ஆயர்குலத்தலைவா போற்றி

Image may contain: one or more people

முருகன் முப்பாட்டன், தமிழர் அடையாளம் என கொஞ்சநாளாக அழிச்சாட்டியம், அதன் பின் நரகாசுரன் தமிழன் என ஒரு வாழ்த்து, கொஞ்சநாளில் ராவணன் தமிழன் சொல்லி அவனுக்கு வீரவணக்கம்.

முருகன், ராவணன் சுற்று முடிந்து அடுத்த சுற்று, இப்பொழுது சிக்கி இருப்பவர் கிருஷ்ணன்

இவர் மூதாதையராம், மருத நிலம் எனும் விவசாய நிலத்தில் வாழ்ந்த மூதாதையாம், சரி அப்படியானால் முருகன் முப்பாட்டன் மலைவாசி, தமிழன் நாட்டிலிருந்து காட்டிற்கு சென்றிருக்கின்றான் என்பது இவர்கள் ஆராய்சி.

முருகன் முப்பாட்டன், நரகாசுரனும் பாட்டன், சூரனும் பாட்டன், ராவணன் பாட்டன் எனும் வழியில் அடுத்தது என்ன வரும் என்பது அனுமானிக்க கூடியது

அதே தான் கம்சனும் தமிழன், கிருஷ்ணனால் கொல்லபட்ட காளிங்கன், சிசுபாலன் என எல்லோரும் முப்பாட்டன்

அதாவது கொன்றவனும் முப்பாட்டன், கொல்லபட்டவனும் முப்பாட்டன்

ஆசியா முழுக்க தமிழர், உலகமே தமிழர், எல்லோரும் தமிழர்

ஒரே நாளில் காலையில் சூர சம்ஹாரம் என முருகனை ஹீரோ என கொண்டாடலாம், மாலை சூரனுக்கு வீரவணக்கம் செலுத்தலாம்

காலை விஷ்ணுவிற்கு வெற்றிவிழா கொண்டாடலாம், மாலை நரகாசுரனுக்கு அழுது புரளலாம்

கிருஷ்ண ஜெயந்தி காலையில் கொண்டாடலாம், மாலையில் எல்லாவற்றையும் வாந்தி எடுத்து கம்சனை அழித்த கண்ணா உன்னை விடமாட்டோம் என முழங்கலாம்

இனி பிரம்மன் மட்டும் பாக்கி, அவனுக்கு என்ன பங்கு வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

சிங்கள இனவெறியன் பிரேமதாசா அமைதிபடை காலத்தில் புலிகளுக்கு உதவியதால் அவனுக்கு காலையில் ஒரு புகழ்வணக்கம், பின் அவன் புலிகளால் கொல்லபடதால் அப்படியே மாலையில் ஒரு துரோகி பட்டம்

உங்களுக்கு இது விசித்திரமாக படலாம், ஆனால் 2004ல் இருந்து சீமானிய அழிச்சாட்டியத்தை கவனித்துவருபவர்களுக்கு இது அதிசயமாக தெரியாது

காரணம் அன்னார் அன்று ஒரு நாள் பசும்பொன் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தி முழங்கினார், அவர் புகழ்பாடினார், அடுத்த மாதமே இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து “ஏய் இனமான தமிழனே, உன்னை கொன்ற சமூகத்தை விடவே மாட்டேன்..” என சீறினார்.

ஆக அங்கிள் சைமன் மனநிலை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகின்றதே தவிர, திருந்தியதாக தெரியவில்லை, நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு அவர் திருந்தவே மாட்டார்

அநேகமாக அடுத்த முப்பாட்டன் வரிசை இந்திரன், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியர் லெவலுக்கு செல்லலாம்.

முப்பது முக்கோடி தேவர்கள் உண்டல்லவா, ஒரு ரவுண்ட் நிச்சயம் வருவார்கள்.

சிதறல்கள்


திருச்சி சிவா மீது அதிமுக பெண் எம்பிக்கள் சம்பந்தமாக புகார்கள் அதிகரிப்பு

இவ்விஷயத்தில் அவர்கள் “கட்டுப்பாடு” என்பது ஊர் அறிந்தது, “கண்ணியம்” அக்கட்சியின் பல தலைவர்கள் வாழ்ந்து சொன்னதுதான்.

ஆனால் “கடமை”க்காக கூட இன்னும் தலைவர் வாய் திறக்காதது ஆச்சரியம்

ஆக கடமை, கண்ணியம். கட்டுபாடு வாழ்க‌


எனக்கு பதவி கொடுத்தது கடவுள் தான் ஜெயலலிதா இல்லை – சசிகலா புஷ்பா

தூத்துகுடி நகராட்சி தலைவராக கடவுள்தான் கொடுத்தாரா? வாக்களித்த மக்கள் இல்லையா?, உருவாக்கிய மக்கள் வாயில் மண்ணா?. அன்று தேர்ந்தெடுத்தது கடவுளா? அல்லது மக்களா?

கடவுள் கொடுத்த பதவி என்றால், நாடாளுமன்றம் எதற்கு?கடவுள் கொடுத்த பதவி என்றால் கடவுளுக்கு சேவை செய்வதல்லவா முறை?

திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டு பஜனை பாடி மணியாட்டவேண்டும் அல்லவா? இதனை பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது

ஆனால் ஏதோ ஒரு “தெய்வம்” இவரை இயக்கிகொண்டிருக்கின்றது என்பது மட்டும் மறைமுகமாக தெரிகின்றது

ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் அறிவுரை

‘பொது வாழ்க்கையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்” : நீதிபதிகள் அறிவுரை

இந்த அறிவுரையோடு நிறுத்திகொண்டது நல்லது,

அதிகம் படித்த நீதிபதிகள் என்றால் விமர்சனங்களை சகித்துகொள்வதில் உலகிலே நம்பர் 1 பழுத்த அரசியல்வாதி தமிழகத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள் என சொல்லி இருப்பார்கள்,

அப்படி சொல்லி இருந்தால் என்ன ஆகியிருக்கும் 🙂

அதுவரை அக்கட்சியினர் நீதிபதிகளுக்கு கோட்டான கோடி நன்றிகளை தெரிவிக்கவேண்டும்

ஆயினும் அவர்கள் ஆர்வகோளாறு மிக்கவர்கள், தெய்வத்திற்கு மனிதன் ஆலோசனை சொல்வதா என நீதிபதிகள் மீது சாடி பேனர் வைத்து , தெருவில் புரண்டு அழிச்சாட்டியம் செய்யாதவரை நல்லது.

சட்டசபை மல்யுத்தம் நடக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்திருப்பது கலைஞருக்கு யானைவாய் கரும்பு கட்டு 🙂

கண்ணனின் பக்தர்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்…

Image may contain: 1 person

பகவான் கிருஷ்ணனின் பிறந்தநாளில் ஒரு பதிவினை இட்டால், அவரை பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? வீரமணி என்ன சொன்னார் தெரியும? என வரிந்து வருகின்றார்கள்

பெரியாரை விடுங்கள், வீரமணி எல்லாம் பட்டியலிலே வரமாட்டார்

இந்த பகுத்தறிவாளர்களுக்கு பாரதம் ஒரு சிக்கல், காரணம் பிராமணன் சதி என சொல்லமுடியாது, காரணம் கண்ணன் ஒரு தாழ்த்தபட்ட சாதி, எழுதிய வியாசர் ஒரு மீணவ சாதி.

அதனால் டேய் கண்ணனுக்கு எத்தனை பொண்டாட்டி தெரியுமா?, ஒழுக்கம் கெட்டவன் , பாஞ்சாலிக்கு கணவன் எத்தனை தெரியுமா? ஏய் மோசடி புராணமே என மட்டும் பொங்குவார்கள், பார்பானிய சதி என்பது இதில் சொல்லமுடியாது.

பாரதம் மோசடி, கைபர் வழி வந்த புரட்டு என்பார்கள், அதற்கு சாட்சியே இல்லை என்பார்கள். சரி அதே கைபர் வழியாகத்தானே இஸ்லாமும் நுழைந்தது அவர்களிடம் சாட்சி கேட்பார்களா என்றால் ம்ஹூம்…

அரபிகடல் வழியாக நுழைந்தது கிறிஸ்தவம், சிலுவை எங்கே, அது எங்கே? இது எங்கே? ஆதாரம் எங்கே என கேட்பார்களா? என்றால் இல்லை.

ஆனால் கண்ணனுக்கு மட்டும் எங்கே ஆதாரம் என்பார்கள், இதுதான் பகுத்தறிவு.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், கண்ணன் பிறந்தான் என்பவர்களுக்கு அவன் பிறந்தான். நம்புபவர்களுக்கு அவன் உண்டு.

ஒருமுறை பிரபல ஆலயத்திற்கு செல்லும்பொழுது திராவிட கழக விடுதி கண்ணில் பட்டது, பெரியார் வழக்கமான வரிகளுடன் சுவரில் இருந்தார், பக்தர்கள் குவியும் இடத்தில் இவர்கள் இப்படி பகுத்தறிவு சிந்தனை செய்வார்களா? என அருகிலிருந்த பெரியவரிடம் கேட்டேன்

அவர் சொன்னார், “தெய்வத்தின் பெயரால் மக்கள் கூடும் இடமெல்லாம் அவர்களும் இருப்பார்கள், அங்கு எப்படி சம்பாதிக்க முடியுமோ அப்படி சம்பாதிப்பார்கள்,

இப்பொழுது இந்த விடுதி சம்பாதிக்க கட்டபட்டிருக்கின்றது, கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு மட்டும் அனுமதி என்றா அறிவிப்பு செய்திருக்கின்றார்கள்?, கொள்கைபடி அப்படித்தானே செய்யவேண்டும்? செய்ய மாட்டார்கள்..”

அவர்கள் அப்படித்தான் , ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள், கவனமாக சம்பாதிப்பார்கள், அதில் ஏமாந்தவர்கள் கூட்டம் சிக்கினால் ஆட்சியும்
கைபற்றுவார்கள்” என்றார்.

அப்படி அந்த சுயநல பகுத்தறிவாளர்கள் கிளப்பிவிட்டதை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கின்றது, அய்யோ பரிதாபம்.

கிளைகளை களைவது வேறு, ஆணிவேரினை அறுப்பது வேறு

ஒரு வாதத்திற்கு அது கற்பனை என்றால் கூட, இப்படி ஒரு கற்பனை கதை எழுதமுடியுமா? அதுவும் அக்காலத்தில் சாத்தியமா?

ஒரு கற்பனை இத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் நிலைத்திருக்கமுடியுமா? இந்தியா முழுக்க ஆலயங்களோடு ஆயிரம் இடர்பாடுகளை தாண்டி நிற்கமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது,

இந்தியர்களின் உணர்வில் கலந்துவிட்டவன் கிருஷ்ணன், அப்படியே இருக்கும் இன்னமும் இருக்கும்.

கண்ணன் இந்திய ஞானத்தின் பெரும் அடையாளம்.

அந்த கண்ணனின் பக்தர்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

இப்படி கண்ணனை சில இடங்களில் லீலைக்காரன் என பழிக்கும், இந்த பெரியார் வழி பகுத்தறிவாளர்கள் என சொல்லிகொள்பவர்களுக்கு மனைவிகள் மட்டும் எத்தனை என சொல்லிதெரியவேண்டியதில்லை 🙂

கவனியுங்கள் மனைவுகள் மட்டும்

அவன் செய்தால் அது ஒழுக்ககேடான லீலை, இவர்கள் செய்தால் பகுத்தறிவு புரட்சி.

கோகுலாஷ்டமி காலையில் காதோரம் கண்ணன்

Image may contain: 1 person

 

இலையில் இருக்கும் வெண் பொங்கல் நானே

கலையாய் அருகிருக்கும் சீன‌பெண்ணின் நளினம் நானே

ஒலிக்கும் விஸ்வநாதனின் இசையும் நானே
களிக்கும் பாலசுபிப்பிரமணியம் குரலும் நானே
எழுதிய கண்ணதாசனின் எழுத்தும் நானே

துலங்கிய காலையின் உணர்வும் நானே
பொங்கிய நுரையில் காபியும் நானே

ஸ்டான்லி.. நாடுகளில் நான் மலேசியா
மக்களில் நான் மகிழ்வான மலேசிய மக்கள்

கோகுலாஷ்டமி காலையில் காதோரம் கண்ணன்