கேள்விகளை மிக தந்திரமாக மறைத்தபொழுது அவற்றை தோலுரித்து காட்டியது முகநூல் பதிவுகளே

வீரமணியினை கலாய்பதாக நினைத்துகொண்டு சில விஷ கருத்துக்களை சொன்னபொழுது அடித்துவெளுத்தது முகநூலே

இப்படி ஏராளமான விஷயங்களை சொல்லலாம்

பாண்டே மட்டும் அல்ல, தமிழகத்து எல்லா ஊடகங்களில் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது, ஒரு காலத்தில் சுதேச மித்திரன், அக்கால தினமணி என நாட்டுபற்று மிக்க
ஊடகங்கள் இருந்தன அவற்றிற்கொரு மதிப்பு இருந்தது. சில பத்திரிகைகள் சினிமாவினை கொண்டாட ஆரம்பித்த வியாபார சுயநல காலமுதல் அதன் மதிப்பு வீழ்ந்தது

அரசியல் அதில் கலக்க ஆரம்பித்தவுடன் அது சாக்கடை ஆயிற்று

இந்த விஞ்ஞான யுகத்தில் ஊடகங்கள் சேட்டிலைட் டிவிக்கள் ஆயின. அரசியல்,கல்வி கொள்ளையன் முதல் மணல் கொள்ளையன் வரை டிவி நடத்தும் காலமிது.

ஊடகம் என்பது பணக்கார வர்கத்தின் ஆயுதமான ஒரு காலமிது, அதாவது நாங்கள் நினைத்தால் செய்திகளால் மிரட்டுவோம், ஆட்சியாளர்களை மிரட்டுவோம், அதிகாரிகளை மிரட்டுவோம்

ஆதலால் எங்களை பற்றி நீங்கள் பேச கூடாது, உங்களை பற்றி நாங்கள் பேசமாட்டோம்

இப்படி ஒரு பொது புரிந்துணர்வில் அரசியல் மற்றும் சமூக கொள்ளையர்களின் கரங்களில் சிக்கி இருக்கின்றது ஊடகம்.

இதில் சாமன்யனின் குரல் ஒலிக்குமா? நிச்சயம் முடியாது

அனால் அதே விஞ்ஞானம் சாமான்யனுக்கு முகநூல் வழியாக வழிவிடுகின்றது இது எப்படி தவறாகும்?

முகநூல் ஆபத்து என்றால் அதுபோன்ற ஊடகங்கள் மகா ஆபத்து அல்லவா?

இக்காலத்தில் ஒரளவேனும் நியாமான கருத்துக்கள் மோதுமிடம் முகநூலே, சீமான் எனும் போலியினை ஒரு தேச துரோகியினை பாண்டே உயர்த்தி பிடித்தபொழுது ஒட அடித்தது முகநூலே

கலைஞரை, ஜெயாவினை கொஞ்சமும் பேசமுடியாமல் பாண்டே முழிக்கும்பொழுது அடித்து கலாய்ப்பது முகநூலே, தற்கால ஊடகங்களில் எம்மை பொருத்தவரை பணியினை செய்தது சவுக்கு எனும் தளமே. அதில் ஜாபர்சேட் எனும் சுயநலம் இருக்கலாம் ஆனால் அதில் பொதுநலம் மிக மிக அதிகமாக இருந்தது.

எத்தனை கருத்துக்களை மோதவிடுகிறது முகநூல், அதில் பாண்டே இன்னும் பல ஊடகவிற்பனர்கள் விமர்சிக்கபடுவர் அல்லது முகம் உரிக்கபடும். இதனை தாங்க தன்னை இன்னும் தயார் படுத்திகொள்ளவேண்டும், இப்படி சாட கூடாது.

அவர்கள் சொல்வது மட்டும் உண்மையாம், முகநூலில் வருவடு மட்டும் ஆதாரமில்லாததாம். சரி நீங்கள் யாரிடம் உருப்படியான கேள்வி கேட்டீர்கள்? ஒருவன் முகத்தை தோலுரிதீர்களா? ஒருவனை கேள்வியில் சிக்க வைத்தீர்களாஅ?

2 கேள்வி உருப்படியாக கேட்டால் அந்தமானுக்கு தப்பி இருப்பான் சீமான், செய்தீர்களா? உங்கள் முன் அருணனுக்கு சவால் விட்ட சீமான் தோற்றபின் என்ன கிழித்தீர்கள்? அது ஊடக உண்மை தன்மைக்கு ஆபத்து இல்லையா?

உண்மையில் பாண்டே சொல்லவந்தது முகநூல் கருத்துக்களால் தனக்கு ஆபத்து, தன்னை பொன்றவர்களுக்கு ஆபத்து என்பதே

பதற்றத்தில் மனிதர் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றிவிட்டார் அவ்வளவுதான்.