நாடாளும் நாடார்…

Image may contain: 2 peopleImage may contain: 2 peopleImage may contain: 2 people

நாட்டிலும் உலகிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்க இவர்களுக்கு வந்திருக்கும் சிக்கல் இப்படி

நாடார் நாடார் பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், நாடாரோடு மட்டும் உறவு கொள்ளவேண்டுமாம்

அப்படியானால் நாடார் தெருவில் , நாடார் நாட்டில், எல்லா பழக்க வழக்கமும் நாடாரோடு என்றால் அவர்கள் வாழவேண்டிய இடம் செவ்வாய்கிரகமோ அல்லது வியாழன் கிரகத்திலோ அன்றி பூமியில் அல்ல‌

ஒரு பருக்கை அரிசி முதல், விழுங்கும் மீன், ஆடு வரை அந்நிய சாதி துணையின்றி இவர்களுக்கு கிடைக்காது, உடுத்தும் உடையும் அப்படியே

இசை கிடைக்காது, மீசை வெட்ட கடை கிடைக்காது, ஏன் சுடுகாட்டில் எரிக்க வெட்டியான் கூட கிடைக்கமாட்டான்,

சாதி கடந்து உதவிபெறாமல் எந்த மனிதனும் இவ்வுலகில் வாழமுடியாது.

இவர்களுக்கு என்ன பிரச்சினை?

தமிழகத்தில் இவர்களொரு சாதி, அதனால் மற்ற சாதிகளில் தனித்து நிற்கவேண்டுமாம்,

இந்த காலண்டரை சிவகாசி நாடாரிடம் அச்சடித்துவிட்டார்களாம் , மகிழ்ச்சி தாளவில்லை

காகிதத்தை கண்டுபிடித்த சீனன் நாடாரா? அச்சுகலையினை கண்டுபிடித்த ஐரோப்பியன் நாடாரா? அல்லது காலண்டரை வடிவமைத்த போப்பாண்டவர் நாடாரா? ரோமையர்கள் நாடாரா?

அவ்வளவு நாடார் பெருமை பேசுபவர்கள் முழுக்க முழுக்க நாடார் தயாரிப்பினையே பயன்படுத்துவோம் என சொல்லிவிட்டலலா காலண்டர் அடிக்க வேண்டும்?

அப்படியானால் பனையேறும் தளையினையும், சில கருப்புகட்டிகளையும் தவிர என்ன சாதிக்கமுடியும்? அப்படியும் கருப்பட்டி வாங்க அடுத்த சாதிக்காரன் வேண்டாமா?

எழுதியிருக்கின்றார்கள் பாருங்கள், அப்படியே புல்லரிக்கின்றது

ராஜபாளையம் நாய், தெரு நாயோடு சேர கூடாதாம்

அந்த ராஜபாளையம் நாயே முதலில் நாடார்கள் நாய் கிடையாது, அது தெலுங்கர்கள் தமிழகத்திற்கு கொண்டுவந்த நாய்

இவர்கள் அறிவு எவ்வளவு என்பதற்கு இந்த காலண்டரை தவிர பெரும் உதாரணம் இல்லை

ஒரு அறிவுடன், இல்லை அதில் பாதி அறிவுடன் பிறந்தவனால் அன்றி இப்படி அபத்தமாக காலண்டர் அடிக்க முடியாது

கலப்பு திருமணம் சட்ட பூர்வமானது

இப்படி கலப்பு திருமணத்தை சர்ச்சையாக்கும் இவர்களை முதலில் பிடித்து சாத்தி உள்ளே போடவேண்டும்

நல்ல அரசு அதனைத்தான் செய்யும், செய்ய வேண்டும். இது சட்டத்தை அவமதிக்கும் செயல்

வளமான இந்தியாவும், அமைதியான தமிழகமும் மலர முதலில் செய்யவேண்டியது இம்மாதிரி ஒன்றுமே தெரியாத பதர்களை நாடு கடத்துவது

வேண்டாம், அந்நாட்டினை கெடுத்துவிடுவார்கள், உடனே செய்ய வேண்டியது வேறு கிரகங்களுக்கு கடத்துவது

அப்பொழுதுதான் மானிடம் என்றால் என்ன? ஓவ்வொரு மனிதனும் எப்படி பூலோக வாழ்க்கைக்கு இன்னொரு மனிதனுக்கு உதவியாயிருக்கின்றான் என்பது புரியும்,

சாதி ஒழியும்

உடனே நாசாவிடம் சொல்லி இவர்களை செவ்வாய்க்கு அனுப்ப வேண்டும்

இந்த பேரவையினை மொத்தமாக அனுப்ப வேண்டும் மறக்காமல் இந்த காலண்டரையும் சேர்த்து அனுப்பிவிட வேண்டும்

சரத்குமாரின் முன்னாள் மனைவி, இன்னும் பல நாடார்களால் கைவிடபட்ட முன்னாள் மனைவிகள் பற்றி எல்லாம் இவர்களிடம் கேட்டால் பதில் இருக்காது

நாடார் பெண்ணை நாடார் ஏமாற்றினால் சிக்கலே இல்லை என்பது காலண்டரின் பின்னால் எழுதியிருக்கும் விஷயம்

இயேசுவினை போல காமராஜரும் பரிதாபதிற்குரியவர், தினமும் சொந்த சாதி மக்களே அவரை கொன்றுகொண்டிருக்கின்றார்கள்

கொலைகாரர்களோடு காட்சியளித்தது இயேசு மட்டுமல்ல, காமராஜருக்கும் அதே கொடுமைதான்…

கலப்பு திருமணம் எனும் சட்டத்தினை விமர்சித்துவிட்டு காலண்டர் அடித்திருக்கும் இந்த பேரவைக்கு ஒரு சட்ட ஆலோசகர் வேறு இருப்பதாக காலண்டரில் பெயர் போட்டிருக்கின்றார்கள்

போலி வழக்கரிஞராக இருக்கலாம்

காலண்டர் அச்சடிக்கபட்டிருக்கும் இடம் மும்பை, அதாவது மராட்டிய பூமி

சாதி கடந்து எல்லா மக்களுக்கும் வாழ்வளிக்கும் பூமி

அங்கு சென்று நாடாளும் நாடார் என அச்சடிக்க என்ன அறிவு இருக்க வேண்டும், மகாராஷ்டிர அரசுக்கு தமிழ் தெரியாது எனும் நோக்கில் கூட யோசித்திருக்கலாம்

அம்பேத்கர் பட்டம் வாங்கி சமூகத்தை சிந்திக்க ஆரம்பித்த அதே மும்பையில் இப்படியும் சில காமெடியன்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s