அப்போலா பீலே அல்லது பீலா ?

போகிற போக்கினை பார்த்தால் தமிழக போலி டாக்டர்கள் கூட பரவாயில்லை போலிருக்கின்றது

ஜெயாவின் கடைசி காலங்களில் சிகிச்சை அளித்துவிட்டு கைவிரித்துவிட்டு காசை வாங்கிகொண்டு லண்டன் பறந்தவர் டாக்டர் பீலே

இப்பொழுது வந்து அப்பல்லோவில் உடற்கூறு நிபுணர் போல் வகுப்பெடுத்து கொண்டிருக்கின்றார்

ஜெயா சிகிச்சையின் பொழுதோ, அவர் மறைந்தபொழுதோ அன்ன்னார் ஏதோ சொல்லி சமாளித்தார் என்பது குறிப்பிடதக்கது

இப்பொழுது இவர் இங்கு வந்து வகுப்பெடுக்க என்ன அவசரம்?

இந்திய கோர்ட் அழைத்ததா? ஏதும் கமிஷன் அழைத்ததா? இல்லை டெல்லி மருத்துவகுழு அழைத்ததா?

இல்லை மத்திய அரசு அழைத்ததா? இல்லை

பின் ஏன் தானாக வந்து இந்த பிப்ரவரி 6ல் அழுதுகொண்டிருக்கின்றார்?

அப்படி வந்தவர் ஒரு மாநில முதல்வரின் மர்மத்தில் 10 இந்திய டாக்டர்கள் முன் வாக்குமூலம் அளிக்கவேண்டுமா? இப்படி ரோட்டில் சின்னம்மா வாழ்க என்பவன் போல தமிழக டிவிக்களிடம் பேசிகொண்டிருக்க வேண்டுமா?

என்ன நடக்கின்றது இங்கே? ஒன்றுமே புரியவில்லை

முன்பு வருவதும் போவதும் தெரியாமல் இருந்தவர், இப்படி நித்தியானந்தா ஸ்டைலில் விளக்கிகொண்டிருப்பது ஏன்?

இதனை லண்டனில் இருந்து சொல்ல கூடாதா?

முன்பு எல்லோரும் கேட்கும்பொழுது மன்மோகன் போல இருந்துவிட்டு இப்பொழுது வைகோ போல பேசிகொண்டிருக்க என்ன வந்தது?

இந்த அறிவிப்பினை இப்பொழுது அதாவது பிப்ரவரி 6ல் சொல்ல என்ன அவசரம்?

ஒரே ஒரு அவசரம்

அதாவது சசிகலா பிப் 7 அல்லது 9ல் முதல்வராகின்றாராம்., அதுதான் அவசரமேயன்றி வேறல்ல‌

எந்த புத்திசாலியும் இறுதி பதற்றத்தில் பெரும் தவறு செய்வான் என்பது புலனாய்வுதுறை பாலபாடம்.

இந்த செயற்கை கூட்டமும் பிலேயின் விளக்கமும், நடராஜன் இன்று அப்பல்லோவில் இருப்பதும் எதனை சொல்ல வருகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்

இனியும் ரகசியமாக சிரிக்க என்ன இருக்கின்றது?

வாய்விட்டு சத்தமாக சிரிக்கின்றது தமிழகம்

டாக்டர்..ஹஹஹஹஹ,, நடராஜன்..ஹஹஹ்ஹா அப்பல்லோ..ஹிஹிஹிஹ் அது என்னது செல்பிஸா செல்பியா ஹஹஹாஹா..முடியல்லா

எப்பா ஜெயலலிதா செத்துவிட்டார், அவ்வளவுதானே விடுங்கள்.

ஆட்சி வேண்டுமென்றால் போய் அமர்ந்துகொள்ள வேண்டியதுதானே, அதற்கு ஏன் இவ்வளவு சீரியஸ் நாடகம்?

ஆனாலும் தமிழக டாக்டர்கள் இவ்வளவு மோசமல்ல….

இவ்வளவு நாளும் லண்டனின் பர்கர் சாப்பிட்டுவிட்டு சசிகலா பதவியேற்க முந்தையநாள் வந்து எப்படி பதிலளிக்கின்றார்? இவர் எல்லாம் வக்கீலுக்கு படித்திருக்கவேண்டிய நபர்.

சரி லண்டன் டாக்டர் பேசிவிட்டார், இந்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் எப்பொழுது பேசுவார்கள்?

ஏம்மா தமிழிசை, ஏம்பா அன்புமணி நீங்கல்லெம் டாக்டர்கள் தானே, கொஞ்சம் இவரின் அறிக்கையினையும் அந்த ஏய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையினையும் ஒப்பிட்டு தமிழகத்திற்கு ஏதும் சொல்ல கூடாதா?

நீங்களாவது நல்ல டாக்டர்களா? இல்லை இந்த பீலே வகையறாவா?

இருக்கட்டும்

மிஸ்டர் பீலே தயவுசெய்து பேட்டியினை முடிக்கும்பொழுது மறக்காமல்

“சின்ன அம்மா சசிகலா ஜெயலலிதாவினை நன்கு கவனித்தார், அவர் நல்லவர், ஜெயா சாகும் பொழுது சசிகலாவிடம் தமிழகத்தை கவனிக்க சொல்லிவிட்டு செத்தார்

எனக்கு தெரிந்த தமிழில் அது நன்றாக புரிந்தது.

என்னிடம் கூட அடிக்கடி சசிகலாவின் பெருமைகளை சொல்லிகொண்டிருந்தார்.

முதல்வராகும் சசிகலாவிற்கு வாழ்த்துக்கள், சசிகலா ஆட்சியில் அப்பல்லோ வளரட்டும்..”

இப்படி சொல்லிவிட்டு செல்லுங்கள், ஜெயா டிவிக்கும், சில அடிமைகளுக்கும் பெரும் புண்ணியமாய் போகும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s