மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம்…

“ஒரு நாடு சரியாக வளராமல் அதன் நிர்வாகத்தில் மாற்றம் செய்தால் சோவியத் போல சிதறும், அதன் அடிப்படைகளை மிக வலுவானதாக செய்துவிட்டே மாற்றங்களை செய்யவேண்டும், அல்லாவிட்டால் குழப்பங்களும் மக்களிடம் வெறுப்புமே மிஞ்சும்” : முன்னாள் சீன அதிபர் டெங் சியோ பிங்

அதாவது வளர்ச்சி அடைந்த நாடுகளின் செயல்பாட்டினை வசதிகுறைந்த நாடுகள் முயற்சிக்க கூடாது, எல்லா வசதியும் பெற்றபின்பே சிக்கலான பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும்

மோடி அரசு இதனைத்தான் செய்ய தவறியது

கையிலும், பர்சிலும், சுருக்கு பையிலும், மடியிலும் கட்டாக பணம் கொண்டு செல்லும் கலாச்சாரம் இந்தியருடையது, மாற இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்

எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைத்துவிடவில்லை

இதில் போன் மூலம் பணபரிவர்த்தனை, எல்லாமும் வங்கிகணக்கு என நிர்பந்திப்பது யானையினை குதிரை வேகத்தில் ஓட சொல்வது போன்றது

மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம், அவர்களுக்கென்ன? நிச்ச்யம் அடுத்தமுறை வரப்போவதில்லை அதனால் எல்லா ஆட்டமும் ஆடிவிட்டுத்தான் போவார்கள்.

அடுத்த தேர்தல் பற்றி அவர்களுக்கு இப்பொழுதே முடிவு தெரிந்துவிட்டது.

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் –
உச்சநீதிமன்றம் உத்தரவு

எல்லா நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் தேசிய கீதம் பாடுகின்றார்களா? இல்லையா? என தெரியாது, இனி தியேட்டரில் கட்டாயமாக‌ படிக்க வேண்டுமாம்,

எல்லா தொலைகாட்சி, வானொலி நிலையங்கள் தினமும் தேசிய கீதத்தை கண்டிப்பாக ஒளிபரப்ப சட்டம் இருப்பதாக தெரியவில்லை.

அது ஏன் திரையரங்குகளில் மட்டும், அங்கு இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களோ? என்னவோ

இனி திருட்டு விசிடியில் தேசிய கீதம் வந்தால் உள்நாட்டில் சுட்டது, வரவில்லை என்றால் வெளிநாட்டில் சுட்டது என நாமாக முடிவு செய்துகொள்ளலாம்

தியேட்டரில் தேசிய கீதம் பாடித்தான் தேசிய உணர்வை வளர்க்கும் நிலை, தமிழக அரசு எப்படி சிந்திக்கின்றது என தெரியவில்லை

இங்கே டாஸ்மாக் முதல் பல விவகாரங்கள் தமிழக அரசால் நடத்தபடுபவை, தேசிய கீதம் அல்ல தமிழ்தாய் வாழ்த்தினை பாடிவிட்டுத்தான் “கடை” திறக்கவேண்டும் என விபரீத சிந்தனைகள் வராத வரை நல்லது

“நீராடும் கடலுடுத்த..” என பாடிவிட்டு மணல் குவாரிகளும், கிரானைட் குவாரியும், கனிம மண் குவாரியும் அன்றாட பணி தொடங்கினால் பார்பதற்கு எப்படி இருக்கும்?

காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌

பிடல் காஸ்ட்ரோ பெரும் போராளி, போராடி புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தவர்,மக்கள் நலம் காத்த வீரன்

ஆனால் அவரது கவனம் எல்லாம் வித்தியாசமானது, யார் போராளி? யார் கட்டபஞ்சாயத்து கும்பல் என்பதில் கவனமாக இருந்தார்.

இந்தியா அவருக்கு பிடித்தமான நாடு, சே குவாரேவினை கியூப பிரதிநியாக இந்தியாவிற்கு அனுப்பியவர் அவர், இது இன்னொரு பக்கம்

ஆனால் ஒரு இடத்திலும் புலிகளையோ அதன் தறுதலை போராட்டங்களையோ அவர் ஆதரித்ததாக ஒரு செய்தியும் இல்லை, ஒருபடி மேலே சென்று 2006ல் புலிகளுகளுக்கான தடையினை அவர் ஆதரித்திருக்கின்றார்

அதாவது மொத்த உலகமும் புலிகளை அடித்து துடைத்தொழிக்க கிளம்பியபொழுது , “ஆம், அது அழித்தொழிக்கவேண்டிய தீவிரவாத கும்பல்தான்” என ஒப்புதல் அளித்திருக்கின்றார்.

வர்க்க விடுதலை வேறு, குறுந்தேசிய வாதம் வேறு என்பதில் அவர் மிக சரியாக நிலையெடுத்திருக்கின்றார்.எது விடுதலை, எது தறுதலை என்பதில் அவருக்கு தெளிவு இருந்திருக்கின்றது

புலிகளை அவர் ஒரு போராளிகளாக ஒருநாளும் ஒப்புகொண்டதே இல்லை

ஆக காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌

பிரபாகரன் படத்தினை பிடித்துகொண்டே போராளி காஸ்டோர்விற்கு அஞ்சலி, வீர வணக்கம் என சொல்லிகொண்டிருக்கின்றன அங்கிளின் மங்கிஸ்

வைக்கோ பெரும் அஞ்சலி செலுத்துகின்றாராம், காஸ்ட்ரோவும் போராளி அவரும் பயங்கரவாதிகள் என‌ ஆதரவளித்து தடையான புலிகள் அமைப்பும் போராளிகளாம்

அதாவது காஸ்ட்ரோ நல்லவர், அவர் உலகிற்கே ஆகாது என சொன்ன புலிகளும் நல்லர்களாம்

இப்படிபட்ட கொள்கையுடன் முழங்கிகொண்டிருப்பவர்கள் சேணல் மாற்றும்பொழுதாவது உலக செய்திகளையோ, தலையணை இல்லாவிட்டால் புத்தகத்தை வைத்து தூங்குபவர்களாகவோ கூட இருக்க முடியாது

வைகோவும் தமிழ் பேசுகின்றார், பிரபாகரனும் தமிழ் பேசுகின்றார் ஆதலால் இருவரும் ஒன்று,

சீமான் தமிழில் பேசுகின்றார், பிரபாகரனும் தமிழில் பேசுகின்றார் ஆதலால் இருவரும் ஒன்று என லாஜிக் பேசுபவர்கள் உண்டு

அப்படியே

பிடல் கையிலும் துப்பாக்கி இருந்தது, பிரபாகரன் கையிலும் துப்பாக்கி இருந்தது, வீரப்பன் கையிலும் துப்பாக்கி இருந்தது அதனால் மூவரும் ஒன்று என லாஜிக்காக சீரியசாக சொல்வார்கள்,

உடனே இவர்களை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கின்றது.

காமராஜர் அமர்ந்த நாற்காலியில், கலைஞர் அமர்ந்த நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் பன்னீரும் அமர்ந்ததால் இவர்கள் நால்வரும் ஒன்று என சொல்லிவிட முடியுமா?

அப்படித்த்தான் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

சுடுகாட்டிலும் தீ எரியும், கோவில் விளக்கிலும் தீ எரியும், எது புனிதமானது?

பிடலும் பிரபாகரனும் ஒன்று என லாஜிக் பேசுபவர்களிடம், ஆமாம் அப்படியே பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவும் ஒன்றா என கேளுங்கள்,

பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.


 இக்கட சூடு

எத்தனை அம்புகள் பாய்ந்து வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

அதனை அழிக்க அம்பு எதற்கு?, அருகிலே இருக்கும் சொம்புகள் போதாதா?


முதல்வர் ஜெ., நடக்க பிசியோதெரபி சிகிச்சை

அது நடக்கட்டும், அப்படியே தமிழக அமைச்சர்களுக்கு முதுகு நிமிர ஒரு சிகிச்சை, முதல்வர் இலாக்காவினை கவனிக்கும் பன்னீர் செல்வத்திற்கு பேச்சு வர ஒரு சிகிச்சை என செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.


கச்சதீவு அந்தோணியார் கோவில்

Image may contain: one or more people

கச்சதீவு அந்தோணியார் கோவிலில் தமிழக உரிமை புறக்கணிக்க படுகின்றது பெரும் சர்ச்சை

அந்தோணியார் என்பவர் போர்ச்சுக்கலில் வாழ்ந்த கிறிஸ்தவ மகான், ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அக்கால போர்த்துகீசியர் எல்லாம் அவரையே தங்கள் கடல் பயண பாதுகாப்பு தெய்வமாக கொண்டிருந்தனர்

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு பத்திரமாக வந்தபின் அந்த நம்பிக்கை கூடிற்று, தமிழக கடற்பரப்பிலும் வட இலங்கையிலும் போர்த்துகீசியர் ஆண்ட காலத்தில் அந்த நம்பிக்கை இங்கும் வந்தது, கடலோடும் மீணவர்களின் தெய்வமாக மாறிப்போனார் அந்தோணியார்

போர்த்துகீசியர் சென்றபின்னும் இலங்கை, தமிழ் மீணவர்களும் அவரை மறக்கவில்லை, அன்றைய கச்சத்தீவு சர்ச்சை இல்லா பகுதி, ஆனால் ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான பகுதி. அன்று இலங்கை, தமிழக மீணவர்களிடையே பெரும் சிக்கல் எல்லாம் இல்லை

அப்பொழுது தமிழக மீணவர்கள் ஓய்வெடுக்கும் கச்சதீவில் தமிழக மீணவர்கள் கட்டியதுதான் அந்த அந்தோணியார் கோயில், ஆண்டு தோறும் இருநாட்டு மீணவர்களும் கூடி கொண்டாடுவார்கள்.

மக்கள் வாழ தகுதியில்லா கச்சதீவின் ஒரே கொண்டாட்டம் இந்த திருவிழா மட்டுமே

பின் கச்சத்தீவு கைமாறினாலும் ஒப்பந்தபடி தமிழக மீணவர்கள் வலை உலர்த்தி ஓய்வெடுக்கவும், அந்தோணியார் ஆலயத்தில் வழிபடவும் வழிவகை உண்டு

பின்னாளில் புலிகள் அழிச்சாட்டியத்தில் கச்சதீவு பெரும் சர்ச்சையான பகுதியாக மாற அந்தோணியார் ஆலய‌ திருவிழா கலையிழந்தது, புலிகளின் கடத்தல் நடைபெறுமிடம் கடல் என்பதால் இலங்கை கடற்படையும் அச்சத்தில் பல கொடூரங்களை நிகழ்த்திகொண்டிருந்தது

இன்று புலிகள் இல்லா காலம், மறுபடி அந்தோணியார் ஆலயம் சீரமைக்கபட்டு திருவிழா கொண்டாட்டத்திற்கு தயாராகின்றது, சிக்கல் என்னவென்றால் தமிழக மீணவர்களிடம் ஒரு வார்த்தையும் அவர்கள் சொல்லவில்லை, நன்கொடை கூட கேட்கவில்லையாம்

ஏற்கனவே அங்கு வலை உலர்த்தும் உரிமை பறிக்கபட்ட நிலையில், அந்தோணியார் ஆலயம் மீதான உரிமையும் போகிறதா? என ராமேஸ்வரம் பக்கம் கடும் கொந்தளிப்பு நிலவுகின்றது

மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கைகள் பறக்கின்றன‌

மத்திய அரசோ 100. 500 என ஏக சிக்கலில் இருக்கின்றது, இது வேறுமாதிரியான சிக்கல்

சும்மாவே கச்சதீவு பெரும் சர்ச்சை, இனி கிறிஸ்தவ ஆலயம் என்பதால் பாஜக மதவெறி அரசு மவுனம் காக்கின்றதா என கிளம்புவார்கள்

நிச்சயமாக மோடி அரசு தலையிட்டு சில காரியங்களை செய்து நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்ட அரசு, எம்மதமாயினும் காப்போம் என அழகாக அரசியல் செய்யலாம் தான்.

கச்சதீவில் தமிழர் உரிமையினை மீட்டு, தமிழிசை சென்று மெழுவர்த்த்தி ஏந்தி வழிபட்டால் எப்படி இருக்கும்?

ஆனால் இம்மாதிரியான அரசியல் எல்லாம் தமிழக பாஜகவிற்கு தெரியாது, ஒரு மாதிரியான அசமந்த கட்சி அது

இந்த கச்சதீவு சிக்கலுக்கு முதல் காரணம் யார் தெரியுமா?

இந்திராவோ, பண்டாரநாயகவோ, புலிகளொ அல்ல‌

முதலில் ராமர், அங்கு சென்றதே சென்றார், கச்சதீவில் தன் சேனைகளுக்கு ஒரு வியூகம் சொன்னால்தான் என்ன? அந்த அனுமார்தான் சஞ்சீவி மலையினை கொண்டு செல்லும்பொழுது அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு சென்றால் என்ன?

விட்டுவிடுவார்களா கங்கை கரை சாமியார் கூட்டம், ஆடி தீர்ப்பார்கள்

அடுத்து அந்த விவேகானந்தர்

மகான் அமெரிக்க சுற்றுபயணத்தை முடித்துகொண்டு கொழும்பு வழியாக பாம்பனுக்கு வரும்போது, ஒரு 10 நிமிடம் கச்சதீவில் தியானம் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

விவேகானந்தர் மண்டபம், படகு போக்குவரத்து என பின்னியிருக்க மாட்டோமா? சிங்களன் கைக்கு அது சென்றிருக்கும்?

என்ன செய்ய மகான் விவேகானந்தர் மண்டபம் அமையவில்லையே.

இந்த இந்து தெய்வங்களும் வேறுமாதிரியானவை, அது காடுகள் மலைகள் ஆற்றங்கரைகளில் ஹாயாக அமர்ந்து அருள்பாவிக்குமே அன்றி, கடல்தாண்டி தீவுகளில் எந்த தெய்வமும் கோயில் கேட்கவில்லை

இத்தனை ஆயிரம் தெய்வங்களில் ஒன்றாவது கச்சதீவில் கோயில் கேட்டு 10 கிடா கேட்டிருந்தால் சிங்களன் அப்பக்கம் வரமுடியுமா?

கடல் ராசா, கடல் அன்னை என கடலுக்கு பெயரிட்ட இந்துமதம் கடலுக்கும் கடல்பயணத்திற்கும் ஒரு தெய்வத்தை கைகாட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படி ஒரு இந்து ஆலயம் இருந்தால் , நிலை இவ்வளவு சிக்கலாகியிருக்குமா?

அவ்வளவு ஏன் இந்த திராவிட பெருந்தலைகளின் நினைவிடமாவது அங்கு அமைந்து தொலைத்திருக்க கூடாதா, (நிச்சயம் அவர்களை அங்குதான் வைத்திருக்க வேண்டும்)

மெரீனா இன்னும் நன்றாக இருந்திருக்கும், மெரினா செல்லும் பலருக்கு அந்த கல்லறைகளை பார்த்து ரத்தகொதிப்பு வராமால் போயிருக்கும்

இதெல்லாம் அமையாமல் அந்தோணியார் ஆலயம் மட்டும் அமைந்துவிட்டதுதான் சிக்கல்

ஒரு இந்து ஆலயமோ, விவேகானந்தர் நினைவு காரியங்களோ, அனுமார் பாதமோ இருந்திருந்தால் நடப்பதே வேறு

இந்நாட்டில் மதங்களும், ஜாதிகளும் பெறும் வெற்றியினை இன உணர்வும், உரிமை போராட்டங்களும் பெற்றுவிட முடியாது

கச்சதீவு அதில்தான் சிக்கிகொண்டது.

காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது

Stanley Rajan's photo.    Stanley Rajan's photo.

முதற்படம் புலிகள், அடுத்தபடம் பூனைகள் 

பிடல் காஸ்ட்ரோ மறைந்ததிலிருந்து உலகின் பார்வை கியூபா மீது குவிந்திருக்கின்றது

காரணம் மற்ற தலைவர்கள் மறைவதற்கும், அமெரிக்க எதிர்ப்பு தலைவர்கள் மறைவதற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு

செல்வசெழிப்பாக இருந்த ஈராகும், லிபியாவும் இன்று சுடுகாடாய் கிடக்கின்றன, ஓரளவு எழும்பி வந்த வெனிசுலாவும் நாசமாய் சீரழிந்து கிடக்கின்றது

இவைகள் மூவற்றிற்கும் உள்ள ஒற்றுமை இவற்றின் முன்னாள் ஆட்சியாளர்களான சதாம், கடாபி, சாவேஸ் மூவரும் அமெரிக்க எதிர்ப்பார்ளர்கள், அவர்கள் வீழ்ந்த பின் அந்த தேசங்களை அமெரிக்கா வதைப்பது கொஞ்சமல்ல.

அப்படித்தான் செய்வார்கள், இந்த வலியில் அந்த உன்னத தலைவர்களை மக்கள் எப்படி நினைப்பார்கள், அவர்களுக்காக நினைத்து நினைத்து அழுவார்கள், பெரும் தியாகி ஆவார்கள் என்றெல்லாம் எண்ணாமல் வதைப்பார்கள்

மக்களோ அந்த பொற்காலத்தை எண்ணி எண்ணி தலையில் அடித்து அழுவார்கள், அழுது கொண்டிருக்கின்றார்கள்

அமெரிக்காவினை எதிர்த்த தேசங்கள் நிலை அப்படி

சதாமோ, லிபியா கடாபியா அமெரிக்காவினை முறைத்தவர்கள், சவால் விட்டவர்கள் ஆனால் காஸ்ட்ரோ அமெரிக்காவின் முகத்தில் அறைந்து கழுத்தினை நெறித்தவர்

இன்று அவரும் இல்லை

ஆக கியூபர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை காலம் தான் சொல்லும், ஆனால் கியூப மக்களுக்கு அவர் பெரும் வழி காட்டிவிட்டுத்தன் சென்றிருக்கின்றார், கியூப மக்களும் வரலாற்றை படைத்தவர்கள் என்பதால் பெரும் சிக்கல் இருக்காது

எனினும் உலகம் உற்றுபார்த்தபடியே இருக்கின்றது

கென்னடி செய்யாதை நான் செய்வேன் என அரியணை ஏறும் ட்ரம்ப் வேறு “காஸ்ட்ரோ” சர்வாதிகாரி என கரித்துகொட்டிகொண்டிருக்கின்றார்

காலம் பதில் சொல்லட்டும்

தேவர் மகனில் சிவாஜி சொல்வார் “எல்லா பயவுள்ளையும் ஒரு நாளைக்கு சாகவேண்டியதேன், ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையின வாழ்ந்துட்டு போகுறதுதான் சாவுக்கே பெரும”

காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது

கியூப மக்கள் கொடுத்து வைத்தவர்கள் சேவும் காஸ்ட்ரோவும் கிடைத்தார்கள்

தமிழக மக்களுக்கு புரட்சி தலைவனும், கலைஞரும்தான் கிடைத்தார்கள்

 

என்.எஸ் கிருஷ்னன் : ஒரு நினைவாஞ்சலி

தோற்றம் : 29-11-1908    ::   மறைவு : 30-08-1957

இன்று என்.எஸ்.கே பிறந்த நாள்

மனிதர் சிரித்து சிந்திக்க வைக்கவே அவதரித்தவர், நாகர்கோவில் கொடுத்த மகா கலைஞர்களில் என்றும் முதன்மையானவர்

நிறைய எழுதியாகிவிட்டது

கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார்

பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர்

“காரை நடுரோட்டில் நிறுத்தி பழம் சாப்பிட்டால் போக்குவரத்திற்கு சிக்கல் அல்லவா?. அதனால் காரினை சரித்துபோட்டுவிட்டு யாருக்கும் இடையூறின்றி பழம் சாப்பிடுகின்றேன்”

இதுதான் கலைவாணர், எல்லா சூழ்நிலையினையும் மிக சாதரணமாக எடுத்துகொண்டு, சிரித்துகொண்டே வாழ்க்கையினை நடத்தியவர்

கோடி கோடியாக சம்பளம் வாங்கும்போது இருந்த அதே சிரிப்புதான் வீடு ஏலத்திற்கு வரும்பொழுதும் இருந்தது, திவால் அறிவிப்பு கொண்டுவந்த நீதிமன்ற ஊழியனிடம், “அட்டாட்ச்மென்ட் கொண்டு வந்திருக்க, நமக்குள்ள நல்ல அட்டாச்மென்ட் இருக்கு..” என சிரித்துகொண்டே கேட்டவர்

பெரும் வள்ளல், கேட்காமல் உதவியவர். அந்நாளில் பெரும் மதிப்பு அவருக்கு இருந்திருக்கின்றது, குழந்தை முதல் ஜி.டி நாயுடு வரை அவரின் ரசிகர்கள்.

எவனோ ஒரு தயாரிபாளன் மிக‌ சிரமபட்டு எடுத்தபடம் தோல்வியாக, பின் தானே சில காட்சிகளை நடித்து பின் அதே படத்தில் இணைத்து அதனை வெற்றியாக்கி தயாரிப்பாளன் கண்ணீரை துடைத்தவன்

இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளன் யாரென்றே அவருக்கு தெரியாது, அவரின் துயரம் கேள்விபட்டிருக்கின்றார், உதவி விட்டு அவர் போக்கில் சென்றுவிட்டார், ஒரு காசு வாங்கவில்லை

“சினிமா எடுக்க வருகிறவன், நஷ்டத்தோடு போக கூடாது” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவர்,

எல்லாவற்றிற்கும் மேல் மனிதர் மகா கைராசிக்காரர், எப்படி?

சேலம் மார்டன் தியேட்டரில் ஒரு இளைஞனை அவர் முன் நிறுத்துகின்றார்கள், நன்றாக எழுதுவான் அய்யா என்கின்றார்கள், ஆனால் அவன் ஒல்லியாக தேகம், குள்ள உருவம்

எல்லோரும் அவனை ஏளனமாக பார்க்க, கண்டிக்கின்றார் கலைவாணர், உருவத்தை வைத்து எடைபோடாதீர்கள், இவன் இன்னொரு அகத்தியனாக இருக்கலாம் என்கிறார்.

தம்பி உனக்கோர் வாய்ப்பு தருகின்றேன், நீருபிப்பாயா என கேட்டு ,தன் பணம் படத்தில் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கின்றார்

“பணம்..முட்டாள்களிடம் சிக்கும், கல்மனத்தோருடன் கொஞ்சும், நல்லவர்களை கெஞ்ச வைக்கும்..” என சீறி வருகின்றது வசனம்

படம் பெரும் வெற்றி, மகிழ்ந்த கலைவாணர் அவரை வாழ்த்தி ஒரு காரும் பரிசளித்து ஆசீர்வதிக்கின்றார்.

ராம்சந்தர் என்ற பெயருடன் தெருதெருவாய் அலைந்த எம்ஜி ராமசந்திரனின் கஷ்ட காலங்களில், சிவாஜி கணேசன் எனும் மகா நடிகன் மெலிந்த தேகத்தோடு வாய்ப்பு தேடிய காலங்களிலே பெரும் தொகை சம்பளம் வாங்கி காரும் வாங்கினார் அந்த இளைஞர்.

சும்மா சொல்ல கூடாது, இளைஞர் அன்றே சம்பாதித்தியத்தில் உச்சம்.

அந்த இளைஞந்தான் நமது கலைஞர், தமிழக வரலாற்றை புரட்டி அதன் மீது அமர்ந்துவிட்ட இரண்டாம் அகத்தியர்

கலைவாணரின் வாழ்த்தும் கணிப்பும் அப்படி பலித்திருக்கின்றது

தமிழக சினிமா வரலாற்றில் மறக்கமுடியா மனிதர் கலைவாணர்

நாகர்கோவில் ஓழுகினசேரி தெருக்களிலும், வடசேரி சந்தையிலும் அவர் நினைவு வந்து வந்து செல்லும், அம்மனிதன் உருவாகிய இடங்கள் அவை

அங்குதான் தன் வேடிக்கை பேச்சினை அவர் தொடங்கினார் என்பார்கள்

சென்னை எத்திராஜ் கல்லூரியினை கடக்கும் பொழுதும் அவர் நினைவு வரும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்,கே சிக்கியபோது அவருக்கு வாதாட வந்தவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ், வித்தையில் ராம்ஜெத்மலானிக்கும் தாத்தா மாதிரியானவர்

அவரின் வாதத்தில்தான் என்.எஸ்.கே விடுதலையானர், ஆனால் சொத்துக்கள் கரைந்தன,

பின்னாளில் எத்திராஜ் காலேஜ் கட்டினார்

நிச்சயமாக அந்த கல்லூரி கட்டிடத்து கல்லில் என் எஸ் கிருஷணன் பணத்தின் செங்கல் நிச்சயம் ஒளிந்திருக்கும்

வாழ்ந்த காலமெல்லாம் அள்ளிகொடுத்த வள்ளலான கிருஷ்ணன், மறைமுகமாக அள்ளிகொடுத்த காரியங்களில் சில உண்டு, அதில் எத்திராஜ் கல்லூரி சுவரும் இருக்கலாம்,

விதி லட்சுமிகாந்தன் வழியில் விளையாடி இருகின்றது.

அந்த கொடும் வழக்கு தாண்டி தியாகராஜ பாகவதரால் திரையில் வெல்லமுடியாமல் போனது, ஆனால் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்,

ஆனால் விதி முந்திகொண்டது.

எல்லா சூழ்நிலையினையிலும் சிரித்து கொண்டே வாழ்வினை கழித்த நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணனை போல இன்னொரு கலைஞன் வரமுடியாது.

அன்று கிருஷ்னனின் பணம் படத்திற்கு அசாத்திய‌ வசனம் எழுதிய கலைஞர், இன்று கருப்பு பணம், கரன்சி என போராடிகொண்டிருக்கின்றார்

கருணாநிதி எனும் மனிதரின் ஜாதகம் நிதியினை சுற்றி சுற்றியே வருகின்றது, அவருக்கு கிடைத்திருக்கும் வரம் அப்படி.

புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது

புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். எதிர் காலத்தில் ரூபாய் நோட்டுகளில் இது பொருத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

மிஸ்டர் எஸ்,வி சேகர் கேட்டுச்சா….புது 2000 ரூபாய் நோட்டில் அப்படி ஒரு சிப் இல்லையாம்

இந்த சுப்பிரமணியன் சாமி என்பவர் தலையில்தான் அப்படி ஒரு சிப்பினை பொருத்தவேண்டும், அப்பொழுதுதான் மனிதர் எங்கு செல்கிறார்?, யாரை சந்திக்கின்றார்?, என்ன பேசுகின்றார்? என்ற தகவல் எல்லாம் உலகிற்கு கிடைக்கும்.

அவர் தலையில் முதலில் பொருத்தவேண்டும்.

அடுத்து பிரதமர் தலையில் பொருத்தலாம், உலகில் எந்த நாட்டில் இருக்கின்றார் என தெரிந்துகொள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும்.


விசா நடைமுறைகளை கடுமையாக்குகின்றார் டிரம்ப்

ஹெச்1 பி விசா போன்ற விசாக்களை விடுங்கள் டிரம்ப், எங்கள் மோடி அடிக்கடி நிச்சயம் வருவார், அவரை என்ன செய்ய போகின்றீர்கள் டிரம்ப்?

இந்த டிப்ளமேட்டிக் விசாக்களில் ஒரு கண் வைத்துகொள்ளுங்கள்,


ஏசப்பா எப்படியாவது ராஜபக்சே அங்கே மறுபடியும் ஆட்சிக்கு வரணுமப்பா…

கலைஞர் இங்கே மறுபடி முதல்வராகனுபப்பா.. எப்படியாவது அப்படி நடக்க வைங்க ஏசப்பா

இந்த இரண்டுபேரும் இல்லாம நான் எப்படி பொழைக்கிறது கர்த்தாவே..
..

Image may contain: 7 people , fire and night

அல்-குவைதா தொடர்புடைய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அல் – குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட, நான்கு பேர், மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

விஸ்வரூபம் படம் வரும்பொழுது, கமலஹாசனுக்கு எதிராக பொங்கியர்கள் எல்லாம் எங்கே? மூடிகொண்டு படுத்துவிட்டார்கள்.

இப்படி ஒரு சாத்தியம் இருப்பது யாருக்கு தெரியாது? ரோஜாவில் மணிரத்னம் அதனைத்தான் சொன்னார், உடனே பம்பாய் படத்து மனீஷாவிற்காக குண்டு வீசினார்கள்.

விஸ்வரூபத்தில் கமல் அப்படி சொன்னார் என வரிந்து கட்டி அவரை பாடாய் படுத்தினார்கள்

இப்பொழுது என்ன செய்வார்கள்? யூகிக்கலாம்

இந்துத்வா மோடி அரசு தேசிய புலனாய்வு துறையினை ஏவிவிட்டு இஸ்லாமியரை கொடுமைபடுத்துகின்றது என கிளம்பலாம்

இது உலகளாவிய பிரச்சினை, இவர்களை கைகாட்டி கொண்டிருப்பது உலகின் பெரும் கைகள். இலங்கை, வங்கதேசம் போன்று இந்தியாவிலும் கைது நடக்கின்றது, அவ்வளவுதான்.

அன்று கமலஹாசனின் விஸ்வரூபத்தை நாங்கள் பார்க்காமல் விடமாட்டோம் என எப்படி களபேரம் செய்து ஏதோ டைரக்டர் போல காட்சிகளை மாற்ற சொன்னார்கள்?

இப்பொழுது அவர்களை, அதாவது அந்த போராட்டகாரர்களை சந்திக்காமல் விடமாட்டோம் என கமல் ரசிகர்கள் கிளம்பினால் எப்படி இருக்கும்?

எப்படியோ கமலஹாசன் புன்னகைக்கும் நேரம் இது.

மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள்

“என் தந்தை விதவைகளுக்கு பென்சன் கொடுக்கின்றார், இந்திரா காந்தி வந்தால் அவருக்கும் கொடுப்பார்” என சொன்னவர்தான் மு.க ஸ்டாலின்

(கலைஞர் அரசின் விதவைகள் உதவி திட்டம் திருக்குவளை மாமன்னர் முத்துவேலரின் பெரும் சொத்துக்கள் மூலம் செய்யபடுவதல்லவா? அதனால் சொல்லிவிட்டார்)

நிச்சயமாக சொந்த வரிகள் அல்ல, மாறாக யாரோ நாக்கில் எழுதிவிட்ட வரிகள்

அந்த வரிகள்தான் மிசா காலத்தின் பொழுது பாய்ந்தனவே தவிர, மிசாவினை எதிர்த்து அவர் போராடி அல்ல‌

இளமைக்கால கலைஞர் போராட்டம் பெரிது, அவர் களமிறங்கிய காலங்களில் அதன் வீரியம் மகத்தானது,

ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவரின் போராட்ட வீரியம் குறைந்தது, ஏதோ சமாளிக்க தொடங்கினார். மிசாவினையும் அப்படி ஒரு தற்காப்பாகத்தான் போராடினார், 1960களின் கலைஞராக அல்ல‌

ஆனால், மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள், உயிர்விட்டார்கள்

வைகோ இன்றுவரை காங்கிரசை வெறுப்பாக பார்ப்பதெல்லாம் அதன் தொடர்ச்சியே

ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் போராடியது போலவும், அதனால் திமுகவிற்கு அடுத்த தலைவர் அவரே எனவும் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், சொல்லட்டும்

மிசா இறுக, கலைஞர் என்ன செய்தார்? காமராஜரை சந்தித்து நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் பின் வருகின்றோம் என்றார்.

அதாவது இந்தி எதிர்ப்பு, கல்லக்குடி, நோசென்ஸ் என ஏக அழிச்சாட்டியங்களை செய்த கலைஞர், மிசாவினை எதிர்க்க மட்டும் காமராஜர் முன் சென்று ஒன்றுமே தெரியாதவர் போல நின்றார்

காமராஜர் அந்த தந்திரத்தில் சிக்கவில்லை, நீங்களே போராடுங்கள் என சொல்லிவிட்டார்

பின்னர் காமராஜரிடம் கேட்டார்கள், நீங்கள் ஏன் செல்லவில்லை? அவர் சொன்னார்

“என் மேல இன்னும் இவனுக சுமத்தாதது கொலைபழி ஒண்ணுதான்னேன், என்ன போராட சொல்லிட்டு இவனுக 10 பேரை கொளுத்துவாண்ணேன்

காமராஜ் போராட்டம் நடத்தி 10 பேர் செத்தாண்ணு இவனுகளே எழுதுவாண்ணேன், அதான் ஒதுங்கிட்டேண்ணேண்..”

இப்படி மிசாவிற்கு அஞ்சி காமராஜர் பின்னால் ஒளிய பார்த்து , அவரும் ஒதுங்கிய பின் சிறைக்கு சென்றவர்களை எல்லாம்

ஏதோ பெரும் போராளி போல பேசிகொண்டிருக்கின்றார்கள்

இந்திரா பற்றி சொல்லகூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டு சிறை சென்றவரை, மிசாவில் ஏதோ போராடி சென்றதை போல சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அந்த இந்திராவினை அப்படி பழித்த ஸ்டாலினுடன் இந்திரா படத்தோடு காங்கிரசாரும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களாம்.

இந்த ஸ்டாலினின் சொம்புகள் இருந்தால் தானாக வெளியேறுங்கள், நீங்கள் ஜால்ரா அடிக்க மனுஷ்ய புத்திரன் போன்றோரின் பக்கங்கள் இருக்கின்றது.

இன்றைய அரசல் புரசல் செய்திகள்…

நடிகர் தனுஷ் யார் மகன் என‌ மேலூர் தம்பதிக்கும், கஸ்தூரி ராஜாவிற்கும் இடையே கடும் சர்ச்சை, மரபணு சோதனைக்கு கோரிக்கை விடுக்கபோவதாக‌ மேலூர் தம்பதி அறிவிப்பு

இவர்கள் இருவரும் தனுஷ் யாருக்கு மகன் என சண்டையிட்டு கொண்டிருக்க, அங்கு வரும் செய்திகளை பார்த்தால் தனுஷ் யாருக்கு மருமகன் என அடுத்த சண்டை வரும் போல‌

வரட்டும் அது ரஜினிகாந்த் பிரச்சினை

தனுஷின் சகோதரர் செல்வராகவனை தேடி யாராவது வந்தால் இன்னும் நன்றாக இருக்கும், அவரின் படத்தினை பார்த்த நீதிபதிகள் இருந்தால் அவர்களே ஒப்படைத்துவிடுவார்கள்

எப்படியோ தனுஷ் பிரச்சினை வேறுமாதிரி செல்கிறது, விரைவில் சிம்பு படங்களில் சில அதிரடி சென்டிமெண்ட் காட்சி வரலாம்.

“நான் எவனையோ அப்பாண்ணு சொல்லி முன்னுக்கு வந்தவன் இல்ல….

எனக்கிருக்கிறது சொந்த அப்பா,
தமிழ் தந்த அப்பா”

என்ற ரீதியில் வசனம் இருக்கலாம்


 மோடியின் அறிவிப்புக்கு 92 சதவீத பேர் எதிர்ப்பு: இளங்கோவன் பேச்சு

உங்களுக்கும் தான் கட்சிக்குள் 90% சதவீத எதிர்ப்பு, பதவியினை கூட பிடுங்கி விரட்டி விட்டார்கள், அதற்காக என்ன செய்தீர்கள்? ஜம்மென்று கட்சிக்குள் அமரவில்லையா?

அந்த 92%ம் என்ன கணக்கு? சத்யமூர்த்தி பவனில் இருக்கும் காங்கிரஸ் காரர்களா?

அப்படியானால் ஆதரித்த 8% யார்? அந்த தங்கபாலு கோஷ்டியாக இருக்குமோ?


யாரை கேட்டு நேரு இந்தியாவினை பிரித்தார்? அதுபோல மோடியும் யாரை கேட்காமல் கரன்சியினை முடக்கினார் : ஹெச். ராஜா

அதானே யாரை கேட்டு காந்தி போராடினார், யாரை கேட்டு அவர் உண்ணாவிரதம் இருந்தார்? யாரை கேட்டு தேசம் அவர் பின்னால் சென்றது? இப்படி எல்லாம் கேட்டால் பதில் சொல்ல முடியுமா?

சத்தியமாக யாராலும் பதில் சொல்ல முடியாது ராசா, ஆனால் உங்களால் ஒரு கேள்விக்கு பதில் சொல்லமுடியும்.

யாரை கேட்டு காந்தியினை கோட்சே கொன்றான்? , யாரை கேட்டு பாபர் மசூதியினை இடித்தார்கள்? யாரை கேட்டு குஜராத்தில் கலவரம் நடந்தது?

இதற்கான பதில் உங்களுக்கு தெரியும் அல்லவா? சொல்லுங்கள்

ஆனாலும் நாடி நரம்பெல்லாம் சாணியும், மாட்டு மூத்திரமும் ஓடும் ஒருவரை தவிர இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்க முடியாது

நாஞ்சில் சம்பத் எவ்வளவு பரவாயில்லை.


தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை: தமிழிசை பேட்டி

அகில இந்திய அளவில் காங்கிரஸ் போராட்டத்திற்கே பெரும் ஆதரவு இல்லை, இதில் தமிழகத்தில் என்ன ஆதரவு பெருகிவிட போகின்றது?

காவேரிக்கும், அணுவுலைக்கும், மீத்தேனுக்கும், ஜல்லிகட்டுக்கும் திரளா மொத்த தமிழகமா கரன்சிக்கு திரளும்?, தமிழன் தூங்கி நெடுநாள் ஆகிவிட்டது அம்மணி.

சரி அம்மணி, எப்படியோ ஒரு எதிர்ப்பினை திமுக செய்கிறது, குறைந்தபட்சம் சிறை நிரம்பவாவது, மண்டபம் நிரம்பவாவது ஒரு கூட்டம் சேர்கிறது

பாஜக ஆர்ப்பாட்டத்தில் சிறையின் ஒரு அறை நிரம்பவாவது , கூட்டம் சேர்ந்ததா?, முன்பு பாஜக ஆர்பாட்டத்தில் உங்களை தவிர யார் வந்தார்? உங்கள் குடும்பத்தாரை கூட காணவில்லையே

இதற்குத்தான் சொன்னது, ஸ்ருமிதி இராணி செருப்போடு சேர்த்து இவர் வாயினையும் தைக்க வேண்டும் என்பது


நோட்டு செல்லாது அறிவிக்க கூறினால் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்: ப.சிதம்பரம்

ஆனால் ஆயிரம் ஊழல் குற்றசாட்டு இவர் அமைச்சராக இருந்த‌ அரசு மீது சுமத்தபட்ட பொழுது இவர் கம்மென்று நிதியமைச்சராக‌ இருந்தவர் என்பதனை நாமெல்லாம் மறந்துவிடவேண்டும், மறந்து தொலைப்போம்.


மு.க.ஸ்டாலின் கைது

# ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்., போராட்டமெல்லாம் நடத்திவிட்டேன், நானும் அரசியல்வாதிதான்.


 சென்னை மெட்ரோ ரயில் சேவையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

தமிழக அரசாங்கமே தனியார் மயமாகி வெகுகாலம் ஆகிவிட்டது, இதில் மெட்ரோ ரயிலுக்கு மல்லுக்கு வந்து விட்டார் மருத்துவர் அய்யா


மோடியை திடீரென ஆதரிக்க காரணம் என்ன? – வைகோவுக்கு முத்தரசன் கேள்வி

அட அவரை விடுங்க, பிரீயா குடுத்தா பினாயிலையும் குடிப்பார்