சசிகலா பற்றி சமூக வலைதளத்தில்…

சசிகலா பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவதாக காவல்துறை ஆணையரிடம் புகார்

சசிககாவின் போயஸ்கார்டன் தொடக்க கால வாழ்க்கை குறித்து விகடன் பரபரப்பாக எழுதிகொண்டிருக்கின்றது, இன்னும் பல பத்திரிகைகள் தொடங்கிவிட்டன‌

மலைக்க வைக்கும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன, எல்லாம் நெடுங்காலம் மறைக்கபட்ட தகவல்கள், இன்னும் மறைத்தே தீரவேண்டிய தகவல்கள்

தீபாவும், சசிகலா புஷ்பாவும் அவ்வளவு ஏன் எங்கள் அங்கிள் சைமன் கூட கடும் கேள்விகள் எல்லாம் கேட்கின்றார்கள்

அதனை எல்லாம் விட்டுவிட்டு சமூக தளங்கள் மீதுதான் புகார் கொடுப்பார்களாம்..

சரி, செத்துபோன எம்ஜிஆர், ஜெயா தவிர‌ எல்லா அதிமுக நிர்வாகிகள் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தால் பொதுசெயலாளரோ, முதல்வரோ, கவர்னரோ ஆக்குங்கள்

அதனைவிட்டுவிட்டு சமூக தளங்களை முடக்குங்கள் என காவல்துறையிடமா கேட்டுகொண்டிருப்பார்கள்?

சமூக தளங்கள் என்ன அதிமுக எம் எல் ஏக்களா? அல்லது மாவட்டசெயலாளர்களா?

பன்னீர் டெல்லியிலிருந்து முதல்வராக வருவாரா?

முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருக்கின்றார்

ஆனால் அவர் முதல்வராகவே திரும்பகூடாது என 3 அமைச்சர்கள் பேசதொடங்கிவிட்டனர், அதாவது சசிகலாவினை முதல்வராக அமர்த்திவிட வேண்டுமாம்

இந்த செய்தியினை கேட்டு அழுதுகொண்டு ஆறுதல் தேடி பன்னீர்செல்வம் டெல்லி சென்றாரா? அல்லது அவர் இல்லாத நேரம் கொளுத்துகின்றார்க்ளா? என தெரியவில்லை

சில விஷயங்களை கவனிக்கலாம்

பன்னீருக்கு முழு அதிகாரம் இருக்கிறதென்றால் பன்னீர்செல்வம் அந்த 3 பேரையும் அம்மா பாணியில் அம்மாவசை கண்டம் போடலாம்

பன்னீருக்கு மத்திய அரசின் பின்புலம் இருக்கின்றது என்றால், சில அதிரடி வருமான வரி ரைடுகள் நடக்கலாம், டெல்லி வழக்கு பற்றி சில அறிவிப்புகள் வரலாம்

இல்லை ஒன்றுமே நடக்கவில்லை எனில் பன்னீர்செல்வம் முழு சரண் என்றும் , பாஜக சசிகலாவோடு ஒப்பந்தம் எழுதிற்று என முடிவுக்கு வரலாம்

பார்க்கலாம்

சரி சசிகலா, சசிகலா என எல்லோரும் கதறுகின்றார்களே, அப்படி ஒரு பிளஸ் பாயிண்ட் சொல்ல முடியுமா? என்றால் ஒரு வித்தியாசமான சென்டிமென்ட் கட்சியில் உண்டாம்

அதாவது தியாகிகள் மட்டுமே கட்சியினை வழிநடத்த முடியுமாம்

எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை, ஜெயலலிதாவிற்கு திருமணமே இல்லை

அப்படி சசிகலாவிற்கும் நேரடி வாரிசு இல்லையாம்

அந்த ஒற்றை தகுதியினை தவிர வேறு தகுதி வேண்டாமாம், இப்படி எல்லாம் ஆள சிந்தித்து முடிவெடுக்கின்றார்களாம்

பிள்ளைகள் இல்லா ஒருவர்தான் தமிழக மக்களை எல்லாம் பிள்ளைகளாக நினைத்து வாழமுடியுமாம்

இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்களால்தான் அன்பான, பாசமான அணுகுமுறை கொடுத்து கட்சினை காப்பாற்றமுடியுமாம்.

அப்படி ஜெயாவிற்கு அடுத்து சசிகலா மட்டும்தான் அம்மா ஆக முடியுமாம்

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ மகா சென்டிமென்டாக யோசிக்கின்றார்கள், சசிகலாவினை முதல்வராக்குவது என பெரும் குழு அமைத்து ரூம் போட்டு யோசிக்கின்றார்கள்,

யோசிக்கட்டும்

அதற்காக இனி வாரிசு இல்லாதவர்களுக்குத்தான் கட்சியில் பதவி என்றால் என்னாகும்?

இருக்கும் வாரிசுகளை நோக்கி அடுத்த பொதுசெயலாளர் பதவியில் இருக்கும் சிலர் ஆபிரகாம் போல வாரிசினை நோக்கி கத்தியோ அரிவாளோ ஓங்கிவிட கூடாதல்லவா?

அவர்களே ஒரு மாதிரியான கூட்டம்.. எதற்கும் அவர்களின் குடும்பத்தார் கவனமாக இருக்கட்டும்

பன்னீர் டெல்லியிலிருந்து முதல்வராக வருவாரா? இல்லை அதிரடி காட்டுவாரா என இனிதான் தெரியும்

ஒருவேளை சசிகலா புஷ்பா போல திடீரென டெல்லியில் அழுதுவிட்டால் என்னாகும்?

சே…சே அப்படி எல்லாம் நடக்காது.

இப்படித்தான் சீனாவும், ரஷ்யாவும் உலகிற்கு சவால் விடுகின்றன.

ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யலாம் என டிரம்ப் யோசிக்க, டிரம்ப் வருவதற்கு முன் தான் என்ன செய்யவேண்டும் என சீனா யோசித்துகொண்டிருக்கின்றது

அதாவது நிச்சயம் தைவான் விவகாரம் பெரும் சிக்கலாகும், அதற்கு முன் தைவானை திபெத் போல ஆக்கிரமித்துகொண்டால் முந்திகொள்ளலாம் என சீனா திட்டமிடுகின்றதாம்

ஆனால் தைவானின் சகலமும் அமெரிக்கா, அதன் பாதுகாப்பு உட்பட‌

அப்படி சீனா துணிந்தால் அப்பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஒரு முனையும், சீனா இன்னொரு முனையிலும் மோதலாம்

வடகொரியா வாலிண்டியராக வந்து குதிக்கலாம்

ஒரு பெரும்போருக்கே அது அடித்தளமாக இருக்கலாம் என உலகம் அச்சத்தில் இருக்கின்றது, சீனாவின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன, டிரம்ப் வேறு அவர்களை சீண்டிகொண்டே இருக்கின்றார்

என்ன வகையில் சீனா தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என சொல்கின்றது? எவ்வகையில் உக்ரைனின் ஒரு பகுதியினை ரஷ்யா இணைத்தது?

எங்கள் நாட்டு மக்கள், கலாச்சார தொடர்பு, மொழி, மதம் உட்பட‌ பல வகை தொடர்பில் அங்கும் வாழ்கின்றார்கள் அதனால் அப்பகுதி எங்கள் நாட்டிற்கு உரியது

முன்பு காஷ்மீரில் இப்படியான குழப்படியில் எப்படியோ சமாளித்து வெற்றிபெற்றது இந்தியா, சிக்கிமும் அப்படியே கிடைத்தது

இப்படித்தான் சீனாவும், ரஷ்யாவும் உலகிற்கு சவால் விடுகின்றன.

அதாவது அவர்கள் எங்கள் இனம் அல்லது எங்கள் இனங்களின் இனம், அதனால் எங்களை சேர்ந்தவர்கள்.

உலகின் பலநாடுகள் அப்படித்தான் தங்களை பெரிதாக்குகின்றன

இதனை இன்னொரு கோணத்திலும் சர்வதேசத்தில் இந்தியா செய்யலாம்.

அதாவது இந்தியாவும் அதனை ஈழத்தில் செய்யலாம், அது எம்நாட்டு மக்களான தமிழக மக்களின் உறவு, எம்நாட்டு மொழியே அங்கும் பேசபடுகின்றது என எதனையாவது சொல்லி களமிறங்கலாம்

ஆனால் நடக்காது ஏன்?

காஷ்மீரில் பெரும்பாலோனோர் இந்திய அபிமானி, சிக்கிமில் சிக்கலே இல்லை

ஆனால் ஈழமக்கள் இந்தியாவினை விரும்ப மாட்டார்கள், அப்படி ஆக்கி வைத்தாயிற்று

இந்தியா களமிறங்கினாலும் ஈழமக்கள் இந்தியாவோடு செத்தாலும் இணைய மாட்டார்கள்

தனிநாடு வேண்டும், அல்லது சிங்களனோடு அடிபட்டு சாகவேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.

இதுதான் அவர்கள் விருப்பமே தவிர, தமிழகத்தோடு சேர்ந்து இந்தியாவோடு இணைவது சாத்தியமே அல்ல‌

ஆனால் கிரிமிய மக்கள் உக்ரைனை உடைத்து ரஷ்யாவோடு இணைந்தது போல ஈழம் வந்து சேர்வது எல்லாம் நடக்காத விஷயம்

ஈழ மக்களுக்கு சீமான் வீட்டு கொல்லைபுறத்தில் இருக்கும் பிரபாகரன் விரைவில் வெளிவருவார் , நாடு கொடுப்பார் என நம்பிக்கையினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் இன உணர்வாளர்கள்.

அதனை கடைசி வரை இனி சொல்லிகொண்டே இருப்பார்கள்.

சிவாஜி கணேசன் மணிமண்டபம்

முதல்வர்  பன்னீர்செல்வம் வளர்க்கும் தாடியில் கூட சிவாஜி ஸ்டைல் தெரிகின்றது

சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் வேலையினை தொடங்கியது தமிழக அரசு

இத்திட்டம் முன்பு ஜெயாவால் அறிவிக்கபட்டாலும் சம்பிரதாய அறிவிப்பாகவே இருந்தது, ஜெயலலிதா அறவே ஆர்வம் காட்டவில்லை

ஜெயா ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை எல்லாம் மள மளவென்று முடிக்கும் காரியத்தில் பன்னீர் அரசு இறங்கி இருக்கின்றது.

அட முதல்வர் பன்னீர்செல்வம் அம்மா அம்மா என அழைத்தாலும் மனதிற்குள் சிவாஜி ரசிகனாக அல்லவா இருந்திருக்கின்றார்?

எப்படியோ தான் ரசித்த ஒரு நடிகனுக்கு மண்டபம் கட்டுமளவாவது அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது

இந்த மகிழ்ச்சியில் அம்மா வாழ்க என அவர்கள் கத்தாமல் இருக்கட்டும், அப்படி கத்தினால் அர்த்தம் மாறிவிடும்..

இந்த வைகோ விவகாரம்தான் என்ன?

முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலைபோட்ட தகறாறில் ஏதோ அடிபிடி சர்ச்சையாக உடனே எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி தேர்தலில் இருந்து விலகினார் வைகோ

அப்படியே இப்பொழுதும் எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி அரசியலிலிருந்தே விலகினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

எங்கோ ஒரு கிராமத்தில் 4 பேரை சமாளிக்க பயந்து தேர்தலைவிட்டே ஓடியவர்தான் இன்று திமுகவிற்கு சவால்விட்டுகொண்டிருக்கின்றார்

இதில் வைகோ அன்று கலைஞருக்காய் உளியினை பிடித்தார், டிடிஆரை பிடித்தார் என ஏகபட்ட முட்டுகள்.

கடலுக்குள் அப்படி சென்றார், புலிகளை இப்படி அதிரடியாக சந்தித்தார் என ஏகபட்ட அழிச்சாட்டியம்

புலிதலைவனை யார்தான் சந்திக்கவில்லை? நம்ம ராஜ்கிரண், மகேந்திரன் கூட பார்த்துவிட்டுத்தான் வந்தார்கள், சாமியார் ஜெகத் கஸ்பர் கூட பார்த்தார்.

என்ன கிழித்தார் வைகோ? அவர் நடத்திய வழக்கு ஒன்று ஜெயித்திருக்கும்? போராடிய ஒரு போராட்டத்தில் வெற்றி கிடைத்திருக்கும்

சும்மா எல்லாம் ஒரு பப்ளிசிட்டி….

கலைஞருக்கு தெரியாமல் புலிகளோடு உறவாடியதும், ராஜிவ் கொலை என்ற பாதகம் நடந்தபின்னும் கலைஞரை புலிகளை ஆதரி என சொன்னதும் என்ன வகை?

அப்படி கொலைக்கு அஞ்சா புலிகள், தமிழகத்தில் எதனையும் செய்ய துணிந்த புலிகளுக்காக தன்னை வளர்த்த கலைஞரை எதிர்த்தது என்ன வகை?

உச்சமாக புலி பெரிதா? கழகம் பெரிதா? எனும்பொழுது கட்சியினையே உடைத்து சென்றது என்ன நன்றி?

உச்சமாக எவனோ சொல்லிகொண்டிருக்கின்றான், அன்று வைகோ இல்லாவிட்டால் திமுக ஆட்சியினை வாஜ்பாய் டிஸ்மிஸ் செய்திருப்பாராம்

எப்படி இருக்கின்றது?

நமீதா இல்லாவிட்டால் அதிமுக வென்றிருக்காது என்பது போல இருக்கின்றது

ஒரு காரணமும் இன்றி கலைஞர் ஆட்சியினை கலைக்க மறுத்தார் வாஜ்பாய், ஜெயாவின் வறட்டுபிடிவாதம் அவருக்கு புரிந்திருதது. அன்று யானைஇறவிலே புலிகளை விரட்ட இந்தியா சில உதவிகளை சிங்களனுக்கு புரிந்தபோது அமைதியாக இருந்த வைகோ, கலைஞரை காத்தாராம்

எங்க வந்து டூப்பு உடுற டேய்…

வைகோ 1992ல் இருந்து கலைஞருக்கு செய்ததெல்லாம் துரோகம், அதுவும் ஈழ போரில் கலைஞர் மீது அவர் வீசிய சேறு கொஞ்சமல்ல‌

இன்றுவரை பிரபாகரன் இறந்ததை வெளிப்படையாக சொல்லாமல் தமிழக மக்களை ஏமாற்றிவருபவர்தான் வைகோ

அரசியல் நாகரீகம் தாண்டி சொல்ல கூடாத வார்த்தைகளை சொன்னார், செய்ய கூடாத காரியங்களை செய்தார்

இன்றுவரை கண்டெய்னர் கதைக்கே அவர் வாய் திறக்கவில்லை

ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் அவர் மீது கோபம் உண்டு, அதாவது எதிர்கட்சி என்பது வேறு, உடனிருந்து வளர்ந்து பிரியும் துரோக கட்சி என்பது வேறு

வைகோ நடத்தியது துரோக கட்சியே

உண்மையில் வைகோவினால் பாதிக்கபட்டது அவர் பின்னால் சென்ற அந்த முன்னாள் மதிமுகவினரே

அன்று அவரை ஓட விரட்டியவர்கள் திமுக திரும்பிய மதிமுகவினராக இருக்கலாம்

வாய்ப்பு நிரம்ப இருக்கின்றது..


கறுப்பு பணத்தினை ஒழித்துவிட்டோம், இந்தியா சுபிட்சமாகுமா ?

கறுப்பு பணத்தினை ஒழித்துவிட்டோம் இனி இந்தியா சுபிட்சமாகும் என்றார்கள்

உண்மையில் அப்படி ஒழித்தால் என்ன ஆகியிருக்கும்? விலைவாசி இறங்கி இருக்கும், மக்கள் சுமை குறைந்திருக்கும்

ஆனால் பெட்ரோல் விலை ஏற்றியிருக்கின்றார்கள்

சர்வதேச சந்தையில் பெருமாற்றம் இல்லை, அப்படி இருந்தும் ஏன் ஏற்றுகின்றார்கள்?

உண்மையில் இந்த அரசு தடுமாறுகின்றது, டாலருக்கு நிகராண மதிப்பு மிக அதிகரிக்கின்றது. அதனை தடுக்க பெட்ரோல் விலையில் கை வைக்கின்றார்கள்

அரசு ஆஆஆஆய்ய்ய் ஏய்ய்ய்ய் என அதிரடி காட்டினாலும் அதன் பலவீனமும், நிர்வாக கோளாறும் பல இடங்களில் தெரிகின்றன‌

சறுக்கிகொண்டே இருக்கின்றார்கள்

110 கோடி மக்கள் தொகையும், பின் தங்கியும் இருக்கும் நாட்டில அதிரடு கேஷ்லெஸ் வர்த்தகம் எல்லாம் சுத்தமாக சாத்தியமே இல்லை

இந்திய பணமதிப்பு சரிகின்றது, உலகமே பெட்ரோல் விலையினை குறைத்த வேளையில் இவர்கள் ஏற்றுகின்றார்கள், ஏதோ மர்மமாக நடக்கின்றது

கேஷ்லெஸ் இந்தியா என சொல்லி மக்களிடமிருந்து அனைத்தையும் பறித்துவிடும் முழு முயற்சியினை இந்த அரசு செய்துகொண்டிருக்கின்றது

இந்த ராகுல் காந்தியும் தன்னிடம் ஆதாரம் இருக்கின்றது, அது இருக்கின்றது இது இருக்கின்றது, காட்டினால் நாடு தாங்காது என சீறுகின்றார், ஆனால் காட்ட மாட்டார்

காட்டாவிட்டால் மட்டும் நாடு தாங்கவா போகின்றது?


கொசுறு

பதவி மூப்பு அடிப்படையில் புதிய ராணுவ தலைமைத் தளபதி நியமனம் நடக்கவில்லை என பாஜக அரசு மேல் கடும் சர்ச்சை

நியாமான முறையில் நடந்ததாக பாஜக அறிவிப்பு

கட்சியின் மூத்த தலைவர்களான அத்வாணி, வாஜ்பாய் எல்லாம் ஓரம்கட்டிவிட்டு திடீரென மோடி நியாயப்படி பிரதமர் ஆனார் அல்லவா? அந்த வகை நியாமாக இருக்கலாம்.

பாஜக ஆட்சியின் சீனியாரிட்டி நியாயம் அப்படி, அது ராணுவ தள்பதி நியமணத்திலும் தெரிந்திருக்கின்றது


 

மிஸ்டர் வாங் ஜியாங் தமிழகம் வாருங்கள்

சீனாவில் 92 பில்லியன் டொலர் சொத்துக்களை வாங்க மறுத்த மகன்பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை

நமது ஊர் அம்பானி போல சீனாவில் வாங்க் ஜியான், பெரும் கோடீஸ்வரர், மோடி சீனா சென்றபொழுது அவரை சந்தித்தார் அவரும் 1000 கோடி இந்தியாவில் கொட்டுகின்றேன் என உறுதியளித்தார்

உலகெல்லாம் அவருக்கு பெரும் தொழில் உண்டு, சில ஜாக்க்சிசான் பட வில்லன் கூட அவர் சாயலில் வருவார்.

அப்படிபட்ட பெரும் கோடீஸ்வரனின் மகன், எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு தன் வழியே சென்றுவிட்டானாம், அவன் கனவு வேறாம்

இவருக்கு என்ன செய்வது என தெரியவில்லை மனிதர் வாரிசு தேடி அலைகின்றார்.

சீனாவில் 80% வாரிசுகள் இப்படித்தான் தந்தை சொத்து வேண்டாம், என் கனவு வேறு என அலைகின்றன‌

நமது ஊரில் அப்படியா?, வாரிசில்லா பக்கத்துவீட்டுக்காரன் செத்தாலும் அவரின் அரை செண்டு நிலத்தை விடுவோமா? முப்பாட்டன் காலத்த்து பட்டக்களை காட்டி தூக்கிவிட மாட்டோமா?

நம்மிடம் சீனர்கள் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கின்றது,

சரி அந்த வாங் ஜியான் வாரிசு இல்லாமல் இருக்கின்றாரே என்ன செய்யலாம்

மிஸ்டர் வாங் ஜியாங் தமிழகம் வாருங்கள், அதிமுக எனும் பெரும் கம்பெனி வாரிசு சண்டையில் சிக்கி இருக்கின்றது. உங்கள் கம்பெனி வாரிசாக அந்த மன்னார் குடி கும்பலை அறிவியுங்கள்

உங்கள் பன்னாட்டு நிறுவணங்களில் ஆளுக்கொரு நாடு கொடுக்குமளவிற்கு அங்கு எண்ணிக்கையும் இருக்கின்றது

இந்த கும்பலை அங்கே கொண்டு சென்றுவிட்டு, பணத்திற்கு ஆசைபடாத உங்கள் மகனை இங்கே விட்டு விட்டு செல்லுங்கள்

இதே போல இன்னொரு சீன கோடீஸ்வரர் வாரிசு தேடினாலும் சொல்லுங்கள், திமுக எனும் பெரும் கம்பெனிக்கும் அப்படி சிக்கல் இருக்கின்றது அவர்களையும் அனுப்புகின்றோம்

உங்களுக்கு சொத்துக்களுக்கு வாரிசுகள் தேவை, எங்களுக்கோ அதற்கு ஆசைபடாத மனம் உள்ளவர்கள் தேவை

வாருங்கள் மாற்றிகொள்வோம்

இவர்கள் எப்படி திறமையானவர்கள் என்றால், 1 பைசா இல்லாமல் அரசியலுக்கு வந்து பில்லியன் கணக்கில் சம்பாதித்தவர்கள் , நீங்கள் பில்லியன் கொடுத்தால் அவர்கள் டிரில்லியன் ஆக்க மாட்டார்களா?

நம்பி கொடுங்கள், அரசியலுக்கு ஆக மாட்டார்களே தவிர சொத்துக்களை பாதுகாப்பதில் நாங்களே 100% கியாரண்டி கொடுக்கின்றோம்

வாருங்கள் வாங் ஜியாங் , உங்கள் சொத்துக்கான வாரிசினை மன்னார் குடியிலும், கோபாலபுரத்திலும் தேடுங்கள்

உங்கள் மகனை எங்களுக்கு கொடுங்கள்

இருவருக்குமே மகிழ்ச்சி

உடனே ஒரு இந்தோ-சீன ஒப்பந்தம் எழுதலாம் வாருங்கள்

தலையில் துண்டுபோட்டு டீ குடித்த நடராஜன்

முன்பெல்லாம் முட்டுசந்தில் மறைந்து, தலையில் துண்டுபோட்டு டீ குடித்த நடராஜன் இப்பொழுதெல்லாம் பகிரங்கமாக மேடை ஏறி பேசுகின்றார்

பழ.நெடுமாறனின் மகன் அமெரிக்காவில் விருது வாங்கியதற்கு இவர்கள் பாராட்டுவிழா வைத்தார்களாம், அமெரிக்காவில் விருது வாங்கிய எத்தனையோ தமிழர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் முக்கியமா? பழ.நெடுமாறனின் மகன் வாங்கினால்தான் அது சிறப்பு

அந்த விழாவில் நடராஜன் பேசியிருக்கின்றார், நிறைய அள்ளி விட்டிருக்கின்றார், அதாவது மகாத்மா காந்திக்கே மோதிரத்தை கொடுத்தாராம் பழ.நெடுமாறனின் தந்தை, உடனே காந்தி கோர்ட்டை கழற்றி அவரிடம் கொடுத்தாராம்.

சரி மகாத்மா போராட்ட காலங்களில் எப்பொழுது கோட் அணிந்த்திருந்தார்? அவர் கழற்றி நெடுங்காலம் ஆனது

நாம் ஏதும் சொன்னால், ஒரு வேளை கோட் இல்லாமல் வேட்டியினை கழற்றி இருப்பாரோ கிளம்பி விடுவார்கள்.

தமிழகத்தையே உருவுபவர்கள் , மகாத்மாவின் வேட்டியினை மட்டும் விடுவார்களா?

நடராஜன் பேச்சில் சொல்கின்றார், அமெரிக்காவில் விருது வாங்குவது கடினமாம், இந்தியாவில் எளிதாம் அட இவருக்கே பத்ம, ரத்ன விருதுகள் தருவதாக அணுகிணார்களாம், இவர் மறுத்துவிட்டாராம்

நடராஜன் பெரும் சாணக்கியன், சும்மா பேச மாட்டார். பின் ஏன் ரத்னா விருதுகள் எளிதாக கிடைக்கும் என்றார்?

மறுநாள் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கிடைக்க வலியுறுத்துவேன் என்கிறார்

ஆக நடராஜன் யாரோ விருது வாங்கிய நிகழ்வில் சொல்ல வந்தது, என்னால் இந்தியாவில் யாருக்கும் பாரத ரத்னா வாங்கி கொடுக்க முடியும், முடிந்தால் என்னை அணுகுங்கள்

பன்னீர்செல்வம் சொல்லவந்தது, நானே மத்திய அரசிடம் இருந்து வாங்கி தருவேன்

அது இருகட்டும், நடராஜன் என்ன சாதித்தார் என அவருக்கு பத்ம, ரத்ன விருதுகளை கொடுக்க சிலர் அணுகினார்கள்?? அப்படி அவர் எந்த பதவியில் இருந்தார்? என்ன சாதித்தார்?

ஒருவேளை மிடாஸ் மூலம் பெருவருவாய் ஈட்டிய தேச சேவைக்கு வழங்க நினைத்திருப்பார்களோ?

இன்னும் பாரத ரத்னா என்னென்ன பாடு பட போகின்றதோ தெரியவில்லை

என்று மாமேதை அம்பேதாருக்கு கொடுக்காத பாரத ரத்னாவினை எம்ஜிராமசந்திரனுக்கு கொடுத்துவிட்டு, பின் வேண்டா வெறுப்பாக
அந்த பெருமகன் அம்பேத்கருக்கு பின்னர் கொடுத்து அவமானபடுத்தினார்களோ..

என்று ஒரு நடிகனுக்கு பின்னே இந்நாட்டின் சட்ட மாமேதைக்கு அந்த அங்கீகாரம் கிடைத்ததோ, அன்றே பாரத ரத்னாவின் பெருமை மண்ணாகிவிட்டது

ஆக மத்திய அரசே, ஜெயாவிற்கும், நடராஜனுக்கும் தாராளமாய் கொடுங்கள்

ஆனால் அதற்கு முன்பு பெரும் தியாகிகளுக்கும், உத்தமர்களுக்கும் கொடுத்த அதே விருதினை திரும்ப பெற்றுவிடுங்கள்.

இது இருக்கட்டும்

இதோ பழநெடுமாறனின் மகன் அமெரிக்காவில் படித்து விருது வாங்கி இருக்கின்றான், இதே பழ.நெடுமாறன் 2004ல் சொன்னது என்ன தெரியுமா?

“விரைவில் ஈழயுத்தம் வெடிக்கும், இங்கிருக்கும் தமிழ் இளைஞர்களும் அங்கு சென்று ஆயுதம் ஏந்த வேண்டும்”

இவர் மகன் அமெரிக்காவில் புத்தகம் தூக்க வேண்டும், மற்றவர்களின் பிள்ளைகள் துப்பாக்கி தூக்க வேண்டும்

எப்படிபட்ட ஒரு உயர்ந்த தியாக சிந்தனை?

காலைக் கதிர்கள்…

Image may contain: 1 person, close-up

எங்கே திரும்பினாலும் சின்னம்மா வாழ்க என போஸ்டர்கள் பேனர்கள், ஜெயா டிவி முழுக்க முழுக்க சின்னம்மா டிவியாகிவிட்டது இனி பெயர் மாற்றம் மட்டும்தான் பாக்கி

இணையத்திலும் அதே அழிச்சாட்டியம்

முகநூலில் 4 பதிவுகள் வந்தால் அதில் 3 எங்காவது சின்னம்மா என ஒட்டபட்ட பேனரின் படமாக இருக்கின்றது

அவர்களுக்கு சின்னம்மா, சித்தப்பாதான் திரும்பும் இடமெல்லாம் தெரிகின்றார்கள்

எமக்கு சின்னதம்பி குஷ்பூ மட்டும்தான் கண்ணுக்குள்ளே நிற்கின்றார்

அவர்கள் சின்னம்மா, சித்தப்பா வாழ்க என சொல்லிகொண்டே இருக்கட்டும்

நாம் இப்படி சொல்லலாம்..

“சின்னதம்பி” குஷ்பூ வாழ்க…


முத்துராமலிங்க தேவரை கடுமையாக எதிர்த்தவர் பெரியார், பெரியாரின் வழி வந்தவவை அண்ணாவும் திமுகவும்

பின் அண்ணா திமுக தோன்றி பிள்ளையார் சுழி போட்டது, இன்று முக்குலத்தோர் பேரவைகள் சசிகலாவினை பட்டவர்த்தனமாக பட்டம் சூட அழைக்கின்றது

என்ன நடந்திருக்கின்றது?

தேவரின் வழி வரும் கூட்டம், பெரியாரின் பின் சென்ற‌ ஒரு பெருங்கூட்டத்தை அப்படியே சுருட்டி விழுங்கி இருக்கின்றது.

வரலாறு எப்படி எல்லாமோ மாறிகொண்டிருக்கின்றது.

காரணம் யார்?

அண்ணா என் வழிகாட்டி என அடிக்கடி முழங்கி அண்ணாயிசம் பேசிய எம்ஜிஆரும், அவருக்கு பின் எம்ஜிஆரிசம் பேசிய ஜெயலலிதாவும்

ஆக பெரியார் பற்ற வைத்த பெரும் தீ மீது தண்ணீர் ஊற்றியிருக்கின்றார் ராம்சந்திரன், அதன் மீது மண்போட்டு மூடியிருக்கின்றார் ஜெயலலிதா

இன்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயா, சசிகலா எல்லோரும் ஒரே வரிசையில் சிரிக்கின்றார்கள்

அண்ணா முடிந்தால் எழுத்து கல்லறையினை பிய்த்துகொண்டு ஓட நினைக்கும் நேரமிது

இதனை எல்லாம் நினைக்கும் பொழுது, தலைவன் எம்.ஆர் ராதா சொன்ன சொல்லே நினைவுக்கு வருகின்றது

“ஏம்பா ராமச்சந்திரா உனக்கெல்லாம் எதுக்கு அரசியல்???”


எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்

ஓஹோ…கட்சி தலமை மட்டும்தான் வோட்டு போடுமா?, விமர்சிக்க தகுதியில்லாதவன் இவர்கட்சிக்கு வாக்களிக்கவும் தகுதியில்லாதவன் ஆகிவிடுவான் அல்லவா?

பொதுவாக அரசியல்வாதிகள் இம்மாதிரி கொதிக்க மாட்டார்கள், ஆனால் அரசியல் புரோக்கர்கள் கொதிப்பார்கள்

புரோக்கர்களுக்கு வாக்கு பற்றி என்ன கவலை?


உத்தர்கண்டில் திருவள்ளுவர் சிலை இன்று மீண்டும் நிறுவப்பட உள்ளது.

தமிழ் முதல்வர் ஆட்சியில் தமிழர் உரிமை நிலைநாட்டபட்டது என சிலர் கிளம்புவார்கள் , பாருங்கள்.

ஆனால் சிலை திறந்ததற்கும், தமிழக அரசுக்கும் அறவே சம்பந்தமில்லை


அப்படியானால் பன்னீர் செல்வம் அந்த வம்சம் இல்லையா?

 

Image may contain: 4 people, text

பொய் சொல்லி இருந்தாரோ???……

எப்படியோ இன்னும் சில தசாம்சங்கள் கழித்து குருபூஜை என்பது பசும்பொன்னில் மட்டும் கொண்டாடபடாது என்பது மட்டும் புரிகின்றது.


 திமுகவும் – மதிமுகவும் பிரச்சனையை இத்துடன் விட்டுவிட வேண்டும் : திருநாவுக்கரசர்

அந்த கட்சிகளுக்கிடையே மோதல் என்றால் இவருக்கு ஏன் வலிக்கின்றது?

எத்தனை கோஷ்டி சண்டைகளை தமிழக காங்கிரஸ் கண்டிருக்கும், கலைஞரோ வைகோவோ ஏதும் சொன்னார்களா?

நாமும் சொல்லுவோம்

இவர் இளங்கோவனுடனான பிரச்சினைகளை பேசி தீர்த்தால் என்ன?