இங்கும்.. அங்கும்…

மர்ம மரணம் அடைந்த இராம்குமார் உடலை சீமான் நேரில் பார்வையிடுகிறார்

அங்கிள் அமெரிக்காவில் உடல்கூறியலில் பல டாக்டர் பட்டம் வாங்கிய மாமேதை, பார்வையாலே பிரேத பரிசோதனை செய்து காரணத்தை சொல்லிவிடுவார் என அண்ணனின் விழுதுகள் நம்பிகொண்டிருக்கின்றன‌

அவருக்கு தெரிந்ததே தற்கொலை சயனைடு சாவுகளும், குண்டுகட்டி செத்த சாவுகளும். அதில் இதுவும் இனத்துக்கான தற்கொடை என ஏதும் சொல்லி தொலைக்காமல் இருக்கும் வரை நல்லது.

இவர் பார்த்து என்ன கிழிக்கபோகின்றாராம்? எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு

அங்கிள் அரசியல் ஜாதகம் பிண அரசியல் என எம்பெருமான் எழுதி வைத்திருக்கலாம்


பெங்களூர் கலவரத்திற்கு காரணம் கன்னட பிரகாஷ், விசாரணையில் தகவல்

கன்னட பிரகாஷ் எனும் பெயரினை கேட்டதும் கன்னட பிரசாத்தின் நினைவு வந்து தொலைக்கின்றது, இந்த ஊடகங்கள் அன்று செய்திருக்கும் அழிச்சாட்டியம் அப்படி.

கன்னட பிரசாத், குண்டு நடிகை, கண் நடிகை, ஒல்லி நடிகை அந்த நடிகை என இவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி, அதுவும் கன்னடபிரசாத்தின் காதலி குசும் என்பவருக்கு கொடுக்கபட்ட பில்டப் அடேயப்பா..அப்படி ஒரு ஊடக அட்டகாசம்.

ஒலிம்பிக் மெடல் வென்றவளுக்கு கூட அவ்வளவு பிரபலத்தை நமது ஊடகம் வழங்கி இருக்காது.

கன்னட பிரகாஷ் எனும் பெயரினை ஏதும் தமிழ் ஊடகம் கன்னட பிரசாத் என மட்டும் தவறாக பிரசுரித்துவிட்டால் அவ்வளவுதான்,

கோடம்பாக்க சினிமா ஏரி உடைந்து அவ்வளவு செய்தி வெள்ளம் வரும்


திருமுருகன் காந்தி எனும் தேசதுரோகி பிடித்திருக்கும் பேனரை பாருங்கள், அடுத்த நாட்டு தீவிரவாதி மண்ணாம் இது

Image may contain: 2 people , beard

இதில் இருந்து ஆர்எஸ்எஸ் வெளியேறவேண்டுமாம்.

ஆர்எஸ்எஸ் எப்படிபட்ட இயக்கமாகவும் இருந்து தொலையட்டும், ஆனால் இது புலிகளின் மண் என சொல்ல இவனுக்கு உரிமை கொடுத்தது யார்?

இவராக சிந்தித்துவிட்டார் போல,

ஆர்எஸ்எஸ் எப்படி இருந்தாலும் இந்திய தேசியத்தை காக்கும் இயக்கம் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதில் அன்னிய நாட்டு தீவிரவாதி அதுவும் இந்தியாவினை எதிர்த்த கொலைகார தீவிரவாதி மண் என சொல்ல என்ன உரிமை இருக்கின்றது,

இஸ்லாமிய இந்திய‌ தீவிரவாதி பாகிஸ்தான் தீவிரவாதி படத்தையோ, பின்லேடன் படத்தையோ, ஐ.எஸ் இயக்க படத்தையோ பிடிக்க அனுமதிக்கா அரசு, இந்த அன்னிய நாட்டு தீவிரவாதியின் படத்தை பிடித்து, அதுவும் இது புலிகளின் மண் என சொல்வதை எப்படி அனுமதிக்கின்றது?

இஸ்லாமியனுக்கு ஒரு நியாயம், இவனுக்கொரு நியாயமா?

ஆர்எஸ்எஸ் உறுப்பினராக அல்ல, இந்தியனாக சொல்கிறோம் முதலில் அந்த புலிபடத்தை பிடித்துகொண்டு போ, ஈழம் போ, அங்கே சென்று கத்து.

நாங்கள் சொல்லுகின்றோம்..

This is India .. Get Out LTTE

வந்தே மாதரம்…

(பெரியார் படத்தருகே ஒரு கொடூரனின் படத்தை வைத்ததால் இவன் மனநோயாளியாகவும் இருக்கலாம், ஆனால் அதனை ஒரு மருத்துவர் உறுதிபடுத்தவேண்டும் அல்லவா?)


குட்டையாக குண்டாக‌ இருப்பதாக கூறி 18 வயதில் மாடலிங் செய்யவிடாமல் தடுத்தனர்: சன்னி லியோன்

பயவுள்ள அந்த கோபத்தில்தான் இந்த சமூகத்தை “கண்ட மேனி”க்கு பின்னாளில் பழிவாங்கி இருக்கின்றது


மறுபடியும் பெண் சர்ச்சையில் சிக்கினார் உசேன் போல்ட் : செய்தி

Image may contain: 1 person , outdoor

வில் பிடித்து அம்பு எறிவது போல ஸ்பெஷல் ஸ்டைல் காட்டும்போதே மனிதர் ஏதோ சிம்பாலிக்காக சொல்ல வந்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது

மன்மதனின் கரும்பு வில்லைத்தான் தன் பிரத்யோக ஸ்டைலாக வைத்திருப்பாரோ?

எப்படியோ மன்மதன் அம்பாக வீசி தள்ளுகின்றார்


முப்பாட்டன் முச்சந்தி பிள்ளையார்…

முப்பாட்டன் முருகன் என சொல்லி கொடி பிடித்து ஒரு மாதிரி அலைபவர்களுக்கு என்ன சொன்னாலும் புரிவதில்லை, சிந்திக்கும் திறனும் இல்லை

எது சொன்னாலும் நீ, உன் குடும்பம், உன் ரத்தம், உன் வம்சம் ஏய்.. என ஒரு மாதிரி அகோரிகள் போல அலறிகொண்டே இருக்கின்றார்கள்.

ஏன் என்றால் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை, சுத்தமாக இல்லை, கத்தும் திறன் கொட்டி கிடக்கின்றது அதனாலென்ன கழுதை கத்தாத கத்தலா? அது இம்சை அல்லவா?

தொடக்க காலத்தில் மனிதன் அப்படித்தான் இருந்திருக்கின்றான், அவனுக்கு சுயமாக சிந்திக்க தெரியவில்லை, சக்தி இல்லை

ஒரு பழத்தில் அந்த சக்தி இருந்திருக்கின்றது, பைபிளில் பாம்பு ஏவாளிடமும் ஆதாமிடமும் அதனை தின்ன கொடுத்தபின்புதான் அவர்களுக்கு சுயநினைவே வந்திருக்கின்றது

இந்துமதத்திலும் அக்கதை வருகின்றது, மிக சிறந்த ஞானபழத்தினை யாருக்கு கொடுப்பது எனும் சிக்கலில் பிள்ளையார் ஸ்கோர் செய்துவிட முருகன் கோபபட்டு பழனிக்கு வந்துவிட்டார்

ஆக ஞானபழம் தின்ற பிள்ளையார் பெரும் சக்தியாகிவிட்டார், ஞானம் கிடைத்திருக்கின்றது. அதனால் திருமணம் கூட செய்துகொள்ளவில்லை, அபாயங்களை எல்லாம் சிந்தித்து தவிர்த்திருக்கின்றார், இருக்கட்டும்

முருகன், தந்தைக்கே போதித்த தனையன் அவர். அமைதியான கடவுள். அவருக்கு ஞானப்பழம் எல்லாம் தேவை இல்லை

ஆனால் அவரை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு ஞன்னபழம் கட்டாயம் தேவை, ஆக டம்ளர் பாய்ஸ்க்கு தேவை

ஏய் டம்ளர் பாய்ஸ், முப்பாட்டன் முருகன் என்பதை முப்பாட்டன் பிள்ளையார் என மாற்றி சொல்லியாவது அவரிடம் இருந்து ஞானபழம் பெறபாருங்கள்

கொஞ்சமாவது அறிவு வரும், முப்பாட்டனை மாற்றுங்கள்.

இனி உங்கள் முப்பாட்டன் முச்சந்தி பிள்ளையார்.

இலங்கையும் இந்தியாவும் ஆடும் ஒரு வகை விளையாட்டு

எது எப்படி ஆயினும்  இலங்கையும் இந்தியாவும் ஆடும் ஒரு வகை விளையாட்டு படுவிறுவிறுப்பானது

சீனாவுடன் காலை சிற்றுண்டி, அமெரிக்காவுட கோழி கறி, இந்தியாவுடன் பால் சோறு, பாகிஸ்தானுடன் தேநீர் என ரஜினி சகல இந்திய அரசியல்வாதிகளையும் சமாளிப்பது போல அரசியல் செய்வது இலங்கை

ஆனால் திரிகோணமலையில் இந்திய பிடி ஆயில்குடோன் எனும் வடிவில் உண்டு, அதை அண்டிய சம்பூர் பகுதியில் அணல் மின் நிலையம் எனும் பெயரில் இந்திய பிடி உண்டு.

இந்த சம்பூர் பகுதி புலிகள் கட்டுபாட்டில் இருந்து மீட்கபட்ட முதல் பகுதி, திரிகோணமலையினை ஒட்டியிருப்பதால் முக்கியமான பகுதி இங்கு இரண்டாம் அணல் மின் நிலையம் அமைக்கும் பணியில் இந்தியா இறங்கியது.

அவ்வப்போது உரசும் இலங்கை இந்தியா கட்ட இருந்த பால விஷயத்தில் உரசியது, கொழும்பில் அமெரிக்க பிடியினை வளரவிட்டது, ஹம்பாந்தோட்டாவில் சீனாவினை விட்டது, பாகிஸ்தான் நடமாட்டம் உண்டு, கேட்டால் உங்களை போல அவர்களும் நண்பர்கள், நாம் எல்லோருக்கும் பொதுவானவர் என கள்ள சிரிப்பு சிரிக்கும் இலங்கை

இந்தியா கொழும்பின் முதுகெலும்பினை அடிக்கும் பொருட்டு இணையம் துறைமுகத்தில் கங்கணம் கட்ட தொடங்கிவிட்டது, அது செயல்படதொடங்கும் பொழுது கொழும்பு பாதிக்கபடும், அத்துறைமுகமே இலங்கைக்கு தமிழக டாஸ்மாக் போல பெரும் வருமானம்

அதோடு விடாத இந்தியா தூங்கி கிடந்த சேது சமுத்திர திட்டத்தை ஆய்வு செய்ய தொடங்கிற்று, அது இலங்கை முதுகெலும்பினை முற்றாக முறிக்கும் திட்டம்

ஆச்சரியமாக மாநில அரசுக்கு கூட தெரியாமல் மத்திய அரசு களத்தில் இறங்கி ஆய்வுகளை தொடங்கிற்று, அலறி அடித்த இலங்கை, காசி கரை சாமியார்கள் கைவிட்டுவிட்டார்களே என அலறி சரி பாலமே கட்டலாமா? எனும் அளவிற்கு தூது அனுப்பியது என்கின்றார்கள்

இந்தியா அதற்கென்ன மேலே கப்பல் செல்லட்டும் கீழே சுரங்கம் அமைக்கலாம் எப்படி எங்கள் யோசனை என சொல்ல, இனி இரட்டை ஆபத்தா? என கடும் ஆலோசனையில் மூழ்கியுள்ளது இலங்கை.

இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கலாம் என பார்க்கலாம்? இருந்தாலும் ஒரே ஒரு யூகம் உண்டு.

தமிழ் ஈழம், புலிகள் என்பதை இலங்கை மறந்துவிட்டது போல தமிழகமும் மறக்கவேண்டும், அங்கு பிரபாகரன் படம், கொடி பிடிப்பவர்களை அடக்கினால் பாலம் பற்றி பேசலாம் என இலங்கை இந்தியாவிடம் பேரம் பேசும் வாய்ப்பும் உண்டு.

அப்படி நடந்தால் என்ன ஆகும்?

போராளி பாய்ஸ் சடாரென பிரபாகரன் படத்தை இரட்டை மெழுகுவர்த்தியால் கொழுத்திவிட்டு முப்பாட்டன் முருகனின் படம் பிடித்து, சேவல் கொடி பிடித்து கத்துவார்கள் எப்படி?.

அரோகராரா அரோகரா…

யாழ்பாணம் நல்லூர் கோவில் முருகனும், கதிர்காம முருகனும் வாழ்க, அவற்றிற்கு நாங்கள் ஊர்வலமாக செல்லுவோம் என அடம்பிடிப்பார்கள்.

அப்பக்கம் சிங்களன் திருப்பதி கோவிலுக்கு ஊர்வலம் வருவான்

கோவிந்தா கோவிந்தா

இவர்கள் நிச்சயம் இப்படி தொடங்குவார்கள், அது இருக்கட்டும்

ஆனால் இணைய துறைமுகமும் தொடங்கி சேது சமுத்திரமும் தோண்டபட்டு கப்பல்களை ஓடவிட்டால் அவ்வளவுதான் நிச்சயம் கொழும்பிற்கு கோவிந்தா தான்.

எப்படியும் கொழும்பு இதனை தடுக்க இந்தியாவில் யாரையாவது ஏவிவிடும், பணம் கொடுத்தால் குலைக்க ஆயிரம் பேர் உண்டு,

எப்படி ராமர்பாலம் எதிர்ப்புகளை சமாளிக்கபோகிறார் மோடி என்பது அவர் முன் இருக்கும் சவால்

பார்க்கலாம்.

இந்துத்வ போராளிகள் பாயபோகும் நேரம் வரலாம், கலைஞர் சந்தடி சாக்கில் கடுமையாக காய்ச்சி எடுப்பதையும் ரசிக்கலாம்.

நாமே இதனை கவனித்திருக்கின்றோம் என்றால் அவர் எப்படி கவனித்திருப்பார், மிக விரைவில் பகுத்தறிவு கருத்துக்களோடும், இப்பக்கம் வீரமணி, சு.வீரபாண்டியனோடு களம் இறங்குவார் அவருக்கே உரித்தான வரிகளோடு

“பகுத்தறிவோடு சேது சமுத்திரம் பற்றி நான் சொன்னபோது என் நாக்கினை வெட்டி கேட்ட கங்கை நதிபுறத்து பண்டாரங்கள் எல்லாம், இப்பொழுது தன் தொகுதி எம்பியிடம் தலையில் இருப்பதை கூட கீழே இறக்கு என கேட்க‌மாட்டார்கள்,

தலையில் இருப்பது என்றால் கிரீடம் என்றும் கூட பொருள்….” என்ற ரீதியில் அறிக்கைகள் வரலாம் ..