பெரியார் சிலையை உடைக்கும் காலம் வரும் : ஆர்எஸ்எஸ் கல்யாண ராமன்

ரஷ்யாவில் ஸ்டாலின் சிலையை உடைத்தது போல,தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்கும் காலம் வரும்”- ஆர்எஸ்எஸ் கல்யாண ராமன்

ஸ்டாலின் ஆட்சியாளர், பெரியார் சிந்தனையாளர்

ஆட்சியாளர்கள் மாறுவார்கள், சிலர் போற்றுவார்கள் பலர் தூற்றுவார்கள்

சிந்தனையாளர்கள் நிலை அப்படி அல்ல, சிந்திக்க சொல்லிகொடுத்த அவர்கள் காலமெல்லாம் வரலாற்றில் நிற்பார்கள்

சாக்ரடீஸ் போல, புத்தன் போல பெரியார் சிந்தனையாளர், அவர் காலத்திற்கும் தேவைபடுபவர்

ஆட்சியாளனுக்கும், சிந்தனையாளனுக்கும் வித்தியாசம் கூட தெரியாதவனெல்லாம் கருத்து சொல்கின்றானாம்

அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் அந்த கும்பலில் இருக்கபோகின்றார்?

 
 
 

குஷ்பூ பாஸ்போர்ட் என்றால் மட்டும் சிக்கலா?

Image may contain: 1 person

இந்த தேசத்தில் விஜய் மல்லையா வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கொடுக்கபடும், லலித் மோடிக்கு கொடுக்கபடும்

மர்ம சாமியார் சந்திராசாமி எனும் ஆசாமிக்கு பாஸ்போர்ட் கொடுக்கபடும்

வழக்கு இருந்தாலும் கனிமொழி வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்கபடும்

சர்ச்சைகுரிய சசிதரூர் போன்றவர்கள் எங்கும் செல்ல பாஸ்போர்ட் கொடுக்கபடும்.

இன்னும் பல சர்ச்சைகுரியவர்கள் எல்லாம் பாஸ்போர்ட் பெற்று சென்றுகொண்டே இருப்பார்கள்,

பலர் திரும்ப வரவே மாட்டார்கள், ஆனாலும் பாஸ்போர்ட் முடக்கபடாது

ஆனால் குஷ்பூ பாஸ்போர்ட் என்றால் மட்டும் சிக்கல் கொடுக்கின்றார்கள், கேட்டால் 2 மாதமாக அலைகழிபார்களாம்

குஷ்பூ மிக நியாயமாக நீதிமன்ற கதவுகளை தட்டியிருக்கின்றார், அவர்களும் பாஸ்போர்ட் கொடுக்க வழி செய்திருக்கின்றார்கள்

கோடிகணக்கான ரசிக கண்மணிகளை கொண்டிருக்கும் ஒரு பெரும் இயக்கத்தின் தலைவியான அவருக்கு இழைக்கபட்டிருக்கும் இந்த அநீதி சாதரண விஷயம் அல்ல‌

பெரும் கொள்ளைக்காரனுக்கும், கொலைக்காரனுக்கும் பாஸ்போர்ட் கொடுக்கும் நாட்டில் வேண்டுமென்றே குஷ்பூ பழிவாங்கபடுகின்றார்

வெகுவிரைவில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கபடும் என நீதிமன்றத்தில் உறுதி செய்யபட்டிருப்பதால் அவரின் ரசிகர்கள் அமைதி காக்கின்றார்கள்.

விரைவில் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கட்டும், கூடவே நீதியும் கிடைக்கட்டும்.

எல்லோருக்கும் ஒரு காலம் வரும், அது குஷ்பூவிற்கு சீக்கிரமே வரும்

அடுத்த தேர்தலில் அவர் மத்திய அமைச்சராவர், இன்று தெரியும்

இது என்ன பாஸ்போர்ட்?

அவர் “டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்” வாங்கி இவர்கள் முகத்தில் கரிபூசும் நாள் தொலைவில் இல்லை

 
 

பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின்

Image may contain: 1 person, sitting and sunglasses

தோன்றிற் புகழோடு தோன்றுக அல்லது புகழ்பெற்றவருக்கு மகனாய் தோன்றுக‌

எனும் வரிகளுக்கேற்ப பிறந்தநாள் கொண்டாடிகொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின்

கட்சிக்கு அவர் உழைத்த உழைப்பினை விட அதிகமாக உழைத்தவர்கள் உண்டு, இன்னமும் உண்டு

அன்பழகன் மேடையில் பேசிய காலங்களிலே அவருக்கு போஸ்டர் ஒட்டியவர் கருணாநிதி, அப்படி ஏராளமானோர் உண்டு

இருந்தும் முக ஸ்டாலினுக்கே முடிசூட்டும் யோகம் அமைந்தது, அரசியல் அப்படித்தான், என்னதான் மக்கள் இயக்கம் என்றாலும் ஒருவகை ராஜநீதியில் தான் அது இயக்கபடமுடியும்

இல்லாவிட்டால் நிலைக்காது

இந்திய கட்சிகள் முதல், வெளிநாட்டு விவகாரம் வரை இது கொட்டி கிடக்கின்றது

ராஜபக்சே முதல் காஸ்ட்ரோ வரை எத்தனையோ குடும்ப விவகாரங்களை காட்டமுடியும்

அதனால் புழழோடு தோன்றியவருக்கு மகனாய் பிறப்பது ஒரு வரம், அதில் மற்றவர்களை விரட்டிவிட்டு வாரிசாய் நிற்கவும் சில திறமைகள் வேண்டும்

பெரும் மாமன்னர்களிடம் அது இருந்தது, வாரிசு சண்டையில் முந்தி சென்று கைபற்றுவதும் ஒரு திறமை, கொஞ்சம் அசந்தாலும் முடித்துவிடுவார்கள்

அது ஸ்டாலினுக்கு இருக்கின்றது, வந்துவிட்டார்

தந்தை மகற்காற்றும் உதவியினை கலைஞர் இவருக்கு ஆற்றிவிட்டார்

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி எப்படி இருக்கபோகின்றது என்பது இனிதான் தெரியும்

 
 

கன்னட சேனல்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரு வணிக வரிதுறையினர் வீட்டில் சோதனை நடத்தி 7 ஆயிரம் சேலைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்

அவை விலை உயர்ந்தவை என செய்திகள் சொல்கின்றன‌

சேலை பறிமுதல் செய்ததை சும்மா சொன்னாலும் பரவாயில்லை

இன்னும் 3 ஆயிரம் சேலைகள் கூடுதலாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் சாதனையினை அம்மணி முறியடித்திருப்பார் என குறிப்பிட்டு கன்னட மீடியாக்கள் சொல்கின்றன‌

ஆம் ஜெயா 10.500 சேலைகள் வைத்திருந்தார் என்பது குற்றசாட்டு

ஜெயாவிற்கு ஏன் அவ்வளவு சேலைகள்??

சட்டசபையில் என் சேலையினை கிழித்தார்கள் என முன்பு அழுதவர் ஜெயா, ஒருவேளை அப்படி கிழிய கிழிய கிருஷ்ணனா காப்பாற்றுவான்? நாம்தான் மாற்றுசேலை வைத்து கொள்ளவேண்டும் என ஜெயா நினைத்திருக்கலாம்.

அதாவது எல்லாவற்றிற்கும் தயாராக அம்மணி இருந்திருக்கின்றார்

சரி இப்படி சேலை சிக்கியதற்கு எல்லாம் கன்னட மீடியாக்கள் ஜெயவினை ஒப்பிட்டு ஏன் செய்தி பரப்பவேண்டும்?

கன்னட சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி செய்திகள் பார்க்கின்றார் என்கின்றார்கள்

மொழி புரியாவிட்டாலும், சேலை பெண்களுக்கு புரியாதா? அதனை பார்த்தவுடன் புரியாத பெண்கள் உண்டா?

அதுவும் சசிகலாவிற்கு புரியாதா?

ஆனாலும் கன்னட சேனல்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.

செய்திகள் அங்கும் இங்கும்…

தனுஷுடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்திரா கணவனை பிரிகின்றார்

ஏற்கெனவே அமலாபால், விஜய் ஜோடி பிரிவிற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது சுசித்ராவின் வாழ்க்கையில் தனுஷ் விளையாடியதால் தான் இப்படியொரு விவாகரத்து சம்பவம் நடக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்புவினை மிக மிக நல்லவராக்க தனுஷ் ஒருவரே போதும் போலிருக்கின்றது

சிம்பு பலபேரினை விட்டு பிரிந்தாரே அன்றி, அவர் யாரையும் பிரித்ததாக செய்தி இல்லை


இந்திய அணியினை எப்படி வீழ்த்தினோம் என ஆஸ்திரேலிய கேப்டன் சொல்லி கொண்டிருக்கின்றார்

அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை

எனக்கென்னமோ ஆஸ்திரேலியர்கள் கையில் இந்திய வீரர்கள் “சொப்பன சுந்தரி”யுடன் இருந்த படம் சிக்கியிருக்கலாம் என தோன்றுகின்றது

அப்படிபட்ட ஆட்டத்தைத்தான் இந்திய அணி ஆடியது.


திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியாரிடம் ஜெயா ஆவி பேசி பரபரப்பு தகவல்களை சொன்னதாம், பன்னீர் செல்வத்தை சந்திக்க அந்த சாமியார் வந்திருக்கின்றாராம்

அடிக்கடி ஆவிகள் பேசுகின்றன, மாநிலம் சுடுகாடாக மாறிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டும் போலிருக்கின்றது

இனி எல்லா ஆவிகளும் பேசும்,

அது என்னவோ ஜெயா ஆவி பன்னீரிடமும், சாமியாரிடம் மட்டும் பேசுகின்றது

நம்மிடம் ஒரு ஆவியும் பேசுவதில்லை, இந்த சில்க் ஸ்மிதா ஆவியாவது வந்து பேசுமா என எதிர்பார்த்திருக்கின்றேன்..


இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு

அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள்

மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு பைபிளில் இதெல்லாம் இல்லை என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்

சரி இதற்கு ஏன் சாம்பல் பூசி தொடங்கவேண்டும்?

அக்காலத்தில் ஒருவனுக்கு தன் பாவம் பற்றி நினைவுக்கு வந்து, அட நாமும் மண்ணாய், சாம்பலாய் அழிய போகின்றவர்கள் அல்லவா? பின் ஏன் இப்படி இருக்கவேண்டும்.

சாம்பலை பூசி நான் அழிய கூடியவன் என்பதனையும், என் பாவ வாழ்வு சாம்பலை போலாகிவிட்டது என்பதையும் உலகிற்கு சொல்வது ஆசிய சம்பிரதாயம்

ஆசியா முழுக்க இது பரவியிருந்தது, அதுவும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதிகம்

யூத மதம் இந்த வழக்கத்தை எடுத்துகொண்டது, அதில் பலர் சாம்பல் பூசி மனம் திரும்பியதை பார்க்கமுடியும். யூத நூல் என்றால் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு, அதில் ஏராள சம்பவம் உண்டு

கிறிஸ்தவம் யூத தொடர்ச்சி என்பதால் கிறிஸ்து சொல்லாமலே அந்த சம்பிரதாயமும் இங்கு கலந்துவிட்டது, இயேசு மனம் திரும்புங்கள் என சொன்னாரே அன்றி, சாம்பல் பூசி விரதம் இருங்கள் என சொன்னதே இல்லை

பிற்காலத்தில் கிறிஸ்தவம் யூதரில் இருந்து உதித்த காரணத்தால் அதில் இந்த சாம்பல் பூசும் சம்பிரதாயம் இடம்பெற்றுவிட்டது

Image may contain: one or more people and close-up

கத்தோலிக்க ஆலயங்களில் இன்று எல்லா கிறிஸ்தவர் நெற்றியிலும் “மண்ணால் உண்டாக்கபட்ட நீ மண்ணிற்கே திரும்புவாய்” என சொல்லி சாம்பல் பூசுவார்கள்

சிலருக்கு “மண்ணாய் போ” என திருவாக்கு அருளும் பாதிரியும் உண்டு.

மண்ணாய் போகும் உடலுக்கு நெற்றியில் மண் பூசினால் என்ன ஏன் சாம்பல் பூசவேண்டும் என ஒருபயலும் கேட்க மாட்டான் என்பது அவர்களின் கூடுதல் வசதி

நேற்று இரவே அக்கப்போரினை தொடங்கியாயிற்று, சாம்பலை பூசி கொண்டு அவர்கள் பாவங்களை நினைக்க தொடங்கிவிட்டார்களாம், மனம் திரும்பவேண்டுமாம், உலகம் சமீபத்தில் அழியுமாம் (2000 ஆண்டுகளாக அதனைத்தான் சொல்கின்றார்கள் என்பது வேறு விஷயம்) என ஏக அழிச்சாட்டியம்

வருடத்தில் ஒருமுறை நெற்றியில் சாம்பலை பூசிவிட்டு இவ்வளவு அட்டகாசம்

கிறிஸ்தவ போதிப்பின் படி உடல் மண்ணுக்கு போக கூடியது, அப்படி சொல்லிவிட்டு மண்ணுக்கு பதிலாய் சாம்பல் பூசுவது ஏன்?

தலை நிறைய மண்ணை அல்லவா கொட்டிவிட வேண்டும், சாம்பல் ஏன்?

அக்காலத்தில் உடலை எரித்தார்கள், இப்படி மிஞ்சுவதுதான் வாழ்வு என ஞானம் பெற்றார்கள். ஆதியில் இருந்த இந்து ஞானம் அது, இன்று வரை நிலைபெற்றிருக்கும் இந்து தத்துவம் அது.

(யூதர் உடலை புதைகவே செய்வார்கள் எனினும் இந்த சாம்பலை பூசும் தத்துவத்தை அது எடுத்துகொண்டார்கள் )

இந்த உடல் அழிய கூடியது, சாம்பலாய் போக கூடியது, இந்த நினைவு எக்காலமும் ஒரு மனிதனிடம் இருக்கவேண்டும் என்ற தத்துவத்திலே சாம்பல் பூசபடுகின்றது

அந்த தத்துவத்திலே இந்துக்கள் அனுதினமும் விபூதியினை நெற்றியில் பூசிகொள்கின்றார்கள்

எல்லா இந்து ஆலயங்களும் விபூதி கொடுக்கும் தத்துவமும் இதுவே, காலை எழுந்து குளித்து இந்துக்கள் நெற்றிநிறைய விபூதி பூசும் தத்துவமும் அதுவே

“நீறு இல்லா நெற்றி பாழ்” என சொல்லியே வைத்திருக்கின்றார்கள்

அதுவும் மூன்று கோடுகளை இட்டு, படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலை செய்பவன் மூவொரு இறைவன் என தியானித்து அவர்கள்முன் மனிதன் வெறும் சாம்பல் எனும் இந்து தத்துவம் அவ்வளவு உயர்வானது

கிறிஸ்தவர்களுக்கோ ஒரு நாள் தான் அந்த தத்துவம் நினைவுக்கு வருகின்றது, அவர்களுக்கோ எந்நாளும் எந்நேரமும் நினைவில் இருக்கின்றது

Image may contain: one or more people

உறுதியாக சொல்லலாம் இந்த விபூதி தத்துவத்தில் இந்துக்கள் உலகிற்கே வழிகாட்டியவர்கள், காட்டிகொண்டிருப்பவர்கள். ஆதி கால அந்த ஆசிய தத்துவத்தை இன்றுவரை கடைபிடித்து வரும் மதம் அது

அனுதினமும் சாம்பலை நெற்றியில் பூசி வாரத்தின் எல்லா நாட்களையும் அனுசரிக்கும் மதத்தவர்கள் அவர்கள்

ஆக கிறிஸ்தவம் மட்டும்தான் இதனை சொல்கிறது என ஒருவன் சொல்வானானால் அவனை பரிதாபமாகவே பார்க்கமுடியும்

உலகின் பெரும் மானிட தத்துவ குறியீட்டினை இந்துக்கள் அனுதினமும் அனுசரிக்க, ஒரு நாள் மட்டும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தினம் இன்று

இந்த விபூதி புதன் எவ்வளவு பெரும் விஷயம் தெரியுமா? என கடும் பிரார்த்தனை செய்து , நெற்றியில் சாம்பலை பூசும் கிறிஸ்தவர்களை நல்ல இந்துக்கள் அர்த்தமுள்ள புன்னகையுடன் கடந்து செல்வார்கள்

ஐரோப்பாவில் ஆப்ரிக்காவில் இந்த விபூதி புதனை அனுசரிப்பதில் அர்த்தம் உண்டு,

ஆன்மீக பூமியான இந்தியாவில் அதுவும் சுற்றிலும் எல்லோரும் விபூதியும் பட்டையுமாக அலையும் நாட்டில் வருடத்தில் ஒருநாள் சாம்பல் பூசிகொள்வதில் பெருமைபடவோ, அர்த்தபடவோ ஒன்றுமே இல்லை

இந்த விபூதி தத்துவத்தில் இந்து மதம் ஒரு படி அல்ல பல கிலோ மீட்டர் உயர‌ நிற்கின்றது.