உலக பெண் குழந்தைகள் தினம்

இன்று உலக பெண் குழந்தைகள் தினமாம்

அதனை உலக தேவதைகள் தினம் என்றே சொல்லலாம்

பெண்குழந்தைகள் பெரும் வரம், பெரும் ஐஸ்வர்யம்

கடவுள் எனக்கும் அப்படி ஒரு தேவதையினை கொடுத்திருக்கின்றார்,

அவளாலே வாழ்வே வசப்பட்டு நிற்கின்றது, வாழ்விற்கான அர்த்தம் அவளிடமிருந்தே தொடங்கிற்று.

அந்த பிஞ்சு மொழியிலும், குறுகுறுப்பான பாச பார்வையிலும், மனதால் பேசிக்கொள்வதிலும் பெண் குழந்தைகள் உலகின் பெரும் அதிசயமே.

அந்த சின்ன புன்னகையில்தான் கோயில், சொர்க்கம் மற்றும் அதில்வாழும் தெய்வம் எல்லாமே தெரிகின்றது

தெய்வம் என்மடியில் தவழ ஆரம்பித்த‌ பின் எல்லா நாளும் எமக்கு தேவதை தினமே.

அதன் பிறகு ராகுல் என்ன செய்வார்?

திருநாவுக்கரசரை மாநில தலைவராக்கி அதன் மூலம் அதிமுகவுடன் காங்கிரஸ் நெருங்கும் திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் நடக்கின்றது என்கின்றார்கள்

ராகுல் அப்பல்லோ வந்ததும் அப்படித்தான் என்கின்றார் இன்னொருவர்.

இப்படி இவர்களாக சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், கூட்டணி உறுதி, உள்ளாட்சி தேர்தலில் உறவு வரும் என ஏராள தியரிகள்.

ஆனால் திருநாவுக்கரசர் அப்படி சரண்டர் ஆகவேண்டும் , பேசாமல் பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னால் நின்று, கேட்கவேண்டியதை கேட்டு ஹிஹிஹிஹி என கட்சியில் இணைந்து பொன்மன செம்மலின் 1980களை திரும்ப கொண்டுவர பாடுபடுவேன் என சொல்லி இருக்கலாம்

இப்படி காங்கிரசில் இருந்து அங்கே சரண்டர் ஆவது ஏன் என்பது தெரியவில்லை, அங்கு கூட்டணி என்றாலே இன்னொரு அடிமை என்றுதான் பொருள்.

பாதுகாபான சரண்டர் என ஏதும் நினைக்கின்றாரோ என்னமோ?

எப்படியும் போகட்டும், இவர்களாக பேசிகொண்டிருக்கின்றார்கள்

மாண்புமிகு முதல்வர் குணமடைந்து வரட்டும், அவரின் கோரிக்கைகள் எப்படி இருக்கும்? இப்படி இருக்கும்

“மிஸ்டர் ராகுல், இந்த திருநாவுக்கரசரை தலைவர் பதவியிலிருந்து தூக்குங்கள், இளங்கோவனை கட்சியினை விட்டே விரட்டுங்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவியினை முடக்கவேண்டும், அவருக்கு உடல்நலம் நன்றாக இருக்கின்றதோ இல்லையா தெரியாது, ஆனால் அவரை அப்பல்லோவில் ஒருநாளாவது தங்க வைக்கவேண்டும்

கடைசியாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவேண்டும்,

இதனை எல்லாம் செய்தால் உங்கள் கட்சியுடன் கூட்டணிக்கு ரெடி. சரியென்றால் சொல்லுங்கள் நான் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிடுகின்றேன்,

அதில் என் கட்சி சின்னத்தில் நீங்கள் கையில் இருக்கும் 5 விரல்போல எங்காவது 5 இடங்களில் மட்டும் போட்டியிட்டு கொள்ளலாம்

அதுவும் மேடையில் நான் பேசும்பொழுது ராகுல் கூட்டத்தை பார்த்து கைகூப்பி நிற்கவேண்டும், இந்த தங்கபாலு,இளங்கோவன் போன்றவர்கள் எல்லாம் அவர் அருகில் முழங்காலில் நிற்கவேண்டும், புரிகின்றதா?”

அதன் பிறகு ராகுல் என்ன செய்வார்? அப்பல்லோ ராக்கெட் ஏறி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கே ஓடிவிடுவார்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வெறும் 65 ஆயிரம் கோடிக்குத்தான் விற்பனை ஆனதாம்

கிட்டதட்ட 6 லட்சம் கோடிக்கு விற்கவேண்டிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வெறும் 65 ஆயிரம் கோடிக்குத்தான் விற்பனை ஆனதாம், மத்திய அரசு கவலையாம்

ஆனால் அன்று 1,80,000 கோடிக்கு விற்க கூடிய 2ஜி ஸ்பெக்ட்ரமை மிக குறைந்த விலையில் விற்று காங்கிரசும் கலைஞரும் பெரும் ஊழல் செய்துவிட்டார்களாம்,

அதாவது காங்கிரஸ் அரசில் அரசுக்கு வந்திருக்கவேண்டிய 1,80,000 கோடி வராமல் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டாயிறாம். அதனை அந்த விலைக்கு விற்றே தீர்த்திருக்கவேண்டுமாம்

கனிமொழி, ராஜா, கலைஞர் எல்லாம் கொள்ளையடித்தார்களாம்.

சரி இன்று வந்திருக்கவேண்டிய அதே 6 லட்சம் கோடி அரசுக்கு வந்திருக்கவேண்டும் அல்லவா? அது எப்படி பத்தில் ஒரு பங்காக சுருங்கிற்று?

இதனை எல்லாம் சு.சாமி கேட்கமாட்டார், பத்திரிகைகளும் வெளிவிடாது

ரிலையன்ஸ் 50ரூபாய்க்கு இறங்கி இண்டர்நெட் என பழைய பேரிட்சம்பழ வியாபாரி போல இறங்கி வருவதற்கும், இந்த அரசு இழப்பீடுகளுக்கும் என்ன சம்ப்ந்தம் என யாரும் கேட்க கூடாது, காரணம் மோடி சந்தேகதிற்கு அப்பாற்பட்டவர்.

அமைச்சர் ரவிசங்கர் சூரியனை போல களங்கமில்லாதவர் என நம்பிகொள்ளவேண்டும், அப்படி இருக்கட்டும்

ஆனால் ராசா அமைச்சராக இருக்கும்பொழுது வருமான குறைவு என்றால் ஊழல் என ஊளையிடுவதும், ரவி சங்கர் அமைச்சராக இருக்கும் பொழுது அதே போன்று பெரும் வருமான இழப்பு ஏற்படும்போது அமைதியாக இருப்பது ஏன்?

மோடிக்கும் ரவிசங்கருக்கும் ஒரு நியாயம், மன்மோகனுக்கும் ராசாவுக்கும் ஒரு நியாயமா?

ஜே சொத்துகுவிப்பு வழக்கு என்னாகும் என தெரியாது, ஆனால் கனிமொழி மீதான வழக்கில் இந்த அறிக்கைகள் சில தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும், கலைஞர் புன்னகைக்கும் நேரமிது

அப்பல்லோ நிலவரங்களில் கவனம் செலுத்தும் கலைஞர் இதனையும் நிச்சயம் அறிந்திருப்பார், ஆனால் ஏன் இன்னும் அறிக்கை விடவில்லை

அதுதான் கலைஞர்

அதாவது இந்த காங்கிரஸ், திருநாவுக்கரசர் எல்லாம் ஒரு மாதிரி ஆடுகின்றார்களா, ராகுல் வேறு கலைஞரை பார்க்காமல் ஓடிவிட்டாரா எல்லாவற்றையும் சேர்த்து விரைவில் இப்படி கொடுப்பார்

“உடன்பிறப்பே, தாழ்த்தபட்டவன் அமைச்சரானால் பொறுக்காமல் பார்ப்பண கூட்டம் பழிதீர்த்த கதை அறிவாயா

இன்று உண்மை சந்திக்கு வந்திருக்கின்றது,

அன்று அது நம்மிடம் என்றும் போலவே இருந்தது, ஆனால் சதிகாரர்கள், வஞ்சகர்கள் திட்டம் தீட்டும்பொழுது, “கை” கொடுத்து காப்பாற்றுங்கள் என கெஞ்சினோம்

அன்றே அவர்கள் “கை” கொடுத்திருந்தால் இந்த பழி நமது மீது, நம் கழகத்தின் மீது விழுந்திருக்காது, துரோகத்தால் கை கழுவினார்கள், விழுந்தோம்

கழக கண்மணி ராசாவும், நான்பெற்ற கண்மணி கனிமொழியும் இதனால் அடைந்த வேதனையும், பழியும் யார் கண்ணிலும் ரத்தம் வழிய வைக்க கூடிய குரோத சம்பவங்கள்

இதோ உயிர்த்தெழுந்த உண்மையினை ஆரிய கூட்டமே ஒப்புகொண்டிருக்கின்றது, விற்காத அலைவரிசையின் மதிப்பு அரசுக்கு வருமான இழப்பு அல்ல என அதுவே ஒப்பு கொண்டிருக்கின்றது.

விற்காத அலைவரிசைகளுக்கு அமைச்சகம் பொறுப்பல்ல, வைத்த இலக்குகளுக்கு பணம் வராதது ஏமாற்றமே தவிர, அமைச்சரின் குற்றமல்ல என அவர்களே வாய்விட்டு சொல்லிவிட்டார்கள்.

பின்னர் ஏன் அன்று நம்குரல் எடுபடவில்லை?, நம் கதற்லகள் கேட்கபடவில்லை? காரணம் நாம் பெரியார் வழி நடக்கும் திராவிடர்கள் அன்றி என்ன இருக்க முடியும்?

அதாவது ஆரிய பார்ப்பண கூட்டம் செய்தால் அது சரி, அதனையே தாழ்த்தபட்ட, பெரியாரால் எழும்பிய ஒரு பஞ்சமன் அமைச்சராக இருந்து சொன்னால், அவன் ஊழல்வாதி

உடன்பிறப்பே இந்த செய்தியினை, நாம் கறைபடா கரங்களுக்கு சொந்தக்காரர்கள் எனும் களிப்பான செய்தியினை, தமிழகம் முழுக்க முழங்கசெய்வாய்

அந்த முழக்கத்திலே ஆரிய சதி ஒழியட்டும், அப்படியே உள்ளாட்சி தேர்தலில் திராவிட கொடி பறக்கட்டும்”

கலைஞர் எழுதுவாரா இல்லையா தெரியாது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் என சொல்லி, அதனை பெரிதாக ஊடகங்கள் மிகைபடுத்தின, பெரும் ஊழலாக அதனை சித்தரித்தன என்பது உண்மை

அன்றே அப்படி எழுதிய ஊடகங்கள் இன்று 6 லட்சம் கோடிக்கு எப்படி பொங்கவேண்டும்?

ஆனால் சத்தமே இல்லை, இதுதான் விசித்திரம்.

மாதவா…..என்னமோ போடா …

முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார், அப்பல்லோ அவரை மிக தீவிரமாக கவனித்துகொண்டிருக்கின்றது. அவர்கள் கொடுக்கும் அறிக்கைதான் இப்போதைக்கு ஆதாரம்,

முதல்வர் நிச்சயம் நலம்பெற்று வருவார்

அது ஒருபுறம் இருக்கட்டும்.

திருநாவுக்கரசர் தமிழக காங்கிரசில் நியமிக்கபட்டது, டெல்லி தீர்ப்பு நெருங்குவது, இப்பொழுது ராகுல் ஓடிவந்து அப்பல்லோவில் நிற்பது, காங்கிரசுடன் அதிமுக‌ கூட்டணி என மோடி வயிற்றிலும், அமித்ஷா தலையிலும் புளியினை கரைப்பது

(ராஜ்யசபாவில் அதிமுக தயவின்றி ஒன்றும் செய்யமுடியாது) என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால்

………

கூடவே மோடி ஏன் மத்திய டாக்டர் குழுவினை அனுப்பினார் என திருமாவளவன் சம்பந்தமே இல்லாமல் கத்துவதனையும் சேர்த்துகொண்டால்

….

திடீரென சசிகலா புஷபா ஏதோ புது உண்மைகளை நள்ளிரவில் கண்டுகொண்டது போல குதிப்பதனையும் , கலைஞர் ஒரு அரசு தேவை என போதிப்பதையும் சேர்த்துகொண்டால்
..

எங்கோ இடிக்கின்றது, இரு பக்கமும் ஏதோ முயற்சி செய்கின்றார்கள், யார் முந்திகொள்ளபோகின்றார்களோ தெரியவில்லை 🙂

ஆக குழப்பமாக செய்திகளை பார்த்துவிட்டு, கொஞ்சம் புரிந்து,பழைய ஜனகராஜ் போலவே உதட்டை ஒதுக்கி, கண்ணை சுருக்கி “ஹிஹுஹிஹ்ஹ்ஹ்” என சிரிக்க‌ தோன்றுகிறது

“மாதவா…..என்னமோ போடா …”

வதந்தி பரப்பியவர்கள் கைது.. தமிழச்சி எப்போது?

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் கைது, இன்னும் பலர்மேல் நடவடிக்கை

நிச்சயம் செய்யவேண்டிய விஷயம், காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

இல்லாவிட்டால் இருந்த இடத்தில் இருந்துகொண்டு பாரத வியாசராக எல்லாவற்றையும் மனக்கண்ணாடியில் பார்ப்பது போல அப்பல்லோவில் அப்படி , இப்படி என சொல்லிகொண்டே இருப்பார்கள்.

ஆனால் எல்லோர் மேலும் சட்டம் பாயவேண்டும் அல்லவா?

ஒரு ராஜ்யசபா எம்பி பகிரங்கமாக என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார், பதற்றமான இந்த நேரத்தில் அதன் விளைவுகள் எப்படி ஆயினும் வெடிக்கலாம், தமிழகத்தில் அது ஒருவித கொதிநிலையினை உருவக்கலாம்

அவர் மீது என்ன நடவடிக்கை என யார் கேட்பார்கள்? கேட்கமாட்டார்கள், கேட்டாலும் கிடைக்காது.

அது ஒருபுறம் இருக்கட்டும்

சர்ச்சைகளின் மகாராணி தமிழச்சி என்பவர், பிரான்சில் இருந்து கொண்டு என்னவெல்லாமோ பேசுகின்றார். அவர் பாண்டிச்சேரிகாரர் என்பதும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரிகின்றது

அவர் ஏற்கனேவே இந்திய அமைதியினை விரும்புவர் அல்ல, இப்பொழுது மாநில அமைதியினையும் குறைப்பது போல பேசிகொண்டிருக்கின்றார், உச்சமாக இந்திய சட்டம் என் மயிரை பிடுங்குமா? என கேட்பதெல்லாம் பெரும் மிரட்டல்

ஆக அவர்களை எல்லாம் என்ன செய்ய போகின்றார்கள்? அவர்களை போன்றவர்களை அடக்கினால், தேசிய கொடியினை எரித்துவிட்டு பெரும் தேச தியாகிபோல டிவியில் பேசிகொண்டிருப்பவனை எல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டால் இந்நிலை ஏன் வருகின்றது

எனவே யார் இம்மாதிரி ஆபத்தான வழிகளில், மாநில அமைதியினை குலைக்கும் வழிகளில் பேசிவிட்டு, எங்களை என்ன செய்ய முடியும்? என சவால் விட்டு அலைவதுதான் இம்மாதிரியான விஷயங்களுக்கு மூலகாரணம்

அவர்களை கட்டுபடுத்தவேண்டியது காவல்துறை பொறுப்பு, அவர்கள் கடமையினை அவர்கள் செய்யட்டும்

முதல்வர் நலம்பெற்று வர நாம் தொடர்ந்து பிரார்திப்போம், சமூக அமைதியும், அமைதியான சூழலும் தமிழகத்தில் தொடரட்டும்.


அப்பல்லோவிற்கு திரைதுறையினர் விஜயம் சில நடிகர்கள் முதல் பெரும் இயக்குநர்கள் வரை வந்தனர்

எப்படியும் முதல்வரை பார்க்கமுடியாது என தெரியும், அவர் இருக்கும் அறைபக்கம் கூட செல்லமுடியாது என தெரிந்தும் வருகின்றார்கள் அல்லவா?

இதுதான் திட்டமிட்ட பயணம்.

பவர் ஸ்டார் விசாரிக்க சென்றிருக்கின்றாரா? மாண்புமிகு முதல்வர் நலம்பெற்று திரும்பிய பின் தெரியும் செய்தி.


இங்கே… அங்கே..

4 சிறல்கள்


துண்டு துண்டாய் வெட்டபட்ட பணம் கடலூரில் சாலையோரம் கிடந்தது

பணத்திற்காய் மனிதனை துண்டு துண்டாக வெட்டிய காலம் மாறி, யாரையோ காப்பாற்ற பணத்தினை துண்டு துண்டாக வெட்டியிருக்கின்றார்கள்

அவ்வளவிற்கு தேசம் முன்னேறிவிட்டது, கண்டெய்னரை திறந்தால் பணம், ரோட்டு பக்கம் பணம் என காணுமிடமெல்லாம் பணம் கொட்டிகிடக்கின்றது

இன்னும் குளிருக்கு பணத்தை எரிக்கும் நிலை விரைவில் வரலாம்.

வாழ்க தமிழ்நாடு


 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

தங்களுக்கு அது கிடைக்கவில்லை(!) என்ற ஆதங்கத்தில் தமிழக எழுத்தாளர்கள், இலக்கிய இம்சைகள் இனி நோபல் பரிசின் இலக்கிய தரம் குறித்து கடித்து குதறுவார்கள் பாருங்கள்

அதனை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது

ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும் எப்படிஎல்லாம் பாய போகின்றார்களோ….

அவர்களை விட அவர்களின் அடிப்பொடிகளின் பாய்ச்சல்தான் அகோரமாக இருக்கும்


 உத்தர பிரதேசத்தில் நீதிபதி பதவி வகித்த 30 வயது நிறைந்த 3 மாத கர்ப்பிணி மனைவியை கருக்கலைப்பு செய்ய மறுத்ததற்காக காதல் கணவரே கொலைசெய்தார்

இப்பெண் நீதிபதி, அவருக்கே கர்பக்கொலை செய்ய கணவன் நிர்பந்தித்திருக்கின்றான், அதாவது சட்டத்திற்கு புறம்பான காரியத்தினை செய்ய சொல்லியிருக்கின்றான்.

அவரோ கணவனை பிடித்து சட்டத்திடம் தண்டிக்க கொடுக்காமல் பரிதாபமாக செத்திருக்கின்றார்.

நீதிபதி தொழில்வேறு, வாழ்க்கை வேறு என்றிருந்திருக்கின்றார் அந்த நீதிபதி.


ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலக மாட்டேன்!- டிரம்ப் திட்டவட்டம்!

இதற்கு ஹிலாரியினை அதிபராக்காமல் ஓயமாட்டேன் என இவர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கலாம்.