விண்ணைத் தொடும் ஊழல்

2 பதிவுகள்


இந்தியாவில் இது பெரும் வினோதம். தொழிலபர்களோ அல்லது விஞ்ஞானிகளோ ஊழல் செய்தால் பெரும் ஊடகங்கள் கண்டுகொள்ளாத, அல்லது ஒதுங்கி கொள்ளும்

ஆனால் அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும் பற்றி எரியும். அது பூச்சிமருந்தோ, உரமோ, பீரங்கியோ ஸ்பெக்ட்ரமோ..

மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள், விருப்படி கற்பனை சிறகு கட்டி பறப்பார்கள். லட்சத்திற்கு எத்தனை சைபர் என தெரியாதவவென்ல்லாம் பில்கேட்ஸ் சொத்து மதிப்பிற்கு கலந்து கட்டி அடிப்பார்கள்.

பாரளுமன்றத்தினை முடக்குவார்கள், சந்து பொந்துகளில் எல்லாம் இப்படி ஊழல் செய்த கட்சிக்கா உங்கள் வோட்டு என கண்ணீர் சிந்துவார்கள்.

ஊடக அழிச்சாட்டியம் சொல்லி மாளாது, விளம்பர இடைவேளை மட்டும் அதனை பேசமாட்டார்கள்.

ஆனால் அதனை விட பெரும் ஊழல் நடக்கும் பொழுது தேசத்தில் ஒரு பரபரப்பும் இருக்காது, நாடாளுமன்றம் முடங்காது. பத்திரிகைகள் மவுன விரதம் காக்கும்

அப்படித்தான் இப்பொழுது ஆண்ரிக்ஸ் ஊழலில், அதுவும் 2.35 லட்சம் கோடி ஊழலில் ஒரு பரபரப்புமில்லை, காரணம் செய்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல‌

இதனால் வோட்டு வங்கியினை கூட்டவோ அல்லது எதிர்கட்சியின் வோட்டு வங்கியினை அழிக்கவோ முடியாது

வோட்டுக்கு அவசியமில்லை எனில் எவ்வளவுபெரும் ஊழல் என்றாலும், தேச நலன் போகும் மோசடி என்றாலும் நமது அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இந்த ஊடகங்களும், இந்த அரசியல்வாதிகள் தான் நாள்தோறும் இந்நாட்டை வழிநடத்துவதாக சொல்லிகொள்கின்றார்கள்.

 


 

இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவின் ஆண்ரிக்ஸ் நிறுவணம் 2.35 லட்சம் கோடி ஊழல் புகாரில் சிக்கியது , வழக்கு சூடுபிடித்துவிட்டது

ஆண்ட்ரிக்க்ஸ் நிறுவணம் தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவணத்திற்கு சும்மா ஸ்பெக்ட்ரமினை அள்ளி கொடுத்திருக்கின்றது, இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் என முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மாதவன் நாயர் மீது வழக்கு பதிந்தாகிவிட்டது

அதாவது தேவாஸ் நிறுவணர் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியாம், அவரும் மாதவன் நாயர், ராதா கிருஷ்ணன் என இன்னொரு விஞ்ஞானியும் சேர்ந்து ஆட்டையினை போட்டுவிட்டார்களாம்.

இதன் பிண்ணணியில் அமெரிக்க ஜெர்மன் நிறுவணங்கள் இருக்கின்றதாம்

ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மகத்தான ஊழல் இது, காரணம் தேவாஸ் அனுமதித்தால் பாகிஸ்தான், ஆப்கன், ஐஎஸ் இயக்கம் கூட பங்குதாரராகி இந்திய சேட்டிலைட்டினை உபயோகிக்கலாமாம், பெரும் தேச துரோக வழக்கு வகையில் வருகின்றது

இதில் அரசியல் விளையாட்டு இல்லை,, விஞ்ஞானிகளின் விளையாட்டே பிராதனமாக வருகின்றது

முன்பு நம்பி நாரயணன் மாலதீவு அழகி மூலம் ரகசியம் கடத்தினர் என்ற சர்ச்சை கிளம்பியது குறிப்பிடதக்கது

விண்வெளி உச்சத்தில் இருக்கும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஒரு முறை தன் நாட்டை உளவுபார்க்க அனுப்பிய செயற்கைகோளினை தன் ஏவுகனையால் தகர்த்து கெத்து காட்டியது சீனா

நாமோ இப்படி ஊடுருவ விட்டு கை பிசைந்து நிற்கின்றோம்

இப்போது அச்சம் என்னவென்றால், ஸ்பெக்ட்ரம் வழக்கு பிய்த்து கொண்டு ரீச் ஆனபோது, ராசாவும் கனிமொழியும் சிக்கிய பொழுது இந்த 2.35 லட்சம் கோடி ஊழலுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கின்றார்கள்

இந்த செய்தி பரபரப்பாக கிளம்பும் போது, அடுத்த 3 லட்சம் கோடிக்கு எங்கு பேச்சு நடந்து கொண்டிருக்கின்றதோ தெரியாது, ஆனால் அடுத்த சில வருடங்களில் தெரிய வரும்

அப்போது 4 லட்சம் கோடி ஊழலுக்கான அடுத்த பேச்சு எங்கோ தொடங்கி இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s