காவேரி பாய்கிறது.. பிரச்சினை பற்றி எரிகின்றது…

 காவேரி பிரச்சினை பற்றிய 3 பதிவுகள் …

  1. காவேரி பிரச்சினை பற்றி எரிகின்றது
  2. கர்நாடகாவில் பதற்றம்
  3. அங்கிள் சைமன் சத்தமே இல்லை

காவேரி பிரச்சினை பற்றி எரிகின்றது, இரு மாநில நிம்மதி போயிற்று மிகுந்த எச்சரிக்கையுடன் மாநிலங்கள் அணுகிகொண்டிருக்கின்றன,தமிழகத்தில் டெல்டா மாவட்டம் மட்டும் பொங்கிகொண்டிருக்கின்றது, தமிழகம் அப்படித்தான்.

காவேரி டெல்டா பிரச்சினை, சிறுவாணி கோவை பிரச்சினை, ஜல்லிகட்டு மதுரை பிரச்சினை, கூடங்குள அணுவுலை இடிந்தகரை பிரச்சினை, நமக்கென்ன என இருந்துவிடுவார்கள், இருக்கட்டும்

அது காவேரி பகுதி விவசாயிகளின் பிரச்சினை என்பது நிஜம், துடித்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மற்ற பகுதி விவசாயிகள் எல்லாம் நீரில் மிதப்பது போலவும், காவேரிபகுதி மட்டும் காய்ந்து கிடப்பது போலவும் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

தமிழனின் விவசாயம் எப்படி இருந்தது?

அவனுக்கு ஆற்றில் நீர் வந்துகொண்டே இருக்கவேண்டும், அவன் அதில் சிறிய கால்வெட்டி வயலுக்கு கொண்டுவருவான். அது பாய்ந்துகொண்டே இருக்கவேண்டும், பயிர்கள் செழிக்கும், பறவைவரும், காட்சிகள் களைகட்டும்

ஒரு புலவன் இதனை பாடிகொண்டு வேறு இருப்பான், கொஞ்சம் சிந்தித்து நீரை திருப்பியவன் கரிகாலன். இன்னும் சிலர் ஓரளவு பரவாயில்லை நெல்லை நதிக்கரை உட்பட‌

மற்றபடி பெருவாரியான விளைநிலங்கள் புன்செய் பயிர்களே, அவைகளும் பிராதன உணவு மனிதனுக்கும் குதிரை போன்ற விலங்குகளுக்கும்.

இப்படித்தான் இருந்தது தமிழக நிலை.

ஆனால் நாயக்கமன்னர்கள் மன்னர்கள் வந்த பின்புதான் வறண்ட பகுதியில் குளம்வெட்டினார்கள், நெல்வயல்களை உருவாக்கினார்கள், பல தமிழக வறண்ட தமிழக பகுதிகளில் விவசாயம் உருவானது அப்படியே

ஆனால் வெள்ளையன் ஆட்சி வந்ததும் அது பொலிவிழந்தது, கிணறுவெட்டி போராட கிளம்பியது அப்பகுதி

போர்வெல் இல்லா காலமது 30 அடிக்குள் நீர் வந்துவிடும், அப்படி சில காலம் கழிந்தது, அதன் பின் சுதந்திரம் வந்தது

தமிழக வறண்ட‌ நிலை பகுதிகள் இன்னும் மோசம், கிணறுகள் 10 அடி 100 அடி 150 அடி என சென்றன, பின் போர்வெல் முறை வந்ததும் இன்று சாதரனமாக 800 அடிபாய்கின்றார்கள்

அவர்கள் எத்தனை போர்வெல்லும் அமைக்கலாம், எத்தனை கிணறும் வெட்டலாம் ஆனால் நீர் அதே நீர்தானே? எப்படி ஊறும்?

போராட வழியினின்றி வறண்ட கிராமங்கள் பல அழிந்தே விட்டன, காரணம் மழை செழிப்பது 5 வருடத்திற்கொருமுறை, அதுவும் குளங்கள் பரமாரிப்பின்றி கிடப்பதால் ஒன்றும் நிற்பதில்லை

ஆக வறண்ட பகுதிகளில் போர்வெல் கம்பெனிக்கும், மோட்டார் பைப் கடைகளுக்கும் சொத்தை எல்லாம் விட்டுவிட்டு கிளம்பிய குடும்பங்கள் ஏராளம்

அவர்களும் விவசாயிகள்தான், அவர்களும் அலறி துடித்து தவித்து வாழமுடியாமல் கதறிய விவசாயிகள்தான், அவர்களை கண்டுகொள்ள யாருண்டு?

முல்லை பெரியாறாலும், காவேரியாலும், தாமிரபரணியாலும் , வைகையாலும் வாழ்பவன் தான் தமிழன் என்றால் மீதி தமிழன் எல்லாம் பாதிக்கபடுபவன் இல்லையா?

கூர்ந்து கவனியுங்கள், ஆந்திரா மட்டும் 285 டிஎம்சி நீரினை தேக்கி வைக்கும் அளவிற்கு குளங்களை வைத்திருக்கின்றது என்கின்றார்கள்

அதாவது அந்நாளைய குளங்களை அப்படியே பராமரித்து வைத்திருக்கின்றார்கள், தொடர்கின்றார்கள்.

விஸ்வேஸ்வரையா கொடுத்த திட்டத்தில் கன்னடமும் அப்படியே செய்துகொண்டது

நீங்கள் கவனிப்பீர்களோ இல்லையோ, ஒரு குழு அல்லது கமிட்டி கன்னட அணைகளை பார்வையிட வரட்டும், என்ன செய்வார்கள் தெரியுமா?

அணையின் நீரினை குளங்களுக்கும் ஏரிகளுக்கும் திருப்பிவிட்டுவிட்டு அணையின் குறைந்த நீர்மட்டம் காட்டி கண்களை துடைத்டுகொள்வார்கள், குழுவும் தலையினை பிய்த்து செல்லும்

அதாவது அந்த நீரை சேர்த்து வைக்கும் அளவிற்கு குளங்கள் உண்டு, ஆனால் நமது நிலை என்ன?

எல்லா நீர்நிலைகளையும் இழந்துவிட்டோம், சென்னை வெள்ளமே சாட்சி, அந்த வெள்ளத்தால் அது பட்டவர்த்தனாக தெரிகின்றது

ஆனால் மற்ற கிராமபுற குளங்களின் நிலை தெரிவதில்லை. கிராமங்களில் குளங்கள் வீட்டு அருகாமையில் இருக்காது சற்று தள்ளியே அமைந்திருக்கும், அதுவும் வட்டமான குளம் அல்ல, பிறை நிலா அமைப்புள்ள குளங்கள் அதிகம்

பிறைபகுதியில் வரப்பு இருபதால் விட்டுவைத்திருக்கின்றார்கள், மற்றபடி பெரும் அபகரிப்பு, எல்லாம் கம்பிவேலியாக தெரிகின்றது. இதற்கிடையில் பெருகியிருக்கும் முள்மரங்களால் இன்னும் மோசம்

அந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ள யாருமில்லை.

அந்நாளைய தமிழகத்து நாயக்கர் கால குளங்களை மட்டும் அப்படியே பழுது பார்த்து தொடர்ந்திருந்தால் நிச்சயம் ஆந்திரா போல தமிழகத்திலும் 400 டிஎம்சி நீர் அழகாக தேக்கலாம்.

ஏன் செய்யவில்லை

ஆந்திரர்கள் நீருக்கு அன்றே அலைந்தவர்கள், அங்கும் வறண்ட பகுதிகள் உண்டு, மழை என்றால் அவர்களுக்கு அவ்வளவு அபூர்வம். இன்றும் பாருங்கள் தெலுங்கு படங்களில் மழை சீன் இல்லாமல் வராது, வந்தால் மனம் மகிழ்வார்கள், அவர்கள் மனப்பான்மை அப்படி

தமிழகம் எப்படி?

முன்பு சொன்னதுதான் தமிழக மனப்பான்மை அப்படி, நீர் வந்து கொண்டே இருக்கவேண்டும், இவன் எழுந்து மடை மட்டும் திறக்கவேண்டும், அதில் விளையவேண்டும் புலவன் பாடவேண்டும்,

அது இன்னும் ஆர்வமாகி நன்றாக பாடு, திரையில் பாடு நாங்கள் ரசிக்கின்றோம் என அமர்ந்துவிட்டது தமிழகம்

அந்த புலவர்கள் வசனம் எழுதினார்கள், பாடல் பாடினார்கள், ஆடினார்கள், தமிழகம் அதில் லயித்து கிடந்தது. அப்படியே பாணர் கூட்டம் ஆட்சியினை கைபற்றியது

தமிழகம் நாசமாக தொடங்கியது

கன்னடம் அப்படி அல்ல, விஸ்வேசரய்யா போட்டுகொடுத்த வழியில் பிசகாமல் நடக்கின்றது. நாமோ காமராஜரை ஓட விரட்டி கொன்றோம்

ஆந்திரா ராமராவிடம் மயங்கினாலும், 10 ஆண்டுகளில் மீண்டுவிட்டது, சந்திரபாபு என்ன சினிமாகாரரா? ஆனால் ராமராவின் பாப்புலாரிட்டியினை அப்படியே மாநில நலனுக்கு திருப்பினார்.

ராமராவ் மனைவி சிவபார்வதி வந்தாளா? அல்லது 20 வருடம் ஆந்திராவினை ஆளத்தான் விட்டார்களா?

அவர்கள் என்றோ திருந்திவிட்டார்கள், நாம் அப்படியே இருக்கின்றோம்

கலைஞர் வாழ்க, புர்ச்சி தலைவர் வாழ்க, புர்ச்சி தலைவி வாழக, இன்னும் ஏராளமான வாழ்த்து இம்சைகள்

ஆனால் மாநிலத்தில் எது வாழ்கின்றது ஒன்றுமே இல்லை என்பதுதான் விசித்திரம்

கல்லணை கட்டிய கரிகாலனும், வைகையினை கடலுக்கே விடாமல் கண்மாய்களால் தடுத்த அக்கால பாண்டிய மன்னர்களும், தாமிரபரணிவாழ் மன்னர்களும், பென்னிகுயிக்கும், காமராஜரும் ஒரு வகை

வறண்ட இடங்களில் குளம் அமைத்து வாழவைத்த நாயக்க மன்னர்களும் அதே வகை

அவர்களை எல்லாம் மறந்துவிட்டு, நன்றி கொன்றுவிட்டு

அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயா வாழ்க என என்று கோஷம் போட கிளம்பினானோ அன்று பிடித்தது சனி

இதில் பிரபாகரன் வாழ்க என வேறு கிளம்பினான் ஒருவன், இப்போது காணவில்லை.

அந்த குற்றமே இன்று கிடைத்திருக்கும் தண்டனை

குற்றமே தண்டனை

(கலைஞர் கட்டிய அணைகள் எல்லாம் அணை வகையறாவிலே வராது, அது எல்லாம் அவர் கொள்கை போலவே ஒன்றுக்கும் லாயக்கற்றவை, ராமச்சந்திரன் கோஷ்டி பற்றி உலகிற்கே தெரியும்)

ஒருநாள் தண்டனை காலம் நிச்சயம் முடியும், முடிந்தபின்னும் நீர் மேலாண்மைக்கு கன்னடனிடமும், தெலுங்கனிடமும்தான் பாடம் படிக்கவேண்டும்.

நல்ல விஷயங்களை யாரிடம் இருந்து படித்தால் என்ன? தவறில்லை

நாயக்கர் கால நீர் மேலாண்மை பாராட்ட தக்கது, அதனால்தான் நாயக்க மன்னர்களை பழித்து சீமான் கிளம்பியபொழுது விமர்சிக்கவேண்டியதாயிற்று

என்னிடம் அந்த திட்டம் இந்த திட்டம் இருக்கின்றது அந்நிய மாநில நீர் உதவி இல்லாமல் நான் கிழித்துவிடுவேன் என பொங்கினார் சீமான், சில இடங்களில் சொன்னார்

அப்பனே அதனைத்தான் 500 வருடத்திற்கு முன்பே தமிழகத்தில் நாயக்கன் செய்திருந்தான், நீர் அதனை செய்தாலும் அது நாயக்க்கர்களின் காப்பியாகத்தான் இருக்கும்.

அது சரி எதுதான் அவரது சொந்த சிந்தனை?


கர்நாடகாவில் பதற்றம், பிரதமர் தலையிட சித்தராமையா கோரிக்கை

அதே கோரிக்கையினைத்தான் நாங்களும் பிரதமருக்கு வைக்கின்றோம், ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனுக்கு நீர் மறுக்கும் விஷயத்தில் இந்திய பிரதமர் தலையிட்டு சுமூக முடிவினை ஏற்படுத்தவேண்டும்

அதே நேரம், ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கும் வாழ உரிமை உண்டு. அதனை மிரட்டும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் கன்னட அமைப்புகளின் கன்னட சீமான் வாட்டாள் நாகராஜ் போன்றோரை கொஞ்சநாளைக்கு வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தீர்ந்தது விஷயம்ம்

தென்னக பொது நதியான காவேரியினை எப்படி கன்னடர்க்கு மட்டும் சொந்தமான நதி என சொல்வது? அப்பட்டமான கொடுமை அல்லவா?

மத்திய அரசு இதற்கு களமிரங்கவேண்டிய நேரம்வந்தே விட்டது, நிச்சமாக கடும் நடவடிக்கை எடுத்தால் தீர்ந்துவிடும் விஷயம்தான்.

ஒரு நல்ல தீர்வினை எட்டவேண்டிய நேரம் இது, பிரதமர் எப்படி கையாள்கிறார் என விரைவில் தெரியும்.

தேசாபிமானிகள், சிந்தனையாளர்கள் நாட்டு நலன் காப்பவர்கள் கூடி நல்ல தொலைநோக்கு பார்வையோடு எடுக்கவேண்டிய முடிவு அது, நிச்சயம் வரும்

இதில் வாட்டாள் நாகராஜையும், சீமானையும் பேசவிட்ட்டால் எப்படி இருக்கும்? இருக்கவேண்டிய இடத்தில் இருந்து தனிமையில் பேசட்டும்.


அங்கிள் சைமன் சத்தமே இல்லை, தமிழனுக்கு ஒன்று என்றால் எங்கிருந்தாலும் யாரையும் விடமாட்டேன் என சவால் எல்லாம் விட்டவர், காவேரி பிரச்சினையில் அன்னார் பிய்த்து எறிவார் என பார்த்தால் ஒன்றுமே இல்லை

50 ஆயிரம்பேர் கொண்ட கமாண்டோ படையினை உருவாக்கி, கிருஷ்ணராஜ சாகர் அணையினை இடிக்க கிளம்பியிருப்பாரோ?

ஒன்றும் புரியவில்லை, அவரின் தமிழர்நலம் கடல்கடந்தது, இந்த ஆறை கடக்காதா?

ஒருவேளை முப்பாட்டன் அல்லது முப்பாட்டி சந்நிதியில் உத்தரவிற்காக காத்திருப்பாரோ?

அவருக்கென்ன லைக்கா மொபைல் கம்பெனி முதலிடம் பிடித்துவிட்டதாம், வேல் முருகனுக்கு எப்படி இருக்குமோ தெரியாது

ஆனால் அங்கிளுக்கு கடும் மகிழ்ச்சி, கத்தி படவிவகாரத்தில் அன்னரின் கனத்த மவுனம் இதற்காகத்தான்

மடியின் கனம் இருப்பவனை பார்த்தால் அவருக்கென்னவோ உடனே மனம் கனத்துவிடுகிறது

காவேரி தமிழனிடம் என்ன இருக்கின்றது? அவன் விதி அப்படி.