கம்பன் கண்ட சீதை ….

j

இப்பொழுது ஒரு நண்பர் சொன்னார், பல செய்திகளை தருகின்றீர்கள், இடை இடையே ஜெயபிரதா போன்ற காமெடிகளையும் செய்கின்றீர்கள்.

என்னது ஜெயப்பிரதா பற்றி சொல்வது உங்களுக்கு காமெடியா? அய்யகோ எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

அவர் அழகினை பாட தெய்வீக கவிஞனால் மட்டுமே முடியும், அதனால் கம்பன் சீதைக்கு சொன்னது அப்படியே ஜெயபிரதாவிற்கும் பொருந்தும், ரசனை இருந்தால் கவனியுங்கள்

“பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்”

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

இது நமது ஜெயபிரதாவிற்கு பொருந்தாதா? நிச்சயம் அப்படியே பொருந்தும்.

இன்னும் ஒரு இடத்தில் கம்பன் சொல்வான், மின்னல் அரசியாம் சீதை.

‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்றாள் என்கிறான் கம்பன்

அப்படி ஆயிரம் கம்பனின் சீதைகளுக்கு தாய் நமது ஜெயபிரதா.

’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார்,
இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’

சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம்.

அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம்.

அதனைத்தான் நாங்களும் சொல்கிறோம், இரு கண்கள் என்ன? இந்திரன் போல உடலெல்லாம் கண்கள் இருந்தாலும் ஜெயபிரதாவினை பார்க்க போதாது என்பது முக்கால உண்மை. அந்த உதட்டோர மச்ச அழகினை பார்க்கவே கோடி கண்கள் போதாது.

கல்லாதார் மட்டுமல்ல, ஜெயபிரதாவினை ரசிக்க தெரியாதோரும் முகத்திடை இரண்டு புண்ணுடையார் என்பது எமது குறள்.

இன்றும் தமிழ்சினிமாவில் அவருக்கான் இடங்கள் உண்டு கபாலியில் அவரை வைத்திருக்கலாம், . வயதான ரஜினியாம் ஆனால் மனைவி மட்டும் இளமையாம், என்ன கொடுமையோ.

பாபநாசம் படத்தில் கவுதமிக்கு பதிலாக ஜெயபிரதாவினை வைத்திருக்கலாம்.

வில்லன் அப்பெண்ணின் தாய் மீது மையல் கொண்டதற்கு சரியான தேர்வாக இருந்திருக்கும், கவுதமி மீது மையல் கொண்டதற்காகவே கொல்லபட வேண்டிய வில்லன் அவன்,

அவ்வையார் அளவிற்கு வந்துவிட்ட கவுதமியினை பார்த்து ஆசைபட்டான் என்றால் அவன் கொல்லபடவேண்டியவன் சந்தேகமே இல்லை.

ஒருவேளை கதை அப்படி
கொடூரனாக அவன் பாத்திரம் அமைக்க பட்டிருக்கலாம்.

எனினும் விரைவில் எங்கள் ஜெயபிரதா மறுபடி தமிழ்திரையுலகில் வருவார் என என்னைபோல ஒரு கூட்டமே எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது

வயதான கமலும், ரஜினியும், ஶ்ரீதேவியும் வரும்பொழுது ஜெயப்பிரதா வரமாட்டாரா?

ஆக நண்பரே, இது காமெடி எல்லாம் இல்லை. ரசனை

இறைவன் படைத்த அற்புதமான ஒரு ஓவியத்தை ரசிக்கும் ரசனை. இந்த படத்தினை பாருங்கள், அவர் கம்பன் சொன்ன‌ மின்னலின் அரசி என்பதும் சரிதானே?.

(இருக்கட்டும், பாகம்பிரியாள் செல்லும்பொழுது, ஒரே ஒரு கட்டளைதான் இட்டாள், இரவெல்லாம் ஜெயபிரதா படம் பார்க்ககூடாது சரியா? என்றாள். அதனை எல்லாம் கடைபிடித்தால் அது தலைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா? அவரின் படங்களை பார்த்துகொண்டே இருக்க்கின்றேன்

ஆனாலும் நிச்சயம் பேக் ஐடியிலிருந்து என்னை பார்த்துகொண்டே இருப்பாள் அவள், வந்தபின்புதான் தெரியும்  )

அங்கும் இங்கும்…

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

உடனே அவர்கள் திறந்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள்?, எந்த உத்தரவிற்கு அவர்கள் கட்டுபட்டிருக்கின்றார்கள்?

இப்படியாக உத்தரவிடும் நீதிமன்றம் அதன் பின் கண்காணிக்குமா என்பது தெரியவில்லை, மொத்தத்தில் உச்ச நீதிமன்றத்தின்

“ஒப்பனிங் நல்லாத்தான் இருக்கு..பினிசிங் சரியில்லிப்பா…”


இந்த சசிகலா புஷ்பா இப்பொழுதெல்லாம் மவுனவிரதம் இருக்கின்றார் போலும், சத்தமே இல்லை. மண்ணாதி மண்ணன் பற்றியும் சர்ச்சை இல்லை. அவரை பற்றி பேட்டியளித்த சகோதரனையும் காணவே இல்லை

இப்படி ஒருவர் பேட்டி அளித்துவிட்டு வைகுண்ட‌ அவதாரமாக படீரென்று மறைந்து போவது தமிழ்நாட்டில் மட்டும் சாத்தியம்

ஆக எல்லோரின் மவுனமும் ஏதோ செட்டில்மெண்ட்டிற்கான அறிகுறி.

சீனாவில் ஒபாமா… இப்படி பண்ணிட்டாங்களே…

ob

பெரிய மனிதனுக்கு நடக்கும் மரியாதை குறைவு பெரும் செய்தியாகிவிடுகின்றது, அப்படி சீனா ஒபாமாவினை அவமானபடுத்திவிட்டதாக பொங்கி தீர்க்கின்றனர் அமெரிக்கர்கள்.

எது ஒரு பெரிய நாடு என்றாலும் அமெரிக்காவிற்கு பிடிக்காது, அதுவும் சவால் விடும் நாடென்றால் சுத்தமாக பிடிக்காது, மறைமுகமாக ஆடுவார்கள்.

இப்பொழுது வளர்ந்துவிட்ட டிராகன் சீனா, அது ஜப்பானை உரசுகின்றது, தென் சீன கடல் முழுக்க எனக்கு என மல்லுகட்டுகின்றது, சர்வதேசம் கடலை விட்டு போ என சொன்னாலும் காவேரியில் கன்ன்டம் போல எதனையும் மதிப்பதாக‌ இல்லை. அமெரிக்காவிற்கும் அதற்கும் முறுகலான நிலை.

காரணம் அந்த கடல்பரப்பு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது, முழுக்க சீன கட்டுபாடு என்றால் சிக்கல், அதனால் அமெரிக்க போர்கப்பல்கள் வந்து நிற்கின்றன, இது சீனாவிற்கு எரிச்சலோ எரிச்சல்.

இந்நிலையில் சீனாவில் ஜி20 மாநாடு நடைபெற்றது, அதற்கு அமெரிக்க அதிபர் வந்தார். அவர் விமானத்திற்கு வழங்கும் நகரும் படிகட்டுகளை சீனா கொடுக்கவில்லை, வேறு ஏணியில் இறங்கினார் ஒபாமா, அதாவது வழக்கமான ஸ்டைலில் இல்லாமல், சரக்கு லாரியில் இருந்து இறங்குவது போல இறங்கியது ஒரு அவமானமானது.

இன்னொன்று நமது மோடி போன்றவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்த சீனா, ஒபாமாவிற்கு ஒரு ஓலைபாயினையும் விரிக்கவில்லை, அதற்காக மோடி ஒபாமாவினை விட பெரும் தலைவராகிவிட்டார் என அடிப்பொடிகள் சொன்னால் அர்த்தமில்லை, ஒபாமாவினை அவமானபடுத்தியிருக்கின்றார்கள்

சீனா சொல்லும் காரணம் வேறு, பொதுவாக அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அமெரிக்க குழுதான் பாதுகாப்புகொடுக்கும், காரணம் அதிபர் அவர்களின் உச்ச மதிப்பு. ஆனால் சீனா எங்கள் நாட்டில் நாங்கள் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்பது போல முரண்பட்டிருக்கின்றார்கள், அமெரிக்க குழுவோடு மோதல் நடந்திருக்கின்றது.

அதில் உனக்கு கம்பளம் எல்லாம் இல்லை போ என சொல்லிவிட்டு, அமெரிக்க பாதுகாப்பு குழுவினை நோக்கி இது எங்கள் நாடு, என கத்தியிருக்கின்றார் ஒரு சீன அதிகாரி.

ஒபாமாவோ, அன்று இலங்கையில் தாக்கபட்ட ராஜிவ் பெருந்தன்மையாக நடந்துகொண்டதை போல விட்டுவிட்டார், ஆனால் அமெரிக்கர்கள் கொதித்துகொண்டிருக்கின்றனர். தங்களுக்கே அவமானம் நிகழ்ந்துவிட்டதாக கடும் கொதிப்பு.

ஒபாமாவிற்கு இன்னும் 65 நாட்கள் கூட இல்லாததால் அவர் அமைதியாக இருக்கலாமோ?

சரி மோடியும் சென்றிருக்கின்றார், சீனாவோடு கை குலுக்கி இருக்கின்றார். அவர் கை குலுக்கிகொண்டே சீனாவின் பின்னால் வெடிவைத்திருக்கின்றார். அதாவது அவர் கைகொடுக்கும் நேரம் இந்தியா வியட்நாமுக்கான 3000 கோடி நிதியினை அறிவித்திருப்பது சீனாவின் முகத்தை கடுகடுக்க வைக்கின்றது.

சிலர் முகநூலில் குதிக்கின்றார்கள் அல்லவா? பீகாரில் ஆம்புலன்ஸ் இல்லை, பலருக்கு சாப்பாடு இல்லை, பின் ஏன் அடுத்த நாட்டிற்கு உதவி? என்பது மகா அபத்தமானது.

காரணம் தனக்கு உபயோமில்லாமல் எந்த நாடும் எங்கும் கொடுக்காது, இது உலக அரசியல் பாலபாடம் எல்லா உதவியிலும் சுயநலம் உண்டு.

ஆப்கனுக்கு இந்தியா அள்ளிகொடுப்பது ஏன்? அங்கிருந்தே பாகிஸ்தானை பார்க்கலாம், அப்படியே அதன் அருகிலிருக்கும் பலுசிஸ்தான் மக்களிடம், பாக் பிடிக்கவில்லையா? ஓஓ ஏன் தனியாக கிளம்பவேண்டியதுதானே என கேட்கலாம். அதாவது பாகிஸ்தானுக்கு குடைச்சல் கொடுக்கலாம். அப்படி உறவில்லாத காலத்தில்தான் ஏர் இந்தியா விமானம் ஆப்கனுக்கு கடத்தபட்டது குறிப்பிடதக்கது.

ஆப்கனுக்கு செய்யும் உதவிகளில் எல்லாம் பாகிஸ்தானுக்கான செக் இருக்கின்றது.

இலங்கை வேறுமாதிரி கையாளபடவேண்டிய நாடு, நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இலங்கை நாட்டுபற்றாளன் பிரபாகரனின் துரோகம் மட்டும் இல்லை என்றால் என்றோ அங்கு வலுத்திருக்கும் இந்தியா, இப்பொழுது ஏதோ செய்துகொண்டுதான் இருக்கின்றது, ஆனால் இந்தியாவினை இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையும் யாராலோ நடத்தபடுகின்றது, உதாரணம் இந்திய இலங்கை பாலம் வேண்டாம் எனும் இலங்கையின் அழுகை.

சரி வியட்நாமில் ஏன் பணம் கொட்டவேண்டும்.

வியட்நாமினை சீனாவின் அண்டை நாடாக பார்க்கின்றது இந்தியா, பாகிஸ்தானில் சீனா என்ன அழிச்சாட்டியம் செய்கிறது, இலங்கை ஹம்பாந்தோட்டையில், மாலத்தீவில் அது செய்வதெல்லாம் உலகறியும்.

அப்பொழுது நாமும் அவர்கள் காலடியில் இருக்கும் நாட்டில் ஏதாவது செய்யவேண்டும், ஜப்பான், தென்கொரியா அமெரிக்க கட்டுபாடு, தைவானும் அப்படியே, கிழக்கே சீனாவினை எதிர்க்க துணிந்த நாடு வியட்நாம், ஏற்கனவே நமது பிரம்மோஸ் ஏவுகனை ஒப்பந்தம் அவர்களோடு உண்டு.

மேற்கொண்டு நெருங்குவதுதான் ராஜதந்திரம்.

இந்தியாவில் ஏகபட்ட செலவுகள் இருக்கும்போது, ராக்கெட்டும் அந்நிய நாட்டு நிதிகொடுப்பதும் தேவையா என சிறிதும் சிந்திக்காமல் சொல்லும் நாட்டுபற்றாளர்களை அப்படியே ராக்கெட்டில் வைத்து அனுப்புதல் நலம்

வீட்டில் ஆயிரம் சிக்கல் இருக்கலாம், உணவு கூட பற்றாக்குறையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் கதவு வலுவாக இருக்கவேண்டுமா வேண்டாமா? பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது கதவு போட்டு பூட்டமாட்டோமா? சக்திக்கேற்றபடி பாதுகாப்பு நடவடிக்கை செய்வோம் அல்லவா?

நமது வீடு என்றால் எப்பாடு பட்டாவது காக்கின்றோம் அல்லவா?, அப்படியானால் நாடு என்றாலும் அப்படித்தான்.

இந்த விண்வெளி கட்டுபாடு என்பது இத்தலைமுறைக்கான யுத்த களம், வானில் அனுபவம் இல்லை என்றால் தேசம் நொடியில் சாம்பலாகும், அந்த மகா அவசியமான தேவையினைத்தான் செய்கிறோம், அடுத்த நாட்டிற்கு கொடுக்கும் பணமும் அப்படியே.

மன்மோகன் சிங் செய்தார், மோடி செய்கிறார் இனி அடுத்து வருபவர்களும் செய்வார்கள். இதனை எல்லாம் வீண் என சொல்பவன் நிச்சயம் நாட்டிற்கு சுமை. ராமச்சந்திரன் படம் பார்க்க கூட தகுதியில்லாதவன்.

உலக அரசியல் அப்படியானது, நாமும் உடன்பட்டே ஆகவேண்டும், சில காரியங்களை செய்தே தீரவேண்டும்.

அதில் காங்கிரஸ் அல்லது பிஜேபி எனும் பேதமில்லை. நாட்டிற்கான கடமையினை ஆற்றியே தீருகின்றார்கள், வாழ்த்துக்கள்.

ஒபாமா விவகாரம் அமெரிக்காவில் எதிரொலிக்க, உலகமே ஆவலாய் இருக்கின்றது எதற்கு?

அங்கே டிரம்ப் சும்மாவே அமெரிக்க கவுரவம் உலகில் பாதிக்கபட்டுவிட்டது என சொல்லிகொண்டிருந்தார், நானே அதனை மீட்பேன் என வேறு அறிக்கையிட்டார், இதோ அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.

சும்மாவே ஆடும் சாமி, பீடம் போட்டு மேளம் அடித்து கிடா வெட்டினால் சும்மா இருக்குமா? அதுவும் தேர்தல் நெருங்கும் நேரம் வேறு.

விரைவில் அதிரடி காட்டுவார் பாருங்கள், எப்படி இருக்கும்? ஈரானை நொறுக்கி அதன் பின் சீனாவினை ஒரு கை பார்க்கலாம் எனும் ரீதியில் இருக்கும்.

நமது ஈழ சிங்கம் சைமன் போல‌

யார் இந்த தேவதை.. யார் இந்த தேவதை…???

இப்பொழுதெல்லாம் சிலபேர் முகநூலில் யார் அந்த ஜெயப்பிரதா? என கேட்க தொடங்கிவிட்டார்கள், அவரை அறியாத தமிழ் சினிமா ரசிகர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். இது இந்திய சினிமா துறைக்கே நேர்ந்த அவமானம்.

அவர் ஆணையிட்டால் தமிழகத்தில் பூகம்பம் வெடிக்கும் என சொல்லிகொள்கின்றோம் , நாங்கள் திரண்டால் தமிழகம் தாங்காது.

அவருக்கு இருக்கும் ரசிக கண்மணிகள் அப்படிபட்டவர்கள்.

அவருக்கு நெஞ்சத்தில் கோயில் மட்டுமல்ல அதில் கொடிமரம் தேர் என சகலமும் வைத்து அனுதினமும் திருவிழா கொண்டாடும் கூட்டமிது. எங்களை ஆத்திரபடுத்தி பார்க்கவேண்டாம்.

சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதன் பின் அவர் யார் என‌ கேளுங்கள்.

பார்த்துவிட்டால் எப்படி கேட்பீர்கள்? மீண்டு வர முடியாத முகம் அது, அதன் பின் நீங்களே சங்கத்தில் இணைந்து கொள்வீர்கள்.

உடல் சுட்டு கிடப்பதுதானே காய்ச்சல்?

“திருவள்ளூர் மாவட்டத்தில் பலபேர் உயிரை பறித்துகொண்டுவருவது மர்ம காய்ச்சல், டெங்கு எல்லாம் அல்ல, மாறாக அது உடல்சூடு. அதிகமான உடல் சூடு” : தமிழக அமைச்சர் விளக்கம்

பொற்கால ஆட்சியில் இலவச ஆடு விலையில்லா ஆடு என்றும் , கடும் காய்ச்சல் உடல்சூடு என்றும் அழைக்கபடுகின்றது.

உடல் சுட்டு கிடப்பதுதானே காய்ச்சல்?

ஒருவேளை அவர்களுக்கு காய்ச்சல் வரும்பொழுது உடல் குளிர்ந்து ஜில்லென்று இருக்குமோ?

சட்டசபையில்தான் மகாகவி காளிதாஸ் போல பெரும் காவியங்களை இயற்றுகின்றார்கள், போகட்டும். மிக முக்கியமான பிரச்சினையிலும் இப்படித்தான் பொய்மூட்டை அவிழ்ப்பார்கள் போல.

ஆனானபட்ட சிங்கப்பூரே ஆம், சிகாவில் சிக்கி இருகின்றோம் என வெளிப்படையாக அறிவிதிருக்கும்போது, இந்த சென்னைக்கு என்ன வந்தது?

அது டெங்கியாக இருந்தாலும் சொன்னால்தான் என்ன?

வெள்ளத்தை சென்னையில் மறைக்கமுடிந்ததா? முடியுமா?. அதுபோல நோயினை எப்படி மறைப்பார்கள்? அது என்ன கண்டெய்னரில் கொண்டு செல்லும் பணமா? அல்லது வைகோ முடிக்கும் ராஜதந்திரமா?

100 நாட்கள்தான் முடிந்திருக்கின்றதாம், இன்னும் 1700 நாட்கள் இருக்கின்றது. அதுவரை காய்ச்சல் என்றால் உடல்சூடு, இருமல் என்றால் சிரிப்பால் வந்த இருமல். வாந்தி மயக்கம் என்றால் கர்ப்பகால வாந்தி, வயிறு வீக்கம் அதிகபடியான பிரியாணி உண்டதால் வந்தது என எத்தனை விஷயங்களை பார்க்கபோகின்றோமோ தெரியவில்லை.

(இப்பொழுது பின்ன்னூட்டத்தில் ஒரு அடிமை வம்ச‌ நண்பர் ஒருவர் வந்து அது உடல்சூடுதான் என சத்தியம் செய்வார் பாருங்கள், அவருக்கு எல்லாம் உடலில் சூடு போட்டு “உடல்சூடு” என்றால் என காட்டவேண்டும்)

ஆகாய பந்தலிலே …

Image may contain: night and sky

உலகில் செய்திகளுக்கு பஞ்சம் வரும்பொழுது ஒரு கதை கிளம்பும், எங்கிருந்து கிளம்புமோ தெரியாது, அட்டகாசமாக வரும்.

பூமி அப்படி அழியபோகிறது, ஏதோ மோத போகிறது, சூரியன் சுற்றாமல் நிற்க போகின்றது என பல செய்திகள் பயமுறுத்தும்.

இப்பொழுது ஒரு பெரும் விண்கல் பூமிக்கு அருகில் வருகிறது எனும் செய்தி. அது பூமி தப்புமா? ம்ஹூம் வாய்ப்பே இல்லை எனும் அளவிற்கு சில செய்திகள் வருகின்றன‌.

முன்பு மாயன் காலண்டர், நெப்ரு கிரகம் என பல விஷயங்கள் அப்படியானவை.

பண்டைய காலத்தில் வானியல் அறிவு இன்று இருப்பதை விட மிக மேலாக இருந்திருக்கின்றது, எப்படி என தெரியவில்லை. இந்தியா மட்டுமல்ல சுமேரியா, மாயன்கள் ஆகிய அக்கால வல்லரசுகள் எல்லாம் வானியல் அறிவில் இன்று எட்டாத இடங்களை அசால்ட்டாக எட்டியிருக்கின்றன‌.

பெரும் தொடர்பு எப்படி இருந்தது? எப்படி அறுந்தது என்பது தெரியாது. ஆனால் எல்லா கோள்களும் அவற்றின் அமைப்புக்களும் அழகாக தெரிந்திருக்கின்றது.

இந்த விஞ்ஞானம் 60 ஆண்டுகளுக்கு முன்புதான் வானத்தை ஆராய தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு கோளாக ஆராய்ந்தது 9 கோள்கள் என்றது. சனி கிரகம் கறுப்பு என்றது. செவ்வாய் சிகப்பு என்றது. வியாழன் பெரிது என்றது. இப்படி புதிதாய் சொன்னதாக சொன்னது.

அதனை வைத்து ஏகபட்ட ஹாலிவுட் படங்கள் வந்தது, பயங்கரமாக எல்லாம் சிந்தித்தார்கள், நாளொரு மாற்றமாக வானத்தை ஆராய்ந்துபார்த்துகொண்டே இருக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் அவர்களின் இன்றைய பெரும் ஆராய்ச்சி வான ஆராய்ச்சி, தேடிகொண்டே இருக்கின்றார்கள், பல விஷயங்களை பார்த்து ஆதாரம் இதோ என சொல்கின்றார்கள், அறிவியல் அல்லவா? ஆதாரம் வேண்டும்.

நமது வானியல் சாஸ்திரங்கள் இவற்றை என்றோ பதிந்து வைத்திருந்தன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. செவ்வாய், சனி கோள்களின் அமைப்புகள் நமது வானியலில் சொல்லபடாததா? எல்லாம் அன்றே தெரிந்திருக்கின்றது, இன்றுள்ள விஞ்ஞானம் அதற்கு சான்று கொடுத்து உறுதிபடுத்துகின்றதே தவிர வேறு அல்ல.

சுமேரிய எகிப்து வானிலை சாஸ்திரிகள், நெப்ரு எனும் ஒரு தறுதலை கிரகம் உண்டு என சொல்லி இருந்தார்கள். அது மற்ற கோள்களை போல ஒழுங்காக சூரியனை சுற்றுவதில்லை, அது மு.க அழகிரியின் கிரகமாக இருக்கலாம். அதன் வட்டம் வேறுமாதிரியானது. அது பூமியில் மோதும் வாய்ப்பு உண்டு என அவர்கள் அன்றே சொல்லி இருந்தார்கள்.

அதனை தேடியமட்டும் கிடைக்கவில்லை.. தொலை தூரத்தில் இருக்கலாம்… அல்லது எங்காவது மோதியிருக்கலாம் என முடிவாயிற்று.

மற்றபடி பூமிக்கு இருக்கும் ஆபத்து விண்கற்கள். கோடான கோடி குறைபிரசவ வானியல் குழந்தைகள் அப்படி உண்டு. அவை அவ்வப்போது சூரிய மண்டலத்தில் வருவதும் உண்டு, சிறியவை பூமிபரப்பில் வந்தால் எரிந்துவிடும். பெரியவை வராது. அப்படி வந்தாலும் எரிந்து மக்கள் இல்லா பகுதிகளில்தான் விழும்.

இந்த பூமியினை, இறைவன் அப்படி கண்காணித்துகொண்டிருக்கின்றான்.

மிக மிக ஆச்சரியமானது அண்டவெளி. அந்தரத்தில் தொங்கும் விஷயங்கள் எல்லாம். ஆனால் எல்லாம் இயங்கிகொண்டிருக்கின்றன. ஒன்றை ஒன்று சுற்றிகொண்டே இருக்கின்றது, சந்திரன் பூமியை, பூமி சூரியனை சூரிய குடும்பம் இன்னொரு பொருளை என சுற்றுகின்றது.

(நாம் ஜெயபிரதாவினை சுற்றுகின்றோம், அவர் எம்பி பதவியினை சுற்றுகின்றார், எம்பி பதவி யாரையோ சுற்றுகின்றது, அப்படி எதனையாவது ஒன்றை நாமும் சுற்றிகொண்டே இருக்கின்றோம்)

ஆனால் மிக சரியான திட்டமிட்ட இயக்கம் அது. அதனைத்தான் ஐன்ஸ்டீன் சொன்னார். கடவுளுக்கு இம்மாபெரும் பிரபஞ்சத்த்னை கட்டியாளும் பொறுப்ப்பு இருக்கின்றது. இந்த இயக்கம் மகா ஆச்சரியமனாது. அந்த அற்புத சக்தி மிக்க கடவுள் ஏன் அற்ப மானிட வாழ்க்கையில் குறுக்கிடவேண்டும்?

அற்புதமான சிந்தனை, அதுதான் ஐன்ஸ்டீன். தமிழக சித்தர்கள் அண்டத்தையும் உடலையும் ஒப்பிட்டு சொன்னார்கள், எப்படி என சரியாக விளக்க யாருமில்லை, பெரும் தத்துவங்கள் ஒளிந்திருக்கலாம்.

நவீன கால விஞ்ஞானம் பெரிதும் வியப்பது, அண்டவெளியில் காணப்படும் அமைதி. அவ்வளவு கோள்கள் இயங்கினாலும் ஒரு சிறு சத்தமும் அங்கே இல்லை. பெரும் விநோதம் அது.

ஒரு தத்துவம் நமக்கே புரியும் அது எல்லைகளை கடந்துவிட்ட மனம் ஒரு ஆழ்ந்த அமைதியினை அனுபவிக்கும். அதுதான் அண்டவெளியில் இருக்கும் பெரும் அமைதி, மகா அமைதி. இன்னும் எவ்வளவு தத்துவம் இருக்கின்றதோ தெரியவில்லை.

ரஷ்ய வானிலை அறிஞன் கூறினான், நான் ஏராளமான விண்கற்களை பார்க்கின்றேன், பூமியினை தொலைத்துவிடுவது போல வரும். ஆனால் ஒரு கட்டத்தில் விலகியே செல்கிறது, வானத்தில் புரிந்துகொள்ளமுடியா மர்மங்களில் அதுவும் ஒன்று

அதாவது இறைவன் படைப்பில் அவை எல்லாம் அவனுக்கு கட்டுபட்டு நிற்கின்றது, ஒன்றின் இயக்கத்தில் இன்னொன்று தலையிடுவதில்லை. ஒன்றின் பணியில் இன்னொன்று குறுக்கே வராது.

வந்திருந்தால் இந்நேரம் இந்த பிரபஞ்சமே இருக்காது, அப்படி வராததால்தான் வானிலை கோள்கள் அமைதியாக இயங்கிகொண்டிருக்கின்றன.

அவை என அவை? எல்லா கடவுளின் படைப்புக்களும் அப்படியே. கடலுக்கு தன் எல்லை தெரிகின்றது, ஆறுக்கு பாதை தெரிகின்றது. அவற்றின் எல்லையினை அவை தாண்டுவதில்லை

மனிதன் மட்டுமே வித்தியாசமான படைப்பு, அடுத்தவன் வழியில் குறுக்கிடுவது வம்புக்கு அழைப்ப்பது, தான் மட்டுமே எல்லாம், நானே எல்லோம் என யாருடனாவது ஒரு மோதலை நிகழ்த்திகொண்டே இருப்பது எனும் குணம் அவனுடையது.

அறிவில்லா விஷயங்கள் கூட ஆண்டவன் இட்ட கட்டளைபடி அடங்கி நடக்கும்பொழுது, அறிவுள்ள மனிதன் அடங்காமல் அடுத்தவன் வழியில் குறுகிட்டு இவ்வுலகத்தை யுத்த பூமியாக வைத்திருப்பது விசித்திரம், இந்த பூமி அவனால்தான் மனிதன் வாழ லாயகற்ற கிரகமாக மாறுமே ஒழிய, வேறு எதனாலும் அல்ல‌

வானத்து கற்களோ, கோள்களோ இப்பூமியினில் மோதபோவது இல்லை, காரணம் அவை இறைவன் இட்ட எல்லையினை கொஞ்சமும் மீறபோவதில்லை. தன் இயக்கத்தையும் நிறுத்தபோவதில்லை.

அதனதன் வழி அதனதற்கு.

மனிதனும் அவைகளை போல இயங்கினால் இவ்வுலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சிலைகளால் பெருமையும் சர்ச்சையும்…

என்ன தமிழகமோ தெரியவில்லை, சிலைகளால் பெருமையும் அதே சிலைகளால் சர்ச்சையும் கொண்ட மாநிலம் இது.

அற்புதமான பண்டைய சாமி சிலைகள் சேதமுற்று கிடக்கும் அல்லது களவாடபட்டு வெளிநாடுகளில் விற்கபடும். அதனை பற்றி எந்த தமிழனும் கவலைபட மாட்டான்.

உங்கள் பழங்கால சிலைகள் கடத்தபட்டு எங்கள் நாட்டிற்கு வந்திருக்கின்றன, உரிய ஆதாரம் காட்டி வாங்கிகொள்ளுங்கள் என வெளிநாடுகள் கதறினாலும் தமிழன் கண்டுகொள்ளமாட்டான்.

அவை எல்லாம் பழம் மன்னர்கள் செய்தவை அல்லவா? எப்படியும் போகட்டும்

ஆனால் காமராஜர், ராமசந்திரன், பசும்பொன் தேவர், அம்பேத்கர், தீரன் சின்னமலை, பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம் போன்றவர்களின் சிலையினில் கை வைக்கமுடியாத தமிழகம் இது.

விசித்திரமாக இச்சிலைகள் ஒரு பைசா கூட தேறாதவை, கலை நயமும் இல்லாதவை. ஆனால் கை வைக்க முடியுமா?

வைத்தால் தெரியும் சேதி, அது கலைநயம் எல்லாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாக்கு வங்கி அதுதான். தொட முடியாது, எந்த அரசு தொடும்?

அதே நேரத்தில் தமிழர் அடையாளமான கண்ணகி, வள்ளுவன் சிலைகளை என்னவும் செய்யலாம், யாரும் கேட்கமாட்டார்கள்.

வள்ளுவன் கண்ணகிக்கு 1950களில் வோட்டுவங்கி இருந்திருக்கலாம், இப்பொழுது அப்படியா? போகட்டும் என விட்டுவிடுகின்றது தமிழகம்.

இதுதான் தமிழகம், தமிழுக்காகவும் தமிழருக்காகவும் பாடுபட்ட தமிழின போராளிகள், காவலர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தமிழகம்.

தமிழர் தமிழ், எங்கும் குறள் எதிலும் வள்ளுவன் என அண்ணா என்பவர் சொன்னவர் வழி வந்த கட்சிகள் ஆளும் தமிழகம். இன்று கூட ஆளும் கட்சி அவர் பெயரிதால் இருக்கின்றது.

தமிழர் அடையாளங்களை மறந்து சாதி அரசியலில் சிக்கி இருக்கும் தமிழகம், கடந்த 50 வருடங்களில் தமிழகத்தில் வளர்ந்திருக்கும் “புரட்சி”, “தமிழக புரட்சி”,”இனமான எழுச்சி”

அப்படி கண்ணகிக்கு அடுத்து வள்ளுவனுக்கு தமிழகத்தில் சோதனையான காலம் அடுத்தது யார்?

ஒள‌வையாராக இருக்குமோ?