மலேசியருக்கும் தங்க பதக்க ஏக்கம்

நம்மை போலவே மலேசியருக்கும் தங்க பதக்க ஏக்கம் இருந்தது, அவர்களும் ஒலிம்பிக்கில் தங்கம் பெறவில்லை

பேட்மிட்டனில் உலக தரம்வாய்ந்த அவர்கள் வீரர் லீ சாங் வாய் எப்படியும் தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு இருந்தது, அவரும் லின் டானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு வந்தார்.

இன்று அவர் எப்படியும் தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் விதி சதி செய்து அவர் வெள்ளியே வென்றார்.

ஒரு வேளை வென்றிருந்தால் திங்கட்கிழமை தேசிய விடுமுறையாக அறிவிக்கபட்டிருக்கும், ஆனால் எதிர்பாரா விதமாக தங்கம் பறிபோனதில் மலேசியா கவலையில் மூழ்கியுள்ளது.

தங்கம் இல்லை, முழுநாள் விடுமுறை இல்லை,தங்கம் திங்கள் விடுமுறையும் சேர்த்து அடித்துவிட்டது, அந்த வென்ற சீன வீரரை நினைக்க நினைக்க எரிச்சல் வருகின்றது.

ஏ சீனாவே எத்தனை தங்கம் கிடைத்திருக்கின்றது?, இதனை ஒன்றையாவது விட்டிருக்கலாம் அல்லவா, பெரும் பேராசை உனக்கு

சரி வெள்ளி கிடைத்திருக்கின்றது அல்லவா, அரை நாளாவது விடுமுறை விடலாம் அல்லவா? என யாராவது கேட்பார்களா என்றால் ம்ஹூம் 🙂

சாந்தி : தமிழக ஓட்டப் பந்தய வீராங்கனை

வாழும் தமிழக பிரபலங்கள் அவசியமாக எழுத வேண்டிய உயில் என்னவென்றால், தங்களுக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி அதனை பதிவு செய்துகொள்வது

மனிதர் எந்த பிரபலம் செத்தாலும் அவர் என்மீது மரியாதை கொண்டவர் என தொடங்கிவிடுகின்றார், 70 வருடங்களுக்கு பின் இறந்த எல்லா பிரபலங்களுக்கும் அதே பல்லவிதான்.

ஆட்டோ சங்கர், சந்தண வீரப்பன் மட்டும் விதிவிலக்கு

ஆனாலும் அவர் அலும்பு தாங்க முடியவில்லை,

அன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரிகாந்தினை எப்படி கொண்டாடினாரோ அப்படியே இன்று சிந்துவிற்கு சிந்து பாடிகொண்டிருக்கின்றார், பாடட்டும்

ஆனால் ஓட்டபந்தய வீராங்கனை சாந்தி வெல்லும்பொழுது பரிசளித்து மகிழ்ந்த அவர், அதன் பின் அவள் அவமானபட்டு
பதக்கம் பறிக்கபட்டபொழுது இறுதிவரை மூச் விடவில்லை.

FB_IMG_1471706431553

அவள் ஆணா பெண்ணா என அவமான சர்ச்சை வெடித்து அவள் அவமானபட்டபொழுது ஒரு கருத்தும், ஒரு ஆதரவும் தமிழகத்தில் இல்லை, பிடி உஷா என்ன ஜெயப்பிரதா போலவா இருந்தார், இதோ ஆப்ரிக்க வீராங்கனைகள் எல்லாம் ஏஞ்சலினா ஜோலிய்காக இருக்கின்றார்கள்

அந்த பெண்ணிற்காக வாதாடி அவளை காப்பாற்றி இன்று ஒலிம்பிக் அனுப்பி இருந்தால் இன்று நிச்சயம் அவள் பதக்கம் பெற்றிருப்பாள், டோகாவில் அவள் சாதனை அப்படி.

இன்று ஜெயா வழக்கினை விழுந்து விழுந்து அன்பழகனை விட்டு நடத்துபவர்களுக்கு, கனிமொழிக்காக ராம்ஜெத்மலானியினை அழைத்து வாதாடுபவர்களுக்கு,

தயாளு அம்மாள் அரை பயித்தியம் என மருத்துவ சான்றிதழ் கொடுப்பவர்களுக்கு சாந்திக்கு ஒரு பரிசோதனை செய்து வழக்கு நடத்த எவ்வளவு நேரமாகும்? செய்யமாட்டார்கள். தமிழகமும் கேட்காது

ஆனால் தெலுங்கு தேச பெண் வென்றால், ஹரியான பெண் வென்றால் வேலுநாச்சியார் ரேஞ்சிக்கு பேசிகொண்டிருப்பார்கள்.

இந்திய அளவில் பெயர் பெற்ற கலைஞர் நினைத்திருந்தால், அதுவும் மத்திய அரசினை ஆட்டுவித்திருந்த நிலையில் நினைத்திருந்தால் அப்பெண்ணுக்கு ஒரு நியாயம் சொல்லி, இன்று அவளை ஒலிம்பிக்கில் ஓட வைத்திருக்கலாம்தான்

இதனை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது

தானாக யாராவது வென்றவர்களுக்கு இந்தியராக வாழ்த்துவார், தமிழனாக தாலாட்டுவார்,

ஆனால் அவர்களுக்கு சிக்கலென்றால் அன்னாரை காணவே முடியாது.

அவர் அப்படித்தான் விடுங்கள்.

ஆனால் ஒன்று புரிகின்றது, ஒரு காலத்தில் கருப்பர்களை விலங்கினும் கீழ் நடத்திய அமெரிக்கா இன்று அவர்களை அரவணைத்து அவர்கள் பலத்தில்தான் முண்ணணியில் நிற்கின்றது

இரண்டாம் இடம் பிடித்திருக்கும் பிரிட்டனும் அப்படியே தான் ஒலிபிக்கில் ஜொலித்துகொண்டிருக்கின்றது

சாதி வரையரையும், ஏழை எளியவர் எனும் ஒரு வகை வர்க்கபேதமும் ஒழிந்தால் நிச்சயம் இந்தியாவும் ஒலிம்பிக்கில் இந்தியாவால் பதக்கம் குவிக்க முடியும்.

ஒலிப்பிக்கில் கருப்பு மங்கைகள் தங்கம் வெல்லும் பொழுதெல்லாம் மனம் சாந்தியினை நினைத்துதான் பார்க்கின்றது.

சாந்தியினை நினைக்கும் பொழுதெல்லாம் அதுதான் நினைவுக்கு வருகின்றது, கூடவே “அவரின்” நினைவும் வந்து தொலைக்கின்றது.