நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள்…

இரு நாட்களுக்கு முன்பு மோடி அழுதார், இப்பொழுது கரன்சி பிரச்சினை தொடர்பாக என்னை முறைப்படி கலந்தாலோசிக்கவில்லை என நிதியமைச்சரே கண்ணை கசக்குகின்றார்

பாருங்கள் நாட்டின் நிதியமச்சருக்கே தெரியாமல் ரகசியம் காக்கபட்டிருக்கின்றது, 6 மாதமாக திட்டம் தீட்டினேன் என சொல்லும் பிரதமர் நிதியமைச்சரிடமே சொல்லவில்லையாம்

நிதியமைச்சரே கலங்கும் நேரத்தில், சாதாரண குடிமகன் ஏடிஎம் மெஷின் முன்னால் கலங்காமல் என்ன செய்வான்

ஆக எடிஎம் மிஷினிலோ வங்கியிலோ அழுபவர்கள், நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள்

இப்படி நாட்டு நலனுக்காக (யாரும் சிரிக்கவேண்டாம்..) தேசத்தின் உச்ச கணக்கு பிள்ளையான நிதியமைச்சரே (மறுபடியும் சிரிக்கவேண்டாம்..) பெரும் தியாகம் செய்திருக்கும் வேளையில், அதாவது தன் பதவிக்கு கொஞ்சமேனும் மதிப்பில்லாமல் போனபின்பும் அதில் அமர்ந்து பெரும் தியாகம் செய்யும் பொழுது

மக்களாகிய நீங்களும் (யார்டா மறுபடி சிரிக்கிறது..) அமைதிகாத்து தேசத்தினை காக்க வேண்டும்

டெல்லிவாசிகளே கொஞ்சம் கவனம், ஏடிஎம்மில் உங்களுக்கு அடுத்து நிற்பவர் நிதியமைச்சராக கூட இருக்கலாம்

தமிழகத்தில் தமிழிசையும், பொன்னாரும், வானதி சீனிவாசனும் எந்த இடத்தில் வரிசையில் நிற்கின்றார்கள் என்பது ரகசியம், அது வெளியானால்

கல்பாக்கம், கூடன்குள, விமான நிலைய பாதுகாப்பு படைகள் எல்லாம் அங்குதான் குவிக்கபடவேண்டி இருக்கும், சரி அவர்கள் வரமாட்டார்கள்

மறந்துவிடாதீர்கள், பணப்பிரச்சினை என்றால் நிதி அமைச்சரிடம்தான் குறைபடவேண்டும், நிதி அமைச்சரே கால்ங்கி நின்றால் நாம் எங்கு செல்ல…

சிலர் கையில் கருப்பு மை இருக்கலாம், அதனை அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை அழியாமல் காத்துகொள்ளுங்கள், காரணம் நமக்கு மறதி அதிகம்.

அது ஒருபுறம் இருக்கட்டும், இந்த ஆர்எஸ்எஸ் பயல்கள் பேச்சினை மோடி கேட்டால் நிலமை இன்னும் மோசமாகலாம்

காரணம் மத நல்லிணக்கமாக பெரும் வாழ்வு வாழும் நாடுகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. மத அல்லது இனவாதத்தில் மூழ்கி நாசமாய் போயிருக்கும் ஆப்கன், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, சில ஆப்ரிக்க நாடுகள் இவற்றை தாண்டி இவர்கள் யோசிப்பதில்லை

நல்ல நாடு எதனையாவது பின்பற்றுவார்களா என்றால் இல்லை, நாசமாய் போன நாடுகளை பின்பற்றி மோடிக்கு ஆலோசனை சொன்னால் இப்படித்தான் நாசமாய் போகும்

லெனின் பெரும் புரட்சியாளன், அதனை பின்பற்றி நாட்டை வளர்க்கபோகிறேன் என கிளம்பிய மாவோ சீனாவினை மாற்றி காட்டினான்

அதே லெனினை பின்பற்றுகிறேன் என போல்பாட் என்பவன் கம்போடியாவினை நாசமாக ஆக்கி, அதனை 100 ஆண்டுகள் பின்னோக்கி போகவிட்டான்

மோடி மாவோவாக ஆகவேண்டாம், இந்த போல்பாட் போல ஆகாமல் இருந்தால் சரி.

ஆனால் ஆர்எஸ்எஸ் அவ்வளவு சுலபத்தில் இந்தியாவில் ஒரு போல்பாட்டினை உருவாக்காமல் போகமாட்டார்கள் போல தெரிகின்றது

ஆடட்டும், களைக்கும் வரை ஆடட்டும், அடுத்தால் இவர்கள் ஆட்சிக்கு வர அந்த ராமன் என்ன? முப்பெரும் தெய்வங்கள் நினைத்தாலும் முடியாது.

ரகுராம் ராஜனை விரட்டியதே பெரும் தவறு, ஓரளவு அனுபவமும் விஷய ஞானமும் உள்ளவர் அவர்.

அருண் ஜெட்லி மட்டும் டம்மியாக்கபட்டார் என்றாலோ, விரட்டபட்டார் என்றாலோ இந்தியா போல்பாட்டின் கம்போடியா போல ஆகபோகின்றது அல்லது தாலிபன்கள் ஆட்சியின் ஆப்கன் போல ஆகபோகின்றது என்பதன் எச்சரிக்கை மணியாகவே இருக்கும்

மோடிக்கும் ஜேட்லிக்கும் பணக்கசப்பு இல்லை மனக்கசப்பு

நாடே குழப்பத்தில் இருக்கிறதென்றால், அரசின் குழப்பம் அதனைவிட அதிகம் இருப்பது போல செய்திகள் வருகின்றன‌

அதாகபட்டது கரன்சி பிரச்சினையில் மோடிக்கும் ஜேட்லிக்கும் பணக்கசப்பு இல்லை மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாம், ஆரம்பத்திலே இது புகைந்தது, அதாகபட்டது அறிவிப்பு முறைப்படி நிதியமைச்சர் ஜெட்லியால்தான் முன்மொழியபட்டு பிரதமரால் நிறைவேற்றபட்டிருக்கவேண்டும்

ஆனால் பிரதமர் இன்னும் அவரின் திடீர் ஆலோசகர்கள் என பலர் தாமாக வந்து அறிவிப்பு செய்யும் சமயம் அருண் ஜெட்லியினை காணவில்லை, அப்பொழுதே பல கண்கள் அவரை தேடின, ஆனால் காணவில்லை

இப்பொழுது விஜய்மல்லையா தொடர்பான சில விவகாரங்களில் அவரும் குழப்பமான அறிக்கைகளை வெளியிட மோதல் முற்றிற்று என தூண்டி விடும் அறிக்கைகள் வருகின்றன‌

ஒன்று சொல்லலாம்

மத்திய அரசில் மோடி முகம் தவிர சொல்லகூடிய முகம் இரண்டுதான் ஒன்று ஜெட்லி இன்னொன்று சுஷ்மா

ஸ்ருமிதிராணி தன் அதிரடியால் பிரபலமாக அவரையும் முக்கில் வைத்தாயிற்று, அவரை இப்பொழுதெல்லாம் காண முடிவதில்லை

ஸ்ருமிதி ராணி விரட்டபட்டபின் சுஷ்மாவின் வேகமும் குறைந்தது, இன்று அவரும் நோயாளியாகி படுத்துவிட்டார், அப்பல்லோ போல மர்மமில்லை, சிறுநீரம் மோசம் என அறிவிக்கை வந்தாயிற்று

ஒரே அடையாளம் தற்போது அருண் ஜெட்லிதான், ஓரளவு திறமையானவர், குறிப்பிட்டு சொல்லகூடிய ஓரே அடையாளம் அவர்தான்.

அவரையும் கழற்றிவிட்டால் பாஜக அரசு 4 டயர் மற்றும் கியர்பாக்ஸினை கழற்றிவிட்டு வெறும் இன்சினை மட்டும் வைத்து ஓட்டிவிடலாம் என கருதுவதற்கு சமம்

என்ன நினைக்கின்றார்கள்? மோடி தவிர யாரும் வெளிதெரியகூடாது என்கின்றார்களா? வேறு யாரும் முடிவெடுக்க கூடாது உத்தரவா என தெரியவில்லை, ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிகின்றது

பாஜக ஒருவிதத்தில் பரிதாபமான கட்சி, நிதியமைச்சர் அவர்களுக்கு நல்ல விதத்தில் அமைவதே இல்லை.நரசிம்மராவுக்கு மன்மோகனும், மன்மோகனுக்கு சிதம்பரமும் மிக அழகாக அமைந்தார்கள்

ஆனால் வாஜ்பாய்க்கு முன்பு யஷ்வந்த் சின்ஹா அமைந்து பெரும் குழப்பம் வந்தததெல்லாம் வரலாறு, அந்த வரலாறு திரும்பாமல் இருப்பது மோடியின் கரங்களில்தான் இருக்கின்றது

ஆக மத்திய அரசே, ஜெட்லியினையும் இந்த சு.சாமி போன்ற குழப்பவாதிகளால் கழற்றிவிட்டால் அதன் பின் இந்த அரசினை சோமாலியா அதிபர் கூட மதிக்கா நிலை வரலாம், அமெரிக்கா சென்றால் டிரம்ப் வாயால் மட்டும் சிரிக்கமாட்டார்

அந்த கட்சியில் இவர்களை விட்டால் சொல்லிகொள்ளும்படி யார் இருக்கின்றார்கள்?

சுஷ்மா இல்லை, ஸ்ரிமதி ராணி சரியில்லை என சொல்லியாயிற்று, ஜெட்லியோடும் தகறாறு எனில் என்னாகும்?

ஒருவேளை தமிழிசையினை அந்த இடத்திற்கு கொண்டு வந்துவிடுவார்களோ? கொண்டு வைத்தால் எப்படி இருக்கும்?

இந்தியர் தலையெழுத்து எப்படியும் மாறலாம் யார் கண்டது

பழைய கலைஞராக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?

Stanley Rajan's photo.
Stanley Rajan's photo.

 9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்காதது வேதனைக்குரியது

இவர்கள் ஆட்சியில் பால் விவசாயி கால்வாயில் ஓடியது, தேன் கிணற்றில் ஊறியது, தங்கள் விவசாயி நிலத்தில் விளைந்தது

அரசியல் செய்பவர் இப்படியா செய்வார்? இதெல்லாம் இனி எடுபடுமா?

இதே பழைய கலைஞராக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?

1000, 500 நோட்டுக்களை எங்காவது வங்கி முன் எரித்து, பெரும் போராட்டங்களை முன்னெடுத்து, எதற்கும் அஞ்சாமல் கல்லக்குடி போல களபேரம் செய்திருப்பார்

காரணம் அந்த போராட்ட குணத்தினை அவர் பெரியாரிடமிருந்து பெற்றிருந்தார், அதே தான் இந்தி எதிர்ப்பு, மிசா, ஈழப்போராட்டம் என அவரை போராட்டத்திலே வைத்திருந்தது

இன்று முதுமையால் அந்த நெருப்பு கலைஞர் செயல்பட முடியவில்லை, அவரினை முழுமையாக பின்பற்றவும் யாருமில்லை

இதோ மம்தா ஏதோ கல்கத்தா பக்கம் முணுமுணுக்கின்றார், முதல் குரலாக எதிர்ப்புகுரல் அவரின் குரல்தான் பதிவாகின்றது

பெரியாரின் மண்ணில் பெரும் சத்தம் ஏதுமில்லை, இது சொல்வது என்ன? பெரியாரின் அந்த உணர்ச்சிமிக்க போராட்டம் கலைஞர் காலம் வரை தொடர்ந்தது

பழைய கலைஞரின் தமிழகமாக இருந்திருந்தால் இன்று நடப்பதே வேறு, தீ இந்தியா முழுக்க பரவியிருக்கும்

ஆள்வதும் நீங்கள், நோட்டை கொடுப்பதும் நீங்கள், அல்லல் பட திராவிட தமிழர்கள் என்ன ஆரிய அடிமைகளா என அவர் பொங்கினால் தமிழகமும் பொங்கியிருக்கும்

கலைஞர் முதுமையானதும் எல்லாம் மாறிற்று. அந்த பெரியாரின் பெரு நெருப்பு அணைந்தே போயிற்று

இனி மத்திய அரசுக்கெதிரான பெரும் போராட்டம் தமிழகத்தி எடுபடும், வெற்றிபெறும் என நினைக்கின்றீர்கள்

ஒருகாலமும் இல்லை. அதற்கு பெரியாரின் தைரியமும் கலைஞரின் போராட்ட குணமும் வேண்டும்

இப்பொழுது யாரிடமும் அந்த இரண்டும் இல்லை. வரவும் வராது.

நிச்சயம் ஒரு காலத்தில் கலைஞரை அடிக்கடி நினைவு கூர்வோம், ஏன் இப்பொழுதே நினைக்க தொடங்கிவிட்டோம் அல்லவா? இதுதான் கலைஞரின் முத்திரை.

(இந்த தளபதி அல்லக்கைகள் எல்லாம் இப்பொழுதும் சண்டைக்குத்தான் வருவார்கள், பாருங்கள் )


 சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

அண்ணே வைகோ உங்க கூட ஆர்ப்பாட்டம் பண்ண வரவில்லையா?


 

ஜெமினி கணேசன் : மிக விசித்திரமானவர்

தோற்றம் : 17-11-1920    ::     மறைவு : 22-03-2005

தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள்

வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள்

இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணெசன்

கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஏகபட்ட திருமணம் பல காதல்கள் என ஏராளமான விஷயம்

ஆனால் இவை எல்லாம் அவரினை பாதித்ததாகவோ, அவரின் தொழிலை அழித்ததாகவோ, வறுமையில் தள்ளியதாகவோ இல்லை, அப்படி ஒரு நிலையே இல்லை

சினிமாவில் சம்பாதித்தவர்களில் இன்றும் நம்பர் 1 சொத்துமதிப்பு ஜெமினி கணேசனுக்கே இருக்கிறது என்கிறது செய்தி. அப்படியான பாதுகாப்பான முதலீடுகளில் மனிதர் செய்திருக்கின்றார்

எத்தனை பெண்கள் அவர் வாழ்வில் குறுக்கிட்டிருந்தாலும் அவர்களில் யாருக்கும் அவர் 1 பைசா செலவழித்தாக வருமான வரியில் கூட தகவல் இல்லை, அவ்வளவு சமத்து.

அதனால்தான் அரசியல் கட்சி என இறங்கவில்லையோ என்னமோ

மகா திறமையான நடிகர், அக்காலத்தில் எல்லா நடிகர்களும் நாடகபிண்ணணியில் இருந்து வந்தபொழுது, கல்லூரி பட்டம் பெற்று திடீரென நடிக்க வந்து வெற்றிகொடி நாட்டியவர் ஜெமினி

களத்தூர் கண்ணம்மாவில் கமலுடன் நடிக்க தொடங்கி அவர், அவ்வை சன்முகி வரை கமலுடன் நடித்தார், அவ்வளவு நீண்ட திரைப்பயணம்.

1970களில் இந்தி நடிகை ரேகாவினை ஜெமினி வீட்டுக்கே முதன் முதலில் விருந்தாளியாக‌ அழைத்து வந்ததும் அதே கமலஹாசன் தான், ரேகா ஜெமினியின் மகள்

ஒரு வகையில் ஜெமினி கமலுக்கு முன்னோடி, ஆம் பல துணைவிகளுக்கு மனைவி எனும் அந்தஸ்தை அவர் கொடுக்கவே இல்லை. இன்றும் கமலஹாசன் அப்படியே

ஜெமினியிடம் இருந்த ஸ்பெஷாலிட்டி, எல்லா நடிகர்களோடும் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசனோ அன்றி வந்த ரவிச்சந்திரனோ இணைந்து நடிக்க மனிதர் தயங்கியதே இல்லை.

அதாவது சாதாரண மனிதனின் பிம்பமாகவே அவர் திரையில் தெரிந்தார், அவர் நீடித்து நின்ற நடிகனாக நிலைபெற இதுதான் அவருக்கு கைகொடுத்தது, ஒரு யதார்த்த நடிகன்

பிரமாண்டமோ, பெரும் பிம்பமோ குறிப்பிட்ட முத்திரையோ அவரிடம் இல்லை.

எத்தனை மனைவிகளை கொண்டிருந்தாலும், ஜெமினி மனதில் தங்கியவர் முதல் மனைவி பாபுஜி மட்டுமே. காரணம் எத்தனை திருமணம் செய்தாலும் அவர் தடுக்கவில்லை, சாவித்திரி வீட்டிற்கு வரும்பொழுது அவர் வரவேற்றார்

புஷ்பவல்லி, ராஜஸீரி திருமண செய்திகள் வந்தபோதும் அவர் அமைதியே காத்தார்

64 வயதில் தற்கொலைக்கு முயன்றபொழுதான் ஜெமினிக்கு ஞானம் வந்தது, நான் மனமார காதலித்த ஒரே பெண் பாபுஜி என்றார்

கொஞ்சநாளில் ஞானம் விடைபெற அடுத்த துணையும் வந்தது, ஆனால் பாபுஜி அவர் மனதில் உயரவே நின்றார்.

(இப்படி ஒரு மனைவி வாய்த்தால் யாருக்குத்தான் மரியாதை வராது 🙂 )

எப்படி நோக்கினும் கொஞ்சம் வித்தியாசமான மனிதர் அவர், பெண்களால் பெரும் சாம்ராஜ்யம் அழிந்தது, பெரும் போர்கள் நடந்தன என சொல்லபடும் உலகில், பெண்களால் நயா பைசா கூட அழியாது, கையாள்வது சுலபம் என உலகிற்கே சொல்லி கொடுத்தவர்

தன் வாழ்வினையும் திறந்த புத்தகமாகவே வைத்திருந்தார்,சுய்சரிதை எழுதுகின்றார்களா? என அவரிடம் கேட்டார்கள்,

“தமிழகத்து சாமான்யனுக்கும் என் அந்தரங்கம் வரை தெரியுமே?, பின் என்ன எழுத” என அசால்ட்டாக கேட்டவர் ஜெமினி

மனிதரை ஆழ்ந்து பார்த்தால் சில விஷயங்கள் தெரியும்

அதாவது சூழ்நிலையின் உணர்ச்சிகளே ஒரு மனிதனை வழிநடத்தும், ஒழுக்கம் ,கட்டுப்பாடு ,சமூகம், சுயமரியாதை, கவுரவம், இவற்றை தாண்டி உணர்சியே ஜெமினி கணேசனை வழிநடத்திற்று

மனிதர் மனம் சொன்னபடி வாழ்ந்திருக்கின்றார், ஜமாய்த்திருக்கின்றார்

சமூகம், சுய ஒழுக்கம் , அடுத்தவன் என்ன நினைப்பான் போன்றவற்றை பற்றி அவர் நினைத்த்தே இல்லை. மனம் சொன்னபடி வாழ்ந்தும் இருக்கின்றார்,

அவர் சொன்னபடி பணமும் நின்றிருக்கின்றது

பல அற்புதமான யதார்த்த படங்களை எல்லா நடிகர்களுடனும் இணைந்தும் தனியாகவும் கொடுத்த அற்புத நடிகர் அவர்

சிவாஜி கணேசனோடு 13 படங்களில் நடித்தாலும், மற்ற எல்லோருடனும் நடித்த ஒரு நடிகர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணேசன் தான்

அந்த அப்பாவி முகமும் , குறும்பு கண்களும் அவரை நினைக்கும் போதெல்லம் வந்து போகின்றன‌

பாடகர் பி.பி சீனிவாஸ் இவருக்கென்றே பாடியதை போன்ற அற்புதமான பாடல்கள் தமிழ் திரையுலகில் சாகா வரம்பெற்றவை

“தேன் நிலவு””சாந்தி நிலையம்””பாச மலர்””பார்த்தால் பசி தீரும்” இன்னும் ஏராளமான முத்திரை படங்களில் பிரகாசித்தவர் ஜெமினி

ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு பல நடிகர்களை சொல்லலாம், இப்படி(யும்) வாழலாம் என்பதற்கு ஜெமினி பெரும் எடுத்துகாட்டு

அவராக யார் வாழ்வினையும் கெடுக்கவுமில்லை, யாரும் தன் வாழ்வினையோ மகிழ்வினையோ கெடுக்க அனுமதிக்கவுமில்லை.

சாவித்திரி நிச்சயம் ஜெமினி சொற்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரும் வீழ்ச்சியினை சந்தித்திருக்கமாட்டார், அவர் விதியினை அவர் தேடிகொண்டார்.

ஒரு விதத்தில் ஜெமினி கணேசன் உலகிற்கு சொன்ன தத்துவம் வேறுமாதிரியானது, சென்டிமென்ட் எனும் பாச சங்கிலியில் அதாவது மனைவி, பிள்ளைகள் எனும் உறவின் வலுவிற்கோ அவர் இறுதிவரை அடிமையாகவே இல்லை

அவர் மனம் அப்படி இருந்திருக்கின்றது.

அவர் வாழ்வு அவர் சந்தோஷத்திற்கு என வாழ்ந்திருக்கின்றார், அதே நேரம் நம்பிவந்த குடும்பத்தாரை நடுத்தெருவில் விட்டதாகவும் தெரியவில்லை

வித்தியாசமான மனிதர் ஜெமினி கணேசன், இன்று அவரின் பிறந்தநாள்

பெரும் கஞ்சன் என்றெல்லாம் அவரை சொல்லமுடியாது, தனுஷ்கோடி புயல், சீன போர் போன்ற காலங்களில் அவரும் சாவித்திரியும் கொடுத்த நன்கொடைகள் அதிகம்

காருகுறிச்சி அருணாச்சலம் எனும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுக்கு பெரும் செலவில் நினைவு சின்னம் அமைத்தவர் அவரே

இப்படி பல நினைவுகள் வருகின்றன‌

சரி இத்தனை திருமணம் செய்ய அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம்?

புதுக்கோட்டை மகராஜா துப்பாக்கி சுட்டு பழக, தன் தலையில் ஆப்பிளோடு நிற்பாராம் ஜெமினி கணேசன்

அந்த தைரியம் போதாதா? அந்த மரணபயத்தினை வென்றவருக்கு மனைவி பயமெல்லாம் பெரிய விஷயமா???

ஒரு சுவாரஸ்யமான மனிதராகவே அமைதியாக வாழ்க்கையினை அனுபவித்து வாழ்ந்திருக்கின்றார் ஜெமினி கணேசன்.

கிடைத்த ஒரு வாழ்க்கையினை பலவாறு மாறி மாறி வாழ்ந்து தீர்த்திருக்கின்றார்.

பண மாற்றம் அமைதியாகத்தானே நடக்கிறது….

இந்தியாவில் எத்தனை கலவரம் வெடித்தது, எத்தனையாயிரம் பலிகள் நடந்திருக்கின்றன‌

எல்லை பிரிவினை, காஷ்மீர், பொற்கோயில் கலவரம், சஞ்சய்காந்தி அழிச்சாட்டியம், இந்திரா கொலைக்கு பின் டெல்லி கலவரம், போபால் விபத்து, ராஜிவோடு 17 பேர் பலி, பத்ம்நாபா படுகொலை பாபர் மசூதி இடிப்பும் கலவரம், மும்பை கலவரம், மும்பை குண்டுவெடிப்பு என பெரும் வரிசை.

இந்தி எதிர்ப்பு என தூண்டிவிடபட்டு செத்தது 67 பேர்.

மிசா காலத்தில் நடந்த மரணங்கள் என்ன?

ஈழத்தில் மட்டும் உயிர்விட்ட இந்திய ராணுவத்தார் 1500.

கும்பகோண மகாமகத்தில் நெரிசலில் சிக்கியவர் என்ன வகை?

மிக இளவயதில் எம்ஜிஆர் செத்ததும் தீக்குளித்தது எத்தனைபேர்?

கட்டடம், தீ, மவுலிபாக்கம் என எத்தனை ஆயிரம் சாவுகள்

அவ்வளவு ஏன் வனக்காவலன் வீரப்பனால் காட்டில் கொள்ளையடிக்கபோய் செத்த காவலர்கள் 150 பேர் பலி.

தமிழகத்தில் மட்டும் கொடியன்குளம், வாச்சாத்தி என‌ எவ்வளவோ நடந்திருக்கின்றது, இந்தியா முழுக்க சொன்னால் பட்டியல் தாங்காது, பூலன் தேவி நடத்திய அதிரடிகள் ஒன்றே போதும்.

மனதை தொட்டு சொல்லுங்கள் இவை எல்லாம் மோடி ஆட்சி செய்யும்பொழுது நடந்ததா?

இவற்றை எல்லாம் மறைத்துவிட்டுதான் கரன்சி நோட்டு பிரச்சினையில் பலபேர் மோடியால் கொல்லபட்டு கொண்டிருக்கின்றார்கள், இந்தியா அழிகின்றது , பொதுமக்கள் சாகின்றார்கள் என வஞ்சகமாக பதிவிட்டு கொண்டிருக்கின்றார்கள்.

நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வருகிறார்…

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வருகிறார்.

சரி ஏன் அவசரமாக வருகின்றார்?, இனி பாகிஸ்தான் கள்ளநோட்டு அடிப்பது சிரமம், அப்படி அடித்தாலும் இந்தியா எப்பொழுது இப்படி அறிவித்து நிலமையினை சிக்கலாக்கும் என தெரியாது, ஒருவேளை அந்த நிலையினை ஆராய வருவாரோ??

பாகிஸ்தானியர் குதர்க்கமானவர்கள், பாகிஸ்தானிய பினாமிகள் பெயரில் இந்தியாவில் வங்கியே தொடங்கினால் என்ன? என சிந்தித்தாலும் சிந்திக்கலாம்.

பாகிஸ்தான் பினாமிக்கு ஆட்களா இல்லை , தேசம் பற்றி சொன்னால் என்னோடு மல்லுகட்டும் ஏராளமான இந்தியர் பற்றி இப்பொழுதே சொல்ல முடியும்.

சரி அவர் வரட்டும்,

கொஞ்சம் பழைய கரன்சி கொடுத்து மாற்ற ஏதாவது ஒரு வங்கி வாசலில் விடுவோம், மனிதர் அலறிகொண்டு பாகிஸ்தானுக்கு பறந்து இந்தியர்கள் பாவம், இனி சண்டை எல்லாம் வேண்டாம், இதனை விடவா அணுகுண்டு தாக்குதல் கொடுமை? என ஓடியே விடுவார்.

அப்படியே நமது ஆலோசகர்களையும் பெஷாவர் பக்கம், வர்சிஸ்தான் பக்கம் அனுப்பினால் நம்மவர்களுக்கும் அவர்கள் மேல் அனுதாபமே வரும், அணுகுண்டு வீசும் ஆசையெல்லாம் வராது.

தினசரி தற்கொலை தாக்குதலில் சாகும் பாகிஸ்தானியரை கண்டால், இதில் நாமும் யுத்தம் நடத்தி இவர்களை கொல்லவேண்டுமா என்றே ஒதுங்க தோன்றும்,

எல்லையில் நம்மவர் 5 பேரை அவர்கள் கொன்றால், அவர்கள் பொதுமக்கள் 50 பேர் அவர்கள் மத தீவிரவாதிகளாலே கொல்லபடுகின்றனர்

அந்த மத தீவிரவாதிகளை விடவா பாகிஸ்தானில் நாம் அழிவு ஏற்படுத்திவிடமுடியும்? அவர்களே அவர்களை அழித்துகொள்வார்கள்

இருநாட்டிலுமே அப்படி ஆயிரம் மக்கள் நல பிரச்சினைகள் இருக்கின்றன, இருநாட்டிலும் சீரமைக்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது

ஆனால் இந்தியரை விட பாகிஸ்தானியர் வாங்கியிருக்கும் சாபம் மிக அதிகம்.

இந்தியாவில் நடப்பது கருப்பு பண விளையாட்டு,

பாகிஸ்தானில் நடப்பது மதரீதியான ஆயுத விளையாட்டும் அதனுடனான ராணுவ விளையாட்டும் தினசரி கொடூர சாவுகளும்.


இந்தியாவில் கரன்சி குழப்பம் இப்படி இருக்க, பாகிஸ்தானியர் வித்தியாசமாக யோசிப்பார்கள்

“எத்தனையாயிரம் கள்ளநோட்டு அடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டோம், ஒரு சத்தமும் மக்களிடமிருந்து ஒரு எதிர்ப்பும் வரவில்லை. மும்பை குண்டுவெடிப்பே கருப்பு பணத்தில்தான் நடந்தது, ஒரு சத்தமுமில்லை

இந்தியாவில் குழப்பமில்லை என முகத்தை தொங்க போட்டு அமர்ந்தோம்

ஆனால் கள்ளநோட்டை மதிப்பிழக்க வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும்பொழுது, இந்தியாவில் ஒருவித அரசுக்கெதிரான குரல்களும் பலவிதமான எதிர்ப்பு சத்தங்களும் கேட்கின்றன‌

இப்படிபட்ட விசித்திரமான வெற்றி எங்காவது கிடைக்குமா?

கள்ளநோட்டு அடித்து உருவாக்கமுடியாத இந்திய சிக்கலை, கள்ளநோட்டை செல்லாக்காசாக்கும் இந்திய அரசின் முயற்சியில் உருவாக்கிவிட்டோம்.”

எப்படிபட்ட ராஜதந்திரம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கணக்கு,

அவர்களே எதிர்பாரா விபரீத திருப்பங்களை இந்திய மக்கள் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.


பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது…

Image may contain: 1 person , sunglasses and close-up

தமிழீழம் அமைவதை பிரபாகரன் போன்றதொரு பைத்தியக்காரன் வந்து அழித்துவிட்டான் : தலமை பித்த பிக்கு ஞானசார தேரர்.

அதாவது பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது, ஈழம் அமைவது அவனால்தான் தடுக்கபட்டது.

இனி ஈழம் அமைய யாராவது தலையெடுத்தால் அது நடந்துவிடும், ஆகவே சிங்களர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் என்று பேசியிருக்கின்றார்

இது உண்மையும் கூட, பிரபாகரனோடு சண்டையிட்ட காலங்களில் ஒருவகை தந்திரமாக இப்படித்தான் நாட்களை சிங்களன் கடத்தினான், உலக நிலை மாறுமட்டும் இப்படித்தான் யோசித்தான் சிங்களன்

“அதாவது இவன் நாடு கேட்கின்றான், பல பேர் சேர்ந்து இப்படி கேட்டால் சிக்கல்தான், ஆனால் இன்னொரு தமிழ் குழு சிங்கள எதிர்ப்புக்கு வரமால் பார்த்துகொள்கின்றான்

பெரும் எதிரியான பலமான இந்தியாவினையும் இலங்கை பிரச்சினையிலிருந்து விரட்டியவன் அவனே, அவன் இருக்கும் வரை ஈழ விவகாரத்தில் இந்தியா தலையிடாது,

ஆகவே இவன் இருக்கும் வரை சண்டையும் பேச்சுவார்த்தையும் மாறி மாறி நடக்குமே அன்றி ஈழம் அமையவே அமையாது, பிரபாரன் இருக்கும் வரை அமையாது”

பிரபாகரனை எவ்வளவு அழகாக கையாண்டு பிரிவினையினை தவிர்த்திருக்கின்றது இலங்கை என சிந்தித்தால் உங்களுக்கு புரியும்.

அப்படி சிங்களனுக்கு தன்னை அறியாமல் துணை சென்றவர்தான் பிரபாகரன்

சும்மா அல்ல கிட்டதட்ட பல லட்சம் மக்கள் உயிரோடு அவர் துணைபோனதுதான் கொடுமை, இதனை சொன்னால் நாம் துரோகி.

இத்தனை பெரும் அழிவில் லாபம் யாருக்கு?

நிச்சயம் சிங்களனுக்கு, இதில்தான் அவர்கள் பிரபாகரனை வித்தியாசமாக கையாண்டார்கள். பல வருடங்களாக இலங்கையில் புலிகளுக்கு தடை இல்லை என்பதே பெரும் உதாரணம்

ஏன்? புலிகளுக்கு தடை இல்லை

புலிகள் இல்லை என்றால் இன்னொருவன் போராட வருவான், வந்தால் புலிகளை போல் ஆயுதம் மட்டுமல்லாமல் வேறு வழியில் போராடுவான் சமாளிப்பது மகா சிரமம், புலி அப்படி அல்ல, சுடுவான் நாமும் திருப்பி சுட்டால் விளையாடிகொண்டே இருக்கலாம்.

பல எதிரிகளை உருவாக்குவதை விட, இருக்கும் ஒரே ஒரு எதிரியினை அப்படியே விடுவது நமக்கு நலம். இனி எதிரிகள் உருவாக மாட்டார்கள் எனும் நிலை வரும்பொழுது இவனை அழித்துவிடலாம்,

அதுவரை இவனை விட்டு வைப்பதே நமக்கு நலம், காரணம் இவன் இருக்கும் வரை இன்னொரு போராளி குழுவோ, இந்தியா போன்ற அந்நிய நாடோ உள்ளே வராது,

எப்படிபட்ட பாதுகாப்பு, வீணாக்கலாமா?

வாய்ப்பு கிடைக்கும்பொழுது தமிழர் மறக்க முடியா அடிகொடுத்து, முதுகெலும்பினை முறித்து இன்னொருவன் துப்பாக்கி தூக்க நினைக்க முடியாதபடி, ஈழ விடுதலை பேசமுடியாதபடி அடிக்கவேண்டும், மறக்கமுடியாத அடி கொடுக்கவேண்டும், அதில் எழும்பவே கூடாது

பெரும் ராஜதந்திரமிக்க திட்டம் இது.

இந்த நோக்கிலேதான் உலக நிலவரம் மாறும் வரை இழுத்தார்கள், உலகளாவிய தீவிரவாத தடை வரும்பொழுது மொத்தமாக வஞ்சம் சாத்தினார்கள்.

இனி இன்னொருவன் ராஜதந்திரமாக எழும்பிவிட கூடாது, அவன் பிரபாகரனை போல பைத்தியமாக இருக்கமாட்டான், அது நாட்டு பிளவிற்கு கொண்டு செல்லும் என எச்சரிக்கின்றார் இந்த பிக்கு

மகனே பிக்கு பொறு, பிரபாகரனை போல அல்லாமல் ஒரு நல்ல ராஜதந்திரமிக்க ஈழதலைவன் வரும்பொழுது நிச்சயம் இலங்கை பிய்ந்து ஈழம அமையும், குறைந்தப்ட்சம் சுயாட்சியாவது கொண்டிருக்கும்.

அன்று இருக்கின்றது உனக்கு, அங்கிள் சைமனோடு சேர்த்து

பின்பற்றத்தக்க கலைஞர் வழி….

Image may contain: 1 person , close-up

கலைஞர் எவ்வளவோ சொல்லியிருக்கின்றார், சில விஷயங்கள் பின்பற்றதக்கது, அவர் குறிப்பிட்டு சொல்லும் வாழ்க்கை முறை ஒன்று உண்டு

“உலகம் கண் விழிக்கும் முன் நம் வேலைகளில் பாதி முடிந்திருக்கவேண்டும்”

அதிகாலை எழுந்து, தயாராகி அன்றைய தினத்தை மற்றவர்களை விட‌ முன்னமே சந்திக்கதயாராக வேண்டும் என்பார்,

சொல்லியது மட்டுமல்ல வாழ்ந்தே காட்டுகின்றார், 92 வயதிலும் அப்படியே. அவரின் வெற்றிக்கும், பெரும் வரலாற்றிற்கும் அதுவும் ஒரு காரணம்.

அன்று அதிகாலையிலே மக்களை புரட்டிபோட்டன என்றால் இப்படித்தான், இவ்வளவிற்கும் இன்றிருக்கும் வசதிகள் அன்று இல்லை.

சும்மா சொல்லகூடாது, சில விஷயங்களில் அவரை பின்பற்றியே தீரவேண்டும்.

தாமதமாக விழிக்கும் நாட்களில், குறிப்பாக மேனேஜர் முன்பு ஹிஹிஹி என வழியும் நாட்களில்எல்லாம் அவரின் அந்த வரிகளே கண்முன் தெரிகின்றன.

நயந்தாரா எனக்கு விரோதியல்ல: சிம்பு

Image may contain: 4 people

நயந்தாரா எனக்கு விரோதியல்ல, அவர் திருமணத்திற்கு என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் : சிம்பு

அதானே, அவருக்குத்தானே இவர் விரோதி, இவருக்கு அவர் எப்படி விரோதி?

இவர் என்னமோ கர்மவீரர் காமராஜர் போலவும், அவர் என்னவோ காமராசரை தோற்கடித்த சீனிவாசனைபோலவும், பின் சீனிவாசன் திருமணத்தில் காமராஜர் முதல் ஆளாக வந்து வாழ்த்தியதை போல இவர் நயனை வாழ்த்தபோவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்

நண்பர் Babu Rao இயங்கும் நயன் “மெய்காவல்” படையினை மீறி சிம்பு எப்படி நயனின் திருமணத்திற்கு செல்ல முடியும்? விட்டுவிடுவார்களா?

நயன் மீது சிம்பு அட்சயை தூவும் அந்த கொடும் காட்சியினை எப்படி அனுமதிப்பார்கள்?

10 கிமீ முன்பே சிம்பு மீது தற்கொலை படையாக பாய்ந்துவிடுவார்கள்.