எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா…

ku

குஷ்பு படங்களை ஒளிபரப்பாத டிவிக்களை வன்மையாக கண்டித்துவிட்டு,

அவர் நடித்த பாடலான “பூ பூக்கும் மாதம் தை மாதம்” எனும் பாடலை மட்டும் இரு நாட்கள் பார்ப்பதாக முடிவு

இதனை விட எப்படி பொங்கலை கொண்டாட முடியும்?


எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றார்களாம், அதனால் சில டிவிக்களில் அவர் படமாக போட்டு தள்ளுகின்றார்கள்

அதுவும் ஜெயலலிதா நடித்த படமாகவே பொறுக்கி எடுத்து போடுகின்றார்கள், சில படங்களில் வி.என் ஜாணகியும் தலைகாட்டுகின்றார்

ஆக அக்கட்சியின 4 முதல்வர்களில் (நெடுஞ்செழியன் கணக்கில் வரமாட்டார்) மூன்றுபேர் நடிகர்கள், சுருக்கமாக சொன்னால் அதுதான் கட்சிபணி

அதாவது நடித்துவிட்டே முதல்வராகவேண்டும் என்பது அக்கட்சியின் மகா முக்கிய தகுதிகளில் ஒன்று.

இந்த பன்னீர்செல்வம் மட்டும் எப்படி கட்சிபணி ஆற்றாமல் முதல்வராக இருக்கலாம்?

ராஜ்கிரண் நடிக்கும் வேடங்களில் பொதுவாக பன்னீர்செல்வம் மிக அழகாக பொருந்துவார். கட்சிபணி செய்ய அவருக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

முதல்வர் கனவில் இருக்கும் சசிகலா என்ன வேடத்தில் நடிக்கலாம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை


மாட்டுபொங்கல் அன்று ராமராஜனை மறந்துவிட்ட தமிழக டிவிக்கள் நன்றி கொன்ற பாவத்தை செய்துவிட்டன‌

மாட்டிற்காவே தன் சினிமா வாழ்வினை அர்பணித்த அவரை புறக்க்கணித்த தமிழகத்தில் எப்படி ஜல்லிகட்டு நடக்கும்?


மாட்டினை விட தமிழனுக்கு மானமும், அறிவும் குறைவு

ஜல்லிகட்டிற்கு ஆதரவாக நடந்த போராட்டங்களில் பலவிதமான கொடுமைகள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன‌

ஏற்கனவே சமீபத்தில் பொதுபிரச்சினைக்கு போராடிய‌ ஒரு பெண் தன்னை எப்படி எல்லாம் காவலர்கள் அவமானபடுத்தினார்கள் என சொல்லும்பொழுது மனம் பதறத்தான் செய்கின்றது

இப்போது மதுரையில் மிக கடுமையான நிலையினை காவல்துறை எடுத்திருக்கின்றது, பல தலைவர்கள் கண்டிக்க தொடங்கியாகும் அளவிற்கு நிலமை அத்துமீறி இருக்கின்றது.

காவல்துறை அப்படித்தான், உத்தரவிட்டால் அது அப்படி மூர்க்கமாகத்தான் பாயும், அதன் இயல்பு அப்படி

சரி உத்தரவிட்டது யார்?

தமிழக அரசு, பன்னீர்செல்வம் முதல்வார்கவும் சசிகலா நிழல் முதல்வராகவும் உள்ள அதே அரசு.

ஏன் உத்தரவிட்டது? டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஜல்லிகட்டு நடத்த கூடாது, அதுபற்றி பேசகூடாது என்பதற்காக.

சரி இப்படி உத்தரவிடாவிட்டால் என்னாகும்? ஆட்சி கவிழுமாம்

ஆக தங்கள் பதவியினை காப்பாற்றவும், தாங்கள் அதிகாரத்தில் நீடிக்கவும் எந்த மக்கள் தங்களை ஆளவைத்தார்களோ அவர்களையே தாக்க துணிந்துவிட்டார்கள்.

நல்ல மக்கள் நலமிக்க ஆட்சியாளர்கள் என்றால் என்ன செய்திருக்கவேண்டும்?

மக்களின் உரிமைகளை காக்கமுடியாத இந்த பதவி எதற்கு என தூக்கி எறியவேண்டாமா? மக்களோடு மக்களாக களத்தில் இறங்கவேண்டாமா?

ஆட்சி போனால் பிடிக்கவே முடியாதா? ஊழல் வழக்கில் எல்லாம் அவர்கள் மேலிடம் ஆட்சியிழந்து சிறைக்கு சென்ற வரலாறு இல்லையா? அதனை விடவா மக்களுக்காக பதவி துறப்பது கடினம்?

செய்யவில்லை, மாறாக நாங்கள் டெல்லி அடிமைகள், பதவிதான் முக்கியம் என நிரூபித்துகொண்டிருக்கின்றார்கள்

கொஞ்சபேர் சொல்லிகொண்டிருந்தான், தமிழன் முதல்வரானால் எல்லாம் மீட்கபடும் என கொக்கரித்துகொண்டிருந்தான்

இதோ தமிழர் பண்டிகையில், தமிழர் உரிமைக்காக, தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் தமிழன் தமிழக அரசின் உத்தரவால், தமிழ் பொலிசாரால் தாக்கபட்டிருக்கின்றான்

பன்னீர் செல்வம் தமிழர், சசிகலா தமிழச்சி

தமிழன் உரிமையினை மீட்டெடுங்கள் என்றால், மலையாளி எம்ஜிஆருக்கு விழா கொண்டாட கிளம்பியிருக்கின்றது அந்த கூட்டம்

கலைஞர் தமிழரே இல்லை, தமிழன் தமிழகத்தை ஆளவேண்டும் என கூப்பாடு போட்டவன் இப்பொழுது தமிழனை அடித்து மலையாளி பிறந்தநாளை கொண்டாடு என தமிழ் முதல்வர் சொல்லிகொண்டிருக்கும்பொழுது மகா அமைதியாக இருக்கின்றான்

இனி எவனாவது தமிழனை தமிழன் ஆளவேண்டும், அப்பொழுதுதான் மானமும் வீரமும் வேகமும் வரும் என சொல்லிகொண்டிருந்தால் அவனை எல்லாம் பன்னீர்செல்வம் படம் பதித்த செருப்பால் அடித்து, சசிகலா படம் போட்ட விளக்குமாறால் அடிக்க வேண்டும்

தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு போன்ற சில விஷயங்களை தவிர மாநில அரசு தன் நலத்தினை பாதுகாக்க பல முடிவுகளை எடுக்கலாம், குறிப்பாக கலாச்சார விஷயங்களில்

இந்திய அமைப்பு அப்படித்தான் மாநில கலாச்சாரத்தை பாதுகாக்குமாறு அமைக்கபட்டிருக்கின்றது

ஆச்சரியமாக குமரி ஆனந்தன் அதனை அழகாக விளக்கினார், அவர் மகள் தமிழிசையோ வாயில் பலாப்பழம் இருப்பது போல் அமைதி. தேசிய கட்சியில் இருந்துகொண்டி மாநில சுயாட்சி என்றால் எப்படி?

முன்பே சொன்னதுதான், கலைஞர் இம்மாதிரி விஷயங்களில் தைரியசாலி, முன்பு பல இடங்களில் ஆட்சியினை தூக்கி எறிய அவர் தயாராகியிருக்கின்றார். மிசா காலங்களில் பெரும் எதிர்ப்பினை திமுக கொடுத்தது எல்லாம் வரலாறு

அப்படி ஒரு போர்க்குணம் அன்று அவரால் ஊட்டபட்டிருந்தது

இந்த அதிமுக அன்றிலிருந்தே டெல்லி அடிமை கட்சி, டெல்லி ரிமோட்டில் இயங்கிகொண்டிருந்தது. முகமது பின் துக்ளக்கின் பெண் பிறப்பான ஜெயா காலத்தில் அது பெரும் இரும்புகட்சி என சொல்லபட்டாலும் லகான் டெல்லியிடமே இருந்தது

ஜெயா காலத்திலாவது லகான் டெல்லியிடம் இருந்தது, இன்று காலுக்குள் போட்டு டெல்லி மிதித்துகொண்டிருக்கின்றது.

டெல்லி அவர்களை மிதிக்க, அவர்கள் தமிழர்களை மிதித்துகொண்டிருக்கின்றார்கள்

இன்ன்னும் என்னென்ன மிதிகளை தமிழகம் வாங்கபோகின்றதோ தெரியவில்லை, ஆனால் நிறைய வாங்கும் என்பது மட்டும் உறுதி

ஜல்லிகட்டு நடத்தினால்தான் ஆட்சி டிஸ்மிஸ் செய்யபடும் என்கின்றார்கள், அதாவது மாட்டினை போட்டு ஜல்லிகட்டு எனும் பெயரில் வைத்தால் அது சட்ட மீறலாம் உடனே அரசை கலைப்பார்களாம்

ஆனால் தமிழக அரசு தமிழனை போட்டு அடித்தால் ஒன்றும் செய்யமாட்டார்களாம், இதற்கெல்லாம் டிஸ்மிஸ் செய்யலாம் அல்லவா?

மாட்டை விட தமிழன் இழிவாக போய்விட்டான் என்பதை விட என்ன சொல்லமுடியும்?

எல்லாம் ஒரு தைரியம், என்ன தைரியம்

வாக்குரிமை இருந்தால் இனி மாடுகள் கூட அக்கட்சியினருக்கு வாக்களிக்காது, ஆனால் தமிழன் நிச்சயம் நமக்கே வாக்களிப்பான் எனும் தைரியம்.

மாட்டினை விட தமிழனுக்கு மானமும், அறிவும் குறைவு என இந்த அரசுகளுக்கு தெரிந்திருக்கின்றது…