வியாபார அடிமைகள் ஒழிப்பு தினம்

14089157_10207050004863662_3833421048423611214_n

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை.

சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌

அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் அவன் குழந்தையினை, அவனை, மனைவியினை யாருக்கும் விற்கலாம் அல்லது கொல்லலாம்.

யாரும் கேட்கமாட்டார்கள் அடிமைகள் உழைக்கவும் சாகவும் பிறந்தவர்கள், பஞ்சாயத்தில் கூட பிராது கொடுக்க முடியாது

வேலை செய்யவேண்டும் , முதலாளி விற்றால் அடுத்த எஜமான். அடித்தால் பட்டுகொள்ளவேண்டும், சூடு போட்டால் பொறுத்துகொள்ளவேண்டும், உழைத்தால் உண்ணலாம், இல்லாவிட்டால் சாகலாம்

இந்த இரண்டினை தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு அக்காலத்தில் இல்லை, அவர்களுக்கு கடவுளோ மதமோ இல்லை.

அடிமைகளுக்கு போட்டிருக்கும் உடை தவிர ஏதும் சொந்தமில்லை, அவனுக்கு வீடு வாசல் சொந்தமாக ஒரு குண்டூசி கூட கிடையாது, அவர்களுக்கென காதில் அல்லது முதுகில் ஒரு அடையாளம் இடுவார்களாம், பார்த்தவுடன் கண்டுகொள்ள‌

அதவாது கடனுக்கு வாங்கிய மாடுபோல ஒரு முத்திரை, எவ்வளவு கொடூரம்

Stanley Rajan's photo.இதில் பெண் அடிமைகளின் நிலை மகா மோசம், இயற்கையான இரட்டை ஆபத்து அவர்களுக்கு.

பைபிளின் ஆபிரகாம் முதல் அமெரிக்க ஆபிரகாம் லிங்கன் காலம் வரை அது உச்சத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களின் சரித்திரம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றது

வென்ற மன்னனுக்கு தோற்ற மன்னன் அடிமை, மன்னன் மட்டுமல்ல மக்களும் அடிமை. அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான் என வரலாறு அதனைத்தான் சொல்கிறது. அவ்வளவு ஏன் நமது கரிகால சோழன் அடிமைகளை கொண்டுதான் அணை கட்டினான், ஈழ அடிமைகளை கொண்டுதான் ராஜராஜ சோழன் பெரியகோவில் கட்டினான்

எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை கொண்டே பெரும் பிரமீடுகள் கட்டபட்டன, என்பதெல்லாம் அடிமைகளின் வரலாற்றினை சொல்கிறதது, இந்தியாவில் அடிமைகள் விசுவாசமான தளபதிகளாகவும் இருந்தார்கள், மாலிக்காபூர் அப்படிபட்டவனே, பாகுபலி கட்டப்பா அவன் சாயலே

இதில் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லபட்ட கருப்பினத்தவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, ஆப்ரிக்காவிற்கு வரும் வெள்ளையர் துப்பாக்கி முனையில் அவர்களை பிடிப்பர், விலங்கிடுவர் அவர்களை கப்பலேற்றி அமெரிக்கா கொண்டுசெல்வர், ஏலமிடுவர்

திடகாத்திரமான அடிமைகள் நல்ல விலைக்கு விற்கபடுவார்கள்

அவன் மனதால் எவ்வளவு பாதிக்கபடுவான், சட்டென உறவுகளை பிரிந்து குடும்பத்தை பிரிந்து அவன் மனம் என்ன பாடு படும்? அடிமை அவ்வளவுதான். கடவுளே அங்கீகரித்தபின் என்ன செய்ய?

வாங்கபடும் அடிமைகள் பண்ணைகளில் கொண்டு அடைக்கபடுவர், அவன் சக அடிமையுடன் உழைக்கவேண்டும், சில பெண் அடிமைகளை விடுவார்கள், அவள் சந்ததி பெருக்கிகொண்டே உழைக்கவேண்டும், அப்படி அடிமைகள் பெருகிவிட்டால் இன்னொரு பண்ணைக்கு விற்றுவிடுவார்கள்

நினைத்துபார்த்தாலே மனம் கதறுகின்றது, மானிட குலத்தின் இயல்புகளான குடும்பம், பந்தம், பாசம், நட்பு, மண்வாசனை, எல்லாம் அவர்களுக்கும் இருந்திருக்கும் அல்லவா? எப்படி தாங்கிகொண்டார்கள்? எப்படிபட்ட மகா துயரம் இது

எத்தனை தலைமுறைகளாக இதனை தாங்கி வந்தார்கள்? எவ்வளவு சபிக்கபட்ட வாழ்க்கை அவர்களுடையது.

இன்றைய அமெரிக்கா கனடா பிரேசில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்சிக்கு ஒரு பேச்சு கூட பேசாமல் மாடுகளை விட கேவலமாக அந்த அடிமைகள் உழைத்த உழைப்பில் எழும்பி நிற்பவைதான் அந்த தேசங்கள்

இன்றளவும் அவை உழைப்பில் உயர்ந்துநிற்க சொல்லிகொடுத்தது அந்த அடிமை இனமே

அந்த கொடுமைக்கு முதலில் சாவு மணி அடித்தவன் மானிட வரலாற்றின் பெரும் மானிட நேயரான ஆபிராகம் லிங்கனே எனினும் முதல் அடிமைகள் கிளர்ச்சி ரோமை வரலாற்றில் தொடங்கிற்று, அடிமைகள் “எல்லாம் நான் அடிமை இல்லை” என தோற்ற புரட்சி அது.

அதன் பின் 1791 ஆகஸ்டு 23ல் இன்றைய ஹைத்தி நாட்டில் அது கிளர்ச்சியாக வெடித்தது, வியாபார முறை அடிமைதனத்திற்கு நவீன காலத்தில் எழும்பிய முதல் குரல் அது என்பதால் அந்நாளௌயினையே வியாபார அடிமை ஒழிப்பு நாளாக அனுசரிக்கின்றார்கள்

அதன் பின் ஆபிராக்ம் லிங்கன் காலத்தில் விடிந்தது என்றாலும், முன்னறிவித்த சேவல்கள் கூவிய தினம் இது.

ஆபிரகாம் லிங்கன் இந்த அடிமை ஒழிப்பில் மகா உன்னமதமான மனிதன், இதற்கான சட்டமியற்றிய பாவத்திற்குதான் அவர் உயிரினையே பறித்தார்கள்.

அப்படி விடிந்தபின்புதான் அடிமைகளுக்கான பல உரிமைகள் ஒவ்வொன்றாக கிடைத்தன, முதலில் அவர்களை மனிதர்கள் என்ற வரையறைக்கு கொண்டுவந்தார்கள்

பின் 10 மணிநேர வேலை என பளு குறைக்கபட்டது, பின் திருமணஅனுமதி, சமூக அனுமதி என அவர்கள் போராடினார்கள், பின் வாக்குரிமைக்கு பெரும் போரே நடத்தினார்கள், அதன் பின் குடிமக்களாக அங்கீகரிக்கபட்டார்கள்

இந்த பரிதாபத்திற்குரிய அடிமை இனத்தின் வாரிசுதான் இன்றைய அமெரிக்க அதிபர் ஓபாமா

அந்த அடிமைகளின் வாரிசுகள்தான் இன்று ஒலிம்பிக்கினை கலக்கி முதலிடத்தில் நிற்கின்றார்கள்

காலம் எவ்வளவு மாறுகின்றது?,

காலம் மாற மாற மனிதன் மட்டுமல்ல கடவுளும் மாறிகொண்டே வந்திருக்கும் வித்தியாசமான உலகமிது.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் வழிபடும் ஏக கடவுள் ஒருவர்தான் ஆனால் அடிமை முறையினை அங்கீகரிக்கும் பழைய ஏற்பாடும், அதனை எதிர்த்து உரிமைகுரல் எழுப்பும் புதிய ஏற்பாடும் ஒரே கிறிஸ்தவ நூலே

கடவுளின் கொள்கைகளும் காலத்திற்குட்பட்டு மாறுகின்றது, மாறட்டும்

இதனை மாற்றம் ஒன்றே மாறா தத்துவம் என சொல்லிவிட்டான் பகவான் கிருஷ்ணன்.

இன்றைய காலத்தில் எல்லாம் மாறிவிட்டன, மற்ற நாடுகள் எங்கோ சென்றுவிட்டன, அடிமைகள் அரசாளும் காலமிது, அமெரிக்காவில் ஆள்கின்றனர், லெனின் பெரும் சாம்ராஜ்யத்தினையே அமைத்து காட்டினான்

தமிழகமோ மறுபடி அதே அடிமைகள் காலம் நோக்கி செல்கின்றன‌

தமிழக சட்ட சபையினை பாருங்கள், ஒரு பக்கம் கொத்தடிமைகள், அய்யோ பாவம், வாய் திறந்தாலே பதட்டபடுகின்றார்கள்

இன்னொரு பக்கம் அடிமைகள், அவைகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த கட்சி கொத்தடிமைகள் கட்சி என்றால் அந்த கட்சி அடிமை கட்சி அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் கொத்தடிமைகளோ, அடிமைகளோ இருவரும் வியாபார அடிமைகள், அந்த தொழிலில் கருத்தாய் இருப்பார்கள்

இந்த அடிமைகள்தான் நாம் நம்மையே ஆள அனுப்பபட்டவர்கள் என்றால், நாம் எவ்வளவு பெரும் 5 அண்டு அடிமைகள்.

நாம் மகா விசித்திரமாக நம்மை நாமே விற்றுகொண்ட அடிமைகள்

ஆப்ரிக்க அடிமைகளுக்கு எல்லாம் விடிந்துவிட்டது,

நமக்கு என்று விடியபோகின்றதோ தெரியவில்லை. விடிவதாகவும் தெரியவில்லை,

நமது நிலை அவர்களை விட பரிதாபமாக சென்றுகொண்டிருக்கின்றது.

திருத்தொண்டர்கள்

முன்பெல்லாம் திருத்தொண்டர்கள் இருந்தார்கள், ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்படியே அழைக்கபட்டார்கள்

சில மன்னர்கள் கூட தங்களை திருதொண்டர்கள் என அழைத்து ஆலயபணிகள் செய்தனர்.

உழவாரபணிகளில் கூட ஈடுபடும் சில் திருதொண்டர்களை கூட தெரியும்.

இப்பொழுதெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கும் திருதொண்டர்கள் இருக்கின்றார்களாம்,

தொண்டருக்கு விபூதி தயாரிப்பு, பஞ்சாமிர்தம் தயாரிப்பு,பூ கட்டுதல் என பலவேலைகள் இருந்தால் நியாயம், அட புளியோதரை, வெண் பொங்கல் செய்தாலும் அர்த்தமுண்டு

ஆனால் வெடிகுண்டு செய்வது எந்த சாமியினை அர்ச்சிக்க? அல்லது எந்த பக்தருக்கு பிரசாதமாக கொடுக்க?

மற்ற மதத்துகாரன் செய்தால் தீவிரவாதி, தொழில் முறையில் செய்தால் அனுமதியற்ற வெடிபொருள் குற்றம். ஆனால் அவர்கள் செய்தால் தொண்டர்கள்.

பாபர் மசூதியினை இடிக்க கிளம்பியனை எல்லாம் “கர சேவகர்கள்” என அழைத்த நாட்டில், வெடிகுண்டு செய்பவனை தொண்டர் என அழைப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது?

நவீன “திருத்தொண்டர் புராணம்” வெடிகுண்டு செய்பவர்களையும், சில அபாயமானவர்களையும் பற்றி எழுதபட்டு கொண்டிருக்கின்றது

ஒலிம்பிக்ஸ்: தண்ணீர். தண்ணீர்.. தண்ணீர்…

ஒலிம்பிக் மராத்தானில் தண்ணீர் வழங்காத சர்ச்சையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி

அதாகபட்டது மராத்தான் என்பது நெடுந்தூர ஓட்டம், அரசியலில் கலைஞர் போல ஓடிகொண்டே இருக்கவேண்டும், வைகோ போலவோ அல்லது கிருஷ்ணசாமி போலவோ , ராமதாஸ் போலவோ ரெஸ்ட் எடுத்து ஓடமுடியாது, ஜெயா போல அமர்ந்துகொண்டு அந்த இலக்கினை என் அருகில் கொண்டு வா போதும் என சொல்லவும் முடியாது

Image may contain: 1 person , selfie and close-up

ஓ.பி ஜெய்ஷா

ஒவ்வொரு 2 கிமீட்டருக்கும் ஒரு ஸ்டால் அமைத்து குளுக்கோஸ் போன்ற பானம் வழங்கவேண்டியது வீரர்களை அனுப்பும் நாட்டின் கடப்பாடு, அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஒரு நாட்டு வீரர் இன்னொரு நாட்டின் ஸ்டாலில் ஏதும் வாங்கமுடியாது, பாதுகாப்பு ஊக்கமருந்து உட்பட்ட சர்ச்சைகளை தவிர்க்கும் முயற்சி அது

ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு 8 கிமீட்டருக்கு ஒரு ஸ்டால் பொதுவாக அமைக்கும், அப்படி அமைத்திருந்தது

இப்பொழுது சர்ச்சை என்னவென்றால் 2 கிமீ ஒன்றாக அமைந்திருந்த இந்திய ஸ்டால் வைகோ கூடாரம் போல ஆளின்றி கிடந்தது, ஆள் இல்லாவிட்டாலும் பராவயில்லை தண்ணீர் பாட்டில்கள் கூட இல்லை

சரி இது எங்கே முடியும் என நினைக்கின்றீர்கள்?.

OP-Jaisha-Getty-380

நிச்சயம் ஒலிம்பிக் கமிட்டி பணம் ஒதுக்கியிருக்கும், இந்திய பணம் என்றால் அங்கே ஊழலும் வரவேண்டும் என்பது இந்திய நடைமுறை அல்லவா?

வலுவான எதிர்கட்சி என்றால் இதனை பெரும் சர்ச்சை ஆக்கலாம்.

விரைவில் வெடிக்கும் பாருங்கள், “ரியோ ஒலிம்பிக் ஊழல் 2016”,

அடுத்த சுரேஷ் கல்மாடி ஆகபோகின்றார், தற்போதைய தலைவர் நாராயண ராமசந்திரன்.
இதற்கு பதிலளிக்கும் பொறுப்பு அவருக்குத்தான் உண்டு

அவனவன் ரியோ சாதனை என கொண்டாடிகொண்டிருக்கின்றான், நடத்திய பிரேசிலில் கூட ஊழல் சர்ச்சை இல்லை,

ஆனால் நாம் அதனை குடிநீருக்காக சந்திக்க போகின்றோம்,

4 தண்ணீர் பாட்டிலுக்கே இந்த ஊழல், இவர்களிடம் ஒலிம்பிக் போட்டியினை ஒப்படைத்தால், ஒலிம்பிக் கிராமம் என ராஜஸ்தான் பாலைவனத்தைதான் காட்டுவார்கள்.

பதக்கம் வெல்வது அல்ல, வீரர்களின் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காத நாம் என்ன சாதிக்கபோகின்றோமே தெரியவில்லை.

மற்ற நாடுகளை பார்த்து பெருமூச்சு விட்டுகொண்டு வேலையினை பார்க்க வேண்டியதுதான்.