ராதிகா ஆப்தே, சன்னி லியோன்…

கங்கை கரை சாமியார்களின் நிர்வாணம் உலக பிரசித்தம், மஹாவீரரின் கோலச்சிலைகள் காணகிடக்கும் பாரதம் இது

இங்குதான் ராதிகா ஆப்தே, சன்னி லியோன் நிர்வாணம் அபச்சாரம், கலாச்சாரம் என கொடியும் பிடிக்கின்றார்கள். அவர்கள் நிர்வாணம் எல்லாம் பற்றற்றதாம். ராதிகா ஆப்தே என்றால் அது குற்றமாம்

என்ன கலாச்சார காவலர்களோ தெரியவில்லை, காப்பது என முடிவெடுத்தால் கங்கை கரையிலே தொடங்கலாம் அல்லவா? செய்யமாட்டார்கள்.

இந்த ராதிகா ஆப்தே வேறு, வெளிநாட்டு நடிகைகள் தங்கள் உடலை எவ்வளவு அழகானதாக கருதுகின்றார்கள் தெரியுமா? , அப்படி நடிப்பது என் தொழில்,

(முடிந்தால் பார் இல்லை என்றால் நாண்டுகிட்டு சாவுடா..எல்லாம் கபாலி எபெக்ட்) பதிலுக்கு மல்லுகட்டுகின்றது

உன் கருத்தில் நீ அப்படியே இரு அம்மணி, நடித்து தள்ளு. உனக்கு ஆதரவளிக்க பெரும் பட்டாளமே இந்நாட்டில் உண்டு, அவ்வளவு புரட்சி சிந்தனை மிக்க தலைமுறை உருவாகியிருக்கின்றது.

அப்படியாவது அன்னிய நாட்டு சன்னி லியோனை விரட்டி அடிப்போம்

சோ. ராமசாமி

Image may contain: 1 person , sunglasses and text

மிக மிக சுவாரஸ்மான, அதே நேரம் பெரும் அறிவாளியும், சிந்தனையாளருமான சோ ராமசாமியின் பிறந்தநாள் இன்று

அவரது நாட்டுபற்று சந்தேகமில்லாதது. அவரின் சில தொலைநோக்குகள் அற்புதமானவை, மிக அபாரமானது அவரின் துணிச்சல்

அண்ணா காலம், மிசா காலம், புலிகள் ஆதரவு காலத்தில் எல்லாம் அவரின் துணிச்சல் அபாரமானது. அதுவும் 1985களிலே புலிகளை அவர் கண்டித்தவிதமும், பத்மநாபா படுகொலையினையொட்டி அவர் எழுதிய எழுத்துக்களும் மகா தீர்க்கமானவை.

ஒரு பத்திரிகையாளன் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு அவரும் இலக்கணம்.

பிராமண ஆதிக்கம், பிராமண ஆட்சி என பலர் கிளம்பும் போது, பிராமண அரசன் என ஒருவனை காட்டுங்கள், எங்கே ஆண்டது பிராமண இனம்? என்ற அவரின் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.

போலி திராவிட அரசியல்வாதிகளை அவர் கிழித்து தொங்கவிட்ட அளவிற்கு இன்னும் யாரும் தொடவில்லை.

அற்புதமான நடிகர், அதுவும் அரசியல் வசனங்களை எம்.ஆர் ராதா போலவே தொடர்ந்தவர், பின்னாளைய மணிவண்ணன் இவரின் தொடர்ச்சி. மிக அசால்ட்டடாக அரசியல் வசனம் பேசும் சோ ராமசாமி போல இன்னொருவர் சாத்தியமே இல்லை

சிரிக்க சிரிக்க விமர்சனம் செய்வதில் சோவிற்கு நிகர் அவரே, அவரால் கலாயாக்கபடாத தலைவர்கள் என யாருமே இருக்கமுடியாது

ஒன்றா, இரண்டா? ஒவ்வொன்றும் மறக்கமுடியாதது

ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தார், கம்யூனிஸ்டுகள் எல்லாம் போராட்டம் நடத்தினர், புஷ் திரும்பி போ என கடும் ஆர்ப்பாட்டம்

அமைதியாக சொன்னார் சோ, “புஷ் இங்கே இருக்கவா போகிறார், திரும்பி போகத்தான் போகிறார், அவர் வாழும் நிலையிலா இருக்கின்றது இந்தியா?, இதற்கு ஏன் போ என இவ்வளவு ஆர்ப்பாட்டம்”

அவர் எழுத்துகளில் மிக நறுக்கானது இப்படிபட்டவை

“தமிழுணர்வினை வெளிபடுத்த இன்றுள்ள மிக எளிதான வழி விடுதலைபுலிகளை ஆதரிப்பது….”

கலைஞரை அவர் காய்ச்சி எடுக்கும் நக்கல்கள் ஏராளம், ஆனால் அதனை தாண்டிய நட்பு இருவருக்கும் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேல் பாராட்டபடவேண்டியது சோவின் நாட்டுபற்று

சமீபத்தில் சொல்லியிருந்தார், “காங்கிரஸ் இந்நாட்டில் பின்னடைவது நல்லது அல்ல, அந்த இடத்தினை மாநில கட்சிகள் பறித்துகொள்ளலாம், பாஜ போன்ற தேசிய கட்சிக்கு இன்னொரு தேசிய கட்சி போட்டியாக இருப்பது வரை இத்தேசத்திற்கு நல்லது”

இதுதான் சோ, இது தீர்க்கதரிசனமான உண்மையும் கூட‌

ரசிக்க கூடிய எழுத்துகளிலும், பேச்சுக்களிலும் கலைஞர் போலவே சோ ராமசாமிக்கு தனி இடம் உண்டு

மிக மிக அபூர்வ சுவாரஸ்யமான மனிதர் சோ, அவர் காலம் வரை அரசியல் விமர்சன சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லை

அந்த ஞானமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பல்லாண்டு அவர் வாழட்டும், அரசியல் விமர்சனங்களை இச்சமூகம் அவரிடமே கற்ககட்டும், வாழும் அரசியல் நூலகம் அவர்.

பல்லாண்டு வாழட்டும்,

அம்மா இல்லாத உலகத்தில் இருக்கமாட்டாராம்..

Image may contain: 1 person

பொதுவாக கவிஞர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள், அது அழகான மொழிகளோடு கவித்துவமாக உணர்ச்சிகளின் வரிகளில் வெளிவந்தால் ரசிக்கலாம்

ஆனால் விபரீதமாக சிந்தித்து, அதனையே செய்யவும் போகிறேன் என கிளம்பினால் எப்படி இருக்கும். சில நேரம் கண்டிக்கலாம், சில நேரம் கையில் கிடைத்ததை எடுத்து சாத்தலாம் போல இருக்கும்,, அவர்களில் ஒருவர்தான் இவர்.

டைனமிக் மேரேஜ் என உளறி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கட்டிபிடித்து, மணபெண்ணை கூட எல்லோரையும் கட்டிபிடிக்க வைத்து , கிழவிகளையும் தலைகீழாக தூக்கி பெரும் தத்துதுவம் பேசியவர் சிநேகன்,

அன்றே அது பெரும் சர்ச்சையாகி அவரை ஒரு மாதிரி நோக்கினார்கள்,

இன்று முடிவே செய்தாகிவிட்டது

“என்னம்மா ஆச்சி உங்களுக்கு?..” என ஒரு அழுவாச்சி கவிதை படித்திருக்கின்றார் அல்லவா? அதிலே முழுதும் முடிவாகிவிட்டது

இது வைரமுத்து பாணி, அவரை தவிர யாருக்கும் இவ்வகை வரிகளில் அழுத்தம் சாத்தியமில்லை. அது கிராமத்து இயல்வு வகை. குயிலினை பார்த்து கோட்டான் காப்பிஅடிக்க முயற்சிக்கின்றது.

புலியினை பார்த்து பூனை டாட்டூ போட்டிருப்பது நன்றாக தெரிகின்றது,

மனிதர் எப்படி எல்லாம் புலம்பி இருக்கின்றார், அம்மா இல்லாத உலகத்தில் இருக்கமாட்டாராம், அம்மா இல்லாவிட்டால் அவ்வளவுதானாம்

முதலில் இவரை பெற்ற அம்மா எப்படி இருக்கின்றார் என முதலில் விசாரிக்க வேண்டும், அந்த அம்மா செருப்பால் இவரை அடிக்க சொல்ல வேண்டும்.

எதற்கும் அப்பல்லோ நிர்வாகம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, மனிதர் நள்ளிரவில் புகுந்து “என்னம்மா ஆச்சி உங்களுக்கு? என முதல்வரை எழுப்பி கலாட்டா செய்யலாம், கவனம்

எப்படியோ கராத்தே ஹீசைனி அமைதியான நிலையில் அவர் இல்லா குறையினை ஒரு கவிஞர் என சொல்லிகொள்பவர் தீர்த்து கொண்டிருக்கின்றார்,

இதற்காகவாது விரைவில் வந்துவிடுங்கள் அம்மா, இவனை போன்றவர்கள் இனி என்னென்ன இம்சைகள் செய்வார்களோ பயமாக இருக்கின்றது

இந்த இம்சைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றவாவது வந்து விடுங்கள் அம்மா…

(அடேய் இம்சைஸ், இதனை கண்விழித்து கேட்டுவிட்டால் அம்மா உடனடியாக அமெரிக்கா, சிங்கப்பூர் அல்லது ஜப்பானுக்கே ஓடிவிடும் அபாயம் உண்டு.

அப்படி ஒரு நிலைக்கு அவர்களை ஆளாக்கிவிடாதீர்கள்..)


கொசுறு

தமிழ்நாட்டின் கழுத்துக்கே பிரதமர் மோடி கத்தி வைத்து இருக்கின்றார்: வைகோ

காங்கிரசும், சோனியாவும்தான் தமிழக எதிரிகள். பாஜக ஆட்சி வந்தால் தமிழருக்கு எல்லா நியாயமும் கிடைக்கும், ஈழம் மலரும் என்றெல்லாம் பேசி, கூட்டணியில் துண்டுபோட்டு இடம் பிடித்தவரும் இவர்தான்

இன்று மோடி கத்தி வைக்கிறார் என கத்துவதும் இவர்தான்.

அப்படியனால் கத்தியினை கையில் கொடுக்கவேண்டும் என்றுதானே இவர் சொல்லியிருக்கின்றார்??


 ஜெ. நலமுடன் இருப்பதாக அதிமுக அமைச்சர்கள் தகவல்: அப்பல்லோவில் வேல்முருகன் பேட்டிஇதனை சொல்ல இவர் எதற்கு? அப்பல்லோ விசிட் எதற்கு?

திருமா, வேல்முருகன் என எல்லோரும் அட்டெண்டென்ஸ் போட்டாகிவிட்டது மிஸ்டர் கோப்பால்..வேர் ஆர் யூ???


சிநேகன் தொடங்கி வைத்திருக்கின்றார், இனி துபாய் லாலா எத்தனை வீடியோ விடபோகின்றானோ?

ஏ கடவுளே ஒன்று அம்மாவினை உடனே காப்பாற்று அல்லது இந்த இம்சைகளை பிடித்து எங்காவது மூழ்கடித்து எங்களை காப்பாற்று


 

நயன் அமைச்சர் ஆனாலும் ஆகலாம்…

na

டிவி சீரியலில் சீதையாக நடித்த ஸ்ருமிதி ராணி தற்போதைய அமைச்சர், அப்படியே திரவுபதியாக நடித்த நடிகை ரூபா கங்குலியும் இப்பொழுது எம்.பி ஆகிவிட்டார், அப்படியே அமைச்சர் ஆனாலும் ஆகலாம் என்கின்றார்கள்

சீரியலுக்கே இப்படி என்றால், பழைய அஞ்சலி தேவி, சாவித்திரி எல்லாம் இல்லா நிலையில் “ஸ்ரீராமராஜ்ஜியம்” படத்தில் சீதையாக நடித்த நயன் தாரா அடுத்த மத்திய அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வானத்தை பார்த்து நன்றி கூறியபடியே இருக்கின்றார் Babu Rao

நண்பரின் கனவு நிச்சயம் நனவாகலாம், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் நியமணமும் அப்படித்தான் இருக்க்கின்றது

ஆனால் கே.ஆர் விஜயாவும், ரம்யா கிருஷ்ணனும் நயந்தாராவின் எம்பி பதவிக்கு கடும் சவால் என நண்பருக்கு தெரியுமோ என்னமோ?

சீதை பாத்திரத்தில் நடித்திருப்பதால் நயனுக்கே வாய்ப்பு அதிகம் என்பது நண்பர் Babu Rao கணக்கு, மத்திய அரசு சீதைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அப்படி என்கிறார்.

ஆக‌ நயன் எம்பி ஆனாலும் ஆகலாம், அமைச்சர் ஆனாலும் ஆகலாம்.

எப்படியோ எம்பி ஆகப்போகும் நயன், தம்பி என நண்பரை அழைத்தால் என்னாகும்?

நண்பரின் பிஞ்சு மனம் எப்படி தாங்கும்? அப்பல்லோவில் வேறு ஆள் நுழையமுடியா அளவிற்கு நிலமை இருக்கின்றது.

ஆக வாழ்த்து சொல்லுமுன் நிதானித்து சொல்லுங்கள் நண்பரே