உலகினை உலுக்கிய காட்சிகளில் இதுவும் ஒன்று

Image may contain: 1 person, smiling, sky and outdoor

உலகெல்லாம் உள்ள நாம் தமிழர் கட்சியினர் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்திய காட்சி..

உலகினை உலுக்கிய காட்சிகளில் இதுவும் ஒன்று

 காணொளியை பார்த்து கேட்டு மகிழவும்…..

பாரத மாதா கோயிலை பிரதமர் திறந்து வைக்கிறார்…

குமரியில், இன்று மாலை 5 மணிக்கு காணொளி காட்சி மூலம், பாரத மாதா கோயிலை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.

கட்டியிருப்பது பாரதமாதா கோயில், ஆனால் அமைந்திருப்பது விவேகானந்தா கேந்திர நிலத்தில்.

பாரத மாதா கோயிலை பிரதமர் திறக்கும் நிகழ்வில் தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்போ , தகவலோ வந்ததாக தெரியவில்லை

அழைக்காவிட்டாலும் பன்னீர் செல்பவர்தான், ஆனால் போவதாகவும் செய்தி இல்லை

ஆக அப்படி ஒரு நபர் சென்னையில் இருப்பதாகவே மத்திய அரசு நினைக்கவில்லை.

இதனை விட தமிழகத்திற்கு பெரும் அவமானம் சமீபத்தில் இல்லை

சரி இந்த அவமானத்தில் பன்னீர் தன் அமைச்சரவையோடு ராஜினாமா செய்துவிட்டு கிளம்பிவிடுவாரா?

அவ்வளவு மானமுள்ள அரசியல்வாதிகளாக அவர்களை பார்த்தால் தெரியவில்லை.

மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்:ஜெயா , அவர் சொத்தும் மக்களுக்கே

மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என முழங்கிய ஜெயாவின் சொத்துக்களை தமிழக மக்களுக்கே கொடுப்பதுதான் நியாயம்

அம்மா என்று அழைத்த தமிழ்மகனே அந்த சொத்துக்களுக்கு எல்லாம் உரிமையுடையவன்

இப்படியான கோரிக்கைகள் இப்பொழுது தமிழகத்தில் வலுபெறுகின்றன‌

கொடநாட்டு பங்களாவின் ஒரு அறையினையாவது பிடித்துகொள்ளவேண்டும் என பல தமிழர்கள் கனவில் இருக்கின்றார்களாம்

அம்மா , அம்மா என அழைத்த தமிழனுக்கு அவர் சொத்து வந்தால்தான் அந்த அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பது அவர் பிள்ளைகளின் எண்ணம்

நாம்தான் அம்மாவின் பிள்ளைகள் என முன்பே சி.ஆர் சரஸ்வதி சொல்லியிருப்பதையும் அடிக்கடி தமிழர்கள் நினைவு கூறுகின்றார்கள்

அதனால் ஜெயா சொத்துக்களை தமிழருக்கே …

அதானே, அம்மாவிற்கு மன்னார்குடி குடும்பம் மட்டும்தான் வோட்டு போட்டிருக்கின்றதா?

ஆக அம்மா சொத்து சசிகலாவிற்கும் அல்ல தீபாவிற்கும் அல்ல எல்லாம் தமிழகத்திற்கே..

வள்ளுவனின் உயரிய சொத்தும், கம்பனின் சொத்தும், பாரதியின் சொத்துமே தமிழக உடமையாகும்பொழுது,

எத்தனையோ தமிழக மாமன்னர்களின் மாளிகை தமிழக அரசுடமையாகும் பொழுது

அம்மா சொத்து தமிழக உடமை ஆக கூடாதா?

அரசர்கள் கட்டிய கோட்டை, மாளிகை முதல் வெள்ளையன் கட்டிய கோட்டை, ரிப்பன் பில்டிங் வரை அரசுடமையாகும் பொழுது

அம்மா கட்டிய போயஸ் வீடும், கொடநாடு மாளிகையும் இன்ன பிற கொத்தளங்களும் எப்படி தனியார் சொத்து ஆகும்

அரசர், வெள்ளையர், வரிசையில் அரசவாழ்க்கை வாழ்ந்த ஜெயா சொத்துக்களை தமிழக உடமை ஆக்குவதே அந்த பெரும் அரசர்கள் வரிசையில் ஜெயலலிதாவினை அமரவைக்கும் உன்னத செயல்

ராணி மங்கம்மாளுக்கு பின் தமிழகத்தை செழிப்புற ஆண்ட ஜெயாவிற்கொரு மாளிகை வேண்டாமா? மங்கம்மாள் போல ஜெயாவின் பெயர் வரலாற்றில் நிறக் ஒரு மாளிகை வேண்டாமா?

நாயக்கர் மஹால், செஞ்சி அரண்மனை, தஞ்சாவூர் அரண்மனை வரிசையில் கொடநாடும், சிறுதாவூரும் இடம்பெறட்டும்.

அவரின் மற்ற நிறுவணங்களின் பங்கு அவர் மிகவும் நேசித்த தமிழ்க விவசாயிகளின் நிவாரணம் ஆகட்டும்.

அம்மா மக்களுக்காக தவ வாழ்வு வாழ்ந்தார், தன் சொத்துக்களை எல்லாம் தமிழருக்கே கொடுத்தார் எனும் செய்தி வரலாற்றில் நிற்கட்டும்…

அம்மா இப்படி உண்மையிலே மக்களுக்காக வாழ்ந்தார், மக்களுக்கே கொடுத்தார் என்பதை நிரூபிக்கவேண்டிய அவசியம் அக்கட்சிக்காரனுக்கு இருக்கின்றது..

வாழ்க அம்மா நாமம்..

புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார் என் கணவர் : சௌமியா அன்புமணி ..

anb

சௌமியா – அன்புமணி

“புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார் என் கணவர்” ‍ அன்புமணி ராமதாஸ் குறித்து மனைவி சவுமியா

அட அவர் அதற்கு மட்டுமா காத்திருப்பார்?, மத்தியில் ஏதும் கூட்டணி குழப்பம் வராதா? 4 எம்பிகொடுத்து பசையான துறை வாங்கமுடியாதா என்று காத்திருப்பார்

தமிழகத்தில் குழப்பம் வந்து பாமக 30 சீட் வாங்காதா? என காத்திருப்பார்

எங்காவது வன்னிய தலித் மோதல் வந்தால் கருத்து சொல்லவும் காத்திருப்பார்.

அப்பா சவால்விட்டதை மறந்து ஏதும் கூட்டணியில் தங்களை சேர்க்கமாட்டார்களா?, அப்பாவிற்கு நினைவு தப்பினால் நாளையே ஒரு கூட்டணியில் சேரமுடியாதா? என்று கூட காத்திருக்கலாம்..

இப்படி ஏகபட்ட விஷயங்களுக்காக காத்திருக்கும் ஒருவர், புடவை கடையில் காத்திருந்தால் பெரிய விஷயமா?

இந்தி எதிர்ப்பு போராட்டமும், இன்றைய ஜல்லிக்கட்டு போராட்டமும் …

Image may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, crowd, meme and text

ஜல்லிகட்டினை காக்க தமிழகம் முழுக்க இளைஞர்கள் எழுகின்றார்கள், போராட்டம் நடத்துகின்றார்கள்

முன்பு இப்படி இந்தியினை விரட்டி தமிழைகாக்க கிளம்பினார்கள், இதனைவிட மிக வீரியமான போராட்டம் அது, தற்கொலைகள், ஏராள பலிகள், 65 பேர் துப்பாக்கி சாவோடு அது முடிந்தது.

அப்படி ஒரு எழுச்சி இனி தமிழகத்தில் நடக்காது, அப்படி ஒரு போராட்டம் இனி தமிழகம் காணாது.

சரி அப்படிஎல்லாம் போராடி இந்தியினை விரட்டி, தமிழை எப்படி காத்துவிட்டோம்

இந்தி இன்று மெதுவாக வந்துவிட்டது, பகிரங்கமாகவே தமிழகத்தில் பாடம் நடத்துகின்றார்கள்

தமிழை எப்படி காத்துவிட்டார்கள்? தொலைகாட்சி தமிழே போதும்

அதாவது உணர்ச்சி வேகத்தில் போராட்டங்கள் நடத்துவதோடு சரி, அதன்பின் எதற்காக போராடினோம்,அதன் விளைவு எப்படி இருக்கின்றது என சிந்திப்பவன் அல்ல தமிழன்

அப்படி தமிழை காப்பாற்றிவிட்டவன் போல இப்பொழுது தமிழ்காளைகளை காக்க கிளம்பிவிட்டான்

தடை நீங்கினால் கொஞ்ச காலத்தில் தானாகவே ஜல்லிகட்டு நின்று போனாலும் அவன் கவலைபடமாட்டான்,

அன்று மொழிப்போர் என எத்தனை உயிர்களை தமிழுக்காக கொடுத்துவிட்டு, இன்று தமிழகம் ஆங்கில பள்ளிகளால் நிறைந்து, தமிழ் சுத்தமாக கெட்டு மறைந்துகொண்டிருப்பதை பற்றி எப்படி அவன் கவலை படவே இல்லையோ

அப்படி போராடி பெற்ற ஜல்லிகட்டு தானாக நின்றாலும் அவன் கவலைபடமாட்டான்

அவன் சுபாவம் அப்படி..


ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது : சுப்ரீம் கோர்ட்

உடனடியாக தீர்ப்பு சொல்லி யார் கேட்டார்கள்?

குற்றவாளிக்கு கூட பெயில் வசதி சட்டத்தில் உண்டு,

அப்படி பெயில் முறையில் ஜல்லிகட்டு நடத்திவிட்டு வருகின்றோம், தீர்ப்பினை 6 மாதம் கழித்து சொல்லுங்கள் ஒன்றும் பிரச்சினை அல்ல.

நடத்தலாமா? வேண்டாமா? என தீர்ப்பில்தானே சொல்வீர்கள், அதற்கு முன் நாங்கள் விளையாடிவிட்டு வந்துவிடுகின்றோம்..

வழக்கு முடியும் வரை குற்றவாளியினை உள்ளேயா வைத்தீர்கள்?

அப்படியானால் சசிகலா முதல் கனிமொழி, தயாநிதி மாறன் வரை வெளியே சுற்றமுடியுமா?

அப்படி வழக்கு முடியும் வரை ஜல்லிகட்டு விளையாட எங்களையும் அனுமதியுங்கள்..

சரி கன்னடன் உங்கள் உத்தரவினை அணையில் வீசினானே என்ன செய்தீர்கள் என்றா கேட்டுவிட்டோம்?

அப்படி எல்லாம் கேட்க மாட்டோம்


ஜல்லிக்கட்டுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்??

Image may contain: one or more people and outdoor

எத்தனை நூறு விளையாட்டுக்கள் தமிழகத்தில் இருந்தன, எம்மாதிர்யான கலாச்சாரம் பழக்கவழக்கம் எல்லாம் இருந்தன, எத்தனை கலைகள் இருந்தன‌

இயற்கைசார் தொழிலும், விளையாட்டும் எவ்வளவு இருந்தது?

அவை எல்லாம் ஒவ்வொன்றாக மறைந்துதான் வந்தது.

யானையினை பழக்குதல் என்றொரு பெரும் தொழில் அன்று இருந்திருக்கின்றது இன்று உண்டா?

குதிரையினை அவிழ்த்துவிட்டு அதனை அடக்கி அதன்மேல் ஏறுவது யார் எனும் விளையாட்டு அலெக்ஸாண்டர் காலதிலிருந்து சோழன் காலம் வரை இருந்திருக்கின்றது இன்று உண்டா?

இந்த ஜல்லிகட்டு இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் மறைந்துதான் தீரும்

காலம் அவ்வளவு வேகமாக மாறிகொண்டிருக்கின்றது, ஒரு வேளை ஆலயங்களின் பாரம்பரியத்தில் ஒன்றாக இருந்திருந்தால் அது கொஞ்சகாலம் தொடர்ந்து வரலாம், திருவிழா காலங்களில் அது நடக்கலாம்.

கேரள ஓண யானைகள் அணிவகுப்பு அப்படித்தான் ஆலயங்கள் முன் நடக்கின்றது

பண்டைய கலைளான சிற்பம்,மேளம், கரகம் இன்னபிற தமிழக அடையாளங்களை காத்து நிற்பதே இந்த தமிழக ஆலயங்கள்தான்

அந்த ஆலயங்களும் திருவிழாக்களும் இல்லை என்றால் இவை எல்லாம் எப்பொழுதோ விடைபெற்றிருக்கும்

தமிழக கலாச்சாரங்கள் இன்று ஆலயங்களினால்தான் காக்கபடுகின்றன. ஜல்லிகட்டு ஆலயம் சார்ந்ததாக இருந்திருந்தால் இன்று அசைத்திருக்க முடியாது

பின்னாளில் பல அடையாளங்கள் அழிந்துபோகலாம் என்று அந்த கலைகளை ஆலயத்தோடு முடிச்சுபோட்டுவிட்டு சென்ற தமிழக முன்னோர்களை ஆச்சரியமாக நினைக்க வேண்டி இருக்கின்றது

என்ன காரணத்தினாலோ ஜல்லிகட்டை ஆலயங்களோடு முடிச்சு போட முந்தைய சமூகம் தயங்கியிருக்கின்றது, ஏன் என தெரியவில்லை

ஆலயங்களோடு தொடர்புடைய கலைகளும், விளையாட்டும் இன்றளவும் அழகாக தொடர்ந்து வருகின்றன,

ஆலயம் தொடர்பில்லா கலைகளும், விளையாட்டும் தமிழ் மண்ணிலிருந்து விடைபெற்றுவிட்டன‌

கவனித்துபார்த்தால் உங்களுக்கே புரியும்

தமிழக ஆலயங்கள் வெறும் ஆலயங்கள் அல்ல, தெய்வங்களை தவிரவும் அவை காத்து நிற்பது ஏராளம் உண்டு.

தீப விளக்குகள் மணிகள் போன்ற அடையாளத்தையும், சந்தணம், பன்னீர், குடம் இன்னும் பல பண்டைய தொடர்புகளையும் ஆலயம் தவிர எங்கு காணமுடியும்?

வெண்கலம், வெள்ளி இன்னபிற உலோக பயன்பாடுகளை ஆலயங்களிலன்றி எங்கு காண்பீர்கள்? மாலை தொடுத்தல் , பூ அலங்காரம், கற்பூரம் என ஏகபட்ட கலாச்சார தொடர்ச்சிகளை ஆலயத்தில்தான் காணமுடியும்

ஆலயங்களும், இந்துமதமும் இல்லை என்றால் இவை எல்லாம் என்றோ அழிந்திருக்கும்.

நாதஸ்வரமும், தவிலும் இன்னபிற தமிழன் இசைகருவிகளும் ஆலயங்களும் மதமும் இல்லை என்றால் என்றோ வங்ககடலில் வீசபட்டிருக்கும்…

தமிழக கலாச்சாரம் சர்வ நிச்சயமாக ஆலயங்களில் வாழ்கின்றது, அவை இருக்கும்வரை தமிழன் கலாச்சாரம் அழியாது.

இன்னொரு கோணத்தில் விவசாயம் கால்நடைகள நம்பி மாட்டுவண்டி, உழவு என சகலத்திற்கும் காளைகளை நம்பி இருந்தால் கூட ஜல்லிகட்டு தொடர ஓரளவு சாத்தியம்

ஆனால் அப்படி அல்ல எல்லாம் மிஷினாகிவிட்டது

ஆக தனி விளையாட்டான ஜல்லிகட்டு காலவோட்டத்தில் மறைந்தே போகும். நிச்சயம் நடக்கும்

4 தலைமுறைகளுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அது கைவிடபடும், அடுத்த 30 ஆண்டுகளில் அது நின்றுபோகும்.

ஒரு காலத்தில் தமிழகமெங்கும் நடந்த விளையாட்டு பின் மதுரை வட்டாரத்தில் குறுகிபோயிற்று, இந்த தடை இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது அழிந்துதான் போகும்

உலகம் அவ்வளவு அவசரகோலமாக மாறிகொண்டிருக்கின்றது, மக்களின் வாழ்வியல் முறையே மாறிகொண்டிருக்கின்றது, மிக வேகமாக மாறிகொண்டிருக்கின்றது

தானாக வருங்காலத்தில் நின்றுபோகும் விளையாட்டிற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்..

ஜெயா ஒரு மர்மம், சசிகலா பெரும் மர்மம், இந்த தீபா புது மர்மம்

Image may contain: 1 person, selfie and close-up

வாரிசு இல்லாதவரின் சொத்துக்கள் அவரின் உறவினர்களுக்குத்தான் செல்லும்

உறவினர்கள் வேண்டாம் என்றால் அரசுக்குத்தான் செல்லவேண்டும்

இங்கோ ஜெயா சொத்துக்கள் எல்லாம் சசிகலாவிற்கு செல்கின்றது, இவ்வளவிற்கும் ஜெயா உயில் எழுதவுமில்லை, போயஸ்கார்டன் வீடு கட்சி அலுவலகம் எல்லாம் யாருக்கு? என சொன்னதுமில்லை

பின் எப்படி அது இவர்கள் கைவசம் வந்தது? இது ஒருவகையான ஆக்கிரமிப்பு

தீபா என ஜெயாவின் அண்ணன் மகள் வந்து பரபரப்பு கூட்டுகின்றார், அவரை பலர் வந்து வணங்கி “வழிகாட்ட வா” என கதறுகின்றனர்

சரி இந்த தீபாவாது ஜெயா என் அத்தை, அவருக்கு பின் அத்தையின் வீட்டை சசிகலா என்றொரு தத்தை அபகரித்துகொண்டது என நீதிமன்றம் சென்றால் என்ன?

அப்படி சென்றால் போய்ஸ் வீடு தானாக இவருக்கு வரும், இன்ன பிற சொத்துக்களும் வரும்.

ஆனால் தீபாவிற்கு எல்லா உரிமையும் உண்டு, ஆனால் செய்யவில்லை ஏன்?

அவர் மட்டுமே மிகுந்த உரிமையோடு நீதிமன்ற கதவினை தட்ட முடியும், சட்ட பலம் அவருக்கே உண்டு

நாங்கள் எல்லாம் அம்மா என அழைத்தோம் அதனால் ஆத்தா சொத்து மகனுக்கு என சாதாரண தொண்டன் செல்ல முடியாது.

அவர் தட்டலாம், நீதிமன்ற துணையோடு சசிகலாவினை விரட்டலாம்

அவரோ யாரோ போல ஒதுங்கி நிற்பது மகா மர்மம்.

சரி அத்தை சாவில் மர்மம் உண்டு என்றாவது நீதிமன்ற கதவை தட்டினால் என்ன? செய்யவில்லை

ஜெயா ஒரு மர்மம், சசிகலா பெரும் மர்மம்,

இந்த தீபா புது மர்மம்

ஒருநாளும் அதிமுக மர்மங்கள் தீருவதே இல்லை..