உலக சண்டைகள் : ஓர் அலசல்

உள்ளூர் ஊடகம் தமிழக அரசினை பற்றி எழுதாது என்றால் சர்வதேச ஊடகம் அமெரிக்காவினை பற்றி எழுதாது.

இதோ சிரியாவில் அமெரிக்கா அவ்வளவு வெற்றிபெறவில்லை, சரிகிறது. எப்படி?

சிரியாவில் அதிபரும் ரஷ்யாவும் ஒரு பக்கம், அரச எதிர்ப்பு குழுக்களும், அமெரிக்காவும் ஒரு பக்கம். ஐஎஸ் இயக்கத்திற்கு இவர்கள் எல்லோரும் எதிரிகள்.

இவர்களுக்குள் சண்டை. அரசபடையும் ரஷ்யாவும் ஐஎஸ் இயக்கத்துடனும், அரச எதிப்பு படைகளுடனும் மோதும். அரச எதிர்ப்பு படைகள் அரசுடனும், ஐஎஸ் இயக்கத்துடனும் மோதும். ஐஎஸ் இயக்கம் அரசுடனும், அரச எதிப்பு படையுடனும் மோதும்.

புரிகின்றதா புரியாவிட்டால் விட்டுவிடலாம் அங்கு சண்டை அப்படித்தான், இடையில் குர்துக்கள், யாசிதிகள் போன்ற இன்னும் பல குழுக்கள் உண்டு

சண்டையில் ஐஎஸ் இயக்கத்திடமும், எதிர்ப்பு படைகளிடமும் அடிவாங்கிய சிரிய அரசு ரஷ்யா துணைக்கு வந்தபின் அடித்து கலக்குகின்றது, அதுவும் ஈரானும் ரகசியமாக வந்தபின் அது துணிந்துவிட்டது

சிரியாவில் ஆட்சிமாற்றம் எனும் அமெரிக்க கனவு சரிய தொடங்குகின்றது, அவர்களால் ரஷ்யாவினை தடுக்க முடியவில்லை காரணம் ஐஎஸ்க்கு எதிரான போர் என களமிரங்கி இருக்கும் ரஷ்யா சந்தடி சாக்கில் அரச எதிர்ப்பாளர்களை அழித்து நொறுக்குகின்றது.

துருக்கியினை தூண்டிபார்த்த அமெரிக்கா, அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவரும் திட்டத்திலும் மகா தோல்வி கண்டது.

உச்சமாக ஈரானின் விமானபடைதளத்தினை இனி பயன்படுத்துவோம் என ரஷ்யா நேற்று அறிவித்திருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதன் அர்த்தம் ஈரான் எங்கள் கூட்டாளி என சொல்லாமல் சொல்வது, வளைகுடா எங்கும் ஒரு பதற்றம் ஏற்படுகின்றது.

சிரியாவின் பெரும் பகுதிகள் அரசபடையால் மீட்கபட்டுகொண்டிருக்கின்றன, அமெரிக்க திட்டம் சிக்கலில் நிற்கின்றது

அதிரடியாக மொசார்ட்டுக்கு 30 ஆண்டுகளாக தண்ணிகாட்டும் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லா, ஐஎஸ் இயக்கம் அமெரிக்க தயரிப்பு என தானாக களத்தில் இறங்குகின்றார்.

பெரும் அவமானத்தில் அமெரிக்கா வளைகுடாவில் நிற்கின்றது, தோல்விதான், ஒரு காலத்தில் லெபானானில் கிடைத்த அடிபோன்றது இது.

ஆனால் இதெல்லாம் சர்வதேச ஊடகங்களில் வரவில்லை, வரவும் வராது. எல்லா ஊடகமும் வல்லரசு அல்லது வல்லரசிகளின் அடிமையே

நாம் அதிரடியாக பார்க்கும் நபர் ரஷ்யாவின் புடின்

1990களில் மட்டும் சோவியத் உடையாமலும் அல்லது 2010க்கு முன் ரஷ்ய அதிபராக இதே துடிப்புமிக்க புடின் இருந்திருப்பாரானால்

ஈராக் வீழ்ந்திருக்காது, சதாமும், ராஜிவ்காந்தியும் கொல்லபட்டிருக்கமாட்டார் அப்படி கொல்லபட்டிருந்தாலும் இந்தியபடை ஈழத்தில் புகுந்து பிரபாகரன் காதை பிடித்து இழுத்து வந்திருக்கும்.

எல்லா விசைக்கும் ஒரு எதிர்விசை வேண்டும் அல்லது உண்டு என்பது நியூட்டனின் விதி,

உலக அரசியல் விதியும் அதுவே. அதுவன்றி உலகம் இயங்க முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s