நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

பின்ன, மெரினாவில் அவ்வளவு பெரிய கலவரம் நடக்கும் பொழுது இவர்கள் எப்படி உள்ளே இருப்பார்கள், இப்பொழுது மெரீனா நோக்கி நடந்து போராடும் மாணவர்களை காக்க போகின்றார்கள். அதான் வெளிநடப்பு செய்து நடக்கின்றார்கள்.

இன்னும் ஸ்டாலின் தலமையிலான திமுக குழு மெரீனாவினை அடையவில்லை, இன்னும் 500 கிமீ தூரம் இருப்பதால் சென்று அடைய இன்று சில நாட்கள் கூட ஆகலாம்


அடிவாங்குங்கள் தமிழர்களே, வோட்டு போட்ட விரலை காட்டி அதனை நொறுக்க சொல்லி அடிவாங்குங்கள்.

அவர்களுக்கு மாலையும், அவர்களுக்கு சுவரொட்டியும் சுமந்த கைகளில் அடிவாங்குங்கள், அந்த அரசியல்வாதிகளுக்காக கால்கடுக்க நின்ற அந்த கால்களில் அடிவாங்குங்கள்

எந்த கட்சியினை தோளில் சுமந்தீர்களோ அந்த கட்சியின் அரசின் அடியினை அதே தோளில் வாங்குங்கள்

நம்மை ஆள அல்ல, அடித்துநொறுக்க நாமே ஒரு அரசினை அமைத்திருக்கின்றோம் அல்லவா. அந்த தவறுக்கு அடிவாங்குவோம்.

எந்த கட்சியின் தலைவி இறந்தார் என உண்ணாமல் உறங்காமல் அழுதீர்களோ அந்த கட்சி அரசுதான் அடிக்கின்றது, இப்பொழுதும் அழுங்கள்

ஒரு பாரம்பரிய உரிமைக்காக மக்களோடு மக்களாக இறங்கிவரமுடியாத அரசினை அமைத்திருக்கின்றோம் அல்லவா? அதற்காக அடிவாங்குங்கள்

என் பதவியே முக்கியம், அதற்கு இடைஞ்சலாக யார் வந்தாலும் கொல்ல துணியமாட்டோம் என இரங்கியிருக்கும் அரசின் கோரமுகத்தை பார்த்துகொண்ட ரத்தம் சிந்துங்கள்

பாழ்பட்ட நாட்டில் நம் உழைப்பினையும், உரிமையினையும்தான் உறிஞ்சினார்கள் என்றால், இன்று ரத்ததத்தையும் உறிஞ்சுவதையும் பார்த்துகொண்டே அடிவாங்குங்கள்.

காவல்துறை அடிக்கும் ஒவ்வொரு அடியும் அரசாங்கத்தின் அடி என்பதை உணர்ந்து கல்லை தேடாதீர்கள், கையில் இருக்கும் வோட்டினை தேடுங்கள்

உங்களிடம் வோட்டு கேட்க வந்தவர்கள்தான் இன்று அடிக்கவும் சொல்லியிருக்கின்றார்கள்

ஆளும் கட்சி அடிக்கின்றது, எதிர்கட்சிகள் அமைதிகாக்கின்றன என்றால் என்ன அர்த்தம் என்பதை எண்ணிகொள்ளுங்கள்

என்ன தவறு செய்தோம்? உரிமைக்காக கூடியது தவறா? ஒற்றுமையாக எழும்பியது தவறா?

அது தவறே அல்ல, மாறாக யாரிடம் ஆட்சியினை ஒப்படைத்திருக்கின்றோமோ அதுதான் பெரும் தவறு.

வலிக்கும்தான்,

நம்மை காக்கவேண்டிய காவல்துறையே நம்மை போட்டு அடிக்கும்பொழுது உடல்வலியினை விட மனவலி அதிகம்தான்

ஆனால் அந்த வலியினை தேர்தல் வரை தாங்குமளவு மனம் இறுகட்டும்

அடித்து இன்று விரட்டலாமே ஒழிய, அடித்து வோட்டினை நாளை வாங்கிவிட முடியுமா?
அடிபட்டு கங்கிநிற்கும் ஒவ்வொருவருக்காகவும் அழுகின்றோம்

நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்


சென்னை பேருந்து கண்ணாடி உடைப்பு

அரசு பேருந்துகளில் உருப்படியாக இருந்தது அது ஒன்றுதான், அதனையும் உடைக்க தொடங்கியாயிற்று


பின்னூட்டமொன்றை இடுக