உலகெல்லாம் பறக்கும் தட்டு மர்மம்

fb_img_1473175433655

எசக்கியல் கண்ட பைபிள் இப்படித்தான் இருக்கும் என்கின்ற மாதிரி படம் இது

உலகெல்லாம் பறக்கும் தட்டு மர்மம் பழையபடி ஆட்டிவைக்க ஆரம்பித்துவிட்டது, பேஸ்புக் மேம்பாட்டிற்க்காக அனுப்பபட்ட ராக்கெட் வெடிக்கும் முன் அதன் அருகே மர்ம பொருள் பறந்தது என்கிறார்கள்

ஒரு அமெரிக்க நடிகை வானத்தில் பறக்கும் தட்டை படம் பிடித்திருக்கின்றாள், முன்னதாக இரட்டை கோபுரம் தகர்க்கபட்டபோது அதனருகே ஒரு பறக்கும் தட்டு காணபட்டதாக ஒரு சர்ச்சையும் வந்தது.

1950 களுக்கு பின் அதனை பற்றி பலவாறு கட்டு கதைகள், சில உண்மைகள் என ஏராள சர்ச்சைகள்

இந்திய புராணங்களை திருடி ஹிட்லர் செய்தவை அவை எனவும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அவன் நுட்பத்தை திருடி செய்துகொண்ட நவீன விமானம் எனவும் ஒரு கருத்து

இல்லை அவர்கள் வேற்றுகிரக வாசிகள் இங்கு வந்து செல்பவர்கள் எனவும் ஒரு கருத்து

அல்ல அவர்கள் நமது வருங்கால சந்ததிகள் ஐன்ஸ்டீம் கூற்றுபடி காலத்தை மீறி பயணம் செய்து நம்மை பார்க்க வருகின்றார்கள் என இன்னொரு கோணம்,

இல்லை அவர்கள் பெரும் அறிவு கொண்டவர்கள், ஏதோ அண்டவெளியில் தேடுகின்றார்கள், நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தினை பார்த்து சிரிக்கின்றார்கள், அவ்வளவுதான். விமானம் ஓட்டுபவன் மாட்டுவண்டி பார்த்து சிரிக்கமாட்டானா? அப்படி என்கிறது ஒரு ஆய்வு.

எப்படியோ பல ஹேஸ்யங்கள்,பல அனுமானங்கள்

ஆனால் அமெரிக்காவின் ரோஸ்வெல்ட் 1950ல் பகுதியில் ஒரு பறக்கும் தட்டு கைபற்றபற்றபட்டதாகவும், அவர்களின் நுட்பங்களை திருடிய அமெரிக்கா விஞ்ஞானத்தில் சாதிப்பதாகவும் இன்னொரு கூற்று

இப்படி ஆளாளுக்கு பல கருத்துக்களை சொல்ல, தற்போது நாசா மெல்ல சொல்கிறது 1950களில் ஏலியன்ஸ்கள் இப்பக்கம் வந்திருக்கலாம்

இதுதான் இன்றைய ஹாட் டாபிக். ஆக நாசாவிற்கு ஏதோ புகைந்திருக்கின்றது.

இருக்க்டட்டும் ஆனால் பைபிளின் எசக்கியேல் ஆகமம் அழகாக சொல்கிறது, எசக்கியேல் எனும் தீர்க்கதரிசி தன் ஆண்டவனை கண்ட காட்சியினை 1ம் அதிகாரத்தில் விளக்குகின்றார்

”நான் கண்ட காட்சியாவது: இதோ வடக்கிலிருந்து புயல் காற்றெழும்பிற்று@ அப்போது பெரியதொரு மேகத்தையும், அதன் நடுவில் நெருப்பினுள்ளிருந்து துலங்கி மின்னிய ஒரு வகை வெண்கலத்தின் உருவத்தையும் கண்டேன்.
அவற்றின் கால்கள் நேரானவை@ உள்ளங்கால்கள் கன்றுக் குட்டியின் உள்ளங்கால்களைப் போல் இருந்தன@ அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல மின்னின.”

”அவற்றின் நான்கு பக்கங்களிலும் இறக்கைகளின் கீழ் மனித கைகள் இருந்தன. மிருகங்களுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.”

அவை நடக்கும்போது அவற்றின் இறக்கைகளால் ஏற்பட்ட ஒலியைக் கேட்டால், பெருக்கெடுத்து ஒடிவரும் தண்ணீரின் இரைச்சல் போலும், எல்லாம் வல்லவரின் குரலொலி போலும், திரண்டு செல்லும் சேனைகளின் ஆரவாரம் போலும் இருக்கும்@ அவை நிற்கும் போது தங்கள் இறக்கைகளைத் தாழ்த்தி விடும்

அவை நான்கிற்கும் முன் பக்கத்தில் மனித முகமும், வலப்புறத்தில் சிங்க முகமும், இடப்புறத்தில் எருது முகமும், பின் பக்கத்தில் கழுகு முகமும் இருந்தன

அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, இறக்கைகள் உயர்ந்து விரிந்திருந்தன. அவை ஒவ்வொன்றின் இறக்கைகள் நான்கில் இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன, மற்ற இரண்டும் அவற்றின் உடலை மூடிக்கொண்டிருந்தன.

அவை ஒவ்வொன்றும் நேர்த்திசையிலேயே நடந்தன. எங்கே போகவேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்@ போகும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா

நான் அம் மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை ஒவ்வொன்றின் அருகிலும் பூமியில் ஒரு சக்கரம் தென்பட்டது@ அவற்றுக்கும் நன்னான்கு முகங்கள் இருந்தன.”

”சக்கரங்களின் உருவமும் அவற்றின் வேலைப்பாடும் கடல் நீரைப் போல நீல வண்ணமாய் இருந்தன@ அவை நான்கும் ஒரே வடிவமுள்ளவையாய்க் காணப்பட்டன. சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றின. இவ்வாறு அவற்றின் அமைப்பும் வேலைப்பாடும் இருந்தன.”

”மிருகங்கள் போகையில் சக்கரங்களும் போயின. அவை நிற்கையில் இவையும் நின்றன@ அவை பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் அவற்றோடு மேலே எழுந்தன@ ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.

இது நிச்சயமாக பறக்கும் தட்டு என்கின்றார்கள், சிலர் நவீன விமானங்களின் டேக் ஆப் ஆகும் காட்சி என்கின்றார்கள்

ஆக ஆண்டவனே பறக்கும் தட்டில்தான் வந்திருக்கின்றார்

அந்த எசக்கியேல் ஒரு யூதன். ஏதோ ஒரு வேற்றுகிரகவாசி யூதர்களுக்கு தனி அறிவினை கொடுத்திருக்கின்றான், அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்கள் சாதிக்கின்றனர், அவர்கள் கடவுள் ஒரு ஏலியன்ஸ் என செல்கிறது ஆராய்சி

தெரியாது, ஆனால் நமது புராண கடவுள் எல்லாம் சட்டென்று வரும், அது மயிலிலோ பாம்பிலோ காளைமாட்டிலோதான் வரும், சக்கரம் இருக்கும் வண்டியில் கூட வராது

அதனால்தான் பசுமாடு, மயில் என்றால் இந்தியாவில் இன்றும் சர்ச்சை, அன்று வெள்ளையன் பெருசாளியினை கொன்றதும் சர்ச்சை ஆயிற்று

இப்படி அன்றே பறக்கும் தட்டில் விஞ்ஞான முறையில் வந்த கடவுளை வழிபடும் யூதன் எப்படி இருப்பான், அப்படித்தான் இருப்பான் இருக்கட்டும், அவன் விதி அப்படி.

இன்றும் அவனே நம்பர் 1 விஞ்ஞானி

உலகெல்லாம் பறக்கும் தட்டு வருகிறது என்கின்றார்கள், அதில் வருபவர்கள் அதி புத்திசாலி கடும் அறிவாளிகள் என்கின்றார்கள்

இலங்கையில் கூட அது வந்ததாக சர்ச்சை உண்டு “நட்சத்திர குள்ளர்கள்” என ஈழ தமிழில் அவர்களுக்கு அடைமொழியும் உண்டு, தமிழகத்தில் அப்படி பறக்கும் தட்டு வந்ததாக சர்ச்சை இல்லை

ஆனால் ஒன்று ரகசியமாக வந்திருக்கின்றது, 93 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் பகுதியில் வந்திருக்கின்றது, அது ஒரு ஆண் குழந்தையினை தவறவிட்டு சென்றிருக்கின்றது

முத்துவேலர் என்பவர் ஆண்குழந்தை இல்லாததால் அதனை தூக்கி வளர்த்திருக்கின்றார்

அது அறிவில் கூடிய இனம் அல்லவா? தமிழை அழகுற கற்றிருக்கின்றது, டெல்லி பக்கம் விழுந்திருக்குமானால் அது எல்லா மொழிகளையும் கற்று இந்தியாவினை ஆண்டிருக்கும்

ஆனால் அதன் தந்தைக்கு தமிழ் மட்டும் தெரிந்ததால் மிக அழகாக கசடற கற்றிருக்கின்றது, அந்த விபரீத தமிழறிவில் அது தமிழினத்தையே கட்டி ஆண்டிருக்கின்றது.

மானிட சிக்கல், மன சிக்கல், உடல் சிக்கல் என எதுவுமே அதனை அண்ட முடியவில்லை. எல்லா அரசியல், வாழ்வியல் சிக்கலையும் அது அசால்ட்டாக கடந்து சென்று புன்னகைக்கின்றது,

மனிதனால் இது சாத்தியமே இல்லை. மனிதனை பாதிக்கும் எதுவும் அவரை பாதிப்பதே இல்லை

இன்றும் 93 வயதில் மகா அழகாக நினைவுதிறன் கூட மங்காமல், எல்லா தகவலையும் விரல் நுனியில் வைத்து அட்டகாசமாய் புன்னகைக்கின்றது.

நிச்சமயமாக அவர் ஏலியன்ஸ்தான், மனித இனத்தில் இப்படி ஒருவர் இனி சாத்தியமே இல்லை

அங்கே இரட்டை இலை, இங்கே இரட்டை நிலை

கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் என்ன வித்தியாசம்: கருணாநிதி கடும் குற்றசாட்டு

ஒன்றுமே இல்லை, அவன் தேசிய உணர்வில் இருக்கும் மாநிலம் , தேசிய கட்சிகள் ஆட்சி அப்படித்தான் இருப்பான்.

தமிழகம் திராவிட உணர்வில் ஊறி தேசிய கட்சிகளை ஏதோ ஐ.நா சபை தூதர்களை போல அணுகும் மாநிலம், அப்படி ஆக்கி வைத்தது சாட்சாத் இவர்தான், அதனால் தமிழகம் இப்படித்தான் இருக்கும்

என்னமோ இவர் ஆட்சியில் தஞ்சையில் முப்போகம் விளைந்தது போலவும், கல்லணையே இவர் கட்டியது போலவும் பேசுவார்.

ஜெயா காத்த அமைதியினைத்தான் அன்று இவரும் காத்தார், ஜெயா எழுதிய கடிதங்களைத்தான் இவரும் எழுதினார். கூடுதலாக 15 வருடம் மத்திய அரசில் அட்டைபோல் ஒட்டிகொண்டும் இருந்தார்

ஆக குற்ற தராசு முள் இவர் பக்கமே அதிகம் சாயும், இதே கலைஞர் ஆட்சியிலிருந்து நீர் வரவில்லை என யாராவது கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா?

“அங்கு வாழும் தமிழர் நலன் முக்கியம் (மகள் செல்வி நலம்), பேசி முடிவெடுக்கலாம், நான் என்ன அணையில் குதிக்கவா முடியும்? பொறுமை காப்பீர், ஏற்கனவே டெல்லிக்கு கடிதம் எழுதியாகிவிட்டது”

அவர் அப்படித்தான் பதவியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்கட்சி என்றால் இன்னொரு நிலை, இரட்டை நிலை

அங்கே இரட்டை இலை, இங்கே இரட்டை நிலை. வாழ்க தமிழ்நாடு


சீனாவினை அமெரிக்கர்கள் கண்டிக்க தொடங்கிவிட்டனர், சீனாவிலே சீன கடல் ஆதிக்கத்தை அமெரிக்க அதிபர் சாடியுள்ளார்.

சீனா எப்படி பதிலடி கொடுத்திருக்கின்றது?

கலைஞரை சாடினால் துரைமுருகன் பதிலளிப்பார், சர்ச்சையான கருத்துக்களுக்கு வீரமணி பதிலளிப்பார் இது கலைஞர் ஸ்டைல்.

அதே அங்கு எப்படி நடக்கின்றது? அதே தான் வடகொரியா ஏவுகனை சோதனை மிரட்டல் , இன்று நடந்திருக்கின்றது 🙂

இதுவும் ஒரு வகை அரசியல்

ரஜினி அரசியல், நதிநீர் இணைப்பு என்றாலே புளிக்கின்றது…

அப்துல்கலாம் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ், இவருக்கு இருப்பது நாட்டுபற்றா அல்லது அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் ஆசையா? என்பது வெகுநாள் குழப்பமாக இருந்தது. இப்பொழுது முடிவெடுத்துவிடலாம், அவரிடம் இருப்பது அரசியல் ஆசை. நேரடி ஆசை அல்ல எம்ஜிஆரை இயக்கிய ஆர்.எம் வீரப்பனை போல மறைமுக ஆசை

அவர் கலாமிற்கு தூபம் போட்டு பார்த்தார், அது கிடா கேட்கும் சாமி என்றால் ஆடியிருக்கும், ஆனால் கலாம் இந்திய சித்தர் அல்லவா? சிரித்துகொண்டே நழுவி விட்டார். இறுதிவரை பிடிகொடுக்கவில்லை

அடுத்து கலாமின் புகழினை கொண்டு கட்சி ஆரம்பிக்கலாம் என்ற யோசனையினை வைத்திருந்த பொன்ராஜ், சீமானின் நிலைகண்டு அதனை கூவத்தில் வீசிவிட்டார்

இம்முறை அன்னாரிடம் சிக்கி இருப்பவர் கொஞ்சநாளாக ஒரு மாதிரி அலையும் ரஜினிகாந்த்

பொன்ராஜ் ரஜினியினை சந்தித்தாராம், 4 மணி நேரம் பேசினார்களாம். ரஜினி அரசியலுக்கு வரும் அவசியத்தை அவர் விவரித்தாராம், உடனே ரஜினி மன்றங்களை புதுப்பிக்கின்றாராம், இனி மோடியினை சந்தித்து நதிகளை இணையுங்கள் என்பாராம், அரசியலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருவாராம்

இதில் இன்னொரு செய்தியும் கசிகின்றது, கபாலி படத்தில் ரஜினி நடித்ததில் தலித் மக்கள் எல்லோரும் அவர் பின்னால் வந்துவிட்டார்களாம். இன்னும் 2 படம் அப்படி நடித்தால் தலித் வாக்குகளினாலே அன்னார் முதல்வர் ஆகிவிடுவாராம் இப்படியும் ஒரு மன்ற நிர்வாகி சொல்லிகொண்டிருக்கின்றார்

ரஜினியினை பற்றி நமக்கு ஓரளவு தெரியும் என்பதால், எம்மாதிரியான கட்டங்களில் எம்மாதிரி எல்லாம் நழுவுவார் என்பதால் இப்படி சொல்லலாம்

பொன்ராஜிற்கு சில திட்டங்கள் இருக்கலாம், ஆனால் ரஜினி அவரை எப்படி பயன்படுத்திகொண்டிருக்கின்றார் என்பதுதான் பார்க்கவேண்டியது

காவேரி சிக்கலுக்கு கன்னட அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு பணியா வேளையில், தமிழக பிரபலங்கள் எல்லாம் எட்டு கட்டையில் கத்தும் வேளையில் இவர் ஏதாவது சொல்லவேண்டும், அதற்காக கசிய விட்ட கதை மோடியினை பார்ப்பேன் நதிகளை இணைப்பேன் என்பது

ஏன் இதற்கு முன்பு அவர் மோடியினை பார்த்ததே இல்லையா? பிரச்சாரத்தின் பொழுது ரஜினி வீட்டிற்கு வந்தது மோடி டூப்பா?

தலித் வேடத்தில் நடித்து அரசியலுக்கு அடித்தளமிடுவது தற்கொலைக்கு சமம் என அவருக்கு தெரியாததல்ல, காரணம் ரஜினியின் முதல் பிள்ஸ்பாயிண்டே அவர் தமிழக சாதி இல்லை. அப்படி இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு

தலித் வேடத்தில் நடித்தால், தொடர்ந்து தேவர், நாடார், செட்டி , மீணவர் என குறவர் சாதிவரை அவர் நடித்தாக வேண்டும் அதுதான் யதார்த்தம், இது ரஜினிக்கு தெரியும், சிக்க மாட்டார். அப்படி சிக்கினால் அவர் ஏமார்ந்துவிட்டார் என்றே பொருள்.

அவர் அரசியலுக்கு வருகின்றார் எனும் விளையாட்டு எம்ஜிஆர் காலம் வரை இல்லை. அப்படி பேச்சு வந்தாலே “என்ன சத்தெம்..” என குரல் வரும். இந்த ரஜினி அரசியல் அழிச்சாட்டியம் வந்தது 1993க்கு பின், தொடங்கி வைத்தவர் எம்ஜிஆரை இயக்கிய அதே ஆர்.எம் வீரப்பன்

அதன் பின் ரஜினிக்கு அரசியல் சூது தெரிந்தது,

ஆனால் மூப்பனாரை மட்டும் நம்பி சில மூவ்களில் இறங்கி பார்த்தார்.

மூப்பனாரை எளிதில் குறை சொல்லிவிடமுடியாது. அரசியலுக்கு வந்து சம்பாதித்தவர்கள் மத்தியில் அவர் பெரும் பண்ணையாராகத்தான் அரசியலுக்கே வந்தார். ஒரு எதிர்பார்ப்பு அவர்மேல் இருந்தது உண்மை.

ஆனால் அவரையே ஒரு மாதிரி ஆக்கிவிட்டார்கள் தமிழக அரசியல் மந்திரவாதிகள், எப்படிபட்டவர்கள் இவர்கள்? இந்திரா காந்தியினையே விரட்டியர்களுக்கு மூப்பனார் எவ்வளவு? சமாளிக்க முடியாமல் திணறினார் அவர். பின் பழையபடி காங்கிரசிலே சேர்ந்துவிட்டார்.

ரஜினிக்கு ஏதோ புரிந்து ஹரே பாபா என ஒதுங்கிகொண்டார்.

ஆனால் அதில் அவர் கற்ற வித்தை ஒன்று உண்டு,

இந்த அரசியலுக்கு வருகிறேன் எனும் மாயையினை கொண்டு விளம்பரம் இல்லாமலே படத்தின் எதிர்பார்ப்பினை எகிற செய்யும் வித்தை அது. அப்படித்தான் செய்து கொண்டே இருந்தார்

சில பரபரப்பு சந்திப்புகள், அரசியல் வசன லீக்குகள் என தொடங்கிவிட்டால் பாதிபடம் முடியுது என பொருள், கட்சிகொடி தயாரிக்கிறார் ரஜினி என்றால் முக்கால்வாசி படம் முடிந்துவிட்டது என பொருள். விரைவில் ரஜினி முக்கிய அரசியல் என செய்தி வந்தால் படம் வெளிவரபோகிறது என பொருள், அவ்வளவுதான் படம் முடிந்தவுடன் இமயமலையில் மல்லாக்க கிடப்பார்.

காவேரி பிரச்சினை வெடிக்கின்றது, பொன்ராஜ் மூலம் ரஜினி நதிகளை தேசிய மயமாக்க மோடியிடம் கோரிக்கை என செய்தி கசிகின்றது

ரோபோ 2 படம் வெளிவரபோகின்றது, அவரின் அரசியல் அறிவிப்பு கசிகின்றது,.

அன்று சத்யா மூவிஸ் ஆர்.எம் வீரப்பன், இன்று கலாம் புரடக்ஷன் பொன்ராஜ்

இவ்வளவுதான் விஷயம் வேறு ஒன்றுமில்லை.

கபாலி 50ம் நாள் விழா அழிச்சாட்டியம் ஏதாவது கேள்விபட்டீர்களா? ஏதும் கொண்டாட்டம் என பத்திரிகையில் வந்ததா? வழக்கமான ரஜினி படம் 25ம் நாள் 50ம் நாள் 100 நாள் என எப்படி குழந்தை போல கொண்டாடபடும்

இங்கே பாட்டி செத்து மறுநாள் காரியம் என்பது போல எல்லாம் முடித்துவிட்டு சமாளிப்பதற்கு ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றாகள். இதற்கு மேலும் தலித் மக்கள் தமிழகத்தில் இருப்பது ரஜினிக்கு 3 மாதம் முன்னர்தான் தெரிந்தது, அதற்கு முன்பு தெரியவே தெரியாது என நம்புவீர்களாயின் அது உங்கள் விருப்பம்

பல இடங்களில் இவரின் அணுகுமுறையினை பார்த்துவிட்டதால் உங்களுக்கு புளிக்கின்றதோ இல்லையோ, ரஜினி அரசியல், நதிநீர் இணைப்பு என்றாலே, புளிக்கின்றது, எல்லாம் பெரும் தந்திரம்

மொசல் பிடிக்கும் … முகத்தை பார்த்தால் ஒருவேளை தெரியாமல் இருக்கலாம், ஆனால் முதல் பாய்ச்சலிலே தெரியும், அது பல‌ முறை பாய்ந்தும் பிடிக்கவில்லை எனும்பொழுது அது பட்டவர்த்தனமாக தெரியாதா?

மாய திரையுலகத்தில் இருந்தே அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழகம் இன்னும் எதிர்பார்த்தால் அதன் விதியினை என்ன சொல்ல, பின் காவேரி எப்படி தமிழகத்தில் பாயும்?

டாஸ்மாக்தான் பாயும்

கர்நாடகத்தின் வலையில் சிக்கிக் கொண்டோமோ?

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்யும் அழிச்சாட்டியம் உண்டு, அதாவது பாலஸ்தீனத்தை அவர்கள் விழுங்கிகொண்டிருப்பது ஒரு நுட்பமான திட்டம். சண்டைக்காக காத்திருப்பார்கள், வந்ததும் எல்லை தாண்டி 1 கி.மீ ஊடுருவுவார்கள், அதன் பின் பஞ்சாயத்து நடக்கும்

அமெரிக்காவோ, நர்வேயோ சில சமயம் ஜோர்டான் மன்னரோ பேசுவார்கள்

முடிவில் அரை கிலோ மீட்டர் பின்னால் செல்லும் இஸ்ரேல் இனி இதுதான் எல்லை என சொல்லும், பாலஸ்தீனம் அதோ எல்லை அங்கிருக்கின்றது சொன்னால் கேட்காது, யாருக்கும் கேட்காது

இப்படி அரை கிமீ அபகரித்தாகிவிட்டதா?

அடுத்த சண்டை நடக்கும்பொழுது அடுத்த அரை கிமீட்டர் அபகரிப்பு. அடிக்கடி சண்டை நடந்தால் இஸ்ரேலுக்கு கடும் மகிழ்ச்சி. எல்லைகளை பாலஸ்தீன பகுதிக்குள் அட்டகாசமாக விரித்து 4 இஸ்ரேலிய குடியேற்றத்தையும் நிறுவி விடுவார்கள், பஞ்சாயத்து பேச வருபவர்களும், ஆமாம் மக்கள் குடியேறியாகிவிட்டது இனி இது எல்லையாக இருக்கட்டும் என்பார்கள்

பின் அடுத்த யுத்தம் அடுத்த கோடு அடுத்த குடியேற்றம், எப்படியான தந்திரம்?

இப்படியாக மேற்கு கரையினையும், காசாவினையும் குறுக்கி வைத்திருக்கின்றது இஸ்ரேல், நியாயாமான பாலஸ்தீன் அளவு இனி மேப்பில் கூட சாத்தியமில்லை

நேற்று சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு 10 டி எம்சி நீர் கொடுங்கள் என சொல்லும்பொழுது பாலஸ்தீன நிலைதான் நினைவுக்கு வந்தது

நமது நியாமான உரிமை கிட்டதட்ட 350க்கு மேற்பட்ட டிஎம்சி, 1950களில் நமது உரிமை அப்படித்தான் இருந்தது, தேவையும் அதுவே

மழை பொய்த்தாலும் நமக்கு வரவேண்டிய நீர் 100 டிம்சிக்கு மேல் என்பது அடிப்படை உரிமை.

ஆனால் இன்று 10 டிஎம்சி எனும் அளவில் சுருக்கிகொண்டுவந்தாயிற்று, இது முன்பு பாண்டிச்சேரிக்கு நாம் கொடுக்கவேண்டிய 7 டிஎம்சி அளவிற்கு வந்துவிட்டது, பெரும் கொடுமை இது.

சொத்தில் உரிமையினை கேட்க உயர்நீதிமன்றத்தில் பேசுபவர்கள், இப்போதைக்கு சோறு போதும் என்றால், அது சினிமா காட்சிக்கு நன்றாக இருக்குமே அன்றி, தொலைநோக்கு பார்வை யதார்த்திற்கு பொருந்தாது.

அப்படித்தான் சுப்ரீம் கோட்டில் தமிழகம் கேட்டிருக்கின்றது, இப்போதைக்கு இதற்காகவாது உத்தரவிடுங்கள் என கோரபட்டு அது கிடைத்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள் .

ஒரு வகையில் கன்னடத்தின் வலையில் சிக்கிகொண்டோமோ என தோன்றுகின்றது.

கிட்டதட்ட 400 டிம்சி நீரினை 10 டிம்சிக்கு கொண்டுவந்தாயிற்று பார்த்தீர்களா? இதில் உள்ள ஆபத்து மகா கொடுமையானது, அதாவது அடுத்தமுறை வழக்கு வரும்பொழுது 10 டிம்சி தண்ணீர் கடந்தமுறை போல கொடுத்தால் போதுமா? என கன்னடம் சொல்லலாம், இந்த ஆதாரத்தை சமர்பிக்கலாம்.

அடுத்து வரும் நீதிபதிகளும் ஆமாம் கடந்த முறை 10டிம்சி அளவு நீர் தேவைகொண்ட விவசாயம் தானே தமிழகத்தில் இருந்திருக்கின்றது, பின்னர் ஏன் 100, 200 என கேட்கின்றீர்கள் என சொல்லலாம்.

நீதிமன்றங்களை பொருத்தவரை முன்பிருந்த நீதிபதிகள் எழுதும் குறிப்புகள் பெரும் ஆதாரமாக கொள்ளபடுபவை.

அக இது ஒரு வகையான ராஜதந்திரம், அளவுகளை சுருக்கிகொண்டே வருவது. கன்னடம் அதில் வெற்றிபெற்றே வருகின்றது.

கிராமங்களிலே பார்த்திருக்கின்றோம், பங்காளி சண்டைகளில் தோட்டத்தில் 4 பங்கு இருந்தால் 4 நாளைக்கு ஒருவனுக்கு நீர் முறை வரும், அது அவன் உரிமை. அதில் ஒருவனுக்கு நீர் கொடுக்காமல் பின் அவன் பயிர் பாதிக்கபட்டபொழுது, சரி 7 நாளைக்கு ஒருமுறை கொஞ்சம் தருவோம் என்பது முறையாகாது

அதனை விசாரிக்கும் கிராமத்து நாட்டாமை, “அதான் பெரிய மனசுபண்ணி தாரேன்னு சொல்றார்ல…வாங்கிக்க” என்பது நல்ல தீர்ப்பா? அவனுக்குள்ள உரிமை அவனுக்கு கொடுக்கவேண்டுமா வேண்டாமா?

ஆக இந்த உலகில் எது எல்லாமோ சுருங்கிகொண்டே வருகின்றது மனித நேயம் போல, பாலஸ்தீனமும் காவேரியில் தமிழக உரிமையும் அந்த வரிசையில் இடம்பெற்றுவிட்டதுதான் சோகம்

இதற்கு அடிப்படை காரணம் என்ன? ஒன்றே ஒன்றுதான்

தமிழகத்தின் கழக ஆட்சிகள் டெல்லிக்கு பயப்படும் பயம் அப்படி, காமராஜர் டெல்லியினை ஆட்டி வைத்தார். பரம்பிகுள்ம் ஆழியாறில் கேரளா ஆட முயன்றபொழுது “இது என்ன வேலைக்காவும்ணேன்..டெல்லிக்கு வா பேசிகிடலாம்ணேண்” என்றபொழுது டெல்லி காமராஜர் பக்கமே நின்றது

பின் காட்சிகள் மாறின‌

கலைஞருக்கு சர்காரியா முதல் இன்று 2ஜி வரை பயம், கூடவே தயாநிதி மாறன் சர்ச்சை, அவராலும் முடியாது. அவரும் 15 வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்தபொழுது இதனை எல்லாம் தீர்க்க நினைக்கவே இல்லை, செய்யவும் மாட்டார்

இந்த முதல்வர் மீதும் டெல்லியில் நடக்கும் வழக்குகள் உண்டு, அவரிடமும் பெரும் எதிர்ப்பினை காணமுடியாது

இவர்களை தாண்டி தமிழகத்தில் ஆட்சிக்கு வருபவர்களும் இல்லை

சுருக்கமாக சொன்னால் தேசிய கட்சியோ அல்லது நல்ல தமிழக‌ தலமையோ வராதவரை இந்நிலை இன்னும் மோசமாகவே செல்லும். தமிழக தலைவிதி இப்பொழுது மாறுவதாகவும் தெரியவில்லை

பெருகும் நீர் தேவையில் பல மாநிலங்கள் இச்சிக்கலுக்கு உள்ளாகின்றன சமீபத்தி பஞ்சாப் ஹரியானா மாநிலங்கள் மோதிகொண்டதும் அப்படியே

இந்திய அரசு ராணுவ தளங்களை போல, அணுமின் நிலையங்களை போல இனி அணைகளையும் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் காலம் வந்தால் இன்னும் நல்லது.

அதுவரை வருணன் உறங்கிவிட்ட காலங்கள் எல்லாம் இந்தியாவில் இப்படி சிக்கலானதே.

அவன் உறங்காமலே இருக்க பிராeர்த்திப்போம். இப்போதைக்கு அதுதான் வழி வேறு என்ன செய்ய? தமிழகம் ஆழ்துயிலில் இருக்கின்றது அதன் கனவில் எம்ஜிஆர் வழிகாட்டலில் ஜெ பொற்கால ஆட்சி புரிகின்றார்,

மந்திரிகள் புலவர்களாக கவிமழை பொழிகின்றார்கள், வாழ்த்து மழை. எங்கு நோக்கினும் பணகட்டுகள், கண்டெய்னர் உட்பட.

அது கலைந்தால் கலைஞர் மகா பொற்கால ஆட்சி புரிகின்றார்,

அதன் தூக்கம் தொடர்கிறது.

வருணனாவது உறங்காமல் இருக்கட்டும்.

எது நடக்க கூடாதோ, அது நன்றாகவே நடந்துவிட்டது…

எது நடக்க கூடாதோ, அது நன்றாகவே நடந்துவிட்டது

ஜெயபிரதா பற்றிய பதிவுகள், பாகம்பிரியாளை ஆத்திரமடைய வைத்துவிட்டது. கோர்ட் தீர்ப்பினை கேட்ட மைசூர் விவசாயிகளை போல, ஓபாவினை கண்ட சீன அதிகாரியினை போல, ராஜபக்சேவினை கண்ட மலேசிய தமிழர்களை போல அப்படி ஒரு ஊழி தாண்டவ நிலைக்கே வந்துவிட்டார்

எப்படி ஜெயபிரதா பற்றி அப்படி … எழுதலாம்? என்ற கேள்வியின் குரலிலே தெரிகிறது எனது முடிவு.

கம்பனே சீதை பற்றித்தானே எழுதினான், காளிதாசன் சாகுந்தலை பற்றித்தானே எழுதினான். அவர்கள் மனையினை பற்றி எழுதவில்லயே என்ற பதிலுக்கெல்லாம் மசிவதாக தெரியவில்லை.

(கம்பன் மனைவியும், காளிதாசன் மனைவியும் அப்படி பொங்கி இருந்தால் அப்படிபட்ட காவியங்கள் கிடைத்திருக்குமா? …)

இனி கம்பனின் பக்கத்தில் அவன் மனைவிக்கும் சிலை வைக்க வேண்டும், மகராசி வாழ்த்துகுரியவள்.

“இன்பத்து பாலை உன்னை நினைத்தே எழுதுகிறேன் வாசுகி..” என ஏமாற்றாமல் வள்ளுவன் அதனை எழுதியிருக்க முடியாது.

இல்லை என்றால் வாசுகி அந்த எழுத்தாணியாலே வள்ளுவன் கண்ணை குத்தியிருக்கும் அபாயம் உண்டு.

உன்னில் கடவுள் கண்ணணையே காண்கிறேன் செல்லம்மா என சொல்லாமல் பாரதியாலும் “நின்னை சரணடைந்தேன்” என பாடியிருக்க முடியாது

நாமும் அப்படி ஏதாவது சொல்லி தொலைத்திருக்கலாம், என்ன செய்ய விதி முந்திகொண்டது.

இனி என்ன செய்வது? ஓரளவு யூகிக்க முடிகின்றது. என்ன நடக்கும்? அதேதான் அருமை பாகம் பிரியாள், இனி என் உடல் பாகங்களை பிரித்தேவிடுவாள்

உடல் உறுப்பு தானத்திற்கு இப்பொழுதே எழுதிவைத்துவிட வேண்டியதுதான், அதிலும் கண்தானம் அவசியமானது.

நாம் இல்லாவிட்டாலும், நம் கண்ணாவது.. …. புரிந்தவர்கள் புரிந்துகொள்ள்ளுங்கள் 🙂

எல்லாம் நிறைவேறிற்று, ஜெயபிரதா பெயராலே.. ஆமென்