ரஜினி குடும்பச் செய்திகள்….

தமிழக ஆளுநராக ரஜினி மனைவியினை அறிவிக்க திட்டமா? : சில பரபரப்பு செய்திகள்

நடக்குமா இல்லையா தெரியாது, அப்படி நடக்கும் பட்சத்தில் நம்மிடமும் சில கோரிக்கைகள் உண்டு

ரஜினியின் லதாவிற்கு கவர்ணர் பதவி என்றால், எம்ஜிஆர் காலத்து லதாவினை எப்படி புறக்கணிக்க முடியும்? ஏற்றுகொள்வோமா? ஏதாவது ஒரு பொறுப்பான பதவி கொடுத்து அமர்த்தவேண்டும்.

லதா ரஜினிக்கு பதவி என்றால், கமலின் கவுதமி என்ன சாதாரணமாக போய்விட்டாரா? அவருக்கும் ஏதவாது ஒரு மாநிலத்தில் கவர்ணர் ஆக்குங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தமானுக்கு ஆளுநராக்குங்கள்

முடிந்தால் ஜனாதிபதியாவது ஆக்குங்கள்.

இதற்கெல்லாம் முன்பு ரஜினிகாந்தினை இந்திய முப்படைகளுக்கும் தளபதியாக நியமிக்கவேண்டும்,

இல்லை என்றால் எப்படி? மனைவி கவர்ணர் என்றால் தலைவர் அதற்கு மேல் இல்லாவிட்டால் என்ன மரியாதை?

இது ஒருபுறம் இருக்கட்டும், அவர் ஆளுநராகவும் அவர் முப்படை தளபதியாகவும் ஆகட்டும்

அதற்கெல்லாம் முன்பு எங்கள் அபிமானத்திற்குரிய சில்க் ஸ்மிதாவிற்கு”தாத்தா பால்கொவா” , “மாறாத ரத்னா” என சில விருதுகளை கொடுத்து அவரை அங்கீகரித்துவிட்டு இவர்கள் பக்கம் வாருங்கள்.

அந்த வங்க கடலோரம் தூங்கும் அண்ணாவினை வெறுப்போடு பார்க்கின்றேன், புரட்சி நடிகர், இதயகனி என வோட்டுக்காக கிளப்பிவிட்ட பூதம் இன்று எப்படி நம்மை ஆட்டி கொண்டிக்கிருக்கின்றது

“அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நாமல்லவா”


ரஜினி மகள் ஐ.நாவில் இந்திய நல்லெண்ண தூதராக நியமிக்கபட்டுள்ளார்

நாட்டில் கல்வியாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், உலக அரசியலில் கரை கண்டவர்களுக்கும் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் வேறு வழியின்றி இவருக்கு அந்த பதவி வழங்கபட்டிருக்கின்றது

அப்படியே ரஜினி மருமகன் தனுஷுக்கு ஆப்கன், ஏமன், லிபியா, சிரியா போன்ற நாடுகளுக்கு நல்லெண்ண தூதராக அனுப்பி வையுங்கள்,

உங்களுக்கு புண்ணியமாய் போகும்.


1 GB டேட்டா 50 ரூபாய் : அம்பானி குழுமம் அதிரடி

1 GB டேட்டா 50 ரூபாய் : அம்பானி குழுமம் அதிரடி

ஆயிரம் சர்ச்சைகள் வந்தாலும் அக்கால அம்பானியின் சில அதிரடிகள் பெரும் வரலாறு, அவர் களத்தில் வந்த பின்புதான் பெரும் வியாபார சாம்ராஜ்யங்கள் வீழ்ந்தன, 150 வருட பாரம்பரியம் கொண்ட கம்பெனிகளை எல்லாம், வெறும் 15 வருடத்தில் வீழ்த்தியவர் அவர்.

ஜவுளி தொழிலில் அவர் அடித்த அடி அப்படி. இந்த விலையில் கொடுத்தால் கட்டுபடியாகிறதல்லவா? அப்படியானால் அவர்கள் என்ன சம்பாத்தியம் செய்திருப்பார்கள் என்ற அவரின் கேள்வியே பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது.

ஆலமரமாக நின்று நாங்கள் வைத்ததுதான் சட்டம், விலை என இருந்த பெரும் கம்பெனிகளை சாமான்யனாக வந்த அவர் வீழ்த்திகாட்டினார், வியாபார உலகில் அவர் அணுகுமுறை இன்றளவும் பெரும் புதிர்.

இன்று தொலைதொடர்பு துறையிலும் அதே போல அடித்து நொறுக்க கிளம்பிவிட்டார்கள்

இன்று உலகெல்லாம் பெருகிவரும் அந்த மலிவுவிலை கலாச்சாரம் எல்லா விஷயத்திலும் மக்களை மகிழ்வித்து வருகின்றன‌

பட்ஜெட் விமானங்கள் வந்து பெரும் விமான சாம்ராஜ்யங்களை ஆட்டம் காண வைத்தன, இன்னும் ஏராளமான நன்மைகள் மக்களுக்கு கிடைக்கின்றன‌.

பெருகிவிட்ட சமூக வலைத்தளம் முன் நிற்கமுடியாமல் பெரும் செய்தி நிறுவணங்களே தள்ளாடுகின்றன, முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. இன்று எல்லாமே சாத்தியம்

பெருகிவிட்ட வியாபாரங்கள், கம்பெனிகள் வாடிக்கையாளர்களை தக்கவைக்க சகட்டு மேனிக்கு அள்ளிவிடுகின்றன‌

எப்படியோ, கம்பெனிகள் பெருகட்டும் அவைகளுக்குள் மோதட்டும், மக்கள் குறைந்த விலையில் பயனடையட்டும்.

கோடிகளில் புரளும் தமிழ்சினிமாவினை, அதன் டிக்கெட் உச்ச விலையினை அடித்து நொறுக்கவும் நிச்சயம் அம்பானி போல ஒருவன் வருவான். ஒரு நாளில் அந்த மாயை உடைபடும்.

அதுவரை நாம் இணையத்தில் சேரனுக்கு தெரியாமல் ஈழத்தவர் வாழ்க என சொல்லிவிட்டு படம் பார்க்கவேண்டியதுதான்.

நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா…

Image may contain: 1 person , people smiling , close-up

நடிகை ரம்யா (திவ்யா ஸ்பந்தனா)

குத்து படத்தில் சிம்பு உடனும் , பொல்லாதவன் திரைப்படத்தில்  தனுஷுடனும்  கதாநாயகியாக நடித்தவர்.

அவ்வப்போது யாராவது நாட்டுபற்றாளர் என சொல்லிகொள்வோர் கையில் சிக்குவார்கள், இம்முறை சிக்கி இருப்பது ரம்யா எனும் நடிகை. காங்கிரஸ் கட்சிக்காரர்.

அம்மணி முதலில் என்ன சொன்னார்? முதலில் பாகிஸ்தானையும், இலங்கையினையும் நேசிக்கிறேன் என்றார். யார் நேசிக்கவில்லை? அவர்களின் ஆட்சியாளர்களின் வெறுப்பு மதவாதம், இனவாதம் தவிர எல்லா பொதுமக்களையும் நேசிக்கின்றோம்

பாகிஸ்தான் பொதுமக்களும் நம்மை மனதார நல்ல உறவாக விரும்புகின்றார்கள். அந்த அடிப்படையில் வாஜ்பாய் பஸ் விட்டார், மன்மோகன்சிங்க் பிரியாணி ஊட்டினார், இப்பொழுது மோடி சொல்லாமலே சென்று நவாசை தழுவினார்

அதாவது இருநாட்டின் மக்கள் மனமும் அதேதான், இனவாத புத்த தலமை பீடத்ததை தவிர சிங்களனுக்கும் நமக்கும் என்ன தகறாறு?

வலிய உதவபோய் மாட்டிகொண்ட ஈழவிவகாரங்களில் சில கருங்காலிகளை தவிர மற்றவருக்கும் நமக்கும் என்ன தகறாறு?

மக்கள் மக்களாய் இருக்கின்றார்கள், மானுட அடிப்படையில் நேசிக்கின்றார்கள். இந்தியா பாகிஸ்தான் இணையமுடியுமா என இருநாட்டு இளம் சமுதாயமே வெளிப்படையாக விவாதிக்கும் நேரத்தில் திவ்யா சொன்னது தேசதுரோகமாம்.

அம்மணி அடுத்து என்ன சொன்னார்?

ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்கள் சுதந்திரத்திற்கு பாடுபடவில்லை என்றார். இது யாருக்கு தெரியாது?

ஜின்னாவின் முஸ்லீம் லீக் எப்படி தனி பாகிஸ்தான் என சீன் போட்டுகொண்டிருந்ததோ, அப்படி அகண்ட பாரதம் என சொல்லிகொண்டிருந்தது ஆர்.எஸ்.எஸ்

அதாவது கடைகாலம் என தெரிந்துவிட்ட வெள்ளையன் இந்த இரு கட்சிகளை வைத்து அரசியல் செய்து குழப்பம் விளைவித்துகொண்டிருந்தான். உதாரணம் வேண்டுமானால் கலைஞர் ஸ்டாலினையும், அழகிரியினையும் வைத்து ஒரு மாதிரி ஆடுவார் அல்லவா? அப்படி

உண்மையில் ஜின்னா கோஷ்டியும், இந்த ஹெட்கோவர் கோஷ்டியும் சுதந்திரத்திற்காக பெரிதும் பாடுபடவில்லை. பிறக்கபோகும் இந்தியா இந்து இந்தியவா அல்லது இஸ்லாமால் உடைபட்ட இந்தியாவா என பட்டிமன்றம் நடத்திகொண்டிருந்தன அவ்வளவுதான்.

பாகிஸ்தான் எனும் பெயர் அன்று கனவில் கூட இல்லை.

ஜின்னா அப்பட்டமான மதவாதம், ஆர்எஸ்எஸ் நாட்டுபற்றில் தன்னை மறைத்து கொண்ட இயக்கம். இந்து மகா சபை போன்றவகைள் வேறு வகை.

இதனைத்தான் ரம்யா சொன்னார். மறுபடி பொங்கிவிட்டார்கள்.

சரி அந்த ஹெட்கோவர், கோவல்கர் எல்லாம் என்ன போராடினார்கள் என்று நிரூபித்தால் முடிந்தது கதை.

முடிவில் காந்தி கொலையில் அந்த மதவெறி அப்பட்டமாக தெரிந்தது, தேசத்தின் தலைவனை விட மதம் பெரிது என அவர் கொல்லபட்டு , பின் ஆர்எஸ்எஸ் தடைசெய்ய்யபட்டதும் உலகம் அறியாததா? மறுக்க முடியுமா?

கருப்பு காந்தி காமராஜர் மததுரோகி என அறிவித்து அவரை கொல்லமுயன்றவர்கள் யார் என்பதுமா தெரியாது?

உண்மையான இந்திய பற்றுள்ளவன் காமராஜரை கொல்ல முயற்சிப்பானா?

ஆக மனிதாபிமானம், சகோதரத்துவம், நாட்டுபற்று என அப்பெண் சொன்னால் சகட்டு மேனிக்கு கொதிக்கின்றார்கள், கொஞ்சம் நிதானித்து யோசிக்க வேண்டாமா?

நாட்டுபற்று என்றால் என்ன?

தமிழகத்தில் ஒருவன் அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தை பிடித்து என் அண்ணன் என சொல்லி திரிகின்றான்.

காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு படை என சொந்த ராணுவத்தை பழிக்கின்றான்.

கண்ணையா குமார் என்பவன் சீனாவிற்கு சார்பாக பேசிகொண்டிருக்கின்றான்.

சம்பந்தமே இல்லாமல் அரசு நிர்வாகத்தில் தலையிடும் சுப்பிரமணியன் சாமி, அமெரிக்க நலன்களுக்காக இந்தியாவில் காய் நகர்த்தும் சு.சாமி என்ன இந்திய தேசிய அபிமானியா?

அவர்களை எல்லாம் என்ன வகையில் வைப்பீர்கள், தேசப்பற்றாளார்கள் என்றா?

அப்படி தெரிந்தால் ரம்யா எனும் தேசாபிமானி, உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்தியபெண் உங்களுக்கு தேசதுரோகியாகத்தான் தெரிவாள்

அவள் நடிகையாம் சிலர் சொல்லி ஏளனம் செய்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு நடிகைதான் 4 ம் முறையாக ஆண்டுகொண்டிருக்கின்றார்.

அவருக்கு வாக்களித்தவன் தான் இன்னொரு நடிகை பற்றி, “நடிகை தானே அவளுக்கு என்ன தெரியும்?” என பேசிகொண்டிருக்கின்றான்.

நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி…

எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை…
NEWTAMILCINEMA.COM

நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி, அதிலும் சிலர் தங்கள் பத்திரிகைகளில் பிரசரிகின்றனர் எனும்பொழுது அது கூடுகின்றது, நம்மையும் அங்கீகரிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.

டி.ராஜேந்தர் பற்றி எழுதியதை நண்பர் அந்தணன் அவர்கள் அவரின் பத்திரிகையிலே வெளியிட்டிருக்கின்றார். அது இன்றைய சினிமா உலகின் தவிர்க்கமுடியாத பத்திரிகை, கோடம்பாக்க காற்று அங்கு வடிகட்டிய பின்புதான் வெளியேறும்.

மகா முக்கியமான சினிமா இதழ் அது.

எப்படியும் இது கவிஞர் டி.ராஜேந்தரின் கவனத்திற்கு செல்லும் என்பது உறுதி.

விஞ்ஞான வளாகத்தில் , வாய்ப்பே இல்லாத பல விஷயங்கள் சாத்தியமாகின்றன, அந்த பத்திரிகைக்கும் நண்பர் அந்தணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

ஒன்று புரிகின்றது, நம்மைபோலவே டி.ஆர் பாடல்களுக்கு ஏகபட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள், அவரை கவிஞராக கொண்டாடுகின்றார்கள். இன்றும் அவர் கவிஞராக திரும்ப காத்துகொண்டிருக்கின்றார்கள்.

அது நமக்கு நன்றாய் புரிகின்றது, அவர் எப்படியும் எடுத்துகொள்ளட்டும், பார்வைக்கு வைத்தாயிற்று.

(இப்படியே ஒரு நாள் ஜெயபிராதவின் பார்வைக்கும் வந்துவிட மாட்டோமா? வந்துவிடலாம், பார்த்து ஒரு செல்பி எடுக்கலாம், பிறவி பெருங்கடலை ஒரே ஜம்பில் தாண்டிவிடலாம் 🙂 ,

ஏ மனமே நம்பிக்கை கொள். லட்சியம் நிச்சயம் வெல்லும்..)

நினைத்தாலே பயங்கரமாக இருக்கின்றது…

முன்பெல்லாம் ஒருதலைகாதல் தனிமையில் சாகும், அல்லது எங்காவது என்றாவது காதலர் தற்கொலை செய்வார்கள்.

அப்பெண்ணை தூற்றுவோம் அல்லது சமூகத்தை தூற்றுவோம்

இன்று காதலன் என சொல்லிகொள்பவன் காதலி என அவனாக முடிவுசெய்துகொள்பவளை கொன்று தானும் செத்து கொண்டிருக்கின்றான்.

சுவாதி கொலை, கரூர் கல்லூரி சம்பவம், தூத்துகுடி சம்பவம், நேற்று சமயபுர சம்பவம் எல்லாம் ஒரே நூலிழை சம்பவங்கள்,

சமயபுர மாணவியின் தந்தை காவல்துறை அதிகாரியாம், அவளுக்கே பாதுகாப்பில்லை என சொல்லமுடியாது, இது வேறுமாதிரியான பிரச்சினை.

இதில் கரூர் சம்பவம் கண்டிக்கதக்கது, ஒருவன் நுழைந்து சாகும் வரை ஒரு சகமாணவியினை தாக்கி இருகின்றான், வகுப்பறையில் ஒருவனும் தடுக்கவில்லை.

இப்படிபட்ட சுயநல சமூகத்தைத்தான் உருவாக்கிகொண்டிருக்கின்றோம், இவர்கள் எல்லோரும் வருங்காலத்தில் இச்சமூகத்திற்கு செய்யபோகும் நன்மை என்ன? சக தோழியினை காப்பாற்ற தெரியாதவர்களா நாளை நாட்டினை காப்பாற்றுவார்கள்.

இவ்வளவிற்கும் அவன் வைத்திருந்தது அரிவாளோ வெடிகுண்டோ அல்ல சாதாரண கட்டை

அந்த இடத்தில் ஒரு நாய் இருந்தால் கூட விழுந்து பிரண்டியிருக்கும், தேனீ கூட்டம் என்றால் மொத்தமாய் கொட்டியிருக்கும். காக்கா கூட்டம் என்றால் கத்தி கொத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கும், இவர்கள் மனிதர்கள் ஆதலால் அமைதி.

அப்படி என்ன காதல்? உயிர் பறிக்கும் காதல்? முதலில் அவளை காதலிக்க் இவர்களுக்கு முழு உரிமையும் கொடுத்தது யார்? அதனையும் மீறி அவள் உயிர்பறிக்க என்ன அதிகாரம், உரிமை இருக்கின்றது.

அப்பெற்றோர்கள் கனவு, உடன் பிறந்தோர் கனவு, அப்பெண்கள் இச்சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் என எல்லாம் நாசமாகவும் அளவு என்ன வன்மம்?

ஒன்றுதான், அதாவது பெண் என்பவள் ஒரு பேசும் ஜடம். அவளுக்கென்று மனம் இல்லை, சிந்தனை இல்லை, வாழ்வு இல்லை, ஆசை இல்லை எல்லாம் தன் விருப்படி நடக்கும் பொம்மையாக அவள் இருக்கவேண்டும் என ஏதேச்சதிகார எண்ணம் மட்டுமே காரணம்.

மணமான பின்னர் கூட, எனக்கு அவனோடு வாழ பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வழங்கி ஜீவனாம்சமும் வழங்க வழிசெய்யும் சட்டம் உண்டு, அப்படி ஒரு உரிமை பெண்களுக்கு நமது சட்டம் கொடுத்துதான் வைத்திருகின்றது, ஈவ் டீசிங் எனும் கொடுமை என்றாலும் காக்க சட்டமுண்டு.

அப்படிபட்ட நாட்டில் இம்மாதிரியான கொடுமைகள் அரங்கேறிகொண்டிருப்பது நிச்சயம் கண்டிக்கதக்கது, பெண்களை அவமதிக்கும் எந்த நாடும் நன்றாக வாழா.

இதற்கு சட்டத்தால் மட்டும் பலனிலை, அது முழு பலளிக்காது. சாராயம், போதை, இம்மாதிரியான பாலியல் கொலைகளுக்கு சட்டம் தண்டனை தருமே தவிர தடுக்காது.

இதற்கு மனநல ஆலோசனைகள் தேவை, எல்லா பள்ளிகளிலும் நல்லொழுக்க வகுப்பும், மனநல கவுன்சிலிங்கும் கட்டாயம் தேவை.

இப்படி தன் மனதில் பட்டத்தை, தன் மன கஷ்டத்தை கொட்டி தீர்க்க ஒருவர் இருந்திருந்தால் இப்பெண்களும் சொல்லி இருப்பார்கள், அந்த குழப்பமான மனம் கொண்ட இளைஞர்களும் சொல்லி இருப்பார்கள்.

கூட இன்னும் வெளிநாடுகளில் எப்படி பெண்கள் சமூகத்தால் புரிந்துகொள்ளபடுகின்றனர், அவர்களை எப்படி அங்கீகரிக்கபட வேண்டும் என்ற விஷயங்களும் சொல்லிகொடுக்கபடவேண்டும்.

கல்வி என்பது தொழில் மட்டும் அல்ல, இச்சமூகத்தில் ஒருவன் அடுத்தவருக்கு தொந்தரவு இன்றி, முடிந்தால் உதவி செய்து வாழும் வாழ்க்கையினை கற்பிப்பதாக இருக்கவேண்டும்.

ஆண் மனம் பெண்ணில் விழத்தான் செய்யும், அது இயற்கை. மிக சாதாரணா விஷயங்களில் ஒன்று, அவளும் விரும்பினால் வாழலாம்.ஆனால் அவளுக்கு விருப்பமில்லாத பொழுது வலிந்து திணித்து கொல்வது வன்கொடுமையே அன்றி வேறென்ன?

ஒரு பெண் இன்றி வாழ முடியாதா? பிரிவுகள் என்பதுதான் வாழ்க்கை. விண்ணுக்கு செலுத்தபடும் ராக்கெட் ஒவ்வொரு பூஸ்டராக இழந்துதான் இலக்கினை அடையும். பெற்றெடுத்த தாய் தந்தை கூட கடைசிவரை வரமுடியாத உலகம் இது,

பிரிவுகளையே சந்திக்காமல் ஒருவன் எப்படி இவ்வுலகில் வாழ முடியும்? அது மானிட விதி.

ஆனால் ஆண்டவன் உயர்ந்தவன், ஒரு உறவு பிரிந்தால் இன்னொரு உறவினை ஒட்ட வைப்பான். இந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சுழன்றுகொண்டிருக்கின்றது.

இந்த காதல், மனம் கொடுப்பது, ஒரு தலைராகம் எல்லாம் வெறும் மாயை, அப்படி ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு உணர்வு, ரசிக்கதக்க உணர்வு. குழந்தை போல கொண்டாடும் ஒரு உணர்வு, அதனை பெரும் விஷயமாக மாற்றிய பெருமை இந்த புலவர்களை, கவிஞர்களை, நாடக ஆசிரியர்களை, இப்போது உள்ள திரைப்படங்களை மட்டுமே சாரும்.

மனதில் உள்ள ஏராளமான உணர்வுகளில் ஒன்றே காதல் தவிர, அதுவே பிரதானம் என்பதெல்லாம் மாயை, வீன் கற்பனை. தனக்குதானே ஏற்றிகொண்ட சுமை.

அப்படியும் அவள் இல்லாவிட்டால் சாவேன் என்பவன் சமூக சுமை, குடும்ப சுமை அவன் செத்து தொலையட்டும், ஆனால் அவளை வலுகட்டாயமாக கொல்ல என்ன உரிமை இருக்கின்றது?

அன்பில்லாதது காதல் ஆகாது. அப்படி அன்பிருந்தால் இக்கொலைக்காரர்கள் இப்படிபட்ட பாதகத்தை செய்ய மாட்டார்கள். இது வெறுப்பு முழுக்க முழுக்க வெறுப்பால் நடந்த கொலைகளே தவிர, காதலால் நடந்தது அல்லவே அல்ல.

ஜெயகாந்தன் அழகாக சொல்வார், “அன்பே தெய்வீகமானது. அன்பு மாறாதது எதனையும் தாங்க கூடியது விட்டுகொடுக்க கூடியது, அன்புகொண்டோருக்காக எதனையும் இழக்க செய்ய கூடியது, அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்க கூடியது

காதல் என்பது தெய்வீகமானது அல்ல, அது அற்பமானது. அது தொடங்கவும், முறியவும் ஒரு அற்ப விஷயம் போதுமானது”

இங்கு அந்த அற்ப விஷயம் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருப்பதுதான் மகா பரிதாபம். வீழ்ந்துகிடக்கும் பெண்களை யாரோ என்றால் எளிதாக நகரலாம், அப்படித்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நமது வீட்டு மகளாக, சகோதரியாக நினைத்துபாருங்கள், அக்கொடுமையின் வலி புரியும், பெரும் சோகம் மனதினை கவ்வும். அப்படித்தான் என் மனம் கதறிகொண்டிருக்கின்றது.

அற்பமான காதலுக்கெல்லாம் உயிர்பறிக்கும் கொடூர சமூகமா இது? இதிலா வருங்காலத்தில் நம் சந்ததிகள் வாழபோகின்றன?

நினைத்தாலே பயங்கரமாக இருக்கின்றது.

கோட்டை ராசி அப்படி…..

“காலனியில் பிறந்த என்னை.. காலிணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு நிறுத்தியவர்.. எங்கள் புரட்சி தலைவி அம்மா” : அமைச்சர் ராஜலட்சுமி

அன்று எம்ஜிஆர் என்பவர் எல்லோருக்கும் செருப்புகொடுத்தாரே, அப்பொழுது வேண்டாம், அம்மா கையில்தான் செருப்பு வாங்குவேன் கூடவே அமைச்சர் பதவியும் இலவசமாக வாங்குவேன் என இருந்துவிட்டார் போலும்

சட்டசபையில் அம்மா புகழ் இம்சைகள் தாங்கமுடியவில்லை. ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளுகின்றார்கள். புகழ்வதற்கு யாரும் தடை என்றால் தூக்கி போட்டுவிட்டு திருப்புகழ் புகழ்ச்சிபாடல் இயற்றிகொண்டே இருக்கின்றார்கள்.

கோட்டை ராசி அப்படி.

அதாவது அக்கோட்டை கட்டபட்டு பின் இங்கிலாந்து அரசியின் அதிகாரத்தின் கீழ் வந்தபின் தென் இந்தியாவின் கட்டும்பாட்டு மையம் அதுதான், அப்பொழுது ராணியின் பிரதிநிதி வீற்றிருப்பார். பேசும் எல்லோரும் ராணிக்கு முறைப்படி
அரச வணக்கம். ராணி புகழ்ச்சி எல்லாம் 10 நிமிடம் சொல்லிவிட்டு பிரச்சினைகளை பேசுவார்கள், பின் மறுபடி ராணி சமூகத்திற்கு நன்றி சொல்லி அமர்வார்கள்

அந்த பிரதிநிதி அதனை கவனமாக குறித்து லண்டனுக்கு அனுப்புவார், ராணி மகிழ்வார், பிரமோஷன். பதவி உயர்வு எல்லாம் அதனை பொறுத்தே
ஆக சென்னை கோட்டை பிரதிநிதிதான் எல்லாம்.

இதில் ராணியே நேரில் வந்தால் எப்படி இருக்கும்? இப்பொழுது இருக்கும் சட்ட சபை போலவே இருக்கும்.

மொத்தத்தில் கோட்டை என்றால் ராணி, ராணி என்றால் கோட்டை எனும் கோட்டை ராசியே தவிர வேறொன்றும் அல்ல, இடம் மாற்றாமல் அந்த சென்டிமென்ட் சரியாகாது.

மக்களாட்சி மூலம் மன்னராட்சி நடக்கும் விநோதநாடு உலகில் இந்தியா மட்டுமே.

ஆனால் இன்று எல்லா அமைச்சர்களும் கவிஞர்கள், சபாநாயகர் கவிஞர் மொத்தத்தில் கவிஞர்கள் கவிமழை பொழிந்துகொண்டே இருக்கின்றார்கள்,

தேவியின் அருள் பெற்ற காளிதாசன்கள், தெனாலி ராமன்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றார்கள், சபை களை கட்டுகின்றது.

பொற்கால ஆட்சியில், வேறு குறைகளே இல்லாத ஆட்சியில் இது கூட இல்லை என்றால் எப்படி?


ஏராளமான அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியே வருவார்கள் : சசிகலா புஷ்பா

அவர்கள் வெளியே வருவது இருக்கட்டும், நீங்களும் “அவரும்” உள்ளே செல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா?