சிறு குறு செய்திகள்….

இந்த ஆண்டின் மிக சிறந்த படம் “இறுதி சுற்று”, மிக சிறந்த இயக்கமும் நடிப்பும் அதில் மின்னியது

கொஞ்ச வருடத்திற்கு இனி அப்படி ஒரு படம் சாத்தியமே இல்லை

மிக சிறந்த பாடல் “அவளும் நானும்”

மிக சிறந்த பொழுதுபோக்கு படம் “சென்னை 600028 II”

மிக சிறந்த சீரியசான காமெடி படம் “கபாலி”


ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது, மன்னார்குடி குடும்பத்திடம் ஆட்சி சிக்கிவிட கூடாது : கராத்தே வீரர் உசேனி

அட பரிதாபமே, ஹுசைனி எல்லாம் கண்டிக்கும் அளவிற்கு கட்சி நிலை சென்றுவிட்டதா? இனி இப்படி ஒரு கட்சி தமிழகத்திற்கு தேவையா?

கடந்த வாரம் கட்சியினை பிரபலபடுத்த சிலர் லிபிய விமானத்தை கடத்தி காமெடி செய்தார்கள், இவர் ஏற்கனவே அம்மாவிற்காக விமானத்தை கடத்துவேன் என மிரட்டியவர்.

ஒருவேளை ஏதும் விமானத்தை கடத்தி, அம்மா மர்மம் விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரோ?

விமானம் கடத்துவது எல்லாம் இப்பொழுது பெரும் சவால்..

ஆனால் மனிதர் கொஞ்சம் வித்தியாசமானவர், சசிகலாவினை கடத்தும் திட்டம் கூட இருக்கலாம்..


அதிமுக தலமை அலுவலகத்தில் மோதல், பலருக்கு ரத்த காயம்

கமிஷனர் சசிகலாவினை சந்திக்கின்றார், போயஸ் கார்டனுக்கு போலிஸ் காவல் போடபட்டுள்ளது

ஆனால் தொண்டர்கள் கூடிகொள்ளும் தலமை அலுவலகத்தில் ஒரு பாதுகாப்பும் இல்லை போலிருக்கின்றது, இவ்வளவிற்கும் ஆளும் கட்சி.

தனியார் பாதுகாப்பு படையினரும், போலிசும் போயஸ் கார்டனில் குவிந்திருக்க இனி அக்கட்சியின் தலமையகம் இப்படித்தான் இருக்கும்

எதற்கும் அந்த கட்சி அலுவலகத்தை மெரீனா பக்கம் மாற்றுவது நல்லது, அடிதடி என்றால் மோதிகொள்ள அருமையான இடம்.

ரத்தம் வரும் வரை ஏன் மோதிகொண்டார்கள்?

ஓ.. ரத்தத்தின் ரத்தங்கள் அல்லவா?

ஒருவர் ரத்தத்தை இன்னொருவர் பார்த்திருக்கின்றார், அவ்வளவுதான்.


வெளிநாட்டு நிதிபெறும் 20,000 தொண்டு நிறுவணங்கள் மீது நடிவடிக்கை மத்திய அரசு அறிவிப்பு

அதானே, இந்திய பிரதமர் மட்டும்தான் உலகெல்லாம் சென்று வெளிநாட்டு நிதி பெற தகுதியுள்ளவர். அவர் சென்று கையேந்தினால் அது அன்னிய‌ முதலீடு அது நாட்டுசேவை.

அதனை விட்டுவிட்டு மக்களே ஆள் ஆளாக்கு வெளிநாட்டில் கை ஏந்தினால் எப்படி? பின் பிரதமருக்கு என்ன மரியாதை?

ஆக 20,000 தொண்டு நிறுவணங்களே, இனி உங்களுக்கும் சேர்த்து பிரதமரே வெளிநாட்டு நிதியினை வசூலித்துகொள்வார்.

நீங்கள் கையேந்த கூடாது, மாறாக பிரதமர் கையேந்தி உங்களுக்கு தருவார், புரிகின்றதா?


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் நடப்பது மர்மமாகவே இருக்கிறது: திருநாவுக்கரசர் பேட்டி

ஜெயா இருக்கும்போது மட்டும் எது வெளிப்படையாக நடந்தது? அவர் இருக்கும் பொழுதும் அதே மர்மம் தான்


இரு தலையுடன் ஒரே உடலில் வாழும் 26 வயதான அமெரிக்க சகோதரிகள் , வினோத செய்தி

இது என்ன வினோதம், அவர்களாவது ஒன்றாய் பிறந்தவர்கள் ஒரே உடலில் இரு தலையோடு வளர்கின்றார்கள்,

தமிழகத்தில் எங்கோ பிறந்து பின் ஒரே உடலில் , ஒரே மனதோடு , இரு தலையோடு 30 வருடம் வாழ்ந்த உடன்பிறவா சகோரிகள் உண்டு, அதுதான் மகா வினோதம்