வட கொரியா …..

கிழக்கே முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் நாடு கொரியா, எப்படியோ இந்தியா பாகிஸ்தான் போல இரண்டாகி, ஒன்று அமெரிக்க புட்டிபாலில் புஷ்டியாயிற்று

இன்னொன்று கம்யூனிசம் பேசி பின் குடும்ப ஆட்சியில் சிக்கியது, அதன் முதல் தலைவர் பெருந்தலைவர் என அழைக்கபட்டார், அவரின் மகன் அன்பு தலைவர், இப்பொழுதிருக்கும் அதிபர் மக்கட் தலைவர் என அழைக்கபடுகின்றார்

அழைக்கபடுகின்றார் என்றால், அப்படித்தான் சசிகலா சின்னம்மா ஆன கதைதான்

இப்போதுள்ள மக்கள் தலைவருக்கு உலகெல்லாம் எதிர்ப்பு, அணுகுண்டு, ராக்கெட் என யாரையாவது மிரட்டிகொண்டே இருப்பது, சுருக்கமாக சொன்னால் நமக்கு பாகிஸ்தான் எப்படியோ அப்படி தென்கொரியாவிற்கு வடகொரியா

வடகொரிய அதிபரின் சாதனை நிரம்ப உள்ளது, நாட்டை நாசமாக்கி வைத்திருப்பது, பொருளாதார தடைகளை அகற்ற முயற்சிக்காதது, எல்லாவற்றிற்கும் மேல் எப்பொழுதும் போதையிலே இருப்பது, அப்போதையிலே கொலை செய்வது, ராக்கெட் விடுவது என பெரும் அழிச்சாட்டியம்

அம்மக்களோ அதிமுகவினர் போல மக்கள் தலைவர் வாழ்க என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், சொல்லி ஆக வேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்

Image may contain: 1 person, stripes

பல இடங்களில் எதிர்ப்பு வலுக்க, அதிபர் வேறுவகையில் சிந்தித்திருக்கின்றார், அதாகபட்டது கலைஞர் குடும்பம் தான் திமுகவினை ஆளும், சசிகலா குடும்பம் அதிமுகவினை ஆளும்,

நேரு குடும்பம் காங்கிரசை ஆளும் அப்படி தன் தாத்தா பெருந்தலைவர் கிம் யிங் ஸோலின் குடும்பதான் நிச்சயம் வடகொரியாவினை ஆளும்

ஆனால் தனக்கு போட்டியாக இன்னொருவன் குடும்பத்தில் இருந்து வந்துவிட்டால்?

அப்படி ஒருவர் உண்டு, அதாவது அன்புதலைவர் (இவரின் தந்தை) இன்னொரு பெண் மீதும் அன்பாயிருந்து ஒருவனை பெற்றுவிட்டார், அவரோ கலைஞரின் மகன் முக தமிழரசு போல அரசியல் வேண்டாம் என சொல்லிவிட்டு சீனாவின் மக்காவ் தீவில் வாழ சென்றுவிட்டார்

அவர்தான் போனாரே ஒழிய, வட கொரிய அதிபர் குடும்பத்தில் அவர் பெரும் கவலை ஆனார். சொல்லமுடியாது வல்லரசுகள் இதோ உங்கள் பெரும் தலைவரின் பேரன், இவரே அதிபர் என சொல்லி மக்களை திரட்டினால் என்ன ஆகும்?

அட நமக்கு பெருந்தலைவர் குடும்பம்தானே வேண்டும், இந்த பேரன் இருந்தால் என்ன? அந்த பேரன் இருந்தால் என்ன? என மக்கள் சிந்தித்துவிட்டால்?

இப்படிபட்ட கவலையில் இருந்திருக்கின்றார் அந்த வடகொரிய அதிபர்..

எங்கோ சென்றுவிட்டு அந்த இன்னொருவர் மலேசியா வழியாக மக்காவ்விற்கு (மக்கா அல்ல மெக்காவ்) செல்லும்பொழுது தீர்த்துவிட்டார்கள்

எப்படி?

மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்கள் அவர் மீது ஸ்பிரே அடித்திருக்கின்றார்கள், அவர் இறந்துவிட்டார்

அந்த வியட்நாமிய பெண்களை விசாரித்தால், இது டிவி ஷோவிற்கான நிகழ்ச்சி , உங்களுக்கு 5000 ரூபாய் ( ஆம் அவ்வளவுதான்) நீங்கள் தெளியுங்கள், நாங்கள் மறைந்திருந்து ஷூட் செய்வோம், பின் சிரித்துகொண்டே வருவொம் என யாரோ சொன்னதாக அப்பெண்கள் சொல்கின்றார்கள்

வடகொரியா அந்த கிம் ஜாங் நம்மின் பிணத்தை ஒப்படையுங்கள் என மிரட்டுகின்றது, மலேசியா அசைந்துகொடுக்கவில்லை, வாரிசு வரட்டும், மரபணு உறுதியாகட்டும் என பதில் சொல்லிவிட்டு விசாரிக்கின்றது

மலேசியாவிற்கான வடகொரிய தூதரே சிக்கும் நிலை

விசாரணை வடகொரிய அதிபரை நோக்கி செல்வது போல தெரிகின்றது

அவரோ பிணத்தை மட்டும் கொடு என மிரட்டிகொண்டிருக்கின்றார்

கொல்லபட்ட கிம் ஜாங் நாமின் வாழ்வு சொல்வது இதுதான், அதிகாரத்திற்கான வாரிசு போட்டியில் ஒதுங்கி இருக்கும் அப்பாவியும் கொல்லபடுவான், இது அதிகார வெறியாட்டத்தின் ஒரு அங்கம், அதிகாரவெறி அப்படியானது

அந்த குடும்பத்தில் பிறந்ததற்காக அவர் இறந்திருக்கின்றார்

எங்கோ ஏழை குடும்பத்தில் பிறந்ததற்காக 5 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு இரு பெண்கள் கொலைகாரியாகியிருக்கின்றார்கள்

இவர்களை பயன்படுத்தி காரியம் சாதித்த உளவுதுறை தப்பி இருக்கின்றது.

சும்மா சொல்லகூடாது மிக நுட்பமாக திட்டமிட்டு, இறுதிவரை பின் தொடர்ந்து இறுதி நிமிடம் வரை சளைக்காமல் திட்டமிட்டு போட்டிருக்கின்றார்கள்.

இந்த வாய்ப்பினை விட கூடாது என பல நாட்டு உளவுதுறைகளும் களத்தில் இருக்கின்றன‌

இது சர்வதேச உளவுதுறைகளுக்கு இடையிலான விளையாட்டு, அதி தீவிரமாக நடக்கின்றது.

தமிழக அரசுக்கும் ஒரு உளவுதுறை உண்டு, அது என்ன செய்கின்றது தெரியுமா?

பழனிச்சாமிக்கு ஆதரவு என்ன? சசிகலாவினை பற்றி மக்கள் என்ன பேசுகின்றார்கள்? தீபாவிற்கு செலவழிப்பது யார்?

பன்னீர் செல்வத்தின் அரசியல் எடுபடுமா?

இப்படி பெரும் அதிமுக்கிய விசாரணையில் ஈடுபட்டுள்ளது தமிழக உளவுதுறை…

பாஸ்போர்ட் குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று…

குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றி..மாபெரும் வெற்றி, நியாயத்திற்கும் தர்மத்திற்கும் வெற்றி

இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் ஏற்பட இருந்த பெரும் பிரச்சினையினை உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் இது மிக பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும்.

“யாரோ” தடுக்க முயன்ற பாஸ்போர்ட் இனி குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று

இனி என்ன செய்வார்கள்?

விமான டிக்கெட் கொடுக்க மாட்டோம் என வம்புக்கு வருவார்களோ?

அப்படி ஒரு நிலை வந்தால் அவருக்கு தனிவிமானம் வாங்கிகொடுக்க ரசிகர்கள் தயாராகி விடுவார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

எப்படியோ, கோடான கோடி ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிபளித்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு நீதியினை காப்பாற்றிய நீதியரசர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்…

 
Image may contain: 1 person, standing

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என வழக்கு தொடுத்த தம்பதிகள் , இப்பொழுது மரபணு பரிசோதனையும் நடத்தபடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

ஆக “தனுஷ் யாருக்கு மகன்” என ஒரு சண்டை விறுவிறுப்பாக நடக்கின்றது

இன்னொரு பக்கம் “தனுஷ் யாருக்கு மருமகன்” என்றொரு சண்டை சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றது

மச்சக்கார மனுஷன்யா….


ஜெயலலிதா மரணம் பற்றி…

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியை பாருங்க 


ஜெயலலிதா மரணம் பற்றி வெளிப்படையாக சொல்ல ஏன் தயங்குகிறார்கள்???: தமிழிசை சவுந்தரராஜன்

யாரை கேட்கின்றீர்கள் மேடம்?

மத்திய அரசும் தயங்குகின்றது, ஏய்ம்ஸ் டாக்டர்களும் தயங்குகின்றார்கள், ஆளுநரும் தயங்குகின்றார், ஜெயாவின் கருப்பு பூனை பாதுகாப்பு படையின் தலைவரும் தயங்குகின்றார்..

இந்த தயக்கம் எல்லாம் ஏன் என மத்திய அரசைத்தானே கேட்கின்றீர்கள்,

உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்


அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: நவநீத கிருஷ்ணன்

அதாவது அதிமுகவினை காப்பாற்ற நீதிமன்றத்தாலும் முடியாது, இந்த அடிமைகளை திருத்த நீதிமன்றத்தற்கு என்ன உரிமை? என இவருக்கு கோபம் வருகின்றது

நீதிமன்றத்தாலே ஒழிக்கமுடியாத அடிமை முறை என இது என அவர் மார்தட்டுகின்றார்

தமிழகம் தலையில் அடித்துகொண்டிருக்கின்றது..


 காமெடி

ரஜினியுடன் அரசியல் நிலவரம் பற்றி பேசவில்லை: நடிகர் கருணாஸ்

இருவரும் அரசியல் பேசினாலும் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது

இவர் ஒரு காமெடியன், அவர் மெகா காமெடியன். இந்த இருவரும் அரசியல் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன?

பெரும் அரசியல் தலைவர்கள் எல்லாம் தேடி சென்று பேசிய ரஜினியின் நிலை, கருணாஸ் சென்று பேசுமளவு மோசமாகிவிட்டதா?