இப்போதைக்கு “நாம் பூசாரிகள்”

‘சந்தன மரத்தையும் தந்தத்தையும் வீரப்பன் கடத்தவில்லை!’ : குருபூஜைக்குத் தயாராகும் சீமான்

ஆம், சந்தணமரங்கள் தானாக சென்று லாரியில் ஏறின, யானைகள் தந்தத்தை ஒடித்துகொடுத்துவிட்டு தானாக மலையிலிருந்து செத்தன. நாகப்பாவும், ராஜகுமாரும் தானாக வீரப்பனிடம் சேர்ந்து காட்டினை சுற்றிபார்த்தார்கள்.

வீரப்பன் செய்த கொலைகளும் கடத்திய தந்தங்களும், மரங்களும் நாடறியும், அவனது கடத்தல்களை சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக 100 போலிசார் கொல்லபட்டத்தையும் மறைத்து அவன் இருந்திருந்தால் காவேரி வந்திருக்கும், அப்படி இருந்திருக்கும் என்பதெல்லாம் வெறும் பிதற்றல், அப்படியானால் கன்னடன் அவ்வளவு அணைகளையும் வீரப்பனை கேட்டுத்தான் கட்டினானா?

சத்தியமங்கலத்தில் கிடைக்கும் 4 வாக்குகளுக்காக பெரும் குற்றவாளிக்கு குருபூஜை என சீமான் கிளம்பியிருப்பது நிச்சயம் கண்டிக்கதக்கது, அப்படியானால் அந்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் சாவுக்கு என்ன பொருள்? கொழுத்து செத்தார்களா?

அவர் குருபூஜை கொண்டாடபோகின்றாராம்

நாம் காட்டு பயங்கரவாதத்தினை வெற்றிகொண்ட நாளாக காவலர்களோடு சேர்ந்து வெற்றி நாளாக கொண்டாடலாம்.

அது என்னமோ தெரியவில்லை மண்டையில் அடிபட்டு செத்த தமிழனை கண்டவுடன் இனச்சாமி, குலச்சாமி , மலைச்சாமி என ஒருவித சாமி இவருக்கு இறங்கிவிடுகின்றது

ஆக காவல்துறையினை விரட்டி கொன்றவன் எல்லாம் இனி ஏதோ ஒரு சாமி என அழைக்க்படும் அபாயம் தமிழகத்தில் இருக்கின்றது, கன்னியாகுமரி லிங்கம் விரைவில் கடல்சாமி எனவும், ஆட்டோ சங்கர் ஆட்டோ சாமி எனவும், இன்னும் பலவாறு போலிசிடம் சிக்கி செத்தவர்கள் சிலசாமிகளாகவும் இந்த ஆசாமியால் அறிவிக்கபடபோகின்றனர்.

காவல்துறையோ அல்லது மருத்துவதுறையொ இம்மனிதருக்கு என்ன பிரச்சினை என விளக்காதவரை தமிழக அமைதிக்கு ஆபத்து, இது மிக தவறான வழிகாட்டால்

மலையூர் மம்பெட்டியான், கரிமேடு கருவாயன், வடலிவிளை செம்புலிங்கம் இவர்களுக்கு எல்லாம் எப்பொழுது இவர் குருபூஜை நடத்தபோகின்றார்?

இன்னும் பல ரவுடிகள் விடுபட்டிருந்தால் இவரிடம் சொல்லுங்கள், உடனே பூஜை நடத்த கிளம்பிவிடுவார் இந்த முன்னாள் பெரியார் பேரன்,

ஆனால் தற்போது பூசாரி.

இனி அப்படியே கோயில்களில் மணியாட்டி பூஜை செய்யும் திட்டம் இருக்குமோ?

இப்போதைக்கு “நாம் பூசாரிகள்”

வாருங்கள் கற்றுகொள்வோம்… கலைஞரிடம்…

வேலை செய்கின்றாயா இல்லையா? உன்னால் எப்படி இப்படி பதிந்துகொண்டே இருக்கமுடிகின்றது என பலர் கேட்கின்றார்கள்.

அவர்களுக்கெல்லாம் ஒரு பதில்தான் சொல்லமுடியும்

அண்ணா மறைந்து கலைஞர் முதல்வராகிறார்.

முதல்வர் பணி என்பது சாதாரண பணி அல்ல, பன்னீர் செல்வம் போன்றவர்களுக்கு சிக்கலே இல்லை. நாம் சொல்வது முதல்வர் முடிவெடுக்கும் பணி

ஆனால் கலைஞர் கோப்பு பார்ப்பார், முன்னால் இருப்பவரிடம் பேசிகொண்டே இருப்பார், திடீரென போனில் வீட்டில் உள்ளவர்களோடு பேசுவார், கோப்பில் கையெழுத்து வைத்துகொண்டே அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பிப்பார்.

நாற்காலியில் இருக்கும் 4 மணிநேரத்தில் 40 மணிநேரத்திற்கான வேலைகளை அவர் முடித்திருப்பார்.

அப்படி ஒரே ஒரு முதல்வரை மட்டுமே சந்தித்திருக்கின்றது அந்த கோட்டை, அப்படி ஒரு முதல்வர் இனி சாத்தியமில்லை என்கின்றது வரலாறு

பரபரவெனும் வாழ்க்கை, துறுதுறு பதிகள், கட கடவென முடிக்கும் வேலைகள் ஆனாலும் ஒன்றிலும் ஒரு பிசிறு இருக்காது, இதுதான் கலைஞரின் செயல்திறன். அவருக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படி பணிகளுக்கு இடையே வந்தவர்களை எல்லாம் சந்தித்து அனுப்பிகொண்டே இருப்பார், சிரிக்க சிரிக்க பேசிகொண்டே இருப்பார், ஆனால் காரியங்கள் மிக சிரியாக அவரால் நடத்தபட்டுகொண்டிருக்கும்

இந்த பணிகளுக்கிடையே பத்திரிகையாளர்களுக்கான பதில்களும் மனதில் ஓடும்

அப்படி எல்லாம் முடிந்து அவர்களை சந்திப்பார், செல்லும் வழியில் இலக்கிய கூட்டம் அல்லது சிறப்பு அழைப்பு கூட்டங்களில் கலந்து மணிகணக்கில் பேசுவார்.

குறிப்புகள் இன்றி மணிகணக்கில் பேசுவது அவரின் திறமை என்பார்கள், அல்ல அவர் படித்த நூல்கள் அப்படி, அவரின் நினைவு திறன் அப்படி. பட்டனை தட்டினால் வரும் கணினி போல எல்லாம் அவரின் வாயில் இருந்து வரிசையாக கொட்டும்

எந்த தலைப்பினை கொடுத்தாலும் அவரால் மணிகணக்கில் உடனே பேசமுடியும்.

மதிய உணவிற்கு பின் மீண்டும் இதே பரபரப்பு, அவ்வப்போது சூடாக எதிர்கட்சிகளுக்கும் அறிக்கை. கட்சிக்காரர்களுடனான பன்ஞ்சாயத்து இன்னபிற கட்சி சம்பிரதாயங்கள்.

தினமும் தவறாது முரசொலியில் 10 பக்கத்திற்கு எழுத்து

எவ்வளவு பரப்பான வாழ்க்கை எனினும் ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது வாசித்துவிட்டு தூங்க செல்வது

மறுபடி 4.30க்கு எழுந்து பத்திரிகை படித்து அதற்கான பதில்களையும் மனதில் ஓடவிட்டு வாழ்வினை துவக்குவது

இதில் கட்சி கூட்டம், தேர்தல் பிரச்சாரம் எல்லாம் தனி வகை.

இரு குடும்பம், ஏராளமான உறவுகளையும் அவர் கட்டி காத்திருக்கின்றார், திரைப்படம், புத்தகம் என எழுதி குவித்திருக்கின்றார்

அப்படி வாழ்வினில் ஒரு நிமிடத்தில் பல செயல்களை செய்துகொண்டே இயங்கிய , இயங்கும் மனிதர் அவர்

முதல்வராகும் முன்பு என சொல்வதை விட, 12 வயதில் இருந்தே அவரின் வாழ்வு அப்படித்தான் இருந்திருக்க்கின்றது.

அவரை மனமார ரசித்தால் அவரின் செயல்பாடுகளில் ஏதாவது ஒன்று உங்களோடு ஒட்டிகொள்ளும்.

அப்படி நான் ரசித்திருக்கின்றேன், என்னோடும் சில ஒட்டிகொண்டது, என்னால் சில விஷயங்கள் சாத்தியமாகின்றது.

நீங்களும் அவரை ரசித்து பாருங்கள், நிச்சயம் உங்களாலும் முடியும்

கற்றுகொள்ள ஏராளமான விஷயங்கள் அவரிடம் உண்டு

வாருங்கள் கற்றுகொள்வோம்…


எல்லா திமுககாரனும் என் நட்பு பட்டியலில்தான் இருந்திருக்கின்றான்,

விட்டால் நமக்கும் மஞ்சள்துண்டு போர்த்தி 5 விரலையும் விரிக்க விட்டுவிடுவார்கள் போல…

எவ்வளவு பெரிய ஆபத்து…

(சங்கத்தை உடனே கலைங்கடா……….)


 

சிறு சிறு செய்திகள்

 6 பதிவுகள்


இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான்

திராவிட கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும், சாதிய கட்சிகளோடும், தெலுங்கர் இருக்கும் கட்சிகளோடும், கூட்டணி இல்லை என இவர்கள் தீர்மானம் போட்டாயிற்று

யாரும் இவரை கூட்டணிக்கு அழைத்ததாகவும் தெரியவில்லை

ஆனால் வாலண்டியராக தனித்துபோட்டி என ஏன் கத்துகின்றார் எனவும் தெரியவில்லை, வெயில் அதிகமாக இருக்கலாமோ?

இனி நீர் தனித்து நின்றே ஆகவேண்டும் அய்யா…


டெல்லியில் திருநாவுக்கரசர் – இளங்கோவன்: மேலிடத்தில் தனித்தனியாக ஆலோசனை

# அடுத்த தலைவர் யார் என அறிக்கபடும் நேரம் வந்துவிட்டது, இனி திருநாவுக்கரசரின் பிளான், தாய் வீட்டுக்கே செல்வதாக இருக்கலாம்

பிண்ணணியில் “பல்லாக்கு வாங்கபோனேன் ஊர்வலம் போக, நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக” என பாடல் முழங்க அக்கட்சியில் இணைத்தும் கொள்வார்கள்.

சரி அப்பொழுது அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?

நமது குஷ்பூதான்.


அந்த கிறிஸ்துதாஸ் என்ன சொல்லி தொலைத்தார்? ராமரை இவர் அடிக்கவேண்டிய அவசியம் என்ன வந்ததாம்?

அப்படி என்ன ராமருக்கும் இவருக்கும் பிரச்சினை?

வீடியோ லிங்க் இருந்தால் அனுப்புங்கள்,

ஒரு கன்னத்தால் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்றவர் இயேசு,

இவர் ராமனை அடிப்பேன் என்கின்றார்,
அடிப்படை கூட புரியாமல் கிறிஸ்தவனாகிவிட்டாரா?

பைபிளை கையில் பிடித்தவுடன் தாங்கள் கிறிஸ்துவனாகிவிட்டதாக சொல்வர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கமுடியா கொடுமையாக அதிகரித்துகொண்டே செல்கின்றது,


மனநல மருத்துவர் ஷாலினி, மனநல ஆலோசகர் அபிலாஷா குறித்து சொன்ன சர்ச்சை குறித்து, மனநல மருத்துவர் ருத்ரன் கருத்து

ஆக மூன்று மனநல மருத்துவர்களுக்கும் தீர்வு சொல்ல இன்னொரு மனநல மருத்துவர் வேண்டி இருக்கின்றது,

இதற்கு மேலும் இவைகளை படிக்க ஆரம்பித்தால்….

சந்தேகமே இல்லாமல் நமக்கொரு மனநல மருத்துவர் தேவைபடுவார், ஒரே குழப்பமாக இருக்கின்றது.


சீமான் எங்கோ புகைவண்டியினை மறித்து “புரட்சி” செய்துவிட்டாராம் அங்கிளின் மங்கிகளுக்கு கடும் சந்தோஷம்.

இப்படியே மத்திய அரசு தமிழர் விரோதம் செய்தால் தமிழ்நாடு தனியாகுமாம், பின்னர் இவர்கள் ஈழம் அமைத்து அதனை தமிழகத்தோடு சேர்த்து அகண்ட தமிழ்நாடு அமைப்பார்களாம்

அவ்வளவு ஏன் அங்கிள் குரூப்ஸ்?

இந்த புதுச்சேரி பக்கம் சென்று, அதனை யூனியன் பிரதேசத்திலிருந்து நீக்கி தமிழகத்தோடு இணைத்துவிடுங்கள் பார்க்கலாம்.

அவர்கள் தமிழர்கள்தான், ஈழம் தொப்புள்கொடி என்றால் இது தோல் போல் ஒட்டிய உறவு

ஆக அங்கிள் பாய்ஸ், முதலில் புதுச்சேரியினை தமிழகத்தோடு இணையுங்கள், அதன் பின் ஈழ இணைப்பு பற்றி பேசலாம்.

புதுச்சேரியில் போய் இதனை சொல்லிபாருங்கள். அதன் பின்பு புரியும்.

(இப்பொழுது ஒருவன் வந்து கத்துவான் பாருங்கள், டேய் ஏற்கனவே பாண்டிச்சேரி தமிழகத்தில்தானே இருக்கின்றது ….)


ஒப்பந்தம் செய்யாத படங்களில் நடிக்க வற்புறுத்தல், சட்டப்படி சந்திப்பேன்: சிவகார்த்திகேயன் கடிதம்

அப்படி என்ன வற்புறுத்தல்? யார் விளக்கம் கொடுப்பார்

பாண்டேவினை தவிர யார் இப்பிரச்சினையினை உலகிற்கு அறிவிக்கபோகின்றார்கள்?,

விரைவில் அடுத்த பேட்டி நடக்கலாம்


மருத்துவர்கள் உருவாகி மானுடம் காக்கட்டும்..

நாளொரு டாக்டர்கள் வெவ்வேறு நாட்டிலிருந்து அப்பல்லோவிற்கு வருகின்றார்கள், அவர் அப்படி, இவர் இப்படி, இவர் கை பட்டால் நோய் ஓடும், அவர் பார்த்தாலோ நுரையீரல் துடிக்கும் என ஏகபட்ட அடைமொழிகளோடு அந்த டாக்டர்கள் அப்பல்லோவில் நுழைகின்றார்கள்

அப்பல்லோவின் வருமானமோ, அந்த டாக்டர்களுக்கான பண விவரங்களோ நமக்கு தேவையில்லை

ஆனால் சிந்திக்க சில விஷயங்கள் உண்டு.

இப்படிபட்ட டாக்டர்களை அவ்வப்போது வரவழைத்து தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழிகாட்ட சொல்லியிருந்தால் இதனைபோல எத்தனை டாக்டர்களை நாம் உருவாக்கி இருக்கலாம்.

இன்று அவர்களை சொடுக்குபோடும் நேரத்தில் வர வைப்பவர்களுக்கு, மாணவர்களுக்காகவும் வரவைத்திருக்க முடியும் அல்லவா? ஆனால் செய்யவில்லை.

இந்த தமிழகத்து அம்மா போல எத்தனை பேருக்கு அம்மாதிரி மருத்துவம் தேவைபடுகின்றது? எல்லோராலும் முடியுமா?

அப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கி வைத்திருந்தால் முதல்வர் உட்பட எத்தனைபேருக்கு உபயோகமாக இருந்திருக்கும்?

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் வந்தாக.., சிங்கப்பூர் டாக்டர் வந்தாக.. என செய்திகளாக வருகின்றன‌

இந்த தமிழக மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் என ஒருவரும் இல்லையா?

அல்லது எல்லோரும் பெயில் ஆகி தொலைத்துவிட்டார்களா?

இவர்களுக்கு அரசு கொட்டி கொடுத்த பணம் எல்லாம் வீணா?

ஒரு முதல்வருக்கு சிகிச்சை அளிக்க கூட தரமில்லா மருத்துவர்களையா நம் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கிகொண்டிருக்கின்றன.

இதில் இந்த படிப்பிற்கு போட்டி வேறு, பண வசூல் என ஏராளமான இம்சைகள் வேறு. தங்கள் பெரும் அறிவாளிகள் என அவர்கள் காட்டிகொள்ளும் இம்சைகள் வேறு.

விளைவு நல்ல டாக்டர்களை உலகெங்கும் தேடிகொண்டிருக்கின்றோம்.

400 ஏக்கரில் மாளிகை கட்டியிருப்பதை விட இப்படி 40 டாக்டர்களை தமிழகத்தில் உருவாக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும்?

குணம்பெற்று பணிக்கு திரும்பிய பின், முதல்வர் அப்படி பல நடவடிக்கைகளை எடுக்கட்டும், பல மருத்துவர்கள் உருவாகட்டும்.

நமது நாட்டிலும் அப்படியனான புகழ்மிக்க மருத்துவர்கள் உருவாகி மானுடம் காக்கட்டும், இனியாவது காக்கட்டும்

இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது

“இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது” : பிரதமர் மோடி பெருமிதம்

அண்ட புளுகு, ஆகாச புளுகு வரிசையில் இனி மோடி புளுகினையும் சேர்த்துவிடலாம்

இஸ்ரேலின் சாமர்த்தியம் என்ன? அஞ்சாமல் அது செய்யும் அட்டகாசம் என்ன? ஒரு வீரனை இழந்தால் அது சகட்டுமேனிக்கு 100 தீவிரவாதிகளை அசாட்ல்டாக தூக்கும் துணிச்சல் என்ன?

எல்லாவற்றிற்கும் மேல் எல்லாவற்றையும் செய்துவிட்டு அச்செய்திகள் வெளிவரா வண்ணம் பார்த்துகொள்வதென்ன?

இன்றும் உலகில் அபாயகரமனா அணுஆயுதம் அவர்களிடம் உண்டென்றாலும், என்றாவது அவர்கள் சோதித்தார்கள் என செய்தி வருமா? ஆனால் சோதித்து பார்த்து தயாராக இருக்கின்றார்கள், எப்படி? எங்கு சோதித்தார்கள் என தெரியாது, அதுதான் இஸ்ரேல்

சதாம் காலத்தில் பைலட்டோடு விமானம் கடத்தியது என்ன? சிரியாவில் புகுந்து தீவிரவாதிகளை தூக்கியதென்ன, சதாமின் அணுவுலைகளை நள்ளிரவில் தகர்த்ததென்ன? எவ்வளவு சாதனைகள்.

சொன்னால் ஒரு நாள் தாங்காது, அவ்வளவு பெரும் சமத்துக்கள் அவர்கள்.

அவர்களும்மும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா? ஏன் ஏணி வைக்க முடியுமா?

பாகிஸ்தானில் புகுந்து தாவூத் இப்ராகிமை, மசூத் அசாரை கொன்றிருந்தாலாவது கொஞ்சம் சொல்லலாம்

சும்மா அரையடி தாண்டி சுட்டுவிட்டு நானும் இஸ்ரேலும் ஒன்று என்றால்?

தெருமுனையில் ரப்பர் பாலில் சிக்ஸர் அடிப்பவனும், ஆஸ்திரேலிய வேகபந்துகளை சிக்ஸ் அடிக்கும் டோனியும் ஒன்றா?

நமது பிரதமர் அப்படித்தான் என்கின்றார், நீங்களும் நம்புங்கள்

2 வருடமாக அவரின் அடிப்பொடிகள்தான் அள்ளிவிட்டுகொண்டிருந்தார்கள், 3ம் வருடம் பிரதமரே அள்ளிவிட தொடங்கிவிட்டார்,

இன்னும் 4ம், 5ம் வருடத்தில் யார் வந்து கண்ட கண்ட கப்சாக்களை அள்ளிவிடுவார்களோ தெரியாது நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்

இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதரகம் இப்பொழுது விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருக்கும்

பரிதாபத்திற்குரிய தமிழக மக்கள்…

5001 பேர் கலந்து கொண்ட அதிமுக பால் குட ஊர்வலம்… ஸ்தம்பித்தது வேலூர்!

இனி பாருங்கள் பழனியில் பத்தாயிரம், மதுரையில் லட்சம், திருச்சியில் பல இலட்சம் என தமிழகம் முழுக்க என்னென்ன பால்கூட ஊர்வலங்கள் நடக்கும் என்று. விட மாட்டார்கள்

ஒருபக்கம் எதிர் கட்சி, உதிர் கட்சிகள் எல்லாம் போராட்டம் எனும் பெயரில் என்னவெல்லாமோ செய்து மக்களை இம்சை செய்கின்றன.

இன்னொரு பக்கம் ஆளும் கட்சியே பால் குட ஊர்வலம், அம்மா நலம்பெற ஊர்வலம் என கடும் நெருக்கடிகளை கொடுக்கின்றன‌

மக்களுக்கு கடும் இம்சை

இந்த மழைவேறு வந்து தொலையவில்லை, அது வந்து சாலைகளை சேறும் சகதியுமாக ஆக்கினால், இந்த எதிரி, உதிரி கட்சிகள் எல்லாம் சாலைபக்கம் ஆர்ப்பாட்டம் என வருமா? நெவர்.

அப்பொழுது அந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்வோர் இந்த அப்பாவி மக்களே, இந்த ஆர்பாட்டக்காரர்கள் அப்பொழுதெல்லாம் ஓய்வுக்கு சென்றுவிடுவார்கள்.

உண்மையில் மகா பரிதாபத்திற்குரியவர்கள் தமிழக மக்கள்.

அரசியல்வாதிகள் இம்சை, மழை என ஏதாவது ஒன்று அவர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதித்துகொண்டே இருக்கின்றது.

கோஹ்லியின் காதலி..

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான கோஹ்லியின் காதலியின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டது.

இதற்கு மூன்று பதில்களும் கொடுக்கப்பட்டது. அதில் ஒன்று அனுஷ்கா சர்மாவா இல்லை தீபிகா படுகோனேவா அல்லது பிரியங்கா சோப்ராவா என கொடுக்கப்பட்டது.

அதில் ஒரு பதிலை மாணவர்கள் தெரிவுசெய்ய கோரப்பட்டிருந்தது.

இதனால் குறித்த மாநிலத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணை செய்து வருகின்றனர், பள்ளியோ இது பொது அறிவு சம்பந்தமான கேள்வி என சமாளித்துகொண்டிருக்கின்றது

இன்னும் என்னென்ன பொதுஅறிவு கேள்வி எல்லாம் கேட்டு தொலைப்பார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனராம்,

மாணவர்களோ விவியன் ரிச்சர்ட்ஸ் காதலி நீனா குப்தா, பட்டோடி மனைவி சர்மிளா ,அசாரூதினின் காதல் சங்கீதா பிஜ்லானி என பல வரலாற்று சிறப்புமிக்க வரலாறுகளை தேடி படிக்க தொடங்கிவிட்டார்களாம்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இவ்வாறான கேள்விகள் கேட்கபட்டு அதில் நயன் தாரா சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் அவர்கள் நண்பர் Babu Rao அவர்களை அணுகினால் அரைநொடியில் தீர்த்து வைப்பார்.