மலேசிய பெருமாள் கோவிலில் …

சீனர்களிடம் ஒரு கலாச்சாரம் உண்டு, எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்கள் இருக்கும் இடத்தினை சீன கலாச்சாரத்திற்கு மாற்றிவிடுவார்கள்

இந்தியர்களிடம் அப்பழக்கம் குறைவு எனினும், மலேசிய தமிழர்கள், இந்து அடையாளங்களுடன் பல இடங்களை தமிழக சூழலிலே மாற்றி , அதனை தொடர்ந்தும் வருகின்றார்கள், பெரும் இந்து ஆலயங்களும் அதில் ஒரு வகை

அப்படி ஒரு பெருமாள் கோயிலுக்கு செல்ல நேர்ந்தது

சிறிய கோவில், ஆனால் அழகாக சாஸ்திரப்படி அமைத்திருந்தார்கள், சுற்றிலும் ஆழ்வார்களின் பாடல்களை அழகுற எழுதியிருந்தார்கள், கடவுள் படங்களை மண்டப கூரையெல்லாம் வரைந்திருந்தார்கள், எல்லா தெய்வங்களுக்கும் சந்நிதி இருந்தது, நவகிரகம் உட்பட‌

நமது ஊரில் பெருமாள் போன்ற பெருந்தெய்ய கோவிலில் முனிஸ்வரர் போன்ற சிறுதெய்வங்கள் இருக்காது, ஆனால் இங்கு சமத்துவம் எல்லா சாமியும் ஓரிடத்தில் இருக்கும்

மேளசத்தமும், பூக்களின் மணமும், தமிழும், வெண்கல மணியோசையும் அப்படியே தமிழகத்திற்கே அழைத்து சென்றன, நெடுநாள் பின் கேட்ட ஓசை அது

பெருமாள் நடை சாத்தி இருந்தது, திரை போட்டு மறைத்திருந்தார்கள்

நேரம் வந்ததும் குருக்கள் வந்தார், எல்லா சந்நதிக்கும் சென்று திரைமறைவிலே பூசைகள் செய்தார், மணி மட்டும் எழுப்பினார்கள், பின் திரை விலக்கபட்டது

இது எந்த முறையின் மூலம்?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் சாட்சாத் கடவுளே தன்னை எப்படி வணங்க வேண்டும் என கட்டளையிட்ட உத்தரவுகளின் மூலம்

எருசலேம் யூத கோவிலில் வழிபாடு இப்படித்தான் இருந்தது, தலமை குரு மட்டுமே உள்சென்று தூபமிடுவார், திரை மறைக்கபட்டிருக்கும், மணிசத்தம் கேட்கும்பொழுது வெளியே மக்கள் வணங்குவார்கள்.

இந்து பூசாரி உடலெல்லாம் விபூதி பூசுவது போல, அவர்கள் சாம்பலை அந்நாளில் பூசுவார்கள்.

இதே மணி, இதே திரை, இதே தூபம், அதே மேளம்( அங்கு கொம்பு ஊதுவார்கள்) இந்த சூடத்திற்கு பதிலாக அங்கே விளக்கு தண்டு

யூதர்களுக்கு ஜெருசலேம் தவிர வேறு ஆலயம் உலகில் கிடையாது, அந்த ஆலயமும் இன்று இல்லை, அதனால் அந்த வழிபாடுகள் 2000 ஆண்டுகளாக இல்லை

இருந்திருந்தால் இந்த பிராமண குருக்கள் செய்வது போலவே அங்கு அவர்கள் செய்துகொண்டிருப்பார்கள், சிலை மட்டும் இருக்காது

பிராமண, யூத தொடர்புகள் ஏராளமானவனை. 12 பிரிவு ஆபிரகாமின் சந்ததியில் இன்று இஸ்ரேலில் இருப்பது யூத இனமே 10 இனத்தை காணவில்லை

இந்தியாவிற்கு பிராமணர்கள் ஆடுமாடு மேய்க்க வந்தவர்கள் என்பதும், ஆபிரகாமின் குடும்ப தொழில் மேய்த்தல் என்பதும் இன்னொரு கோணம்

தீண்டாமை என்பது யூத மதத்தில்தான் முதலில் தோன்றியது, வர்க்க பேதம், பெண் அடிமைதனத்தின் மூலம் யூத மதமே

பிராமண கோட்பாடும் அவ்வகையே,

பிராமண யூத தொடர்புகள யாரேனும் ஆராய்ச்சி செய்யவேண்டிய விஷயம் இது, ஆனால் இதனை விட்டுவிட்டு இந்தியா ஒரு காலத்தில் கிறிஸ்தவ நாடு தெரியுமா? என்பார்கள்

அது அதிமுகவினை தொடங்கியவர் சசிகலா என்பதை போல மகா அபத்தமானது.

உண்மையில் கிறிஸ்தவ வழிபாடு இந்த இந்து கலாச்சார முறைகளில்தான், அதாவது கத்தோலிக்க முறையில்தான் அமைக்கபட வேண்டும், ரோமன் கத்தோலிக்க முறை அப்படியானதே

ஆனால் கிறிஸ்தவம் யூத சம்பிரதாயங்களை விழுங்கிவிட கூடாதென்ன்று அதனை அந்நாளைய சில யூதர்களே வழிமாற்றிவிட்டுவிட்டார்கள்

நிச்சயமாக இயேசு யூதர்களை திருந்த வந்தார், அவர் கனவு நிறைவெறி இருந்தால் இந்நேரம் யூதமதமே உலகில் இருக்காது, மறைந்திருக்கும்

ஆனால் தந்திரமாக இயேசு புறஇன மக்களை மீட்க வந்தார் என திருப்பிவிட்டு தன் அடையாளத்தை காத்துகொண்டது யூத இனம்,

இதே தந்திரத்தை பிராமண இனம் புத்தனிடமும், மகா வீரரிடமும் சோதித்து பார்த்து தன் இருப்பினை தக்க வைத்தது

அதாவது தனக்கு வரும் ஆபத்தை எங்கோ திருப்பிவிடும் தந்திரம்

அந்த கோயிலில் அமர்ந்திருந்தபொழுது யூத பிராமண தொடர்புகள் மனதில் சுழன்றுகொண்டே இருந்தன‌

யாகம் வளர்ப்பது என இன்று இந்துக்கள் செய்யும் காரியமும், பலி என் அன்று யூதர்கள் செய்த காரியமும் ஒன்றே

இன்னும் ஏராள ஒற்றுமைகள் உண்டு, சுருக்கமாக சொன்னால் கத்தோலிக்க முறை அந்த யூத பாரம்பரியத்தை அடிபொற்றி வருகின்றது

ஆனால் பிரிவினை கும்பலுக்கு அந்த கவலையுமில்லை, சிந்தனையுமில்லை

அம்பானி அளவு தொழிற்சாலை அமைக்க பெரும் நிதியும், மூலமும் வேண்டும்

கமிஷன் கடைகாரனுக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் போதும்

அப்படி அவர்களுக்கு ஒரு பைபிள் மட்டும் போதும்

சில நேரம் இம்மாதிரி சிந்தனைகள் எழுகின்றன, அவ்வப்போது பார்க்கலாம்

ஆனால் யூத பிரமாண தொடர்பு ஏராளம..


 

வைகோ திமுக தொண்டர்களால் விரட்டப்ட்டார்..

கலைஞரை நலம் விசாரிக்க சென்ற் வைகோ திமுக தொண்டர்களால் விரட்டபட்டார்

கலைஞருடன் இருந்து வளர்ந்து பின் அவருக்கே பாடம் கற்பிட்த்த பலபேரில் வைகோவும் ஒருவர், தொண்டர்களின் கோபம் நியாயமானது, ஆனால் அதற்காக செய்திருக்கும் காரியம் கொஞ்சமும் நியாமில்லாதது.

உடல்நலம் இழந்த தன் முன்னாள் தலைவரை காணவந்த ஒருவரிடம் அமைதி காத்திருக்கலாம், ஒருவேளை கலைஞரை சந்தித்திருந்தால், கலைஞரால் பேசமுடிந்தால் என்ன கேட்டிருப்பார்??

“வாய்யா, இப்பொழுதுதான் சசிகலா அனுப்பியதாக செங்கோட்டையன், தம்பிதுரை எல்லோரும் வந்தார்கள், நீ ஏன் அவர்களோடு வரவில்லை

உங்கள் தலைவி சசிகலா நலமா?,

போகிற வழியில் விஜயகாந்தினை சந்தித்து என்னை வந்து பார்க்க சொல்வாயா?”

இதற்கு மேலுமா தொண்டர்களின் செருப்படி வலித்துவிடும்??
அவமானம் கொடுத்துவிடும்?

இந்த தொண்டர்களின் செயலுக்கு மு.க ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம், அப்படி சொல்லிகொள்கின்றார்

முன்பு குஷ்பூ வீட்டினை திமுகவினர் நொறுக்கும் பொழுது மவுனம் காத்த அதே ஸ்டாலின், இப்பொழுது வருத்தமும் தொண்டர்கள் மேல் கண்டனமும் தெரிவிக்கின்றாராம்

இன்று கண்டனம் தெரிவிக்கும் மு.க ஸ்டாலின் குஷ்பூ தாக்கபடும்பொழுது ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பது கோடான கோடி குஷ்பூ ரசிகர்களின் பெரும் வருத்தம்.

இந்த தொண்டர்கள் முன்பு சசிகலாவினை ராசாத்தி அம்மாள் சந்தித்தபொழுது என்ன செய்தார்கள்? என்பதுதான் தெரியவில்லை


கொசுறு

கருப்பு பண ஒழிப்பின் பலனை விரைவில் அடைவோம் : பியூஷ் கோயல்

கறுப்பு பணத்தை ஒழிப்போம் என கிளம்பி, மொத்த பணத்தையும் ஒழித்த பலன் ஏடிஎம் மையங்களில் நன்றாக தெரிகின்றதே, இன்னும் தெரிய என்ன இருக்கின்றது?