சீமான் அள்ளிவிடுவதில் ஆச்சரியமில்லை

மலேசியா, சிங்கப்பூர் அரசுகள் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கின்றன : கொதிக்கும் சீமான்

சீமான் அள்ளிவிடுவதில் ஆச்சரியமில்லை, அவர் அப்படித்தான்

மலேசியாவில் இந்தியர்கள் குறிப்பிட்ட இனம், மொத்த இந்தியருக்குமான விடுமுறையாக தீபாவளி அளிக்கபடுகின்றது

பத்துமலை தைபூசம் அக்கோயில் அமைந்திருக்கும் மாநில விடுமுறையே அன்றி மலேசிய தேசிய விடுமுறை அல்ல

ஆயினும் தமிழர்களுக்கான பிரதிநிதுத்தவமாக அது பார்க்கபடுகின்றது

குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழும் சீக்கியர்கள் குருநாணக் ஜெயந்தி விடுமுறை கேட்டபொழுது மலேசிய அரசு இசையவில்லை

ஆக மொத்த மலேசிய இந்தியருக்குமான ஒரே விடுமுறை தீபாவளி மட்டுமே

இதோ அங்கிள் சைமன் பொங்கிகொண்டிருக்கின்றார், மலேசியாவில் பொங்கலுக்கு விடுமுறையாம்

எவ்வளவு பெரிய பொய் இது

முன்பு மலேசிய தமிழர்கள் அப்படி கேட்டதாக சொல்வார்கள், பல இன மக்கள் வாழும்நாட்டில் குறிப்பிட்ட இனத்திற்கு பல விடுமுறைகள் அளிக்க சட்டமில்லை, தீபாவளி தைபூசம் போதும் என சொல்லிவிட்டார்கள்

சீமான் அங்கிருந்து எப்படி அளந்துவிடுகின்றார் பார்த்தீர்களா?

ஒரு மைக் கிடைத்துவிட்டால் உலகில் உள்ள எல்லா பொய் பேசும் ஆவிகளும் அன்னாருக்குள் புகுந்துவிடுகின்றன..

பொங்கலுக்கு உலகில் எந்த நாடும் விடுமுறை அளிப்பதில்லை என்பதுதான் உண்மை.

இவரோ ஐரோப்பாவில் தேசிய விடுமுறை, கனடாவில் விடுமுறை, வெள்ளை மாளிகையினை பொங்கலுக்கு வெள்ளையடித்தவன் தமிழன் அதனால் அது வெள்ளை மாளிகை எனும் ரேஞ்சிக்கு அள்ளி விடுகின்றார்

காரணம் எல்லா நாட்டிலும் வாழும் தமிழர்களோடு, தெலுங்கர் மலையாளி, சீக்கியர், வங்காளி என கலந்தே வாழுகின்றனர்

எங்கும் எந்த நாட்டிலும் தமிழர் மட்டும் வாழவில்லை.

தீபாவளிக்கு கொடுத்தால் சிக்கல் இல்லை

பொங்கலுக்கு கொடுத்தால் ஓணம், பைசாகி, சங்கராந்தி என வருடத்தில் பாதி விடுமுறையாகவே கழிந்துவிடும்

சீமானை போல வேலை வெட்டிக்கு செல்லாமல் வாழ்த்து தெரிவித்துகொண்டே இருக்கலாம் என அந்நாடுகள் அஞ்சுகின்றன..

ஒரு காலமும் சீமான் உண்மையினை பேசபோவதில்லை என சபதம் எடுத்தால் யார் என்ன செய்ய முடியும்?

‘அத்தையின் மருமகளே வருக… அம்மாவின் ஆட்சியைத் தருக’

deepa

‘அத்தையின் மருமகளே வருக… அம்மாவின் ஆட்சியைத் தருக’

இப்படி தீபாவினை பேனர் வைத்துவரவேற்கின்றார்களாம்

இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தபொழுது “நேருவின் மகளே வருக..நிலையான ஆட்சி தருக” என வரவேற்றார் கலைஞர்

அதனை இன்று அதிமுகவினர் தீபாவிற்கு காப்பியடித்துள்ளார்கள்

இப்படியா கலைஞரை காப்பியடிப்பீர்கள்?

கலைஞருக்கு நன்றி என சொல்லிவிட்டு காப்பியடித்திருக்க கூடாதா?

அவரை நன்கு படியுங்கள், தீபாவிற்கு எழுத இன்னும் ஏராளமான நல்ல வசனங்களும், அடைமொழிகளும் கிடைக்கும்

அதிமுக காரர்களுக்கே கலைஞர்தான் கைகொடுக்கின்றார் 🙂

எருமை மாட்டு பொங்கல் .. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்..

பொங்கலுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்ல கிளம்பியாயிற்று..

எருமை மாட்டு பொங்கல் வாழ்த்து ஏதும் உண்டா? என தெரியவில்லை.

அப்படி இருந்தால் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அவர்களின் அதீதீவிர அடிமைகளுக்கும் தெரிவிக்க வேண்டியது தமிழர்களின் கடமை

அப்படி எருமை பொங்கல் வாழ்த்துகுரியவர்கள் பல பேர் இருக்கின்றார்கள்.

“முதல்” எருமை பொங்கல் வாழ்த்து யாருக்கு சொல்லவேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியது அல்ல‌


பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிகளும் அறிவிக்கின்றன‌

ஒரு டிவியாவது விவசாயி ஏன் சாகிறான்? அவனுக்குள்ள பிரச்சினை என்ன என ஒரு நிகழ்ச்சியும் செய்யவில்லை

கால்நடை வளர்ப்பிலுள்ள சிக்கல் என்ன என ஒரு நிகழ்ச்சியும் மாட்டுபொங்கலிலும் இல்லை

மாறாக‌

எங்கிருந்தோ தமிழகம் வந்து சினிமா தொழில் செய்ய்யும் நடிகைகள், விவசாயம் அறவே அறியா கூட சரியாக தமிழே தெரியாத நடிகர்களோடு பொங்கல் கொண்டாடுமாம்.

தமிழே தெரியாத நடிகைகள் எல்லாம் தமிழனுக்கு “ஹேப்பி பொங்கல்” வாழ்த்து சொல்லி, தன் திரை அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து விவசாயி வாழ்வு செழிக்க பாடுபட போகின்றார்களாம்

இப்படி இருக்கின்றது தமிழனின் பொங்கல் கொண்டாட்டம்..

இந்த அநியாயத்தை கேட்க தமிழகத்தில் யாருமே இல்லை.

இவர்கள்தான் மத்திய அரசிடம் இருந்து தமிழன் கலாச்சாரத்தை காப்பாற்ற போகின்றார்களாம்

முதலில் தமிழனின் கலாச்சாரத்தை இம்மாதிரி டிவிக்களிடமிருந்து முதலில் காப்பாற்ற வேண்டும்


உலகில் முன் தோன்றிய‌ மூத்த குடி அல்ல..

விவசாயி செத்துகொண்டிருக்கின்றான், விவசாயம் அழிந்துகொண்டிருக்கின்றது

விவசாயம் என்றால் என்ன என தெரியாதவனெல்லாம் விவசாயி பண்டிகையான‌ பொங்கலுக்கு போராட்ட பொங்கல் வைத்துகொண்டிருக்கின்றான்

மாநில அரசு தூங்கிகொண்டிருக்கின்றது

மணல் கொள்ளையே நிலத்தடி நீர்மட்டம் நாசமாகி விவசாயி தற்கொலைக்கு முதல் காரணம் என்கின்றது ஒரு செய்தி

மணல் கொள்ளையர்கள் யாரென்றால் இதே அரசியல்வாதிகள்..

ஆக விவசாயி செத்தாலும் கண்டுக்கொள்ளாதவர்கள் அவன் பண்டிகைக்கு மட்டும் கொடிபிடிப்பார்களாம்

எல்லாம் அரசியல், எவன் செத்தாலும் அதில் நடக்கும் அரசியல்,

ஈழ பிணங்களின் மீது கொஞ்சகாலம் நடந்த அரசியல் இன்று தமிழக விவசாயி பிணத்தின் மீதும் நடக்கின்றது.

ஏதோ எல்லோரும் உழுது விளைவித்து பொங்கல் கொண்டாட தயாரானது போல பொங்கி எழுந்துகொண்டிருக்கின்றார்கள்

தக்காளி கிலோ 50 பைசா கூடினாலும் வாங்காதவன், அது கிலோ 1 ரூபாய்க்கு வந்தபொழுதும் விவசாயினை ஆதரிக்காதவன் எல்லாம் பேசிகொண்டிருகின்றான்.

1 லிட்டர் தண்ணீர் 50 ரூபாய்க்கு விற்கும் மாநிலத்தில் எப்படி விவசாயிக்கு நீர் கிடைக்கும் என்று யோசிக்காதவன் எல்லாம் கத்திகொண்டிருக்கின்றான்

அவன் பண்டிகை மீதும் நடக்கின்றது

உணவுபொருள் எல்லாம் சல்லி விலையில் கிடைக்க வேண்டும், உழவனும் வாழவேண்டும் என்றால் எப்படி?

எந்த சக்தி உழவனை காக்கும்?

வியாபாரிகள் சுரண்டி கொழுப்பது உண்மை, சரி அந்த வரியிலாவது உழவனுக்கு ஒரு மானியம் கொடுத்தால் அவன் ஏன் சாவான்?

விளைபொருளுக்கு விலை இல்லை என உழவன் புலம்பினால், உன் பொருளை நீயே விற்றுக்கொள் என சொல்லி, அவனுக்கு சந்தை கொடுத்து காம்பவுண்ட் சுவற்றில் வசனமெல்லாம் எழுதினார்கள்

எப்படி அருமையான திட்டம்?

100 மூடை கத்தரிகாயினையோ, 300 வாழைகுலையினையோ அவன் அந்த சிறு சந்தையில் விற்க முடியுமா?

அட அவன் விவசாயம் பார்ப்பானா? அதிகாலை இங்கு வந்து வியாபாரம் பார்ப்பானா?

இப்படிபட்ட மகா அருமையான திட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் தீட்டபட்டன‌

குளங்கள் கட்டடம் ஆயின, வயல்கள் எல்லாம் கார் நிறுத்துமிடம் ஆயின‌

ஆனால் இவர்கள் வருடாவருடம் பொங்கல் கொண்டாடுவார்கள், தமிழர் பாரம்பரியம் அல்லவா?

விவசாயி பண்டிகையினை அவனை தவிர எல்லோரும் கொண்டாடுவார்கள் போல‌

அவன் கத்தி கத்தி பார்த்துவிட்டு கோவணமுமின்றி செத்துகொண்டிருக்கின்றான்

இவர்கள் அவனுக்கு பண்டிகையினை கொண்டாட போராடுகின்றார்களாம்..

விசித்திரமான தமிழினம் இது

இது உலகில் முன் தோன்றிய‌ மூத்த குடி அல்ல, உலகில் முதலில் கெட்டுகொண்டிருக்கும் குடி

இதனை விட கெட்டுபோன குடி உலகில் ஒன்றுமே இல்லை

விவரம் கெட்ட கட்சி இந்த பாரதீய ஜனதா

சுத்தமாக விவரம் கெட்ட கட்சி இந்த பாரதீய ஜனதா, அதுவும் தமிழக பாஜக மகா மோசம்

தமிழகத்தில் நுழையும் வழியோ, அரசியல் செய்யும் வழியோ சுத்தமாக தெரியவில்லை, சரி தமிழக அரசியலை குழப்பியாவது விடலாம் அல்லவா? அந்த சாதுரியமும் இல்லை

எதனையோ செய்கின்றோம், கட்சி வளர்க்கின்றோம் என இவர்கள் எதில் போய் நிற்கின்றார்கள் தெரியுமா?

ஒவ்வொரு தமிழனையும் பெரியாரை தேட சொல்கின்றார்கள், இவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழகத்தை பெரியார் பக்கம் தள்ளுகின்றது.

இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே பரணில் தூங்கிகொண்டிருந்த பெரியார் கொள்கைகள் தூசுதட்டபடுகின்றன‌.

ஏன் பெரியார் எழுந்தார்? வடக்கத்திய ஆதிக்கம் எப்படியானது? ஏன் அவர் தென்னாடு வேண்டுமென்றார்? அவர் ஏன் நமக்கும் அவர்களுக்கும் பொருந்தாது என்றார்?

அவர் ஏன் மதம் வேண்டாம் என்றார்? அவர் ஏன் சாதி வேண்டாம் என்றார்? ஓஓஓ இதற்குத்தானா? இவ்வளவு கொடுமை நடந்ததா?

இதனால்தான் அவர் போராடினாரா?, இதனால்தான் கடவுள் இல்லை என சொல்ல துணிந்தாரா? அவரிடமும் நியாயம் இருந்திருக்கின்றது என பலர் பேச தொடங்கியாயிற்று.

அப்பக்கம் அந்த ஆதிக்கம் பெருகினால் இப்பக்கம் பெரியார் கொள்கையினை தவிர சமபடுத்த வழியில்லை எனும் அளவிற்கு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்

கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் தமிழர் மனதில் விழிக்கின்றார்.

இவர்கள் இப்படியான காரியங்களை செய்ய செய்ய பெரியார் கொள்கைகள் இன்னும் வீறுகொண்டு எழும்

அந்த பெரியாரை மறுபடியும் தமிழகம் முழுக்க நிரப்பும் வேலையினை பாஜக செய்கின்றது

பெரியாரின் வாரிசு என சொல்லிகொள்ளும் வீரமணி, திமுக போன்ற கட்சிகள் செய்ய முடியாத “பெரியார் எழுச்சியினை ” இப்பொழுது பாஜக செய்துகொண்டிருக்கின்றது.

பெரியாரை ஆளவைக்கும் பொறுப்பினை இப்பொழுது பாஜக ஏற்றிருக்கின்றது, அதற்காக கடுமையாக உழைத்துகொண்டும் இருக்கின்றது..

நீ ரசத்தை ஊத்து புள்ள … : விஜயகாந்த்

Image may contain: 1 person, sitting, eating, table, food, outdoor and indoor

இனி கவலைபட்டு என்னாக போகுது புள்ள‌, எல்லாம் அந்த வைகோ பயலால வந்த வினை

இப்படி தலையில துண்ட போட்டுட்டு போயிட்டான…

இப்போதைக்கு ஒரே ஆறுதல் அதிமுகவுல சேர்ந்த நம்ம கட்சிகாரங்கள நினைச்சித்தான், பயபுள்ளைக‌ கொஞ்சமா பாடுபட்டுட்டு இருப்பாங்க, அத நினைச்சி கொஞ்சம் சிரிச்சிக்குறேன்..

உன்ன கும்பிடமாட்டேன்னு சொன்ன பண்ருட்டி அங்க போய் சசிகலா கால்ல விழுந்து கிடக்காரம் புள்ள..

சசிகலாவ விட நான் நல்லாத்தான் பேசுறேன்னு சிலர் சொல்லிகிட்டாங்களாம்…

அங்க தனியா நின்னு சாப்ப்டுறவங்க மேல கண்ணு வச்சிக்கணும் , ஆனா இப்போ அவனுகளால எந்த கட்சிக்கும் போக முடியாது புள்ள‌

நீ ரசத்த ஊத்து புள்ள….

கரும்புச்செய்திகள்….

விரைவில் கரும்பினை சீனி தயாரிக்கும் பொருள், மக்கள் கடிக்க அனுமதி இல்லை எனும் வகையில் மத்திய அரசு சேர்த்துவிட்டது, தமிழனுக்கு கரும்பு கடிக்க உரிமை இல்லை என்ற வதந்தி வந்தாலும் வரும்

உடனே நம் தலைவர்கள் எல்லாம் கையில் கரும்போடு காட்சி அளிப்பதை காணலாம்.

கரும்பு மன்மதன் வில் என்பார்கள், அப்படியானால் நம் தலைவர்கள் நிற்பது மன்மத கோலம் என்றாகிவிடும்

அதுவும் அங்கிள் சைமன் தடையினை மீறி கையில் கரும்பு வில்லோடு மன்மதகோலத்தில் நிற்கும்பொழுது அவர் மனைவிக்கே நடிகை விஜயலட்சுமி நினைவு வந்துவிடும்

பட்டினத்தார் கோலத்திலும் கரும்பு உண்டு

பட்டினத்தார் எனும் தமிழ் துறவியும் வாழ்வின் நுனி இனிப்பு, முடிவு கசப்பு என்ற தத்துவத்தோடுதான் நிற்பார்,

ஆனால் கோவணத்தோடு நிற்பார் என்பதால் நம் தலைவர்கள் அந்த அளவிற்கு செல்லமாட்டர்கள்

உடை அலங்காரத்தில் எப்பொழுதுமே நம் தலைவர்கள் பாணி தனி என்பதால் பட்டினத்தார் கோலமெல்லாம் வராது.

ஆக எவனாவது கரும்புக்கு தடை என கொளுத்திபோட்டால் நம் தலைவர்கள் எல்லாம் மன்மத கோலத்தில் கரும்போடு நிற்பார்கள்.

சில தலைவர்களின் உண்மையான கோலமும் அதுதான்..


எங்கள் கிராமத்து திருவிழாவிற்காக தமிழகம் முழுக்க “கட்டாய விடுமுறை” விடுமாறு தமிழக
அரசினை எச்சரிக்கின்றோம்

இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும்.

நாங்கள் ஆணையிட்டால் பொங்கல் பொங்காது, மாடுகள் மேயாது

ஏய் பார்ப்பன மத்திய அரசே உங்களுக்கும் அதுவே எச்சரிக்கை

கட்டாய விடுமுறை அளிக்கபடாவிட்டால் விஏஓ அலுவலகம் முன் பெரும் போராட்டம் நடத்துவோம்..

வேலை வெட்டி இல்லாதவர்களை அழைத்துகொண்டு, வேலை இருப்பவர்கள் விடுமுறை எடுத்து விடுமுறை வேண்டி போராட்டம் நடத்துவோம் என வன்மையாக எச்சரிக்கின்றோம்

விடுமுறை வேண்டி போராட விடுமுறை எடுப்பவர்களுக்கு , சம்பளத்தோடு கூடிய விடுமுறை கொடுத்துவிடுங்கள் என்றும் கேட்டுகொள்கின்றோம்..