கவிஞர்கள் தொல்லை தாங்கலைடா சாமி

2 பதிவுகள்


நான் ஒரு விமான விபத்திலோ அல்லது ஒரு துப்பாக்கி தோட்டாவினாலோ இறக்க விரும்புகிறேன். கவிஞர்கள் குடித்தே சாகிறார்கள் என்ற அவச்சொல்லை இனிமேலும் சகிக்க முடியாது

-மனுஷ்ய புத்திரன்.

இவரை கவிஞர் என யார் ஒப்புகொண்டார்? இவராக அப்படி நினைத்துகொண்டு இன்று சந்தடி சாக்கில் நானும் கவிஞர் என சொல்லவும் வந்துவிட்டார்

ஆந்தைகள் எல்லாம் குயிலாக முடியுமா?

10 வரி பத்தியினை, பிரித்து எழுதினால் அது கவிதையா?

தலைவன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால்

“அடடா..இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி…..தமிழில் எழுத படிக்க தெரிஞ்சவன் எல்லாரும் கவிஞனாம்”

எந்த அவச்சொல்லையும் இவரால் சகிக்க முடியவில்லையாம், அப்படியானால் இவரின் கவிதைகள் எனப்படும் இம்சைகளை தமிழகம் எப்படி சகித்துகொண்டிருக்கின்றது


திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருந்த ரூ.186 கோடி மதிப்புள்ள 769 தங்க பானைகள் மாயம்

உலகம் போகிற போக்கில் அங்கு புதையல் கிடைத்த செய்தி வந்த பின் அங்கு கோயில் இருப்பதே பெரிய விஷயம் இதில் சில பானைகளை காணவில்லையாம்


 

விண்ணைத் தொடும் ஊழல்

2 பதிவுகள்


இந்தியாவில் இது பெரும் வினோதம். தொழிலபர்களோ அல்லது விஞ்ஞானிகளோ ஊழல் செய்தால் பெரும் ஊடகங்கள் கண்டுகொள்ளாத, அல்லது ஒதுங்கி கொள்ளும்

ஆனால் அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும் பற்றி எரியும். அது பூச்சிமருந்தோ, உரமோ, பீரங்கியோ ஸ்பெக்ட்ரமோ..

மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள், விருப்படி கற்பனை சிறகு கட்டி பறப்பார்கள். லட்சத்திற்கு எத்தனை சைபர் என தெரியாதவவென்ல்லாம் பில்கேட்ஸ் சொத்து மதிப்பிற்கு கலந்து கட்டி அடிப்பார்கள்.

பாரளுமன்றத்தினை முடக்குவார்கள், சந்து பொந்துகளில் எல்லாம் இப்படி ஊழல் செய்த கட்சிக்கா உங்கள் வோட்டு என கண்ணீர் சிந்துவார்கள்.

ஊடக அழிச்சாட்டியம் சொல்லி மாளாது, விளம்பர இடைவேளை மட்டும் அதனை பேசமாட்டார்கள்.

ஆனால் அதனை விட பெரும் ஊழல் நடக்கும் பொழுது தேசத்தில் ஒரு பரபரப்பும் இருக்காது, நாடாளுமன்றம் முடங்காது. பத்திரிகைகள் மவுன விரதம் காக்கும்

அப்படித்தான் இப்பொழுது ஆண்ரிக்ஸ் ஊழலில், அதுவும் 2.35 லட்சம் கோடி ஊழலில் ஒரு பரபரப்புமில்லை, காரணம் செய்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல‌

இதனால் வோட்டு வங்கியினை கூட்டவோ அல்லது எதிர்கட்சியின் வோட்டு வங்கியினை அழிக்கவோ முடியாது

வோட்டுக்கு அவசியமில்லை எனில் எவ்வளவுபெரும் ஊழல் என்றாலும், தேச நலன் போகும் மோசடி என்றாலும் நமது அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இந்த ஊடகங்களும், இந்த அரசியல்வாதிகள் தான் நாள்தோறும் இந்நாட்டை வழிநடத்துவதாக சொல்லிகொள்கின்றார்கள்.

 


 

இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவின் ஆண்ரிக்ஸ் நிறுவணம் 2.35 லட்சம் கோடி ஊழல் புகாரில் சிக்கியது , வழக்கு சூடுபிடித்துவிட்டது

ஆண்ட்ரிக்க்ஸ் நிறுவணம் தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவணத்திற்கு சும்மா ஸ்பெக்ட்ரமினை அள்ளி கொடுத்திருக்கின்றது, இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் என முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மாதவன் நாயர் மீது வழக்கு பதிந்தாகிவிட்டது

அதாவது தேவாஸ் நிறுவணர் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியாம், அவரும் மாதவன் நாயர், ராதா கிருஷ்ணன் என இன்னொரு விஞ்ஞானியும் சேர்ந்து ஆட்டையினை போட்டுவிட்டார்களாம்.

இதன் பிண்ணணியில் அமெரிக்க ஜெர்மன் நிறுவணங்கள் இருக்கின்றதாம்

ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மகத்தான ஊழல் இது, காரணம் தேவாஸ் அனுமதித்தால் பாகிஸ்தான், ஆப்கன், ஐஎஸ் இயக்கம் கூட பங்குதாரராகி இந்திய சேட்டிலைட்டினை உபயோகிக்கலாமாம், பெரும் தேச துரோக வழக்கு வகையில் வருகின்றது

இதில் அரசியல் விளையாட்டு இல்லை,, விஞ்ஞானிகளின் விளையாட்டே பிராதனமாக வருகின்றது

முன்பு நம்பி நாரயணன் மாலதீவு அழகி மூலம் ரகசியம் கடத்தினர் என்ற சர்ச்சை கிளம்பியது குறிப்பிடதக்கது

விண்வெளி உச்சத்தில் இருக்கும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஒரு முறை தன் நாட்டை உளவுபார்க்க அனுப்பிய செயற்கைகோளினை தன் ஏவுகனையால் தகர்த்து கெத்து காட்டியது சீனா

நாமோ இப்படி ஊடுருவ விட்டு கை பிசைந்து நிற்கின்றோம்

இப்போது அச்சம் என்னவென்றால், ஸ்பெக்ட்ரம் வழக்கு பிய்த்து கொண்டு ரீச் ஆனபோது, ராசாவும் கனிமொழியும் சிக்கிய பொழுது இந்த 2.35 லட்சம் கோடி ஊழலுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கின்றார்கள்

இந்த செய்தி பரபரப்பாக கிளம்பும் போது, அடுத்த 3 லட்சம் கோடிக்கு எங்கு பேச்சு நடந்து கொண்டிருக்கின்றதோ தெரியாது, ஆனால் அடுத்த சில வருடங்களில் தெரிய வரும்

அப்போது 4 லட்சம் கோடி ஊழலுக்கான அடுத்த பேச்சு எங்கோ தொடங்கி இருக்கும்.

தாது மணல் ஆலைக்கு எதிராக போராட்டம்

தாது மணல் ஆலைக்கு எதிராக போராட்டம் : மீணவர் அமைப்புகள் தூத்துகுடியில் அறிவிப்பு

சில இடங்களில் விமர்சிக்கபட்டவர் என்றாலும் தூத்துகுடியில் மிக தைரியமாக அன்றே தாதுமணலுக்கு எதிராக மீணவர்கள் போரடவேண்டுமென்ற ஒரே கட்சி தலைவர் விஜயகாந்த்

அது பின்னர் நாடாருக்கு எதிராக மீணவ மக்களை தூண்டிவிடுகின்றார் என திரிக்கபட்டு விவகாரமனது, சங்கத்து ஆட்கள் எல்லாம் களம் புகுந்தனர் பெரும் சர்ச்சை வெடித்தது

அங்கிள் சைமன் கூட விஜயகாந்தினை வழக்கம் போல ஓநாய் சவுண்டில் விஜயகாந்தினை தெலுங்கர் என விமர்சித்து அடுத்து எப்படி பேசலாம் என தாடையினை தடவி சிந்திபதற்குள் தேர்தல் முடிந்துவிட்டது

இப்போது காட்சிகள் மாறுகின்றன‌

சசிகலா புஷ்பா அல்ட்ராசிட்டியும், தொடர்ந்து தாது மணல் லாரிகள் சிறைபிடிப்பும், அதனை தொடர்ந்து சங்கத்து ஆட்கள் கழன்று கொள்ளவும் ஏதோ நடப்பது தெரிகின்றது.

உச்சமாக மீணவர் அமைப்புக்கள் “தாங்களாகவே” போராட்டம் தொடரபோகின்றதாக அறிவித்திருக்கின்றார்கள்,

இதுவரை நெத்திலி குழம்போ அல்லது சுறா புட்டோ உண்டுவிட்டு கடற்கரையில் திரிந்தவர்கள் திடீரென தோரியம், மெட்ரிக் டன் என பெரும் விஞ்ஞானமும் புள்ளிவிவரமும் பேச கிளம்புகின்றனர். எங்கோ புகைகின்றது

அதாவது எங்கோ பற்றி எரிகின்றது, புகை வருகின்றது.

விஜயகாந்த் இப்பொழுது அடித்து ஆடும் களம், அன்றே சொன்னேன் அல்லவா என அவர் அரசியல் செய்ய கிளம்பலாம், அருமையான வாய்ப்பு.

எங்கோ மூலையில் மல்லாக்க கிடக்கும் துண்டு கட்சிகளுக்கு ஒரு வாய்ப்புதான், ஏதேனும் அறிக்கை விட்டு அரசியல் செய்யலாம்

இதில் அன்று சீறிய அங்கிள் சைமன் எங்கே என்று கேட்கின்றீர்களா? அவர் எங்கோ வேகமாக தலைதெறிக்க ஓடிகொண்டிருக்கலாம்,

விரட்டி பிடிக்க உசேன் போல்ட் வந்தாலும் முடியாது.

கி.வீரமணி சுதந்திரமான நாள் கேள்வி

இன்னும் பார்ப்பான், பறையன் என்ற பேதம் ஏன்? :

கி.வீரமணி சுதந்திரமான நாள் கேள்வி

எத்தனையோ சாதிய கொலைகள் நடக்கின்றன, அதிலெல்லாம் சம்பந்தபட்ட சாதியினை என்றாவது இவர் குறிப்பிட்டு கண்டித்தாரா? அதை விட்டு பார்ப்பான் என திட்டும் அந்த சாதி பேதம் ஏன் என இவரிடம் நாம் கேட்க கூடாது.

சாதி பேதங்களிலிருந்து எப்போது விடுதலை என இவர் கேட்கின்றாராம், சரி இவரிடம் சிக்கியுள்ள பெரியார் சொத்துக்களுக்கு எப்பொழுது விடுதலை என ஒரு சில குரல் கேட்பது பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது, காதை மூடிகொள்வோம்

ஆனால் இன்னும் புளித்துபோன பார்ப்பான் ஒழிப்பு, அடுத்தவன் பொண்டாட்டி தாலியறுப்பு போன்ற இவரின் கொடுமைகளிலிருந்து தமிழகத்திற்கு விடுதலை வேண்டும்