கான் சாகிப் எனும் மருதநாயகம்

இந்தியாவில் வெள்ளையன் ஆட்சி ஏற்பட முதல் காரணம் ராபர்ட் கிளைவ், அவனே ஐரோப்பிய போரின் தொடர்ச்சியாக சென்னையில் ஆர்க்காடு நவாப்பிற்க்காக தன்னோடு மோதிகொண்ட பிரெஞ்ச் காரர்களுடனான யுத்தவெற்றியில் அப்படி சிந்திக்க தொடங்கினான்

அதுவரை இந்தியாவினை ஆள்வோம் என்றெல்லாம் வெள்ளையன் நினைத்ததே இல்லை

ஆனால் அந்த கிளைவிற்கு முழுபலமுமாய் இருந்தவன் ஒரு தமிழன், தன்னை அறியாமல் வெள்ளையர் காலூன்ற அவனே காரணம். அவன் இல்லை என்றால் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி அப்போதைக்கு சாத்தியமில்லை

அவன் தான் கான் சாகிப் எனும் மருதநாயகம்.

FB_IMG_1471424791849

சம்மட்டிபுர கான்சாகிப் சமாதியும், ஐங்கரன் நிறுவண அறிவிப்பும்

FB_IMG_1471423015448

 

சாதரண போர்வீரன், அவனது போர்முறையில் வியந்த ராபர்ட் கிளைவ் அவனை அணைத்துகொண்டு மெருகேற்றினான். அவனாலேதான் சாந்தா சாகிப் தோற்றோடினார். பிரெஞ்சுகாரர்களின் புகழ்பெற்ற் தளபது டூப்ளே அவனால்தான் ஓட விரட்டபட்டார்.

வரலாற்றின் முதல் விடுதலை வீரனான பூலித்தேவனை அடக்கியவன் அவனே, வரிபிரித்து வெள்ளையனை அமர செய்ததும் அவனே, கட்டபொம்மனின் முப்பாட்டனிடம் வரி வசூலித்ததும் அவனே

மைசூர் புலி ஹைதர் அலியினையே முன்பு திருச்சி பக்கம் வராமல் விரட்டி அடித்த மாவீரன்

அவன் கான்சாகிப்பாக இருக்கும் வரை சிக்கல் இல்லை, ஆனால் மதுரை அரசனாக 7 வருடம் ஆளும்பொழுது சிக்கல் தொடங்கிற்று, அவனுக்கும் ஆர்க்காடு நவாப்பிற்கும் முறுகிற்று

அவன் மதுரை நாயகம் என மக்களால் கொண்டாடபட்டான், இந்த இடத்தில் வெள்ளையனுக்கும் அவனுக்கும் உரசல் தொடங்கிற்று, காரணம் நெல்லை தாமிரபரணியில் அவனால் ஒரு அணைகட்டபட்டது, கான்சாகிப்புரம் எனும் ஊர் ஏற்படுத்தபட்டது, இன்னும் உயர உயர சென்றான்

நவாப்பிற்கு நிகராக அவன் மதிக்கபட்டதும், நவாப் அவமானத்தில் சினந்தார், அவனை கட்டுபடுத்துங்கள் என ஆங்கிலேயரிடம் மல்லுக்கு நின்றார்.

எங்களுக்கு கட்டுபட்டவன் நீ , நாங்கள் சொன்னபடி ஆட்சி செய் என்ற ஆங்கிலேயரை துணிந்து எதிர்க்க தொடங்கினான், அவன் களமாடிய போர்கள் அனைத்தும் சாகசங்கள், இவ்வளவிற்கும் தமிழக வழக்கபடியே ஒரு பாளையக்காரரும் அவனுக்கு துணை இல்லை

அவனை தோற்கடிக்க ஆங்கிலேயர்,, நவாப் மற்றும் பல பாளையக்காரர்கள் ஒன்று கூடித்தான் போர் நடத்தினார்கள், தனி மனிதனாக அவர்களை ஓடவிரட்டினான் அவன்.

பிரெஞ்ச்காரர்கள் அதன் பின் உதவ வந்தார்கள், போரில் மருதநாயகம் முன்னேதான் இருந்தான், கோட்டைக்கு நீரும், உணவும் தடை செய்தாலும் அவனை நெருங்க வெள்ளையரால் முடியவில்லை

தாமதமக உதவ வந்தார் ஹைதர் அலி, அதற்குள் விதி முந்திகொண்டது. பகைவன் என்றாலும் வெள்ளையனை எதிர்த்ததற்காக மருதநாயகத்திற்காக ஓடிவந்த ஹைதர் அலி உண்மையில் பெருந்தன்மையான மாவீரன்.

மருதநாயகத்தை போரில் வெற்றி கொள்ளமுடியாமல் அவன் தொழுகையில் இருந்தபொழுது அவனை பிடித்தார்கள். அதுவும் வஞ்சகமாக. அது ஒரு ரமலான் மாத நோன்பு நேரம் வேறு. இன்னொன்று பிடித்துகொடுத்தது அவனது உற்ற நம்பிக்கையாளர்கள்.

அவனை பலவாறு கொன்றும் அவன் சாகவில்லை, மாறாக தூக்கு கயிறே 3 முறை அறுந்து அவனை காப்பாற்றியது.

அவன் இடுப்பிலிருந்த ஒரு தாயத்து கழற்றிய பின்புதான் அவனை கொல்ல முடிந்தது என்பார்கள். ஆனால் அவன் யோக சித்துக்கள் கற்றவன் என்பதால் அவன் சாகவில்லை என்பது இன்னொரு குறிப்பு, அதன் பின் பலநாள் அவனுக்கு உணவின்றி போடபட்டுதான் அவனை பலம் குன்ற வைத்து கொன்றார்கள்.

அப்படியும் அஞ்சிய ஆங்கிலேயர் அவன் தலையினை திருச்சியிலும் கையினை பாளையங்களோட்டையிலும் உடல் கால்களை தஞ்சையிலும் உடலை மதுரையிலும் புதைத்தனர்

அவன் மீது எவ்வளவு அச்சமிருந்தால் இப்படி செய்திருப்பர் வெள்ளையர்? அவன் அந்த அளவு வெள்ளையரை மிரட்டி இருக்கின்றான்.

உண்மையில் ஆங்கிலேயருக்கு அவனை கொல்ல மனம் இல்லை, தங்கள் ஆளுமை பெற முதலில் அவனே உதவினான் எனும் ஒரு இரக்கம் அவர்களிடம் இருந்தது, ஆனால் நவாப்பின் பிடிவாதம் அதனை தோற்கடித்தது, இன்னொன்று பிதாமகன் ராபர்ட் கிளைவ் அப்போது பிளாசி யுத்தத்தில் இருந்ததால் இவ்வவிஷயம் நடந்தது என்ற கோணமும் உண்டு.

கிளைவின் கண்களில் மின்னிய பெரும் வீரன் மருதநாயகம், அவருக்கு அவன் மீது பெரும் அபிமானம் இருந்தது என்பது வரலாறு

அவன் கொல்லபட்டு கொஞ்சநாளிலே ராபர்ட் கிளைவும் லண்டனில் தற்கொலை செய்து கொண்டான் என்பது இன்னொரு சோகம்.

ராபர்ட் கிளைவ் பெரும் வரலாறு, அவன் புகழும் லண்டனில் கொஞ்சமல்ல, ஆனால் தற்கொலை செய்துகொண்டதால் கிறிஸ்தவ மதிப்பினை இழந்தான். அவன் கதையினை படமாக்க சில ஹாலிவுட் இயக்குநர்கள் முயற்சிப்பதாக செய்தி உண்டு.

கான்சாகிப் எனும் மருதநாயகம் பெரும் வரலாறு, எப்படிபட்ட வரலாறு என்றால் அக்கால வெள்ளையன் குறிப்பு இப்படி சொல்கிறது, இந்தியாவில் நாங்கள் வியந்த போர்திட்டக்காரர்கள் ஹைதர் அலியும், கான் சாகிப்பும்

இருவரும் இணைந்திருந்தால் தென்பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கமுடியாது, நமது அதிர்ஷ்டம் அவர்கள் ஒன்று சேரவில்லை, கான்சாகிப்பினை வீழ்த்தும் வரை ஆர்க்காடு அரசினை கைபற்றுவோம் எனும் நம்பிக்கை இல்லை, ஒரு சாதரண குடும்பத்துகாரனுக்கு இந்த அரச அறிவு சாத்தியமில்லை

அவன் அவதாரமாகவோ அல்லது அரசகுடும்பத்துகாரனவோகத்தான் இருக்க முடியும்

இதற்குமேலும் என்ன சொல்வது.

நிச்சயமாக சொல்லலாம், தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். அவர்களை அலறவிட்டவன், எப்படியோ தன்னை அறியாமல் சிக்கி வஞ்சகமாய் கொல்லபட்ட மாவீரன், வரலாற்றில் அவன் ஒரு பெரு வீரன்.

அவன் கதையினை கமலஹாசன் தன் கனவுபடமாய் எடுக்க நினைப்பது வரலாறு அறிந்தவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு, ஒருமுறை சோனிநிறுவனம் தயாரிக்க அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் பட்ஜெட்?

காரணம் கதைபடி பல பாத்திரங்கள் வரும், அனைத்தும் சாதாரணம் அல்ல‌

ராபர்ட் கிளைவ், டூப்ளே, சாந்தா சாகிப், நவாப் முகமது அலி, ஒண்டிவீரன், பூலித்தேவன், கட்டபொம்மன் தாத்தா, கான்சாகிப் கிறிஸ்தவ மனைவி என பெரும் பாத்திரங்களே ஒரு பெரும் கணக்கு.

இனி படை அக்கால கட்டடட செட், இதர செலவுகள் எல்லாம் தனி.

ஆர்க்காடு படை, கம்பெனியார் படை, பிரெஞ்ச் படை என அதற்கே கட்சிமாநாடு போல ஆட்கள் வேண்டும்

உடை உட்பட எல்லாமும் அக்காலத்திற்கு செல்லவேண்டும்.

இதனால் சோனி நிறுவணம் பின்வாங்கிவிட்டது அதன் பின் மருத நாயகம் கமலின் கனவில் மட்டும் வந்தார்.

இப்போது லைக்கா நிறுவணம் அதனை தயாரிக்கபோவதாக செய்திகள் வருகின்றன, அப்படி நடந்தால் அது பெரும் முயற்சி, பாராட்டபடவேண்டிய முயற்சி.

தமிழனின் வீரத்தை படமாக‌ தமிழன் எடுக்காமல், வேறு யார் எடுக்கமுடியும்?

பெரும் வியப்பான, வரலாறான மருதநாயகம் படத்தினை எடுக்க கமலஹாசனை தவிர தமிழகத்தில் யாரும் இல்லை என்பதும் இன்னொரு விஷயம்.

பாகுபலி போன்ற படங்கள் வந்து வெற்றிபெரும் பொழுது, முறையாக நிதானமாக எடுக்கபட்டால் அது பெரும் வெற்றி என்பது மட்டும் உறுதி

காரணம் மதுரை நாயகம் எனும் மருதநாயகத்தின் பெரும் ஆச்சரியமான வீர வரலாறு அப்படி. மதுரையினை தலைநகராக கொண்டு ஆண்ட மாமன்னன் அவன்

ஆனால் அவனுக்கு அவன் சம்மட்டிபுரம் கல்லறை தவிர வேறு எங்கும் நினைவுசின்னம் கிடையாது, இப்படி ஒரு கல்லறை இருப்பதே பலருக்கு தெரியாது.

அவன் வாழ்வு எல்லா தமிழரையும், ஒவ்வொரு இந்தியனையும் சென்றடைய வேண்டிய ஒன்று என்பதால் வாழ்த்தலாம்

பெரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய ராணுவத்தில் பணியாற்றி பெரு வெற்றி ஈட்டிய ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போகின்றார்களாம்

அதற்கு முன்பு இந்த பெரும் வீரனின், தமிழர் அடையாளத்தின் வரலாறு படமாக வந்துவிடட்டும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s