அரசல் புரசலாக….

நடிகையர் திலகம் சாவித்திரி சர்க்கரை நோய் முற்றி, இன்னும் சில பாதிப்புக்குள்ளாகி கோமாவிலே இறுதிவரை இருந்தாராம்.

சாவித்திரி நடித்த ஒரு பாடலை பார்க்கும்போது தோன்றியது, வேறொன்றுமில்லை


கோவையின் சமீபகால கலவரங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுகின்றது, இந்திய கலவரங்களை தூண்டுவதே அதன் நோக்கம் : பொன்னார்

ஆம் இருக்கலாம், அப்படியானால் ரதயாத்திரை வந்து பாபர்மசூதியினை இடித்து இந்தியாவினை கலவரகாடாக மாற்றியதிலும் பாகிஸ்தானியர் கரங்கள் இருக்கலாம் அல்லவா?

அப்படியானால் என்ன சொல்ல வருகின்றார்?

இந்து இயக்கங்கள் எல்லாம் பாகிஸ்தான் பினாமிகளா?

இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், சங் பரிவார், பிஜேபி கூட பாகிஸ்தானின் ஏஜெண்ட் இயக்கமா?

அட ராமா…………….


எம்.ஜி.ஆர். போல் முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளை வேரறுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திரா போல மோடியும் பாகிஸ்தான் கொட்டத்தை அடக்கவேண்டும் என முதலில் பாராளுமன்றத்தில் பேசுங்கள்

பேசவேண்டிய இடத்தில் தூங்கவேண்டியது, தூங்க வேண்டிய இடத்தில் விழித்திருந்து அறிக்கைவிடுவது இவரின் ஸ்டைல்


இன்னும் நூறு வருடம் அம்மாவினை அசைக்கவே முடியாது, : கராத்தே ஹூசைனி

வந்துட்டார்யா, இனி அப்பல்லோ வாசலில் என்ன காமெடி எல்லாம் நிகழ்த்தபோகின்றாரோ, அம்மா வரும்வரை மார்ச்சுவாரியில் பிணமாக இருப்பேன் என போய் படுத்துகொண்டாலும் ஆச்சரியமிலை, இவர் செய்யகூடியவர்தன்.

ஹூசைனி சார் , அம்மாவை அசைக்க முடியாததா பிரச்சினை?

அம்மாவால் தன் கை கால்களை அசைக்க முடிகின்றதா? என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.


 

போன பிறவியில் நான் எழுத்தாளனா?

ஹஹஹஹஹா…

அப்பொழுது நான் எழுத்தாளனா?

அதனால் கொன்றே விட்டார்களா?

என்ன இது?.

சரி எவ்வளவு சம்பாதித்தேன் என்பதையாவது சொல்ல கூடாதா?

இப்பொழுதும் எதனையோ கிறுக்கிகொண்டே தான் இருக்கின்றேன், இது விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம் …

ஆனால் இப்பிறவியிலும் கொல்ல தேடலாம்,

யாராக இருக்கும்? சொல்லித்தான் தெரியவேண்டுமா?

நிச்சயம் அங்கிள் பாய்ஸாகத்தான் இருக்கமுடியும் அல்லது பங்காளிகளாக கூட இருக்கலாம் ..

எனினும் ஹானஸ்ட், இன்னோசென்ட் எல்லாம் நமக்கு இப்பிறவியில் சரிவராதவை. பெரும் அயோக்கியனில் ஒருவன் நான் என்பது எனக்கே தெரியும்.

அதனால் இதனை முழுவதும் நம்ப முடியவில்லை

மீறி பொய் சொன்னால், பாகம்பிரியாளே சாட்சி.

Screenshot_2016-09-27-10-51-35-673.jpeg

ரித்திகா சிங்…

Image may contain: 1 person

“ஏய் மனமே…ஜெயப்பிரதாவின் இடத்தினை ரித்திகா சிங் பிடித்துவிடாமல் இருக்கும்படி பார்த்துகொள்வாயாக‌

ஏற்கனவே வருஷம் 16, சின்னதம்பி போன்ற படங்களின் பின் குஷ்பூ அந்த இடத்தினை பிடிக்க மல்லுகட்டியதும், அது இன்றளவும் இன்னொரு சவாலாக இருப்பதும் இன்னொரு பக்கம்.

அது அப்படியே இருக்கட்டும், வருஷம் 16 குஷ்பூ அவ்வளவு எளிதில் மறக்க கூடிய முகம் அல்ல.

ஆனால் ரித்திகா சிங் 90களின் குஷ்பூ போல இல்லாவிட்டாலும், கொஞ்சம் சவால் போலவே தெரிகின்றது,

இறுதிசுற்றினையே அவருக்கு பயந்து ஒரு சுற்றுக்கு மேல் பார்க்க முடியவில்லை, பலமுறை மனதில் சுற்றிகொண்டே இருந்தார்.

ஆக இனி ஜெயபிரதா நினைவுகளை அல்லது வருஷம் 16 குஷ்பூவினை காப்பாற்ற ரித்திகா சிங் படங்களை பார்பதில்லை என முடிவாயிற்று.

மீறி பார்த்து தொலைத்துவிட்டால் சிம்மாசனம் போட்டு மனதில் அமர்ந்திருக்கும் ஜெயப்பிரதா கிளம்பிவிடும் ஆபத்து உண்டு அல்லது வருஷம் 16 குஷ்பூவின் அந்த பேதை முகமும் கலைந்துவிடும் அபாயம் உண்டு

மனமே விடவே கூடாது., “

நாகேஷ் : நகைச்சுவை சிகரம்

ஒரு நகைச்சுவை நடிகனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது

மின்னல்வேக முக பாவனை, உடல்மொழிமாற்றத்தில் அவர் என்றுமே தனித்து நின்றார்

சீரியசான குணசித்திரம், பரிதாப பாத்திரம், நகைச்சுவை கலந்த வில்லத்தனம் என எல்லா வேடங்களிலும் பின்னி எடுத்தவர் நாகேஷ்

காமெடி அவரது ஒவ்வொரு அசைவிலும், வார்த்தையிலும் பிறப்பிலே கலந்திருந்தது

அழகும் தோற்றபொலிவும் முக்கியமே அல்ல மாறாக உள்ளத்தில் இருந்து வரும் உணர்ச்சியான நடிப்பே பிரதானம் என நிருபித்து காட்டியவர்.

அவரின் வடுக்கள் பதிந்த முகம் அழகற்று இருக்கலாம், அவர் தேகம் நோஞ்சானாக இருக்கலாம், ஆனால் அவர் கொட்டிய நடிப்பு உணர்ச்சிகளே அவரை சினிமாவில் நிறுத்திற்று.

அழகினை விட நடிப்பே மகா முக்கியம் என காட்டியவர், ஆனால் ஒரு இடத்தில் மன்ம் விட்டு சொன்னார்

“நான் கொஞ்சம் அழகாக, வாட்டசாட்டமாக இருந்தால் இந்த ஹீரோக்கள் அருகில் என்னை தோழனாக காட்டியிருப்பார்கள் என நினைக்கின்றீர்களா? இல்லை

நான் நோஞ்சான் போல அசிங்கமாக இருப்பதால் அவர்கள் அழகு இன்னும் கூடுவதாக நினைத்தே என்னை அந்த வேடங்களுக்கு அனுமதித்தார்கள்,

அதை பற்றி எல்லாம் நான் கவலைபட்டதே இல்லை, என்னால் முடிந்ததை சினிமாவில் செய்தேன். மக்கள் ரசித்தார்கள் அவ்வளவுதான்”

அழகான முகம் முக்கியமே இல்லை என சினிமாவில் அடித்து நிரூபித்தவர் நாகேஷ், அப்படி பின்னாளில் திறமையினை நம்பி வந்தவர்கள் பலர் ஜெயித்தும் இருக்கின்றார்கள்.

இன்னும் ஜெயிக்க இருப்பவர்களுக்கும் அவரே வழிகாட்டி

மறக்கமுடியாத தமிழ்சினிமா அடையாளம் அவர், அவரை ரசிக்காமல் தமிழக சினிமாவினை கடந்துபோக முடியாது

இன்று நாகேஷின் பிறந்தநாள்.

அந்த காலத்தில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,நாகையா போன்ற நடிகர்கள் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்கள் .

ம.கோ.ராமசந்திரன் ரிக்க்ஷாகாரன் படத்திற்கு ” ஓதம் ஓதம் “நடிப்பிற்கு (அப்படி நாம் நம்பிகொள்ள வேண்டும்)பாரத் விருது வாங்கினார் .

ஆனால் எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ், பாலையா, நாகேஷ் போன்ற உன்னத கலைஞர்கள் அரசு விருதுகள் கௌரவமின்றி தான் மறைந்தார்கள். நாகேஷும் அவ்வகையே

அரசு விருது யாருக்கு வேண்டும்? மக்கள் மனதில் நிற்பவன் அல்லவா மாபெரும் கலைஞன்.

பிடித்த நட்சத்திரங்களை வானில் யாரும் காட்டி தந்தா ரசிக்கின்றோம்? நாமாகவே ரசிக்கவில்லையா?

அப்படி பாலையா, எம்.ஆர் ராதா, ரங்கராவ் வரிசையில் என்றென்றும் நிலைத்து நிற்பார் நாகேஷ்

நாம் அகண்ட தமிழகம் அமைப்போம்…

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது, 50 இலட்சம் மதிப்புள்ள 33 செம்மரங்கள் பறிமுதல்.

இதற்கு அங்கிள் சைமன் மற்றும் அடிப்பொடிகளின் முழக்கம் இப்படி இருக்கலாம்

“இதற்குத்தான் திருப்பதியினை மீட்டு தமிழகத்தோடு இணைக்கவேண்டும், அகண்ட தமிழகம் வேண்டும் அதற்கு தமிழன் முதல்வராக வேண்டும் என இன உணர்வாளர்கள் உயிரை பிடித்து கொண்டு போராடுகின்றோம், எல்லைசாமி வீரப்பன், இனச்சாமி பிரபாகரன் படம்பிடித்து போராடுகின்றோம்.

அதன்பின் தமிழக‌ பகுதியில் தமிழன் 50 லட்சம் திருடினால் எப்படி செய்தி வெளிவரும்? தமிழன் தமிழக செம்மரத்தை திருடாமல் அடுத்தநாட்டிலா திருடுவான் என சொல்லி சமாளித்துவிடலாம்

ஆக திருப்பதிபகுதியினை தமிழகத்தோடு இணைத்து தெலுங்கனை விரட்டினால் தமிழன் உரிமத்தோடு திருடிவிட்டு போகிறான் தமிழினமே….

குடகு வரை தமிழகமாக இருந்திருந்தால் எல்லைச்சாமி வீரப்பன் எவ்வளவு சந்தணம் வெட்டியிருப்பான், அது கன்னடம் என்பதால்தானே பிரச்சினை கூடிற்று

ஆக திருப்பதியினை மீட்காத, குடகினை மீட்காத, மைசூரை இழந்த திராவிட கட்சிகளின் கொடுமையே இம்மாதிரி மரம்வெட்டும் சம்பவங்கள்

என் அருமை தமிழகமே, நாம் அகண்ட தமிழகம் அமைப்போம், எல்லைகளை மீட்போம், அதன் பின் அவை தமிழக மரங்களாகும், எவனும் வெட்டட்டும், எவனும் சம்பாதிக்கட்டும், கொள்ளையடிப்பவன் தமிழனாக மட்டும் இருக்கட்டும்..”

வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்

வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்.

அடுத்த அஞ்சலி கராத்தே செல்வின் சமாதியா?

டெல்லியில் துறைவாரியாக ஒவ்வொருவரையும் சந்தித்து தமிழக உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டியவர் இங்கே சமாதி சமாதியாக சாதிவாரியாக அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றார்.

வெங்கடேச பண்ணையார் என்பவர் அப்படி இந்த‌ நாட்டிற்கு ஏதும் என்னதான் செய்தாரோ தெரியவில்லை? அப்படி ஒரு தேசாபிமானி இருந்ததாகவோ ராணுவத்திலோ அல்லது அரசியல் பதவிகள் வகித்ததாகவோ இதுவரை தகவலே இல்லை.

பசுபதிபாண்டியன் எனும் பாகிஸ்தான் ராணுவதளபதி படையெடுத்து தூத்துகுடி வரை வந்தது போலவும், அதனை 10 பேர் கொண்ட படையுடன் வெங்கடேசபண்ணையார் ஓட விரட்டியது போலவும் அப்படி ஒரு பில்டப்

அதே தூத்துகுடியில்தான் மாவீரன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வெள்ளையனுக்கு எதிராக கலகம் செய்த ராஜகோபால் என ஏராள தேசபக்தர்களின் நினைவிடம் நிறைந்த தூத்துகுடியில் அவர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்த யாருமில்லை

இந்த வெங்கடேசன், பசுபதி பாண்டியன் போன்றவர்களுக்காக குழுமும் சாதிவெறிபிடித்த இளையசமுதாயத்தைத்தான் அடுத்து உருவாக்கி இருக்கின்றோம் என்றால், இது எவ்வளவு ஆபத்தானது

எல்லாம் சாதி வாக்கு கொடுமை.

அது என்னமோ தெரியவில்லை தமிழகத்தில் போலிஸ் சுடுபட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் செலுத்திகொண்டிருக்கின்றார்கள், கீழத்தூவல் கிராமம், வீரப்பன், வெங்கடேச பணையார் என வரிசை பெரிது.

மலையூர் மம்பெட்டியான், கரிமேடு கரிவாயன், சீவலபேரிபாண்டி போன்ற சமீபகால இதிகாச நாயகர்களை எப்படி மறந்தார்கள் என் தெரியவில்லை, நினைவுபடுத்தியாயிற்று இனி அவர்கள் பார்த்துகொள்ளட்டும்

ஆனால் கன்னியாகுமரி லிங்கம் எப்படி மறக்கப‌ட்டார்?

லிங்கம் அவ்வகையில் பரிதாபம், வீரவணக்கம் அழிச்சாட்டியம் எல்லாம் அவருக்கு செய்ய யாருமே இல்லை. ஏன் என்று தெரியவில்லை

ஆனால் செல்வின், வெஙகடேசனை எல்லாம் விட மாபெரும் “வீரன்” அவர்தான்

வெங்கடேசன், செல்வின் போன்றோர் சில இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக கருதபட்டவர்கள். ஆனால் மாவீரன் அலெக்ஸாண்டர் போல கண்ணில்பட்டதெல்லாம் எனது இலக்கே என முரசரைந்து மொத்த கன்னியாகுமரி மாவட்டத்தையும் அலற வைத்த மாவீரன் அவர்.

சசிகலா புஷ்பாவின் புரட்சியிலாவது அவருக்கும் “வீரவணக்கம்” நடக்கும் என கன்னியாகுமரி மக்கள் எதிர்பார்க்கலாம்