ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய புத்தகம்…

ish

தமிழகத்தின் தனிபெரும் சாதனையாளர்களில் ஒருவரும், உலக நாடுகளில் எல்லாம் பெரும் மரியாதையினையும் பெற்றுவிட்டவருமான அவர், தன் வாழ்நாள் சாதனை, இந்த சமூகத்திற்கு தான் சொல்லும் அறிவுரைகள் என எல்லாவற்றையும் புத்தகமாக எழுதியிருக்கின்றாராம்

யார் அந்த சாதனையாளர்?, சமீபத்தில் நோபல் பரிசினை நூலிழையில் தவற விட்ட ஐஸ்வர்யா தனுஷ். ரஜினியின் மகளான அதே ஐஸ்வர்யா.

தான் சிறந்த இயக்குநர், நடனக்காரர், மிக சிறந்த பாடகி என உலகிற்கு நிரூபித்துவிட்ட அவருக்கு தான் பெரும் எழுத்தாளர் என நிரூபித்து காட்ட வேண்டுமாம்

புத்தகம் விரைவில் வெளிவருமாம், அதில் தான் கடந்து வந்த மகா சிரமான பாதை(?), துயரம், துக்கம், துரோகம், வெறுப்பு எல்லாம் பதிவு செய்திருக்கின்றாராம், புத்தகம் வரும் 12ம் தேதி ரஜினி பிறந்த நாள் அன்று வெளியிடபடுமாம்

அவர் எதனையும் சொல்லட்டும், ஆனால் துரோகம், வெறுப்பு என சில விஷயங்களை சொல்கின்றாராம், அவர் வாழ்வில் துரோகம், வெறுப்பு என்றவுடன் எல்லோரும் கையினை உயர்த்தி சிம்பு என கத்துகின்றார்கள், நிச்சயமாக அது சிம்பு பற்றி வரும் என்கின்றார்கள்

புத்தகம் வரட்டும் தெரிந்துவிடும்

இதுபற்றி சிம்பு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் தெரிவிக்காமல் இருப்பது வரை நல்லது, புத்தகம் வரட்டும் என காத்திருக்கலாம்.

ஒரே தாஜ்மஹால்..ஒரே நிலா..ஒரே குஷ்பூ

நண்பர் Vengadesh Mothilal இதற்காக அவர்களை கண்டித்து உங்கள் உடைவாளை உருவிக்கொண்டு சீற வேண்டாம், தீ குளிக்கவும் வேண்டாம்

குஷ்பூவிற்கு ஆயிரம் எதிரிகள் உண்டு அதனின்று அவரை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என உணர்ந்தால் போதும்.

Kushboo Guardians's photo.
Kushboo Guardians's photo.Kushboo Guardians's photo.

Kushboo Guardians added 3 new photos. பதிவு….

டிவி பஞ்சாயத்து தேவையில்லை, நடிகைகள் கலையினை மட்டும் செய்ய வேண்டும் , நடிகை ஸ்ரிப்பியா, வெட்கக்கேடான நிகழ்ச்சி; குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை ரஞ்சனி

இப்படியாக சில நடிகைகள் கிளம்பியிருக்கின்றார்கள், ஏன் என்றால் நடிகை கலைச்சேவை மட்டும் செய்ய வேண்டுமாம், டிவி நிகழ்ச்சிக்கு செல்ல கூடாதாம்

ஏன் செல்ல கூடாதாம்?, தீர்ப்பு சொல்லும் தகுதி நடிகைக்கு இல்லையாம்

இது ஒரு தொலைகாட்சி நிறுவணத்தால் நடத்தபடும் நிகழ்ச்சி, முழுக்க முழுக்க அவர்களே பொறுப்பு, குஷ்பு அதனை நடத்துபவர் மட்டுமே. அன்று சர்ச்சையானது குஷ்பூ ஒருவரை அமர வைத்தார், அவரின் இயல்பான சுபாவம் அது, இதில் என்ன குற்றம்?

விஜய் டிவியில் நீயா நானா என ஒரு நிகழ்ச்சி வருகின்றது, அதனை பற்றி இந்த நடிகைகள் சொன்னது என்ன? ஒன்றுமில்லை

லட்சுமி நடத்தினார், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தினார் அதனை பற்றி எல்லாம் ஏன் கோபம் வரவில்லை

விளம்பரங்களில் எத்தனை நடிகைகள் நடிக்கின்றனர், அதுவும் அமிர்தா போன்ற ஏமாற்று விளம்பரங்களில் நடித்த நடிகைகளை பற்றி சொன்னார்களா?

நடிகை நடிப்பினை மட்டும் பார்க்க வேண்டுமா?

இதனை அப்பல்லோ வாசலில் சொல்லமுடியுமா? ஏன் நடிகை விந்தியா, சி.ஆர் சரஸ்வதி, பாத்திமா பாபு போன்றவர்களிடம் சொன்னால் என்ன?

நடிகனும் நடிகையும் நடிப்பினை மட்டும் பார்க்க வேண்டும் என எம்ஜிஆர் காலத்தில் ஏன் சொல்லவில்லை, இந்த அப்பல்லோ காலத்திலாவது சொல்லலாம் அல்லவா?

நடிகை விளம்பரத்திற்கு வரலாம், அரசியலுக்கு வரலாம், ஆளலாம் பல கனவுகளை காணலாம். ஆனால் டிவி நிகழ்ச்சிக்கு வந்தால் அது கண்டிக்கதக்கதா?

இதே சிரிபிரியா சன்டிவியில் நிகழ்ச்சிகள் நடத்தவில்லையா?, நடிக்க வில்லையா?. அதனை குஷ்பூ செய்ய கூடாதா?

இந்த ஸிரிபிரியா, ரஞ்சனி போன்றோரை வன்மையாக கண்டிக்கின்றோம்

இவர்களுக்கு எல்லாம் என்ன? ஒன்றுமில்லை எல்லாம் பொறாமை, இந்த குஷ்பூ மட்டும் தொட்ட இடமெல்லாம் வெற்றி ஆகின்றதே, சினிமா முதல் அரசியல் வரை மிக தைரியமாக எதிர்கொள்கின்றாரே என்ற கடும் எரிச்சல்

நம்மால் முடியாததை அவர் அசால்ட்டாக செய்கின்றாரே எனும் கடும் எரிச்சல், அதனை ஜீரணிக்க முடியாமல் வரும் வார்த்தைகள் இவை.

தைரியம் இருந்தால் நிகழ்ச்சி நடத்திய சன்டிவியினை கண்டியுங்கள், முடியுமா? அவர்களை கண்டித்து ஒரு வார்த்தை சொல்வார்களா?

எங்கள் தலைவி இதனை போல ஆயிரம் சிக்கல்களை கடந்து ஜொலித்துகொண்டிருப்பவர், இந்த எரிச்சல் பேட்டிகள் எல்லாம் அவரை ஒன்றும் செய்யாது.

எங்களை போல கோடான கோடி ரசிகர்களின் ஆதரவு இருக்கும் வரை எங்கள் தலைவியினை அசைக்க முடியாது

இந்த ரஞ்சனியும், ஸிரிபிரியாவும் மற்ற நடிகைகளிடம் சென்று, அது அப்பல்லோவோ அப்பல்லோ வாசலோ அங்கு சென்று நடிகைகளுக்கு நடிப்பினை தவிர ஏதும் தேவையில்லை என சொல்லிவிட்டு இங்கு வரட்டும்

வைஜெயந்தி மாலா, ஜெயப்பிரதா, ரோஜா,விஜயசாந்தி என அவர்களை எல்லாம் பார்த்து சொல்லிவிட்டு வரட்டும்.

நிகழ்ச்சியில் ஒருவனை குஷ்பூ வேகமாக பிடித்து அமர வைத்தாராம், அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டுமாம், ரஞ்சனி சொல்கின்றார்

பாராளுமன்றத்தில் கட்சி தலைவி என்னை அடித்தார் என ஒரு எம்பி கதறினாரே, அதனை பற்றி ரஞ்சனி ஏதும் சொன்னாரா? அதனை எல்லாம் விட்டு விட்டு, குஷ்பூவிடம் மட்டும் சீறுவாராம்.

வீணாக எங்கள் தலைவியினை சீறவேண்டாம், முடிந்தால் இவர்களை எல்லாம் கண்டித்துவிட்டு, சன் டிவியினை கண்டித்துவிட்டு இந்த பக்கம் வரலாம்.

உங்கள் பொறாமையின் அளவு இது,

குஷ்பூவின் பொறுமையும் அதே அளவு

உங்களுக்கு அவர் பதில் தரமாட்டார், அவசியமுமில்லை. நேரமுமில்லை,

ஆனால் நாங்கள் எங்கள் தலைவி தரப்பு நியாயங்களை சொல்லிகொண்டே இருப்போம்.

ஒரே தாஜ்மஹால்..ஒரே நிலா..ஒரே குஷ்பூ

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்..

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள், அப்படி நடந்திருப்பது மூவேந்தர் மூவிஸ் மதன் என்பவருக்கு

மனிதரின் தொடர்புகளும், அவரின் நடவடிக்கைகள் விசாரணையும் பெரும் பரபரப்பானவை, சினிமா உலகின் பெரும் கைகள், கழுத்துகள் வரை அது செல்கின்றது

இன்றைய பணம் மாற்றுதல், தங்க கட்டுப்பாடு என பெரும் சர்ச்சைகள் இருப்பதால் அன்னாரின் சாகசங்களும் பராக்கிரமங்களும் அதிகம் பேசபடுவதில்லை

இதுவே மற்ற நாட்கள் என்றால் இந்நேரம் இன்னொரு கன்னட பிரசாத் எனும் அளவிற்கு போட்டு தாக்கி இருப்பார்கள், உச்சிமுடி நடிகை முதல் தேங்காய் மூடி நடிகை சகல அடைமொழிகளிலும் எழுதி கிழித்திருப்பார்கள்

மோடி மீதான பரபரப்பில் இவை எல்லாம் ஓரம்கட்டிவிட்டன‌

அதனாம் மதனும் வர்ஷாவும், அவர் சம்பந்தபட்ட திரையுலக பிரமுகர்களும் மோடி படத்தினை சாஷ்டாங்கமாக வணங்கி அவருக்கு நன்றி தெரிவித்துகொண்டே இருப்பார்கள்.


அப்பல்லோவில் சோ’வை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்

தன்னை பார்க்க வந்த ஸ்டாலினிடம், கலைஞர் எப்படி இருக்கின்றார்? என விசாரித்திருக்கின்றார் சோ ராமசாமி

மேலோட்டமாக பார்த்தால் அரசியல் நாகரீகம் என சொல்லிவிட்டு செல்லலாம்,

ஆனால் ஆழமாக நோக்கினால் சோ என்றுமே குறுப்புக்காரர்தான்


எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை அளிக்கின்றதா?

மழை பெய்தாலே பள்ளி கல்லூரிகளை அடைக்கும் அளவிற்கு கட்டமைப்புகள் உள்ள நாட்டில்தான் மின் அட்டை, போன் பரிவர்த்தனை என பேசிகொள்கின்றார்கள்

மாடிவீட்டுகாரன் போல ஓலை குடிசைக்காரனும் போன் வைத்துகொண்டால் மட்டும் சரி சமமானவர்கள் ஆகிவிட முடியாது

எத்தனை பெரிய வெள்ளத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் வாழும் வகையினை மற்ற நாடுகள் செய்திருக்கின்றன, மழை அவர்களின் அன்றாட நிகழ்வு எனினும் ஒரு தெருவோர நாய் கூட பாதிக்கபடுவதில்லை

உலகில் கொடும் புயல் தவிர எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை அளிக்கின்றதா? இந்த விசித்திரம் இந்தியா தமிழகம் தவிர எங்குமே பார்க்கமுடியாத விஷயம்.

அந்த அளவிற்கு பின் தங்கி இருக்கின்றோம்,

வருடா வருடம் வரும் பருவமழையினை கூட எதிர்கொள்ள முடியா அளவு நாசமாக சென்றிருக்கின்றோம்.

இதில் ஆளாளுக்கு போனில் வியாபாரம் செய்யும் வசதி கொடுப்பார்களாம்

எதற்கும் வாட்டர்புரூப் போன் கொடுங்கள், வெள்ளத்தில் மூழ்கினாலும் வசதியாக இருக்கும்


 முதல்வர் நலமாக இருந்தபோதே வெள்ள சேதத்தை கட்டுபடுத்த முடியா தமிழகமிது.

 

இன்றோ முதல்வரும் சிக்கலில் இருக்க பெரும் வெள்ளம் என வந்தால் என்னாகும்? என யார் யோசித்தார்களோ இல்லையோ வருணபகவான் யோசித்திருக்கின்றார்

மத்திய அரசும் ஒரு வித பித்த நிலையில் இருப்பது அவரை இன்னும் யோசிக்க வைத்திருக்கின்றது.

பன்னீர் செல்வத்தை நம்பி அவர் பொழிய கடுமையாக யோசித்திருக்கலாம்

இந்த வருடம் கொட்டி தீர்க்கும் ஐடியா அவருக்கு இல்லை போல, பரிதாபமாக பார்த்துவிட்டு நகர்ந்துவிடுகின்றார்.

இது ரிஷிகளும், பெரும் சித்தர்களும் வாழ்ந்த பூமி என்பது மிக சரியானது . வருணரின் யோசனை அதனை நிரூபிக்கின்றது


 

விஜய் மல்லையா, விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார்ககள்…

விஜய் மல்லையா கடன் வாங்கினார், விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார் என வங்கிகள் காட்டும் நஷ்ட கணக்கு ஏராளம்

ஆனால் இந்த வங்கிகள் மூலம்தான் மக்கள் கணக்கு வழக்குகளை வைத்துகொள்ளவேண்டுமாம், பண பரிவர்த்தனைகள் எல்லாம் வங்கிகள் மூலமே நடக்க வேண்டுமாம்

அதாவது மக்கள் பணமெல்லாம் வங்கியிலே இருக்கவேண்டும், வங்கி யாருக்கும் பணம் கொடுக்கலாம், நன்கொடையாக, வாரா கடனாக கொடுக்கலாம், வட்டி வசூலிக்கலாம், சம்பாதிக்கலாம்

அல்லது வங்கி மூலமாக பெரும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் பணத்தினை ஏப்பம் விடலாம்

ஆனால் பொதுமக்கள் வங்கி வாசலில் நின்றே தீரவேண்டும், அது அவர்கள் தலையெழுத்து

வங்கிகளின் செயல்பாட்டினை யாரும் கேள்வி கேட்க முடியாது

முதல் கொள்ளை கும்பல் வங்கியும் அதன் வட்டி முறைகளுமே, அங்கீகரிக்கபட்ட கொள்ளை அது.

கையில் வைத்தால் கருப்பு பணமாம், வங்கியில்தான் இருக்க வேண்டுமாம், வங்கி தொழில்வளர்ச்சி என பெரும் தொழிலதிபர்க்கு அள்ளிகொடுத்துவிட்டு கண்ணை மூடி கொள்ளுமாம்

தொழிலதிபர்கள் இங்கிலாந்தின் அழகிய மலைசிகரங்களில் மல்லாக்க கிடப்பார்களாம்

ஆக தொழிலதிபர்கள்+வங்கி கொள்ளைக்கு துணைபோக வங்கி வாசலில் மக்களை நிறுத்துகின்றது அரசு.

ஆக நாட்டில் பொருளாதார மாற்றம் ஏற்படவேண்டுமென்றால் வங்கிகளுக்கும், ஆடிட்டர்களுக்கும் பெரும் கட்டுப்பாடு விதிக்கவேண்டுமே தவிர, மடியில் மொத்தமே 500ரூபாய் வைத்திருக்கும் சாதாரண குடிமகனுக்கு அல்ல‌

இன்று என்ன் அறிவிக்க போகின்றார்களோ பார்க்கலாம்

எல்லாவற்றிற்கும் கட்டுபாடுகளை விதிக்கும் அரசு, கட்சி தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் சில கட்டுபாடுகளை விதிக்க கூடாதா?

ஊடகங்களுக்கும் அவற்றின் இம்சைகளுக்கும் ஒரு கட்டுப்பாடு விதிக்க கூடாதா?

தமிழகத்து டாஸ்மாக் இம்சைகளுக்கு ஒரு ஆலோசனை சொல்ல கூடாதா?

மணல் கொள்ளை, குடிநீர் வியாபாரம் பற்றி எல்லாம் ஒரு கட்டுபாடு விதிக்க கூடாதா?

இதனை எல்லாம் செய்ய மாட்டார்கள், மாறாக கையிலிருபதை புடுங்கிகொள்வதில் அதீத ஆர்வம்

சாமான்யர்கள் நாம்….

மோடி முடிவால் சாமானியர்களுக்கு மிகப் பெரிய பலன்: முகேஷ் அம்பானி நம்பிக்கை

அட இவரையும் இவர் போன்றவர்களையும் மிக சாமனியராக நினைத்துகொண்டார் போல, பெரும் தன்னடக்கம்தான்.

இந்தியாவில் இவரே சாமானியர் என்றால், அடிதட்டு மக்கள் எல்லாம் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கீழேதான்

புதிய வர்க்க அகராதி எழுதபட்டுகொண்டிருக்கின்றது.


கலைந்திடும் கனவுகள்..
கண்ணீர் சிந்தும் நினைவுகள்..

இப்படியும் ஒரு காலம் இருந்தது

 

Stanley Rajan's photo.Stanley Rajan's photo.

நான் இனி முன்பு போல பேச மாட்டேன்: டி.ராஜேந்தர்

அப்படியே ஆடவும் மாட்டேன் என சொல்லுங்கள்.


மாவோ … நமோ …

 

என்னதான் பெரும் புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தாலும் திபெத்தினை தவிர மாவோவால் பெரும் வெற்றி பெறவில்லை. அருணாசல பிரதேசத்தை தன்னோடு இணைக்கும் முயற்சி அவருக்கு தோல்வி

சோவியத்துடன் எல்லை தகறாறிலும் பின் வாங்கினார், கொரியபோரும் முழு வெற்றி என சொல்லமுடியாது

தன் பெயர் சீனாவில் சரிவதை கண்ட மாவோ அதிரடியாக மக்கள் மீது பாய்ந்தார்.

சில காரியங்களை செய்தார், அதாவது நகரங்களில் சுற்றிகொண்டிருந்தவர்களிடம் மாவோவின் படையினர் உனது பூர்வீகம் எது என்பார்கள், அந்த சீனர் ஒரு ஊரை சொல்வார்

அவ்வளவுதான் உடனே அந்த ஊருக்கு கிளம்ப்ப சீட்டு எழுதி கொடுப்பார்கள், போகாவிட்டால் அடி

அவன் மூன்றுதலைமுறைக்கு முன்பு ஊரைவிட்டு வந்தவனாக இருப்பான், அவன் பாட்டன் வீடு எது, நிலம் எது என்று கூட அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் சென்றே ஆகவேண்டும்

இப்படி பெரும் குழப்பத்தை நிகழ்த்தினார் மாவோ, அதற்கு அவர் இட்ட பெயர் கலாச்சார புரட்சி, மக்கள் நொந்து செத்தனர்.

எல்லோரும் விவசாயம் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு, நம் கலாச்சாரத்தை காக்கத்தான் இந்த ஏற்பாடு என பதில்சொன்னார் மாவோ, கம்யூனிஸ்ட் என்றாலும் இச்சட்டம் நம் திராவிட சிகாமணிகள் சாடிய “குலதொழிலை” ஒத்திருந்தது.

இந்த சாக்கில் தன் அரசியல் எதிரிகளையும் அடக்கி போட்டு தள்ளினார் மாவோ.

பெரும் அதிருப்தி சீனாவில் வெடித்தது, நாடு நாசமாய் போனது ஆயினும் மாவோவினை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை.

பெரும் இடபெயர்சி, கடும் பட்டினி சாவுகள். அனுபவமில்லாதவன் விவசாயம் செய்து எப்படி உருப்படும்?

தோல்வியினை மனதளவில் ஒப்புகொண்ட மாவோ பின் அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பித்துவிட்டு மறைந்தார், அதன் பின் சீனா புத்துயிர் பெற்றது, இது அந்நாட்டு வரலாறு

இங்கே நடக்கும் நிகழ்வுகளை கண்டால் இந்தியாவிலும் அப்படியான மாவோ சாயல் ஆட்சியின் நினைவுக்கு வருகின்றது

மக்களின் சிரமம் அந்த மாவோ செய்த கொடுமைகளைத்தான் நினைவுபடுத்துகின்றது

ஆனால் சீனா கம்யூனிச நாடு, தேர்தல் எல்லாம் இல்லை. இது இந்தியா இன்னும் 3 ஆண்டுகளில் தூர எறிந்துவிடலாம்

அது வரை அழு ஜனமே….