ஸ்ரீ கிருஷ்ணன் தமிழனா?

“மால் என்றால் கருப்பு, திரு என்றால் பெரிய என பொருள் எனவே விஷ்ணு பெரியகருப்பன். விஷ்ணு, பெரிய கருப்பன், கருப்பசாமி, மாலன்,மாயன் , மாயாண்டி என எல்லோரும் ஒரே கடவுள், தமிழ் கடவுள்..”

இப்படி ஒரு பேட்டி அளித்து தன் மூதாதை மாயோன் எனும் கொடிக்கு விளக்கம் அளித்திருக்கின்றார் அங்கிள் சைமன்.

மால் என்றால் கருப்பு என இவர் எங்கு படித்தார் என தெரியவில்லை, மா என்றால் பெரிய என பொருள், தமிழ் இலக்கண‌ சில விதிகள்படி மால் என்றானது, திரு+மால் என்றால் பெரிய‌ கடவுள் என பொருள்வரும்படி அமைந்தது அது என்பது ஒரு வாதம்.

மால் முருகன் என முருகப்பெருமானை அழைப்பதும் அப்படியே,

மால் என்றால் மீன் என்றும் பொருள், அதாவது விஷ்ணு எடுத்த அவதாரத்தில் மச்சாவதாரம் முதன்மையானது., அதனால் அவரை திருமால் என்றும் அழைப்பார்கள் என்பது இன்னொரு வாதம்.

ஆக அங்கிள் சைமன் சொல்லவருவது, திருமாலின் அவதாரமான கிருஷ்ணன் தமிழன் என்பதா? அல்லது திருமாலே தமிழன் என்பதா என்பது அவர் ஈழ பயணம் போலவே மர்மமானது குழப்பமானது.

பொதுவாக தமிழில் பெருமாள் என விஷ்ணுவினை அழைப்பார்கள், அப்படியே விஷ்ணுதான் நரகாசுரனை அழித்தார் என்பது தீபாவளி. ஆனால் அன்னார் நரகாசுரனுக்கும் அஞ்சலி செலுத்தினார் என்பது கடந்த ஆண்டு பார்த்தது.

விஷ்ணுவின் இன்னொரு அவதாரம் ராமர், ஆனால் அன்னார் ராவணன் இலங்கை தமிழ்மன்னன் என அவருக்கும் வீரவணக்கம் செலுத்தியதும் நடந்தது.

கிருஷ்ணன் தமிழனா, அல்லது விஷ்ணு தமிழனா என அன்னார் என்ன சொல்கிறார் என தெரியவில்லை, ஆனால் திருமாலை பெரிய கருப்பன் என மொழிபெயர்த்துவிட்டார்.

இனி பெருமாள் கோயில் எல்லாம் பெரிய கருப்பன் கோயிலாகும். கருப்பசாமி, கருப்பண்ண சாமி பூசாரி எல்லாம் தங்களை பெருமாள் கோயில் பூசாரி என்பார்கள் என்பது அங்கிளின் சமதர்ம கனவு.

இதோடு விட்டாரா என்றால், அதன் பின்புதான் அதிர்ச்சிகொடுக்கின்றார், இனி இந்திரவிழா, பாலை நிலத்து துர்க்கா விழாவினை கொண்டாட போகின்றாராம்.

நாளைக்கு ஒரு விழா ஒரு கொடி பிடிக்கும் தீர்மானத்திற்கு அவர் வந்தபின் தினமும் ஒன்றை கொண்டாடுவார் ஆனால் இந்திரவிழா கொஞ்சம் வித்தியாசமானது, கொற்றவை விழா இன்னும் கூடுதல்

எங்குதான் இருக்கிறது சிக்கல்???

அதவாது இந்திரவிழாவும், துர்க்கை விழாவும் மிக சரியாக இந்தியா முழுக்க கொண்டாடபடும் விஜயத்சமி காலத்தில் வரும், மைசூரிலும், தமிழகத்து குலசேகரபட்டிணத்திலும் அது விமரிசையாக கொண்டடபடும்.

தெலுங்கு பேசும் மக்களுக்கு அது மிகபெரும் விழா, அவர்கள் கொண்டாடும் அளவு நாம் நெருங்கமுடியாது.

அன்னாரின் ராஜதந்திரம் இங்குதான் தொடங்கும், வரலாற்றினையும் திருவிழாக்களையும் கண்டமேனிக்கு திரிக்கும் அங்கிளுக்கு அந்த விழாக்களையும் திரிக்க வெகுநேரம் ஆகாது

அன்னார் அங்குதான், அவர்கள் கொண்டாடிகொண்டிருக்கும் போதுதான் “ஹிஹிஹி நானும் உங்களோடு சேர்ந்து கொண்டாட வாரேன், மனசுல ஒன்னும் வச்சிக்காதீங்க, நாயக்கர்கள்னா முக்கியம்மனவங்கன்னு அர்த்தம்

தசரனா என்ன? தசம்னா 10, 10 இனம் சேர்ந்துகொண்டாடுறதுதான் தசரா, தமிழன், தெலுங்கன், மலையாளி, ஒரியன் அப்படி 10 பேர் சேரணும், நான் சேர்ந்துட்டேன், மறக்காம வோட்டு போட்ருங்க ஹ்ஹிஹிஹி”

என கூசாமல் தலை சொறிந்து நிற்பார், அவர் அறிவிப்பின் அர்த்தம் இதுதான், அவர்கள் அந்த சொறிந்த தலையில் என்ன செய்யவேண்டுமோ அதனை அவர்கள் செய்வார்கள்

சொல்லமுடியாது குலசேகர பட்டின தசரா பக்தர் போல வேஷமிட்டு அன்னார் மாறுவேடத்தில் அங்கு சென்று இப்படி பகீர் கிளப்பலாம், வாய்ப்பு இருக்கின்றது

நேரம் ஒரு வேஷம் போடுபவருக்கு அந்த வேஷம் போடுவதா சிரமம்? போடு பரமசிவன் வேடத்தை, கிளம்பு தசராவிற்கு வசூலும் பார்த்துவிடலாம் அவ்வளவுதான்

ஆனாலும் பெருமாளை பெரிய கருப்பனாக்கிய கயவாளித்தனம் அங்கிளை தவிர யாருக்கு சாத்தியம்

மால் என்ற வார்த்தையினை கொண்டு அங்கிளின் “கோல் மால்” மகா பிரமாதம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s