கலைஞரின் முத்திரை..

நாம் திமுகவின் ரகசிய பிரிவு என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அப்படி எல்லாம் அல்ல, திமுக மீது பெரும் அபிமானம் ஏதும் இல்லை.

கலைஞர் என்பவர் முழுக்க ஏற்றுகொள்ளும் அரசியல்வாதி அல்ல, ஆனால் அதே நேரத்தில் அவரை முற்றிலும் விலக்கியும் விட முடியாது

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தது வானத்து விண்கல் பூமியில் விழுவது போல ஒரு விபத்து, அது விழுந்து பெரும் நெருப்பினை உண்டாக்கி, பின் புகை மூட்டம் உண்டாகி அது இன்னும் தெளியவில்லை

ஆனால் கலைஞர் போன்ற ஒரு அரசியல்வாதி உருவாக வேண்டிய காலம் இருந்தது, சமூக அமைப்பும் இந்திய யதார்த்தமும் இருந்தது

அது மிக சரியாக கலைஞரை உருவாக்கி காட்டியது, அவர் அப்படித்தான் உருவானார்

இந்த முரண்பாடான சமூகத்தில் கலைஞர் போன்றோரின் தேவைகள் இருந்துகொண்டே இருக்கும், அவர் இல்லையென்றாலும் அவர் சாயலில் இன்னொருவார் வந்தே தீருவார்

அதாவது இச்சமூகத்தின் , இந்திய அரசியலின் பல விஷயங்கள் மாறாதவரைக்கும் கலைஞரின் அரசியலுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும்

இன்னொரு எம்ஜிஆர், இன்னொரு ஜெ உருவாக வேண்டிய அவசியம் இல்லை, அப்படி ஒரு தேவையும் இல்லை வரவும் வராது

பின்னொரு ஒரு காலத்தில் தமிழகத்தையும் அதன் அரசியலையும் படிப்பீற்களாயின் கலைஞர் காலத்தால் உருவானவர் என்பதையும், இந்த எம்ஜிஆர் கோஷ்டி அவசியமே இல்லாதது என்பதையும் உணர்வீர்கள்.

அம்மனிதரை முழுக்க ஏற்கவும் முடியாது, ஆனால் நிச்சயம் தவிர்க்கவும் முடியாது

அதுதான் கலைஞரின் முத்திரை..

இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது…

தமிழ்நாட்டை “இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது” என ஒரு காலத்தில் சவுடால் பேசிய ரஜினிகாந்த் இன்று தனுஷ் படத்திற்கு கிளாப் அடித்துகொண்டிருக்கின்றார்

அவர் எப்போழுது பேசுவார்? என்ன பேசுவார்? என யாருக்கும் தெரியாது, ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசவே மாட்டார்.


மத்திய அரசு கஜானாவை நிரப்புவதிலேயே கவனம்: திருநாவுக்கரசர்

மத்திய அரசு இந்திய கஜானாவினை நிரப்புவதில் கவனமில்லாமல் பாகிஸ்தான் கஜானாவினை நிரப்புவதிலா கவனமாக இருக்கும்?

இவர் அம்மா இறந்த அதிர்ச்சியில் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், பேசட்டும்

இவரின் கவனம் எங்கிருக்கின்றது? அதிமுக கூட்டணியில் இடம்பிடிப்பது, முடிந்தால் அதிமுகவிலே இடம் பிடிப்பது


தமிழகம் இதுவரை காணாத பெரும் பாலியல் கொடுமைகள் தர்மபுரி பக்கம் அரங்கேறி இருப்பதாக சில வெளிநாட்டு செய்திகள் சொல்கின்றன‌

நடந்திருக்கும் கொடுமை மிக மிக பெரிது

டியூசன் சென்டர் நடத்தியவனும், பாடம் நடத்தியவனும், அவர்களின் செல்போன் சர்வீஸ் செய்தவனும் செய்ய கூடாத செயல்களை செய்து கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்திருக்கின்றனர்

ஒரு தமிழக ஊடகமோ, தொலைகாட்சியோ இதனை பற்றி ஒரு வரி எழுதவில்லை, சமூக ஊடகங்களிலும் ஒரு வரி இல்லை

சின்னம்மா எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் செய்திகள் அவரை சுற்றியே வருகின்றன, என்றாலும் கொஞ்சமாவது இதனை சொல்லலாம் அல்லவா?

பாதிக்கபட்ட மாணவிகளின் எதிர்காலம் முக்கியம் என செய்திகள் மறைக்கபட்டாலும், குற்றவாளிகள் நிலை என்ன?

சமூக ஊடகங்களில் தர்மபுரி பக்கம் இருந்து ஒருவருமா? இல்லை

பெரும் கொடுமை நடந்திருக்கின்றது, நிச்சயம் இது பெரும் அநியாயம், ஏராளமான பெண்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்

ஒரு சலசலப்பும் இல்லை, வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை கசியவிடுகின்றன‌

என்ன தமிழ் ஊடகங்களோ தெரியவில்லை

தமிழகத்தில் 2 பெண்க்கள்தான் உண்டு, ஒன்று ஜெயா இன்னொன்று சசிகலா என இந்த ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன‌

குஷ்பூவிற்கும், சிம்புவிற்கும் எதிராக பொங்கிய மாதர் சங்கங்களை காணவே இல்லை

மாதர் தம்மை இழிவு செய்தால் பொங்குவார்கள், கொதிப்பார்கள்

ஆனால் மாதர் தம்மை கிழித்து எறிந்தால் கம்மென்று இருப்பாரகள்.

தர்மபுரி செய்திகள் என்றால் இப்படி முடிக்கலாம், ஒன்று குற்றவாளிகளுக்கு பெரும் சாதிய பலம் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் பாமக போன்றவை சும்மா இருக்காது

அல்லது பாதிக்கபட்ட பெண்கள் வறுமையான, சாதி பலம் இல்லா அபலைகளாகவும், மானத்திற்கு பயந்து அஞ்சி ஒடுங்கும் ஏழைகளாகவும் இருக்கவேண்டும்

இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாளும் செய்திகள் வெளிவராது, இந்த செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது.


ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசு

திருநாவுக்கரசர் ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா? என சொன்னதற்கு, இப்படி சொன்னால் ராஜிவ் மீண்டும் வந்துவிடுவாரா? என இனவுணவாளர்கள் கேட்க எவ்வளவு நேரமாகும் என பதிவிட்டிருந்தோம்

சொல்லி வைத்தாற்போல அடுத்த 5 நிமிடத்திலே சீமான் அதே பாணியில் சீறிவிட்டார்.

நம்மை கண்காணித்து கொண்டிருப்பாரோ?

ஆனால் சில அதிரடி கேள்விகளையும் கேட்டார், நடராஜனின் நெருங்கிய நண்பரான சீமான், திடீரென சசிகலாவினை எதிர்க்கும் நோக்கம் தெரியவில்லை. ஜெயா மரணத்தில் அவருக்கு உண்மை வேண்டுமாம்

ஆச்சரியமாக அவரின் அண்ணன் பிரபாகரன் மர்மத்தில் அப்படி ஒரு கோரிக்கையினை அவர் வைக்கவேயில்லை, கேட்டால் உயிரோடு இருக்கின்றார் என தாடையினை தடவுவார்

ஜெயாவின் மருத்துவ அறிக்கையினை சீமான் கேட்கலாம், ஆனால் எப்படி உடனே கல்லறை அமைக்கபட்டது, எப்படி உடனே பெட்டி கிடைத்தது என்பதெல்ல்லாம் ஓவர், இப்படி அதிகபடியான கற்பனைகளில்தான் அன்னார் அடிக்கடி சிக்குகின்றார்

சரி இருக்கட்டும்

சசிகலா புஷ்பா வழக்கே தொடுக்க போகின்றாராம், சீமானின் குரலும் ஓங்கி ஒலிக்கின்றது, இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் இணைகின்றார்கள். இன்னும் பலர் இணையலாம்

அது எந்த புள்ளி??

ஒரு “மண்”ணும் புரியவில்லை.