காங்கிரசார் யோசிக்கவேண்டிய நேரமிது…

காமராஜர் காலத்திற்கு பின் காங்கிரஸ் தமிழகத்தில் காணாமல் போக தொடங்கியது

பின்னாளில் இந்திரா கொலை, ராஜிவ் கொலை அனுதாபமும் அதிமுகவிற்கு உதவியதே தவிர காங்கிரசுக்கு கொஞ்சமும் இல்லை. இந்த தமிழக காங்கிரசுக்கு அதனை பயன்படுத்திகொள்ளும் விதமும் தெரியவில்லை

வெங்கடேசபண்ணையார் என்கவுண்டரை கூட அனுதாப அரசியலாக்கி திருச்செந்தூர் தொகுதியினை அவர் மனைவி மூலமே கைபற்றிய கலைஞரின் சாமார்த்தியம் இவர்களுக்கு சுட்டுபோட்டாலும் வராது

ஏதோ கலைஞர் கூட்டணியில் தொடர்வதால், காங்கிரஸ் இருப்பதாவது தமிழகத்திற்கு தெரிகின்றது, கொஞ்சமாவது எம் எல் ஏக்கள் இருந்து சட்டமன்றத்தில் ஒரு அடையாளமாவது இருக்கின்றது

அதனை சுத்தமாக துடைத்தொழிக்கும் முயற்சியில் திருநாவுக்கரசர் இறங்கி இருகின்றார், அவருக்கு அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை

காரணம் ஜெயலலிதா கூட்டணியினரை என்ன பாடு படுத்த்துவார் என்பது அவரோடு முன்பு கூட்டணி கண்டுவிட்டு இன்று வாய்பொத்தி ரோட்டில் நிற்கும் தலைவர்களை கண்டால் தெரியும், அவ்வளவு ஏன் முன்னாள் பாஜகாரரான இவர் வாஜ்பாயிடம் கேட்டாலே கண்ணீரோடு சொல்வார் அவர்.

அப்படி வரலாறுகள் இருந்தபின்னும் மல்லுகட்டி அவர்களோடு கூட்டணிக்கு நிற்பது, தமிழக காங்கிரசை மண்ணோடு மண்ணாக்கும் திட்டமாக இருக்கலாம்

ஒருவேளை அந்த திட்டத்தோடுதான் அவர் பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு வந்திருப்பாரோ? இருக்கலாம்.

வேறு வாய்ப்புகள் இருக்க சாத்தியமில்லை ஒன்றை தவிர‌

அது தான் எம்பியாகவோ அல்லது எம் எல் ஏவாகவோ ஆகும் ஆசை இருக்கலாம்

அப்படி ஆசை இருந்தால் அவர் நேரடியாக அதிமுகவிலே சேர்ந்து கருணாஸ் போல ஆகலாம்,

மற்றபடி காங்கிரசில் இருந்து அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்தித்து அப்படி ஆகலாம் என்றாலும் அவர்களுக்கு கிடைக்கபோகும் மொத்த போட்டியிடும் இடமே 5 அல்லது 6 தான்

இதில் இவருக்கு இடம் கிடைப்பதே பெரும்பாடு

காங்கிரசார் யோசிக்கவேண்டிய நேரமிது,

கலைஞரிடமாவது ஆட்சியில் பங்கு என கோரிக்கை வரை எழுப்பமுடிந்தது

இங்கு கூட்டணி என அறிவித்துவிட்டு தேர்தல்  சீட்டில் பங்கு என கோரிக்கை வைப்பதே பெரும் சவாலாக இருக்கும்,

சிதறும் செய்திகள்

6 பதிவுகள்


திமுக எனும் கம்பெனியின் வாரிசு முக ஸ்டாலின் அக்கம்பெனியின் விளம்பரங்களில் நடிக்கலாம்

அதிமுக எனும் கம்பெனியின் விளம்பரங்களில் பலபேர் நடிக்கலாம்

காங்கிரஸ் கம்பெனியில் சிலபேர் நடிக்கலாம், பிஜேபி கம்பெனியில் அமித்ஷா , சு.சாமி என பலர் நடிக்கலாம்

ஈழ பிசினஸ் கம்பெனியில் சீமான், வை.கோ என பலர் நடிக்கலாம்

அதாவது அவர்கள் தொழிலுக்கு அவரவர்கள் நடிக்கலாம், விளம்பரபடுத்தலாம் மக்கள் வரவேற்பார்கள், வாக்கே அளிப்பார்கள், ஆட்சியில் அமர்த்துவார்கள்

ஆனால் சரவணா ஸ்டோர்ஸ் எனும் சொந்த கம்பெனியில் அதன் வாரிசு நடித்தால் கலாய்க்கின்றார்களாம்

என்ன மாதிரி மக்களோ புரியவே இல்லை


தங்க தாரகை , தமிழகத்து நயகரா, நயந்தாரா ரசிகர்+புரட்சி+காவல்+தற்கொலை படை தலைவர் 

Babu Rao அவர்களின் தலமையில் நடை பெற்றுகொண்டிருக்கும் பிரபுதேவா எதிர்ப்பு மவுன புறக்கணிப்பிற்கு ஆதரவளித்து “தேவி” திரைப்படத்தினை தோல்விபடமாக ஆக்கிகொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு

நயனின் கோடான கோடி ரசிகர்களுடன் Babu Rao அவர்கள் கோட்டான கோடி நன்றியினை தெரிவித்துகொண்டிருக்கின்றார்

எதற்கும் சிம்பு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது


“கடும் கண்காணிப்பில், ராகுல் காந்திவரை யாரையும் சந்திக்கமுடியாத நிலையில் இருக்கும் முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒருசிலரிடையே எழுந்துள்ளது

அ.தி.மு.க.வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக்காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஆக அது உண்மையில் முதல்வரின் கையெழுத்தா? அல்லது போலியா என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை பதில் இல்லை”

நாம் இப்படி சொன்னால் வதந்தி என்பார்கள்.

ஆனால் இப்படி சொல்லியிருப்பவர் கலைஞர், அவருக்காவது பதில் கிடைக்கின்றதா என பார்ப்போம்.


ரெமோ வெற்றிவிழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

அது வெற்றிபடம் என சொன்னால் அவர் கண்கள் கலங்காதா என்ன?,

பரவாயில்லை மனிதருக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கின்றது.


பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை விடமாட்டோம் : மோடி

ஆமாம், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரிப்பவர்களை தொலைத்து கட்டாமல் விடமாட்டர்கள்

ஆனால் இந்து பயங்கரவாதத்தில் மசூதியினை இடித்து கோவில்கட்ட நினைப்பவர்களை எல்லாம் ஆதரிப்பவர்களை பாதுகாக்காமல் விடமாட்டார்கள்


13.7 சதவீத இந்தியர்களுக்கு மனநலம் பாதிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இதில் அரசியல்வாதிகள் எத்தனை சதவீதம் என சொன்னால் நன்றாக இருக்கும், தமிழகத்து சதவீதம் அதிகமாக இருக்கலாம்


 

இம்சைகள் பலவகை… ஒவ்வொன்றும் ஒருவகை

இம்சைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை

ஒருநண்பருக்கு நண்பர் என ஒருவர் வந்தார், பேசினார். நானும் பேசினேன்

என் பதிவுகளை பார்த்தீரா என்றார்? அதில் அப்படி ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை, 4 குஷ்பூ படம் இருந்தாலாவது பார்க்கலாம் அப்படியும் ஒன்றும் இல்லை

என் பதிவுகளை லைக் செய்யுங்கள், அல்லாவிட்டால் உங்கள் பதிவுகளை தொடமாட்டேன், உடனே நட்பு பட்டியிலில் இருந்து வெளியேறிவிடுவேன் என ஒரே அடம்

அய்யா எனக்கு கிடைப்பதே சொற்பநேரம், அதில் எப்படி எல்லோர் பதிவினையும் பார்க்கமுடியுமென்றால்,,

அடேய் உன் பதிவுகளை நான் பார்க்கும்பொழுது, அடுத்தவன் பதிவுகளை நீ பார்க்கமாட்டாயா? இது பெரும் தவறு, அப்படி என்ன தலைக்கணம் உனக்கு என சீறிகொண்டிருக்கின்றார்

சொல்லிபார்த்தாகிவிட்டது, அவர் மேத்யூ புயல்போல் பொங்கிகொண்டிருக்கின்றார்.

அது என்ன அவர் பதிவுகளை நான் மட்டும் படிப்பது, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து படிக்கலாம்

https://www.facebook.com/profile.php?id=100008340255033

இந்த பல்வலைகழகத்திலிருந்து உங்களுக்கு தேவையானதை (இருந்தால்) எடுத்துகொள்ளுங்கள், இவரிடம் என்னை பற்றி சொல்லி ஒருவன் சேர்த்துவிட்டானாம், அந்த Nellai Baskar S தேடிக்கொண்டிருக்கின்றேன்

மகனே Nellai Baskar S என் கையில் நீ மட்டும் கிடைத்தால் வதந்தி பரப்பிய 51வது ஆள் நீதான்,

முதல்வரை பற்றி பரப்பினால் மட்டும்தான் வதந்தியா? என்னை பற்றி இப்படி எல்லாம் சொல்லிகொடுத்தால் அது வதந்தி இல்லையா?

மனிதன் என்னை படுத்தியபாட்டிற்கு நஷ்ட ஈடு கேட்டால் அப்பல்லோ போட்டு கொண்டிருக்கும் “அந்த”
பில்லை விட அதிகமாக வரும் தெரியுமா?

Vaithianathan Subramanian's photo.
Vaithianathan SubramanianMohamed RavoofStanley Rajan  Vaithianathan Subramanian, Madurai Kamaraj University.
Add Friend

1986களில் ஈழ விவகாரம்

1986களில் ஈழ விவகாரம் தொடர்பாக கலைஞரும், ராமசந்திரனும் மோதிகொண்ட நேரம், அதுவரை வள்ளல், ஈழகாவலர் என சீன்போட்டுகொண்டிருந்த ராமச்சந்திரன், ராஜிவ் தலையிட்டதும் ஒதுங்கிகொண்டார்

ஆனால் கலைஞரின் முழக்கம் ஈழவிடுதலை, போராளிகள் ஆதரவு என்றே இருந்தது

ராமச்சந்திரனின் கட்சியினர் அப்பொழுதிருந்தே ஒரு மாதிரியாக பேசுவார்கள், அதுவும் அவர்கள் தலைவனை புகழ்வதென்றால் இப்போதிருப்பவர்கள் எல்லாம் அவரிடம் பிச்சை எடுக்கவேண்டும்

அப்படி சம்பந்தமில்லாமல் சொன்னார்கள், அன்று அந்த ராமசந்திரனுக்கு இலங்கையில் வெற்றி, இன்று நமது ராமசந்திரனுக்கு அதே இலங்கையில் வெற்றி, வெற்றி

(அப்படி என்ன வெற்றி என்பதுதான் தெரியவில்லை)

கலைஞர் அவருக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார், ஆம் அன்று அசோகவனம், இன்று அசோகா ஹோட்டல்

(பிரபாகரன் சர்ச்சைகுரிய வகையில் தங்க வைக்கபட்ட டெல்லி ஹோட்டல்)

அதன் பின் அடிமைகள் பக்கம் இருந்து சத்தமே இல்லை

மிக சுவாரஸ்யமான மனிதர்களில் அவருக்கொரு இடம் நிச்சயம் உண்டு.

5300 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மனிதன் பேசிய மொழி தமிழ்!

 Image may contain: food

 

5300 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மனிதனின் சடலம் அழியாமல் ஆல்ப்ஸ் மலையில் கிடைத்திருக்கின்றதாம்.

இதுவரை கிடைத்த மம்மிக்களில் , (இது வேற்ய், வேறு எதனையும் நினைத்து, வதந்தியில் சிக்கிகொள்ளாதீர்கள்) இதுதான் அழியாமல் லட்டு மாதிரி கிடைத்திருக்கின்றதாம், காரணம் பனி, பீரிசரில் வைத்திருக்கும் மட்டன் போல, லட்டாக கிட்டியிருக்கின்றது.

இதுவரை கிடைத்தவைகளில் இதுதான் ஆக பழையது என்றும் சொல்கின்றார்கள்

இப்பொழுது உள்ள விஞ்ஞானம் பொளந்து கட்டுமல்லவா?, அதற்கு பெயர் சூட்டி, அவன் வயது என்ன? எப்படி இறந்திருக்கலாம்? இறுதியாக என்ன உண்டான்? எத்தனை இடங்களில் மச்சம் இருந்தது? சாகும்போது அவன் மனநிலை என்ன என்று புட்டு புட்டு வைத்துவிட்டார்கள்

அவர்கள் தமிழக டாக்டர்கள் இல்லை என்பதால், ஆராய்ச்சி முடிவு சரியாக இருப்பதாக உலகம் ஒப்புகொண்டிருக்கின்றது

அதன் பின்னும் அவர்கள் ஆராய்ச்சி ஓயவில்லை, அவன் கழுத்து குரல்நாணை சோதித்து, அதன் அமைப்பில் எப்படிபட்ட மொழியினை அவன் பேசியிருக்க கூடும் என்றளவிற்கு இறங்கிவிட்டார்கள்.

அவர்கள் சொன்ன பதில் உலகினை ஆட்டி வைத்திருக்கின்றது

அவன் பேசிய மொழி தமிழாக இருக்கலாம் என்கின்றார்கள், அவர் குரல்நாண் அமைப்பு அப்படித்தான் இருக்கின்றதாம், தமிழ்பேசிய அமைப்பு தெரிகின்றதாம்.

(சீன ஜப்பானிய சடலம் என்றால் அதன் மூக்கினைத்தான் நோண்டியருக்கவேண்டும், அவர்கள் அதில்தான் பேசுகின்றார்கள்)

ஆக 53000 ஆண்டுக்கு முன் தமிழ் இருந்ததை, ஒரு சடலம் மூலம் ஒப்புகொள்ள வருகின்றார்கள், வரட்டும்

எமக்கு சந்தேகம் ஒன்றே ஒன்றுதான், அதவது இப்படி சடலத்தோடு மல்லுகட்டியவர்கள் கிறிஸ்தவர்கள்.

அவர்கள் பைபிள் சொல்கிறது, மண்ணினால் உண்டாக்கபட்டவன் என்பதால் , அவன் மண்ணை குறிப்பதால் அவன் மனிதன் எனப்படுவான் என்கிறது.

அந்த மனிதனை “மனு” என்கிறது சமஸ்கிருதம்.

மனிதன் முதலில் தோன்றியதாக நம்பபடும் ஆப்ரிக்காவிலும் மனிதனின் பெயர் மண் எனும் பொருளில்தான் வருகின்றது

ஆக மானிடன், மானுடம், மனு எல்லாம் அந்த மண்ணிலிருந்து வந்த வார்த்தைகளே.

ஆங்கிலமும் மனிதனை “மண்” என்றே பொருள்படும் என்றே குறிபடுகின்றது,

இப்படி மொழிவாரியாக ஆராய்ச்சி செய்தாலே முதல் மனிதன் பேசிய மொழி தமிழ், அந்த கடவுள் பெயரிட்ட மொழி தமிழ் என ஆராய்ச்சியினை முடித்துவிடலாம்

இதற்கு சடலத்தினை வெட்டி, கழுத்தினை பார்த்து , குரல்நாண் அமைப்பினை பார்த்து முடிவுக்கு வந்தார்களாம்.

சரி இதோ ஆதாரம் கிடைத்துவிட்டதல்லவா? இனி ஒப்புகொள்வார்களா? நிச்சயமாக பிரிட்டிஷ்காரன் செய்யமாட்டான், அவனுக்கு அவனே பெருமைபாராட்டும் ரகம்

மற்ற வெளிநாட்டுக்காரன் ஏதும் அறிவிப்பினை செய்யலாம், பார்ப்போம்.

கல்தோன்றி மண்தோன்றி.. என சும்மாவே கத்துவார்கள்,

இனி பனிதோன்றி, நீர்தோன்றும் முன்னமே தோன்றிய மூத்தகுடி என கத்துவார்கள் பாருங்கள், காதை பொத்திகொள்ளவேண்டும்..


அப்போலோ அப்டேட்

 

அப்பல்லோவில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெரியண்ணன் அரசுவும் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆக அப்பல்லோ அனைத்துகட்சி கூட்டம் நடக்கும் இடமமாக மாறிகொண்டிருக்கின்றது.

இனி இவர்களை பார்க்கசெல்வது போல முதல்வரையும் நலம் விசாரித்து வர கலைஞர் விரைவில் கிளம்புவார் 🙂


முதல்வரின் ஆலோசனைபடி பன்னீர் செல்வம்….

ஆளுநர் அறிக்கைபடி, முதல்வரின் ஆலோசனைபடி பன்னீர் செல்வம் முதல்வர் துறை பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கபட்டுள்ளது.

கவனியுங்கள் முதல்வரின் ஆலோசனைபடியே முடிவு எடுக்கபட்டுள்ளதாம், எந்த முதல்வர்? அப்பல்லோவில் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நமது அதே முதல்வர்.

இதனால் கடந்த 4 நாட்களாக மக்களை குழப்பிய கேள்விக்கு விடைகிடைத்துவிட்டது

அதாவது கண்விழித்த முதல்வர் என்ன பேசினார் எனும் ரகசியம் வெளிபட்டுவிட்டது, செய்திகள் சொன்னபடியே இரண்டு வார்த்தைதான் பேசியிருக்கின்றார்.

அது இந்த இரு வார்த்தைகள்தான்

“பன்னீர் செல்வம்”


ma.jpg

எல்லோரும் முதல்வர் நலம்பெற வாழ்த்து சொன்னால், இந்த ரிட்டையர்டு ஜட்ஜ், மார்கண்டேய கட்ஜூ என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார், மனதை திறந்து கொட்டுகின்றாராம்

இவர் மனதில் என்னமோ கமலஹாசன், சல்மான்கான் என்ற நினைப்பு போலும்

எல்லாம் காலத்தின் கோலம்

பவர்ஸ்டார் நலம் விசாரிக்க போகிறார், இங்கொருவர், மலரும் நினைவுகள் வாசித்துகொண்டிருக்கின்றார்

நீங்க வரவேண்டும் அம்மா, அதே ஜெயலலிதாவா திரும்ப வரவேண்டும். இவர்களை ஓட அடிப்பதற்காகவாவது திரும்ப வரவேண்டும்

முன்னாள் நீதிபதி கட்ஜூ அடிக்கடி கலைஞரை சீண்டுவதற்கும், இந்த அவரின் முன்னாள் காதலுக்கும் சம்பந்தம் இருக்குமோ?

ம்ம்ம்…. ஆனாலும் கட்ஜூக்கு எம்ஜிஆர் இல்லை என்றவுடன் குளிர்விட்டு போச்சி,

(எனக்கும்தான் வருஷம் 16 படம் பார்த்தபின் காதல் வளர்ந்துகொண்டே சென்றது , செல்கிறது, செல்லும் )


அன்றைய செய்தி
பேச்சாளர்களில் தனி இடம் பிடித்தவர் தீப்பொறி ஆறுமுகம், ஏராளமான சுவாரஸ்ய பேச்சுக்கள் அவரிடம் உண்டு, நண்பர் ராஜ்நாயகம் கூட அவரைபற்றி எழுதியிருப்பார்

கற்பனையாக பேசி தாக்குவதில் ஆறுமுகம், அசால்ட். அப்படி அன்றொருநாள் அன்றைய முதல்வர் ம.கோ ராமசந்திரனை கிழித்தெறிந்தார். அதாவது அன்று டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் சென்னை வந்தால் இப்படி இருக்குமாம்,

(அன்று பிரதமர் மொரார்ஜ் தேசாய், ம.கோ.ராமசந்திரன் முதல்வரான புதிது, அவரின் அண்மைய படமான மீணவ நண்பன் ஓடிகொண்டிருந்தது)

கார்ட்டரும், மொரார்ஜி தேசாயும் சென்னை வருகின்றார்கள், மீனம்பாக்கம் ஏரோர்ட்டில் ராமச்சந்திரன் ஜிம்மி கார்ட்டரை வரவேற்று கைகுலுக்குகின்றார்

காரில் மூவரும் செல்கின்றார்கள், எதேச்சையாக சாலை ஓரத்தில் மீணவ நண்பன் படத்தின் கட் அவுட்டினை ஜிம்மி பார்க்கின்றார், அதில் லதாவின் மடியில் தலைவைத்து கிடக்கின்றான் சினிமா ராமச்சந்திரன்

ஜிம்மி கார்ட்டருக்கு அதிர்ச்சி, போஸ்டரை பார்க்கின்றார், எம்ஜிஆரை பார்க்கின்றார், மாறி மாறி பார்க்கின்றார். எம்ஜிஆர் புன்னகையோடு இருக்கின்றார்

ஆச்சரியபட்ட ஜிம்மி, பிரதமர் மொராஜ் தேசாயிடம் கேட்டார். அவரை போலவே இவர் இருக்கின்றாரா? அல்லது இவர் அவரை போலவே இருக்கின்றாரா?

எசிச்சலுடன் சொல்வார் மொராஜ் தேசாய்,

“அவன் தான் இவன், இவன் தான் அவன்”, அதன் பின் ஜிம்மி கார்ட்டர் தமிழகத்தை பற்றி என்ன நினைப்பான்?

இப்படி முடிப்பார் தீப்பொறி ஆறுமுகம்

அவரின் இந்த “அவன் இவன் தான், அவன் இவன் தான்..” எனும் மீணவ நண்பன் கலாய்ப்பு யார் கேட்டார்களொ இல்லையோ சமீபத்திய கவிஞர் ஒருவரின் காதினை எட்டியிருக்கின்றது

ரெமோ படத்தில் இம்சையாக பாடல் எழுதிவிட்டார்

“அவ இவதான்,இவ அவதான்” என ஒரே இம்சை, அதே வரிதான் பாடல் முழுக்க வந்ததுபோல இருக்கின்றது, வானொலியினை திறக்கமுடியவில்லை

ஆனாலும் பாடலை கேட்கும்பொழுது தீப்பொறி ஆறுமுகம் ராமச்சந்திரனை கலாய்த்த கலாய்ப்பு நினைவுக்கு வருகின்றது