திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் அழிச்சாட்டியம் ஒழியட்டும்

முன்பெல்லாம் திரையுலகிற்கு பிரச்சினை என்றால் உடனே முதல்வர்களிடம் வந்து கண்ணை கசக்குவார்கள்

திரைப்படத்திலிருந்து வந்திருக்கும் முதல்வர்களும் உடனே இருக்கும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வரிந்துகட்டி களத்தில் இறங்குவார்கள்

எந்த முதல்வர் வந்தாலும் அவர்கள் கொண்டாடுவார்கள், எந்த சினிமா விழா என்றாலும் முதல்வர்கள் இளித்துகொண்டு அமர்ந்திருப்பார்கள்

அண்ணா காலத்தில் தொடங்கிய இம்சை இது

எம்ஜிஆரும் , கலைஞரும் இதில் உச்சம் தொட்டவர்கள். எல்லா நடிகர் திருமணமும் அவர்கள் தலமையில் நடக்கும், பின் விவாகரத்து சிக்கல்கள் கூட முதல்வர் பஞ்சாயத்தில் நடக்கும்

ஜெயா மிரட்டலிலே கொண்டு சென்றார்

கலைஞர் நடிகர் நடிகைகளை தேடி சென்று வாழ்த்திய காலமும் உண்டு, அவர் அப்படித்தான் 4 பேருக்கு மக்கள் அபிமானம் உண்டென்றால் அது யாராக இருந்தாலும் விட மாட்டார்.

இப்பொழுது காட்சிகள் மாறிவிட்டன, திரையுலகம் ஒரு வித உச்ச பரபரப்பில் இருக்கின்றது, அரசிடம் வரவில்லை

அரசு அதன் போக்கில் இருக்கின்றது

திரையுலகை சாராத முதல்வர் பழனிச்சாமி காலத்தில் இந்த அதிசயம் நடந்துகொண்டிருக்கின்றது

இதே பழைய காலம் என்றால் கமிஷனரிடம் புகார், திரைமறைவு வேலைகள் என என்னவெல்லாமோ நடக்கும்

இதோ திரையுலக சண்டையினை நீங்களே போட்டுகொள்ளுங்கள் என பழனிச்சாமி அரசு அமைதிகாக்கின்றது

ஆயிரம் விமர்சனங்கள் இந்த அரசு மீது இருந்தாலும், இப்படி திரையுலகத்தை தனியே அழவிட்டிருக்கும் விஷயம் வாழ்த்துகுரியது

இனி திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் அழிச்சாட்டியம் ஒழியட்டும்

பழனிச்சாமி அரசு அதற்கு தொடக்கபுள்ளி வைத்திருப்பது நன்றாக தெரிகின்றது

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது சத்தியமாக இதுதான்

 
 
 

நண்பர்கள் அமைவதெல்லாம் முகநூல் கொடுத்தவரம்..

நான் கிறிஸ்தவந்தான், இது கிறிஸ்தவர்களுக்கான விரத காலம்தான், ஆனால் வீடியோக்கள் பார்க்கமாட்டேன் என நான் சொல்லவே இல்லை

நண்பர் குழாமில் ஒருவர் கூட, தமிழகமே தன்னை மறந்து , உண்ண மறந்து, உறங்க மறந்து பார்த்துகொண்டிருக்கும் வீடியோக்களில் ஒன்று கூட ஒருவரும் அனுப்பவில்லை

நமக்கு வாய்த்த நண்பர்கள் அப்படியானவர்கள் என விதியினை நொந்துகொண்டு நகரவேண்டியதுதான்

ஏய் நண்பர் குழாமே உன்னை வன்மையாக கண்டிக்கின்றேன், இந்த வீடியோ சாபம் உங்களை சும்மா விடாது.

நண்பர்கள் அமைவதெல்லாம் முகநூல் கொடுத்தவரம்..


முதல்நாளிலேயே இந்தியா தடுமாற்றம்! 189 ரன்களுக்கு ஆல் அவுட்!

ஆக ஒரு “சொப்பன சுந்தரி வீடியோ” ஆஸ்திரேலியா வீரர்கள் கையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துகொண்டே இருக்கின்றது.


தமிழர்களும் கன்னடர்களும் சம்பந்திகள்: வைரமுத்து

இவர் வேற நேரம் காலம் தெரியாமல் பேசிகொண்டிருக்கின்றார்

தனுஷ் விவகாரத்தில் ரஜினி தலையினை பிய்த்துகொண்டிருக்கும் நேரத்தில் எப்படி கோர்த்துவிடுகின்றார் பார்த்தீர்களா?


 

கூத்தாடி உலகத்தில் இதில் என்ன அதிசயம்?

“அப்பா, வாங்க ஜெயா டிவில உங்களுக்கு பிடிச்ச சின்னம்மா நியூஸ் சொல்றாங்க, சீக்கிரம் வாங்க சிரிக்கலாம்..”

இப்படி அழைக்கின்றாள் மகள்

சிறு வயதில் இந்த பெண் குழந்தைகள் எவ்வளவு அழகாக தந்தையினை புரிந்துகொள்கின்றன,

பெரியவளான பின்னும் இப்படியே புரிந்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும்..


Image may contain: 1 person, smiling, sunglasses and close-up

தனுஷும் , அவர் நண்பர்களும் , அந்த பாடகியும் ஏதோ விவேகானந்தரின் வாரிசுகள் போலவும், பெரும் பாரம்பரிய கலாச்சாரங்ளை கொண்டவர்கள் போலவும் ,

சில செய்திகளையும் வீடியோக்களை கண்டவர்கள் ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றார்கள்

கூத்தாடி உலகத்தில் இதில் என்ன அதிசயம்? தலைவன் எம்.ஆர் ராதா அழகாக சொல்வார்

“டேய்.கூத்தாடி பய உலகம் அப்படித்தான் இருக்கும். நீ ஏன் அதுல போய் மேதைகளும், சிந்தனையாளர்களும், வழிகாட்டிகளும் இருக்கின்றார்கள் என தேடலாம்?

நல்லவர்கள், பொதுநலவாதிகள், கற்றவர்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றார்கள், அங்கே போய் தேடு

அவங்க எல்லாம் இந்தமாதிரி இடத்துக்கு வரமாட்டங்க, கவுரவமானவர்கள், சுய அறிவு உள்ளவர்கள், கண்ணியவான்கள். அவங்க இருக்கிற இடம் வேற அங்க போய் தேடு

இந்த கூத்தாடி உலகத்தில..அதுவும் நாங்கல்லாம் நாடகம் போட்ட காலத்துல சீ சீ வேணாம் , பொது இடத்தில பேசினா நல்லாருக்காது

நல்லவங்கள, சிந்தனையாளர்கள அங்க தேடாத, அங்க எல்லாம் பஞ்சமா அயோக்கிய பயலுக, அவனுக உலகம் வேற‌

பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு, அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான், அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காத, அது பெரும் அசிங்கம், அவன் விதி அப்படி”

இந்த கேமரா, இணையம், டிவிட்டர், காலங்களில் மட்டும் எம்.ஆர் ராதா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்

ஆனால் இல்லை, இந்த நடிகர்கள் கும்மாளத்தை அவரின் வரிகளிலே புறந்தள்ளிவிடலாம்

அப்படி விட்டுவிடலாம் என்றால் சு.சாமி இந்த விவகாரதினை ஏன் கையில் எடுக்கின்றார் என்பதில்தான் சந்தேகம் வலுக்கின்றது

ஏதும் தமிழக விஷயங்களில் இருந்து தமிழ்க மக்களின் கவனத்தை மாற்ற வந்துவிட்டாரோ?

உலக வங்கிகளில் எல்லாம் ஊடுருவி, எங்கெல்லாம் சென்று தகவல்களை திரட்டி எல்லோரையும் மிரட்டும் சு.சாமி இந்த சுசித்திரா, தனுஷ் என திசைமாறும் மர்மம் என்ன?

சாமி கை சும்மா டிவிட்டரை தட்டாது, ஏதும் திட்டம் இருக்கலாம்

நடிகர், நடிகைகளை விடுங்கள். பாடகிகள் உலகிற்கு இது புதிது

எத்தனை பெரும் பாடகிகளை தமிழகம் கண்டிருக்கின்றது, தழைய பட்டு உடுத்தி, தலையில் மல்லிகையுடன் சால்வை போர்த்தி அவர்கள் வரும் அழகினை பார்க்க அப்படியே வணங்க தோன்றும்.

அவர்கள் பாடும்பொழுது சாட்சாத் சரஸ்வதியே வீணையின்றி பாடுவது போல இருக்கும்..

எம்.எஸ் சுப்புலட்சுமி, எம்.எல் வசந்தகுமாரி என எத்தனை அடையாளங்கள் அப்படி உண்டு

ஏதோ ஒரு மேடையில் தனக்கொரு அவமானம் நிகழ்ந்ததாக கருதி, இனி அந்த பாடகரோடு பாடவே மாட்டேன் என சவால்விட்டவர் சுசீலா

என் குரல்தானே வேண்டும், நான் வெண்ணாடை உடுத்தி அபகோலத்தில் இருந்தால் உலகிற்கென்ன என இன்றுவரை நிற்பவர் ஜாணகி

இப்படி எத்தனை அடையாளங்கள்?

அப்படி ஒரு பாடகிகள் உலகமும் இந்த தமிழகத்தில்தான் இருந்தது.

இன்றுவரும் செய்திகளை பார்க்கும்பொழுது அக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன‌

அப்படி சீதைகளின் கையில் இருந்த பாட்டு உலகம் இன்று சூர்ப்பநகைகளிடம் சிக்கிவிட்டது

போகட்டும்

சரி சு.சாமி ஏன் தனுஷினை இழுக்கின்றார்??? ரஜினிக்கு ஏதும் செக் வைக்கின்றாரோ?

நிச்சயம் சு.சாமி இந்த சர்ச்சைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை, ஒருவேளை போலி கணக்காக இருக்கலாம். அப்படி இருந்தால் சாமிக்கு நல்லது

ஆனாலும் “டேய் கூத்தாடி உலகம் அப்படிதாண்டா, இதுல என்னடா ஆச்சரியம்” என அன்றே சொன்ன எம்.ஆர் ராதா ரியலி கிரேட்…

சல்யூட் தலைவா..

 
 

இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பிராந்தியத்தை இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா

தவாங்கில் பெட்ரோலோ, பெரும் வளமோ இல்லை. ஆனால் புத்தமதத்தின் பெரும் மடம் இருக்கின்றது, அதனை குறிவைத்து கேட்கின்றது சீனா

இந்துக்களின் இந்தியா, இந்துத்வா இந்தியா என முழங்கி ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த கூட்டம் இப்பொழுது என்ன கேட்கவேண்டும்?

சிவன் வாழும் கைலாச மலை உங்களிடம் இருக்கின்றதல்லவா? அதனை இந்த இந்து நாட்டிடம் கொடுத்துவிட்டு இந்த புத்த பூமி பற்றி பேசலாம் என சொல்லலாம்

ஆனால் சொல்லமாட்டார்கள்

சிவன் வாழும் கைலாயம் எல்லாம் மீட்க மாட்டார்கள், அந்த திட்டமும் இல்லை

ஆனால் உள்ளூரில் மசூதி இடிப்பது, சர்ச்சுகளை கொழுத்துவது என ஆன்மீக பணிகளை செய்து இந்துத்வாவினை வளர்ப்பதாக சொல்லிகொள்வார்கள்

இந்து காவி ஆட்சி என மார்தட்டிகொள்பவர்கள், முழுமுதற்கடவுளான சிவனின் கைலாயத்தை மீட்க ஏன் ஒரு துரும்பும் கிள்ளி போட மாட்டார்கள்?

அவர்கள் அப்படித்தான்,

சிவன் வாழும் கைலாயம் யாருக்கு வேண்டும்? இவர்கள் ஆள 4 வோட்டுகள் கிடைத்தால் போதாதா?

இவர்கள் உண்மை முகம் அதுதான்,

இவர்கள் காட்டும் காவி இந்தியா , அகண்ட இந்தியா படத்தினில் கூட பாகிஸ்தானும், வங்கமும் இடம்பெறுமே தவிர, கைலாய மலை பற்றி மூச் இருக்காது

ஆனால் உள்ளூரில் எவனையாவது போட்டு இந்துக்கள் பூமியினை அபகரித்துவிட்டான் என கும்மிகொண்டிருப்பார்கள்

சீனா அபகரித்தால் கம்மென்று இருப்பார்கள்

அவர்களாக வந்து விட்டுகொடுங்கள் என்றாலும் இவர்களுக்கு கைலாச மலையினை கொடுங்கள் என கேட்க கூட தெரியாது

மருதநாயகம் படத்திற்கு ஒரு நடிகன் ரெடி….

சுருதிஹாசனின் காதலர் லண்டன் வெள்ளையராம் அவருடந்தான் காதலர் தினம் சுருதிகொண்டாடினார் என செய்திகள் வந்த நிலையில் லண்டனில் அந்த வருங்கால மருமகனை (ஒருவேளை) கமலஹாசன் சந்தித்தார் என செய்திகள் சொல்கின்றன‌

கலைஞர் முழுக்க முழுக்க‌ அரசியல்வாதி, கண்ணில் யார் பட்டாலும், எது சிக்கினாலும் இதனை வோட்டாக மாற்றுவது எப்படி என்றுதான் அவர் சிந்தனை செல்லும்

கமலோ முழு சினிமாக்காரர், ஒரு வெள்ளைக்காரன் சிக்கிவிட்டால் , இவரை அடுத்தபடத்தில் பயன்படுத்துவது எப்படி என்றுதான் யோசனை போகும்

ஆக மருதநாயகம் படத்திற்கு ஒரு நடிகன் ரெடி….


கொசுறு
 

சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மார்ச் 11ல் பெரும் அதிர்ச்சி : மோடி

அப்படி என்ன அதிர்ச்சி? பாஜக கட்சியினை கலைத்துவிட போகின்றார்களா?