துணுக்ஸ்ஸ்ஸ்ஸ்

பிரேசில் ஒலிம்பிக்கில் பல நாட்டுக்காரன் ஒலிம்பிக்ல வெயிட் லிப்ப்டிங்னு பளு தூக்கும் போட்டியில 200 கிலோ 250 கிலோன்னு தனியா தூக்கி அசத்திகொண்டிருக்கின்றான்.

நாமோ சட்டசபையில் 6பேர் சேர்ந்து மு.க ஸ்டாலினை தூக்கி விளையாடி கொண்டிருக்கின்றோம்

உலக விளையாட்டு அப்படி இருக்கின்றது, நமது விளையாட்டு இப்படி இருக்கின்றது.


காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ராணுவத்தை அணுப்பி இந்தியாவிற்கு பாடம் புகட்டுவோம்.. ஹபீஸ் சயீத்.

தீவிரவாதிகள் என்று ஒவ்வொருவனாக வருபவன் எல்லாம் அவர்கள் அல்லாமல் யார்? சரி,மொத்தமாக வரவேண்டுமா? வாருங்கள். சுத்தமாக முடித்துவிடலாம்.


 

கான் சாகிப் எனும் மருதநாயகம்

இந்தியாவில் வெள்ளையன் ஆட்சி ஏற்பட முதல் காரணம் ராபர்ட் கிளைவ், அவனே ஐரோப்பிய போரின் தொடர்ச்சியாக சென்னையில் ஆர்க்காடு நவாப்பிற்க்காக தன்னோடு மோதிகொண்ட பிரெஞ்ச் காரர்களுடனான யுத்தவெற்றியில் அப்படி சிந்திக்க தொடங்கினான்

அதுவரை இந்தியாவினை ஆள்வோம் என்றெல்லாம் வெள்ளையன் நினைத்ததே இல்லை

ஆனால் அந்த கிளைவிற்கு முழுபலமுமாய் இருந்தவன் ஒரு தமிழன், தன்னை அறியாமல் வெள்ளையர் காலூன்ற அவனே காரணம். அவன் இல்லை என்றால் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி அப்போதைக்கு சாத்தியமில்லை

அவன் தான் கான் சாகிப் எனும் மருதநாயகம்.

FB_IMG_1471424791849

சம்மட்டிபுர கான்சாகிப் சமாதியும், ஐங்கரன் நிறுவண அறிவிப்பும்

FB_IMG_1471423015448

 

சாதரண போர்வீரன், அவனது போர்முறையில் வியந்த ராபர்ட் கிளைவ் அவனை அணைத்துகொண்டு மெருகேற்றினான். அவனாலேதான் சாந்தா சாகிப் தோற்றோடினார். பிரெஞ்சுகாரர்களின் புகழ்பெற்ற் தளபது டூப்ளே அவனால்தான் ஓட விரட்டபட்டார்.

வரலாற்றின் முதல் விடுதலை வீரனான பூலித்தேவனை அடக்கியவன் அவனே, வரிபிரித்து வெள்ளையனை அமர செய்ததும் அவனே, கட்டபொம்மனின் முப்பாட்டனிடம் வரி வசூலித்ததும் அவனே

மைசூர் புலி ஹைதர் அலியினையே முன்பு திருச்சி பக்கம் வராமல் விரட்டி அடித்த மாவீரன்

அவன் கான்சாகிப்பாக இருக்கும் வரை சிக்கல் இல்லை, ஆனால் மதுரை அரசனாக 7 வருடம் ஆளும்பொழுது சிக்கல் தொடங்கிற்று, அவனுக்கும் ஆர்க்காடு நவாப்பிற்கும் முறுகிற்று

அவன் மதுரை நாயகம் என மக்களால் கொண்டாடபட்டான், இந்த இடத்தில் வெள்ளையனுக்கும் அவனுக்கும் உரசல் தொடங்கிற்று, காரணம் நெல்லை தாமிரபரணியில் அவனால் ஒரு அணைகட்டபட்டது, கான்சாகிப்புரம் எனும் ஊர் ஏற்படுத்தபட்டது, இன்னும் உயர உயர சென்றான்

நவாப்பிற்கு நிகராக அவன் மதிக்கபட்டதும், நவாப் அவமானத்தில் சினந்தார், அவனை கட்டுபடுத்துங்கள் என ஆங்கிலேயரிடம் மல்லுக்கு நின்றார்.

எங்களுக்கு கட்டுபட்டவன் நீ , நாங்கள் சொன்னபடி ஆட்சி செய் என்ற ஆங்கிலேயரை துணிந்து எதிர்க்க தொடங்கினான், அவன் களமாடிய போர்கள் அனைத்தும் சாகசங்கள், இவ்வளவிற்கும் தமிழக வழக்கபடியே ஒரு பாளையக்காரரும் அவனுக்கு துணை இல்லை

அவனை தோற்கடிக்க ஆங்கிலேயர்,, நவாப் மற்றும் பல பாளையக்காரர்கள் ஒன்று கூடித்தான் போர் நடத்தினார்கள், தனி மனிதனாக அவர்களை ஓடவிரட்டினான் அவன்.

பிரெஞ்ச்காரர்கள் அதன் பின் உதவ வந்தார்கள், போரில் மருதநாயகம் முன்னேதான் இருந்தான், கோட்டைக்கு நீரும், உணவும் தடை செய்தாலும் அவனை நெருங்க வெள்ளையரால் முடியவில்லை

தாமதமக உதவ வந்தார் ஹைதர் அலி, அதற்குள் விதி முந்திகொண்டது. பகைவன் என்றாலும் வெள்ளையனை எதிர்த்ததற்காக மருதநாயகத்திற்காக ஓடிவந்த ஹைதர் அலி உண்மையில் பெருந்தன்மையான மாவீரன்.

மருதநாயகத்தை போரில் வெற்றி கொள்ளமுடியாமல் அவன் தொழுகையில் இருந்தபொழுது அவனை பிடித்தார்கள். அதுவும் வஞ்சகமாக. அது ஒரு ரமலான் மாத நோன்பு நேரம் வேறு. இன்னொன்று பிடித்துகொடுத்தது அவனது உற்ற நம்பிக்கையாளர்கள்.

அவனை பலவாறு கொன்றும் அவன் சாகவில்லை, மாறாக தூக்கு கயிறே 3 முறை அறுந்து அவனை காப்பாற்றியது.

அவன் இடுப்பிலிருந்த ஒரு தாயத்து கழற்றிய பின்புதான் அவனை கொல்ல முடிந்தது என்பார்கள். ஆனால் அவன் யோக சித்துக்கள் கற்றவன் என்பதால் அவன் சாகவில்லை என்பது இன்னொரு குறிப்பு, அதன் பின் பலநாள் அவனுக்கு உணவின்றி போடபட்டுதான் அவனை பலம் குன்ற வைத்து கொன்றார்கள்.

அப்படியும் அஞ்சிய ஆங்கிலேயர் அவன் தலையினை திருச்சியிலும் கையினை பாளையங்களோட்டையிலும் உடல் கால்களை தஞ்சையிலும் உடலை மதுரையிலும் புதைத்தனர்

அவன் மீது எவ்வளவு அச்சமிருந்தால் இப்படி செய்திருப்பர் வெள்ளையர்? அவன் அந்த அளவு வெள்ளையரை மிரட்டி இருக்கின்றான்.

உண்மையில் ஆங்கிலேயருக்கு அவனை கொல்ல மனம் இல்லை, தங்கள் ஆளுமை பெற முதலில் அவனே உதவினான் எனும் ஒரு இரக்கம் அவர்களிடம் இருந்தது, ஆனால் நவாப்பின் பிடிவாதம் அதனை தோற்கடித்தது, இன்னொன்று பிதாமகன் ராபர்ட் கிளைவ் அப்போது பிளாசி யுத்தத்தில் இருந்ததால் இவ்வவிஷயம் நடந்தது என்ற கோணமும் உண்டு.

கிளைவின் கண்களில் மின்னிய பெரும் வீரன் மருதநாயகம், அவருக்கு அவன் மீது பெரும் அபிமானம் இருந்தது என்பது வரலாறு

அவன் கொல்லபட்டு கொஞ்சநாளிலே ராபர்ட் கிளைவும் லண்டனில் தற்கொலை செய்து கொண்டான் என்பது இன்னொரு சோகம்.

ராபர்ட் கிளைவ் பெரும் வரலாறு, அவன் புகழும் லண்டனில் கொஞ்சமல்ல, ஆனால் தற்கொலை செய்துகொண்டதால் கிறிஸ்தவ மதிப்பினை இழந்தான். அவன் கதையினை படமாக்க சில ஹாலிவுட் இயக்குநர்கள் முயற்சிப்பதாக செய்தி உண்டு.

கான்சாகிப் எனும் மருதநாயகம் பெரும் வரலாறு, எப்படிபட்ட வரலாறு என்றால் அக்கால வெள்ளையன் குறிப்பு இப்படி சொல்கிறது, இந்தியாவில் நாங்கள் வியந்த போர்திட்டக்காரர்கள் ஹைதர் அலியும், கான் சாகிப்பும்

இருவரும் இணைந்திருந்தால் தென்பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கமுடியாது, நமது அதிர்ஷ்டம் அவர்கள் ஒன்று சேரவில்லை, கான்சாகிப்பினை வீழ்த்தும் வரை ஆர்க்காடு அரசினை கைபற்றுவோம் எனும் நம்பிக்கை இல்லை, ஒரு சாதரண குடும்பத்துகாரனுக்கு இந்த அரச அறிவு சாத்தியமில்லை

அவன் அவதாரமாகவோ அல்லது அரசகுடும்பத்துகாரனவோகத்தான் இருக்க முடியும்

இதற்குமேலும் என்ன சொல்வது.

நிச்சயமாக சொல்லலாம், தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். அவர்களை அலறவிட்டவன், எப்படியோ தன்னை அறியாமல் சிக்கி வஞ்சகமாய் கொல்லபட்ட மாவீரன், வரலாற்றில் அவன் ஒரு பெரு வீரன்.

அவன் கதையினை கமலஹாசன் தன் கனவுபடமாய் எடுக்க நினைப்பது வரலாறு அறிந்தவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு, ஒருமுறை சோனிநிறுவனம் தயாரிக்க அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் பட்ஜெட்?

காரணம் கதைபடி பல பாத்திரங்கள் வரும், அனைத்தும் சாதாரணம் அல்ல‌

ராபர்ட் கிளைவ், டூப்ளே, சாந்தா சாகிப், நவாப் முகமது அலி, ஒண்டிவீரன், பூலித்தேவன், கட்டபொம்மன் தாத்தா, கான்சாகிப் கிறிஸ்தவ மனைவி என பெரும் பாத்திரங்களே ஒரு பெரும் கணக்கு.

இனி படை அக்கால கட்டடட செட், இதர செலவுகள் எல்லாம் தனி.

ஆர்க்காடு படை, கம்பெனியார் படை, பிரெஞ்ச் படை என அதற்கே கட்சிமாநாடு போல ஆட்கள் வேண்டும்

உடை உட்பட எல்லாமும் அக்காலத்திற்கு செல்லவேண்டும்.

இதனால் சோனி நிறுவணம் பின்வாங்கிவிட்டது அதன் பின் மருத நாயகம் கமலின் கனவில் மட்டும் வந்தார்.

இப்போது லைக்கா நிறுவணம் அதனை தயாரிக்கபோவதாக செய்திகள் வருகின்றன, அப்படி நடந்தால் அது பெரும் முயற்சி, பாராட்டபடவேண்டிய முயற்சி.

தமிழனின் வீரத்தை படமாக‌ தமிழன் எடுக்காமல், வேறு யார் எடுக்கமுடியும்?

பெரும் வியப்பான, வரலாறான மருதநாயகம் படத்தினை எடுக்க கமலஹாசனை தவிர தமிழகத்தில் யாரும் இல்லை என்பதும் இன்னொரு விஷயம்.

பாகுபலி போன்ற படங்கள் வந்து வெற்றிபெரும் பொழுது, முறையாக நிதானமாக எடுக்கபட்டால் அது பெரும் வெற்றி என்பது மட்டும் உறுதி

காரணம் மதுரை நாயகம் எனும் மருதநாயகத்தின் பெரும் ஆச்சரியமான வீர வரலாறு அப்படி. மதுரையினை தலைநகராக கொண்டு ஆண்ட மாமன்னன் அவன்

ஆனால் அவனுக்கு அவன் சம்மட்டிபுரம் கல்லறை தவிர வேறு எங்கும் நினைவுசின்னம் கிடையாது, இப்படி ஒரு கல்லறை இருப்பதே பலருக்கு தெரியாது.

அவன் வாழ்வு எல்லா தமிழரையும், ஒவ்வொரு இந்தியனையும் சென்றடைய வேண்டிய ஒன்று என்பதால் வாழ்த்தலாம்

பெரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய ராணுவத்தில் பணியாற்றி பெரு வெற்றி ஈட்டிய ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போகின்றார்களாம்

அதற்கு முன்பு இந்த பெரும் வீரனின், தமிழர் அடையாளத்தின் வரலாறு படமாக வந்துவிடட்டும்.

 

வைகுண்டராஜனுக்கு முகநூலில் கடிதம்

“பெருந்தலைவர் காமராஜர்” அவர்களின் சமூகத்தில் வந்த அண்ணாச்சி அவர்கள் இந்த 2 திராவிட கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்காமல் தனித்துவத்தை காண்பிக்கும்விதமாக தென் மாவட்டத்தின் நாடார் சமுதாயத்தின் ஒட்டு மொத்த மக்களின் ஆதரவோடு “புதியதாக கட்சி” ஒன்றை தொடங்குங்கள்

FB_IMG_1471404017975

இல்லையெனில் ‘நாம் தமிழர் சீமானை” முன்னிலைப்படுத்தி வேகமெடுங்கள் அப்புறம் பார்க்கலாம் உங்களை யார் நெருங்குவது என்று .

காமராஜர் இறந்தபின்பு அவருடைய நினைவாக காலில் செருப்பு கூட அணியாமல் வாழும் உங்களை பின்தொடர நாடார் சமூகம் தயார் ஆகவே விரைவில் முடிவெடுங்கள். கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி நீங்கள் எவரிடமும் அடிபணிந்து காரியம் சாதிக்கவேண்டாம் சமுதாயத்தையும், சமுதாய மக்களையும் மேலும் அரவணையுங்கள் புது வழி பிறக்கும்”

மேற்கண்டவாறு தாதுமணல் வைகுண்டராஜனுக்கு ஒருவர் முகநூலில் கடிதம் எழுதுகின்றார்.

இவர் நிச்சயம் அதிமுக உளவாளியாகவோ அல்லது மணல் ஆலையால் பாதிக்கபட்டவராகத்தான் இருக்கமுடியும்.

அவர் கட்சி நடத்துவது இரண்டாம் விஷயம், ஆனால் சீமானின் “நாம் தமிழரை” நாடார் கட்சியாக கொண்டுவரமுடியுமா? இது நடக்கின்ற காரியமா? அன்னார் பிரபாகரன் படத்தோடு கம்புசுத்தும்போது பிடித்து உள்ளே போட எவ்வளவு நேரமாகும்

சரி அப்படத்தினை கீழே வைத்தால், பாரிஸ் தம்பிகள் தற்கொலைபடை அனுப்ப மாட்டார்களா?

இவர் ஒருவேளை காங்கிரஸ்காரராக இருப்பாரோ? சீமானை இப்படி கோர்த்துவிடுகின்றார்? சும்மாவே அடிவாங்கிகொண்டிருக்கும் சீமான், நாடார்களுக்காக கட்சி என்றால் தொலைத்துவிட மாட்டார்களா?

எதற்கும் வைகுண்டராஜன் தரப்பு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, தேரினை இழுத்து தெருவில் விட பார்க்கின்றார்ர்கள்,

நாம் சொல்லவருவது எல்லாம் ஒன்றுதான், முன்பு இப்படித்தான் சிவந்தி ஆதித்தனை ஏற்றிவிட்டார்கள், அதன் பின் அவரை அம்போ என விட்டுவிட்டு இவர் பின் வந்திருக்கின்றார்கள்.

நாளை இவரை அரோகரா என விட்டுவிட்டு இன்னொருவர் பின்சென்று ம்ம் கட்சிதொடங்குங்கள் என உசுப்பேத்திவிடுவார்கள்.

கோடீஸ்வரர்கள் ஏன் கட்சி நடத்தவேண்டும்?, நாட்டில் நடந்துகொண்டிருக்கும் கட்சிகள் எல்லாம் கோடீஸ்வரர்கள் நலனுக்காக மட்டும் என்பதை கூட தெரியாதவரா அண்ணாச்ச்சி

என்ன செய்வது? சாதி அரசியலை தவிர ஒன்றும் தெரியாதவர்கள், அதை சொல்லி அவரை சுரண்ட நினைப்பவர்கள் அவரை ஏற்றிவிடலாம்

ஆனால் முன்பு சொன்ன ரயில் ஹீரோ எட்வர்டை விட பெரும் ஜெகஜால கில்லாடி அண்ணாச்சி, அவருக்கா தெரியாது?

உலக சண்டைகள் : ஓர் அலசல்

உள்ளூர் ஊடகம் தமிழக அரசினை பற்றி எழுதாது என்றால் சர்வதேச ஊடகம் அமெரிக்காவினை பற்றி எழுதாது.

இதோ சிரியாவில் அமெரிக்கா அவ்வளவு வெற்றிபெறவில்லை, சரிகிறது. எப்படி?

சிரியாவில் அதிபரும் ரஷ்யாவும் ஒரு பக்கம், அரச எதிர்ப்பு குழுக்களும், அமெரிக்காவும் ஒரு பக்கம். ஐஎஸ் இயக்கத்திற்கு இவர்கள் எல்லோரும் எதிரிகள்.

இவர்களுக்குள் சண்டை. அரசபடையும் ரஷ்யாவும் ஐஎஸ் இயக்கத்துடனும், அரச எதிப்பு படைகளுடனும் மோதும். அரச எதிர்ப்பு படைகள் அரசுடனும், ஐஎஸ் இயக்கத்துடனும் மோதும். ஐஎஸ் இயக்கம் அரசுடனும், அரச எதிப்பு படையுடனும் மோதும்.

புரிகின்றதா புரியாவிட்டால் விட்டுவிடலாம் அங்கு சண்டை அப்படித்தான், இடையில் குர்துக்கள், யாசிதிகள் போன்ற இன்னும் பல குழுக்கள் உண்டு

சண்டையில் ஐஎஸ் இயக்கத்திடமும், எதிர்ப்பு படைகளிடமும் அடிவாங்கிய சிரிய அரசு ரஷ்யா துணைக்கு வந்தபின் அடித்து கலக்குகின்றது, அதுவும் ஈரானும் ரகசியமாக வந்தபின் அது துணிந்துவிட்டது

சிரியாவில் ஆட்சிமாற்றம் எனும் அமெரிக்க கனவு சரிய தொடங்குகின்றது, அவர்களால் ரஷ்யாவினை தடுக்க முடியவில்லை காரணம் ஐஎஸ்க்கு எதிரான போர் என களமிரங்கி இருக்கும் ரஷ்யா சந்தடி சாக்கில் அரச எதிர்ப்பாளர்களை அழித்து நொறுக்குகின்றது.

துருக்கியினை தூண்டிபார்த்த அமெரிக்கா, அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவரும் திட்டத்திலும் மகா தோல்வி கண்டது.

உச்சமாக ஈரானின் விமானபடைதளத்தினை இனி பயன்படுத்துவோம் என ரஷ்யா நேற்று அறிவித்திருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதன் அர்த்தம் ஈரான் எங்கள் கூட்டாளி என சொல்லாமல் சொல்வது, வளைகுடா எங்கும் ஒரு பதற்றம் ஏற்படுகின்றது.

சிரியாவின் பெரும் பகுதிகள் அரசபடையால் மீட்கபட்டுகொண்டிருக்கின்றன, அமெரிக்க திட்டம் சிக்கலில் நிற்கின்றது

அதிரடியாக மொசார்ட்டுக்கு 30 ஆண்டுகளாக தண்ணிகாட்டும் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லா, ஐஎஸ் இயக்கம் அமெரிக்க தயரிப்பு என தானாக களத்தில் இறங்குகின்றார்.

பெரும் அவமானத்தில் அமெரிக்கா வளைகுடாவில் நிற்கின்றது, தோல்விதான், ஒரு காலத்தில் லெபானானில் கிடைத்த அடிபோன்றது இது.

ஆனால் இதெல்லாம் சர்வதேச ஊடகங்களில் வரவில்லை, வரவும் வராது. எல்லா ஊடகமும் வல்லரசு அல்லது வல்லரசிகளின் அடிமையே

நாம் அதிரடியாக பார்க்கும் நபர் ரஷ்யாவின் புடின்

1990களில் மட்டும் சோவியத் உடையாமலும் அல்லது 2010க்கு முன் ரஷ்ய அதிபராக இதே துடிப்புமிக்க புடின் இருந்திருப்பாரானால்

ஈராக் வீழ்ந்திருக்காது, சதாமும், ராஜிவ்காந்தியும் கொல்லபட்டிருக்கமாட்டார் அப்படி கொல்லபட்டிருந்தாலும் இந்தியபடை ஈழத்தில் புகுந்து பிரபாகரன் காதை பிடித்து இழுத்து வந்திருக்கும்.

எல்லா விசைக்கும் ஒரு எதிர்விசை வேண்டும் அல்லது உண்டு என்பது நியூட்டனின் விதி,

உலக அரசியல் விதியும் அதுவே. அதுவன்றி உலகம் இயங்க முடியாது.

மனுஷ்யபுத்திரன் எவ்வளவு பெரிய கவிஞன் தெரியுமா?

மனுஷ்யபுத்திரன் எவ்வளவு பெரிய கவிஞன் தெரியுமா? அவரையா கலாய்கின்றாய் அறிவிலியே என சிலர் அவருக்காக வரிந்து கட்டுகின்றார்கள், அது அவர்கள் விருப்பம் எனினும் கவிதை தெரியா கழுதையா நீ எனும்பொழுது சிலவற்றை சொல்லதான் வேண்டி இருக்கின்றது

கவிதை என்பது என்ன? அது கலையின் ஒரு வடிவம். எல்லா மொழிகளிலும் அது உண்டு, அதற்கான சில தனிதன்மைகள் உண்டு

அதாவது ஒரு அழகு வேண்டும், வர்ணனை வேண்டும், உருவகம் வேண்டும், உவமை வேண்டும் சொல்ல வந்ததை மறைமுகமாக சொல்லவேண்டும். இலக்கணம் கட்டுப்பாடுகள் உண்டு எனினும் இக்காலம் கொஞ்சம் மாறி இருக்கலாம்.

ஆடை வடிவம் மாற்றம் என்பது காலமாற்றம், ஆனால் ஆடைக்கும் சில அடிப்படை இலக்கணம் உண்டல்லவா?

அப்படி சில விஷயம் உள்ளவை கவிதைகள். கம்பன் வர்ணனையில் நின்றான், பாரதி உணர்ச்சியில் நின்றான், கண்ணதாசன் உவமையிலும் அற்புதமான சொல்லாட்சியிலும் நின்றார், வாலி வார்த்தை விளையாட்டில் உச்சம் தொட்டார்.

சொல்ல வரும் விஷயத்தை இலக்கிய நயம்பட மறைமுகமாக‌ சொல்வது கவிதை, ஒரு பொருளை சொல்லும். காளமேகம் போன்றோர் ஒரு வரி சொல்லி இரண்டுவிதமாக பொருள் சொன்னார்கள், அதுவும் கவிதை

ஆனால் ஏதோ கிறுக்கி வைத்து கொண்டு, இது கவிதை இதற்கு பல பொருள் உண்டு என சொன்னால் அது கவிதையா கலைடாஸ்கோப்பா?

மனுஷ்யபுத்திரன் போன்றோர் சில பெண் கவிஞர்கள், ஜெயமோகனிடம் விருது வாங்கும் சில பின் நவீனத்துவ கவிஞர்கள் எல்லாம் எழுதுவது அப்படித்தான் இருக்கின்றது, அவர்களாக எழுதுவது? பின் எப்படி என கேட்பது? புரியவில்லை என்றால், இது புரியாது இது பல பொருள் நிறைந்த கவிதை என அவர்களாகவே சொல்லிகொள்வது

ஒரு சுவையா, அழகோ, உவமையோ இல்லாத அந்த எழுத்து பிணத்துக்கு சமானம், அதனை எப்படி உயிர் பிரிந்திருக்கும் எனும் போஸ்ட்மார்ட்டம் செய்பவர்கள் தான் இவர்களை கொண்டாடுபவர்கள்.

இப்படி செத்திருப்பானோ, இங்கு அடி விழுந்திருக்குமோ, உயிர் கண்வழி பிரிந்திருக்குமோ அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ என ஆராய்சி செய்பவர்கள்தான் அதன் ரசிகர்கள்

அண்ணாவின் எழுத்துக்களை, பேச்சுக்களை பாருங்கள். அதனை வரி வரியாக பிரித்து எழுதுங்கள் மனுஷ்யபுத்திரனை விட பெரும் கவிஞராக அண்ணா தெரிவார்.

ரசிகமணி டிகேசி , இன்னும் பல பெரியவர்களின் உரைகளை பிரித்து போடுங்கள் அவர்கள் பெரும் கவிஞராக தெரிவார்கள்.

அவர்கள் எல்லாம் கவிஞர்கள் வரிசையில் வருபவர்களா? இல்லை

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும் அப்படி பட்ட சாயலே, அது என்ன கவிதை ரகத்தில் வருமா?

துக்ளக் சோ கூட மனோராமாவுடன் டூயட் சொந்தமாக எழுதியிருப்பா “இஸ்க் இஸ்க் இன்னாங்குற..” அவர் கவிஞர் என ஏற்றுகொள்ளமுடியுமா?

திரைக்கு வருபவர்கள் மட்டும் கவிஞர் இல்லை. அப்துல் ரகுமான், இன்குலாப், காமராசன் என‌ இன்னும் ஏராளமான கவிஞர்கள் உண்டு, அவர்கள் எழுதியிருக்கும் அழகு அப்படி.

இப்பொழுது உள்ள இம்சைகள் காண சகிக்காதவை

சுருக்கமாக சொன்னால் 4 கோடு போட்டு அலலது வெற்றிலை எச்சில் போட்டு துப்பி, இதுதான் மார்டன் ஆர்ட் என சொல்லி சிலர் அதனையும் ரசிப்பார்கள் அல்லவா? அப்படித்தான் மனுஷ் போன்ற இம்சைகளை சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்

ரவிவர்மன், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களை ரசித்தவனுக்கு மார்டன் ஆர்ட் எப்ப்டி என்றால் காரி துப்பமாட்டானா?, மிக சிறந்த ஓவியனான ஹிட்லர் சொன்னான், மார்டன் ஆர்ட் எனும் பைத்தியகாரதனத்தை ஐரோப்பாவில் அனுமதிக்கமாட்டேன், அது ஒரு வகையான மெண்டல் கூட்டட்த்தின் கூச்சல்

அப்படித்தான் இந்தவகை கவிஞர்களும், ஒரு கவிஞனுக்கு உலகாளாவிய அனுபவமும், மொழியிம் பெரும் அனுபவமும், இயற்கை ஞானமும் வாய்க்கவேண்டும்.

பாரதி அவ்வகையே, கண்ணதாசனும் மற்றும் பலரும் அவ்வகையே என்பது பகைவரும் ஒப்புகொள்ளகூடியது.

ஆனால் ஆனானபட்ட‌ அப்துல்கலாமினை டெக்னோகிரேட் எனும் சொல்லும்போதே சாகுல் ஹமீது எனும் மனுஷின் அறிவு படீரென வெளிபட்டது, இப்படி இன்னும் பலர்.

தமிழகத்தில் கண்ணதாசனுக்கு அடுத்தபடி ஒரு மிகசிறந்த கவிஞன் உண்டென்றால் அது அவர்தான்

சிரிக்காதீர்கள், கவிதை, இலக்கியநயம் எனும் பார்வையில் மட்டும் பார்த்தால் டி.ராஜேந்தரை விட பெரும் கவிஞன் கிடையாது, நிச்சயம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் அது

ஆனால் நான் அஷ்டவதானி, வசனம் பேசுவேன், நடிப்பேன், முகத்தில் நவ அமிலமும் காட்டுவேன், ஆடுவேன், கட்சி நடத்துவேன் என எல்லா அழிச்சாட்டியமும் செய்து அவர் அதனை மறைத்துகொண்டார்

போதா குறைக்கு அப்படியே ஒரு மகனையும் பெற்று வளர்த்து பெரும் அட்டகாசம்,

ஆனால் கவிதைக்கு உள்ள இலக்கணபடி அவர் பெரும் கவிஞன், அதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்று அவர் இடம் தனி.

ஆக கவிதை என்பது வேறு, உரைநடை என்பது வேறு. உரைநடையினை இழுத்து இழுத்து எழுதுவது கவிதை ஆகாது, மனுஷ்யபுத்திரன் எல்லாம் கவிஞன் என்றால், தேவயாணியின் கணவன் ராஜகுமாரனின், அவர் குரு விக்ரமனின், லா..லல்ல..ல்லா பிண்ணணியுடன் ஒலித்த சில படங்களின் வசனங்களை பிரித்து போடுங்கள், உங்கள் கருத்துபடி அற்புதமான கவிதை தயார்.

அன்று அழகாக இருந்தது கவிதை உலகம்

பாரதி, பாரதிதாசன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, ஆலங்குடி சோமு, அழ.வள்ளியப்ப, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என பல கவிஞர்கள் இருந்த இடத்தில் எங்கே இப்படிபட்ட வரலாறு திரும்பிற்று?

அவரால்தான், அது அவராக அவர் பத்திரிகையில் எழுதினார். அவருக்கு வந்ததை எல்லாம் எழுதினார்.

சிலருக்கு புரிந்தது, சிலர் தலையினை சொறிந்தனர். சிலர் அவர் பேசுவதற்கே பல அர்த்தம் வரும், அவர் எழுதினால் நூறு அர்த்தம் வரும் என தலை தெறிக்க ஓடினார்கள்.

அவரோ எழுதிகொண்டிருந்தார், அவருக்கு பிறவி வரமான வசனத்தை எல்லாம் கவிதை என சொல்லிகொண்டிருந்தார்.

இது என்ன வகை கவிதை என அன்றே கேட்டனர், இது தமிழில் இல்லையே என்றனர், இல்லை இது நான் உருவாக்கிய புது தமிழ், இதன் பெயர் வசன கவிதை என்றார் அவர்.

அவர் கலைஞர் கருணாநிதி

அவர்தான் இம்மாதிரியான அட்டகாசங்களுக்கு தலைமகன், கவனித்துபாருங்கள் இன்று அவர் பின்னால் அமர்ந்திருக்கும் கவிஞர்கள் என தன்னை அழைத்துகொள்ளும் பலர் அப்படித்தான் எழுதிகொண்டிருக்கின்றனர் கனிமொழி உள்பட, அதில் மனுஷும் ஒருவர்

அவர்கள் அப்படித்தான்

புரியாத ஒவியம் என ஒப்புகொள்ளவே முடியாத மார்டன் ஆர்ட் போல இவர்கள் ஒரு கவிதை கூட்டம், அதனை படிப்பவர்கள் தான், புரிந்து கொள்பவர்கள்தான் அறிவாளிகளாம். அதற்காகவே ஒரு கூட்டம் நானும் அறிவாளி என சொல்லிகொண்டிருக்கின்றது.

அப்படியானால் நாங்கள் முட்டாள்களாக இருந்துவிட்டு போகின்றோம், விட்டுவிடுங்கள்.