அம்மா … இது வேற கணக்கு….

தொடர்ந்து இருமுறை அபாரமாக வென்றவர் ஜெயலலிதா, பாராளுமன்றதேர்தலிலும் தமிழக வெற்றி அவருக்கே

தமிழக தேர்தலில் 4 மாதம் முன்பு, தமிழகத்தின் பெருவாரியான மக்கள் அவரைத்தான் ஆதரித்து முதல்வராக்கினார்கள்

இதோ தீபாவளி நேரம் முதல்வர் மருத்துவமனையில் இருக்கின்றார்

ஆனால் ஜவுளிகடை, சந்தை என எல்லா இடங்களிலும் அதே மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது என்கின்றார்கள், பாதி தமிழகம் ஜெயலலிதாவினை ஆதரித்திருந்தது உண்மை என்றாலும் இன்று அங்கெல்லாம் பாதி கூட்டம் குறைந்திருக்கவேண்டும் அல்லவா?

இல்லை எல்லா மக்களும் மிக மகிழ்வாக தீபாவளி ஷாப்பிங் செய்கின்றார்களாம், இதில் வட்ட, மாவட்ட, ஒன்றிய செயலாளர்களின் குடும்பமும் உண்டாம்

“இந்த மக்களுக்ககாகவா தவ வாழ்வு வாழ்ந்தார் அம்மா?” என்ன கொடுமை

இதனை எல்லாம் குறித்து வைத்திருக்கின்றார்களாம், நம்பிகைக்குரிய சு.சாமியே ஜெயா வீடு திரும்புவதை அறிவித்துவிட்டார்

அவர் வரட்டும், அதன் பின்பு தெரியும்,

அக்பர்

  தோற்றம் : 15-10-1542         ::   மறைவு 27-10-1605

இந்தியாவினை எத்தனயோ அரசர்கள் ஆண்டனர், அவற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிடதக்கவர் அக்பர், மகா அக்பர்.

பாபரின் பேரன், எப்படியோ அனாதையாக திரிந்திருக்கவேண்டியவனை வளர்த்து அரசனாக்கினார் தாய் மாமன் பைரம்கான். அக்காலத்தில் அப்படிபட்ட ராஜவிசுவாசிகள் இருந்திருக்கின்றார்கள், இக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை, கொஞ்சம் அசந்தாலே தூக்கி கடாசிவிட்டு அமர்ந்துகொள்வார்கள்

அதனை காக்க சிரிய அதிபர் போல விடாபிடியோ அல்லது கலைஞர் போல மனதால் தூங்கா நிலையும் வேண்டும், அதனால்தான் விழிக்கும்பொழுதும் அவர் திமுக தலைவராகவே விழிகின்றார்.

அக்பர் அரசனானதும் நல்ல ஆட்சிதான் நடத்தி இருக்கின்றார், ஒரு விஷயம் அவருக்கு புலபட்டிருக்கின்றது, மனிதர் புத்திசாலி உணர்ந்துகொண்டார்.

இந்நாட்டில் ஆளலாம், ஆனால் மதரீதியான எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும், நம்க்கு முன்னாலும் பல இஸ்லாமியர் ஆண்டார்கள், ஆனால் ஏன் இந்நாட்டினை இஸ்லாமிய நாடாக மாற்றமுடியவில்லை

முடியாது, அது முடியவே முடியாது. இந்நாடு இந்துக்களின் நாடாகவே இருக்கும், நாம் இறங்கி போவோம் வேறுவழி இல்லை, இல்லாவிட்டால் ஆளமுடியாது.

அப்படி இந்நாட்டில் ஆட்சிபுரிய இந்துக்களின் ஆதரவு தேவை என முதலில் அவர்தான் சிந்தித்தார், சிந்தித்ததோடு மட்டுமன்றி ராஜபுத்திர இளவரசியினையும் மணம் புரிந்தார்.

ஒரு இஸ்லாமிய மன்னனுக்கு அது சவால், ஒரு வகையில் தோல்வியும் கூட‌

ஆனால் ராஜபுத்திரர்களின் மாப்பிள்ளையாகாமல் இனி அமைதியான ஆட்சி சாத்தியமில்லை என அவருக்கு வேறுவழி இல்லை.

அதன் பின் அவர் சிந்தனை மாறி இருக்கின்றது

இஸ்லாமை தவிர மற்ற மதங்களையும் நேசித்தார், ஒருங்கிணைந்த மத நல்லிணக்கமே இந்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என அன்றே சிந்தித்திருக்கின்றார்.

அன்றைய சீக்கியம், இஸ்லாம், இந்து, அன்றே இங்கு அலைந்த இயேசு சபை குருக்களை எல்லாம் தன் அரண்மையில் அமரவைத்து தீன் இலாஹி என புதிய மத தத்துவத்தை அறிவித்திருக்கின்றார், அதாவது இந்து, இஸ்லாம், சீக்கியம் கலந்த அமைதி வழி

(இஸ்லாமும் கிறிஸ்தவமும் வேறு அல்ல, ஆனால் வளர்ந்த கலாச்சாரம் வேறு. இது அக்பருக்கு புரிந்திருக்கின்றது, இரண்டையும் அவர் ஒரே கொள்கையாக கண்டிருக்கின்றார்.

நிச்சயமாக அவர் மேதை, நம்மவர்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரியாது)

அதில்தான் முகல் இந்தியா அமைதியாக இருந்திருக்கின்றது, செல்வம் கொட்டியிருக்கின்றது, தாஜ்மஹால் வரை எழும்பி இருக்கின்றது

பின்னாளில் இவரின் கொள்ளுபேரன் அவுரங்கசீப் மதத்தை பிரதானமாக்கி சில காரியங்களில் இறங்க, அது சிவசேனா எனும் வீரசிவாஜியின் எழுச்சிக்கு வித்திட்டது, அதன் பின் மொகல் வம்சம் வீழ்ச்சியினைத்தான் கண்டது

இந்திய யதார்த்தத்தை அதாவது சமய நல்லிணக்கமே இந்நாட்டின் வளர்ச்சியினை தீர்மானிக்கும் என முதலில் சிந்தித்த மன்னர் அவர்.

நல்ல புத்திசாலியாகவும் இருந்திருக்கின்றார், கலை ஆர்வமும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்ல ஒரு நகரம் வேண்டும் என அலெக்ஸாண்டர் பாணியில் ஒரு நகரத்தினையும் நிர்மானித்து, சில நூல்களையும் எழுதி வைத்திருக்கின்றார்

இன்று அவரின் நினைவு நாள்

இந்தியாவின் மிகசிறந்த மன்னரான அவரின் கதை ஜோதா அக்பர் என மிக அழகாக எடுக்கபட்டிருந்தது, இந்தியாவின் மிக சிறந்த 10 படமாக கொண்டாடியிருக்கவேண்டிய படம் அது

அரண்மனை, படை, உடை, உணவு, தர்பார் அமைப்பு என எல்லாமே மகா பெர்பெக்சனாக அமைந்த படம் அது, அக்பர் காலத்திற்கே அழைத்து சென்றது

ஆனால் வடக்கத்தியர் வழக்கம் போல கொதித்தனர், இது சரியல்ல என ஆயிரம் வசனங்கள் பேசினர், நாங்கள் சொல்வதுதான் வரலறு என குதித்தனர், அப்படம் பெறவேண்டிய வெற்றியினை பெறவில்ல.

ஆனால் மிக அழகாக அமைக்கபட்ட வரலாற்று படம் அது, மிக ரசித்து பார்த்தபடம், ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் மிக அழகான தேர்வுகள்

அப்படம் பார்க்கும் பொழுது மருதநாயகம் படத்திற்கு மிக பொருத்தமான நடிகராக கமலஹாசன் வருவாரா? என்றே சிந்திக்க தோன்றியது, கமல் மிக திறமையானவர், சந்தேகமே இல்லை மகா அழகானவர், இன்றளவும் தோழி Uma Magi போல பெரும் ரசிக பட்டாளமே கொண்டவர்

ஆனால் ஆஜானுபாகுவான கேரக்டருக்கு தமிழில் நடிகர் நெப்போலியன் போன்றவர்கள்தான் செட்டாவர்கள், தனுஷினை எல்லாம் மருதநாயகமாக கற்பனை செய்யுங்கள், சிரிப்பு தானாக வரும்.

இந்த பேராசிரியர் வேல,ராமமூர்த்தி இளமையாக இருந்தால் சந்தேகமே இல்லை, மனிதர் மருதநாயகத்திற்கு அழகாக பொருந்துவார்,

கம்பீரம் அவருக்கு அமைந்திருகின்றது,

அவரின் அந்த கம்பீர நடிப்பிற்காகவே கிடாரி படத்தினை பார்க்கமுடிந்தது, சசிகுமார் எல்லாம் அப்படத்தில் சும்மா, வேல.ராமமூர்த்திதான் ஹீரோ, அது அவர் படம்தான்.

அட நம்ம சத்தியராஜ் கூட அட்டகாசமாக பொருந்துவார்.

ஆனால் கமல் படம், எல்லா வேடங்களிலும் கமலே வரும் சாத்தியம் உண்டு , சரி அது மருதநாயகம் பாடு விட்டுவிடலாம்

அக்பரை நினைக்கும் பொழுதெல்லாம், அம்மனிதர் இந்தியாவிற்கு விட்டு சென்ற அடையாளம் நினைவுக்கு வருகின்றது, மிக அழகான கட்டடம், கலைபொருட்கள், யுத்த நுட்பம் என பல உண்டு.

தான்ஸேன் எனும் இசைகலைஞனை அவர் ஆதரித்த விதமே அவரின் கலை மனதிற்கு எடுத்துகாட்டு

கோட்டை கட்ட தோதான இடங்களை தேர்ந்தெடுத்ததில் மனிதர் நிற்கின்றார், ஆக்ரா கோட்டை அவரால் உருவாக்கபட்டு பின் தாஜ்மகால் அங்கே அமைய அடித்தளமானது

மிக முக்கியமாக நல்ல மந்திரி சபையினை வைத்திருந்தார், நவரத்தினங்கள் எனபபடும் 9 அறிவு ஜீவிகளை தன்னோடு வைத்திருந்தார்.

இன்று அதே இந்திய அரசு, மோடி அரசவை ஆனால் அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ளும் அமைச்சர்கள் இல்லை, ஆனால் இதுபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, பேசினால் தேசதுரோகம் ஆகிவிடும்,

ஒரு மோடி 100 அக்பருக்கு சமம், ஜெட்லி அக்பரின் புகழ்மிக்க நிதியமைச்சர் தோடாமால் போல 1000 பேருக்கு சமம் என சொல்லிவிட வேண்டும், சொல்லியாயிற்று

மன்மோகன் பரவாயில்லை, சிதம்பரம், சசிதரூர் என பல திறமையான அடையாளங்கள் அவர் ஆட்சியில் இருந்தன,

அந்த நல்ல அமைச்சரவைக்கு கண் திருஷ்டி பரிகாரமாக அழகிரி போன்றவர்களும் இருந்தனர்.

அக்பர் போற்றபட முதல் காரணம், இந்நாடு அமைதியில் செழிக்க முதலில் பேணபடவேண்டிது மத நல்லிணக்கமே என சிந்தித்தது

இந்தியாவில் ஆளவரும், நல்ல ஆட்சி தர விரும்பும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னோடி அந்த அக்பரே

அவரின் இந்த நினைவுநாளில் அதுதான் நினைவுக்கு வருகின்றது, அவர் பெயர் ஜெலாலுதீன், அக்பர் எனும் சொல்லுக்கு பெரியவர் என பொருள்

அவர் மனமும் பெரியதாகவே இருந்திருக்கின்றது

இன்னொரு முறை ஜோதா அக்பர் படத்தினை பார்த்துவிட வேண்டியதுதான், ஐஸ்வர்யா ராயின் இயல்பான சோகம் கவ்விய ஆனால் அழகான அந்த முகம் ராணி ஜோத்பாயின் கதைக்கு மிக அழகாக பொருந்துகின்றது

நிச்சயம் வேறு நடிகை பொருந்தியிருக்க மாட்டார், காரணம் இந்துமத அரசி ஒரு இஸ்லாமிய மன்னனோடு நடக்கும் திருமணத்தில் எவ்வளவு தயக்கமும் கலக்கமும் இருக்கும், அதனை அம்முகம் அப்படியே பிரதிபலித்தது

ஆனால் வட இந்தியர்கள் படத்தினை ஓடவிடவில்லை, அவர்கள் ரசனை அவ்வளவுதான் இருந்திருக்கின்றது.

( இப்பொழுது வந்து உனக்கு தெரியுமா, அக்பர் இஸ்லாமிய வெறியன் என குதிப்பார்கள், கதகளி மோகினி குச்சுபுடி எல்லாம் இப்பொழுது தொடங்கும்…)

Stanley Rajan's photo.                Stanley Rajan's photo.

ஜெயமோகன் இன்னும் நிறைய சொல்வார்…

Image may contain: 1 person , close-up and outdoor

ஜெயமோகன் வங்கி அதிகாரியினை விமர்சித்துவிட்டார் என கடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள்

அவரைபற்றி ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம், மனிதர் ஒருமாதிரியானவர், எப்பொழுது என்ன பேசுவார் என்றே தெரியாது, ஒரு மாதிரியான சிந்தனையில் இருப்பவர்

முதன் முதலில் இவரை எச்சரிக்கை பார்வை பார்த்தவர் சாட்சாத் எழுத்தாளர் சுஜாதா, அதோடு இவருக்கு அவர் மீதான வெறுப்பு அதிகரித்து என்னவெல்லாமோ எழுதினார்

சுஜாதா இடத்தினை பிடிக்காமல் ஓயமாட்டேன் என அண்ணாமலை ரஜினி போல சவால்விட்டார்,

புலி வேறு புலி வேடம் வேறு அல்லவா?

நானே ஆகசிறந்த இலக்கியவாதி என கிளம்பினார், வின்னர் பட வடிவேலு போல “எஸ் பாஸ்…” ஒரு கூட்டம் கிளம்பி இவருக்கு வாசகர் வட்டம், விசிறிகள் சதுரம் என என்னவெல்லாமோ நடந்தது

பாரதி, தாகூர், மார்க்ஸ் என எல்லோரையும் போஸ்ட்மார்டம் செய்து ஆய்வரிக்கை சொன்னவர், அதனையும் அவரின் விசிறி கூட்டம் நம்பிகொண்டது.

அடிக்கடி இலக்கிய பரிசு வழங்கும் நோபல் கமிட்டியினை கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து திட்டிகொண்டிருப்பார்.

இவர் விமர்சிக்காத ஒரே ஒரு நபர் ஜெயலலிதா,

அவரை மட்டும் விட்டுவைத்தார், விமர்சித்திருந்தால் சிறையில் ஜெயமோகன் என பெரும் புத்தகம் வந்திருக்கும்,

“சுந்தர ராமசாமி சொன்னார் சிறை என்பது மானிட உணர்வின் சிந்தனை உள்ளோளியில்” என 400 பக்கத்திற்கு இவரும் எழுதியிருப்பார்.

இன்று ஏதோ வங்கியில் ஒரு பெண் மெதுவாக பணம் எண்ணிவிட்டாராம், அந்த வீடியோ காட்டி இவரின் விசிறிகளில் ஒன்று அலறியிருக்கின்றது

உடனே இவர் ஆமாம், அந்த கிழவியினை விரட்டவேண்டும், தேவாங்கு பெட்டர் என்றெல்லாம் புலம்பி இருக்கின்றார், காரணம் இவரின் பொன்னான நேரத்தை வங்கி புடுங்கிவிட்டதாம்

இணையத்தில் எழுதி குவிப்பவருக்கு, இணைய வங்கி பயன்படுத்த எவ்வளவு நேரமாகும்? அதனை செய்திருக்கலாம், செய்யவில்லை.

வங்கி பணி சிரமம் வாய்ந்தது, ஒரு நாளைக்கு ஆயிரம் வாடிக்கையாளர்களை அப்பெண் அதிகாரி சந்திப்பார். எது கள்ளநோட்டு, எது நல்லநோட்டு என அவர் சோதிக்கத்தான் செய்வார்

ஒரு ரூபாய் விடுபட்டாலும், ஒரு பூஜ்யம் அல்லது புள்ளிவிடுபட்டாலும் அந்த அதிகாரியின் நிலை மகா சிக்கலே அன்றி இந்த ஜெயமோகனுக்கு அல்ல‌

ஆலோசனை சொல்வதென்றால் வங்கிக்கு சொல்லலாம், கூட 4 வேலையாட்களை வைத்தால் என்ன? இன்னும் வசதிகளை கூட்டினால் என சொல்லலாம், அது ஏற்றுகொள்ள கூடியது

அதனை விட்டு விட்டு அவரை தேவாங்கு இவரை விட அப்பெண் சோம்பேறி என்பது, ஜெயமோகனை விட குரங்கு கையிலிருக்கும் பேனா நன்றாக எழுதும் என சொல்வதை போன்றது

சமீபத்தில்தான் சிங்கப்பூரில் சென்று ஒரு எழுத்தாளரிடம் வாங்கி கட்டி வந்தார், இப்பொழுது இங்கே தொடங்கிவிட்டார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் தரம் எட்ட இன்னும் 20 வருடம் ஆகுமென்று கோலாலம்பூரிலே தொடங்கினார், மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வேறு வேலை இருந்ததால் விட்டுவிட்டார்கள்.

வங்கி அதிகாரியினை மிக மட்டமாக இவர் சொன்னதை அடுத்து கடும் கோபமாக போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள்,

கோபமென்றால் கடல் பட ரிசல்ட் பார்த்து மணிரத்தினத்திற்கு வந்த கோபத்தை விட அதிகம்.

கடல் படம் மணிரத்தினைத்தை மூழ்கடித்த பின், காவிய தலைவன் படம் தயாரிப்பாளர் காப்பிக்கு வழி இல்லாமல் செய்த பின் அன்னாரின் கலைபயணம் நெல்லை, கன்னியகுமரி தமிழுக்கு மட்டும் சென்னையில் பயன்படுகிறது

இதனை நமது நெல்லை சிவாவோ, இமாம் அண்ணாச்சியோ செய்துவிடும் காரியம்.

மகாபாரதம் எவ்வளவு பெரும் காப்பியம், ஆனால் ராஜாஜி மிக சுருக்கமாக விளக்கம் எழுதினார், இன்னும் பலர் எழுதினர் மிக அருமையாக இருந்தது

அதில் ராஜாஜியின் எழுத்து இன்றுவரை சிலாகிக்க கூடியது.

ஆனால் நானும் பாரதம் எழுதுகிறேன் என சொல்லி கிட்டதட்ட 1 லட்சம் பக்கம் எழுதியிருக்கின்றார் எப்படி? எல்லாம் கற்பனை, மகா கற்பனனை

தாஜ்மஹால் இருக்கின்றது, அதில் இப்பக்கம் கொஞ்சம் கூடுதல் இப்பக்கம் கொஞ்சம் வெட்டுதல், உருவினை மாற்றுதல் என செய்து இதுதான் தாஜ்மஹால் என ஒன்றை காட்டினால் எப்படி இருக்கும்?

ஷாஜஹான் ஆவி விடுமா?

மகாபாரததினை பெரிதாக எழுதுகிறேன் என எதனையோ எழுதி மகா கற்பனை அபத்தமாக எழுதிவைத்திருக்கின்றார் அன்னார். இதனை ஒரு கிறிஸ்தவன், இஸ்லாமியன் எழுதினால் நிச்சயம் பொங்கி இருப்பார்கள்

ஆனால் ஒரு இந்த் மகாபரதம் எனும் காவியத்தை அவனவன் விருப்பத்திற்கு யாரும் வளைக்கலாம்

சத்தமே இருக்காது, இதுதான் இந்து அமைப்புகள் அரசியல்.

மகாபாரதம் மீது அபிமானமுள்ள இந்து இதனை நிச்சயம் கண்டித்திருப்பான், பைபிளை கண்டமேனிக்கு எழுதினால் கிறிஸ்தவன் விடுவானா? யேசுவின் வாழ்க்கையினை கற்பனையாக ஒரு வரி கூட்ட முடியுமா?

குரான் மொழிபெயர்ப்பினை இஷ்டத்திற்கு உங்கள் கற்பனையினை செலுத்தினால் என்ன ஆகும்?

ஆனால் ராமயணம், மகாபாரத்தினை இஷ்டத்திற்கு திரிக்கலாம், திரௌபதி அப்படி, துரியன் இப்படி என ஆளாளுக்கு சேர்த்துகொண்டே செல்லலாம்

யாரும் கேட்கமாட்டார்கள், எந்த இந்துவும் கேட்கமாட்டான். ஆனால் எங்காவது மாற்று மதத்துகாரன் சொல்லிவிட்டால் கொடிபிடித்து கிளம்புவார்கள்

முதலில் இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இம்மாதிரி இந்துக்களிடமிருந்து முதலில் காக்க வேண்டாமா?

ஆனால் செய்ய மாட்டார்கள், காரணம் இது மத அபிமானம் அல்லாத அரசியல், வெறும் அரசியல்.

ஜெயமோகன் இன்னும் நிறைய சொல்வார், அடிக்கடி சிக்குவார், நடக்கும்

காரணம் அவர் ஜெயமோகன் அல்ல, “சுய”மோகன் என பல இடங்களில் காட்டிகொண்டே இருக்கின்றார்.

அன்னார் முன்பு சொன்ன‌ பொன்மொழிகளில் சில‌

“பெரியார் செய்தது பெரிய காரியமே இல்லை, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை

பாரதி பெருங் கவிஞனே அல்ல, மகாகவி எனும் வார்த்தைக்கு தகுதி இல்லாதவன்

தேவதேவன் எனும் என் நண்பர் கண்ணதாசனை விட ஆயிரம் மடங்கு பெரும் கவிஞர்.

கலைஞர் எழுதியது எந்த வகையிலும் சேராது, அது ஒரு எழுத்தே அல்ல

தமிழை வளர்க்க, அதனை ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினால் வளர்த்துவிடலாம்.

என் பாட்டி சொன்ன மகாபாரத்தினை நான் எழுதியிருக்கின்றேன்.

(எல்லா பாட்டியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பனையாகத்தான் சொல்வார்கள்) “

இப்படி ஏராளமான முத்துக்கள் உண்டு


கொசுறு

மாதம்தோறும் ரூ.2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவருக்கு உத்தரவிட கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.

என்னது? மாதம் 2.50 லட்சம் பராமரிப்பு செலவா?

அந்த‌ மனிதனின் பின்னாலும் ஏதும் சோக கதை இருக்கலாமோ, பராமரிப்பு செலவினை தாக்கு பிடிக்க‌ முடியாமல் எங்கேனும் இவரை விட்டு ஓடியிருப்பாரோ?


இளையராஜாவும் தமிழ் இசையும் வேறு அல்லவே அல்ல..

சிலருக்கு சில விஷயங்கள் உறுத்திகொண்டே இருக்கும், அதில் இன்றளவுக்கு சிலருக்கு கடந்த 50 வருடமாக இருக்கும் உறுத்தல் இளையராஜா

அகல விரிந்த அவர்களின் கண்களுக்குள் அவர் உறுத்திகொண்டே இருக்கின்றார், கண்களுக்குள் விழுந்த மணலாக அவர் உறுத்துகின்றார், அவர் பெயர் காதோரம் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல அவர்கள் காதில் வலிக்கின்றது

எப்படி எல்லாம் நயமாக வசைபாடியிருக்கின்றார், அதவாது இளையராஜா உலகதரம் வாய்ந்தவர் எல்லாம் இல்லையாம், ஜெயமோகனே இதுபற்றி எழுதியிருக்கின்றாராம்

மொசார்ட், பீத்தோவன் போன்ற பெரும் ஜாம்பவான்கள் போல இளையராஜா இல்லையாம், இன்னும் ராஸ்டிரியாபோச் எனும் கலைஞன் போல இளையராஜா மக்களை திரட்டவில்லையாம்

கள் குடித்த கொக்கெய்ன் குரங்கு போல மனிதர் உளறிகொண்டிருக்கின்றார்

மொசாத்தும், பீத்தோவானையும் நமக்கு சொன்னது யார்? வெள்ளையன். அவன் இனத்தினை அவன் தாங்கி பிடிப்பதில் என்ன இருக்கின்றது, சொல்லத்தான் செய்வான்

ஆனால் மொசாத், பீத்தோவன் வாழ்ந்த காலமென்ன? இளையராஜவின் காலமென்ன?

இஸ்ரேலின் 1960 புகழ்பெற்ற தளபதி மோசே தயானையும் மாவீரன் அலெக்ஸாண்டரையும் ஒப்பிடமுடியுமா? அது தகுமா?

மனிதர் எப்படியெல்லாம் புலம்புகின்றார், கனடாவில் அவன் இசைத்தானாம், லண்டனில் இவன் இசைத்தானாம் அதனை எல்லாம் விட ராஜா மட்டமாம்

அதாவது மனிதர் சொல்வதென்ன?

பிரெஞ்ச் சாப்பாடு அப்படி, பிரிட்டானிய சாப்பாடு இப்படி, ஜெர்மன் ஹாட் டோக் இப்படி ஆகா, ஓஹோ, நமது ஊர் இட்லி சீஈஈஈ..

ஆனால் தமிழகத்தில் பிரெஞ் பிரட் ஸ்லைசும், ஹோட் டோக்கும், இத்தாலிய பர்கரும் யாருக்கு வேண்டும்?

இங்கு தேவை அருமையான தமிழர் உணவு

அப்படி தமிழருக்கு என்ன ரசனையோ அதனை இளையராஜா அற்புதமாக கொடுத்தார், திராவிட மொழிகளுக்கு எல்லாம் அற்புதமான இசை வடிவம் கொடுத்தார்

மக்கள் கலைஞனான அவரின் இசை இன்றும் உலகெல்ல்லாம் ஆராய்ச்சி செய்யத்தான் படுகின்றது, கொண்டாடாபடுகின்றது

மொசாத் கையில் வயலினோடு பிறந்தவன், பீத்தோவான் பெரும் இசை குடும்பம், இன்னும் இவர் சொல்லும் வெளிநாட்டவர் எல்லாம் 3 வயதிலே கீபோர்டில் கை வைத்தவர்கள்

இளையராஜா வறுமையிலும், சாதி கொடுமகைகளையும், புறக்கணிப்பினையும் தாண்டி வந்து உச்சம் தொட்டிருப்பவர். சந்தேகமே இல்லை இப்படி சொல்லலாம்

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை

தமிழர் இசையினை திருடி, திருவையாற்றிலே, காவேரி கரை நாடக இடையினை கர்நாடக இசை என மாற்றி புகழ்பெற்ற அம்மும்மூர்த்திகளின் ஒரே வடிவம் இளையராஜா

காலத்தால் உயர்சாதியால் கொள்ளையடிக்கபட்ட இசை, ஒரு பச்சை தமிழனால் மறுபடியும் கொண்டுவரபட்டு தமிழிசையாக அடையாளம் காட்டபட்டது

எவ்வளவு தந்திரமாக அந்த திருவையாறு மும்மூர்த்திகளை அது என்னது, ஆம் தியாகபிரம்மம் எனும் தியாகராஜரை அந்த பித்தோவன்,மெசார்ட் இன்ன பிற மேற்கத்தியர்களோடு ஒப்பிடலாம் அல்லவா?

செய்தால் உலகமே வாய்விட்டு சிரிக்கும், இந்த தியாகராஜரின் இசையினை ஒரு மாதிரி பார்த்துவிட்டு “கிரேஸி மேன்” என ஒதுங்கிகொள்ளும்

ஆக அவாளின் உயர்ந்த அடையாளமான தியாகராஜர், முத்துசாமி, சியாமா சாஸ்திரி எல்லாம் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவாளாம்

ஆனால் இளையராஜாவினை மட்டும் உலக கலைஞர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவாராம்

எப்படிபட்ட நியாயம் இது

கலைஞர் மொழியில் சொல்வதென்றால்

“எல்லாம் வயித்தெறிச்சல், ஒரு தாழ்த்தபட்டவன், சாக்கடை புழுவாக நசுக்கபட்டவன் ஒரு அரியணையில் அமருந்து கிரீடம் சூட்டபடுவதை தாங்கமுடியாத இயலாமை”

அதுதான் அது ஒன்றேதான் இருக்கமுடியும்

அன்னார் ஒரு தமிழராம், தமிழில்தான் எழுதியிருக்கின்றார். தமிழனை எப்படி எல்லாம் மட்டம் தட்டியிருக்கின்றார் என தமிழர்கள் காண்பது நல்லது

மேற்கத்திய இசை அவர்களுக்கானது, மனதினை தொட்டு இவர் சொல்லட்டும் அது காதுகொடுத்து கேட்கமுடியுமா? புரியுமா?

திருவையாறு ஒப்பாரியே அல்லது முணுமுணுப்பே நமக்கு புரியாது (இவருக்கு புரியும் போல.)

இதில் நமக்கு தேவை என்ன? அழகான தமிழிசையும் மனதை உருக்கும் அற்புதமான பாடல்களும்

இளையராஜா அதனைத்தான் கொடுத்தார், ஒவ்வொரு தமிழனின் மனதினையும் அவரால் தொட முடிந்தது

ஆனால் இந்த கிராமத்தானுக்கு இவ்வளவு பெருமையா என பொறுத்துகொள்ளாதவர் எப்படி எழுதுவார்?

இப்படித்தான் எழுதுவார், துணைக்கு ஜெயமோகனையும் அழைப்பார்

சரி இவர்கள் எல்லாம் இசையில் என்ன கிழித்தார்கள், ஒரு டோலக்கோ அல்லது டி.ஆர் ஸ்டைலில் கொட்டாங்கச்சியோ வாசிக்க தெரியுமா என்றால் தெரியாது

ஆனால் உச்சம் பெற்ற கிராமத்தானை மட்டம் தட்டியே தீரவேண்டும் என்ற வன்மம் தெரிகின்றது

நான் என் பங்கிற்கு சொல்லிவிட்டேன், உங்களுக்கு இளையராஜாவினை பிடிக்கும் என்றால் இம்மனிதரை சற்று கவனியுங்கள்

அது தமிழ் இசைக்கு (பாஜக தமிழிசை அல்ல) நாம் செய்யும் மகத்தான காரியம்

இளையராஜாவும், தமிழ் இசையும் வேறு அல்ல, அல்லவே அல்ல‌

http://contrarianworld.blogspot.my/

மலேசியாவில் தீபாவளி…

மலேசியாவில் தீபாவளி  : மக்கள் எண்ணங்கள், வாழ்த்துக்கள் : காணொளி

தீபாவளி நெருங்கிவிட்டது, இந்தியாவின் நம்பர் 1 கொண்டாட்டம் அது, தமிழகத்திலும் தயாரிப்புகள் தீவிரமாக இருக்கலாம் அதிமுகவினரை தவிர.

மலேசியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை, இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழ், தெலுங்கு, சீக்கிய, மலையாள மக்கள் கலந்த இந்திய சமூகத்திற்கு அப்படி அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் சமூகம் பெரிய எண்ணிக்கை அதனால் தீபாவளி தயாரிப்பிற்கு பின்னி எடுக்கின்றது.

பொதுவாக குறைந்தது 1 வாரம் கொண்டாடுவார்கள், அதிகம் 20 நாள் கூட இருக்கலாம். இந்திய வம்சத்தின் மிகபெரும் பண்டிகை அது, இப்படி கொண்டாடாவிட்டால் எப்படி?

விமானநிலையத்தில் மிகபெரும் தீபாவளி கோலம் அமைத்திருக்கின்றார்கள், மெட்ரோ ரயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் என திரும்புமிடமெல்லாம் தீபாவளி அடையாளங்கள்.

பொதுவாக பண்டிகைகளை மலேசிய மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள், இஸ்லாமிய பண்டிகை, சீன புத்தாண்டு, கிறிஸ்மஸ் புதுவருடம் எல்லாம் பொது இடங்களில் விருந்து உபசரிப்பு நடக்கும், பல இடங்களில் விருந்து உபசரிப்பு நடக்கும்

ரயில் ஏற சென்றாலும் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருப்பார்கள், யார் சென்றாலும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று உணவு உபசரிப்பு வழங்குவார்கள்.

அதாவது எல்லா பண்டிகையினையும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள், அற்புதமான விஷயம்

கபாலி படத்தினை பார்த்துவிட்டு நீங்களாக ஒரு முடிவிற்கு வந்துவிட கூடாது, அது காட்டியது 2% பக்கம், மீதி 98% மகா நல்ல விஷயங்கள் உண்டு.

தீபாவளி காலம் என்றாலே வானொலி முதல் தொலைகாட்சி வரை ஒரு மாதம் தீபாவளி பாடல் வரும், தமிழ் எஃப்.எம் வேறு உண்டு அதுவும் அரசு செய்தி நிலையமே முழுநேரம் நடத்துகின்றது, தனியார் தமிழ் வானொலியும் உண்டு

நல்ல தமிழ், மிக அழகான நிகழ்ச்சிகள், அற்புதமான பாடல்கள் அவ்வப்போது செய்திகள் என அந்நாளைய இலங்கை ரேடியோ போலவே மகா இனிமையானது அது.

அப்படி இப்பொழுதும் தீபாவளி பாடல்கள் தொடங்கிவிட்டன‌

பொதுவாக தீபாவளி கொண்டாட தமிழ் திரையுலகம் அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கின்றது, அவை குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறையாவது வருகின்றன‌

“உன்னை கண்டு நானாட..என்னை கண்டு நீயாட ..” எனும் அற்புதமான பாடல்

“மத்தாப்ப சுட்டு சுட்டு போடட்டுமா..” எனும் நதியாவின் பாடல்

“தீபாவளி தீபாவளிதான்..” எனும் ஜனகராஜின் பாடல்

“நான் சிரித்தால் தீபாவளி..” எனும் நாயகன் பாடல்

“தல தீபாவளி..” எனும் அஜித்தின் பாடல் என பல பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன‌

இப்படி அழகான பாடல்கள் வரும் பொழுது இப்பொழுது மலேசிய தமிழ் தீபாவளி பாடல்களும் வருகின்றன‌

மலேசிய இந்தியர்கள் எல்லாமும் ரசிப்பார்கள், எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ரகுமான், அப்படியே மைக்கேல் ஜாக்சன், வெஸ்டர்ன் ஜாம்பவான் எல்லாவற்றையும் வரவேற்பார்கள்.

இப்போதுள்ள இளைஞர்களின் பாடல்களில் பெரும்பாலும் மேற்கத்திய இசை நிரம்பியிருக்கும்

அப்படி சில பாடல் வந்திருக்கின்றது, அதில் ஒன்று

“தீபாவளி வந்தால் ஜாலி ஜாலி
சட்டியில் வேகுது கோழி கோழி

ம்ம்ம்ம் முறுக்கா……
ஈஈஈஈஇ இருக்கா….

அய்யோ.. ஐ ஐ யோ…..”

என ஒலிக்கின்றது ஒரு மேற்கத்திய ராப் இசையுடன் கூடிய தமிழ்பாடல்

மக்கள் மகிழ்ந்துகொண்டிருக்கும் நேரம், இதுபோன்ற பாடல்கள் கூடுதல் சுவாரஸ்யம் கொடுக்கின்றன‌

என்ன பாடல்கள் வந்தாலும், குஷ்பூ நடித்த தீபாவளி பாடல் ஏதுமில்லை எனும் சோகம் வரும், அவருக்கு மட்டும் “பூவே பூச்சுடவா” நதியா போல ஒரு பாடல் கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்?

அதனால் என்ன?பொங்கலுக்கு “பூ பூக்கும் மாதம் தை மாதம்” என பாடியிருக்கின்றார் என ஆறுதல் அடைந்துகொள்ளலாம்

வைகோ அரசியல்…

வைகோவிற்கு ஆதரவாகவும் சிலர் எழுதுகின்றார்கள், ஆனால் ஆதரவில் ஒளிந்திருப்பது அதே கலைஞர் எதிர்ப்பு

அதாகபட்டது ஈழதமிழர் விவகாரம் தொடர்பாக போராளிகளை சந்திக்கும் அனைத்துகட்சி கூட்டம் ஒன்றினை எம்ஜிஆர் கூட்டியபொழுது கலைஞர் அதனை புறக்கணித்தாராம்

அப்படி இன்று வைகோவும் செய்துவிட்டாராம்.

எம்ஜிஆர் ஒரு கூட்டம் கூட்டினார், அதற்கு ஒரு நாளைக்கு முன்பாக கலைஞர் ஒரு கூட்டத்தினை சாதுர்யமாக கூட்டினார் புலிகளை தவிர எல்லோரும் கலந்துகொண்டனர்.

எம்ஜிஆரின் முகம் கறுத்தது.

பின் கலைஞரின் அகில இந்திய டெசோ முயற்சியினை எம்ஜிஆர் கண்டுகொள்ளாமல் பிரபாகரனுக்கு ஆதரவளித்ததும், அந்த தைரியத்தில் அவன் சக போராளிகளை கொன்று குவித்ததும் அதன் பின் மனம் வெறுத்த கலைஞர் டெசோவினை நிறுத்தியதும் அன்று நடந்தது.

இப்படி திமுக அதிமுக விளையாட்டுக்கள் உண்டு, சரி இதில் என்ன ந்ன்மை ஈழ மக்களுக்கு விளைந்தது என்றால், அங்குள்ள போராளிகுழு எதுவும் உண்மையான விடுதலை நோக்கி போராடவில்லை, தமிழக கட்சிகளின் ஆதரவும் இப்படி நாடகமாகவே இருந்தது

ஆனால் உயிர்சேதம் குறைக்கபடவேண்டும் என்ற நோக்கில் எடுக்கபட்ட முயற்சிகளில் கலைஞரின் திட்டங்களே பெஸ்ட்

இருக்கட்டும். இப்படி திமுக் அதிமுகவின் அனைத்துகட்சி கூட்டங்களுமே ஒரு வகை வோட்டு அரசியல்தான், ஆனால் திறம்பட நடத்தவேண்டும் அல்லவா?

திமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால், அதற்கு முந்தைய நாள் வைகோவும் ஒரு அனைத்துகட்சி கூட்டம் கூட்டினால் எப்படி இருந்திருக்கும்?

(தமிழகத்தின் உதிரிகட்சிகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன)

ஆனால் செய்யவில்லை அல்லது செய்ய தெரியாது

பின் கலைஞர் அன்று எம்ஜிஆர் அழைத்து வந்தாரா?, அமெரிக்க அதிபர் அழைத்து வந்தாரா என துண்டை முறுக்கி வசனம் பேசவேண்டியது?

அந்த கழுத்தினில் தொங்க வேண்டியது கருப்பு துண்டு அல்ல…மாறாக‌………..