ரெமோ : திரை விமர்சனம்

இப்பொழுதுள்ள நடிகர்களில் யதார்த்த நடிப்பினை வழங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி, இமேஜ், பஞ்ச் டயலாக் இல்லாமல் அவர் அமைதியாக நடிப்பதால் ரசிக்கமுடிகின்றது, அந்த எளிமையும் அவரின் கூடுதல் பலம்.

இப்படி நான் விஜய் சேதுபதி ரசிகன் ஆனதாலேயே பாகம் பிரியாளுக்கு சிவகார்த்தியனை பிடித்துவிட்டது, அவரென்றல்ல இப்பொழுதுள்ள தாய்குலங்களுக்கு அவரை பிடிக்கின்றது, குறிப்பாக குழந்தைகள் கொண்டாடுகின்றன, நிஜம்

அப்படியான சிவகார்த்திகேயன் படம் ரிலீசானால் என்ன ஆகும்? வீட்டில் கோரிக்கை மனு வைக்கபடும். மறுக்க கூடாது, மறுத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரை விஷயம் சென்றுவிடும், அதனால் அவர்கள் தீர்மானம் வென்றது.

ரெமோ என்றொரு படம், அதில் சிவகார்த்திகேயன் ‍+ சிவகார்த்திகேயனி என இரு வேடங்களில் அவர் நடித்திருக்கின்றார், பெண் வேடம் என்பதால் அவ்வை சன்முகி கமல் அளவிற்கெல்லாம் விமர்சிக்க ஒன்றுமில்லை, அதில் கண்களில் கூட பெண்மையின் மருட்சியினை காட்டி அசத்தி இருப்பார் கமல்.

சிவகார்த்திகேயனிடம் அப்படி எதிர்பார்க்கமுடியுமா? அப்பல்லோ உண்மையினை சொன்னாலும் இது நடக்குமா?
மக்கள் சிரித்து பார்க்கவேண்டும், நாம் சில்லறையினை எண்ணவேண்டும் எனற அதே தத்துவத்தின்படி படமெடுத்திருக்கின்றார்கள், மற்றபடி கதை, கருத்து, நடிப்பு போன்றவை எல்லாம் அப்பல்லோ முதல்வர் அறையில் தேடினாலும் கிடைக்காதவை.

படத்தில் சில இடங்களில் சிரிக்கலாம், அது என்ன விஷயமோ தெரியவில்லை இப்படத்தில் யாரை பார்த்தாலும் சிரிப்பு வருகின்றது, பின் எரிச்சலும் வருகின்றது, குறிப்பாக பிண்ணணி இசை, பாத்திர கடையில் யானை புகுந்தது போல இம்சை

நண்பர் அவர்களுக்கு நாயகி கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லவேண்டும். அவர் அழகா இல்லையா என்பது பிரச்சினை அல்ல, ஆனால் அவர் சிரிக்கும்பொழுது மாத கடைசியில் மணிபர்ஸ் பல் இளிப்பது போல இருக்கின்றது, அதுதான் பிரச்சினை

அவர் சிரிக்காமல் இருக்கும்பொழுது நெற்றிக்கண் “ராமனின் மோகனம்” மேனகாவினை அப்படியே கண்முன் நிறுத்துகின்றார்

நண்பர் Babu Rao அவர்கள் சிலர் தூண்டிவிட்டதை கண்டு கீர்த்தி சுரேஷ் நயனை விட அழகா என கொதிப்பது தெரிந்தது, நண்பரே கீர்த்தி போன்றவர்கள் காற்றில் பறக்கும் பட்டம் அல்லது ராக்கெட்டில் செல்லும் செயற்கைகோள் அவ்வளவே, கொஞ்சநாளில் காணாமல் போவார்கள்

அவை உயர செல்வதால் ஆலயகொடிமரத்தினை உயர்ந்ததாகுமா? ஆகாது. அப்படி உங்கள் நயன் ஒரு கொடிமரம்

ஆனால் குஷ்பூ ஒரு கோபுரம், ராஜகோபுரம், நிலைத்துவாழும் ஆலயம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் Babu Rao.

சமீபத்திய படங்களில் அசத்தியது ஆண்டவன் கட்டளை. தெளிந்த நீரோடை அமைதியாக செல்வது போல சென்றபடம் அது. விசா மோசடிகளை அப்பட்டமாக சொல்லியிருந்தார்கள், பாஸ்போர்ட் ஆபிசில் புரோக்கர்களை தவிருங்கள் என அறிவுறுத்தியிருந்தார்கள்

நானும் அன்று புரோக்கர் தவிர்த்து பாஸ்போர்ட் எடுத்தவன், ஆனால் அலுவலக தவறில் ECNR எனப்படும் குழப்பத்தில் என்னை ECR என குறிப்பிட்டார்கள்,

நானோ எல்லா ஆவணங்களையும் சமர்பித்தே இருந்தேன், கல்வி சான்றிதழ் உட்பட‌

அது என்னவென்றே எனக்கு அன்று தெரியவில்லை, முதலில் வெளிநாட்டு குடிநுழைவு அதிகாரிகள் என்னை படாதபாடு படுத்தியபோதும் விளங்கவே இல்லை.

அம்மாதிரியான குற்றங்களுக்கு வாழ்நாள் தடை எனும் அளவிற்கு வெளிநாடுகள் இறங்கும் என்கின்றார்கள், அதில் தப்பியதே பெரும் விஷயம்.

வேலைக்கான உத்தரவு பெற்றபின் டிக்கெட் எடுக்கும் இடத்தில் அவர் குண்டை வீசினார்

“தம்பி உன் பாஸ்போர்ட் நீ பத்தாம் வகுப்பே படிக்கவில்லை என்கின்றது, ஆனால் உனக்கு பன்னாட்டு கம்பெனி விசா கொடுத்திருக்கின்றது, இனி நீ மோசடி வழக்கில் சிக்குவது உறுதி..”

அன்று உலகம் பிளந்து நான் உள்ளே விழுந்துகொண்டே இருந்தேன், ஒரு மண்ணும் புரியவில்லை, கிட்டதட்ட எல்லாம் நாசமான நிலை

பின் கடும் திரில்லாக ஆங்காங்கே அலைந்து, இறுதியாக பாஸ்போர்ட் அலுவலகத்திலே உரண்டு புரண்டு எப்படியோ மாற்றிகொண்டது என் வாழ்வின் உலகப்போர் அல்லது வெற்றிபோர்.

அதனையும் தாண்டி சென்னை விமான நிலையத்தில் அந்த பாஸ்போர்ட்டினை புரட்டிய அதிகாரி என்னை தனியே அழைத்து, என் நெல்லை தமிழை கண்டதும் புன்னகை பூக்க, பெரும் நிம்மதியுடன் என்னை கேட்ட கேள்வி மறக்கமுடியாதது

“தம்பி நீ இலங்கைக்காரன் என்பது தெரிகின்றது, இந்த பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது என்பதை மட்டும் சொல்”

அதாவது நான் ஒரு புலி என்றளவில் அவர்கள் கேட்டு படுத்தியபாடு கொஞ்சமல்ல,

எத்தனையோ அதிகாரிகள் என்னை தமிழ்பேச சொல்லி, குற்றியலுகரம், லிகரம், மாத்திரை அளவு எல்லாம் சோதித்தார்கள், நான் வேறு தென்னக தமிழனா, அது அவர்களுக்கு வாய்பாயிற்று

இன்னொன்று நெல்லையும் குமரியும் சங்கமிக்கும் எல்லையின் தமிழ் மிக இயல்பாக ஈழ தமிழ்போலவே இருக்கும், போதாதா?

அலறவிட்டார்கள், சொல் நீ புலிதானே? எப்படி பாஸ்போர்ட் பெற்றாய்? அல்லது எப்படி களவெடுத்தாய்?….”

இறுதியில் விமான சோதனையில் ஒரு பணிப்பெண் என்னை விஷேசமாக கவனித்துகொண்டிருந்ததை உணர முடிந்தது

அவர் நிச்சயம் பணிப்பெண்ணாக இருக்க முடியாது

ஆக அப்படி என்னை பெரும் குழப்பத்தில் தள்ளிய சம்பவம் அது, இன்னொரு நாள் நேரம் கிடைக்கும்பொழுது எழுதலாம், இப்பொழுது ரெமோ வால் அப்செட்

படத்தில் ஒரு காட்சியில் , லேடி மேக்‍ அப் பொம்மையினை பாஷா ஸ்டைலில் கட்டி வைத்து அடிப்பார்கள், காமெடியாம்.

அப்படி சுவரில் ரெமோ என எழுதி இறுதி சுற்று ஸ்டைலில் ஓங்கி குத்தவேண்டும் போல இருக்கின்றது

ஆனால் மகள் தூங்கும்பொழுதுதான் செய்ய முடியும், காரணம் அவள் அடிக்கடி “ஐ லைக் சிவேகாத்திகீயன் அங்கிள்” என சொல்லிகொண்டே இருக்கின்றாள்,

அவரை டிவியில் பார்த்துவிட்டாலே புன்னகைக்கின்றாள்

ஆளுநரை சந்தித்து வைகோ ஆலோசனை

லண்டன் மருத்துவர் ரிச்சர்டை சந்தித்தேன் வைகோ பேட்டி, ஆளுநரை சந்தித்து வைகோ ஆலோசனை

துயரம் நிறைந்த வீடுகளில் அழையா விருந்தாளிகள் வந்தாலும் சந்தித்துகொள்வது ஒரு வகை மரபு, அப்பொழுது எந்த பையித்திரகாரன் வந்தாலும் யாரும் விரட்டுவதில்லை, அவைகள் ஒரு ஒரமாக உட்கார்ந்து எதனையாவது சொல்லிகொண்டே இருக்கும்

பிரபாகரனை சந்திந்தேன் அப்பொழுது அவர் துப்பாக்கி சுட சொல்லிகொடுத்தார் என்றது போல லண்டன் ரிச்சர்டை சந்தித்தபொழுது அவர் எனக்கு மருத்துவம் சொல்லிகொடுத்தார் என அன்னார் ஸ்டெதெஸ்கோப்பினை தூக்கிகொண்டு அப்பல்லோவில் நுழையாதவரை ஆபத்தில்லை.

கிட்டதட்ட 90 எம் எல் ஏக்களை கொண்ட கலைஞரே ஆளுநரை சந்திக்கவில்லை, ஆனால் 4 கவுன்சிலர்களோ 2 வார்டு மெம்பர்களோ கூட இல்லாத இவர் ஆளுநரை சந்தித்து என்னாக போகின்றது?

துயரம் நிறைந்த இறுக்கமான நேரத்தில் சிலரின் நடவடிக்கைகள் சிரிப்பினை கொடுத்தால் அந்த இறுக்கம் குறையும் என்பார்கள், இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது

இல்லை என்றால் ஆளுநரை இவர் சந்திக்க என்ன அவசியம் வந்தது?

ஒருவேளை வைகோ எங்கள் கட்சியின் இன்னொரு பிரிவு என ஏதும் அம்மா கையெழுத்திட்ட கடிதம் ஏதும் கையில் வைத்திருப்பாரோ.??

அதனை கொண்டு அடுத்த ஆட்சியில் தனக்கும் பங்கு வேண்டும் என சமுத்திரகனி ஏதோ ஒரு சினிமாவில் கேட்டது போல கேட்டுகொண்டிருப்பாரோ??

பா ராகவன் : எவ்வளவு அற்புதமான எழுத்தாளர்..

Image may contain: 1 person , glasses and close-up

எழுத்தாளர்களில் பல பிரிவுகள் உண்டு, அவர்களில் சிலரின் எழுத்துக்களே அற்புதமாக ரசனையாக அமையும்

பழம் எழுத்தாளர்களில் கி.வா.ஜா மற்றும் கண்ணதாசனின் எழுத்துக்கள் ரசனையானவை

பிற்கால சுஜாதா எழுத்தில் ஒரு இமயம், எல்லா துறைகளியும் புகுந்து எழுதிய எழுத்து ஞானி.

கலைஞரின் எழுத்துக்கள் நைல் நதி போல பழமையும் நீங்கா அழகும் கொண்டது

ஈஸி சேரில் படுத்திருந்து கதை சொல்வது போன்றது கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள்,சுகா வின் எழுத்துக்கள் நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்லும்.

இந்த வரிசையில் அப்படியே வந்து அமர்ந்திருப்பவர் ஆசான் Pa Raghavan

நிச்சயமாக சொல்லலாம், இன்று தமிழகத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நம்பர் 1 அவரே, அவர் ஒருவரே

ஆழ்ந்த அறிவும், நண்பர்களுடன் பேசுவது போன்ற மொழிநடையும், தமிழறிவும், உலக அரசியல் அறிவும், தற்போது சமைல அறிவும் கொண்டு விளங்கும் சிகரம் அவர்.

இன்று அவருக்கு பிறந்தநாளாம், நாம் வணங்கும் தெய்வங்கள் அவருக்கு எல்லா நலனும் வளமும் அருளட்டும்.

எப்படிபட்டை எழுத்து சக்தி அது?, ஆனால் எழுதிமட்டும் வாழமுடியா தமிழகம் அவரை வர்த்தகபக்கம் தள்ளியிருக்கின்றது.

இல்லாவிட்டால் டாலர் தேசம், மாயவலை வரிசையில் இன்று ஐ.எஸ். வடகொரியா , பொக்கோ ஹாரம் போன்றபிரச்சினைகளை மிக அற்புதமாக தமிழுக்கு கொண்டு வந்திருப்பார்.

எவ்வளவு அற்புதமான எழுத்தாளர், ஆனால் தமிழன் நிலை என்ன?

உலக அரசியலோ, உலகளாவிய பிரச்சினைகளோ அவனுக்கு தெரியாது, ஏதோ இம்சைகளை இலக்கியம் என்பான், அதில் சர்ச்சை என அவனே சொல்வான், இதற்கு மேல் மகாபாரதம், ராமாயணம் தாண்டி அவன் விரும்புவதிலை

கள்ளத்தனமான அரசியலும், வர்த்தக சினிமாவுமே இங்கு பிராதனம் அவற்றை எல்லாம் தாண்டி போன்றவர்கள் தெரிவதில்லை

ஆனால் வானத்து சூரியனை மறைக்கமுடியாதது போல, பல இடங்களில் அவர் மின்னிகொண்டே இருக்கின்றார், சமீபத்திய பொன்னான வாக்கு பொல‌

நமக்கெல்ல்லாம் வாய்ப்பு இருந்தால், கடையேழு வள்ளல் போல் அல்ல, சடையப்ப வள்ளல்போலும் அல்ல, ஆனால் அவரை ஆதரித்து பெரும் உலக நூல்களை, பல விஷயங்களை தமிழுக்கு கொடுக்கலாம்

உலகளாவிய சிந்தனைகளை தமிழனுக்கு கொடுக்கலாம், அவன் படிக்கின்றானோ இல்லையொ, ஓர் ஆத்ம திருப்தி

நிச்சயம் கொண்டாடபடவேண்டிய எழுத்தாளன் அவர், அப்படி ஒரு எழுத்தாளனை நாம் கண்டுகொள்வதில், அவரின் எழுத்துகளை சுட சுட படிப்பதில், பாரதியினை தவறவிட்ட, கண்ணதாசனை தவறவிட்ட காலங்களை மறுபடி பெற்றுகொண்டோம்

வாழ்க நீ எம்மான்

பல்லாண்டு காலம் வாழிய வாழியவே, பேலியோ அல்லது எதுவோ எதனையாவது செய்து பல்லாண்டு காலம் வாழ்க‌

ஒன்று நிச்ச்யமாக சொல்லலாம்

ஏதோ ஒரு தெய்வத்தின் அருள் அவரை நடத்திகொண்டிருக்கின்றது, இல்லாவிட்டால் இப்படிபட்ட அழியா புத்தகங்கள் சாத்தியமில்லை.

தொன்மை வாய்ந்த யூத சமூகத்தின் வரலாற்றை எழுதினார் அல்லவா? அதற்கு பைபிளை கடந்த உழைப்பு தேவை. கடும் ஆர்வமும் படிப்பும் தேவை

ஒரு யூதனை தவிர அவ்வளவு பெரும் எழுத்துசுமை யாருக்கும் சாத்தியமில்லை, ஆனால் Pa Raghavan சாதித்தார்

உண்மையில் அது யூத அல்லது கிறிஸ்தவ பாதிரி செய்திருக்கவேணடிய வேலை, அல்லது ஒரு இஸ்லாமியன் பாலஸ்தீன நியாயத்திற்காக செய்திருக்கவேண்டிய கடமை அது

ஆனால் அப்பணியினை முடிக்கும் பொறுப்பினை யூதர்களின் கடவுளான ஜெஹோவா நமது பா.ராகவனிடமே கொடுத்திருந்திருக்கின்றார்

உலக வரலாற்றில் அப்படி ஒரு புத்தகம் இனி சாத்தியமே இல்லை, சூடமேற்றி சத்தியம் செய்யலாம்.

சென்னையில் நாம் சந்திக்கவேண்டிய பிரபலங்கள் , சந்திக்க ஆவலான பிரபலங்கள் உண்டென்றால் கலைஞரின் அடுத்த இடம் பா.ராகவனுக்கே, நமது குஷ்பூ கூட மூன்றாம் இடமே..

அவர் மேல் நாம் கொண்டிருக்கும் அபிமானத்தை இதனைவிட எப்படி விளக்க என்று தெரியவில்லை

எங்கள் அன்புக்கும், வணக்க்கத்திற்கும் உரிய அவர்கள் இன்னும் பல உயரங்களை தொட அவர் பிறந்தநாளில் மனமார வாழ்த்துகின்றோம்

வடிவாய், செழிப்பாய் வாழ்க நீர் எம்மான்