இதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுன்னு சொல்வாங்களோ?!

Image may contain: text

நாமெல்லாம் உரிமையான‌ பாட்டன் சொத்தினையே வாங்க முடியாமல் தவிக்கின்றோம், இவரோ அடுத்தவர் வீட்டிலிருந்தே நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார்

எல்லாவற்றிற்கும் ஒரு யோகம் வேண்டும்

சொந்த சொத்திற்கே செல்ல முடியாத என்னை போன்றவர்களுக்கு, சொத்து தகறாறில் விரட்டபட்ட அகதிகளுக்கு இதனை பார்க்கும்பொழுது ஒருவித சிலிர்ப்பே உண்டாகிறது

இதெல்லாம் நில அபகரிப்பு சட்டத்தில் வராது, வரவே வராது.

என்ன வாழ்க்கை இது, முன்பு பெரியப்பனுடன் மல்லுகட்டியதற்கு பதிலாக பக்கத்து தோட்டத்தில் வேலைக்காரனாக சென்றிருக்கலாம்

விதி முந்திகொள்கின்றது, மதி பிந்திகொள்கின்றது 🙂


கொசுறு

இளங்கோவனுக்கு மனநிலை சரியில்லை, என்னை விமர்சிப்பவர்களுக்கு மனநிலை சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார் திருநாவுக்கரசர்

அவரின் மகன் சாலையோர அடிதடி வழக்கில் கைதுசெய்யபட்டிருக்கின்றார்

குடும்பமே எதனாலோ பாதிக்கபட்டிருப்பது தெரிகின்றது…


கையில் என்ன வைத்திருக்கின்றீர்கள்? பைபிளா?

Image may contain: 2 people, people standing

இயேசுநாதர் சொன்ன பிரசித்திபெற்ற மலைப்பொழிவு இனி இவர்கள் பைபிளில் இல்லாமல் போகட்டும்

என்ன நடந்தது?

பயந்திருப்பார்களோ? அப்படி எதனை பார்த்து அஞ்சினார்கள்

பைபிளில் ஒரு வசனம் உண்டு, ஒரு தீர்க்கதரிசி மக்களை எச்சரிப்பார் “விரியன் பாம்பு குட்டிகளே, வரப்போகும் சினத்தில் இருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?” என யூத மக்களை யாரோ ஒருவர் எச்சரிப்பார்

எவனோ ஒரு சசிகலா அடிமை, அந்த வசனத்தை இவர்களிடம் சொல்லி இருக்கலாம்

அவ்வளவுதான், உடனே “மனம் திரும்பி” நற்செய்தியினை ஏற்று, ஜெயலலிதாவிற்கு அடுத்த முதல்வர் நீயே என நற்செய்தி சொல்ல சென்றுவிட்டார்கள்

இன்னும் என்னென்ன சொன்னார்களோ?

சென்றதே சென்றீர்கள் பாதிரிக்களே, அந்த அங்கியினை கழற்றிவிட்டு ஒரு அதிமுக வேட்டி கட்டிவிட்டு செல்ல கூடாதா?

கையில் என்ன வைத்திருக்கின்றீர்கள்? பைபிளா?

அதனை புரட்டுங்கள்

“வெளிவேடகாரனுக்கு ஐயோ கேடு” என்றொரு வசனம் இருக்கும், அது சத்தியமாக உங்களுக்கே.

இனி உங்களில் யாராவது யூதாஸை சர்ச்சில் திட்டுங்கள், அன்று இருக்கின்றது.

உங்களுக்கு அவன் எவ்வளவோ பரவாயில்லை. அவனை திட்டும் தகுதியினை நீங்கள் இழந்துவிட்டீர்கள், அவனை மகான் ஆக்கிவிட்டீர்கள்

விரியன் பாம்பு குட்டிகளே…..

சரி சென்றதே சென்றீர்கள், இயேசு சீடர்களுக்கு செய்தது போல பாதம் கழுவி முத்தி செய்துவிட்டு வாருங்கள்

வருமுன் தவறாது இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்

“பரலோகத்தில் இருக்கும் எங்கள் ஜெயாவே வாழ்க, உம்முடைய நாமம் தமிழகத்தை ஆள்க, உங்கள் அதிமுக ஆட்சி தொடர்க, உங்கள் சித்தம் அன்று செய்யபட்டது போல இன்றும் செய்யபடுக‌

எங்கள் அனுதின காணிக்கையினை எங்களுக்கு அருளும்..”

“பவர் நிறைந்த சசிகலாவே வாழ்க, அதிமுக உம்முடையதே, பெண்களுக்குள் அதிகாரம் மிக்கவர் நீரே, உம்முடைக கணவரான நடராஜனும் அதிகாரம் மிக்கவரே”

ஆமென்..


கொசுறு

தளபதி சொல்லாமலா என்னை தாக்கினார்கள் : வைகோ

அவர் சொல்லியிருந்தால் ஏன் காவேரி வாசலுக்கு இவர் வரும் வரை காத்திருந்தார்கள்?

உத்தரவிட்டால் இவர் வன்னிக்காட்டில் இருந்தாலும் தேடி பிடித்து நொறுக்கியிருக்கமாட்டார்களா?


ஓம் சக்தி அம்மா….

Image may contain: 3 people

தமிழ்தாத்தா, கவிமணி, சிலம்பு செல்வர், பாவேந்தர், கவியரசர், சொல்லின் செல்வர், வார்த்தை சித்தர், அறிஞர், பேரரிஞர் என்றெல்லாம் இருந்த தமிழகத்தில் ..

“அம்மா” கலாச்சாரத்தை இவர்தான் தொடங்கினார்

அது இன்று சின்னமாவில் வந்து நிற்கின்றது

அந்த “அம்மா” கலாச்சாரத்தை இவர் தொடங்கினார்,

சீனியாரிட்டிபடி இவரின் தம்பியே “சின்ன அம்மா” என அழைக்கபட தகுதியானவர்.

அப்படி ஒருவர் இருந்தாலோ, பங்காளி முறையில் இருந்தாலோ நான் தான் தமிழக “சின்ன அம்மா” என அவர் கோர்ட்டுக்கு சென்றாலும் செல்லலாம்.

ஒற்றை இலையோடு அலையட்டும் தீபா, சசிகலா..

sd

கட்சிக்காக எதனையுமே செய்யாத , போய்ஸ் வீட்டை தவிர ஏதுமறியாத, தொண்டர்களிடம் ஒருநாள் கூட பேசாத சசிகலாவும்

12 வருடம் கட்சிக்காரர்கள் என்ன? ஜெயலலிதாவினை கூட சந்திக்காத தீபாவும்

இனி அதிமுக கட்சியினை கைபற்ற போராடுவார்களாம்.

இந்த சசிகலா என்ன தகுதியில் போராடுகின்றது என்றே குழம்பி தவிக்கும் போது, அந்த தீபா கொஞ்சமும் தகுதியின்றி நானும் உண்டு என்கின்றது

தகுதி இல்லா இரண்டு பேருக்கு இடையில் தகராறாம், எப்படி இருகின்றது கொடுமை?

டேய் எவண்டா அது, “நான் ஆணையிட்டால்னு”னு பாட்டு போடுவது?

எல்லாத்துக்கும் காரணம் அவரும் அந்த இரட்டை இலையும், அவருமே

நல்ல கட்சி அடையாளம், எல்லாமே இரட்டை

எம்ஜிஆர் ‍ ஜெயலலிதா
ஜெயலலிதா சசிகலா
சசிகலா நடராஜன்

இப்படி இரட்டையர்களால் ஆள்வதால் அது இரட்டையர் கட்சி

என்ன செய்யலாம்? விட்டால் இன்னொரு இரட்டையர் தொடர்ந்து வருவார்கள்.

அதனால்

அந்த இரட்டை இலையினை இரண்டாக பிரித்து சசிகலா கையில் ஒன்று, தீபா கையில் ஒன்று என கொடுத்துவிடுங்கள்

ஒற்றை இலையோடு அலையட்டும்

திரும்ப வாருங்கள் கலைஞரே..

கலைஞரின் அறிக்கையும், செய்தியும்,பேச்சும் வராத தற்போதைய காலங்களை கடந்து செல்வது மிக மிக கடினமானதாக இருக்கின்றது

தமிழக செய்திகள் பக்கம் செல்லவே மனம் விரும்பவில்லை

அவரை தேடிவிட்டு திரும்பிவிடுகின்றேன்..

எதிரிகளாக இருந்தாலும் எம்ஜிஆரும், ஜெயாவும் அவ்விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள்

அவர்கள் சாகும்வரை கலைஞரின் அறிக்கைகளையும், செய்திகளையும் கேட்டுகொண்டே இருந்திருக்கின்றார்கள்..

கலைஞரின் குரல் இல்லா கொடுங்காலம் அவர்களுக்கு இல்லை..

கலைஞரின் அலை என்பதில்தான் லாவகமாக கப்பல் ஓட்டியிருக்கின்றார்கள்.

கலைஞர் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில், ஊடகங்களில் ஒரு பெரும் சுணக்கமும் , குறைந்த வலுவுமே தெரிகின்றன‌

வந்து விடுங்கள் அய்யா

வந்து எமக்காகவாது கொஞ்ச நாள் எழுதிவிடுங்கள் அய்யா..

மாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு, அந்த சூரியன் இன்னும் கொஞ்சநேரம் வானத்திலே இருக்காதா? என்றொரு ஏக்கம் வரும்

அதே ஏக்கம் எமது நெஞ்சிலும் எழுகின்றது

அந்த சூரியன் இன்னும் கொஞ்சகாலம் பிரகாசிகட்டும்,

மனம் அப்படி ஏங்கத்தான் செய்கின்றது.

அவர் கடவுளை நம்பாமல் இருக்கலாம், ஆனால் அவருக்காக நாம் பிரார்த்திகொள்வோம்

பிரார்த்திப்போம்

திரும்ப வாருங்கள் கலைஞரே..

சிரியாவினையும், துருக்கியினையும் கையில் வைத்திருப்பது யார்?

Image may contain: 1 person, shoes

துருக்கியின் அமைவிடம் அதற்கு இப்பொழுது பெரும் சிக்கல், காரணம் துருக்கி ஐரோப்பிய ஆசிய இணைப்பு நாடு, ஒரு வாசல் போன்றது,

ஆசியாவின் நுழைவாசல், ஐரோப்பியருக்கு புறவாசல்

சிரியாவும், துருக்கியும் ஒரு வல்லரசின் கையில் கிடைக்கும் பட்சத்தில் பைப் போட்டு அரேபிய எண்ணையினை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லலாம் என்பதே இந்த சண்டையின் உள்நோக்கம்.

அப்படி சென்றால் ரஷ்ய எண்ணெய் சந்தை பாதிக்கபடும் என்பது புடின் கணக்கு

சிரியாவினையும், துருக்கியினையும் கையில் வைத்திருப்பது யார்? என்பதே பெரும் போட்டி. இதற்கு செத்திருப்பது இதுவரை பல லட்சம் மக்கள், ஏராளமான அகதிகள்

இன்றைய துருக்கி ஐரோபியசார்பு நாடு, முழுக்க அமெரிக்க சார்பு அல்ல, சமீபத்தில் அங்கு ஆட்சிமாற்றம் செய்ய அமெரிக்கா செய்த முயற்சி தோல்வியில் முடிய , அமெரிக்கா மீது அது கோபத்தில் இருந்தது

அமெரிக்க துருப்புக்கள் சிரியாவில் நிலைகொண்டிருப்பதை கட்டம் போட்டு மறைமுகமாக காட்டுகின்றது ரஷ்யா

சிரியாவில் அமெரிக்கா களமிறங்காது என சொல்லிகொண்டிருந்த அமெரிக்காவிற்கு இது பெரும் அடி

சிரியாவில் ரஷ்யா செய்யும் பெர்மாமன்ஸ் அமெரிக்கா வயிற்றில் புளிகரைத்துவிட்டது, ஏதாவது செய்ய வேண்டும் என அது முடிவு செய்தது

ரஷ்யவோ தினம் யுத்தத்தை எதிர்பார்பது போல தன் நீர்மூழ்கிகளை அணு ஏவுகனைகளுடன் ஐரோப்பாவினை சுற்றிவர செய்கிறது, ரஷ்ய விமானங்கள் அடிக்கடி பிரிட்டனில் ஊடுருவுகின்றன‌

பல வகையான தீவிரவாத அடியாட்களை கொண்ட அமெரிக்கா, துருக்கியின் நிலையினை சிக்கலாக என்னமோ செய்கின்றது,

அடிக்கடி குண்டுவெடிப்பும் நிகழும்

அதாவது சிரியா போல துருக்கியும் ஒரு மோசமான நிலைக்கு செல்லவேண்டும் என்பது யாரோ ஒரு பெரும்புள்ளியின் விருப்பம்

இந்நிலையில் துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுகொல்லபட்டுள்ளார், சர்வதேச ரீதியில் இது பெரும் பரபரப்பு

அமெரிக்காவோ துருக்கியில் பாதுகாப்பு சரியில்லை, அரசு சரியில்லை, என என்னவெல்லாமோ சொல்லி கன்னத்தில் கை வைக்கின்றது

ரஷ்ய தூதரை சுட்டவனோ, சிரியாவில் ரஷ்ய படைகள் செய்யும் அட்டகாசத்திற்கு சுட்டதாக சொல்கிறான், ஈராக்கில் துருக்கிய படைகள் செய்யும் அட்டகாசத்திற்கு அவனை யார் சுடுவது?

ரஷ்ய தூதர் கொல்லபட்டது ரஷ்யாவிற்கு அவமானம், அதாவது முதுகில் குத்திய செயல்

நிச்சயம் ரஷ்யாவின் அதிரடி வேறுமாதிரி இருக்கலாம்

ரஷ்யாவில் இருக்கும் துருக்கி தூதரை எல்லாம் தூக்க மாட்டார்கள்,

காரணம் கொன்றது யார்? கொல்ல சொன்னது யார்? என்பது வரை புட்டீனுக்கு தெரிந்திருக்கும்

அதனால் துருக்கியினை பழிவாங்க ரஷ்யா கிளம்பாது

ஆனால் வாங்க வேண்டிய இடத்தில் மிக சரியாக ரஷ்யா வாங்கும், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் புட்டீன் எப்படி பதிலடி கொடுப்பார் என விரைவில் காணலாம்.

இந்த பரபரப்பில் என்னாகும்?

சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் இருக்கும் செய்தி மறைக்கபடும் அவ்வளவுதான்.

டிரம்ப் கொஞ்சம் புட்டீன் ரசிகர், புட்டீனுடன் பேசுவேன், பல பிரச்சினைகளை முடிப்பேன் என்றெல்லாம் சொல்லிகொண்டிருப்பவர்

அவருக்கும் புட்டீனுக்கும் பெரும் சிக்கல் வைக்கும் நோக்கிலும் இது நடத்தபட்டிருக்கலாம் என்பது இன்னொரு கோணம்

புட்டீனின் அடி எஸ்தோனியா பக்கம் இருக்கலாம், கொஞ்ச நாளாக அவர் அப்பக்கம்தான் உறுமிகொண்டிருக்கின்றார்.

மொட்டை அடித்துக்கொள்ளும் கோமாளிகள்…

Image may contain: 12 people, people sitting

ஜெயாவிற்கு உலகெல்லாம் இருந்து அஞ்சலி செய்திகள் வருவது ஆச்சரியமல்ல,

அந்த அஞ்சலி செய்தி முடியும் இடத்தில் சின்னம்மா கட்சிதலமைக்கு வரவேண்டும் என்ற செய்தியோடு அது முடிவதுதான் ஆச்சரியம்

பிரான்மலை அஞ்சலி கூட்டத்திலிருந்து பிரான்ஸ் கூட்டம் வரைக்கும், ஆண்டிபட்டி அஞ்சலி கூட்டத்திலிருந்து அமெரிக்க அஞ்சலி கூட்டம் வரைக்கும் அந்த செய்தியோடுதான் கூட்டம் முடிகின்றது..

ஜெயா படத்திற்கு மாலை போட்டு மெழுவர்த்தி கொளுத்துகின்றார்கள், பின் தலைக்கு மொட்டை போடுகின்றார்கள் அதன் பின் அம்மா என கதறி அழுகின்றார்கள்

அம்மா எப்படி தெரியுமா? என 50 வருடம் அவருடம் அவரால் சோறு ஊட்டி வளர்க்கபட்டவனை போல கதறுகின்றார்கள், கதறிவிட்டு கண்களை துடைத்துவிட்டு, சின்னம்மா கண்டிப்பாக பதவிக்கு வரணும் என சொல்லி ஒரு திருட்டு முழியுடன் கேமராவினை பார்க்கின்றார்கள்

இந்த அழிச்சாட்டியம் தான் இந்த அஞ்சலி கூட்டங்களில் நடக்கின்றது

ஆக அந்த அஞ்சலியே ஒரு செட்டப் அஞ்சலி எனும் முடிவிற்கு மக்கள் வந்துவிடுகின்றார்கள்

ஐரோப்பாவில் ஆங்காங்கு தமிழர்கள் கூடி ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு மறக்காமல் சின்னம்மா பதவிக்கு வந்தே தீரவேண்டும் என ஒப்பாரி வைக்கின்றார்கள்

முன்பு ஜெயலலிதாவிற்கு லண்டனில் அந்த விருது கொடுக்கவேண்டும், அவருக்கு மியூசியத்தில் மெழுகு பொம்மை வைக்க வேண்டும் என்றெல்லாம் யாராவது சொல்வார்கள்

இப்பொழுது அந்த சத்தம் இல்லை, வரவும் வராது

வேண்டுமானால் அங்கு குயின் விக்டோரியா மகாராணி சிலை அருகே எங்கள் சின்னம்மா சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரலாம்

வரட்டும், இப்படி தமிழக மக்கள் எல்லாம் சின்னராணி, சின்னம்மா, சின்னதாயி என கதறிகொண்டிருக்க அங்கு சிந்தனை எப்படி இருக்கும்?

என்னது லண்டனில் சிலையா?

சிலை என்ன சிலை? முடிந்தால் லண்டன் அரண்மனையினை வாங்கலாம், எத்தனை நாள்தான் கொடநாடு, போயஸ், சிறுதாவூர் என இங்கே அரண்மனைகள் உருவாக்கிகொண்டிருப்பது

சின்னவர் எம்ஜிஆர் ராமாவரத்தில் கட்டினார், அம்மா 4 பங்களா கொடநாட்டில் கட்டினார்,

அடுத்த தலமை லண்டனிலோ, ஸ்விட்சர்லாந்திலோ, மியாமி தீவிலோ அரண்மனை கட்டினால்தானே அது கட்சி வளர்ச்சி?


சசிகலாவினை எந்த பதவியிலும் அமர்த்துங்கள், ஐநா சபை தலைவரை கூட விரட்டிவிட்டு அதில் கூட அமர்த்துங்கள்

ஆனால் அதற்குமுன் அவரை வாய் திறந்து செய்தியாளர்கள் முன்னால் பேசவையுங்கள்

இன்னும் அவர் குரல் கூட எப்படி இருக்கும் என தெரியாத தமிழகம் இது.

தமிழகத்தின் இன்றைய சோகமும், பரிதாபமும் அதுதான்


கண்டேன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை!!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டினை முதன் முதலாக காணும் பாக்கியம் நேற்றுதான் கிடைத்தது

கரன்சி என்பது ஒரு நாட்டின் கவுரவம், அடையாளம். அதனால்தான் அந்நாட்டின் மிக பெருமையான அடையாளங்களும், தலைவர்களின் படங்களும் அதில் பொறிக்கபடுகின்றன‌

கரன்சி இருக்கும் அழகிலும் தரத்திலும் ஒரு நாட்டின் நிதிநிலை அழகாக தெரியும்.

இவர்களுக்கு அதில் எல்லாம் கவலையே இல்லை, நாட்டின் நற்பெயர் பற்றி என்று கவலைபட்டார்கள்???

அவசர கதியில் தரமில்லா காகிதத்தில் ஒரு மாதிரியாக 2000 ரூபாய் தாளை வெளியிட்டிருக்கின்றாகள், அதனை பார்த்தாலே எந்த தேசத்துக்காரன் என்றாலும் அவன் மனதில் இந்தியாவின் மரியாதை சற்று குறையத்தான் செய்யும்

2000 ரூபாய்க்கு கரன்சியினை உயர்த்தியதே பெரும் தவறு, நாடு பொருளாதார ரீதியாக சரிகிறது என்பதே அதன் பொருள்.

அப்படி ஒப்புகொள்ளமுடியாதல்லவா? அதனால் கறுப்புபணம் ஒழிப்பு ஆயிரம் செல்லாது ஐநூறு செல்லாது என சொல்லி சந்தடிசாக்கில் 2000 ஆயிரம் கொண்டுவந்தாயிற்று

கொண்டுவந்த நோட்டும் கொடூரமாக இருக்கின்றது,

கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைத்துவிட்டது, இப்பொழுது மட்டும் அந்த எஸ்,வீ சேகர் அருகில் இருந்தார் என்றால் பிடித்து அவர் கண்ணை விரிக்க வைத்து இந்த நோட்டை பார்க்க சொல்லி கேட்கலாம்

“இதில் எங்கே ஜிபிஎஸ் இருக்கின்றது? ஜிபிஸ் வைக்க தகுதியான நோட்டா இது?, கொஞ்சமாயா அய்யா பேசினீர்” என நாலு கேள்வி நறுக்கென்று கேட்க வேண்டும்

ஒரு கரன்சியினை உருப்படியாக அடிக்க வழியில்லை, இதில் அதற்குள் ஜிபிஎஸ் இருக்கின்றது, அணுகுண்டு இருக்கின்றது என ஆயிரம் பொய்கள்

பொய்களில் அரசு அமைக்கலாம், பொய்களில் நெடுநாள் ஆளமுடியாது

எப்படிஎல்லாம் பெரும் பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்த 2000 நோட்டு பெரும் உதாரணம்

தேடி அகப்பட்டதுதான், ஆனால் கையில் வைத்திருக்க முடியாது, உடனே எங்காவது மாற்றிவிட வேண்டும்கா

காரணம் இன்று இரவே இவர்கள் செல்லாது என அறிவிக்கும் சாத்தியம் உண்டல்லவா?

மூன்று சதமடித்த கருண் நாயருக்கு வாழ்த்துக்கள்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதம் என்பது அபூர்வம், வெகு சிலரே அதனை பெற்றிருக்கின்றார்கள்

அதுவும் அறிமுக தொடரிலே முச்சதம் என்பது பெரும் விஷயம், அப்படி அசத்தியவர்கள் எல்லாம் பின்னாளில் பெரும் ஜாம்பவன்களாக ஜொலித்திருக்கின்றார்கள்

முதலில் சதமே மூன்று சதமாக கொடுத்திருக்கும் கருண் நாயருக்கு வாழ்த்துக்கள்

பொதுவாக மலையாளிகள் ஆதிக்கம் தடகளத்தில் அதிகம், கிரிக்கெட் போர்டில் குறைவு,

இந்த கருண் நாயரை கிரிக்கெட் வாரியம் ஜொலிக்க விட்டால் நல்லது.


கொசுறு

அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் என்ன செய்துகொண்டிருக்கின்றார்

“பட்டத்து அரசி இல்லாத இடத்தில் அடுத்த ராணி முடிசூடிகொள்வதில் என்ன தவறு?” என்ற முழக்கத்தோடு விரைவில் வரலாம்

“இதயக்கனி”யின் கட்சியில் “சமுத்திரகனி” போல நடிப்பில் எல்லோரும் பின்னிக்கொண்டிருக்கின்றார்கள்

ஒரு “தாமரைக்கனி” கூட இல்லை.