எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு

நெல்லைமாவட்டம் கள்ளிகுளத்து ஆட்கள் யாராவது இருக்கின்றீர்களா?

அல்லது தெட்சன மாற நாடார் சங்கத்து பிரமுகர்களாவது ஆங்காங்கு முகநூலில் அலைகின்றீர்களா?

கள்ளிகுளம் நாடார்சங்க கல்லூரி கொண்டுவந்தது சாதித்தது ஒரு பஞ்சாயத்து தலைவர் என ஒருவன் சவுண்ட் மைக்கில் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றானாம்

அது கவுசானல் எனும் ஒரு பாதிரியால் தொடங்கபட்ட அந்த முயற்சி பின்னாளில் சங்கத்தால் நனவானது என்பதுதான் இதுவரை அறியபட்டது

இப்பொழுது இவன் ஏதேதோ சொல்ல ஆரம்பித்துவிட்டான்

சங்கத்து பிரமுகர்களே, உங்கள் கல்லூரி பற்றி கொஞ்சமாவது சமூகத்திற்கு சொல்லிவைத்துவிடுங்கள்

இல்லை என்றால் அன்றைய தாளாளர் சிவந்தி ஆதித்தன் முதல் இன்றைய வைகுண்டராஜன் வரை எல்லோரும் அந்த பஞ்சாயத்து தலைவரால் உருவாக்கபட்டவர் என கிளம்பிவிடுவான்.

சங்கத்தின் வரலாற்றையே மாற்றிவிடுவான்

கொஞ்சம் அவனிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்

இப்பொழுது அவன் 50 ஆண்டுகள் கடந்து நிற்கும் அந்த கள்ளிகுளம் பள்ளியினை, 150 ஆண்டுகள் கடந்து நிற்கும் கள்ளிகுளம் ஆலயத்தை அந்த பஞ்சாயத்து தலைவர்தான் கொண்டுவந்தார் என அடுத்த பதிவு போட்டுகொண்டிருப்பான்

அதனை அம்மக்கள் பார்த்துகொள்ளட்டும்,

சங்கத்தை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள்

ஜால்ரா கேள்விபட்டிருக்கின்றேன், மூடஜால்ரா இப்பொழுதுதான் பார்க்கின்றேன்,

நான் இந்த சாதி என ஒருநடிகரின் சாதியினையே பேனர் வைத்து பெருமை பாராட்டியவன், இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் அவர் தமிழர், நாங்கள் தமிழர்கள் என தொடங்கிவிட்டான்.

எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு.

இன்னும் என்னென்ன பேசுவானோ தெரியவில்லை,

ஆனால் எல்லாம் இன்னும் 7 மணி நேரத்த்தில் பல்டி அடிப்பான்.

எனினும் சங்கத்து ஆட்களே இவனிடம் கவனமாக இருங்கள்.

ராசா, கள்ளிகுளத்தில் அந்த மாதா பக்கத்தில் இருப்பதும் அவர் சிலைதானே?, நன்றாக பார்த்து சொல்லமுடியுமா?

வெள்ளிகிழமை ஆனால் இவன் தொல்லை தாங்க முடியவில்லை,

திருந்தவே மாட்டீங்களா???

Image may contain: one or more people

திருந்தமாட்டீர்களா…

மந்திரவாதி சர்வசக்தி பெற்றவன் என்றால் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆக முடியும். டிரம்ப் என்ன அந்த மந்திரவாதியே அதிபர் ஆகலாம்

இவைகள் எல்லாம் உண்மை என்றால் புடீனை என்றோ சாய்த்திருக்கமாட்டார்களா?, ஹிட்லருக்கு வைத்திருக்க முடியாதா? அவளவு ஏன் ஜப்பானும், தென்கொரியாவும் வடகொரிய தலைவனுக்கு சூனியம் வைக்கமுடியாதா?

அவ்வளவு ஏன்? ராஜபக்சேக்கு சூனியம் வைத்து கொன்றிருகமாட்டார்களா?

இந்த சிகிச்சை எல்லாம் பலனழிக்கும் என்றால் அப்பல்லோ எதற்கு? அமெரிக்கா எதற்கு?

சரி அப்படி சூனியம்,செய்வினை இம்சை எல்லாம் தமிழகத்தில் இருப்பதாக கருதினால் ஒரே ஒரு சூனியம்தான் இருக்கமுடியும்..

அது இருவர் படத்தில் மணிரத்னம் சொன்ன வரிகள்

“ஒரு மொழியால மக்களை மயக்கி கட்டிபோடும் சக்தி உங்கட்ட இருக்கு, என் வாள்வீச்சும் உங்க தமிழும் கலந்தா ஜனங்க ஈசியா ஏமாந்திருவாங்க‌

என்னையும் ஒரு கதாநாயகனாக ஏற்றுகொள்வாங்க..”

இந்த சூனியம்தான் விவகாரமாகி அம்மாதிரி கதாநாயகன் பட்டத்திற்கு ஏங்கியவன் முதல்வராகி, வசனம் எழுதியவர் எதிர்க்டசியாகி, கதாநாயகி முதல்வராகி என ஏக
கொடுமைகள்

ஆக இந்த சூனியத்தை போக்க முதல் சிகிச்சை சொந்தமாக சிந்திப்பது, இந்த கண்கட்டினை நீக்குவது.

அது ஒன்றே தான் பலனழிக்கும்

இந்த கேரள நம்பூதிரிகள் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள், அவர்கள் மாந்ரீகம் பெரியது என நினைப்பவர்கள் ஒன்றை நினைக்கலாம்

அந்த‌ கேரளமே வெள்ளையனிடம் அடிமையாகவில்லையா? கொஞ்சமாவது அவன் அஞ்சினானா? அந்த சக்திகள் அவனை என்ன செய்தன?

வாஸ்கோடமாகா வந்தபொழுதே அவை விரட்டியதா?

அல்லது கிளைவ் கைபற்றும்போதுதான் அவனை விரட்டியதா?

ஒன்றுமில்லை, 300 ஆண்டுகாலம் அவர்கள் ஆள அது அனுமதித்தகொண்டேதான் இருந்தது.

எந்த மலையாள மந்திரவாதியாவது வெள்ளை அதிகாரிகளை மிரட்டி கப்பம் வாங்கிய கதை உண்டா? அல்லது இந்த மந்திரத்தால் வெள்ளையன் கால் கை வீங்கி செத்தானா?

ஆக கடவுள் நினைத்தபடியே இயங்கும் உலகிது, அவ்வளவே

மற்றபடி இவைகள்தான் சக்திமிக்கவை என்றால், உலக அதிபர்கள் எல்லாம் மந்திரவாதிகளாகவே இருப்பார்கள்.

ஆப்ரிக்க மந்திரவாதிகள் இவர்களை விட சக்திமிக்கவர்கள் என்பார்கள், ஆனால் அந்நாடுகள் எப்படி இருக்கின்றன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

அங்கிள் சைமன் தமிழர் வழியில்தான் வாழ்வாராம்

Image may contain: 2 people

அங்கிள் சைமன் தமிழர் வழியில்தான் வாழ்வாராம், உணவு கூட தமிழர் மாதிரிதான் உண்பாராம்

அதாவது மண்பானை சமையலாம், வாழை இலையில்தான் சாப்பிடுவாராம்

படத்தினை கவனியுங்கள், இலையில் இருப்பது கர்நாடக பொன்னி அரிசி, மண்பானையில் இருப்பது சில்வர் கரண்டிகள். உணவுபாத்திரம் இருப்பது இறக்குமதி செய்யபட்ட வெளிநாட்டு கண்ணாடி மேஜை .

கையில் வாட்ச் ஏன்? உச்சி சூரியனை பார்த்து மணி சொல்லமுடியாவிட்டால் என்ன தமிழர் இவர்? இன்னும் மணியா? நாழிகை இல்லையா?

ஓலை குடிசையில், சாணிமொழுகிய தரையில், ஓலைபாயில் அமர்ந்து, விறகடுப்பில் சமைத்த பொருளை அன்னாருக்கு படைத்து கொட்டாங்குச்சியில் நீர் ஊற்றி கொடுத்து

அந்த அம்மையார் முதல்மரியாதை ராதா போல உடை உடுத்தி “நல்லா சாப்டுய்யா…” என சொல்லிகொண்டே மயில் இறகிலோ அல்லது ஓலை விசிரியாலோ வீச, இவர் உண்டால் அது தமிழர் பணபாடு, ஒரு அர்த்தம் இருக்கலாம்

வெளிச்சத்திற்கு மின் விளக்கிற்கு பதிலாக தீவெட்டி ஒன்று வைத்திருந்தால் இன்னும் அழுத்தமான தமிழர் பண்பாடாக இருந்திருக்கும்.

ஆக ஒரு மண்சட்டியிலும், வாழை இலையிலும் தமிழர் பண்பாட்டினை மீட்டுவிட்டாராம் இவர்,

இதனை செய்தி என வெளியிட சில ஊடகங்கள்

சீமான் மண்பானை சோறா இப்பொழுது முக்கியம்? அவ்வளவு நல்ல பத்திரிகையாளர்கள் என்றால் அப்பல்லோவில் அந்த வார்டில் என்ன உணவு கொடுக்கின்றார்கள் என பார்த்து எழுதலாம் அல்லவா?

இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது


கொசுறு செய்திகள்

தமிழ்நாட்டு ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்?

இப்போது தமிழக ஆட்சிபற்றி அவரது கருத்து அல்லது நிலைப்பாடு என்ன?


இன்று வெள்ளிகிழமை

முன்பெல்லாம் வெள்ளி என்றாலே அடுத்த விடுமுறைகளை எண்ணி சந்தோஷமாக இருக்கும், ஆனால் சமீபகாலமாக வெள்ளி என்றாலே காலையிலே அந்த இம்சை நினைவுக்கு வருகின்றது

துபாய் லாலா இன்று என்ன செய்யபோகிறானோ? எவனை ஏவிவிட்டு என்ன பேசபோகின்றானோ

பார்க்கலாம் ஆனால் லாலா சாமி மாலை 3 மணிவாக்கில்தான் மலையேறுவார், என்ன “அருள் வாக்கு” அருள்கிறார் என அப்பொழுது தெரியும்

என்ன துபாய் கார்ப்பரேஷனோ, .. பிடிக்கும் வண்டிகூடவா இல்லாமல் கஷ்படுகின்றது?


பாரத தேசமென்று பெயர் சொல்லுவர், மிடிப் பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்…

Image may contain: 1 person , beard, hat and close-up

ஒருவழியாக பாகிஸ்தான் தூக்கத்தை கெடுத்தேவிட்டது இந்தியா, தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள், இந்திரா காலத்திலே வராத இந்தியா இனி நம்மிடம் அணுகுண்டு இருக்கும்போது வராது என நம்பிகொண்டிருந்த பாகிஸ்தான் கனவில் மண் அள்ளிபோட்டுவிட்டது பாரதம்.

மிக கச்சிததமாக குறி வைத்து அடித்திருக்கின்றார்கள், சொல்லபோனால் தீவிரவாதிகளை ஒழிக்கும் மிகசிறந்த பிரிவு உருவாக்கபட்டிருக்கின்றது.

முன்பு பஞ்சாப் பொற்கோயில், ராஜிவ் கொலையாளி சிவராசன் முற்றுகை, மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் என பல இடங்களில் இந்த கமாண்டோ படை தேவை பட்டவர்த்தனமாக தெரிந்தது, அந்த பாடங்களில் இருந்து கற்று இன்று உருவாக்கிவிட்டோம்.

முன்பே இப்படி ஒரு பிரிவு இருந்திருந்தது என்றால், ஈழத்து பிரபாகரன், சிவராசன், மும்பையினை தாக்கியவர்களை ஓசைபடாமல் தூக்கி இருக்கலாம்.

யாழ்பாணத்தில் பிரபாகரனை அன்றே தூக்கி இருக்கலாம், இப்படி சரியாக திட்டமிடாமல், அதே நேரம் புலிகளுக்கு வல்லரசுகள் கொடுத்த பெரும் வலையில் சிக்கி எமது ராணுவம் அன்று கண்ட அவமானம் பெரிது, இன்று எமது ராணுவமும் தன்னை மாற்றிகொண்டது, வாழ்த்துக்கள்

மிகசிறந்த குழுவினை உருவாக்கி இருக்கின்றார்கள்.

கிட்டதட்ட அமெரிக்க சீல் படையினை, இஸ்ரேலிய ஸ்பெஷல் படையினை போன்ற குழு இது. இப்பொழுதெல்லாம் யுத்த தந்திரம் மாறிவிட்ட காலம், எதற்காக முழுபடையெடுத்து எல்லாவற்றையும் அழித்து, அதன் பின் குறிவைத்தவனை கொல்லவேண்டு?

இலக்கினை அதுபோக்கில் விடு, அவன் சுதந்திரமாக சுற்றட்டும். அவனாகவே அவன் பாதுகாப்பினை அவனே தளர்த்துவான். அசந்த நேரம் கழுகுவேகத்தில் தூக்கு, அது போதும்.

முதன் முதலில் இதனை செய்துகாட்டியது இஸ்ரேல், அதன் பின் அமெரிக்கா, உச்சகட்டமாக பாகிஸ்தானில் பின்லேடனை அப்படித்தான் தூக்கியது. இன்று தென்கொரியா வடகொரிய அதிபரை அப்படி தூக்கபோவதாக பகிரங்கமாகவே மிரட்டுகின்றது.

இந்த முண்ணணிநாடுகளை போலவே பாரதமும் சொல்லாமல் அசத்தி இருக்கின்றது, உண்மையில் அசாத்தியமான திட்டம் இது

army

யூரி சம்பவத்திற்கு முன்பாகவே இலக்குகளை மிக துல்லியமாக கணித்த்திருக்கின்றார்கள், நாள் மட்டும் குறிக்கவில்லை. யூரி சம்பவம் நடந்தபின்னும், பெரும் ராணுவநடவடிக்கை போல தயார் செய்தார்கள், பாகிஸ்தானும் யுத்தம் எதிர்கொள்ளதயார் என கிளம்பிற்று, அவர்கள் போர் ஒத்திகையில் சில சீன விமானம் டமால் என விழுந்த அவமானங்களும் நடந்தன.

இந்தியாவோ முழு யுத்தம் என போக்கு காட்டிவிட்டு, கடந்த புதன் நள்ரவில் புகுந்து தீவிரவாத முகாம்களையும், அவர்களுக்கு பாதுகாகலாய் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் போட்டு தாக்கிவிட்டது, பலிகணக்கு நூறினை தாண்டும் என்கின்றார்கள். பாகிஸ்தான் எம்ஜிஆர் போல இரண்டு என விரல்காட்டி கொண்டிருக்கின்றது

இது சிக்கல் நிறைந்த தாக்குதல், கண்காணிக்கும் பாகிஸ்தான் ராணுவம், அதனை மீறி வானில் சுற்றும் அமெரிக்க செயற்கைகோள்கள் என எல்லாவற்றையும் ஏமாற்றி புகுவது என்பது பெரும் சாகசம், போர் என்றால் புகுந்துவிடலாம். தந்திரமான ஆட்டம் என்றால் ஏமாற்றத்தான் வேண்டும்.

இந்திய உளவுஅமைப்பும், இந்திய செயற்கைகோள்களும் சாதித்திருக்கின்றன, உளவு அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள், பாகிஸ்தானில் உயிரிழந்த உளவாளிகளுக்கு வீரவணக்கம்.

எவனாவது கக்கூஸ் இல்லாத நாட்டிற்கு செயற்கைகோள் எதற்கு? ராக்கெட் எதற்கு என கேள்வி கேட்டால், அவனை இந்த வெற்றி செய்திகளால் அடிக்கவேண்டும். பார் மடையனே..விண்வெளி பலம் இன்றி இனி யுத்தவெற்றிகள் சாத்தியமே இல்லை, அதனைத்தான் நாங்கள் செய்கிறோம்,

ஒரு கக்கூஸ் கட்ட சொந்தமாக சம்பாதிக்க தெரியாத நீ நாட்டின் சுமை, உன்னை எல்லாம் ராக்கெட்டிலே வைத்து அனுப்பவேண்டும்

இவர்கள் அப்படித்தான், உணவிற்காவது சம்பாதிப்பார்களா? அல்லது அதனையும் அரசு ஊட்டவேண்டும் என்பார்களா என தெரியவில்லை, எல்லாம் அரசு என்றால் இவர்கள் நாட்டிற்கு எதற்கு?

பாகிஸ்தான் அலறி கிடக்கின்றது, ஊரெல்லாம் ஒப்பாரி வைத்து பார்க்கின்றது, எங்கள் இறையாண்மை(!)யில் இந்தியா கைவைத்ததாக கதறுகின்றது, பின்லேடன் கொல்லபட்டபோது அவர்கள் இறையாண்மைக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்தது குறிப்பிடதக்கது.

ஆனால் உலகநாடுகள் பாகிஸ்தானை “உன்னை பற்றி தெரியாதா?” எனும் நோக்கில் பார்க்கின்றன, இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சீனா நாங்கள் சமரசம் பேசுகின்றோம் என கிளம்புகின்றது. பாகிஸ்தான் குப்புறபடுத்து அழுதுகொண்டிருக்கின்றது, அணுகுண்டு வீசுவோம் சத்தமெல்லாம் இல்லை.

இந்தியா சாமார்த்தியமாக சொல்கிறது, அவர்கள் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து (வார்த்தைகள் மகா முக்கியம், முன்பு ஜே மைனாரிட்டி திமுக அரசு என்பார் அல்லவா) வரும் தீவிரவாதிகளை அவர்கள் அடக்கவில்லை, சோ நாங்கள் அவர்களை மட்டும் அழித்தோம், யுத்தம் எல்லாம் செய்யும் எண்ணமில்லை.

பாகிஸ்தான் பதறிகிடக்க, இந்த தேசம் மோடிக்கு ஆதரவினை வழங்கிகொண்டிருக்கின்றது, சோனியா முதல் எல்லோரும் ஆதரவினை கொடுக்கின்றார்கள், வாழ்த்துக்கள் என் தேசமே

இங்கே சிலர் கிளம்பி இருக்கின்றனர், சிங்களன் தமிழரை சுடாதபொழுது கிளம்பாத ராணுவம் பாகிஸ்தானில் புகுந்ததென்ன? ஏய்ய் ஹிந்தியமே என ஒரே அழிச்சாட்டியம்

உண்மையில் வங்கடலில் நடந்ததென்ன?

1970 வரை ஒரு சிக்கலுமில்லை, ஆனால் கடத்தல்கள் பெருக பெருக சிக்கல்கள் பெருகின, அக்கடற்பகுதி அப்படியானது. ஏதும் தொட்டால் தமிழனை கொல்கிறார்கள் என கிளம்புவார்கள், திராவிட அழிச்சாட்டிய ஆட்சிவேறு, அவர்களும் அடக்கியதாக தெரியவில்லை

இந்திரா தந்திரமாக கச்சதீவினை இலங்கை பக்கம் தள்ளி ஆட்டத்தை நீ ஆடு என சொல்லிவிட்டார், ஒரே கல்லில் பல மாங்காய்.

அதன்பின்னும் கடத்தல் ஓஹோ என நடந்தது, உச்சமாக கடத்தல்காரர்கள் தமிழ் போராளிகள் என வேடம் தரித்தபின் அது தீவிரமாயிற்று.

ஆயுதபோராட்ட தொடக்கவாதிகளான தங்கதுரை, குட்டிமணி எல்லாம் அவ்வகையறா, அவர்களிடம் எடுபிடிகளாக இருந்து பின்னாளில் பெரும் ரவுடிகளான சபா ரத்னம், பிரபாகரன் எல்லாம் அந்த கும்பலே.

இப்படியாக அந்த ஈழபோராட்டம் கடத்தல்காரர்களாலேயே தொடங்கபட்டு பின்னாளில் இலங்கை ராணுவத்துடனான கோஷ்டி மோதலாகவே முடிந்தும் விட்டது.

நாம் சொல்லவில்லை கோர்ட்டில் தங்க துரையே எம் தொழில் கடத்தல் என சொன்னது.

இப்படி கடத்தல்காரர்கள் போராளிகளான பின் தமிழகத்திலிருந்து நிறைய கடத்தபட்டன, அவற்றினை தடுக்கும்பொருட்டு சிங்கள கடற்படை ஆரம்பித்ததுதான் துப்பாக்கி சூடு.

இதனை எல்லாம் தடுக்கும்பொருட்டுதான் எமது ராணுவம் அமைதிபடை எனும் பெயரில் சிங்களத்தில் கால்பதித்தது

இன்று சிங்களன் துப்பாக்கி சூட்டை இந்தியா தடுக்காதது ஏன்?,, என முழ்டி தூக்கும் கூமுட்டைகளே, கவனியுங்கள். அன்று இதற்காகத்தான் இந்திய படையே இலங்கையில் குவிந்தது புரிகின்றதா….

அதன்பின் புலிகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, எம் ராணுவம் 1500 பேரினையும் ஒரு தலைவனையும் கொன்றபின் இந்தியா ஒதுங்கிற்று

புலிகள் எல்லாவித கடத்தலிலும் ஈடுபட்டது உண்மை, ராஜிவ் கொலைவழக்கில் புலிகளின் கடத்தல்தங்கம் எப்படி விளையாடியது என்பது விளக்கபட்டுள்ளது, ஈழத்தில் தங்க சுரங்கம் இருப்பதாக தகவல் இல்லை, பின் எப்படி?

இறந்த கோடியக்கரை மிராசுதர் சன்முகம் புலிகளுக்காக கடத்த பதுக்கி இருந்த பொருட்களே சாட்சி.

இந்தியா ஈழபிரச்சினையில் இருந்து ஒதுங்கினாலும் புலிகளின் கடத்தல் தொடர்ந்தது, இலங்கை ராணுவம் சுட்டது

கவனியுங்கள், புலிகள் அழிந்தபின் அவை எல்லாம் குறைந்தன, இப்பொழுதெல்லாம் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை.

அதன் பின் நடப்பது மீணவர் பிரச்சினை. நமது மீணவர்களின் பெரும் பலம் முன் ஈழமீணவன் பாதிக்கபட்டதால் வந்த சிக்கல், கைதுகள் என சர்ச்சைகள். சில இடங்களில் எல்லை தாண்டினோம் என நமது மீணவர்களே பகிரங்கமாக சொல்கின்றனர், அப்பொழுதுதான் மீன் கிடைக்குமாம்

அதற்கும் தீர்வுகள் எட்டபட்டுகொண்டே இருக்கின்றன,

ஆக சிங்கள கடற்படை அத்துமீறி வந்தால் எப்பொழுதோ நம் கடற்படை மண்டையினை பிளந்திருக்கும், இது வேறுமாதிரியான சிக்கல்,

ஆனால் முன்பு இந்தியா தன் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அவர்களை மிரட்டத்தான் செய்தது

ஆனால் புலிகளோடு அவர்கள் மோதும்பொழுது ஏய் அட்டூழிய படையே திரும்பவா என சத்தமிட்டது தமிழர்களாகிய நாமே தான். நாம் தான் கத்தினோம்.

அன்று எவனுக்காவது ராமேஸ்வர மீணவன்,கடத்தல் இன்னபிற இம்சைகள் நினைவுக்கு வந்ததா? வராது, அது எப்படி வரும்?

போராட்டத்தில் இலங்கையில் சிலபேர் செத்தால், தமிழகத்தில் 4 பேர் செத்தால் என்ன? என்றளவுக்கு இருந்தது இவர்கள் மனநிலை

எல்லாம் முடிந்து 2009ல் இந்தியா தலையிடவேண்டும் என்று கத்தினால் எப்படி எமது ராணுவம் வரும்?

நீங்கள் நினைத்தால் அழைக்கவும், நீங்கள் நினைத்தால் விரட்டவும் அது உங்கள் மீசை மயிறா அல்லது பெருமை மிகு ராணுவமா?

அதன் பின் 2009ல் புலிகளின் சொட்டை முறிக்கபடும்பொழுது எமது ராணுவம் என்ன செய்யும்? இறந்த 1500 இந்திய வீரர்களுக்கு என்ன சொல்லும்? அவர்கள் தியாகம் என்ன வீணா? அதனால் இந்தியா அமைதி காத்தது, அட்டூழிய புலிகள் அழிந்தும் போயினர்

இன்று அதே போல 17 வீரர்களை இழந்ததும் எல்லை தாண்டி சாத்தியிருக்கின்றது.

எவனாவது இங்கே இந்தியகாஷ்மீரை தாண்டி பாகிஸ்தான் காஷ்மீரிலும் இந்தியா அட்டகாசம் செய்கிறது, ராணுவத்தை அனுப்பி மனித உரிமையினை நசுக்குகின்றது என சொல்வானானால்

நிச்சயமாக அவர்கள் மீது தேசதுரோக குற்றசாட்டை சுமத்தியே தீரவேண்டும்.

முன்பு எமது ராணுவம் இலங்கையில் நிலைபெற்றபொழுதே அப்படி கூக்குரலிட்ட இந்த திராவிட புலி சொறி வைகோ, அமைதிபடை வந்தே தீரவேண்டுமென அரசியல் செய்த கலைஞர், இன்னபிற அழிச்சாட்டிய இம்சைகளை எல்லாம் ராணுவத்தின் கட்டுபாட்டில் இந்நாடு விட்டிருந்தால் இந்த சில கூமுட்டைகளின் சத்தம் இன்று கேட்டிருக்காது

அன்று இவர்களை எல்லாம் விட்டு வைத்தது பெரும் தவறு, பின்னைய குழப்பங்களுக்கு எல்லாம் அதுதான் முதல்படி

இனியவாது இந்திய அரசு விழித்துகொள்ளவேண்டும்

ஒரு சில தமிழக‌ அல்லக்கைகளை, பைத்தியங்களை, மூளை இல்லா முண்டங்களை எண்ணி இந்திய அரசு யோசிக்கவேண்டாம்

பெரும்பான்மையான தமிழர்கள் இந்தியாவினையே நேசிக்கின்றனர், வோட்டு , அரசியல் வேறு நாட்டுபற்று வேறு.

எமக்கு பிந்ரன்வாலே, புர்கான், ஹபீப் சயித், மசூத், பிரபாகரன் என எல்லோரும் ஒரே வரிசையே

இதோ எல்லையில் நடந்த தாக்குதலை மொத்த தமிழகமும் வரவேற்கின்றது, எமது மாநில மக்கள் அந்த பெருமை மிகு ராணுவத்திற்கே பக்கபலமாய் இருக்கின்றனர்,எக்காலமும் இருப்பார்கள்.

ஈழபிரச்சினையில் மட்டும் போலி அரசியல்வாதிகளால் அவர்கள் குழப்பட்டனர், பின் உண்மை உணர்ந்து புலிகளை விரட்டியும் விட்டனர், ராஜிவ் கொலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க எம்மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு பின்னாளில் பிரபாகரன் கொல்லபடும் வரை தொடர்ந்தது உண்மை.

இந்த தேசம் யுத்த தந்திரங்களில் புதிய பரிணாமத்தை எட்டியாயிற்று, இனி இந்திய அருகாமையில் இருந்து இந்தியாவினை எதிர்க்கமுடியாது என எதிரிகள் புரிந்தே கொண்டனர், தாவூத் இப்ராஹிம் இம்மாதிரி முறையில் கொல்லபட அதிக நேரம் ஆகாது.

ராணுவ உலகம் ஒருவித அச்சத்துடனே இந்தியாவினை நோக்க ஆரம்பித்திருக்கின்றது, வாழ்த்துகள் ராணுவமே

”பாரத தேசமென்று பெயர் சொல்லுவர் – மிடிப்
பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்”

என்ற எங்கள் தேசகவிஞனின் வாக்கு மெய்யாகிவிட்ட காலம், அவன் வழியிலே நாங்களும் சொல்வோம்

“பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டு வோம்.

வந்தேமாதரம்!! ஜெய்ஹிந்த்!!!

செய்திச் சிதறல்

ஒருநாள் மவுனவிரதம் ராமதாஸ் அறிவிப்பு

ஆயுளுக்கும் மவுனவிரதம் என அறிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் 🙂


இதோ மீடியக்களுக்கு மயிலாப்பூர் சாமுவேல் என ஒருவன் கிடைத்துவிட்டான், இனி திரில்லர் சினிமா ரேஞ்சிக்கு அவனை சித்தரிப்பார்கள் பாருங்கள்

ஒரு பொறுக்கி சிக்கி இருக்கின்றான், சம்பந்தபட்ட பெண்கள் அஞ்சி காவல்துறையினரிடம் கெஞ்சியிருக்கின்றனர், இனி இவனை பிடித்து ராம்குமார் இருந்த சிறையில் அடைக்கலாமா? என யோசிக்கவேண்டியது போலிசார் வேலை.

அதற்குள் இவர்கள் துப்பறிந்து எழுதுகின்றார்கள் பார்த்தீர்களா? இவர்கள் தொழில் அப்படி.

எப்படியோ முதல்வர் உடல்நிலை பற்றி எழுதினால் பெண்டு கழன்றுவிடும் என்று அஞ்சி, மயிலாப்பூர் சாமுவேல் எனும் ஜெகஜால கில்லாடியின் தொடரினை ஆரம்பித்துவிட்டன பத்திரிகைகள்

இனி முதல்வர் கொடநாடு செல்லும் வரை மயிலாப்பூர் சாமுலேல் சாகசம்தான்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி : கடும் பதட்டத்தில் எல்லைபகுதி

இந்தியா தனது தாக்குதலை தொடங்கிவிட்டது என ராணுவ தளபதி அறிவித்திருக்கின்றார், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ சீருடையிலும், இந்திய காஷ்மீரில் தீவிரவாதிகளாகவும் அலையும் ஏராளமான பாகிஸ்தானியர் கொல்லபட்டிருக்கின்றனர்

அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் 2 வீரர்கள் செத்ததாக ஒப்புகொண்டிருக்கின்றது. அதற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை

ஒரு பலசாலி தன்னால் முடிந்தமட்டும் பார்த்துவிட்டே தன் பலமிக்க ஆயுதத்தை இறுதியாக எடுப்பான், இந்தியா அப்படித்தான் மோதுகின்றது

பலவீனமானவனோ எடுத்த எடுப்பிலே தன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பின்னால் ஒழிந்துகொள்வான், அப்படித்தான் பாகிஸ்தான் அணுகுண்டினை வீசுவோம் என ஒப்பாரி வைக்கின்றது

வீச வேண்டும் என அது தயார்படுத்தினாலே, அடுத்த கணம் பாகிஸ்தானே இருக்காது.

எந்நேரமும் முழு யுத்தம் எல்லையில் வெடிக்கலாம், பார்க்கலாம்

நாமாக அவர்களை சீண்டவில்லை, அவர்கள் சீண்டியபின் விடுவதாகவும் இல்லை.

இன்றுமாலை நடக்கும் அனைத்துகட்சி கூட்டத்திற்கு பின் மோடி என்ன தெரிவிப்பார் என பார்ப்போம்.

யுத்தம் என வந்தபின் அனைத்துகட்சி கூட்டம் எல்லாம் எதற்கு?

எதாவது கட்சி யுத்தம் வைத்து அரசியல் செய்தால் அதனை அரசியல களத்திலிருந்து விரட்டி அந்தமானுக்கு அனுப்பினால் முடிந்தது பிரச்சினை.

நீங்கள் கலக்குங்கள் மோடி, பாரதம் உங்கள் பின்னால் இருக்கின்றது

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை நடந்தவரைக்கும் ஒரு அறிக்கையுமில்லை.

Stanley Rajan's photo.

கேட்டால் பதில் இருக்காது, கம்மென்று இருப்பார்கள்.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்றது என சில பொருள்களை பார்த்த நினைவு உண்டு அவ்வளவுதான். சென்னை எழும்பூர் மியூசித்தில் சில பொருட்கள் உண்டு. அவ்வளவுதான் ஆதிச்சநல்லூர் ஆராய்சி.

பொருளாவது மிஞ்சி இருக்கின்றது.

பண்டைய மதுரை பற்றி ஏற்கனவே குறிப்புகள் உண்டு, இப்பொழுது இருப்பது பண்டைய மதுரை அல்ல, அது சற்று தள்ளி வேரொரு இடத்தில் இருந்தது, பின்னாளில் அது அழிந்து அருகில் இப்போது இருக்கும் மதுரை உருவானது என கருத்துக்கள் உண்டு.

அதற்கு வலுசேர்க்கும் வகையில்தான் கீழடியில் ஒரு தென்னந்தோப்பில் கிடைத்த சில அடையாளங்கள், ஒரு பெரும் ஆராய்ச்சிக்கு அடிகோலின, அது தொடர தொடர தமிழர் பழங்கால ஆவல் கொண்டோர் அதிரத்தான் செய்தனர்.

Stanley Rajan's photo.

மதுரை கீழடியில் அவ்வளவு பெரும் நாகரீகம் உறங்கி இருக்கின்றது, நிச்சயம் அது சிலப்பதிகார காலத்தோடு தொடர்புடையதாகவே இருக்கும், அல்லது அதற்கு முந்தைய காலமாகவும் இருக்கலாம்

சரி கிடைத்த பொருளை மதுரையிலே வைக்கவும் ஒரு ஏற்பாடும் செய்யபடவில்லை, எங்கோ கொண்டு செல்லபோகின்றார்களாம்

ராணி மங்கம்மாவின் மாளிகையினை காந்தி மியூசியம் என மாற்றி அழிச்சாட்டியம் செய்தார்கள். அந்த மாளிகை முழுக்க காந்தி பொருளா குவிந்திருக்கின்றது? அதன் ஓரத்தில் வைக்கலாம் அல்லவா?

நாயக்கர் மகாலில் ஒரு ஓரமாக கூட இந்த அருமையான பழம் பொருளை வைக்கலாம், மதுரையில் இடமா இல்லை?

எங்கோ கொண்டு சென்று என்னமோ செய்ய போகின்றார்கள்

தமிழர், தமிழ் என குரல்கொடுத்த திமுகவினை காணவில்லை, சரி அவர்களை அகற்றிவிட்டு தமிழர் ஆட்சி அமைப்போம் எனும் தமிழ் இன உணவாளர்களையும் காணவில்லை

சிங்களம், கன்னடம், ஆந்திரா என்றே அவர்களின் இனமானம் ஓடிகொண்டிருக்கின்றது

விசித்திரமாக இந்த பொருட்கள் எல்லாம் அங்கே கிடைத்தால் தமிழகத்திற்கு கொண்டுவரவேண்டும் என குரல்கொடுப்பார்கள். இங்கே கிடைத்தால் எங்கேயும் கொண்டுபோகட்டும் என அடங்கிவிடுவார்கள்

முதல்வர் மருத்துவமனையில் இருந்தாலும் ஆட்சி அவர் செய்வதாகவே சொல்லபடுகின்றது, என்ன செய்யபோகின்றாரோ தெரியவில்லை

அழிச்சாட்டியக்காரர் என்றாலும் இப்பிரச்சினையில் உருப்படியான கருத்தினை, அதாவது மதுரையிலே இப்பொருட்களை வைக்கவேண்டும் என சொன்னவர் டாக்டர்.ராமதாஸ் மட்டுமே

அவர் வழகமாக காமெடி கருத்துக்களை சொல்வதால், இந்த சீரியசான கருத்தினை யாரும் கண்டுகொள்ளவில்லை, மனிதர் உருப்படியாக பேச தொடங்கி இருக்கின்றார். தேர்தல் இம்சை இவரை மாற்றாமல் இருக்கட்டும்

இதுவும் இந்து கலாச்சாரம் தான், கீழடியில் கிடைக்கபெற்றவை இந்து சமய மக்களின் பொருளாக இருக்கலாம் என பிஜேபி மக்களிடம் சொல்லி, இவைகளை பாதுகாப்போம், ஒருவேளை சிவபெருமான் மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்து திருவிளையாடல் நடத்தியகாலமாக இருக்கலாம், காப்பாற்றுங்கள் என்றாலும் அவர்கள் போராட்டம், அறிக்கை என கடும் பிசி.

கடந்த சிலமாதங்களாகவே உலகமே இதனைபற்றி பேசதொடங்க, தமிழகம் அதே சினிமா, அரசியல், சாதி, சுவாதி, தியாகி ராம்குமார், சமூக சேவகி நடிகை ராதா போன்ற செய்திகளிலே மிக கவனமாக இருந்தது.

பெரும் பாரம்பரிய அடையாளத்தினை மீட்கும் முயற்சி நம் கண்முன்னே சறுக்கி இருக்கின்றது.

தமிழகம் எதனை எல்லாமோ இழந்தது, இதனையும் இழக்க இருக்கின்றது

நமது மனம் துடித்தலும், இது அரசுகள் முடிவெடுக்கவேண்டிய பிரச்சினை, காரணம் இவை தொல்பொருள் துறை கட்டுபாட்டில் வருபவை, தனி நபர்கள் ஒன்றும் செய்ய முடியாது

இல்லாவிட்டால் நாமே ஏதாவது செய்து நல்ல முறையில் பாதுகாக்க இறங்கிவிடலாம்

அதற்கும் சட்டம் வழி விடாது. அதாவது காக்கவும் செய்யாது, காப்பாற்றவும் விடாது.

செய்ய வேண்டிய அரசு தூங்குகின்றது, முதல்வர் இப்போழுது ஓய்வில் இருந்தாலும் அமைச்சர்கள் செய்யலாம் அல்லவா?

அவர்கள் மண்சோறு தின்னுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் , கரகாட்டம் போன்ற விஷயங்களில் பிசி, யாரோ ஒருவர் மாமல்ல புரத்தில் பகீரதன் தவம் செய்யும் சிற்பம் போல அருகே அமர்ந்து அம்மா வந்து அழைத்தால்தான் எழுவேன் சிவனே அன அமர்ந்துவிட்டாராம்.

ஆகா அக்காலத்திலே சட்டை போட்ட சிற்பமா? என இனி வெள்ளைக்காரன் கடத்தாமல் இருந்தால் சரி.

டெல்லியில் குரலெழுப்ப வேண்டிய எம்.பிக்களோ உள்ளாட்சி தேர்தலில் மல்லுகட்டிகொண்டிருக்கின்றனர்

அப்படியே நாம் டெல்லியிடம் கேட்டாலும், வெளிநாட்டிலிருந்து மீட்கபட்ட பழங்கால தமிழக சிலைகள் இங்கு குவிந்திருக்கின்றது, ஆனால் தமிழக அரசுதான் மீட்டு சம்பந்தபட்ட ஆலயத்தில் மறுபடி நிறுவவில்லை தெரியுமா? இந்த லட்சணத்தில் அப்பொருளை அங்கே வைத்தால் என்ன் பாதுகாப்பு என திருப்பி கேட்பார்கள்.

சரி இவர்கள் ஏன் சிலையினை வாங்கவில்லை என்றால், எந்த கோவிலில் எந்த சிலை? அதன் அமைப்பு அடையாளம் என்ன என்ற இன்வெண்டரி லிஸ்ட் தமிழக அமைச்சரிடம் இருக்குமா என்பது தெரியவில்லை, இது காணாமல் போனதுதான் என நிரூபிக்க ஆதாரம் இல்லை

அப்படி ஆகிவிட்டது நிலை, ஆக்கிவிட்டார்கள்

இவை எல்லாம் பற்றி நினைக்க நினைக்க கடும் எரிச்சலே மேலோங்குகின்றது, பரமாரிப்பில்லா ஆலயத்திலிருந்து தங்களை பாதுகாக்க வெள்ளையனுக்கு இந்த சாமிகளே தூதுவிட்டிருக்குமோ என எண்ண தோன்றுகின்றது

எப்படியும் போகட்டும், யாருக்கும் பழம்பொருளை பாதுகாக்கும் ஆர்வம் இல்லை, நம் பழம் பெருமையினை நாகரிகத்தை அடையாளாத்தை போற்றிபாதுகாக்கும் ஆசை இல்லை, அப்பொருளின் அருமை தெரியவில்லை

இதோ மதுரை கீழடியில் கிடைக்கபெற்றவை பெரும் நாகரீகத்தை நிரூபிக்கும் சான்றான பொருட்கள் என்கின்றார்கள், ஒரு மண்ணாங்கட்டியும் நிரூபிக்கவேண்டாம், அதனை மதுரையில் பாதுகாப்பாக வையுங்கள் என்றாலும் கேட்பதாக இல்லை.

அந்த சுனாமி மொத்தமாய் அன்றே அழித்திருந்தால் என்ன?

மீட்புபணிக்கு வந்த வெள்ளையனாவது தமிழன் பிணத்தினை தோண்டும்போது, இதனையும் தோண்டி உலகிற்கு உண்மையினை பழந்தமிழரின் நாகரீகத்தை ஓங்கி உரைத்திருப்பாம்

என்ன செய்வது? இந்த கீழடியில் கிடைத்த பொருட்களை கூட பாதுகாக்கமுடியாத நாமா? பூம்புகார் கடலடியில் புகுந்து…, சீ சீ நடக்குமா?

மனதிற்குள்ளே அழுது, இந்த பாமாயில் மரங்களில் முட்டி மோதுவதை தவிர நாம் என்ன செய்துவிட முடியும்?

தன் பாரம்பரிய பொருளை, தன் முன்னோர் புழங்கிய பொருளை, யாராவது தூக்கி கொண்டு செல்வதை கண்ட ஒரு சிறைபட்ட ஊமையன் எப்படி அழுவானோ அப்படி அழுகின்றது மனம்

அதனை கத்தி சொல்லவும் முடியவில்லை, சிறை தாண்டி வரவும் முடியவில்லை

பெரும் சோகம் மனதினை நிரப்பிகொண்ட தருணம் இது.

ராமதாஸின் குரல் இன்னும் வேகமாக ஒலித்தால், இன்னும் பலரின் குரல் கூடி ஒலித்தால் நிச்சயம் பாதுகாக்கலாம்

இன்னும் கொஞ்சகாலம் இருக்கின்றது, அதற்குள் விழித்துகொள்ளும் தமிழகம் என நம்புவோம்.

(மறைமலை அடிகள், மபோசி, தேவநேய பாவணர் போன்ற பெரும் தமிழறிஞர்கள் இருந்தார்கள், அவர்களை ஒற்றிய அடுத்தடுத்த தலைமுறை உருவாகி வந்திருந்தால் இன்று பெரும் முயற்சி எடுத்து இந்த கீழடி நாகரீகம் வெளிகொணரபட்டிருக்கும்,

ஆதிச்சநல்லூர் உறங்கி இருக்காது

நாமோ அண்ணா, கலைஞர், புரட்சி தலைவன், தலைவி என இவர்களுக்கு வாரிசுகள் யாரென தேடி தேடியே எல்லாம் தொலைத்துவிட்டோம்)

எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது

எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது

அந்த பரிதாபத்துகுரிய நிலையிலிருக்கும் தலைவர்கள் மீதா பெட்ரோல் குண்டு எறிய சென்றான் இவன். அவர்களே ஏதாவது செய்து தாங்கள் இருப்பதை, இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருப்பதை நிரூபிக்க படாதபாடு படுகின்றார்கள்.

கட்சியில் இணைந்த சரத்குமாரையே 1 மணிநேரத்திற்கு மேல் தக்க வைக்க முடியாத கட்சி அது, முன்னாள் பிஜேபி காரரான திருநாவுக்கரசர் இப்பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர். அப்படி இருக்கின்றது அவர்கள் நிலை. தேர்தலில் இவர்களாக சென்று நின்றாலும் கூட்டணியில் சேர்க்க யாருமில்லை,

அந்தோ பரிதாபம்.

அவர்கள் மீது பெட்ரோல் வீசசென்ற இவன் எவ்வளவு பரிதாபத்துகுரியவன்?

அடேய் பெட்ரோலுக்கு பதிலாக 2 பாட்டில் குளுக்கோஸ் கொண்டு கொடுத்து, உங்கள் தமிழக பிரிவு கட்சிக்கும், உங்களுக்கும் இதுதான் தேவை என கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

ஆயிரம் பெட்ரோல் குண்டுகள் அவர்கள் அடிமனதில் வெடித்திருக்காதா? கண்ணீர்விட்டு உன் முன்னே கதறி அழுதிருக்கமாட்டார்களா?

அதனை விட்டுவிட்டு அந்த பாவபட்ட பரிதாப ஜீவன்கள் மீதா குண்டு எறிய துணிந்தாய்?

நீ வேண்டுமானால் பார், விரைவில் சிறைக்கு வந்து என்னை மதித்து, எங்கள் போராட்டத்தையும் மதித்து எம்மீது குண்டு எறியும் அளவிற்கு வந்திருக்கும் உன்னை பாராட்டுகின்றேன் என அவர்கள் கண்ணீர் மல்க சிறைக்கு வந்து உனக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

காரணம் டெல்லி தலமை கூட கண்டுகொள்ளாத, தமிழகம் சுத்தமாக கண்டுகொள்ளாத அவர்களை, நீ இவ்வளவு தூரம் சீரிய்சாக சிந்தித்து, உயிரை பணயம் வைத்து குண்டு வீச சென்றது அவர்களை பொருத்தவரை எவ்வளவு பெரும் அங்கீகாரம் தெரியுமா?

அது அவர்களுக்கு மட்டும்தான் புரியும்.

பெங்களூர் மேயராக தமிழ்பெண் பத்மாவதி தேர்வு

may

பெங்களூர் மேயராக தமிழ்பெண் பத்மாவதி தேர்வு

அன்று தீகுளித்த விக்னேஷ் எவ்வளவு பெரும் மூளைசலவை செய்யபட்டிருக்கின்றான் என்பது புரியும் நேரமிது, வாட்டாள் நாகராஜின் இனவெறி எல்லாம் கன்னட மண்ணில் ஒரு மண்ணாங்கட்டியினையும் செய்ய முடியாது

அங்கிள் & கோ இப்பொழுது முகத்தை எங்கு வைக்கும் என தெரியாது, ஆனால் ஹிஹிஹிஹி அவர் கன்னடத்தில் பிறந்த தமிழ்பெண் என்பதால் கன்னடர் ஆகிவிட்டார் என சமாளித்துகொள்வார்கள்

(கன்னடத்தில் தமிழர் வாழட்டும், கன்னடர் ஆளட்டும் ஏய் பத்மாவதி போயேறி, ஒழுங்காக ராஜினாமா செய் என மிரட்டுவார்களோ.. 🙂 )

ஒரு துளி விஷம் கலந்துவிட்டால் அது ஒரு குடம் பாலை கெடுத்துவிடும், ஈழத்தில் அதுதான் நடந்தது.

தமிழகத்தில் அது நடந்துவிடவே கூடாது.

இலக்கியத்தை காப்பாற்ற வந்தவர்கள் ….

இலக்கியத்தை காப்பாற்ற வந்தவர்கள் டால்டாய்ஸ், தத்வோஸ்கி, லத்தீன் அமெரிக்க இலக்கியம், சீன டிங் டாங் இலக்கியம், பெர்சிய இலக்கியம் என காதில் ரத்தம் வருமளவு இலக்கியம் பேசுபவர்கள் எல்லாம் ஏன் சிங்கப்பூருக்கே சென்று சர்ச்சை வளக்க வேண்டும்

இந்த பின் நவீனத்துவம், தொன்மம், படிமம் , ஆழ்மம், புரிதல், சொரிதல், சொல்லாடல், கல்லாடல் (கல் எறிவது), ஆத்மானுபவம், உள்ளோளி என இலக்கிய இம்சைகளை ஆப்கன், ஈரான்,சீனா, நைஜீரியா, மெக்ஸிகோ, போன்ற நாடுகளில் சென்று வளர்த்தால் என்ன?

சிங்கப்பூருக்கு சென்று மட்டும்தான் சென்று வளர்க்கவேண்டுமா? சிங்கப்பூர் எழுத்தாளரின் எழுத்தை மட்டும்தான் விமர்சிக்க வேண்டுமா?

இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது,

பேசினால் உனக்கு இலக்கியத்தை பற்றி என்ன தெரியும் என்பார்கள்

மக்களை யோசிக்க வைக்காத, நாட்டுபற்றை வளர்க்காத, சமூகத்திற்கு நல்ல கருத்தினை சொல்லாத, வரலாற்றினை சொல்லாத‌ எதுவும், குறைந்தபட்சம் மொழி அழகு கூட இல்லாதது இலக்கியமே அல்ல,

அது குப்பையே

முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், நடு இடுப்பு தத்துவம், ஆத்மம், பிரக்ஞை, கவிதானுபவம் போன்ற இம்சைகளால் இந்த உலகிற்கும், மக்களுக்கும் கிடைக்கும் நன்மை என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இருக்க முடியாது.

இன்றைய தமிழக இலக்கிய உலகம் அப்படிபட்ட மனபிறழ்ச்சி அடைந்த சிலரால் நிரம்பி இருக்கின்றது, அவர்கள்தான் இலக்கியவாதிகளாம், அவர்கள் சொல்வதுதான் விமர்சனமாம்.

அவர்கள் படைப்பதுதான் இலக்கியமாம், என்ன கொடுமையோ தெரியவில்லை,

இத்தலைமுறை வாங்கி இருக்கும் இலக்கிய சாபம் அப்படி.

இலக்கியவாதிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற தனி சட்டம் இயற்றும் அளவிற்கு இம்சைகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.

சும்மா திண்ணையில் மல்லாக்க படுத்துகொண்டு எதனையாவது எழுதிவைத்துவிட்டு அதனை வைத்து பேசிகழுத்தறுப்பது என்பது இப்பொது இலக்கிய விமர்சனம் என்றாகிவிட்டது.

நாட்டிற்காக உழைத்துவிட்டு அதன் பின் 4 வரி எழுதட்டும் என ஒரு சட்டமியற்றட்டும், எவனாவது ஒருவன் எழுத வருவான்?