கலக்கிகொண்டிருக்கும் ரெய்டு செய்திகள்..

மத்திய அரசு செய்யும் சொத்துகுவிப்பு சோதனை எல்லாம் ஆரிய , பார்பாணிய இந்துத்வா சதியாம்

இதனை தமிழகம் பொங்கி கண்டிக்க வேண்டுமாம், இல்லையென்றால் ஆரியம் தமிழகத்தை அடிமைபடுத்திவிடுமாம் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

யார் சொல்வது? சாட்சாத் சசிகலா ஆதரவாளர்கள. அப்படியானால் சசிகலா இல்லை என்றால் அதிமுக இருக்காதா? என்றால் சத்தியமாக என சிரிக்காமல் சொல்கின்றார்கள்.

அதிமுகவினை அழித்து பாஜக கால்பதிக்க துடிக்கின்றதாம், அதனால் ரைடு என கிளம்பிவிட்டதாம்

அதிமுக தமிழக அரசியலை விட்டு விலகிவிட்டால் கூட பாஜகவிற்கு ஒரு வோட்டு விழும்?

அட அந்த எம்ஜிஆரே எழுந்து வந்து சொன்னாலும் பாஜக பத்து சீட் வாங்கும்?

பின் நடப்பது என்ன?

பார்பணர்களால் உருவாக்கபட்ட கட்சி அதிமுக, பின்னாளில் பிராமண ஜெயா உருவாகி வரவும் அது வழிசெய்து கொடுத்தது

பார்பண தலமைகள் இல்லாத அதிமுகவினை பார்ப்பண மேலாதிக்கம் விட்டு வைக்காது, அதன் உருவாக்கம் அப்படி.

நாளையே ஒரு பார்ப்பண தலமை அதிமுகவிற்கு கிட்டட்டும், எல்லாம் சுபம்

இந்த தீபா பெயர் அடிபடுவதெல்லாம் அந்த சூழ்ச்சியே

சொல்லமுடியாது எஸ்வி சேகர் ஒரு பதவிக்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை

இந்த கணக்குகளை புரிந்துகொள்ள மிக நுட்பமான பார்வை வேண்டும், சிலது புரியும் சிலது புரியாது

ஆக அதிமுக எனும் கட்சியினை அழியவிடமாட்டார்கள், ஆனால் கைபற்ற நினைப்பவர்களை விட்டுவைக்க மாட்டார்கள்

நிச்சயம் ஒரு ஆரியனையோ அல்லது ஆரிய நிரந்தர அடிவருடியினை தேடிகொண்டிருப்பார்கள், அது கிடைத்தவுடன் இந்த ரெய்டு, சோதனை எல்லாம் நிறைவடையும்

மன்னார்குடி கும்பல் அடியாளாக தொடர எந்த தடையும் விதிக்கமாட்டார்கள், ஆனால் அதிகாரத்தில் அமர விடமாட்டார்கள். ஏன் என்றால் அப்படித்தான்

இது எங்கோ இருந்து மிக திட்டமிட்டு செய்யபடும் காரியங்கள், பெரும் ராஜதந்திரங்கள்

எல்லாம் தானாக நடந்தது போல நடந்தாலும் உள்ளே ஒவ்வொன்றிற்கான காய் நகர்த்தலும் பிரமாண்ட மூளைகளால் தீட்டபடுபவை.

1970ல் இருந்து தொடரும் விளையாட்டு அது, அதன் தொடர்சியினைத்தான் பார்த்துகொண்டிருக்கின்றோம்

சரி இப்பக்கம் விளையாடுகின்றார்கள், அந்த பக்கம் அதனை அழிக்க என்ன முயற்சி?

கோப்பால் சாமி தெருவோரம் நிற்பதை கண்டபின் யாரும் தற்கொலை முயற்சிக்கு அங்கு தயாரில்லை, அணு அணுவாக தேரினை அடுத்த வாரிசுக்கு நகர்த்திவிட்டார் கலைஞர்.

இனி அவர் இல்லை என்றாலும் இம்மாதிரி சிக்கல் அங்கு வராது.

நிச்சயமாக சொல்லலாம், கலைஞர் அந்த சூழ்ச்சிகளை கடந்து இவ்வளவு தூரம் நிற்பதும், கட்சி கட்டுகோப்பாக இருப்பதும் பெரும் அதிசயங்கள்.

சரி அடுத்த ரைடு எங்கே என்பதுதான் தமிழகத்தின் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கேள்வி?

எங்கு இருக்கும்?

பன்னீர் உதவியாளரை கண் துடைப்பிற்கு விசாரிக்கின்றார்களாம், அடுத்து யாரையோ கண்விழி பிதுங்க விசாரிக்க போகின்றார்களாம், எல்லாம் நாடகம்

தங்களால் உருவாக்கபட்ட கட்சிக்கு தாங்கள் சொல்லும்படி அமரும் ஒருவன் கிடைக்கும் வரை, அவன் பதவி நிரந்தரம் ஆகும் வரை இந்த நாடகம் நடக்கும்.

நீ பொய் சொல்கின்றாய், ஆரிய தலமை எல்லாம் அதிமுக பிரச்சினை இல்லை என எம்மை நோக்கி சொல்வீர்களாயின்

அந்த பத்திரிகைக்கு வந்திருக்கும் திடீர் வீரத்தையும், ஆக்ரோஷத்தையும் பாருங்கள்

ஜெயா இருக்கும் வரை மவுனம் காத்த விகடன் குழுமம் இப்பொழுது சசிகலா நடராஜனின் வரலாற்றை உரித்து தொங்க விடுகின்றது

ஏன்? எதற்கு? எப்படி?

இதில் ஆயிரம் விஷயங்கள் ஒழிந்திருக்கின்றன, பொறுமையாய் கவனமாய் உற்றுநோக்கினால் ஏராளமான விஷயம் புரியும்

திடீரென முளைத்த தீபா

திடீரென சில பத்திரிகைகளுக்கு வரும் வீரம்

பன்னீர் காட்டும் பவ்யம், ஜெயலலிதாவே செல்ல மறுத்த டெல்லிக்கு அவர் ஓடும் ஓட்டம்

பல்டியும் மொட்டையும் அடிக்கும் அமைச்சர்கள்..

ஆளுநர் சு.சாமி எனும் அதிரடி செய்திகள்

அவ்வப்போது கிளம்பும் அப்பல்லோ மர்ம செய்திகள்..

கலக்கிகொண்டிருக்கும் ரெய்டு செய்திகள்..

எல்லாம் மர்மமாக ஏதோ சொல்லவில்லையா? கவனியுங்கள் காதோரம் சில உண்மைகளை சொல்லும்.

கணித்தது நடக்கிறது… அடுத்த ரெய்டு எங்கே?

தமிழ்நாட்டு பணம் எல்லாம் ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் சிக்குகின்றது, இவர்களை எல்லாம் ஒன்றும் சொல்லாத சீமான் கோஷ்டியினர் தெரு சுத்தபடுத்தும் தொழிலாளியிடம் “ஏய் வடுக வந்தேறி, நீ வைத்திருப்பது தமிழன் விளக்குமாறு..” என சீறிவார்கள்

இப்பொழுதெல்லாம் சீமானுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை, வறண்ட காலத்தில் வயலில் கண்ணீர்விட்ட விவசாயி, மழை வந்தபின் சும்மா இருப்பானா?

சீமான் அப்படித்தான் இருக்கின்றார், அடித்துவிளையாட வேண்டிய களத்தில் அமைதிகாப்பது ஏன் என தெரியவில்லை

தமிழர்களை அழிப்பது தெலுங்கர்கள், இது தமிழருக்கும் தெலுங்கருக்குமான போர் என்றெல்லாம் அறிக்கைவிட்டு முஷ்டி தூக்கினார்

இப்பொழுது ரெட்டிகள், ராவ்கள் சிக்கும் போது மகா அமைதி

ரெட்டிக்கும், ராவிற்கும் இடையில் சீமான் ஏன் நின்று கத்தவில்லை

“நடுவில் அங்கிள் சைமனை காணோம்”

——

அட அரசியல் உலகில் சில நேரம் நாம் கணித்தது கூட நடக்கின்றது

திருநாவுக்கரசர் ஜெ திரும்ப வந்துவிடுவாரா? என கேட்டால் சீமான் குதிக்கமாட்டாரா? என்று சொன்னால், அப்படியே சீமான் ராஜிவ் வந்துவிடுவாரா? என குதிக்க, களத்தில் இளங்கோவனும் வந்து குதிக்கவும் சண்டை இளங்கோவன் வித் திருநாவுக்கரசு என மாறியது

முன்பே நாம் சொன்னோம்

பன்னீர்செல்வம் டெல்லி கிளம்பினார், இங்கு 3 அமைச்சர்கள் சின்ன அம்மா என பூபாளம் பாடினர், இது எங்கோ உதைக்கின்றது விரைவில் தமிழகத்தில் சில இடங்களில் வருமான வரி சோதனை நடக்கலாம், சின்னம்மாவிற்கு செக் வைக்கபடும் என சொன்னோம்

அப்படியே இன்று தலமை செயலாளர் வீட்டில் அள்ளிகொண்டிருக்கின்றார்கள், வாரி கொண்டிருக்கின்றார்கள்

எதோ ஒரு படத்தில் விவேக்கிற்கு ஒரு ஸ்பெஷல் பவர் வந்திருப்தாக தனுஷ் சொல்வார், உடனே ஒருவித எமோஷனல் ஆனந்த நிலைக்கு விவேக் முகம் மாறும்

நம் முகமும் அப்படி மாறிகொண்டிருக்கின்றது 🙂

– –

அடுத்த ரெய்டு எங்கே?

தலமை செயலாளர் வீட்டில் ரெய்டு செய்யும்பொழுது, அவரை நியமித்த முன்னாள் முதலமைச்சர் வீட்டிலும் அரிசிபானையாவது திறந்து பார்க்க வேண்டுமா இல்லையா?

அவர் இல்லை என்றாலும் அவரின் வீடும், அவரின் பொருட்களும் தோட்டமும் அப்படியேதான் இருக்கின்றது.

இப்பொழுதெல்லாம் மத்திய அரசிற்கு பெரும் பலம் இந்த சிபிஐ, உளவுதுறை எல்லாம் அல்ல‌

அவர்களுக்கு கைகொடுக்கும் ஒரே துறை வருமான வரிதுறை, அது மட்டும் இல்லை என்றால் இங்கு ஒரு பயலும் பயப்பட மாட்டான்

பகவானின் இன்றைய அவதாரமாகவே அந்த துறையினை பார்க்க வேண்டி இருக்கின்றது.

இதே வருமானவரி சோதனையினை அன்றே ஒழுங்காக செய்து, 4 ஆட்டு ஆட்டி, அந்நிய செலாவணி வழக்கையும் பாய்ச்சியிருந்தால் ராமசந்திரன் இல்லை, ஜெயா இல்லை, இன்று சசிகலாவும் இல்லை

மத்திய அரசுக்கு இவ்வளவு சிக்கல் வந்திருக்காது

கலைஞரை எதிர்த்து இந்திரா செய்த பெரும் தவறு அது,

மோடியாவது சரி செய்யட்டும்

எல்லா காலத்திலும், யாராலும் வீழ்த்தமுடியாத ஆலமரம்

அந்த மரத்தின் ஆணிவேர் சரிந்ததில் அதில் கூடுகடியிருந்த பறவைகள் எல்லாம் பரிதவிக்கின்றன, சில பறவைகள் வேர்தான் அறுந்திருகின்றது, கொஞ்ச நாள் பழம் பழுக்கத்தான் செய்யும், இந்த‌ கிளையில் சிலகாலம் தங்கலாம் என சிந்திக்கின்றன,

சில பறவைகள் முன்பு அம்மரத்திற்கு முட்டு கொடுத்த்த கம்பு ஒன்று வேராக தாங்கும் என அதனையே வேர் என சொல்லி கானம் இசைக்கின்றன‌.

அதற்கும் சில பறவைகளும் அவைகளின் கூகுட்டைகளும் ஆம் இந்த முட்டு கம்பு வேராக தாங்கும் என உறுதியளிக்கின்றன‌

ஆணிவேர் வேறு முட்டு கம்பு வேறு என சிந்திக்கும் தன்மை அவர்களிடம் இல்லை

ஒரு சில பறவைகள் பறக்க எத்தணிக்கின்றன, உண்மை அவைகளுக்கு புரிகின்றது

தோட்டத்து பறவைகளே, இந்த சரிந்த மரம், அதோ அங்கு தெரியும் பெரும் ஆலமரத்தின் விதையிலிருந்து உருவானது

இளைப்பாற விரும்பும் பறவைகளுக்காக அது தன் கிளைகளை விரித்து காத்தே இருக்கின்றது

ஆணிவேர் தவிர, அதற்கு பல விழுதுகளும் உண்டு. ஏகாப்ட்ட புயல்களும் புல்டோசர்களும் அதனை வீழ்த்த எண்ணி முடியாமல் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடியே விட்டன‌

சிக்கலில் இருக்கும் பறவைகளே, அதன் மனது பெரும் விசாலமானது. ஆலமரமான தன்னை கட்டுமரம் என விமர்சித்தவர்களை கூட அரவணைக்கும் பக்குவம் கொண்டது

யாரும் அங்கு செல்லலாம், அதன் நிழலில் அமர்ந்து உறங்கி, உறவாடிய ஒரு காக்கை ஒன்று, பின் அம்மர பறவை கூட்டத்தின் ஒரு பிரிவினை நான் கழுகு உங்களை எல்லாம் உயர் பறக்க வைக்கின்றேன் என அழைத்து சென்றது

அப்பாவி பறவைகளும் அந்த மரத்தின் மீது எச்சம் கழித்துவிட்டு பறந்தன, மரம் அமைதி காத்தது

பிரிந்த பறவைகளுக்கு அது கழுகு அல்ல, காகம் என்பதும் ஒரு மாயபுலியின் பிடியில் அந்த காகம் சிக்கி இருப்பது தெரிந்ததும் வருந்தின, தவித்தன

அந்த மரம் பின்பும் அந்த பறவைகளை ஏற்றுகொண்டது

அந்த காக்கா கூட்டத்து பறவையொன்று, திசைமாறி தோட்டத்து பக்கம் சென்றது, கிடைத்த பழத்திற்காக வளர்த்த மறத்தை அடிகடி குத்தி குதறியது

இன்று தோட்டத்து மரமும் சாய்ந்துவிட்டது

அந்த பறவை வந்தாலும் அந்த ஆலமரம் ஏற்றுகொள்ளும், கொஞ்சம் கூட வருந்தாமல், காயபடுத்தாமல் புன்னகையோடு ஏற்றுகொள்ளும்

அவ்வளவு ஏன்? அந்த காகமே வந்து புகலிடம் இல்லை என்றாலும் அந்தமரம் இளைப்பாறுதல் கொடுக்கும்

ஆக ஆங்காங்கு பரிதவிக்கும் பறவைகளே, அந்த முட்டுகொம்பு ஆணிவேராகும் என கனவு காணும் பறவைகளே

அந்த ஆலமரத்திற்கு திரும்புங்கள், பெரும் வேரும் அது இல்லை என்றாலும் தாங்கும் பெரும் விழுதுகளும் அங்கு உண்டு

புயலுக்கும், மழைக்கும் தடுமாற அது கட்டுமரம் அல்ல‌

எல்லா காலத்திலும், யாராலும் வீழ்த்தமுடியாத ஆலமரம்


கொசுறு
வைகோவிற்கு காட்டிய எதிர்ப்பினை திமுக உறுப்பினர்கள், அந்த எதிர்ப்பினை ஈழபோர் நிறுத்துவதில் காட்டியிருந்தால் அது ஆட்சிக்கு வந்திருக்குமாம் ஒருவர் சொல்லிகொண்டிருக்கின்றார்

அப்படியானால் ஈழப்போருக்கு ஒப்பாரி வைத்த அங்கிள் சைமன் ஆளும் கட்சியாகவும், வைகோ எதிர்கட்சியாகவும் அல்லவா வந்திருக்க வேண்டும்?

அதிமுக ஈழப்போரினை நிறுத்திதான் ஆட்சிக்கு வந்தது என்றும், இன்று சசிகலா முதல்வராக ஆசைபடுவது ஈழம் அமைத்த காரணத்தால் என நம்பி தொலையுங்கள்…


 

அலிப்போ எனும் நகரம் அடுத்த முள்ளிவாய்க்கால்

பொதுவாக உலகில் எங்காவது இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் எல்லா இஸ்லாமிய மக்களும் பொங்குவார்கள், குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் உண்டு

பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக எத்தனையோ ஊர்வலங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தபடும், பார்த்திருக்கின்றோம்

அப்படிபட்ட மனிதநேய, மார்க்க நேய மக்களை சிரியா நொறுக்கபடும்பொழுதும், அங்கு அலிப்போ எனும் நகரம் அடுத்த முள்ளிவாய்க்காலாக மாறுவதை பார்த்தபின்னும் காணவில்லை

நிச்சயம் இது எல்லா இஸ்லாமிய மக்களும் கடும் கண்டிப்போடு தடுக்க வேண்டிய விஷயம்

ஆனால் அமைதி ஏன்?

காரணம் சிரியா ஷியா நாடு, போராளிகளும் ஐஎஸ் இயக்கமும் சன்னி பிரிவு, அந்த புள்ளியில்தான் எல்லோரும் மகா அமைதி

பாலஸ்தீனத்தில் யூதன் கொன்றால் அது இனபடுகொலை, உபியில், குஜராத்தில் நடந்தால் வரலாற்று களங்கம்.

அதனையே ஷியா சன்னி இஸ்லாமிர்கள் தங்களுக்குள் செய்தால் ஒரு சத்தமும் இவர்களிடம் இருக்காது

இதே அமைதிதான் பர்மாவில் ரோஹாங்கியா இஸ்லாமியர் நொறுக்கபடும்பொழுதும் காட்டபடுகின்றது

பெட்ரோல் அரேபிய தேசத்தினை அழிக்கின்றதோ இல்லையோ, அது வற்றி தீர்ந்தாலும் இந்த ஷியா, சன்னி பிரச்சினை நிச்சயம் அங்கு அமைதியினை கொண்டுவராது

அலிப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் கையில் இருந்தது, அதனை ரஷ்ய ராணுவ வியூகத்தோடு சிரியபடை மீட்டுகொண்டிருக்கின்றது

உண்மையில் இது அமெரிக்க தலமையிலான மேற்கு நாடுகளின் தோல்வியே, காரணம் ரஷ்ய ராணுவ வியூகம் அப்படி அசத்தியிருக்கின்றது

மகா மூர்க்கமான யுத்ததில் இனி கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் சாகலாம் எனும் அளவிற்கு அச்சம்

ஆக சிரியாவின் முள்ளிவாய்க்காலாக அலிப்போ மாறிகொண்டிருக்கின்றது

முன்பு ஈழம் அழிகிறது , சர்வதேசம் நாசமாய் போகட்டும் , தமிழினம் அழிவதை உலகம் வேடிக்கை பார்க்கின்றது என பல ஒப்பாரிகள் எழுந்தன‌

உலகம் அப்படித்தான், மிகுந்த சுயநலம் மிக்கது. தனக்கு ஆதாயம் இல்லா இடத்தில் யாரும் வரமாட்டார்கள். நாமே நம்மை பாதுகாத்தால்தான் உண்டு

அல்லது சவுதி, குவைத் போல எண்ணெய் வளமோ அல்லது சில நாடுகளில் உள்ளது போல ஸ்பெஷல் வளமோ இருக்க வேண்டும்

அப்படி இல்லாத ஈழமும் கொழும்பும் 1983ல் எரியும்போது உலகம் வேடிக்கைதான் பார்த்தது, இந்தியாவே களம் இறங்கி காப்பாற்றியது

பின் 1986ல் ஜெயவர்த்தனே வடமராட்சியில் கொள்ளிவைக்க போகும் போதும் இந்தியா மிரட்டி தமிழரை காப்பாற்றியது

அதன் பின் புலிகள் இந்தியாவினை ஓட விரட்ட கிளம்பியதும், ராஜிவினை கொன்று பலிவாங்கியதும் இந்தியாவினை ஒதுங்க வைத்தன‌

இந்தியாவே ஒதுங்கு நாங்கள் கிழித்துவிடுவோம் என கொக்கரித்த புலிகள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் கிழித்ததை உலகம் கண்டது

அன்றாவது ஈழ மக்களுக்கு ஒரு இந்தியா இருந்தது.

அதாவது நீங்கள் நாடு அடையுங்கள், அடையாமல் போங்கள். புலிகளை அடக்குங்கள் அடக்காமல் போங்கள் எங்கள் கவலை அது அல்ல, அப்பாவி மக்கள் சாவதை, அதுவும் தமிழர்கள் சாவதை அனுமதிக்கமாட்டோம் என்றே இந்தியா களமிரங்கியது

எத்தனைபேர் செத்தாலும் கவலை இல்லை என துரியோதனன் வசனம் பேசிய புலிகள், ஈழமக்களை இந்திய ராணுவத்தினருக்கு எதிராக தூண்டிவிட்ட பின்பே இத்தனை அழிவும் நிகழ்ந்தது.

1983ல் இந்தியா களமிறங்கவில்லை என்றால் இப்படி வல்லரசுகள் களமிறங்கி இலங்கையினை சிரியா அளவுக்கு மாற்றி இருப்பார்கள், இந்தியாதான் காத்தது

இறுதிபோரிலும் வல்லரசுகள் களமிறங்க தயக்கமே இந்தியா எனும் பெரும் நாடு இலங்கை அருகே அமைந்திருப்பது அன்றி வேறல்ல‌

ஆனால் சிரியா அப்படி அல்ல, சிறிய நாடு. ஷியாக்களின் காவலனான ஈரானும் பின்னரே களத்திற்கு வந்தது, ரஷ்யா நிலமை மோசமான பின்னரே களத்தில் வந்தது

எல்லாம் சேர்ந்து சிரிய மக்களை கொன்று புதைத்து வருகின்றன‌

அலிப்போ நகர மக்களின் துன்பத்தை நினைக்கும்பொழுதெல்லாம், கொழும்பிலும், வடமராட்சியிலும் பின் அமைதிபடையாக சென்று ஈழத்தில் அமைதி நிலைநாட்ட படாதபாடுபட்டு, அருமை தலைவனையும் இழந்த இந்தியாவே நினைவுக்கு வரும்

சிரியாவிற்கு அப்படி மனிதாபிமானத்தோடு உதவ ஒரு நாடும் இல்லை

நாட்டினை விடுங்கள்

ஷியா என்பதற்காக அவர்களுக்கு உதவி கூக்குரல் எழுப்ப ஒரு இஸ்லாமிய மக்களும் இல்லை

ஷியாக்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்ற சர்ச்சை இருக்கட்டும், சக மனிதர்கள் என்ற வகையில் கூட அவர்களுக்காக குரல் எழுப்ப யாரும் இல்லை

அந்த வீடியோ காட்சிகளை, செய்தி வீடடியோக்களை கண்டால், உதவி குழு வீசும் ஒரு துண்டு ரொட்டிக்காக அந்த மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டால்..

உருகாத மனமும் உருகத்தான் செய்யும்

அப்படி என்ன பாவம் செய்தார்கள் சிரியர்கள்? அதுவும் சிரிய குழந்தைகள்?

அக்குழந்தைகள் அவ்வளவு அழகு, ரோஜாப்பூவில் பன்னீரை தெளித்தது போன்ற முகம், கொள்ளை வசீகரம்

அக்குழந்தைகள் அழுதும், பிணமாகவும் குவியும் காட்சிகளை கடந்து செல்ல முடியவில்லை,

அவைகளை கையில் ஏந்தி, மார்போடு சேர்த்து அழவேண்டும் போலிருக்கின்றது. அவர்கள் மாடுகளாகவோ, புறாக்களாகவோ பிறந்திருந்தாலும் அண்டை நாட்டிற்குள் சென்றிருப்பார்கள், விசாவோ, பாஸ்போர்ட்டோ அகதி புறா, அகதிமாடு எனும் பிரச்சினை இருந்திருக்காது

மனிதர்களாக அல்லவா பிறந்து தொலைத்துவிட்டார்கள்…

இந்த பூமியில் அவர்களுக்கும் சேர்த்தே உணவு விளைகின்றது, அவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகின்றது, பின் அவர்கள் மட்டும் ஏன் வாழ கூடாது?

ஒரு அழகான ரோஜா தோட்டம் மீது புல்டோசர் ஏறி இறங்கினால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கின்றது சிரிய கிராமங்கள், அந்த அழகிய குழந்தைகள் ஓடி ஆடிய கிராமங்கள்

இறைவன் மீது கடும் வெறுப்பும், பெரும் கோபமும் கிளம்பும் நேரம்

எவனோ ஒரு பிரிவினை கிறிஸ்தவ மார்க்கவாதி இந்தியாவினை பற்றி சொன்னான், உருவத்தினை வணங்கும் எந்த நாடும் உருப்படாது.

சிரியர்கள் எந்த உருவத்தை வணங்கினார்கள்? பாலஸ்தீனியர் எந்த உருவத்தை வணங்கினார்கள்?

அவர்களுக்கு ஒரு நிம்மதியும் இல்லை, உருவத்தை வணங்கினாலும் இந்தியருக்கு நிம்மதிக்கு குறைவில்லை

நிம்மதியும், ஆசீரும் என்பது கடவுள் உருவத்தை வணங்குவதில் வருவது அல்ல, மனித உருவத்தில் கடவுளை காண்பதில் வருவது

பெரும் அதிகாரமும், ஆணவமும் கொண்டு நிற்கும் வல்லரசுகளை கண்டிப்பதா?, வல்லரசுகள் ஆடினாலும் அதற்கு இடம் கொடுத்து அழியும் அறிவில்லா அம்மக்களை பார்த்து பரிதாபடுவதா?

தெரியவில்லை

அவர்களுக்காக அந்த பிஞ்சுகளுக்காக இறைவனிடம் மன்றாடலாம்..

அந்த கொடிய இறைவனுக்கு ஒரு துளி இரக்கமேனும் பிறக்காதா?

ரீமேக் ஆகிறது ரஜினியின் மன்னன் படம் …

ரீமேக் ஆகிறது ரஜினியின் மன்னன் படம்

ரஜினி வேடத்தில் லாரன்சும், விஜயசாந்தி கேரக்டரில் நயன் தாராவும் நடிக்கின்றார்களாம் (நண்பர் Babu Rao கவனிக்கவும்)

பண்டரிபாய் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பது தெரியாது, சரண்யாவிற்கு வாய்பிருக்கலாம் அல்லது ராதிகா

கவுண்டமணிக்கு பதிலாக சந்தாணம் வரலாம்

ஆனால் ஒரு இடத்தினை நிரப்பவே முடியாது, அது குஷ்பூவின் இடம்

அதற்கு மறுபடி குஷ்பூவே நடித்தால்தான் சரிவரும்,

அதற்கு மறுபடி குஷ்பூவே நடித்தால்தான் சரிவரும், நடிக்கலாம் கொஞ்சம் இளைத்தால் குஷ்பூ அந்த இடத்தை மறுபடியும் அழகாக நிரப்புவார்

அட இளைக்க எல்லாம் வேண்டாம், இப்படி இருந்தாலும் லாரன்சு ஹீரோவான படத்திற்கு போதும்

குஷ்பூ இல்லாமல் அப்படம் ரீமேக் செய்யபட்டால் நிச்சயம் எல்லோரின் கண்களும் குஷ்பூவினைத்தான் தேடும்,

அவர் இல்லா படம் வெற்றி பெற வாய்ப்பில்லை


Image may contain: 1 person