தமிழக எம்பிக்கள் ராஜிமானாமா செய்ய வேண்டுமாம்…

காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்:பெ.மணியரசன்

அதாவது தமிழகம் மத்திய அரசினை எதிர்க்கவேண்டுமாம், மத்திய எம்பிக்கள் ராஜிமானாமா செய்யவேண்டுமாம், நிலக்கரி நிலையங்கள் செயல்பட கூடாதாம்,

கன்னட சினிமாவோடு தமிழகம் தொடர்புகொள்ள கூடாதாம், மத்திய அரசின் தமிழக நிறுவணங்களில் பணியாற்றுவோர் உள்ளே இருக்கவேண்டுமாம்,

கன்னடத்திலிருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்ய கூடாதாம், இது ஒத்துழையாமை போராட்டமாம்

மத்திய அரசுக்கு வரிகட்டுவது பற்றி பேச்சே இல்லை, எப்படி பெட்ரோல் டீசல் கையாள்வது என சத்தமே இல்லை

இப்படி இந்தியாவிலிருந்து துண்டித்தால் தமிழக உற்பத்திகளை எங்கே கொண்டு கொட்டுவார்? அது தேங்காதா?

தமிழக கோழியும், மீனும் இன்னும் பல பொருட்களும் எங்கு செல்லும்???

இன்னும் ஏராளமான காமெடி கருத்துக்களை சீரியசாக சொல்லி இருக்கின்றார்கள்

நெய்வேலி மின்சாரத்தை தமிழர்கள் தடுக்கவேண்டுமாம்? எப்படி என சொல்லவில்லை,

மின்கம்பியினை பிடித்து தொங்கியா?

ஆக கொஞ்சமேனும் வாய்ப்பே இல்லா விஷயங்களை சொல்லி போராடவேண்டும் என்கின்றார்

கன்னட சினிமாவோடு உறவு கொள்ளவே கூடாதாம்

நடக்குமா?

சரோஜா தேவியினையே இன்னும் மறக்காதவன் தமிழன், இப்பொழுது அனுஷ்கா காலம் வேறு, முடியுமா?

தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம், அப்படியா சரி, இந்த கோரிக்கையினை சசிகலா புஷ்பாவிடம் முதலில் சொல்லிபாருங்கள்.

அப்பல்லோ முன்பு அங்கபிரதட்சணம் …

அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் அங்கபிரதட்சணம்

பொதுவாக தெய்வம் வாழும் ஆலயத்தினை சுற்றித்தான் இம்மாதிரி எல்லாம் உருளுவார்கள், வரலாற்றிலே முதன்முறையாக ஒரு மருத்துவமனையினை , அதுவும் ரத்தமும் மருந்தும் புரளும் இடம் என சொல்லபடும் மருத்துவமனையினை சுற்றி உருண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கென்ன அவர்கள் தெய்வம் உறையுமிடம் அவர்களுக்கு கோயில் அவ்வளவுதான்,

இது பகுக்காத அறிவு, மூட நம்பிக்கை, பக்தி எல்லாவற்றையும் தாண்டி சென்றுவிட்ட நிலை, தெய்வத்திடம் கோரிக்கை வைப்பது வேறு விஷயம், இவர்கள் செய்வது இன்னொரு கோணம்.

அதாவது பாதிக்கபட்ட நோயாளிடமே “மகமாயி எப்படியாவது பிழைத்துவிடு அம்மா..” என கதறும் விசித்திர கலாச்சாரம்,

இதுவரை கண்டதுமில்லை இனி காணபோவதுமில்லை

இனி அப்பல்லோ நிர்வாகம் மொட்டை அடித்தல், தீ மிதித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கிகொடுத்தல் நல்லது

இருந்து பாருங்கள், விரைவில் இவர்கள் விரைவில் எல்.ஆர் ஈஸ்வரியினை அழைத்து வந்து அப்பல்லோ வாசலில் “செல்லாதா செல்ல மாரியாத்த்தா..” என பாட விட்டுவிடுவார்கள்.

நாம் நரிகள் !!!

Image may contain: 7 people

 வீரப்பன் வனக்காவலன், இனச்சாமி என ஒரே அட்டகாசம், அவர் நல்லவர், காட்டை காத்தவர், வள்ளல், கன்னடனை அடக்கிய தமிழன் என இன்னபிற அடைமொழி வாழ்த்துக்கள்

அப்படியா என்றால் ஆம் அவர் எப்படி மானமுள்ள, வீரமுள்ள தமிழர் என்கின்றார்கள்.

இந்த நல்லவரையா கொன்றுவிட்டார்கள் என்றால், கண்கள் சிவக்க ஆம் அது எவ்வளவு பெரிய தமிழின அடக்குமுறை படுகொலை தெரியுமா? என கொந்தளிக்கின்றார்கள்

சரி சுட்டுகொன்றது ஜெயலலிதா அரசுதானே, இவ்வளவு பெரும் நல்லவனை சுட்டுகொன்ற அந்த அரசினை கண்டித்து ஒரு சத்தமும் இல்லையே ஏன் என்றால்

அது..ஹிஹிஹி.. அரசு..போலிஸ்….ஹிஹி ஹிஹிஹிஹி ஒரு மாதிரி கண் சிமிட்டுகின்றார்கள்,

மறு நொடியில் வீரப்பன் இனக்காவலன் என்கின்றார்கள்.

செத்தவன் மகா நல்லவன், கொன்ற அரசும் மகா கெட்டிக்கார நேர்மையான அரசு,

எப்படிபட்ட தத்துவம் பார்த்தீர்களா?, இதுதான் சீமானிசம்

பேசாமல் இப்படி பெயரினை மாற்றுங்கள்

“நாம் நரிகள்”

மூட்டை கட்டும் பரக் ஒபாமா!!!

ஓபாமா மூட்டை முடிச்சுகளை வெள்ளை மாளிகையில் கட்டிகொண்டிருக்கின்றார்.

இறுதிகட்ட தொலைகாட்சி விவாதத்தில் ஹிலாரியும், டிரம்பும் தம் கட்டி பின்னிக்கொண்டிருக்கின்றனர்.

என்ன இருந்தாலும் இன்றைய உலகின் நம்பர் 1 வல்லரசு நாடு, அதன் பாதிப்பு எல்லா நாடுகளிலும் உண்டு. அதன் தேர்தலும் அதிபரின் கொள்கையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்றைய நிலையில் உலகின் எல்லா நாடுகளையும் பாதிக்கும்

அவர்களின் ஒற்றைகொடி உயர பறக்கும் காலம், ஜாதகத்தின் எல்லா கட்டத்திலும் குருவும் சுக்கிரனும் இருக்கின்றார்கள், கூடுதலாக 4 கட்டம் போட்ட ஸ்பெஷல் ஜாதகம் அவர்களுடையது.

டிரம்பும், ஹிலாரியும் கடும் வாதம்.

அந்த நாட்டு நிலை அப்படி இருக்கின்றது, டிவிக்களில் அதிபர்களே நேருக்கு நேர் நின்று பதிலுக்கு பதில் சொல்லிகொள்கின்றார்கள்

மக்கள் கவனிக்கின்றார்கள்

நமது நாட்டில் கட்சி அல்லக்கைகளும், மக்களும் மோதிகொண்டிருப்பார்கள், தலைவர்கள் அமைதியாக அவரவர் இல்லங்களில் இருப்பார்கள்.

நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு “ஜனநாயக” வித்தியாசம்

அவ்வளவு ஏன்? அவர்களின் ஊடகங்களுக்கும் நமது ஊடகங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்

இந்த பாண்டேயோ, இந்த கோபிநாத்தோ சந்தையில் காய்கறி பொறுக்குபவன், துண்டுபீடி குடித்துகொண்டு மண்சுவர் மேல் குந்தியிருப்பவன், கடற்கரையில் சும்மா மல்லாக்க கிடப்பவன்,

சும்மா அள்ளிவிடும் உளறுவாயனை எல்லாம் பிடித்து கேள்வி கேட்பதை போல இல்லாமல்

அமெரிக்க ஊடகம் ஒரே மேடையில் இருவரையும் விவாதம் செய்ய வைப்பது போல‌

கலைஞரையும் ஜெயலிதாவினையும் அமர வைத்து விவாதம் செய்ய வைத்தால் எப்படி இருக்கும்?

செய்ய முடியுமா? செய்ய முயற்சித்தாலே ஸ்டூடியோ இருக்காது, அதனை மீறி ஏதும் நிகழ்ச்சி நடந்தால், நாமகவே அடித்து மோதிகொள்வோம்.

அமெரிக்காவில் மக்களாட்சியின் பொருள் வேட்பாளர், ஊடகம், மக்கள் என எல்லோருக்கும் தெரிகின்றது.

தமிழகத்தில் மக்களாட்சி என சொல்லிகொள்கின்றோமே தவிர, மனதால் இன்னும் மக்களாட்சியின் மகத்துவம் இன்னும் புரியவே இல்லை

அந்நிலைக்கு வர இன்னும் நெடுநாளாகும், அதற்கு முன் தமிழகம் மனிதர்கள் வாழமுடியாத நிலைக்கு சென்றாலும் ஆச்சரியடுவதற்கில்லை.

கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்…

கிறிஸ்துதாஸ் காந்தி எனும் அரை கிறிஸ்தவரை போட்டு தாக்கிகொண்டிருக்கின்றார்கள், அம்மனிதரும் கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கின்றார்.

சில விஷயங்களை ஒப்புகொண்டே ஆகவேண்டும், அதில் யோசிக்க ஒன்றுமே இல்லை

இந்தியா இந்து சகோதாரர்கள் 80% நிரம்பி இருப்பதால், சர்வ நிச்சயமாக அது இந்து நாடே. இந்துநாடுதான்

எல்லா நாட்டிலும் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயம் தேசிய சமயமாக அங்கீகரிக்கபடும் உலகில் இந்நாடும் இந்துநாடு என்றுதான் அறியபடவேண்டும், அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

அதிலும் இந்நாடு எல்லா மதத்தவருக்கும் சம உரிமை கொடுத்திருக்கின்றது, அவரவர் அவர்கள் சமயத்தை பின்பற்றவும், வழிபாடுகள் செய்யவும், சமயகடமைகளை நிறைவேற்றவும் எந்த சிக்கலும் இங்கு இல்லை

எல்லா மத கொண்டாட்டமும் நன்றாகவே,சுதந்திரமாகவே நடக்கின்றது

இதில் சிக்கல் எங்கு வருகின்றது?

இந்த சுதந்திரத்தினை பயன்படுத்தி, அடுத்த மதத்தினரை வம்புக்கு இழுப்பதில் சிக்கல் தொடங்குகின்றது.

நாம் இந்த மதத்தில் இருக்க காரணமே 4 பேரை மதம்மாற்றி இங்கு சேர்க்கத்தான் எனும் மனநிலையே அதற்கு காரணம், இதில் அரைகுறை கிறிஸ்தவர்கள் ஆபத்தானவர்கள்.

அவர்கள் மனதில் அவர்களை பால், இராயப்பர் எனும் ஆதி அப்பஸ்தோலராக நினைத்துகொள்கின்றார்கள், ஆனால் அவர்கள் பட்ட பாடுகளில் கொஞ்சம் கூட பட துணியவில்லை.

குண்டுசட்டியில் குதிரையோட்டி, தெருமுனையில் கத்திகொண்டு என்னவெல்லாமோ செய்கின்றார்கள், எல்லாம் பெரும் அட்டகாசம், அழிச்சாட்டியம் இன்னும் ஏராளம்

மதம் மாறினால்தான் உன்னை ஏற்றுகொள்வேன் என சொல்லும் கடவுள், நிச்சயம் சொத்துக்களை எனக்கு கொடுத்தால்தான் உன்னை உறவாக ஏற்றுகொள்வேன் எனும் நரிதந்திர உறவினருக்கு நிகரனாவர்.

நிச்சயம் கடவுள் அப்படி இருக்கமுடியாது

அவரவவர்க்கு விரும்பிய வழியில் அவரை வழிபட்டுகொண்டிருக்கலாம், அவ்வளவுதான் விஷயம்

இதில் இந்த இந்திய கிறிஸ்தவர்களுக்கு என்ன சிக்கல் என புரியவே இல்லை.

ஆனானபட்ட இயேசு கிறிஸ்து தன் போதனையில் சொன்னார்,”கடவுளுடையதை கடவுளுக்கும், அரசுக்குரியதை (ரோமை அரசுக்கு) அரசுக்கும் செலுத்துங்கள்”

அதாவது ரோமையரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த யூதர்களுக்கு அவர் அதனை சொன்னார், “யார் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம் என்பது முக்கியமே அல்ல, கடவுளுக்குரிய வாழ்க்கையினை வாழுங்கள்”

இதனை இந்த இந்திய கிறிஸ்தவர்கள் சுத்தமாக மறந்துவிடுகின்றனர்.

இன்றைய உலகில் இஸ்லாமிய நாடுகள், யூத நாடான இஸ்ரேல், சில புத்த நாடுகள், சில கம்யூனிச நாடுகள், சில மன்னராட்சி நாடுகள் என எல்லா இடத்திலும் கிறிஸ்தவர்கள் உண்டு.

கிறிஸ்தவ நாடுகளிலும் பிரிவினை கிறிஸ்தவர் மெஜாரிட்டியான நாடுகளில் கத்தோலிக்கருக்கும், கத்தோலிக்கர் ஆளும் நாடுகளில் மைனாரிட்டி பிரிவினை கோஷ்டிகளுக்கும் முணுமுணுப்பு உண்டு.

அவர்கள் எல்லாம் அரசு வேறு, மதம் வேறு என மிகசரியாக பிரித்துபார்க்கின்றார்கள்.

ஆனால் இங்கு அப்படி அல்ல, கிறிஸ்துவத்தினை வைத்து அரசியல் செய்கின்றார்கள், இந்நாடு மதசார்பற்ற நாடாக இருந்தே தீரவேண்டுமாம்.

இந்நாடு மதசார்பாக இருந்தால், இவர்களுக்கு என்ன அழிந்துவிடபோகின்றது, அல்லது மதசார்பற்ற நிலை இருந்தால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிட போகின்றது?

இது மதசார்பு நாடென்றவுடன், இவர்கள் குடியுரிமையினை பறிக்கபோகின்றார்களா? இல்லை நாட்டை விட்டு விரட்டபோகின்றார்களா?

அப்படி செய்துவிடமுடியுமா? எத்தனை லட்சம் இந்துக்கள் உலகெங்கும் வசிக்கின்றார்கள், அவர்களுக்கெல்லாம் சிக்கல் வராதா?

உலக நாடுகளில் எல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக வாழவில்லையா, மிக சிறிய குழுவாக பெரும் சக்திகளுக்குள் வசிக்கவில்லையா?

ஆக உலகிலே இவர்கள் மட்டும்தான் கிறிஸ்தவர்கள் போலவும், இந்தியாவில் இவர்களை அழிக்க பெரும் சதி நடப்பது போலவும், இந்தியா மதசார்பான நாடு ஆனதென்றால் இவர்களை எல்லாம் இந்திய கடலில் வீசபோவதை போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்.

அரைகுரை விஞ்ஞானம் ஆபத்து என்பார்கள், இந்த அரைகுறை கிறிஸ்தவர்கள் அதனை விட ஆபத்தானவர்கள்.

இதில் நரித்தனமும் ஒளிந்திருக்கின்றது, ஒருவேளை இவர்கள் 80% இருந்து இந்துக்கள் 20% இருந்தால் என்ன ஆகியிருக்கும், இந்நாடு கிறிஸ்துவநாடாக இருந்தே தீரவேண்டும், கர்த்தருக்கு ஸோஸ்திரம் என கிளம்பி, பெரும் இம்சை செய்திருப்பார்கள்

இஸ்லாமியர் பெருவாரியாக இருந்தாலும் இதே நிலையே

இந்த தேசத்தின் அமைதி அந்த 80% இந்து நண்பர்கள் அமைதியாக இருப்பதில்தான் தங்கி இருக்கின்றது

இதனை குறிவைத்து வெள்ளையன் விதைத்த விதைதான், தேச பிரிவினையும், இன்றுவரை தொடரும் ராமர் கோவில் சர்ச்சையும்

ஆக இந்துமக்களை அமைதியாக இருக்கவிடுங்கள், அவர்களை சீண்டாதீர்கள்

இந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரே கேள்விதான்

நீங்கள் கிறிஸ்துவினை ஏற்றுகொண்டு அவர் வழியில் நடப்பவர்கள், அதாவது இயேசுவே உங்கள் பிராதனம், பரலோகத்தில் கிடைக்கபோகும் அந்த நித்திய ஜீவனுக்காக நீங்கள் இந்த அற்ப மானிட பிறவி எடுத்து, இவ்வுலகில் போராடிகொண்டிருக்கின்றீர்கள்

இதில் நீங்கள் இந்தியாவில் வசித்தால் என்ன? இத்தாலியில் வசித்தால் என்ன? இல்லை இந்தோனேஷியாவில் வசித்தால் என்ன?

பரலோகத்திற்கான வாழ்விற்கான ஏற்பாடுகளை எந்த நாட்டில் இருந்து தயாரித்தால் என்ன? நாடா முக்கியம் பரலோகம் தானே முக்கியம்.

உங்கள் ஆவியினை பரமன் இயேசு ஆட்கொண்டபின் , இந்த உடலெனும் கூடு எந்த நாட்டில், யார் ஆளுகைக்குள் இருந்தால் அதுபற்றி உங்களுக்கென்ன கவலை?

கிறிஸ்து மறுபடி வரும்பொழுது மகனே? நீ எந்த நாட்டில், எந்த ஆட்சியின் கீழ் இருந்தாய்? என்றா கேட்பார்?, நல்ல கிறிஸ்தவனாக இருந்தாயா இல்லையா? என்றுதானே கேட்பார்?

அவருக்கு நாடும், அரசும் முக்கியமா? உங்கள் ஆன்மா முக்கியமா?

அவரே ரோமையரின் ஆட்சியின் கீழ் அமைதியா வாழ்ந்தவர், ஒரு வார்த்தை அவர் ரோமையரை எதிர்த்து பேசியிருப்பார்?, ஆட்சி மோசம், ரோமானியர் மதசார்பற்ற முறையினை கடைபிடிக்கவேண்டும் என எங்காவது அவர் சொன்னாரா?

அவர் சொன்னதெல்லாம் அரசனை பற்றி ஏன் கவலைபடுகின்றீர்கள், அவர்கள் எல்லாம் வானக தந்தையால் அதிகாரம் கொடுக்கபட்டவர்கள் என்ற வகையில்தான் இருந்தது,

பின் இந்நாடு மதசார்பாகவோ அல்லது மத சார்பற்றோ இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

உண்மையில் உங்களுக்கு என்ன பிரச்சினை தெரியுமா?

உங்கள் கிறிஸ்தவ விசுவாசம்தான் பிரச்சினை

இந்நாட்டு அரசு எப்படி அமைந்தாலும், எந்தமாதிரி அரசு அமைந்தாலும் கிறிஸ்து எங்களை காப்பார் எனும் விசுவாசம், அந்த நம்பிக்கை இருந்தால் இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்ய மாட்டீர்கள்.

இயேசுவிக்கு பின்னான ரோமர் காலத்து அட்டகாசம் படியுங்கள், எப்படி எல்லாம் கிறிஸ்துவத்தை அழிக்க துடித்தார்கள். அன்று கிறிஸ்தவம் இருந்தது மிக சிறிய பகுதிகளே

ரோமை வல்லரசுக்கு அது மிக சுலபாமன வழியே, ஆனால் முடியவில்லை, ரத்த கடலில் ரோம் மிதந்தும் முடியவில்லை.

இந்தியாவில் என்ன அப்படியா நடக்கின்றது?, இங்கு எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு சலுகை

கிறிஸ்தவர்கள் கல்லூரி, மருத்துவமனை, ஜெபகூட்டம் என என்னவெல்லாம் செய்யமுடிகின்றது, என்ன குறையினை கண்டீர்கள்?

முதலில் அதற்கு கிறிஸ்துவிடம் நன்றி செலுத்துங்கள், அதற்கு மேல் நல்ல விசுவாசத்தை வளர்த்துகொள்ளுங்கள்

அப்படி செய்தால் எல்லாவற்றையும் புன்னகையோடு கடந்து செல்வீர்கள், இப்படி வீண் சர்ச்சையில் சிக்கி, சமூக அமைதியினை கெடுக்க மாட்டீர்கள்

முதலில் கிறிஸ்துவத்தை நன்றாக படியுங்கள், இந்த நற்செய்தி அறிவித்தல் எனும் இம்சைகளுக்கான உண்மையான பொருள் விளங்கும், பெருமாள் கோயில் புளியோதரை போல எல்லாம் பரிசுத்த ஆவியினை அள்ளிகொடுக்க முடியாது என்பதும் விளங்கும்

ஆக முதலில் நல்ல கிறிஸ்தவராகுங்கள், அப்படி ஆகிவிட்டால் எதனையும் கடந்துபோகும் மனநிலை வரும், எல்லா மதங்களையும் மதிக்கும் ஒரு மனமும் வரும்

அதுதான் கிறிஸ்து போதித்த சகோதரத்துவம்.

இந்த நாடு மதசார்பா, இல்லையா என்ற சர்ச்சைக்கு பைபிளிலே பதிலிருக்கின்றது, அரசுக்குரியதை அரசனுக்கு செலுத்துங்கள், நல்ல குடிமக்களாக இருங்கள் என அதுவே சொல்கின்றது.

முதலில் அதனை செய்யுங்கள், சகோதரத்துவத்தினை வளருங்கள்

ராமரை ஏன் அடிக்கவேண்டும்?

முதலில் உங்கள் விசுவாசத்தினை கேள்வி கேட்டு உங்களையே செருப்பால் அடித்துகொள்ளுங்கள்,

இத்தேசம் பிரச்சினையே அல்ல, உங்களுக்கு நீங்களேதான் பிரச்சினை.

முதல்வர் மீது எவ்வளவு அன்பு?

முதல்வர் நலம் மீது கட்சிக்காரர்கள் அக்கறை கொண்டு அப்பல்லோவில் காத்திருப்பதும், அமைச்சர்கள் முடிந்தால் வானம் வரை சென்று கடவுள் கையினை பிடித்து வரும் அளவிற்கு வழிபாடு செய்வதும் ஆச்சரியமல்ல‌

எதிர்கட்சிகள் சென்று நலம் விசாரிப்பது அரசியல் நாகரீகம் என்ற வகையில் வரும், பிரதமர் அலுவலகம் தலையிடுவது நிர்வாகம் என்ற வகையில் வந்தே தீரும்.

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

ஆனால் முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானியும், அதானி மகனும் அலறி அடித்து வந்து அப்பல்லோ வாசலில் நிற்பதுதான் மகா ஆச்சரியம்.

அப்படி என்ன அவர்களுக்கு முதல்வர்மீது அவ்வளவு அன்பு?

அன்பெல்லாம் இருக்கமுடியாது, ஆனால் தமிழகத்தில் அவர்கள் முதலீடு எங்கெல்லாமோ இருக்கலாம், இன்னும் வரும் திட்டத்திலும் இருக்கலாம்

அம்பானி, அதானி குடும்பம் வந்து விசாரித்தாகிவிட்டது, அடுத்தது சிவநாடாராக இருக்கலாம்

யார் யாரோ வருகின்றார்கள், இன்னும் வருவார்கள்

ஆனால் கடந்தவருடம் கரகாட்டம், ஒயிலாட்டாம் கொடுத்து வரவேற்ற அந்த தொழிலதிபர்கள், அதாவது கிட்டதட்ட 2 லட்சம் கோடி முதலீடு செய்த அந்த தொழிலபதிபர்களை காணவில்லை

ஒருவேளை முதல்வரே சிக்கலில் இருக்கும்போழுது, 2 லட்சம் கோடி எப்படியும் போகட்டும் என கடந்துவிட்டு அழுதுகொண்டிருப்பார்களோ?

அந்த முதலீடுகளை என்ன ஆனது?, தெரியாது

ஆக கடந்த வருடமே பெரும் வதந்தி மேள தாளம் முழங்க, கரகாட்டம் ஒயிலாட்டம் நடக்க, பரப்பபட்டிருக்கிறதா? என்பதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.

ஆனாலும் உலக வரலாற்றிலே, பெரும் கொண்டாட்டத்தோடு , பெரும் நடனங்களோடு ……,