ஹைட்ரோ கார்பன் திட்டம்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் சர்ச்சை வெடிக்கின்றது

தமிழகம் என்னவோ பூமியினை தோண்டாத மாநிலம் என்பது போலவும், முதன் முறையாக தோண்டபோகின்றார்கள் என்பது போல பெரும் குரல்கள்

ஆபத்தான திட்டங்களை என்றோ கொண்டுவந்தாகிவிட்டது, கல்பாக்கமும், கூடங்குளமும் ஒரு வகை உறங்கும் எரிமலைகள்.

இந்த செயற்கை எரிமலைகளால் வாழ்விழந்த மீணவர்கள் எண்ணிக்கை என்ன?

நெய்வேலி சுரங்கங்கள் பிரசித்தி பெற்றவை, அது ஒரு விவசாய கிணற்றில் இருந்தேதான் தொடங்கபட்டது என்பதும் வரலாறு, சுற்றுபக்கம் அத்தனை விவசாய நிலங்களையும் அது வளைத்தது, ஆனால் இன்றுவரை இயங்கிகொண்டுதான் இருக்கின்றது.

மீத்தேன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் என சொல்லிகொள்கின்றார்கள், ஏற்கனவே கல்குவாரிகள் எனும் பெயரில், கிரானைட் குவாரிகள் எனும் பெயரில் எத்தனை பெரும் பள்ளங்களை உருவாக்கி, அதில் சுற்றுபுற நிலத்தடி நீர் பாதிக்கபட்டிருக்கின்றது என்பது தமிழகத்தின் பல இடங்களில் தெரிகின்றது

1000 கிணறுகளுக்கான நீரை ஒரு கல்குவாரியின் அதள பாதாள பள்ளம் உறிஞ்சி கொண்டு வீணாக்குகின்றது

அதே டெல்டா பகுதியில் நரிமணம் உட்பட்ட பகுதிகளில் நெடுங்காலமாக எரிவாயு உற்பத்தி செய்யபட்டுகொண்டுதான் இருக்கின்றது

அதே டெல்டாவின் பெரும் பகுதிகளில் இந்த உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கின்றது

ஆக இவை புதிதல்ல‌

ஆனால் புதிதாக அனுமதிக்கபட்டிருக்கும் இடங்கள் மக்களின் வாழ்வாதாரமாக இருந்தால், அவர்களுக்கு சோறுபோடும் இடமாக இருந்தால் அதனை தவிர்க்கலாம்

மத்திய அமைச்சரும், இன்னும் பொறுப்பானவர்களும் அதனைத்தான் சொல்கின்றார்கள்,

டெல்டா பகுதி காக்கபடவேண்டும் சரி, ஆனால் கல்குவாரிகளால், தேரிகாட்டு மணல் குவாரிகளால் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?

அவற்றினால் வாழ்வாதாரம் கெட்டவர்கள், நிலத்தடி நீரினை குடிநீர் கம்பெனிகளும், குவாரிகளும் உறிஞ்சுவதால் தெருவுக்கு வந்த விவசாயிகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு

அதுவும் பள்ளிகளுக்கு நீச்சல் குளத்திற்காக பெரும் போர்வெல் அமைத்து அக்கம் பக்கம் விவசாயிகளை நடுரோட்டில் நிறுத்தும் கொடுமைகளும் உண்டு

தொழிற்ச்சாலை எனும் பெயரில் ரசாயாண‌ கழிவு நீரை பூமிக்கடியில் அனுப்பி அக்கம்பக்கம் இருக்கும் விவசாயிகளை எல்லாம் அழிக்கும் கொடுமைகளும் இங்கும் உண்டு

ஆக மீத்தேன் மட்டும் விவசாயிகளை அழிப்பது போலவும், மற்ற இம்மாதிரியான திட்டங்களை கண்டுகொள்ள கூடாது என்பது எப்படி சரி?

மணல் கொள்ளை, கனிம மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கல்குவாரி இன்னபிற தொழிற்ச்சாலை, வியாபார குடிநீர் என எத்தனை காரியங்களால் விவசாயம் அழிகின்றது?

அதனை எல்லாம் பேசாமல் மீத்தேன் மட்டும் அழித்துவிடும் என்றால் , அதனை மட்டும் தடுக்கவேண்டும் என்றால், மற்ற பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் ஏமாளிகளா?

இன்று நெடுவாசலில் கத்தும் அரசியல்வாதிகளில் ஒருவனாவது இதனை பேசியிருப்பான்?

டெல்டாவில் வாழ்பவன் மட்டும்தான் விவசாயி, மற்ற பகுதியில் வாழ்பவன் எல்லாம் சும்மா வெம்போக்காக நிலத்தினை பார்த்துகொண்டிருக்கின்றானா?

தடுத்தால் எல்லாவற்றையும் தடுக்கவேண்டும் அல்லவா?

செய்கின்றார்களா? அல்லது செய்வார்களா?

மக்களை பாதிக்காத, அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்காத வகையில் சில காரியங்களை செய்யலாம்.

இது பொறுப்பான அதிகாரிகள், மிக பொறுப்பாக செயல்படவேண்டிய விஷயம், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்

இதில் சிலர் மத்திய அரசை எதிர்த்தும், தனி நாடுதான் தீர்வு எனவும் பேசிகொண்டிருக்கின்றான்

இந்தியா எனும் நாட்டில் இருப்பதால் இவ்வளவு தூரமாவது பேசமுடிகின்றது, தனிநாடு என சென்றோமானால் வல்லாதிக்க நாடுகள் அடிக்கும் அடியில் ஈராக் போலவோ, லிபியா போலவோ ஆகிவிடுவோம்

அவர்கள் மீத்தேனை அள்ள வந்தால் நிலமை அவ்வளவு மோசமாக செல்லும், சின்னஞ்சிறு தமிழ்நாடு அந்த வல்லூறுகளுக்கு தப்பமுடியாது, இது உலக யதார்த்தம்

நசுக்கி விடுவார்கள்

ஆக இதற்கெல்லாம் தனிநாடு என்பவனை அந்த மீத்தேன் குழியிலே தள்ளுவது நாட்டிற்கு நலம்

ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பகுதியில் சில புதிய இடங்களை அனுமதித்திருக்கின்றார்கள், அது மக்களுக்கு இடைஞ்சல் என்றால் அது நிறுத்தபடட்டும்

சரி, இதில் மோடி ஓழிக என்றெல்லாம் கோஷங்கள் வருகின்றன, ஆனால் முதல்வர் பழனிச்சாமி என்பவர் பற்றி சத்தமே இல்லை

அப்படி ஒரு முதல்வர் இருப்பதையே தமிழகம் மறந்துவிட்டது போல‌

என்ன தமிழகமோ, இதுவே கலைஞர் முதல்வர் என்றால் மத்திய அரசின் திட்டத்திற்கு நடவடிக்கைக்கு எல்லாம் அவரே பொறுப்பு, டெல்லிக்கு ஜார்ஜ் புஷ் வர, ராஜபக்சே வர‌ கலைஞர் எப்படி அனுமதிக்கலாம் எனும் அளவிற்கு பொங்குவார்கள்

ஆனால் அவரை தவிர வேறு யாராவது முதல்வர் என்றால் அவ்வளவுதான், பாயினை விரித்து படுத்துகொண்டு மத்திய அரசு ஒழிக என சொல்லிவிட்டு தூங்கிவிடுவார்கள்

நாட்டின் இயக்கத்திற்கு சில காரியங்கள் நிச்சயம் தேவை, ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருப்பது மிக அவசியம்

போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் என மத்திய அமைச்சர்கள் சொல்வது நல்ல விஷயம்

நல்லது நடக்கட்டும், நாடு செழிக்கட்டும்

 
 
 

உடன் பிறப்பே….

Image may contain: 1 person, sunglasses and glasses

உடன்பிறப்பே

மது குடித்த மந்தியாக, கல் பட்ட கரடியாக‌ சிலர் புலம்பி திரிவதை கண்டிருப்பாய், அவர்கள் பொய்யிலே அரசியல் நடத்துபவர்கள், பசப்பு முகங்களிலே பாஷானம் கொடுப்பவர்கள் என தெரிந்தது தான்,

ஆனால் பச்சை பொய்களை கொஞ்சமும் அச்சமின்றி , கூச்சமின்றி சொல்ல‌ வந்து விட்டார்கள் பார்த்தாயா?

ஒருவர் திமுக தான் ஜெயா சாவுக்கு காரணம் என்கின்றார், இன்னொருவர் தமிழகம் வாழ இக்கழகம் அழியவேண்டும் என்கின்றார்.

வயிறு நிரம்பிய நரிகள் ஊளையிடத்தான் செய்யும், அதுவும் கூவத்தூரில் பெரும் விருந்தில் வயிறு பெருத்த நரிகளின் ஊளை அப்படித்தான் இருக்கும், அதன் இயல்பு அப்படி.

ஆனால் கழக வரலாறு என்ன?

திமு கழகத்திற்கு என்றுமே உருவாக்க மட்டுமே தெரியுமன்றி ஒரு காலமும் அதற்கு யாரையும் அழிக்க தெரியாது, அதன் வரலாற்று ஏடுகளை புரட்டிபார்த்தால், அது ம.கோ ராமசந்திரன், பண்ருட்டி ராமசந்திரன் முதல் இதோ இன்று அதிமுகவினை தாங்கி நிற்கும் நடராஜன் வரை இக்கழகம் தான் உருவாக்கியது

சாதாரண கலிங்கபட்டி கோப்பால் சாமி என்பவரை ஒரு பிம்பமாக வடிவமைத்ததே இந்த கழகம் தான்

அப்படிபட்ட இந்த அரும் கழகத்தினை எதிர்த்து சுயநலம் பிடித்த சிலர் சென்று சிலர் அரசியல் தற்கொலை செய்வார்களே ஓழிய , கழகம் யாரையும் வெறுத்ததுமில்லை , எதிரியாக நினைத்ததுமில்லை, அப்படி நினைத்து அழித்தொழிக்கும் அவசியமுமில்லை

ஆனால் ஜெயாவின் ஊழலை கழகம் எதிர்த்தது, ஜெயா என்று அல்ல, யார் ஊழல் செய்தாலும் இக்கழகம் ஆதரிக்காது. அந்த கொடும் ஊழலை, அரசாங்க பதவியின் துஷ்பிரயோக சொத்துகுவிப்பனை இக்கழகம் கண்டித்து வழக்கு நடத்தியது

அநியாயம், அக்கிரமம், ஊழல் இவற்றிற்காகத்தான் திமுக போராடியதே தவிர, ஜெயலலிதா எனும் தனி மனிதருக்காக அல்ல,

இன்னமும் அவர்கள் ஜெயா தண்டனைக்கு திமுக காரணம் என கருதினால், அந்த ஊழலின் பிம்பம், அதாவது கழகம் எந்த ஊழலை , கொடும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதோ அந்த அநியாயத்தின் மொத்த உருவம் ஜெயலலிதா என அவர்களே ஒப்புகொள்கின்றார்கள் என பொருள்

ஊழலை திமுக எதிர்த்தது, அதனால் ஜெயா காலமானார் என சொல்வார்களானால், அந்த ஊழலின் உருவமாகவே ஜெயா இருந்தார் என்பதே அவர்கள் நிலைப்பாடு என உலகம் கருதாதா?

திமுக ஊழலை கொலை செய்யும், அக்கிரமத்தை, சுரண்டலை கொலை செய்யுமே அன்றி, வேறு எதனையும் கொல்லாது.

உடன்பிறப்பே, நாம் தமிழகத்தினை சுரண்டினோம் என்கின்றன சில பதர்கள்

பெரியார் தன் சொத்துக்களை எல்லாம் பொதுசேவைக்கு வழங்கினார், அண்ணா தன் படைப்புகளையும், தன் காஞ்சிபுரம் வீட்டினை நாட்டிற்கு கொடுத்தார்

அவர்களை பார்த்து வளர்ந்த நான் என் திருகுவளை குடும்ப வீட்டையும் சொந்த ஊருக்கு கொடுத்தேன், 1940களிலே நான் வாங்கிய இந்த கோபாலபுரம் வீட்டையும் எனக்கு பின் மக்களுக்காக வழங்கிவிட்டேன்

கோபாலபுரம் வீடு மிக சிறியதுதான், ஆனால் தமிழக வரலாற்றில் அதற்குரிய இடத்தோடு விலைபேசினால் அது கோஹினூர் வைரத்தோடும் அதிக விலைக்கு போகும் என்பது உன்க்கு தெரியாததல்ல‌

எத்தனை தலைவர்கள் சந்தித்துகொண்ட வீடு அது?, எத்தனை பெரும் முடிவுகள் எடுக்கபட்ட வீடு? அதிமுகவின் இன்றைய தலைவர்கள் எத்தனை நாள் காவலாக கிடந்த வீடு அது.

அதன் பெருமை தமிழருக்கு தெரியும், வரலாறு அறிந்தவருக்கு தெரியும். அதனையே நான் நாட்டிற்கே கொடுத்துவிட்டேன்

இதனிடையே நான் எழுதி சம்பாதித்த பலவற்றை மக்களுக்கே கொடுத்ததெல்லாம் வரலாறு சொல்லும்

ஆனால் போயஸ் வீடு இன்று யார் கையில் உள்ளது, கங்கை அமரன் அனுதினமும் கங்கை நதிபோலவே கண்ணீர் வடித்து அழும் அந்த சிறுதாவூர் பங்களா யார் கையில் உள்ளது?

கண்ணுக்கு தெரிந்த நிலங்களையே எல்லையின்றி வளைக்கும் வல்லூறுகள், கண்ணுக்கு தெரியா மலையுச்சியில் கட்டியிருக்கும் கொடநாடு மாளிகை யாருக்கு?

இவை எல்லாம் மக்களுக்கு வருமா? சொல் உடன்பிறப்பே

கையில் இருப்பது கைபிடியானாலும் தமிழக்த்திற்கு என மகிழ்வோடு அள்ளிவீசுபவர்கள் நாம்

மூட்டை கட்டியும், கண்டெய்னரில் கடத்தியும் விளையாடும் அவர்கள் தமிழகத்திற்கு எதனை விட்டு சென்றார்கள்?

அவர்கள் மனம் கடுகை விட அவ்வளவு சிறியது, அவர்கள் சுயநலமோ இமயத்தை விட பெரியது

ஆக சொந்த சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கு கொடுத்த பெரியார், அண்ணா அவர்கள் வரிசையில் நான் போன்றவர்கள் எல்லாம் எங்கே?

ஊரையே வளைத்துபோட்டு சுகவாழ்வு வாழ்ந்துகொண்டும், இன்னும் வேண்டும் வேண்டும் என நீர் குடிக்கும் வறண்ட நிலமாக‌ , எவ்வளவு எரிந்தாலும் அடங்கா பேராசை தீயாக வெறியோடு அலையும் அவர்கள் எங்கே?

ஒப்பிட முடியுமா உடன்பிறப்பே?

இந்த சுயநல‌ பேராசைகாரங்கள் தான் நம்மை பழிக்கின்றனவாம், நம்மை அழிக்க துடிக்கின்றதாம்

இந்த கும்பல் வெளியில் நடமாட விட கூடாத கொடிய கும்பல், போயஸ் தோட்டம் என்பது பேராசை கொடியவர்களின் கூடாரம், தமிழகத்தை சுரண்டும் திட்டம் அங்கேதான் அரங்கேறியிருக்கின்றது என உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும் இவர்கள் அழிச்சாட்டியம் கண்டாயா?

கட்சி கணக்கு கேட்டு அவர்கள் ஆரம்பித்த கட்சி, கணக்கு வழக்கு இல்லாமல் சொத்துசேர்த்து அதற்கு கணக்கு காட்டமுடியாமல் வீழ்ந்த கதை யாருக்கு தெரியாது

இவர்கள் நம்மை அழித்துவிடுவார்களாம், சொல்லிகொள்கின்றார்கள்

கழகம் எனும் சூரியனை நெருங்க இந்த வல்லூறுகளால் முடியுமா? இதுவரை இந்த கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என அவர்கள் அறியவில்லை என்பதை தவிர என்ன சொல்லி அவர்களை பரிதாபமாக பார்க்க இயலும்?

இந்த பேராசை, சுயநல கும்பலின் அந்திம காலத்தில், முடிவு தீ வைக்கபட்ட காலத்தில் இந்த அழிவு காலங்களில், தீயில் சிக்கிய பன்றியாக ஓலமிட்டுத்தான் தீர்வார்கள், கத்தட்டும்

புராணத்தில் வரும் ராவணனின் அழிவுக்கு யார் காரணம்? சேதுவில் பாலம் கட்டியவனா காரணம்?

துரியோதனின் அழிவுக்கு யார் காரணம்?

மதுரையிலே நீதி தவறி அழிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் சாவுக்கு யார் காரணம்?

அவரவர் செய்த வினைகள் அல்லவா அவர்களை கொன்றது.

உன்னைபோலவே தமிழக மக்களும் உண்மையினை அறிந்தவர்கள் என்பதாலும், என்றுமே நாம் சத்தியத்தை, தர்மத்தை நம்புபவர்கள் என்பதாலும் உறுதியாக சொல்கின்றேன்

வெற்றி நமதே, நாளை மட்டுமல்ல, இனி எல்லா நாட்களும் நமக்கான நாட்களே


பிரான்சில் டிரோன் கண்காணிப்பினை தடுக்க கழுகுகள் பயன்படுத்தபடும், காவல்துறை அறிவிப்பு

ஈராக்கில் நாய்கள் மீது வெடிகுண்டு பொருத்தி தாக்குதல்

பீட்டா என்றொரு அமைப்பு உண்டல்லவா? அது எங்கே மல்லாக்க கிடக்கின்றது என தெரியவில்லை


நெடுவாசல் சென்று போராட்டத்தில் பேசினார் சீமான் : செய்தி

நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் : இன்னொரு செய்தி

இந்த இரு செய்திகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.


 

 
 

ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது

சங்கரரும், ராமனுஜரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இந்துமதத்தை பரப்பியது எல்லாம் சுத்த வேஸ்ட்

இந்து மதம் என்பது ஜக்கி ஸ்டைலிலும், நித்தி ஸ்டைலிலும் பரப்பபட வேண்டும் என்கின்றார் ஜெயமோகன்

மனிதருக்கு முற்றிவிட்டது என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை

கிறிஸ்தவ ஊழியங்கள் அப்படி நடக்கும்பொழுது, எங்களை போன்றவர்கள் இப்படித்தான் கிளம்புவோம் என சொல்ல வருகின்றார்

அந்த கோஷ்டிகளை எப்படி கிறிஸ்தவர்கள் என உண்மை கிறிஸ்தவர்கள் ஒரு காலமும் ஒப்புகொள்ள போவதில்லையோ அப்படி ஜக்கியினையும் நல்ல இந்துக்கள் ஏற்றுகொள்ளபோவதில்லை

தினகரனின் கிறிஸ்து பெயரான‌ கொள்ளைக்கும், அன்னை தெரசாவின் தொண்டுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு

அப்படியே விவேகானந்தர் போன்ற ஞானிகளுக்கும், ஜக்கி போன்ற அரைவேக்காடுகளுக்கும் வித்தியாசம் உண்டு

ஜக்கி ஒரு காலமும் விவேகானந்தராகவோ, ரமணராகவோ ஆக முடியாது

அப்படி ஜெயமோகனும் சுஜாதா ஆகவே முடியாது

 
 
 

எழுத்தாளர் சுஜாதா : நினைவு நாள்

Image may contain: 1 person

தோற்றம் : 03-03-1935  :: மறைவு:  27-02- 2008

ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு சொல்ல , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று

உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது

ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை

முந்தைய நாள் ஆழ்வார்கள் பெருமையினை அழகிய தமிழில் பேசிவிட்டு, மறுநாள் காலையில் சினிமா விவாதங்களில் பங்கெடுத்துவிட்டு, மாலையே கணிப்பொறியில் தமிழை கொண்டுவருவது எப்படி என அவர் பேசியபொழுது இப்படியும் ஒரு மனிதன் சாத்தியமா என்றெல்லாம் வியந்த காலங்கள் உண்டு

எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் அவர், அதனை சுவைபட சொல்லும் அழகும் இருந்தது

தொல்காப்பியன், ஆழ்வார்கள், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், பாரதி, புதுமை பித்தன் என எல்லாமும் கலந்த அப்படி ஒரு எழுத்தாளன் இனி தமிழுலக்கிற்கு சாத்தியமே இல்லை

கண்ணதாசனும், சீனிவாச ராமனுஜனும் கலந்த கலவை அவர்

பிறவி அறிவு அவரிடம் அப்படி இருந்திருக்கின்றது

தமிழுலகம் மறக்கவே முடியாத மாமனிதன், தமிழர் அறிவின் பெரும் அடையாளம்

நல்ல எழுத்து எது? எப்படி எழுதவேண்டும் என்பதற்கு நவீன காலத்தில் அவரே இலக்கணம்.

அவர் எழுதிய காலங்கள் தமிழ் எழுத்துலகின் பொற்காலம், படிக்க படிக்க அப்படி ஒரு சுகமும் , திருப்தியும் மகிழ்வும் கொடுத்த எழுத்துக்கள் அவை

மனிதர் எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார், அதுவும் முழுக்க முழுக்க ரசித்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை

அந்த ரசனையினை எழுத்தில் கொடுத்தார்.

பூமியின் எல்லா பக்கங்களையும், மானிட வாழ்வின் எல்லா உணர்வுகளையும், விஞ்ஞானத்தின் எல்லா புத்தகங்களையும் , சமூகத்தின் எல்லா நகர்வுகளையும் கவனித்திருக்கின்றார்

இவரை பெற்றதில் தமிழுலகம் பெரும் மகிழ்வு அடைகின்றது, அன்னாரின் நினைவுநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த‌ அஞ்சலிகள்.

தமிழருக்கு பல்சுவை விஞ்ஞான‌ “எழுத்தறிவித்த இறைவன்” நிச்சயம் அவர்தான்.


 

டெல்லியில் எடப்பாடி , சென்னையில் சிஆர் சரஸ்வதி இன்னும் பிற…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார்.

காத்து கிடந்து கண்ணீர் விட ஒருநாள், தினகரன் கும்பல் எடுக்கும் வகுப்பில் கைகட்டி பாடம் கற்க மறுநாள்,

பிரதமரை சந்திக்க மூன்றாம் நாள்

இப்படி 3 நாட்கள் கண்டிப்பாக தேவை..


டெல்லிக்கு செல்லும் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி சூனியம் பலிக்காமல் இருக்க பழனியாண்டவர் உதவட்டும்

எல்லா அடிமைகளும் நல்ல அடிமைகள்தான் தமிழகத்திலே, அவர் முழுக்க முழுக்க கெட்டவர் ஆவது டெல்லி சூனியத்திலே

பழனிச்சாமிக்கு எப்படி விபூதி அடிக்கபோகின்றார்கள் என்பது விரைவில் தெரியும்

ஆனால் நிச்சயம் அடிப்பார்கள், இவர் வேறு 3 நாள் இருக்கபோகின்றாராம்

எப்படி எல்லாம் குங்கும குளியலும், வேப்பிலையும் அடிக்க போகின்றார்களோ?


 ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

யாராவது அந்த 122 அடிமைகள் பற்றி இந்த ஐ.நா கூட்டத்தில் குரலெழுப்ப கூடாதா?

இந்த நூற்றாண்டின் ஆகபெரும் மனித உரிமை மீறல் அவர்கள் மீதுதான் நிகழ்த்தபட்டது..

எம் எல் ஏக்களாக இருந்தும் அவர்கள் எருமை மாட்டினை போல நடத்தபட்டதை குறித்து யார் ஐ.நாவில் பேசபோகின்றார்கள்?


ஜெயலலிதாவின் சொத்துக்கள் எல்லாம் அவர் சினிமாவில் சம்பாதித்தது : சி.ஆர் சரஸ்வதி

அடேய், சினிமாவில் அப்படி சம்பாதிக்க முடியுமென்றால் மனோரமா அம்பானி ஆகியிருக்கமாட்டாரா?

சினிமாவில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமென்றால் பில்கேட்ஸ் முதல் வாரன் பெப்பெட் வரை மேக் அப் போட்டுகொண்டு குத்தாட்டம் ஆட வந்திருக்கமாட்டார்களா?

அவ்வளவு ஏன்? குஷ்பூ உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகியிருக்க மாட்டாரா?

டெல்லி நீதிபதிகள் தலையில் அடித்து தீர்ப்பு சொன்னபின்னும் அம்மணிக்கு எவ்வளவு பேச்சு?

நீதிமன்ற அவமதிப்பு என்பது இதுவே தான்..


 நாட்டுக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவை – மோடி

அதனால்தான் நமது பிரதமர் பாபா ராம்தேவ், ஜக்கி சாமியார் ஆசிரமத்தில் சென்று விஞ்ஞானிகளை தேடுகின்றார்

விஞ்ஞானிகள் அங்குதான் உருவாகின்றார்கள் என்பது அவர் நம்பிக்கை


 

தமிழகத்தில் பாஜக….

இப்பொழுதெல்லாம் தமிழக பாஜகவினர் நிறைய பேசுகின்றார்கள், முன்பு அடங்கிகிடந்த அவர்களிடம் பெரும் மாற்றம் தெரிகின்றது

ஜெயா மறைந்து அதிமுக அரசினை தன் இஷ்டம் போல குட்டிகரணம் அடிக்க வைக்க மத்திய அரசு தொடங்கிய பின்னரே இவர்களின் பேச்சு 200% அதிகரித்திருக்கின்றது, மாநில அரசினை ஆள்வது மத்திய பிஜேபி என்பது அவர்களின் பேச்சிலே தெரிகின்றது

மீத்தேன் எனும் பழைய கள்ளை, ஹைட்ரோ கார்பன் எனும் புது மொந்தையில் பாஜக நுழைக்கின்றது, திட்டம் அதே தான்

இதில் பொன்னார், தமிழிசை, எச்.ராசா என வழக்கமானவர்கள் புதிய உற்சாகத்துடன் எட்டுகட்டையில் கச்சேரி நடத்துகின்றனர்

இல.கணேசன் நாட்டிற்காக ஒரு மாநிலத்தையே தியாகம் செய்யலாம் என மனுநீதி பேசிகொண்டிருக்கின்றார்

முன்பு கூடங்குள பிரச்சினையிலும் இதனையே சொன்னார், மாநிலத்திற்காக ஒரு மாவட்டத்தை இழக்கலாம் என்றார்

பின் நியூட்ரினோ பிரச்சினையிலும், கெயில் பிரச்சினையிலும் இதே பொன்மொழிதான் உதிர்த்தார்

இணையம் கடற்கரை சர்ச்சையிலும் இதே தான் உதிர்க்கபட்டது

அதாவது முன்பு மாநிலத்திற்காக ஒரு மாவட்டம் இழந்தால் என்ன? என கேட்டவர்கள். எல்லா மாவட்டங்களும் பாதிக்கபட்ட நிலையில் நாட்டிற்காக மாநிலத்தை இழந்தால் என்ன என கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டார்கள்

எப்படி?

இங்கு கேள்வி கேட்க யாருமில்லை, எதிர்கட்சி என் சட்டையினை கிழித்துவிட்டார்கள் என அழுதுகொண்டிருக்கின்றது

ஆளும் கட்சி என ஒன்று உண்டு, ஆனால் அது அடித்து கட்டபட்டு , இல்லை கிட்டதட்ட கொல்லபட்டு எகிப்து மம்மி போல ஆக்கபடுவிட்டது

அந்த பொம்மையினை அரியணையில் வைத்துகொண்டு மத்திய அரசு ஆளுகின்றது, அக்கட்சியினர் மம்மி மம்மி என அழுவதன் அர்த்தம் இதுதான், புரியவேண்டியவர்களுக்கு புரியும்

ஆக மனுநீதி ஆட்சியினை தமிழகத்தில் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள், அதனடிப்படையில் நாடு வளம்பெற ஒரு மாநிலம் பலிகொடுக்கபட்டால் என்ன என கேட்க தொடங்கிவிட்டார்கள்

மனுநீதி சொன்னது இருக்கட்டும், ஜனநாயக நீதி என ஒன்று உண்டு

பல்லின மக்கள் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கும், அதில் எந்தகட்சி நாட்டை குட்டிசுவராக்குகின்றதோ, அதனை பலிகொடுப்பது குற்றமல்ல‌

நாட்டின் அமைதிக்கும், வளப்பத்திற்கும் ஒரு கட்சியினை பலிகொடுக்கலாம்

தமிழகத்தை பொறுத்தவரை அது பாஜக என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

பெரியார் இம்மாநிலத்தில் பெரும் நெருப்பினை மூட்டினார், அண்ணா அதனை ஆட்சி ஜோதியாக மாற்றினார்

கலைஞரின் 1975 வரை பெரும் அநீதிகள் இம்மண்ணில் மத்திய அரசால் இழைக்கமுடியவில்லை, கச்சதீவு இந்த அளவு சிக்கல் இல்லை

என்று அந்த ராமசந்திரன் டெல்லியால் உருவாக்கபட்டு அரியணை ஏறினாரோ அன்றுமுதல் எல்லா அட்டகாசங்களும் தமிழகத்தில் தொடங்கின‌

அதுவரை டெல்லியினை எதிர்த்து நின்ற திமுக பின் மகோராவுடனும் , ஜெயுடனும் மல்லுகட்டுவதிலே தன் காலத்தை கடத்தியது

அதாவது மாநில நலனை விட்டு, தன் நலனை காக்கும் கட்டாயத்திற்கு அக்கட்சி தள்ளபட்டது.
இப்படி திமுக பலகீனமான நேரத்தில்தான், கல்பாக்கம், கூடங்குள அணுவுலை முதல் இன்னும் பல நாசகார திட்டங்கள் எல்லாம் அதிமுக காலத்தில்தான் உருவானது

அப்படி டெல்லியின் கைப்பாவையாகவே அக்கட்சி இருந்தது

இன்று ஜெயா வீழ்த்தப்ட்டு அக்கட்சி இன்று பாஜகவின் மாநில கிளையாகவே ஆகிவிட்டது

கலைஞரும் ஓய்ந்துவிட்டார்,

இனி நம்மை கேட்க யாருமில்லை என மெதுவாக தன் தலையினை தூக்கி அந்த கும்பல் முணகி பார்த்தது, பின் உறுமி பார்க்கின்றது

இந்த மாநிலம் அடங்கிவிட்டது, இங்கு நமக்கு எதிரி யாருமில்லை என அது சிந்திக்க தொடங்கி பேசவும் வந்துவிட்டது

வரலாறுகளை புரட்டினால் ஒன்று விளங்கும்

இம்மாநிலம் அந்த கும்பல் தலையெடுக்கும் பொழுதெல்லாம் அதற்கு பதிலடி கொடுத்தே வந்திருக்கின்றது

அது பிரமணன் அல்லாதோர் சங்கம், நீதிகட்சி, சுய மரியாதை கட்சி, திராவிட கட்சி என காலத்திற்கு ஏற்ப தன் எதிர்ப்பினை காட்டியே வந்திருக்கின்றது

திராவிட கட்சிகள் மட்டுமே அவற்றின் எதிரி என்பதல்ல, காரணம் காலத்தை பொறுத்து எதிர்ப்புகள் அமையும், அப்படி அந்த காலத்தில் உருவானது திராவிட கட்சி

இனி அக்கும்பலை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வருமானால் இன்னொரு கட்சியோ, இல்லை மக்கள் சக்தியோ நிச்சயம் எழும்பும்

காலமே அதனை செய்யும்

இவர்கள் இப்படி மாநிலத்தை பலிகொடுக்கலாம் என பேச பேச, இன்னொரு பெரும் புரட்சி வெடிக்கும் என்பதே உண்மை

தமிழகத்தின் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இங்கு இருக்கும் எதார்த்தம் அப்படியானது

ஒருநாளும் வடக்கத்திய கும்பல் இங்கு பெரும் அழிச்சாட்டியம் செய்ய முடியாது. இது காந்திக்கு புரிந்தது, நேருவிற்கு புரிந்தது

இந்திராவிற்கும், ராஜிவிற்கும் கடைசிகாலங்களில் புரிந்தது

இந்த பாஜக என்பது இப்பொழுதுதான் களத்திற்கு வந்திருக்கின்றது, இனி அதற்கும் விரைவில் புரியும்

 
 
 

ஜெயா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை

ஜெயா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை, திமுகவினை அழிக்காமல் விடகூடாது : விஜயபாஸ்கர்

அட பதர்களா, ஜெயாவின் மீது முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணியன் சாமி உங்கள் அருகிலே இருக்கின்றார் அவரை ஒரு வார்த்தை சொன்னீர்களா?

பாஜக ஆட்சியின் மிக சரியாக சசிகலா முதல்வராகும் பொழுது கத்தி வீசியிருக்கின்றார்கள் அது பற்றி ஒரு வார்த்தை?

பன்னீரையும், தீபாவினையும் கொம்பு சீவும் பாஜக பற்றி ஒரு வார்த்தை?

இன்று மறைமுகமாக உங்களை கட்டி வைத்து கதற கதற அடிக்கும் மத்திய அரசு பற்றி ஒரே ஒரு வார்த்தை??

இப்படி மத்திய அரசு பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் , திமுக பற்றியே நீங்கள் அழுதுகொண்டிருக்க உங்களுக்கு சொல்லி கொடுத்தது யார்?

ஜெயா மறைவுக்கு திமுக காரணமா?

கொள்ளையடித்த தண்டனைக்கு ஜெயா தண்டிக்கபட்டிருக்கின்றார், அந்த நியாயத்திற்கு போராடியது திமுக என்றால் உங்கள் பாஷையில் அது கொலையா?

நியாயத்தினை கேட்பது கொலை என்றால் அது உங்களை பொறுத்தவரை கொலையாகவே இருந்து தொலையட்டும்..

சரி இவ்வளவு பேசும் தம்பிதுரை, ஜெயா மரணத்திற்கு என்ன காரணம் என டெல்லி எம்ய்ஸ் டாக்டர்களிடம் கேட்க தயாரா? அவர்களிடமும் ஒரு அறிக்கை உண்டு

அதை கேட்கவே மாட்டார், மாறாக கள் குடித்த கரடியாக சகலமும் திமுக என கத்திகொண்டே இருப்பார், இது முற்றிவிட்ட வியாதி

இவ்வளவு நடந்தபின்னும் திமுகவினை சாடினால்தான் அரசியல் செய்யமுடியும் என்பதை நம்பினால்…அந்தோ பரிதாபம்.

 
 
 

அரசியலில் எல்லாம் சாத்தியம்….

சில மர்ம காரியங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன, சில விஷயங்கள் புகைகின்றன, இந்த புகையினை அப்படியே முகர்ந்து பார்த்தால் சில விஷயங்கள் புரியலாம்

தீபக் என்பவர் கொந்தளிக்கின்றார், ஆனால் தீபா அவரை சந்தேகமாக பார்க்கின்றார்

களத்தில் நடராஜன் பகிரங்கமாக குதித்தபின் இன்னும் களம் வித்தியாசமாகின்றது

பழனிச்சாமி ஒரு மாதிரி முணுமுணுக்கின்றார், அவருக்கு சிக்கல் என சில தகவல்கள் வருமாறு பார்த்துகொள்ளபடுகின்றன, அதே நேரம் தினகரன் எல்லோரும் கட்சிக்கு வரவேண்டும் என அறிவிப்பு செய்கின்றார்

சசிகலா புஷ்பா போன்றோர் இன்னும் ஒதுங்கியே இருப்பதும் கவனிக்கதக்கது

தினகரன் அழைப்பு விடுத்த இரு நாட்களில் பன்னீரின் வசனங்கள் மாறுகின்றது, ஒரு அதிரடியான வசனங்களும் இல்லை. ஏதோ சொல்லவந்தவர் கூட தடுமாறி நிறுத்திகொண்டார்

தீபா கட்சி என அறிவித்தபின் அது இன்னும் சூடுபிடிக்கின்றது,

பன்னீரின் பேச்சுக்கள் இன்னும் மாறுகின்றதை கவனிக்கலாம்.

ஜெயாபடம் தொடர்பாக ஸ்டாலினை கண்டிக்கின்றார், அதிமுகவினை ஸ்டாலினால் அழிக்கமுடியாது என்கின்றார், அதாவது சசிகலா, தினகரன் சொன்னதையே பன்னீரும் சொல்கின்றார்

அதாவது  பன்னீர் அவர்களோடு நெருங்குகின்றார்

வியூகங்கள் எங்கோ நன்றாக வகுக்கபடுகின்றன, மறுபடியும் பன்னீரை முதல்வராக்கி கட்சியினை வலுவாக்கும் முயற்சிகள் நடப்பது புரிந்துகொள்ள முடிகின்றது

பன்னீர் விரைவில் அங்கு சென்று சரண்டராகலாம், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன‌

அரசியலில் எல்லாம் சாத்தியம்….


கிரிகெட்

ஸ்டீவ் கீபே சுழலில் இந்திய அணி சிக்கி படுதோல்வி

இந்த கீபேயின் பயிற்சியாளர் ராம் என்பவர் தமிழராம், ஆக ஒரு தமிழனின் மறைமுக உழைப்பில் இந்திய அணி வீழ்த்தபட்டிருக்கின்றது

அப்படி இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் கொம்பினை சீவிய தமிழர் ஒருவேளை அங்கிள் சைமனின் கட்சிக்காரராக இருப்பாரோ?


 

 
 

ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம்….

ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம் இவற்றை பற்றி பேசிகொண்டிருப்பவர்களுக்கு பெரும் வாய்ப்பினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்திருக்கின்றார்

பவுலர் பந்து வீசும்பொழுது இதோ ஸ்டம்ப் என பேட்ஸ்மேன் ஒதுங்கிகொண்டால் எப்படி இருக்கும்? அப்படி பெரும் வாய்ப்ப்பு கொடுத்திருக்கின்றார்.

ஜெயா விவகாரத்தில் இன்றுவரை இருக்கும் மர்மம் அவர் அப்பல்லோவில் இருந்தபொழுது ஏன் படமோ, வீடியோவோ இல்லை என்பது

அதுவும் ஜெயாவினை யாரும் சந்திக்கவில்லை என்பதும் உண்மை, ஆனானபட்ட ஆளுநர் கூட தள்ளி இருந்து கண்ணாடி துவாரம் வழியாக ஜெயாவினை பார்த்தார் என்பதுதான் இதுவரை உள்ள செய்திகள்.

அப்பல்லோவும் எங்களிடம் சிசிடிவி இல்லை, ஸ்கேன், எக்ஸ்ரே தவிர எந்த கருவியும் எங்களிடம் இல்லை என சொல்லியிருக்கின்றது, லண்டன் டாக்டர் பீலேயும் லண்டன் மகாராணி படம் முன் சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக அதனையே சொன்னார்

இப்படியாக அந்த சர்ச்சைகளில் படமும், வீடியோவும் கிடையவே கிடையாது என அவர்கள் சத்தியம் செய்து சாதித்துகொண்டிருக்க, திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக சறுக்கியிருக்கின்றார்

அதாவது இவர் ஜெயாவினை அனுதினமும் பார்த்தாராம். இவர்களிடம் ஜெயா நிறைய விவாதித்தாராம், அதுவும் ஒரு நாளைக்கு 10 தடவை சந்தித்தாராம்.

அதனை விட பெரும் சர்ச்சை , அதனை எல்லாம் போட்டோ, வீடியோ எல்லாமும் எடுக்கபட்டிருக்கின்றதாம்

எப்படி வாய்ப்பினை கொடுத்திருக்கின்றார் பார்த்தீர்களா?

நல்ல எதிர்கட்சி தலைவர்களும், வாய்ப்பு கிடைத்தால் அடித்து ஆடும் எதிர்கட்சிகள் இந்நிலையில் அடித்து ஆடலாம்

பெரும் பரபரப்பான விஷயமாக இதனை கொண்டு வரலாம்

ஒரு அமைச்சர் இப்படி பேசுகின்றார், அப்பல்லோ அப்படி பேசுகின்றது என சரசரவென அடித்து நொறுக்கலாம்

கலைஞர் போன்றோர் இருந்தால் அப்படி செய்வார்கள்.

இப்போதுள்ள எதிர்கட்சிகளுக்கு இப்படி ஆடும் எண்ணமெல்லாம் இல்லை, இவர்கள் வேறு மாதிரி

பேட்ஸ்மேன் ஸ்டம்பை காட்டி நின்றாலும், நான் புறவாசல் வழியாக விக்கெட் எடுக்கமாட்டேன் என அம்பையரிடம் சொல்லிவிட்டு, பேட்ஸ்மேனை ஸ்டெம்பை மறைக்க சொல்வார்கள்

பின் எப்படி ஆட்டம் சுவாரஸ்யமாகும்?

 
 
 

டிரம்புக்கு மெலீனா போனால் என்ன அடுத்தது கெலினா…

Image may contain: 1 person, smiling, close-up

மற்ற நாட்டுக்காரர்களை எல்லாம் கிளம்புங்கள், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என டிரம்ப் சூறாவளியாக கிளம்பும் வேளையில் அவரின் மனைவியும் கிளம்புவாரா? என்ற சர்ச்சை வந்துள்ளது

அதாவது டிரம்ப் பெரும் தொழிலதிபர், பெண்கள் விஷயத்தில் மன்னன் சாலமோன், தசரதன் வகையறா. நல்ல ரசிகன், அவர் தோட்டத்தில் நடமாடும் ரோஜாக்கள் நிறைய உண்டு, அதில் சிலவற்றை தன் கையில் ஏந்திகொள்வார்.

சுருக்கமாக சொன்னால் நம்ம ஊர் ஜெமினி கணேசன் பாணி

அப்படி டிரம்பின் தற்போதைய மனைவி மெலீனா சொல்வீனிய நாட்டினை சேர்ந்தவர், மாடலங் பிழைப்பிற்காக அமெரிக்கா சென்றவர் டிரம்பின் கண்ணில் பட்டு பின் அவர் மனைவியர் வரிசையில் இடம்பெற்றார்

அம்மணி, கிரீன் கார்டு மற்றும் குடியுரிமையில் அவரின் வருமானம் குறித்து தெரியபடுத்தவில்லை, விசாவில் வந்த காலத்தில் பெரும் பணம் குவிந்திருக்கின்றது எப்படி? (இது அவர்களுக்கு தெரியாதா? ஆனால் சட்டம்  ), என சர்ச்சைகள் வெடிக்கின்றன‌

அமெரிக்க சட்டபடி இது பெரும் குடிநுழைவு குற்றமாம்

டிரம்ப் என்ன செய்யபோகின்றார்?, வால்டர் வெற்றிவேல் சத்யராஜ், தங்கபதக்கம் சிவாஜி போல சட்டமா? உறவா? என பெரும் குழப்பத்தில் இருக்கின்றார் என செய்திகள் சொல்கின்றன‌.

மனிதரோ கொஞ்சமும் அசந்ததாக தெரியவில்லை

அவருக்கு மெலீனா போனால் என்ன அடுத்தது கெலினா…

“மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல இரண்டல்ல வண்ண மீன்கள்….”