ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர்

ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர்

‘அந்த ரஞ்சித் பய பேச்ச கேட்டு இனி மலேசிய கதைகளில் நடிக்காதீங்க, அவனுக்கு ஒண்ணுமே சரியா தெரியல‌

எங்க நாட்டினை பற்றி உண்மையினை நல்லவிதமாக சொல்லும் கதைகளில் நடியுங்கள்” என மலேசிய பிரதமர் சொல்லியிருப்பாரோ?

ஆனாலும் ரஜினிக்கு மச்சம், பல‌ நாட்டு அதிபர்களும் தேடி வருகின்றார்கள்

இலங்கை அதிபரை சந்திக்க முடியாமல் திருமா தடுத்தாலும், மலேசிய பிரதமரை தன் வீட்டிலே சந்தித்து “ஹா ஹா ஹா” என சிரித்துகொள்கின்றார் ரஜினி

அவர் விதி அப்படி….

கபாலியால் எழுந்த சர்ச்சைகளை மிக அழகாக சமாளிக்கின்றார், அந்த கசப்பு மறைந்து, இனி ரஜினிக்கு “டத்தோ” பட்டம் கிடைக்கலாம்..

 
 
 

ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால்…

பல விவசாயிகள் வாழவில்லையா? விவசாயத்தில் அப்படி என்ன நஷ்டம்? எல்லா மார்க்கெட்டிலும் காய்கறிகள் குவிந்துதானே கிடக்கின்றது?

இப்படி எல்லாம் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள்

அந்த விவசாயம் எப்படி நடக்கின்றது என கவனியுங்கள், அந்த தொழில் யாரையாவது அந்த குடும்பத்தில் ஓட அடித்திருக்கும், கதற கதற விரட்டியிருக்கும்

அவனும் எங்கெல்லாமோ ஓடி கையில் கொஞ்சம் பணம் சேர்ப்பான், சேர்த்தவுடன் புத்தி எங்கே போகும்?

கிணற்றில் நீர் இருக்கின்றதா? ஏதாவது நிலத்தில் செய்யலாமா? நாம் இல்லாவிட்டாலும் வீட்டில் யாராவது பார்த்துகொள்வார்கள்.

கினற்று நீர் வற்றிவிட்டால் 4 போர்வெல் அமைத்தாவது பார்த்துகொள்ள முடியாதா?

பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மண்ணுக்கும் மனிதனுக்குமான ரத்தபாசம் இது, விவசாய குடும்பத்தில் பிறந்த யாரும் இதற்கு தப்ப முடியாது

அப்படி எங்கோ இருந்து கொண்டு சொந்த மண்ணில் விவசாயத்தை தாங்கி பிடிப்பவர்கள் உண்டு

தாயினை, தந்தையினை விவசாயத்தில் தோற்க விடாமல் அவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல‌.

விவசாயம் இல்லை என்றால் மறுநொடி ஊரை காலிசெய்ய வேண்டியதுதான், மண்ணை விட்டு போவது சாதரண விஷயமா? நாம் தான் சென்றுவிட்டோம், அவர்களாவது அங்கேயே இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நடக்கும் போராட்டம் அது

இன்று தமிழகத்தின் வளமான விவசாயிக்கு இப்படி அண்ணனோ, தம்பியோ, மகனோ இருக்க கூடும். எங்கோ தொலைநாட்டிலோ, தொலைதூரத்தில் எந்த அலுவலகத்தில் இருந்தாலும் தமிழகத்தில் விளையும் விவசாய பொருட்களில் அவனின் உழைப்பும் இருக்கின்றது.

அவன் சிங்கப்பூரில் இருக்கலாம், அமெரிக்காவில் இருக்கலாம், அரேபிய எண்ணெய் வயல்களில் இருக்கலாம், சென்னையில் மும்பையில் எங்காவது கணிணி முன் இருக்கலாம்

இல்லை எங்காவது கண்காணா தேசத்தில் பாடுபட்டுகொண்டிருக்கலாம்.. ஆனால் அவன் விவசாயத்திற்கும் பாடுபடுகின்றான், அவன் பணத்தில்தான் ஊரில் விவசாயம் நடக்கின்றது..

ஒரு விவசாயி வாழ்கின்றான் என்றால், அதற்காக எவனோ எங்கோ உழைத்துகொண்டிருக்கின்றான் என பொருள்

ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால், அவன் படும் பாடுகளை எல்லாம் உள்வாங்கி அவன் வீட்டில் வைராக்கியமாக ஒரு வாரிசு வளர்கின்றது என அர்த்தம்

அந்த தொழில் வித்தியாசமானது, லாபம் என நடத்தவும் முடியாது, நஷ்டம் என்றால் விட்டுவிட்டு ஓடவும் மனம் வராது

எங்கோ இருந்து தன் குடும்பத்த்தின் விவசாயத்திற்கு உதவும் எல்லோரும் விவசாயியே, அதில்தான் இந்த அளவாவது விவசாயம் வாழ்கின்றது

மண்ணை பிரிந்து, குடும்பத்தை பிரிந்து அவர்கள் விவசாயத்தில் தோற்றுவிட கூடாது என்பதற்காக தன்னை வருத்தும் ஒவ்வொருவனும் இன்று பாதிக்கபட்ட விவசாயிதான்,

அவனது பாதிப்பு வேறுமாதிரியானது, அவன் இழப்பது ஏராளம்

விவசாயத்தை மன நிறைவாக செய்துவிட்டு, சாப்பாட்டிற்காக‌ மகனின், அண்ணனின் தம்பியின் சில இடங்களில் மகளின் பணத்திற்காக காத்து நிற்கும் எத்தனையோ குடும்பங்கள் உண்டு,

குடும்பத்திற்கொருவர் செய்யும் தியாகத்தினால்தான் விவசாயம் ஓரளவு வாழ்கின்றது,

எல்லா விவசாய குடும்பங்களுக்கு பின்னாலும் அப்படி ஒரு தியாக வாழ்வு இருக்கின்றது, தனிமையில் அழுதும், அவர்களின் நிம்மதியினை நினைத்து மகிழ்ந்தும் வாழும் ஒரு விதமான வலி

அது வார்த்தையால் விளங்காத வலி.

சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்

தக்காளி விலை சரிந்தால், கிலோ 10 பைசா என சந்தோஷபடுவனும், காய்கறிகடையில் 50 பைசா கூட கொடுக்க ராம்ஜெத்மலானி போல வாதம் புரிபவனும்தான் இன்று விவசாயிக்கு ஆதரவாக பேசிகொண்டிருக்கின்றான்

வெங்காய விலை ஏறினால் சீறுபவன் தான் இன்று விவசாயிக்கு ஆதரவாம்

உணவகத்தில் வாழை இலை போட்டால் செலவு என பாலித்தீன் பேப்பர் போடுபவன் எல்லாம் இன்று விவசாயிக்கு கத்திகொண்டிருக்கின்றான்.

மோட்டார் முதல் பைப் வரை பாமர விவசாயிடம் கொள்ளை விலைக்கு விற்கும், விவசாயிக்கு செல்லவேண்டிய நீரினை கேன்வாட்டர், கோக் என விற்றுகொண்டிருக்கும் வியாபார சமூகமும் விவசாயிக்கு கண்ணீர் விடுகின்றதாம்

எல்லா வகையிலும் விவசாயினை வஞ்சிப்பது இந்த சமூகம், அரசு மட்டுமல்ல‌

இந்த சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்

காய்கறி கடையில் ஒவ்வொரு நகரத்துவாசியும் 50 பைசா உயர்த்தி கொடுத்தாலே, அது மிக சரியாக விவசாயி கையில் கிடைத்தாலே போதும்,,வாழை இலை, இளநீர் முதலான விவசாய பொருளுக்கு வரவேற்பு இருந்தாலே போதும்

மோட்டார் கடைகளில் விவசாயியினை வஞ்சிக்காமல் இருந்தால் போதும்.

உரக்கடைகளில் அவனுக்கு நியாயமான விலையில் பொருள் கிடைத்தால் போதும்

வியாபார இடைதரகர்கள் கொஞ்சம் நியாயமாக நடந்தால் போதும், லாரி போக்குவரத்துக்காரகள் கொஞ்சம் இரக்கபட்டால் போதும்

மொத்தத்தில் இந்த சமூகத்தின் எல்லா பிரிவும் கருணை காட்டினாலே போதும் விவசாயி வாழ்வாங்கு வாழ்வான்

அவனிடமிருந்து எல்லாவற்றையும் வாங்கும் சமூகம், அவன் தடுமாறும்பொழுது தாங்கிபிடிக்கவும் கடமைபட்டிருக்கின்றது

தன்னை காக்க இந்த சமூகம் உண்டு என்ற நம்பிக்கை வருமானால் அவன் ஏன் சாக போகின்றான்?

அவன் தடுமாறும்பொழுது தாங்கிபிடித்தால் போதும், அவன் தன்னை நிலை நிறுத்திகொள்வான்..

மாறவேண்டியது அரசு மட்டுமல்ல, மக்களும் தான்..

அம்மணமாய் ஆர்பரிப்போம் ….

17629607_10208790310490215_2746004724359133667_n.jpg

டெல்லியில் நடக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குழு போராட கிளம்பிற்று

அது ஒரு விவகாரமான குழு என்பதால் வித்தியாசமாக சிந்தித்துவிட்டது, அதாவது நாடே நம்மை திரும்பிபார்க்க வேண்டும் என யோசித்திருக்கின்றார்கள்

சும்மா கத்தினால் நாய் கூட திரும்பாது, அப்படியானால் கத்தி பியோஜனமில்லை, எதையாவது அதிரடி காட்டினால் தேசம் திரும்பும்,

காட்ட வேண்டும், எதனையாவது காட்ட வேண்டும்

இந்த வேகத்தில் சிந்தித்தபொழுது அவர்களுக்கு டெல்லி விவசாயிகளின் துன்பம் நினைவுக்கு வரவில்லை, மாறாக கோவணம் நினைவுக்கு வந்துவிட்டது, அதனை துறந்துவிட்டால்…

மனதிற்குள் உலகமே திரும்பிபார்க்கும் உணர்வு வந்துவிட்டது

உடனே அறிவித்துவிட்டார்கள் “அம்மண போராட்டம்”, “அம்மணமாய் ஆர்பரிப்போம்”

சொன்னதோடு மட்டுமல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள், அதவாது “அம்மணமாய் ஆர்பரிப்போம்” எனும் அறிவிப்பு போஸ்டர்

மற்றபடி ஆளவந்தான் கமலஹாசன் பாணியில் அல்ல‌

சொன்னால் போதாதல்லவா? சொன்னபடி செய்யவும் தெருவுக்கு வந்துவிட்டார்கள், காவல்துறைக்கு வியர்த்துவிட்டது

போட்டு சாத்தலாம்தான், ஆனால் அடிக்க அடிக்க அவிழ்த்துவிட்டால் கருமத்தை என்ன சொல்ல..

அதனால் பிடித்து வைத்து புத்திசொல்லிகொண்டிருக்கின்றார்கள், பொது இடத்தில் இது சட்டவிரோதம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

காவல்துறை சொற்படி கேட்டு கலைந்து சென்றாலோ இல்லை வேறு வழியில் போராட சிந்தித்தாலோ அவர்களுக்கு நல்லது

இல்லாவிட்டால் உங்கள் விருப்படி நில்லுங்கள், இங்கு அல்ல கம்பிகளுக்கு பின்னால் என இழுத்து செல்லபடுவார்கள்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக எண்ணிகொண்டு, சன்னி லியோனுக்கு ஆதரவாக கிளம்பியிருக்கின்றார்கள்,

வைகோ நிகழ்த்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

 

17626679_10208789871199233_5074877473536338642_n.jpg

மதிமுக எனும் கட்சி ஈழதமிழர்களுக்காக‌ நிரம்ப உழைத்தாகிவிட்டது, இப்பொழுது தமிழர்களுக்காக உழைக்க கிளம்பிவிட்டது

எம்ஜி ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா நடத்தி தன் பெரும் தார்மீக கடமையினை அது நிறைவேற்றிகொண்டிருக்கின்றது

தமிழர்களை மகிழ்வித்த எம்ஜிஆருக்கு அது நூற்றாண்டு விழா நடத்துகின்றது

வைகோ சரோஜாதேவியினை அழைத்தெல்லாம் எம்ஜிஆர் நிகழ்ச்சி நடத்துகின்றார், வெண்ணிற ஆடை நிர்மலா, லதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை என தெரியவில்லை

எம்ஜிஆர் இருக்கும் வரை அவரை தீவிரமாக எதிர்த்த கோப்பால் சாமி, இப்பொழுது எம்ஜிஆர் புகழ்பாட காரணம் என்ன?

செத்து 30 வருடன் ஆனபின்புதான் எம்ஜிஆர் பற்றி படித்தாரா? அவ்வளவு மெதுவான மூளை கொண்டவரா வைகோ, அட பரிதாபமே…

மிஸ்டர் வைகோ

எம்ஜிஆருடன் 1960களில் பணியாற்றிய சரோஜாதேவியினை அழைத்திருக்கின்றீர்கள், இன்னும் எம்ஜிஆரோடு பழகிய எத்தனையோ பேரினை மேடையேற்றியிருக்கின்றீர்கள்

ஆனால் 1940 முதல் எம்ஜியாரோடு பழகி, அவருக்கு வசனம் எழுதி, அவரை எம்.எல்.ஏ ஆக்கி பின்னாளில் முதல்வரே ஆக்கிய ஒருவர் கோபாலபுரத்தில் இருக்கின்றார்

ஒரு தேங்காய் மூடி வக்கீலாக வாழ்க்கையினை தொலைத்திருக்கவேண்டிய உங்களை பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ, எம்பி பின் கட்சி தலைவர் என உருவாக்கியதும் அவர்தான்

ஆக எம்ஜிஆரை உருவாக்கியவர், உங்களை உருவாக்கியவர் என இரு நன்றிகடன்கள் உங்களுக்கு இருக்கின்றன‌

இன்று எம்ஜிஆருக்கு நடக்கும் கூட்டத்தில் அமர முழு தகுதிபடைத்தவர் அவரே

அவரை ஏன் நீங்கள் அழைக்கவில்லை மிஸ்டர் வைகோ???

கலைஞருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியாததெல்லாமா சரோஜா தேவிக்கு தெரிந்துவிடும்???

எம்ஜிஆருக்கு விழா சரியாக ஆர்.கே நகர் இடைதேர்தலின்பொழுதுதான் நடத்தவேண்டுமா? கொஞ்ச நாள் கழித்து நடத்தினால் எம்ஜிஆர் கல்லறையோடு கடலுக்குள் விழுந்துவிடுவாரா?

அது இருக்கட்டும் …

ரஜினியும் சினிமாவிற்கு வந்து 42 ஆண்டுகள் ஆகின்றன, இன்னும் 8 வருடத்தில் 50ம் வருடம் கொண்டாடபடும்

அன்று நீங்கள் இதே போல ஸீரிதேவி, லட்சுமி, மாதவி, அம்பிகா, ராதா, சரிதா என எல்லா ரிட்டையர்டு நடிகைகளையும் தேடிபிடித்து வந்து விழா நடத்தி ஆகவேண்டும்

இல்லாவிட்டால் தமிழர்கள் உங்களை சும்மா விட மாட்டார்கள்

எம்ஜிஆருக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா?

ஆக சரோஜாதேவியினை விமானம் ஏற்றிய கையோடு, இந்த ரஜினியின் முன்னாள் நடிகைகளை தேடிபிடித்து கொண்டுவர கிளம்புங்கள்

இன்னும் 8 வருடம்தான் இருக்கின்றது, யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்…

ஈழம்பிடிப்பேன் என தோணியேறி போனவர், இப்பொழுது சரோஜாதேவியினை பிடித்து வந்திருக்கின்றார்….

குஷ்பூ நடித்த ‘வெற்றி விழா’ , மறுவெளியீடு காண்கிறது…

 

குஷ்பூ நடித்த வெற்றி விழா படம், விரைவில் மறுவெளியீடு காண்கின்றது : செய்தி

சமீபகாலமாக வந்த செய்திகளில் மகிழ்ச்சியான செய்தி இதுதான், அதுவும் இன்று செய்யும் அலப்பரை ரணங்களுக்கு இந்த செய்திதான் இதமாகின்றது

விரைவில் வரட்டும் பட்டையினை கிளப்பிவிடலாம்

மிஸ்டர் Babu Rao , டேரா படம் வரும்பொழுது குஷ்பூ ரசிகர்களுக்கு இட்லி கொடுப்பீர்களா? அதுவும் மூத்தவர்களுக்குத்தான் கொடுப்பீர்களோ?

முடிந்தால் ரஜினி படம் வெளியிடும் நாளில் பல்செட்டும், விக்கும் கொடுத்து பாருங்கள் பார்க்கலாம்…

வெற்றிவிழா படம் ஒரு குஷ்பூ இருந்த ஒரே காரணத்திற்காக ஓடிய படம், அவர் ஒருவரே காரணம்..

ஜோடியாக போட்டிருந்தால் தான் தெரியமாட்டோம் குஷ்பூ தான் நிற்பார் என கமலஹாசனே அப்படத்தில் அஞ்சியிருந்தார்..

அதையும் மீறி படத்தில் குஷ்பூதான் நின்றிருந்தார்

படம் மறுபடி வரட்டும், இந்த நயனின் ரசிகர்களுக்கெல்லாம் அன்று பென்சிலும், சாக்லெட்டும் வழங்கபடும்

போங்கடா எல்.கே.ஜி பாய்ஸ்…

“கனியிருப்பக் காய்கவர்ந் தற்று..”

 

ஜெ. இறப்புக்குப்பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் உயிர் பெறுகிறது

17498750_10208789596312361_8309014779909013257_n.jpg

ஜெ. இறப்புக்குப்பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் உயிர் பெறுகிறது : செய்தி

இது என்ன ஆச்சரியம்?

அவர் இறந்தபின்புதான் அவர் கட்சியிலே பலருக்கு உயிரே வந்திருக்கின்றது, அதுவரை நடைபிணமாக இருந்தவர்கள் எல்லாம் உயிரோடு அலைகின்றனர்

பன்னீர், மதுசூதனன் வரை எத்தனையோ உயிர்பெற்று நலம் பெற்று உலவும் பிணங்கள் உண்டு…

பிஎச் பாண்டியன் முதல் தம்பிதுரை வரை நலம் பெற்ற முடவர், செவிடர், குருடர் உண்டு..

“இதோ குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றன, செவிடர் கேட்கின்றனர்” என்ற பைபிளின் வரிகள் ஜெயா இறப்புக்கு பின்புதான் அதிமுகவில் நிறைவேறிகொண்டிருக்கின்றது

இதில் அண்ணா நூலகம் புத்துயிர் பெறுகின்றதாம்.. என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

விரைவில் புதிய சட்டமன்ற கட்டமும் புத்துயிர் பெறத்தான் செய்யும், அதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை..

 
 

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்

17626505_10208789536990878_945410918179769276_n.jpg

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல்கள் பல உண்டு, அவற்றில் ஒரு கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்

பெரும் கடத்தல் தலைவன் இவனே, இவனை 2015ல் ஆந்திரபோலிஸ் கைதுசெய்துவிட்டது, ஆனாலும் கடத்தல் தொடர்ந்தது

எப்படி என போலிஸ் விசாரித்தபொழுதுதான் லட்சுமணனுக்கு கல்கத்தா காதலி இருப்பதும், அவள் கேங் லீடரான கதையும் தெரிந்தது

அவள் கல்கத்தா நடிகை சங்கீதா, செம்மர கடத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது,

கடத்தல் ராணியாக மாறினாள் சங்கீதா,போலிஸ் வலை விரித்தது

ஆனால் அவள் சிக்கவில்லை, போலிசுக்கு தண்ணி, மினரல்வாட்டர், ரோஸ் வாட்டர் என எல்லாமும் காட்டினாள், பிடிபடவில்லை

அழகு நிலையங்கள், சினிமா வாய்ப்புகள், பெரும் பணம் என எதற்கும் அவள் சிக்கவில்லை

ஆனால் அம்மணி ஒரு விஷயத்தில் வீக்காக இருந்திருக்கின்றாள், அது அவளின் பீசா பிரியம்

ஆந்திரா போலிஸ் அழகாக வலை விரித்தது

கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்து கட்டளை பிறப்பித்த அவளுக்கு தினமும் 3 பீசா பேண்டுமாம், தகவல் போலிசாருக்கு கிடைத்திருக்கின்றது

பீசா டெலிவரிக்காரனாக போலிசாரையே அனுப்பியிருக்கின்றார்கள், பலமுறை பல பீசாக்களோடு பல போலிசார் சென்றிருக்கின்றனர்

உறுதிபடுத்தியபின் தூக்கி வந்து ஆந்திர சிறையில் அடைத்துவிட்டார்கள், பீசாவிற்கு ஆசைபட்ட அம்மணி இப்பொழுது ஆந்திர கோங்குரா சட்ணிக்கு தள்ளபட்டிருக்கின்றார்

ஆந்திர போலிசுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன, விசாரணை தீவிரமாக நடக்கின்றது, எப்படியும் பீசாவிற்காவது அம்மணி உண்மையினை சொல்வார் என கடும் நம்பிக்கையில் ஆந்திர காவல்துறை இருக்கின்றது

“எவ்வளவு பெரிய உலகளாவிய நெட்வொர்க்கினை , பெரும் மில்லியன் வர்த்தகத்தை, பீசாவிற்கு ஆசைபட்டு காதலி காட்டிகொடுத்துவிட்டாளே, அல்பம் இவளையா காதலித்தோம்.. என பர்மா லட்சுமணன் சுவரில் முட்டிகொண்டிருக்கின்றான்

ஆக பீசா பெரும் கடத்தல் சாம்ராஜ்யத்தை காட்டிகொடுத்திருக்கின்றது

இயக்குநர் ஹரி போன்றோருக்கு, சூர்யா போன்றவர்களுக்கு அடுத்த கதை ரெடி….

 
 

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பங்கள் ..

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பஙகள் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம்.

பெரும் கட்சியில் சண்டைவந்தால் அது வியப்பல்ல, ஆனா கருணாசுக்கு ஒரு கட்சி இருப்பதே பெரும் விஷயம், அதில் 4 பேர் இருப்பது அடுத்த ஆச்சரியம், அதில் கருணாஸ் சிலரை நீக்குவதும், அவர்கள் இவரை நீக்குவதும் பெரும் ஆச்சரியம்

அப்படி என்ன நடந்தது?

ஒன்றுமில்லை கூவத்தூர் பொற்காலங்களில் சுமார் 5 கோடி வரை கருணாஸ் அடித்துவிட்டார் என்ற செய்தி வந்தது, அவர் கடனை எல்லாம் அவர் அடைத்தத செய்தி கசிந்தது

நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாயும் பொழுது, ஒட்டுபுல்லுக்கு 2 சொட்டாவது பாயவேண்டும் அல்லவா? அதுதானே கட்சி தர்மம்?

அதுவும் கிடைக்காவிட்டால் எப்படி?

முக்குலத்தோர் புலிப்படை இப்படித்தான் கருணாசை விரட்டியதாக சில செய்திகள் வருகின்றன, கருணாஸ் மறுத்திருக்கின்றார்

கருணாசுக்கே 5 கோடி என்றால்…..

“நான் ஆணையிட்டால்…இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்” என ராமசந்திரன் பாடியதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது

ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இவர்கள் ரெடி..

வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் அரசு 35 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை அனுப்பி வைத்தது.

இலங்கை மிக செழிப்பான நாடு, எல்லா பயிறும் செழித்து வளரும் வளமான பூமி, மகாவலி போன்ற ஆறுகள் ஏராளமான குளங்கள் எல்லாம் உண்டு

அதுவும் வன்னிபகுதி அக்கால‌ தமிழக தஞ்சைக்கு நிகரானது

கடும் யுத்தம் அவர்களின் பல விவசாய நிலங்களை பாழாக்கிற்று, இனி அவை பழைய உருபற்று வர நெடுங்காலம் ஆகும்

பற்றாக்குறைக்கு தமிழகத்தை போலவே அங்கும் கடும் வறட்சி தாக்கிற்று, இதனால் பெரும் உணவுதட்டுப்பாடு நிலவுகின்றது,

இந்நிலையில்தான் பாகிஸ்தான் அரிசியினை அள்ளி கொடுத்து உதவுகின்றது, இவ்வளவிற்கும் இஸ்லாமியர்களை அவ்வளவாக கண்டுகொள்ளாத நாடு இலங்கை, இருந்தும் ஏன்?

அது அரசியல், உலக அரசியல், அது அப்படித்தான்

பாகிஸ்தான் அரிசியில் யாருக்கும் பங்கு போகும்?

தொப்புள்கொடி உறவான ஈழதமிழர்களுக்கும் அந்த உதவி செல்லும்

ஆக ஈழதமிழருக்கும் உணவளிக்கின்றது பாகிஸ்தான், தமிழகத்தில் சத்தமில்லை

இதே அரிசியினை கப்பல் நிறைய‌ மூட்டைகளுடன் இந்தியா அனுப்பியிருந்தால், கூடவே ரஜினியினையும் அனுப்பியிருந்தால் இந்த திருமா முதலான‌ தமிழ் உணர்வாளர்கள் சும்மா இருப்பார்களா?

வீடு கொடுத்ததை தடுப்பது போல, அரிசி கொடுப்பதையும் தடுப்பார்கள்,

ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட மட்டும் இவர்கள் ரெடி..

ஈழவிவகாரங்களிலிருந்து இந்தியாவினை தனிமைபடுத்தும் ஒருவித செயலைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்

புலிகளும் அதனைத்தான் செய்து எல்லாம் நாசமாக்கி எல்லாவற்றையும் அழித்தார்கள்..

இந்தியா விலக விலக சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவுமே அங்கு கால்பதிக்கும் அது இந்தியாவிற்கு நல்லதல்ல‌

ஆக இந்த திருமா முதல உணர்வாளர்கள் செய்வது தேசதுரோகம் என்பதில் சந்தேகமே இல்லை..