இஸ்ரேலிய தலைவிதி அப்படி, தமிழக தலைவிதி இப்படி …

பிரதமர் மீதான இரு ஊழல் வழக்குகளை விசாரிக்க இஸ்ரேல் அட்டார்னி ஜெனரல் உத்தரவு, பதவி இழக்கின்றார் பிரதமர் நேதன்யாகு

யாராக இருந்தாலும் வழக்கு என வந்துவிட்டால் கடாசி விடுகின்றார்கள் இஸ்ரேலில், முன்பு முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட்டும் சிறைக்கு அனுப்பபட்டார்.

இஸ்ரேலிய தலைவிதி அப்படி.

இங்கு தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பதவி ஏற்க அழைக்கின்றார்கள்

தமிழக தலைவிதி இப்படி

ஊழலை ஒரு பொருட்டாகவே தமிழகம் நினைக்கவில்லை,

மனதளவில் இன்னும் மன்னராட்சியாகவே அது ஜனநாயகத்தை அணுகுகின்றது,

இது மாறாது

பைத்தியகாரன் இருக்கும் ஊரில் நாமும் பைத்தியமாகவே இருந்துவிட வேண்டும், இல்லை என்றால் நம்மை கிறுக்கன் என்பார்கள்

சின்ன அம்மா வாழ்க, சின்ன அப்பா வாழ்க , சின்ன எம்ஜிஆர் பன்னீர் வாழ்க, சின்ன தாத்தா பொன்னையன் வாழ்க, சின்ன பாட்டி சரஸ்வதி வாழ்க , சின்ன பெரியப்பா தம்பிதுரை வாழ்க‌

இப்பொழுதுள்ள மில்லியன் டாலர் கேள்வி, சின்ன ஜெயலலிதா யார்?

விந்தியா, நமீதா என யார் அந்த இடத்திற்கு பொருத்தமானவரோ தெரியவில்லை

வருங்காலத்தில் உருவாக போகும் சின்ன ஜெயலலிதா இன்றே வாழ்க‌


திமுகவில் கணக்கு சரி இல்லை, அங்கு எல்லாமே ஊழல். தமிழகத்தை ஊழல்வாதிகளிடமிருந்தும் சுரண்டல்காரர்களிடமிருந்தும் காப்பாற்றவே தனிகட்சி தொடங்கினேன் என்றார் எம்ஜிஆர்

எப்படி தமிழகத்தை எம்ஜிஆர் காப்பாறி இருக்கின்றார் என்பது மிக நன்றாகவே தெரிகின்றது

ஒரு காலம் வரும் தமிழகத்திற்கு அவர் இழைத்திருக்கும் துரோகம் என்ன என்பதை பின்னாளில் வரலாறு சொல்லும்

அன்று எம்ஜிஆரின் கல்லறை கூட தமிழகத்தில் இருக்காது,


சசிகலா இன்னும் வாய்திறந்து பேசவில்லை, பேச போவதுமில்லை

Image may contain: 1 person, smiling, sitting Image may contain: 1 person, close-up

ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி இருக்கின்றார், இன்றைய தேதியில் அவர்தான் மிக சிறந்த விஞ்ஞானி , ஐன்ஸ்டீனுக்கு பின் அவரிடம் விஞ்ஞானம் கொட்டி கிடக்கின்றது, விண்வெளி குறித்து அவர் காட்டும் வழிதான் இன்றைய விஞ்ஞானிகளுக்கு பாதை.

மிக ஆச்சரியமான விஞ்ஞானி அவர், அவர் சொல்லும் கருத்துக்களும் கணிப்புகளும் பெரும் பரபரப்பானவை

ஆனால் பாவம்

அவரால் பேசவோ எழுந்து நடமாடவோ முடியாதபடி ஒரு வகையான பக்கவாதம், அதனால் அவர் விழிதிரையில் இயங்கும் ஸ்பெஷல் கம்பியூட்டர் ஒன்றை பயன்படுத்துகின்றார், அதன் மூலம் தன் கருத்துக்களை சொல்கின்றார்

சில வயர்களை அவர் தலையில் இணைப்பார்கள், அவர் சொல்ல வருவது திரையில் வரிகளாக வரும்.

அவரும் ஸ்பெஷல், அவர் கம்பியூட்டர் அவரை விட ஸ்பெஷல்

இவர் கதை இப்பொழுது எதற்கு? விஷயம் இருக்கின்றது.

இனி அப்படி ஒரு கம்பியூட்டரை போயஸ்கார்டன் வீட்டில் பொருத்தி சின்னம்மாவினையும் அந்த கம்பியூட்டரையும் இணைத்துவிடாமல் இனி அக்கட்சியினை நடத்தா சாத்தியமில்லை

சசிகலா இன்னும் வாய்திறந்து பேசவில்லை, பேச போவதுமில்லை

இந்த கட்சிக்காரர்களும் அவரை விடுவதாக இல்லை, பொதுசெயலாளர் என தேர்ந்தெடுத்தாகிவிட்டது

இனி லண்டனிலிருந்து அந்த ஸ்பெஷல் கம்பியூட்டர் சென்னை வரும், பெரும் மக்கள் சக்தி கொண்ட இயக்கத்தின் தலைவி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பாணியில் கட்சியினை நடத்துவார்

அவரை பார்த்துவிட்டு செல்லும் அமைச்சர்கள், அவரையும் அவர் மனவோட்டம் தெரியும் அந்த கம்பியூட்டரையும் வணங்கிவிட்டு செல்வார்கள்

மோடி கேஷ்லெஸ் இன்டியா என சொல்லிகொண்டிருக்கின்றார்

தமிழகம் ஸ்பீஸ்லெஸ் மாநிலமாக ஆகிகொண்டிருக்கின்றது

 

மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் பொதுக்கூட்டம் : சீமான் வீரவணக்கம்

மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?

இந்த வீரபெரும்பாட்டி என்ன செய்தார்?, முன்பொரு காலத்தில் வடுக நாட்டின் அரசன் திப்புசுல்தானோடு சேர்ந்து வெள்ளையனை எதிர்த்தார்,

தமிழகத்தில் அவர் போராடியபொழுது அவரோடு சில நாயக்க பாளையக்காரரும் இருந்தார்கள்

இப்படி வடுகர்களுடம், வந்தேறிகளுடனும் இணைந்து வெள்ளையனுடன் போராடிய வேலுநாச்சியாருக்கு எப்படி வீரவணக்கம் செலுத்தலாம்??

அப்படி அஞ்சலி செலுத்த சென்றால் வடுக மக்களுடன் அல்லவா செல்லவேண்டும்?

இன்னொன்று தெரியுமா? இந்த வேலுநாச்சியார் 7 மொழி பேசுவாராம், அதில் தெலுங்கும் ஒன்றாம்

ஆக தெலுங்கு வடுக மொழி படித்த, தெலுங்கர்களோடு பழகிய ஒரு இனதுரோகிக்கா வீரவணக்கம்?

இது தமிழுணர்வா?

வெள்ளையர்களே இந்த வடுக வந்தேரிகளை விரட்டிவிட்டு தனி தமிழ்நாடு அமைத்து தாருங்கள், நான் உங்களுக்கு சந்தோஷமாக வரி கட்டுகின்றேன் என சொல்லியிருந்தால் உங்கள் அஞ்சலியில் ஒரு அர்த்தம் இருக்கின்றது

தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போரை நடத்தும் நீங்கள், தெலுங்கனோடு இணைந்து போரிட்ட வேலுநாச்சியாருக்கு எப்படி அஞ்சலி செலுத்தலாம்?

முப்பாட்டன் முப்பாட்டி என்றுதானே வரும்? இது என்ன பெரும்பாட்டி?

இனி முருகபெருமான் பெரும்தாத்தா என்றா அழைக்கபடுவார் அங்கிள்?

பலமொழிகளை கற்று, எல்லா இன மக்களையும் அனுசரித்து பெரும் எடுத்துகாட்டு வாழ்வு வாழ்ந்த அந்த மகாராணிக்கு, இனவாதம் பேசிகொண்டிருக்கும் இவர் அஞ்சலி செலுத்துவாராம்

என்னா டூப்பு……

ஜெவிற்க்கு நோபல், மகசேச, பாரத் ரத்னா விருதுகள் : அதிமுக பொதுக்குழு

பொதுகுழு தீர்மானத்தை ஏற்றார் சசிகலா, பொதுசெயலாளர் ஆக சம்மதம்.

அட அட அடடா….

இவர்கள் வாசிப்பிற்கும், அவர்கள் அசைவிற்கும் அந்த காட்சிதான் நினைவுக்கு வருகின்றது

“என்ன அமெரிக்காவுல‌ டிரம்ப் கூப்பிட்டாக, ரஷ்யாவுல புட்டீன் கூப்பிட்டாக, பாகிஸ்தான்ல பெனசிர் பார்ட்டில கூப்பிட்டாக‌

இலங்கையில ராஜபக்சே கூட கூப்பிட்டாக..

சீன கம்யூனிஸ்ட் கட்சில கூட தா.பாண்டியன் மூலமா கூப்பிட்டாக..

அத எல்லாம் விட்டு என் கிரகம், இங்க வந்து மாட்டிகிட்டேன்…”


 சரி இப்பக்கம் ராணி நிறுத்தபடுகின்றார்,

அப்பக்கம் எந்த சிப்பாய் வருமான வரி சோதனைக்கு வரப்போகின்றானோ? அல்லது ஆளுநர் எனும் யானையினை நிறுத்த போகின்றார்களோ?

ஆட்டம் சுவாரஸ்யமாக செல்கின்றது


ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னாவும், பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் ரோமன் மகசேச விருதும், உலக அமைதிக்காக நோபல் பரிசு வழங்க அதிமுக பொதுகுழுவில் தீர்மானம்

அடேய் பாரத ரத்னா கொடுங்கள் என இந்தியாவினை கேட்கலாம், ரோமன் மகசேச விருதை கொடுங்கள் என பிலிப்பைன்ஸை எல்லாம் கேட்க முடியாது, அது அவர்களாக கொடுக்க வேண்டியது.

எத்தனை பேருக்கு வழங்கபட்ட உயர்விருது அது? யாராவது வலிய கேட்டார்களா? தகுதியான நபருக்கு தானாக அந்த‌ விருது வரும்.

அமைதிக்கான நோபல் பரிசும் வேண்டுமாம்,

இந்திய பாகிஸ்தான் யுத்தம் நிறுத்தபாடுபட்டாரா? ஈராக் போர், உக்ரைன் போர், சிரியபோரில் எல்லாம் பேசசென்றாரா?

பாலஸ்தீன பிரதிநிதியினையும், இஸ்ரேல் பிரதமரையும் போயஸ் கார்டன் வரவைத்து மிரட்டினாரா?

ஈழத்தில் போர் நிறுத்த நீந்தி சென்றாரே அதற்கா அமைதிக்கான நோபல் பரிசு?

கொடநாட்டில் மாளிகை கட்டி அமைதியாக இருந்தால் அது உலக அமைதிக்கான உழைப்பா?

உலகம் இந்த கோரிக்கைகளை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றது,

அவர்களோ சீரியசாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.

பாராளுமன்றத்தில் ஜெயாவிற்கு சிலை வைக்கவேண்டுமாம், சென்னை மற்றும் பார்பன அக்ரஹாரா சிறையில் ஒரு படமாவது வைக்க வேண்டாமா?

நல்ல வேளையாக ஜெயா இந்துமதவாதி, இல்லையென்றால் இந்நேரம் போப்பாண்டவர் கழுத்தை பிடித்து “செயின்ட்” பட்டம் கேட்பார்கள்?

ஆச்சரியமாக நீதிபதி குன்ஹாவினையும், ஆச்சாரியாவினையும் பழிவாங்க தற்கொலை படையாக மாறுவோம் என்ற தீர்மானம் இல்லை

சேர்த்திருக்கலாம், நோபல் பரிசு வேண்டும் என கேட்ட தீர்மானத்தில் இதனையும் சேர்த்திருக்கலாம், காமெடிகளில் இன்னும் ஒரு தீர்மானம் கூடியிருக்கும்

ஆக பொதுகுழு என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்


இறந்தவர்களுக்கு நோபல் கொடுக்கமாட்டார்கள் என்பதை அவர்களிடம் சொல்லாதீர்கள்

அந்த நோபல் பரிசு பெற தகுதியான அளவு ஜெயாவினை உருவாக்கியதே சின்னம்மா தான்,

அதனால் அந்த நோபல் பரிசினை சின்னம்மாவிற்கு கொடுங்கள் என கிளம்பிவிடுவார்கள்.

ஒரு மாதிரியாக அலைகின்றார்கள்,

மாற்று மருந்து கண்டுபிடிக்கும் வரை அவர்களிடம் ஒன்றும் சொல்லவேண்டாம்


இதற்கு இவ்வளவு நாடகமா?

பொதுகுழு தான் தலைவரையோ பொதுசெயலாளரையோ தேர்ந்தெடுக்குமாம்…

நம்பிகொள்வோம்

பொதுகுழு கூடி தேர்தல் நடக்கும்

பின் தலைவரை அறிவிப்பார்கள், ஜனநாயக கட்சி தேர்தலாம்

அதன் பின் சொல்வார்கள், இந்த முடிவு பொதுகுழுவின் முடிவு,

பொதுகுழுவினை கூட்டியது யார்?

பொதுகுழு செயற்குழு வழிகாட்டலில் நடந்தது

செயற்குழு யார் வழிகாட்டலில் நடந்தது?

அது தலைவர் வழிகாட்டலில் நடந்தது.

இதற்கு பொதுகுழுவினை கூட்டி தன்னை தலைவர் என அறிவிக்க, தலைவரே சொன்னார் என சொன்னால்தான் என்ன?

இதற்கு இவ்வளவு நாடகமா?


இளம் வயது கங்கை அமரன் ஒரு பாடல் எழுதினார் … வீரமணி ஜால்ரா போடுகிறார்…

Image may contain: 1 person, text

தமிழக திரையுலகில் குறிப்பிடதக்க கலைஞர் கங்கை அமரன், இளையராஜா எனும் சூரியன் முன் அவர் திறமை மங்கலாக தெரிந்திருக்கலாமே ஒழிய , மிக திறமையான கிராமிய கலைஞன்

அவரின் பல பாடல்களுக்கும், வைரமுத்துவின் பாடல்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது எனும் அளவிற்கு அவர் திறமை அபாரமானது.

அவருக்கும் அதிமுகவிற்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம்

இளம் வயது கங்கை அமரன் அக்காலத்தில் ஒரு பாடல் எழுதினார்

“நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சிண்ணே..” என வந்த பாடல் அது,

பாடல் பிரச்சினை இல்லை, அது வந்த காலம்தான் பிரச்சினை

அதாவது எம்ஜி ராமச்சந்திரன் ஆண்ட காலம், திரை துறையினை வைத்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் திரையுலகில் அவர் கண், காது, மூக்கு, அந்த பாதி தொண்டை, தொப்பி தலை என எல்லாவற்றையும் வைத்திருப்பார்

எப்படி அவர் படங்களில் திராவிட அண்ணா பாடல்கள் தாக்கம் தனக்கு அடையாளம் கொடுத்து போல இன்னொருவன் வந்துவிட கூடாது என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம்

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, நான் ஆணையிட்டால்” போன்ற பாடல்கள் தமிழகத்தில் ஒலித்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் அவர் ஆசை,

தேங்காய் சீனிவாசன் ஜால்ரா வசனங்களும் இருக்க வேண்டும்

பலர் எம்ஜிஆரை அண்ணன் என அழைத்துகொண்ட காலம், அங்கிள் என அழைக்கமால் அண்ணன் என அழைத்த காலம்,

இதில் “சிப்பாய் அண்ணே.., ஆளாக்கு நாட்டாமை, விலைவாசி கூடிப்போச்சி, செய்றதை செய்யுங்கள்” போன்ற வரிகள் எம்ஜிஆரை எரிச்சல் படுத்தின‌.

“”என் ஆட்சியில் இப்படி பாடல் வந்தால் மக்கள் என்னைபற்றி என்ன நினைப்பார்கள்” என சீரியசாக சிந்தித்தார் ராமசந்திரன்.

காரணம் அக்காலத்தில் இப்படியான பாடல்களை பாடித்தான் அவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார், கலைஞர்களின் பாடல் கலைஞர்கள் அறிவார்கள் அல்லவா?

அதுவும் ராமச்சந்திரன் மதுகடைகளை மறுபடி திறந்த காலம், அப்பாடலில் வேறு குடித்துவிட்டு பாடுவதாக இருந்தது (இன்றும் வெங்கட் பிரபு படங்களில் அந்த சாயல் உண்டு)

போதாதா எம்ஜிஆருக்கு, இது சமூகத்திற்கு கேடான பாடல் என கதையினை மாற்றி கங்கை அமரனை நிற்க வைத்தார், அதவாது ராமசந்திரன் ஆட்சியில் மது கடைகள் திறந்தது சமூக பொறுப்பு அதனை சினிமாவில் காட்டினால் சமூக சீர்கேடு

ஒன்றும் ஆச்சரியமல்ல, சினிமாவின் தாக்கத்தை எம்ஜிஆரை விட அனுபவித்தவர் யார்? அந்த அனுபவம்

கடும் விசாரணை கங்கை அமரன் மீது நடத்தபட்டது, ஒரு மாதிரி மிரட்டலில்தான் அவர் வீடுதிரும்பினார், புரட்சி தலைவரின் பொற்கால ஆட்சியில் இப்படி பெரும் வெகுமதி பெற்றார் கங்கை அமரன் எனும் கலைஞன்

அதன்பின் அப்படியான பாடல்களை அவர் எழுதவில்லை

புரட்சி தலைவர் அப்படி செய்தால், புரட்சி தலைவியும் ஏதும் செய்யவேண்டும் அல்லவா?

சசிகலா தன் சிறுதாவூர் வீட்டை மிரட்டி வாங்கினார் என ஜெயலலிதாவிடம் புகார் சொன்ன கங்கை அமரனுக்கு ஒரு நீதியும் கிடைகவில்லை, வீடு போய் சில வழக்குகள் வந்ததுதான் மிச்சம்

இப்படி புரட்சி தலைவரிடம் பாடல் சுதந்திரத்தையும், புரட்சி தலைவி ஆட்சியில் வீட்டையும் இழந்த கங்கை அமரன், இனி அடுத்த ஆட்சியில் எதனை இழப்போமோ என தெரியாமல் தன் ஆர்மோனியத்தை கெட்டியாக பிடித்துகொண்டிருக்கின்றார்

காரணம் அதிமுக தலமைகளுக்கும் அமரனுக்கும் உள்ள பூர்வ ஜென்ம தொடர்பு அப்படி.

சினிமா மூலம் அரசியலை கைபற்றியவர்களால் பின் வந்த சினிமாக்காரர்கள் எப்படி எல்லாம் அடக்கபட்டிருக்கின்றார்கள் என்பதற்கு கங்கை அமரன் பெரும் உதாரணம்

அவர் கதை வெளியே வந்தது, இன்னும் எத்தனைபேர் கதை வெளிவராமல் இருக்கின்றதோ?

இந்த அரசியலால் சினிமா இழந்த பெரும் கலைஞன் வடிவேலு.

தன்மான சிங்கம் டி.ஆர் இன்று தரைடிக்கெட் அளவிற்கு கவிழ்ந்து கிடப்பதும் அவ்வகையே.

அஜித் சசிகலா சந்திப்பு என சில செய்திகள் கண்ணாமூச்சி ஆடுவதும், அஜித் இதுவரை மூச் விடாமல் இருப்பதும் அவ்வகையே

முன்பாவது யாரும் மிரட்டினால், பொதுகூட்டத்தில் கலைஞர் முன்னால் “மெரட்டுராங்ங்ங்க்க அய்ய்ய்யாஆஆஅ” என சொல்ல அஜித்தால் முடிந்தது

இப்பொழுதுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அஜித்தால் அப்படி சொல்ல முடியும்?

ஒருவேளை அஜித் அப்படி சொன்னால் பன்னீர் என்ன செய்வார்??

இம்சை அரசன் வடிவேலு பாணியில் கண்ணீரை துடைத்து சொல்வார்

” என் இனமடா நீ.. அழக்கூடாது”


வீரமணி ஏன் சசிகலாவினை ஆதரிக்கின்றார் என சர்ச்சைகள்

வீரமணியின் அரசியல் மகா சிம்பிள் கணக்கு, ஆட்சியில் யார் இருக்கின்றார்களோ? அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு ஜால்ரா போட்டு பெரியார் சொத்துக்களை காத்துகொள்வது அவரின் அரசியல்.

இதனைத்தான் இத்தனை காலமும் செய்கின்றார், இனியும் செய்வார்

அன்று ஜெயாவினை “சமூக நீதி காத்த வீராங்கனை” என்றார், இனி சசிகலாவினை “சமூக நீதி காக்கும் சின்ன வீராங்கனை” என்பார், சின்ன போர்வாள் என்பார்

அதிமுகவினை ஆதரிப்பதும், அப்படியே பாஜகவினை ஆதரிப்பதும் ஒன்று என்பது இந்த வீரமணிக்கு தெரியாதது அல்ல‌

சசிகலா என்ன? நாளை சங்கராச்சாரியோ, பங்காரு அடிகளோ யார் ஆட்சிக்கு வந்தாலும் வீரமணி இப்படித்தான் சொல்வார்

அவனவன் தன் கையில் சிக்கியிருக்கும் சொத்துக்களை காக்க என்ன வேண்டுமானாலும் சொல்லும் உலகமிது..


 

இலங்கை தேநீரும், மலையக தமிழரும்…

இலங்கை தேநீருக்கு அப்படி ஒரு சுவை, தமிழரின் உழைப்பில் விளைவதாலோ என்னமோ எந்த பானமும் கொடுக்காத திருப்தியினை மலையக தேநீர் கொடுக்கின்றது

உலகில் மிக மோசமான அபலை வாழ்க்கை வாழும் தமிழர்கள், அந்த தேயிலை தோட்ட தமிழர்கள்

ஆனால் அவர்களின் நிலைபற்றி யாரும் பேசமாட்டார்கள், எந்த உணர்வாளனும் பேசமாட்டான், முழங்கமாட்டான்

சரி அவர்கள் உழைப்பின் தேநீரையாவது தமிழகத்தில் கிடைக்கவிடுவானா என்றால், அய்யகோ அது இலங்கை அரசுக்கு செல்லும் பணம் அதனால் புறக்கணிப்போம் என கிளம்புவார்கள்

அது தமிழுணர்வு, அதுதான் புரியாத தமிழ் தேசிய இம்சை

இதே மலையக தமிழர்கள் கொஞ்சம் செழிப்பாக இருந்திருந்தால் ஈழ சினிமா போல, கபாலி போல நிறைய படங்கள் வந்திருக்கும், ஆனால் பராரிகள் அல்லவா? யார் தேடுவார்கள்

அந்த மலையக தமிழரிலும் சில அடையாளங்கள் உண்டு, அந்த எஸ்டேட் தமிழர் வம்சத்தில் ஒருவர்தான் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

சிங்களர்கள் அவரை அரவணைத்தனர், அதனால்தான் முரளி சில இடங்களில் இலங்கையில் எந்த வேறுபாடும் என்னால் காணமுடியவில்லை என்றார், அது உண்மையும் கூட‌

கொஞ்சம் கவனித்தால் முரளிதரனை தென்னிலங்கை கொண்டாடியது, வட இலங்கையில் அவருக்கு பெரும் வரவேற்பெல்லாம் இல்லை இவ்வளவிற்கும் வடக்கேதான் தமிழர் அதிகம்

அந்த தேநீரை கையில் ஏந்தும் பொழுதெல்லாம் அம்மக்களின் அவல வாழ்க்கை கண்முன்னே வந்தே போகும்

மிக மிக பரிதாபத்திற்குரிய விதி அவர்களது.

சிங்களன், இந்தியா, தமிழர், ஈழம் என எல்லா தரப்பும் கண்டுகொள்ளாத, தமிழகம் கூட கண்டுகொள்ளாத ஒரு அபல வாழ்வு அவர்களுடையது

ஈழபிரச்சினை என உலகெல்லாம் ஒப்பாரி வைத்தாலும், மலையக பிரச்சினை என்பது வேறு, ஈழகுரல் அந்த குரலை அடக்கியே விட்டது

அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை என்பதுதான் சோகம்..

ஆனால் மிக மிக உறுதியாக சொல்லலாம் தேநீரில் மிக சிறந்தது இலங்கை தேநீர், மலையக தமிழர் உழைப்பால் உருவாகும் தேயிலை நீர்

வேறு எந்த நாட்டு தேநீரும் அதனை நெருங்க கூட முடியாது.

விசித்திரம் என்னவென்றால் அந்த தமிழர்கள் விளைவிக்கும் தேநீர் தமிழகத்தில் பெரும்பாலும் கிடைக்காது, அதுபற்றி பேசவும் மாட்டார்கள், இதுவும் ஒரு அரசியல்

இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு …

பரபரப்புக்கிடையே இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு

அப்பட்டமாக தெரிகின்றது சசிகலா பொதுசெயலாளராக போகிறார் என்று, இதில் என்ன பரபரப்பு வேண்டி இருக்கின்றது?

பெரும் எதிர்ப்புகள் ஏதுமில்லை,சிலர் கத்தி ஒன்றும் ஆகபோவதுமில்லை

கட்சி இப்பொழுது ஆட்சியில் உள்ளதால் சசிகலா என்ன? கோவை சரளா பொதுசெயலாளர் ஆனாலும் யாருக்கும் சிக்கல் இருக்காது.

அவர்களுக்கென்ன? யார் ஆண்டால் என்ன? இன்னும் 4 வருடம் சம்பாதிக்க வேண்டும், அதற்கு யார் காலிலும் விழ, அல்லது எந்த தலமைக்கும் தலைகொடுக்க அவர்கள் தயார்

ஒரு சில அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சி தாவ முடியாதபடி சட்டம் இருக்கின்றது, அதனால் அவர்கள் சிலிப்பிங் செல்களாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை

இனி அக்கட்சியில் ஒரு பரபரப்பும் இருக்காது, இப்படியே விட்டால் 4 வருடத்தினை கடத்தி விடுவார்கள்

ஆனால் சிக்கல் எங்கு வரும்?

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலோ, இப்படி அடிக்கடி பண குவியல் சிக்கினாலோ 356 போட்டு கலைத்துவிடுவார்கள்

அப்பொழுது தேர்தல் வருமல்லவா? அப்பொழுதுதான் இந்த தலமையினை ஏற்கமாட்டோம் என அடாவடியாக கிளம்புவார்கள், பல்டி அவர்களுக்கு புதிதல்ல‌

ஆக அக்கட்சியில் ஏதும் திருப்பம் நேரவேண்டும் என்றால் 4 வருடம் காக்க வேண்டும், அல்லது அதிரடி காரியங்கள் மத்திய அரசால் நடத்தபடவேண்டும்

செய்திகள் என்ன சொல்கின்றன?

அதிமுகவினருக்கு 1 சிங்கமும் 4 மாடுகளும் கதையினை சசிகலா சொன்னாராம் எல்லோரும் ஒழுங்காக கேட்டுவிட்டு சமத்தாக பொதுகுழுவிற்கு வந்துவிடுவார்களாம்

எல்லாம் ஆட்சி இருக்கு மட்டும், அதோ நிலாவில் வடை சுடுவது ஜெயலலிதா என்றால் கூட அதிமுகவினர் இப்பொழுது சமத்தாக கேட்டு கொள்வார்கள்

ஆட்சி இழந்தால் என்னாகும்?

சசிகலா இவர்களுக்கு கதை சொல்ல மாட்டார், இவர்கள் ஊடகங்கள் முன்னால் கதை சொல்வார்கள், என்ன கதை?

கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதை

அதிமுகவில் இணைவேன்: டி. ராஜேந்தர்

 

அழைப்பு வந்தால் அதிமுகவில் இணைவேன்: டி. ராஜேந்தர்

அதிமுகவில் இணையாமலே கங்கை அமரனின் வீடு வரை பிடுங்கினார்கள், இவரிடம் எதனை எல்லாம் பிடுங்க போகின்றார்களோ??

கவனமாக செல்லுங்கள் டி.ஆர் அங்கு ஏராளமான பிடுங்கிகள் உண்டு

ஆனாலும் ஒரே ஒரு சந்தேகம்

பொதுவாக வைகோவினை போட்டு தாக்குபவர் டி.ஆர், இன்றோ வைகோ இன்னும் சசிகலாவிற்கு பல்லாக்கு தூக்காதது தான் பாக்கி, இதில் எப்படி இருவரும் இணைந்தார்கள்??

என்னமோ

எம்ஜிஆரை எதிர்த்தவன், எம்ஜிஆருக்க அஞ்சாமல் தமிழகத்தில் இருந்த ஒரே திரைகலைஞன் நான் என சொடுக்குபோடும் டி.ஆர் இனி அந்த எம்ஜிஆர் படத்தின் முன்னால் அதிமுகவில் இணைந்தால் எப்படி இருக்கும்?

இதெல்லாம் டி.ஆருக்கு மறக்குமா? பின்னர் ஏன்?

“கருணாநிதியுடன் ஒரு கரடி மட்டும்தான் இருக்கின்றது” என டி.ஆர் கலைஞர் நட்பினை பகிரங்கமாக கலாய்த்தவர் எம்ஜிஆர், ஒருவேளை அதற்கு பழிவாங்கத்தான் அந்த கட்சிக்கு டி.ஆர் செல்வாரோ?