மறைவுக்கு பிறகு கிளம்பும் மர்மங்கள்…

ஜெயலலிதா வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஏதோ சசிகலா பற்றி சொல்லிவிட்டாராம், உடனே சிலர் வந்து சசிகலா பற்றி என்ன தெரியும் என பொங்குகின்றார்கள்.

அதாவது 1989களில் ஜெயலலிதாவினை மன்னார்குடி குடும்பம்தான் காப்பாற்றியது, அதுவும் திவாகரன், நடராஜன் எல்லாம் வீரகாவியம் படைத்து அவரினை காத்தார்களாம், சசிகலா உயிருக்கு துணிந்து ஜெயாவிற்கு காவல் இருந்தாராம்

அதனால் சசிகலாவினை ஏதும் யாரும் சொல்ல கூடாதாம், பேசிகொண்டே இருக்கின்றார்கள்

எல்லா தலைவர்களும் இப்படியான நெருக்கடிகளை கடந்தவர்கள். கலைஞர் வாங்காத அடிகளா? அவரை சாக்கடையிலிருந்து அன்றொரு நாள் ஒரு பெண்மணி காப்பாற்றவில்லையா?

இந்திரா மதுரையில் தாக்கபட்டபொழுது ரத்தம் சிந்தி நெடுமாறன் காக்கவில்லையா?

அவர்கள் எல்லாம் என்ன கட்சிக்குள் இருந்து ஆட்டுவிக்கின்றார்களா? ஆட்சிக்குள் தலையிட்டு அட்டகாசம் செய்தார்களா?

அதிமுகவிலும் இப்படியான காட்சிகள் உண்டு, 1989 ஜெயாவிற்கு மிரட்டலான காலம் என்றால் 1972முதல் 1976 வரை எம்ஜிஆர் பட்டபாடு கொஞ்சமா?

அவர்கள் எல்லாம் அதிமுகவில் கட்சியிலும் ஆட்சியிலும் வந்து நின்றார்களா?

அவ்வளவு ஏன் மிக இக்கட்டான நிலையில் எம்ஜிஆருக்கு உதவினார் அந்த ஜேபி ராஜ் எனும் கான்ஸ்டபிள். பின்னாளில் எம்ஜிஆர் அளித்த பிச்சையில் அவர் ஜேபிஆர் எனும் கல்விதந்தையாக வாழ்ந்தார்

அவர் எம்ஜிஆர் உயிரை காப்பாற்றியவன் நான் என அவருக்கு பின் கட்சியில் சண்டையிட்டாரா?

எம்ஜிஆருக்கு கிட்னியினை தானமாக கொடுத்த அந்த உறவுபெண்ணின் தியாகத்திற்கு என்ன கொடுத்தீர்கள்?

எம்ஜிஆரை உருவாக்கிய எம்.ஜி சக்கரபாணி குடும்பம் எங்கிருக்கின்றது? சொல்ல முடியுமா?

அந்த ஜேப்பியாரை விட 100 மடங்கு சம்பாதித்துவிட்டது சசிகலா கோஷ்டி

அதாவது செய்த உதவிக்கு பலமடங்கு திரும்ப பெற்றாகிவிட்ட்டது

இப்பொழுது ஜே இல்லை, ஆனால் அதிமுகவின் கோடிகணக்கான தொண்டர்களுக்கு தலமை வேண்டும். அந்த கட்சியினை நடத்த ஒரு நல்ல இமேஜ் உள்ள ஒருவர் வரவேண்டும்

இத்தனை காலம் கூடவே இருந்த சசிகலா வாயே திறக்காததும், ஜெயா சொத்துக்கள் என்னாகும் என சொல்லாததும், மருத்துவமனையில் காட்டிய பெரும் அமைதியிமே இப்போது கேள்விகள்

அதற்கு பதில்லிலாமல் அடுத்த பொதுசெயலாளர் யார்? என சொல்லி சசிகலா வருவாரா? என அவர்களே கிளப்பிவிடும்பொழுது ஜெயலலிதா விசுவாசிகள் கேட்கத்தான் செய்வார்கள்

கொஞ்சம் ஆழபார்த்தால் இப்படி தெரியும்

ஜெயா மீது சசிகலாவுடன் சேர்ந்து ஊழல் செய்தார், ஜெயா பெயரை சொல்லி சசிகலா கும்பல் அட்டகாசம் செய்தது என்பதை தவிர என்ன குற்றச்சாட்டை சொல்லமுடியும்?

ஒன்று? ஒரு குற்றசாட்டு? நிச்சயம் இருக்காது

ஆக ஜெயாவின் அத்தனை சிக்கல்களுக்கும் அவரும் அவர் குடும்பத்தாரும் காரணம் எனும் நிலையில், இனி கட்சியினையும் அவரிடம் ஒப்படைத்தால் என்னாகும் என தொண்டன் யோசிக்கமாட்டானா?

கிருஷ்ணமூர்த்தி அதைத்தான் சொல்கின்றார்

அந்த இயக்கத்திற்கான வோட்டு இத்தனை பிரச்சினைகளை மீறியும் அசையாமல் இருக்கின்றது என்றால் அது ஜெயாவிற்கான வோட்டு, அவரை நம்பிய வோட்டு

இனி அவர் இல்லை எனும்பொழுது சாதரண தொண்டனுக்கும் ஒரு கட்சி பாதுகாப்பு சிந்தனை வராதா?

சசிகலா ஒரு காலத்தில் ஜெயாவிற்கு காவல் இருந்தால் அதனால் எல்லாம் ஜெயாவிற்கு பின் சசிகலாவிற்கு என மல்லுகட்டுவது எப்படி?

ஜெயாவிற்காக செத்த எத்தனை மக்கள் இந்த தமிழகத்தில் உண்டு, நாக்கை வெட்டியவர் வரை உண்டு,
எம்ஜிஆருக்காக செத்த எத்தனை குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு

அவர்கள் எல்ல்லாம் இந்த தியாகத்திற்காக கட்சி எங்களுக்கு என வந்தால் தாங்குமா?

ஆழ கவனித்தால் ஒன்று புரிகின்றது

அதிமுக, திமுக கட்சிகளின் பெரும் பலம் அது சாதி,மதங்களை கடந்த கட்சிகள், அதன் அடிப்படை அதுதான்

இவர்கள் சசிகலாவிற்கு வக்கலாத்து வாங்குகின்றோம் என வந்து அதனை ஒரு சாதிகட்சியாக மாற்ற கிளம்பியிருக்கின்றார்கள்

அபத்தமான அந்த பதிவுகள் அதனைத்தான் சொல்கின்றன‌

அப்படி சாதிகட்சியாக மாறினால், அதிமுக எனும் பெரும் கட்சி பின் பாமக, திருமா போல ஒரு பூனையாக சுருங்கிவிடும்

அதற்குத்தான் இவர்கள் உழைக்க தொடங்கியிருக்கின்றார்கள், சாதி மதம் கடந்த ஒரு நல்ல தலமை வராமல் அக்கட்சியினை நிறுத்த முடியாது.

இவர்கள் வரும் வரத்தினை கண்டால் அதனை சாதிகட்சியாக மாற்றி அழிக்கும் முடிவில் இருக்கின்றார்கள்.

சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துகின்றார்களாம்…

சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துகின்றார்களாம், என்ன ஆலோசனையாக இருக்கும்?

அவர் நாற்காலிதான் காலி, மற்றபடி அந்த நாற்காலி உனக்கு இந்த நாற்காலி எனக்கு என்பதை தவிர என்ன ஆலோசனையாக இருக்க முடியும்?

அம்மா படத்தை மாற்றிவிட்டு, அம்மா என பெயர் இருக்கும் இடமெல்லாம் “சின்ன” என ஒரு சின்ன மாற்றம் செய்தால் எப்படி இருக்கும் என ஆலோசிக்கலாம்.

யாரேனும் கருப்பு ஆடு கட்சி தாவினால் இருக்கவே இருக்கின்றது வழக்கு, கஞ்சா முதல் மசாஜ் சென்டர் வரை வழக்கு போட்டு தாக்கலாம்,

அம்மா காட்டிய வழி என யோசிக்கலாம்.

இந்த சசிகலா புஷ்பா என்பவரை காணவில்லை, அவர் எங்கு ஆலோசனையில் இருக்கின்றாரோ?

இன்னும் வாய்திறக்கவில்லை, ஆனால் விரைவில் நான் தான் உண்மையான விசுவாசி இவ்வளவு நாளும் துக்கத்தில் இருந்தேன், என அம்மணி வந்து நின்றால் எப்படி இருக்கும்?

சின்ன எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் , டவுசர் எம்ஜிஆர் என பலர் கிளம்பிய தமிழ்நாட்டில், கருப்பு ஜே, சின்ன ஜே, அடுத்த ஜே என சிலர் வராமலா போய்விடுவார்கள்?

அப்படி வராமல் போனால் ஜே வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

இப்படி எல்லாம் சில குழுக்கள் ஆலோசனை செய்ய, ஒரு கும்பல் தலையில் துண்டு போட்டு மூக்கு சீந்தி அழுதுகொண்டிருக்கும் அல்லது மலங்க மலங்க‌ முழித்துகொண்டிருக்கும்?

யாரது?

நாஞ்சில் சம்பத் போல மாற்று கட்சியிலிருந்து ஓடிவந்து இணைந்தவர்கள் நிலை அது, அவர்கள் நிலைதான் பரிதாபம், உண்மையில் ஜெயாவிற்காக அழும் விசுவாசிகள் அவர்கள்தான்.


“நான் கவுன்சிலர் பதவிக்கும் ஆசைபட மாட்டேன், உங்களுக்கு வேலைக்காரியாகவே இருப்பேன், என்னை மன்னித்துவிடுங்கள்” : இது அன்று யாரோ யாருக்கோ எழுதிய மன்னிப்பு கடித வரிகள்.

சரி எஜமானி இப்போது இல்லை அல்லவா, பெட்டி கட்டி கிளம்புங்கள் என யார் கேட்கபோகின்றார்கள்?

கவுன்சிலர் பதவிக்கு ஆசைபடாதவர் பெயர் பொதுசெயலாளர் பதவிக்கு அடிபடுகின்றது.


 சசிகலா புஷ்பா நேர்காணல் 

ஜெயாவிற்கு அஞ்சலி செலுத்தும்பொழுது என்னை கீழே தள்ளினார்கள் : சசிகாலா புஷ்பா அதிரடி பேட்டி

இனி அடிக்க மாட்டார் என்ற தைரியத்தில் அம்மணி வந்திருக்கின்றார். ஆனால் நாமெல்லாம் பார்க்கவில்லை

விடுங்கள் அம்மணி, ராஜாஜி ஹாலில் அவமானபடுத்தபட்டால் பெரும் எதிர்காலம் உண்டாம், அது சென்டிமென்ட்

அடுத்த பொதுசெயலாளராக மூத்த உறுப்பினர்களான‌ பி.எச் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், கேபி முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கண்ணப்பன் போன்றவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கபட வேண்டும் : சசிகலா புஷ்பா

என்னது? இவர்கள் எல்லாம் கட்சியில் இன்னும் இருக்கின்றார்களா? யாராவது இவர்களை இறுதி அஞ்சலியில் கண்டோமா?

ஓகே இந்த 6 பேரும், இவரும் ஒரு அணியாக திரளுகின்றார்கள் என எடுத்துகொள்வதா? அல்லது இவர்கள் ஏன் அங்கிருக்கவேண்டும் என கொளுத்தி போடுகின்றாரா?

நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்

# ஓஓஓஓ ஒரு தென்றல் புயலாகி வருதே……………


 

இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள்…

ஜெயலலிதா உடலில் போர்த்தபட்ட இருந்த தேசியகொடி, கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லா ஒருவரிடம் வழங்கபட்டது, இத்தனைக்கும் அவர் ஒரு குற்றவழக்கில் தீர்ப்புக்கு காத்திருப்பவர்

பெண் தோழி கஞ்சா வழக்கு, இன்னும் பல வழக்குகளில் சிக்கி, காணமலே போயிருந்த ஒருவர் இறுதிமரியாதை செலுத்துகின்றார்

மொத்த இந்தியாவும் இந்த காணுவதற்கு அரிதான காட்சியினை பார்த்துகொண்டிருந்தது.

ஜெயலலிதாவோடு சேர்த்து தமிழகத்து மானமும் அடக்கம் செய்யபட்டாகிவிட்டது.


முதல்வர் உடலில் போர்த்தப்ட்டிருந்த புனிதமான தேசியகொடி , ஒரு தீர்ப்புக்கு காத்திருக்கும் குற்றவாளியின் கையில் ஒப்படைக்கபட்டது

கஞ்சா வழக்கிலும், இன்னும் பல வழக்கிலும் கைது செய்யபட்ட ஒருவர் முதல்வருக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்

அந்த குழியில் புதைக்கபட்டது ஜெயலலிதா மட்டுமா?


அந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியினை கண்டவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது

அதாவது முறையான திட்டம் இல்லாமல் போலீஸ் குழம்பியிருக்கின்றது, சரியான திட்டமிடலோ காவலோ தடுப்போ இல்லை, எங்கும் நெரிசல் எங்கும் குளறுபடி

நிச்சயமாக ராஜாஜி ஹாலிலும், எம்ஜிஆர் சமாதியிலும் மூன்றடுக்கு வளையத்தை அமைத்திருக்கவேண்டும் உள்வட்டத்தில் சில மீட்டர் இடைவெளிக்குள்தான் ஜெயா உடல் இருந்திருக்க வேண்டும்

தமிழக போலிசாரை பற்றி தெரியும், முறையான உத்தரவும், தெளிவான திட்டமும் கொடுத்துவிட்டால் அசத்தி இருப்பார்கள், அவர்கள் திறமை என்றுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது

பின் எங்கு குளறியது?

முறையான நிர்வாகம் இல்லை, எல்லோரும் சசிகலா விவேக் என எதிர்பார்க்க காவல்துறை திணறியது. முதல்வர் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை அவர் அப்படித்தான்

ஆளாளுக்கு தங்களை பார்த்துகொள்வதில்தான் குறியாக இருந்தார்களே ஒழிய ஒருவரும் பொதுமக்களையோ, நெருக்குதல்களையோ, அவசரமாக செய்யவேண்டிய காரியங்களை திட்டமிட்டு கொடுக்கவோ இல்லை

யாரிடம் அதிகாரம் இருக்கின்றது, யார் உத்தரவிடுவார்கள் என்ற குழப்பத்திலே காவல்துறை திணறியது,

எங்கு எப்போது என்ன செய்யவேண்டும்? என்ற திட்டமிடலை செய்ய அவர்களுக்கு தகுந்த உத்தரவுகள் வரவில்லை.

கவனித்திருக்கலாம், ஓரளவு வழக்கமான பாதுகாப்புகளை காவல்துறை செய்ததே தவிர, உடலை சுற்றி பாதுக்காப்பு வளையம் அமைக்கும் பணியோ, பாதுகாப்பு வளையமோ அது அமைக்கவில்லை

அல்லது அமைக்க அதற்கு உத்தரவு கிடைக்கவில்லை

காவல்துறையின் கரங்கள் சுதந்திரமாக விடபட்டிருக்குமானால் மிக நேர்த்தியாக நடந்திருக்கலாம், இத்தனை தள்ளுமுள்ளுகள் இருந்திருக்காது,

பாதுகாக்கபட்ட பெரும் வளையத்திற்குள் நடந்திருக்க வேண்டிய 60 குண்டு வழங்கும் மரியாதை இப்படி காய்கறி சந்தைக்குள் புடலங்காய் பிடித்தது போல நெருக்கடிக்குள் நடந்திருக்காது.

தன் கட்சியின் உச்ச அடையாளத்தை, மாநில முதல்வரின் நல்லடக்கத்தில் கூட தெளிவான செயல்திட்டம் இல்லாத இவர்கள்தான் இனி தமிழகத்தை அடுத்த 5 ஆண்டு ஆளபோகின்றார்கள்

மழை எப்படி பெய்யும்? இந்த கஷ்டத்தில் மக்களை இன்னும் ஏன் சிரமபடுத்தவேண்டும் என்ற கவலை கடவுளுக்கு இருக்கலாம்.


அங்கும் இங்கும் எங்கும்…

ஜெயலலிதா அடக்கத்தின் இறுதிகட்டத்தில் ஒரு விஷயம் நன்றாக தெரிந்தது

அதாவது ராகுல்காந்தி இறுதிவரை இருந்தார், கூட திருநாவுக்கரசர் மட்டும் இருந்தார் வேறு ஒருவரையும் காணவில்லை

காங்கிரஸின் உச்ச தலைவர் இருந்த இடத்தில் உள்ளூர் தலைவர்களை காணவே இல்லை,

இருந்த திருநாவுக்கரசரும் நடராஜனோடு குலாவிகொண்டிருந்தார்

நடராஜனும், திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவின் பெரும் எதிரிகள் , இருவரையும் ஓட விரட்டியவர் ஜெயலலிதா என்பது இன்னொரு விஷயம்.

அந்த இடத்தில் அகில இந்திய செய்திதொடர்பாளர் குஷ்பூவினையும் காணவில்லை. இது பெரும் தவறு.

ஒரு செய்தி தொடர்பாளர் இல்லாமல் எப்படி காங்கிரஸ் கட்சியின் உச்சம் அங்கு இருந்தது என்ற கேள்விக்கும் பதிலில்லை

இவ்வாறாக ஜெயலலிதா அடக்கம் நடந்தது.

உறுதியாக சொல்லலாம் அடக்கம் நடந்தது ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல அந்த குழியில் தமிழக காங்கிரசையும் புதைத்தாகிவிட்டது.


1940களில் அவர் வசனம் எழுதும்பொழுது அவர் அவரை கண்டார்

வாய்ப்பு தேடும் நடிகனாக, நெற்றில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமாக வந்து நின்றார் அவர். அந்த பிரமாத வசனகர்த்தா தன் படத்தில் எழுதமாட்டாரா? என தவமிருந்தார்

இவரும் வசனங்கள் எழுதினார், பல படங்கள் ஹிட், மெகா ஹிட்

நட்பு துளித்து தளிர்த்தது, இவர் இருந்த கட்சிக்கே அவரும் வந்தார், பட்டை, ருத்ராட்சம் எல்லாம் மறைந்தது,

பின் புரட்சி நடிகர் என அடைமொழியோடு அழைக்கபட்டார்.

அவரை முன்னிறுத்தி கட்சி வளர்த்தார்கள், ஆட்சியும் பிடித்தார்கள். நிச்சயம் அந்த நடிகர்தான் வெற்றிக்கு முக்கியம்,ஆனால் நடிகரை இயக்கியவர் நிச்சயம் அவர்.

விதி விளையாடிற்று, புரட்சி நடிகர், புரட்சி தலைவரானார், தனி கட்சி கண்டார், போதா குறைக்கு புரட்சி தலைவியும் உருவாக்கிவிட்டு மறைந்தார்

அந்த புரட்சி தலைவியும் இப்போது இல்லை

மன்னார்குடியிலிருந்து வந்தவர்கள் இப்போது கோட்டையினை பிடிக்க போராடிகொண்டிருக்கின்றார்களாம்

அந்த கலைஞரின் மனம் எப்படி சிந்தித்துகொண்டிருக்கும்?

அவர் மனதில் எவ்வளவு சம்பவம் ஓடிகொண்டிருக்கும், நிறைய இருக்கலாம்

நம் மனதில் ஓடுவது இப்படி

சேலம் மார்டன் தியேட்டர்சில் அவரை சந்தித்ததும், அவரை அண்ணாவிடம் கொண்டு சேர்த்ததும் முதல் தவறு

எம்.ஆர் ராதா சுட தெரியாமல் சுட்டது அடுத்த தவறு

மைசூரில் இருந்து சந்தியா நடிக்க வந்தது இன்னொரு விதி

எல்லாம் சேர்ந்து ஆட்டிகொண்டிருக்கின்றது.


Image may contain: 2 people , people smiling , sunglasses, glasses and close-up

சசிகலா மீது ஆயிரம் விமர்சனங்கள், கேள்விகள், கண்டனங்கள் இன்னபிற‌ ஏராளம், எது நன்றி? எது நட்பு? எது தியாகம்? என பல சர்ச்சைகள்.

அதில் திமுகவின் அன்பழகன் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பது இப்போது விளங்கி கொண்டிருக்கின்றது

ஆக திமுகவினரே கலைஞருக்கு படமும், சிலையும் வைக்கும் இடமெல்லாம் அந்த அப்பாவி மனிதனுக்கு ஒரு சின்ன‌ சிலையாவது (இனியாவது) வைத்து விடுங்கள்,

இல்லாவிட்டால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது


மத்திய அரசு, சிங்கள அரசினினை கண்டித்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

போன வாரம்தானே மோடியினை ஆதரிக்கின்றேன் என்றீர்கள், இரு நாட்களுக்கு முன்பு கூட கவர்ணரை சந்தித்து நன்றாகத்தானே பேசினீர்கள்

# என்னாச்சி அங்கிள் உங்களுக்கு?


தென்கிழக்கு வங்கக் கடலில் வர்தா புயல் உருவானது

அதனை விட மிக பயங்கர புயல் ஒன்று அதிமுக பொதுசெயலாளர் பதவிக்காக உருவாகிகொண்டிருக்கின்றது.


அமெரிக்காவில் அகதளம் செய்கிறார் டிரம்ப், அந்த ஒப்பந்தம் ரத்து, இந்த உடன்படிக்கை ரத்து, என ஏகபட்ட ரத்துக்கள்

அமெரிக்க அதிபருக்கான பிரத்யோக புதுவிமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டாராம்

இன்னும் ஏராளமான ஒப்பந்தங்களை ரத்து செய்யபோவதாக அறிவித்திருப்பது உலகினை கவலை கொள்ள செய்கின்றது, ஒருவருக்கும் மிக பெரும் கவலை

அது டிரம்பின் தற்போதைய மனைவிக்கு,

மனிதர் இதே வேகத்தில் தன்னையும் ரத்து செய்துவிட கூடாது எனும் அச்சம்,

ஏற்கனவே டிரம்ப் முதல் இரு மனைவிகளை ரத்து செய்தவர் என்பதால் அம்மணிக்கு அச்சம் கூடுகின்றது


அது நடிகரால் தொடங்கபட்ட கட்சிதான், நடிகையால் வழிநடத்தபட்ட கட்சிதான்

அதற்காக அங்கு எல்லோருமே நடிகராக இருந்தால் எப்படி?

எப்படியெல்லாம் நடித்திருக்கின்றார்கள் என்ற சாயம் வெளுத்துகொண்டிருக்கின்றது


வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம்

vall

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம் அந்த முருகன் கோயிலும் தெப்ப குளமும்

மதங்களை தாண்டி வள்ளியூரின் பாரம்பரியம் என அதற்கு பெரும் அடையாளம் உண்டு, அதனை சீரமைக்க சிலர் நடவடிக்கை எடுக்கின்றார்கள்

அவர்களை வாழ்த்துவோம், அவர்கள் முயற்சி வெற்றிபெறட்டும்

சில லட்சங்கள் தேவைபடும் பணி என சொன்னார்கள், இருக்கலாம்

அந்த திருப்பணிக்கும், வள்ளியூர் பாரம்பரியத்தை காக்க விருப்பம் உள்ளவர்கள் 9443121117 என்ற எண்ணுக்கு அண்ணன் வெங்கடேஷ் அவர்களை தொடர்பு கொள்ளலாம்

நீர்நிலைகள் மீது அக்கறை கொண்டவரும், சுழ்நிலை அறிவியல் நிபுணருமான சகோதரி விதுபாலா அவர்களும் உதவுவதாக அறிந்தோம்

இது நிச்சயம் செய்யவேண்டிய பணி, காரணம் எல்லா ஊர்களிலிருந்தும் நம் வள்ளியூர் வாழ் முருகனை காண வருகின்றார்கள், இந்த அழுக்கடைந்த குளம் அவர்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தலாம்

கார்திகை மாதம் முருகன் ஆலயத்திற்கு உதவுவது பெரும் புண்ணியம் என்பது இந்து நண்பர்களின் நம்பிக்கைகளில் ஒன்று

முருகபெருமான் அவதரித்த கார்த்திகை மாதத்திலே அவரின் தெப்பகுளமும் புத்துயிர் பெறட்டும்..

நமது ஊரின் பெருமையினை காக்கும் கடப்பாடு நமக்கு நிச்சயம் உண்டு

உங்கள் அனைவரின் ஆதரவினையும் எதிர்பார்க்கின்றோம்

காரியத்தில் இறங்கி இருப்பவர்களையும், அதற்கு உறுதுணையாய் இருப்பவர்களையும் செந்திலாண்டவர் ஆசீர்வதிக்கட்டும்

கிறிஸ்தவம் என்பது என்ன?

சில கிறிஸ்தவர்கள் கிளம்பி இருக்கின்றார்கள், மோடி ஒரு பாசிச இந்துத்வா, பாஜக ஒரு கிறிஸ்தவ அழிவு சக்தி, இனி இந்தியாவில் கிறிஸ்துவத்திற்கு ஆபத்து, மகா ஆபத்து, இனி கிறிஸ்தவன் இங்கே வாழமுடியாது என பல வகையான ஒப்பாரி

கிறிஸ்தவம் என்பது என்ன? குளிர்ந்த நீரில் மலர் தூவி ஆடும் நன்னீர் குளியலா? அது அன்றிலிருந்தே நெருப்பாறு.

யூதமதம் அதனை ஓட ஓட விரட்டியது, கிறிஸ்தவம் வளர்ந்தது

அந்நாளைய உலகின் ஒரே பெரும் வல்லரசனான ரோமாபுரி கிறிஸ்துவத்தை படுத்தியபாடு கொஞ்சமல்ல, கிட்டதட்ட 200 ஆண்டுகாலம் அது நீடித்தது

எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லபட்டார்கள், எத்தனை ரத்த ஆறுகள் ஓடின, லட்ச்கணக்கான வகைகளில் கொல்லபட்ட கிறிஸ்தவர் எண்ணிக்கை என்ன?

கொலோசியம் எனும் அந்த கொடூர மைதானம் அதற்கே பயன்பட்டது

அப்படி ரத்தகளறியில் வளர்ந்ததுதான் கிறிஸ்தவம், அப்படிபட்ட வரலாறு அதற்கு உண்டு,

ஆக நல்ல கிறிஸ்தவன் மிரட்டலுக்கும், சாவுக்கும் அஞ்சமாட்டான்.

“ஏய் சங்பரிவார் அமைப்புக்களே மிரட்டுகின்றீர்களா? பிரச்சினையில்லை, கொல்லபோகின்றீர்களா வாருங்கள், கொல்லுங்கள், எம் மத முன்னோடிகள் பால், பீட்டர் போல கிறிஸ்துவிற்காய் சாக நான் தயாராக இருக்கின்றேன்

ரோமானியர் காலங்கள் போன்ற எத்தனையோ இடர்பாடுகளை கடந்தது கிறிஸ்தவம்

உங்களால் எங்களை கொல்லமுடியுமே தவிர, எங்கள் ஆன்மாவை அல்ல, வாருங்கள் கொல்லுங்கள்” என சொன்னால் அவன் கிறிஸ்தவன்

அதனை விட்டுவிட்டு அமைதியாக வாழும் நாட்டில், எல்லா சுதந்திரங்களும் கிடைத்திருக்கும் நாட்டில் இருந்துகொண்டு அது இந்துத்வா, இது சந்துத்வா என புலம்புவது கிறிஸ்தவம் ஆகாது

நற்செய்தி பரப்புவதாக சொல்கின்றீர்கள், அவர்களை போய் வம்பு இழுக்கின்றீர்கள், அடித்தால் அடிவாங்க வேண்டும், கொன்றால் சாக வேண்டும் அவனல்லவா கிறிஸ்தவன். அப்படித்தான் கிறிஸ்தவம் வளர்ந்தது

ஆக இந்த கிறிஸ்தவர்கள் இந்துத்வா என சாடுவதும், பாஜகவினை திட்டுவதும் கிறிஸ்தவ வாழ்வே அல்ல. கிறிஸ்துவில் மிக உண்மையான விசுவாசம் உள்ள கிறிஸ்தவன் இப்படி எல்லாம் பேசமாட்டான்

உங்களால் என்ன செய்துவிட முடியும்? என நகர்ந்து செல்வானே அன்றி இப்படி அஞ்சி கத்தமாட்டான்

பைபிளில் வரும் விசுவாசகுறைவு என்பது இதுதான், இதுவேதான் ஆனால் கையில் பைபிளை கையில் வைத்துகொண்டே அலறுகின்றார்கள்

கவனித்து பார்க்கின்றேன், விசுவாசமுள்ள, வரலாறு அறிந்த, நம்பிக்கையுள்ள நல்ல கிறிஸ்தவன் எவனும் இந்த இந்துத்வா அது இது என கத்தவில்லை., அவர்கள் புன்னகைக்கின்றார்கள் அவ்வளவுதான்

கிறிஸ்தவ வாழ்வு என்றால் ஆயிரம் தடை என அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது

பின் கத்துவது யார்?

கிறிஸ்துவின் பெயரால் பிழைப்பு நடத்துபவன், சிறுபான்மை பெயரில் கல்வி வியாபாரம் செய்பவன், மருத்துவமனை நடத்துபவன், வெளிநாட்டு நிதிகளுடன் பள்ளி நடத்துபவன் போன்ற பிழைப்புவாத கிறிஸ்தவனே கொந்தளிக்கின்றான்

அது கிறிஸ்தவம் ஆகாது

கிறிஸ்தவ வாழ்வு நிச்சயம் இப்படியானது, சவால் நிறைந்தது. பூக்கள் நிறைந்த பாதை அல்ல, பல சிக்கல் நிறைந்தது

அதனை கடந்து செல்ல வேண்டுமே தவிர இப்படி கத்தி அரசியல் செய்ய கூடாது

ஆயினும் ஒரு கிறிஸ்தவன் எல்லா உரிமைகளும் கொண்டிருக்கும் நாட்டில், தன் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என அலறுவதும், கொடிபிடிப்பதும் கண்டிக்கதக்கது

இவர்கள் இந்துத்வா, மதவாதம் என பயங்கர அழிச்சாட்டியம் செய்வதை அந்த கிறிஸ்து பெருமானே விரும்பமாட்டார், இவர்களை கிறிஸ்தவர்கள் அன அவரே ஒப்புகொள்ளமாட்டார்

அவருக்கு இதெல்லாம் அறவே விருப்பமில்லா விஷயங்கள்.

உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினை தங்கள் உறுதியால் நம்பிக்கையால் மட்டும் காப்பார்களே அன்றி, அடுத்தவர் மேல் வெறுப்பை கொட்டி அல்ல.

இந்திய கிறிஸ்தவர்கள் அப்படி வாழ்ந்தால் எல்லோருக்கும் நல்லது, கிறிஸ்துவத்திற்கும் நல்லது. கிறிஸ்துவும் மகிழ்வார்.

உண்மையில் கிறிஸ்துவம் சகோரத்துவம் பேசும், சமத்துவம் பேசும். இங்கு என்ன நடக்கின்றது? இந்திய கிறிஸ்துவம் சாதி பேசுகின்றது, மொழி, இன‌ பிரிவினை என பல சிக்கல்களில் அது திசைமாறி நிற்கின்றது

முதலில் கிறிஸ்து சொன்ன மனிதநேயமும், சகோதரத்துவமும் பேசுங்கள், செயலில் காட்டுங்கள்

கடவுளடையதை கடவுளுக்கும், அரசனுக்குரியதை அரசனுக்கும் செலுத்துங்கள் என சொன்னவர் இயேசு,

அதாவது எந்த அரசாங்கம் என்றாலும் ஏற்றுகொள்ளுங்கள், ஆனால் அன்பான வழியில் வாழுங்கள் என்பதே பொருள்

அந்த அன்பினில் வாழ தொடங்கினால் யாரையும் இப்படி எதிரியாக பார்க்கமாட்டீர்கள்

சங் பரிவார அமைப்பும், ஆர்எஸ்எஸும் , பாஜகவும் அப்படி சகோதரர்களாகவே தெரிவார்கள்

எனக்கு அப்படித்தான் தெரிகின்றார்கள், எல்லாம் கிறிஸ்துவினை மனதில் கொண்டு பார்க்கும் பார்வையிலும் சிந்தனையிலுமே இருக்கின்றது.

உண்மையில் உங்கள் மனதில் கிறிஸ்து இருந்தால் இப்படி யார் மீதும் வெறுப்பும், பயமும் வராது, வரவே வராது.

அப்பல்லோ ஆளை கொல்லுமாம்…

ராஜாஜி காலத்தில் அப்பல்லோ ரெட்டியே இல்லை, மருத்துவமனை எப்படி வந்திருக்கும்?

அண்ணாவிற்கு கேன்சர், அமெரிக்க டாக்டர் மில்லர் கையினை விரித்தபின்பு அவர் அடையாறில் சிகிச்சை பெற்றதாக செய்தி

மூப்பனார் ஒருவிதமான தொண்டை அழற்சி, சுவாச கோளாறால் பாதிக்கபட்டு ராமசந்திராவில்தான் காலமானார் என நினைவு

எம்ஜிஆர் முதலில் அப்பல்லோ எனினும் பின் அமெரிக்க புருக்கீளின் மருத்துவனை சிகிச்சையும் எடுத்து வீட்டில்தான் மறைந்தார்

உண்மை இப்படி இருக்க, அப்பல்லோ ஆளை கொல்லுமாம், அதனால் கலைஞர் தப்பிவிட்டாராம்

மருத்துவனை சாவினை தள்ளிபோடுமே தவிர அதனை வெல்லாது.

ஆளாளுக்கு அப்பல்லோவில்தான் எல்லோரும் செத்தான் என கிளப்பிவிடுகின்றார்கள்

காந்தி,நேரு, இந்திரா, ராஜிவினை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் அவர்களையும் அப்பல்லோவில் கொன்றால்தான் என்ன?

ஏன் இந்த வஞ்சகம்?

இப்படிபட்ட அறிவார்ந்த மக்கள் வாழும் மாநிலத்தை கைபற்ற பாஜக வேறு சதி செய்கிறதாம்?

தமிழிசையை தலைவராக்கும் பொழுதே தெரியவில்லையா, பாஜக தமிழகம் என்றால் தலை தெரிக்க ஓடுகிறது என்று.