தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே!!!

Image may contain: one or more people and text

வார்த்தை பிழையோ, உச்சரிப்பு பிழையோ வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து வளர்க்கபட்ட கட்சியில் இன்று போஸ்டர் அடிப்பதை கூட அசால்டாக பிழையாக அடிக்கின்றார்கள்

அச்சடிக்க சொன்னவன், அச்சடித்தவன், ஒட்டியவன் என மூன்று ரகமுமா வாசிக்க தெரியாதவனாக இருக்க முடியும்?

என்ன செய்ய?, மற்ற தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே.

தமிழனுக்கு வாசிக்க சொல்லிகொடுத்தது எவ்வளவு தவறாய் போயிற்று

 
 

பாட்ஷா முதல் தனுஷ் வரை….

22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலுக்கு மாற்றபட்டு வெளியான பாட்ஷா படத்துக்கு பெரும் வரவேற்பு, பெரும் வசூலுடன் சில தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடுகின்றது : செய்தி

இது என்ன வரவேற்பு?

அண்ணாமலை படத்தினை ரீமேக் செய்தால் குஷ்பூவிற்காக‌ தமிழகம் முழுக்க பல‌ மாதம் ஹவுஸ்புல்லாக ஓடும்,

அவருக்கு இருக்கும் மக்கள் அபிமானம் அப்படி


திராவிட மாயையில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் :- கிருஷ்ணசாமி.

ஆமாம், இவர் சினிவாச ராமானுஜம் போல ஆங்கிலேயனை தன் அறிவால் வியக்கவைத்து அமெரிக்காவில் அக்காலமே மருத்துவம் படித்தவர் அல்லவா? அப்படித்தான் பேசுவார்.

திராவிட குரல் எழும்பவில்லை என்றால் இவரின் மருத்துவர் பட்டம் இவருக்கேது?, இந்நேரம் இவர் மருத்துவமனை காவலாளியாக கூட இருந்திருக்க முடியாது

இவருக்கு மருத்துபட்டமமும் கையில் ஸ்டெதெஸ்கோப்பும் போதா குறைக்கு கட்சி தொடங்க ஒரு தைரியமும் கொடுத்த திராவிடம் இவரை பொறுத்தவரைக்கும் மாயையாம்

ஒரு தலித் தலைவராக இவர் குரல் எழுப்ப , அந்த உரிமையினை கொடுத்ததே இந்த திராவிடம்தான்..

கோடாரி காம்பாக மாறியிருக்கின்றார் கிருஷ்ணசாமி,

நன்றி கொன்றது என்பது நிச்சயம் இதுதான்..


 ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கை: தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல்

இத்தனை நாள் கழித்து இந்த அறிக்கையினை தமிழக அரசிடம் கொடுக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு களபேரங்கள் நடந்தபொழுது கொடுக்காமல், அப்பல்லோ விளக்க அறிக்கை கூட்டம் நடக்கும்பொழுதும் கொடுக்காமல், இப்பொழுது ரகசியமாக வந்து கொடுக்க என்ன அவசியம்?

அப்பல்லோ கூட ஒரு விளக்கம் அளித்துவிட்ட பின்பு, இந்த எய்ம்ஸ் அறிக்கை மக்களுக்கு படிக்கபடாமல் ரகசியமாக ஏன் கொடுக்கபட வெண்டும்?

ஒரு மாநில முதல்வரின் சிகிச்சை அறிக்கையினை மத்திய அரசின் டாக்டர்கள் குழு ரகசியமாக , அதுவும் சர்ச்சைகுரிய மாநில அரசிடமே சமர்ப்பிக்கின்றது என்றால் என்ன சொல்வது?

மத்திய அரசை விட மாநில அரசும், மாநில அரசை விட மத்திய அரசும் மகா கள்ளத்தனமாக இருந்தால் இப்படித்தான் நடக்கும்

இந்த நாட்டில் ஒரு நல்லவன் கூட அந்த அதிகார மட்டத்தில் இல்லையா?


 தயவுசெய்து நிம்மதியாக எங்களை வாழ‌ விடுங்கள்: தனுஷின் சகோதரி உருக்கமான கோரிக்கை!

இதனைத்தான் இயக்குநர் விஜய், சுசித்திராவின் கணவர் இன்னும் பலர் உருக்கமாக கேட்டுகொண்டே இருந்தனர், யார் கேட்டார்கள்?

அவர்களை விடுங்கள்

செல்வராகவனின் படங்களை கண்ட தமிழகம் இப்படித்தான் கதறியது, கொஞ்சமாவது மனிதர் கேட்டாரா?


 

இதுதான் புதிய இந்துத்வா…

கோயில் அர்ச்சகர்கள் ஆகம விதிபடியே நியமிக்கபடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடுகின்றார்கள் , வெற்றியும் கிடைக்கின்றது

இதுதான் முறையான அனுமதி இந்துமதம் காக்கபட்டது என ஆர்பரிக்கின்றார்கள்,

ஆகமவிதி தெரியாத ஒருவன் எப்படி சாமி சிலைக்கு பூஜை செய்யமுடியும் என ஏராளமான கேள்விகள் கேட்பார்கள்.

ஆனால் பள்ளிபடிப்பு முடிக்காத ஒருவன் “அத்தனைக்கும் ஆசைபடு” (அத்தனைக்கும் ஆசைபட்டால் அவன் ஆட்டோ சங்கர் வகையறா அல்லவா?) என சொல்லி தன்னை சாமியார் என்கின்றான், பெரும் ஆசிரமம் தொடங்குகின்றன்

அதில் பெரும் சிவன் சிலையினை வைத்து அட்டகாசம் செய்கின்றான்

தன்னை குரு என சொல்லுங்கள் என கட்டளையிட்டுகொண்டும் இருக்கின்றான்.

ஆகம விதிப்படி இது தவறு அல்லவா? இவர் எப்படி குருவாக முடியும்? இவர் எப்படி சிவன் பூசாரியாக முடியும் என கேட்டால்..

இல்லை இல்லை இதுவும் சரி என்கின்றார்கள்

ஏதும் புரிகின்றதா?

புரியாது இதுதான் புதிய இந்துத்வா


கொசுறு

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை- மசோதாவை உடனே நிறைவேற்றுக! ராமதாஸ் வலியுறுத்தல்

ஆமாம் அய்யா, கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும்,

கூடவே சாதி பெயரை சொல்லி வாக்கு கேட்டால் 6 ஆண்டு சிறை எனும் வரியினையும் சேர்த்துகொள்ளவேண்டும்


ராதாரவிக்கு கண்டனம் ….

சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்ததும் நடக்க முடியாதவன் நாடாள நினைக்கலாமா? என அதிமுகவினர் கேட்டபோது அமைதி காத்தவன் எல்லாம் இப்பொழுது ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கின்றானாம்.

நடக்க முடியாதவன் என சொல்வது கிட்டதட்ட மாற்றுதிறனாளியினை குறிப்பதில்லையா?

ஸ்டாலினும், கனிமொழியும் இந்த ரீதியில் கேள்வி கேட்காமல் மன்னிப்பு கேட்டுகொண்டிருக்கின்றனர்

கலைஞருக்கே உரித்தான வாதத்ததுடன் கூடிய போராட்ட குணத்தினை திமுக வாரிசுகள் இழந்துவருகின்றது….

“எவண்டா அவன் மன்னிப்பு கேட்க சொல்றது, என் மனசுக்கு நியாயம்ணு தோணுறத‌ பேசுவேன், அவ்வளவுதான்.

ஏதோ கடவுள்னு சொல்வாங்களே, அவன் வந்தாலும் மன்னிப்பு என கேட்கமுடியாது…” என சொன்னவர் எம்.ஆர் ராதா

ராதாரவிக்கும் அந்த தைரியம் இல்லை

இப்பொழுதெல்லாம் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிகள் 2 அடி கூட பாய்வதில்லை

 
 
 

50 வருடங்களுக்கு முன்பு அண்ணா பதவியேற்ற நாள்

Image may contain: one or more people, people sitting and wedding

மிக சரியாக 50 வருடங்களுக்கு முன்பு இந்தியா அந்த அதிசயத்தை கண்டது

அதாவது ஒரு மாநில கட்சி முதன் முறையாக மாநில ஆட்சிபீடத்தில் அமர்ந்தது, காங்கிரசினை வீழ்த்தி திமுக அந்த மகத்தான சாதனையினை படைத்தது

காமராஜர் தோற்றிருக்க கூடாது, இம்மக்கள் அவரை விட நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்ற அச்சத்தோடே அண்ணா பதவியேற்ற நாள்

அந்த பஞ்சகாலத்தில் ரூபாய்க்கு 3 படி அரிசி என்பதே அவர்களுக்கு பெரும் பிரச்சார யுத்தியாக இருந்தது, ஆட்சிக்கு வந்தபின் அண்ணா அப்படி வழங்க திணறினார்

ஒரு சில இடங்களில் கொடுத்ததோடு நிறுத்திகொண்டார், கலைஞரோ மதுகடைகளை திறந்தால் இவை எல்லாம் சாத்தியம் என்றார்

“ஒரு குடும்பம் பசியாற, நூறு குடும்பங்கள் பாழாகும் அந்த பாவ காரியத்தை கழக அரசு செய்யாது” என மறுத்துநின்றார் அண்ணா

அவரின் அகால மரணம் தமிழக தலைவிதியினை மாற்றியது, கலைஞர் அத்திட்டத்தை கொண்டுவந்தார், ஆனால் விளைவுகளின் விபரீததினை புரிந்து பின்னர் நிறுத்தினார்

ஆனால் மதுகடைகள் இன்றி இலவசங்கள் வழங்கி ஆட்சி செய்வது முடியாத காரியம் என்பது ராமசந்திரனுக்கு விளங்கிற்று, இரண்டாம் மதுபுரட்சியினை அவர்தான் தொடங்கினார்

அதனை நிறுத்தினால் இலவசம் வழங்கமுடியாது எனும் நிலைக்கு கலைஞர் தள்ளபட்டார்

இவர்கள் காலம் வரை மது என்பது அரசின் கவனத்திற்குட்பட்ட தனியார் வியாபாரமாகவே இருந்தது

ஜெயாவோ ஒருபடி மேலே சென்று அரசே மதுவிற்கும் என அதிரடி காட்டினார், ஆனால் அதில் வந்த வருமானமெல்லாம் தானே செலவழிப்பது போல சீன் போட அவர் தயங்கவில்லை

ஜெயா செய்தது மூன்றாம் மதுபுரட்சி.

இன்று ஜெயா இருந்திருந்தால் அரசே மதுபானமும் தயாரிக்கும் என களமிறங்கி இருக்கலாம்

இனி மதுகடையின்றி தமிழக அரசு அமைவது சாத்தியமில்லை என தெளிவாயிற்று

இந்த அரசும் ஸ்கூட்டி கொடுக்கின்றேன் என கிளம்பி, இருக்கும் நெருக்கடியினை கூட்டியாயிற்று

ஆசிரியர் உட்பட அரசு ஊழியர்களுக்கு உழைப்பிற்கு மீறிய சம்பளத்தை கொடுத்தாயிற்று, வெட்டி செலவுகளும் உண்டு

உதாரணம் மே மாத விடுமுறையில் அவர்களுக்கு வகுப்புகள் இல்லை, ஆனால் அரசு சம்பளமும், தேர்வுதாள் திருத்த சம்பளம் என வெட்டி செலவுகளும் உண்டு

ஆக ஒரு பக்கம் அரசு ஊழியருக்கும், ஒரு பக்கம் இலவச திட்டங்களுக்கும் அள்ளிகொடுத்துவிட்டு மக்கள் பணியினை கவனிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கின்றது.

இப்படி எல்லாவற்றையும் அள்ளிகொடுத்து தமிழகத்தை கெடுத்தாயிற்று

இதற்கு பெரும் வருமானம் டாஸ்மாக் என தெரிகின்றது

எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை, மதுகடைகளை மூடிவிட்டு இனி ஆட்சிநடத்துவது சுலபம் அல்ல‌

சம்பள வெட்டு முதல், பெரும் சிக்கல்களை இம்மாநிலம் சந்திக்கவேண்டும், விலைவாசிகள் எகிறும்

இந்த பெட்ரோல் வரி உயர்வு என்பது வெறும் 1% வலிதான். இன்னும் 99% சதவீத வலி மீதமிருக்கின்றது

அதாவது மதுகடை எனும் செயற்கை மருந்தால் பெருத்துவிட்ட தமிழகத்தை அதன் இயல்பு நிலைக்கு கொண்டுவர இனி கடும் பயிற்சிகள் தேவை

அந்த சவாலை இக்கட்சிகள் எடுக்காது, டாஸ்மாக்கும் அவ்வளவு எளிதில் மூடபடாது

மது கொள்கையில் கெடுத்தது யார்? சாட்சாத் அண்ணா கண்ட திமுகவும், அண்ணா திமுகவும்

கெடுக்க சொன்னது யார்? எங்களுக்கு இலவச ஆசை காட்டுங்கள், வாக்களித்துவிடுகின்றோம் எனும் மக்கள்.

ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி என சொன்னார் அண்ணா, அவர்தான் இந்த இலவச திட்டங்களின் தொடக்கபுள்ளி,

அரிசி கொடுப்போம் என்றாரே அன்றி, எப்படி கொடுக்கமுடியும் என்ற காமராஜரின் கேள்விக்கு அவர் பதில் சொல்லவே இல்லை.

மக்களும் எந்த வருமானத்தில் கொடுப்பீர்கள்? என கேட்காதது அவருக்கு பெரும் வசதி

50 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் புரட்சி இயக்கமாக திமுக அரியணை ஏறிய நாள் இன்று

அண்ணா மறைந்த பின் அது எப்படிபட்ட மாபியா இயக்கமாக இன்று மாறிவிட்டது என சொல்லி தெரியவேண்டியதில்லை

அவர்களை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, நல்ல மக்கள் இருக்குமிடத்தில் நல்ல தலைவர்கள் உருவாவார்கள், இஸ்ரேல் சிங்கப்பூர் , அமெரிக்கா போல‌

அறியாமையிலும், கொஞ்சமும் சமூக அக்கறையும், ஆள்வோர் அக்கறையும் இல்லாத நாட்டில் கொள்ளை கூட்ட தலைவர்கள்தான் உருவாவார்கள் கொலம்பியா, மெக்ஸிகோ, சிலி நாடுகளை போல‌

இன்று அண்ணா பதவியேற்ற நாள்

“நம் ஆட்சியில் கழக உறுப்பினர்கள் யாரின் குடும்பத்தார் தலையீடும் இருக்க கூடாது, கட்சி வேறு ஆட்சி வேறு

எக்காலமும் மதுகடை எனும் பெரும் பாவத்தை இக்கழகம் செய்யாது

எந்த தமிழக நலனை காப்பதாக அரியணை பெற்றோமோ, அந்த தமிழகத்தை காத்த சாதனைகளை நாம் அரியணைவிட்டு இறங்கும் பொழுது பட்டியலாக வாசித்துவிட்டே இறங்க வேண்டும்”

இப்படி எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முழங்கினார் அண்ணா

அய்யோ பாவம்

அவருக்கு குடும்ப வாரிசும் இல்லை, கட்சி வாரிசும் இல்லை, கொள்கை வாரிசும் இல்லை

அப்படி ஒருவர் அவர் கொள்கையோடு இருந்திருந்தால் தமிழகம் இப்படி சீரழிந்திருகாது

இன்று சில நூறு மது கடைகளை மூடியது தமிழக‌ அரசு, அதற்குள் விழிபிதுங்கி பெட்ரோலுக்கான வரியினை கூட்டியிருக்கின்றது, பெட்ரோல் சுமைகளை சுமைக்கின்றோம், பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி எல்லா விலையும் உயரும்

தமிழகம் முழுக்க ஆயிரகணக்கான மதுகடைகள் உண்டு, ஒருவேளை முழுகடைகளையும் மூடினால்…

அதே வெள்ளையன் ஆட்சியின் அட்டகாசம் நிகழலாம்

புரியவில்லையா?

உப்புக்கும் வரி என கிளம்புவார்கள், இல்லாவிட்டால அரசினை இனி இயக்கமுடியாது

அந்த அளவிற்கு நாட்டை கெடுத்தாகிவிட்டது

மொத்தத்தில் மதுகடைக்கு இம்மாநிலத்தை அடகு வைத்துவிட்டார்கள், இனி மீட்டுவர பெரும் சிரமபடவேண்டும்

மீட்டால் எல்லா வரிகளும் உயரும் உப்பு உட்பட‌

அதன் பின் காந்திகாலத்திற்கு திரும்பி உப்பு காய்ச்சி சத்தியா கிரகம் எல்லாம் செய்யவேண்டும்

ஆக தமிழகத்தை வெகுகாலம் பின்னுக்கு தள்ளிக்கொண்டிருக்கின்றது, இந்த 50 வருட கழக ஆட்சி

புரட்சி இயக்கம் என சொல்லிகொண்டு, ஒரு மாபியா இயக்கமாக மாறிபோன இயக்கம் உலகளவில் இதுவாகத்தான் இருக்க முடியும்

 

செய்தி சிதறல்கள்….

என்னை ஜக்கி என்று அழைக்காதீர்கள், சத்குரு என்று அழையுங்கள் : ஜக்கி சாமியார்.

நாங்கள் தமிழர்கள், ஜ எனும் வடமொழி எல்லாம் சொல்லமாட்டோம், தமிழில்தான் சொல்வோம்

அதனால் அவரை “சத்துரு” என்றோ “செத்திரு” என்றோ அழைக்கலாம் என்றிருக்கின்றோம்


பெட்ரோல் டீசல் விலை உயர்வை மாநில அரசு திரும்ப பெறவேண்டும்- தமிழிசை

மத்திய அரசு பெட்ரோலை கொள்ளை விலையில் விற்றால் அது அம்மணிக்கு பிரச்சினையே இல்லை

ஆனால் மாநில அரசு வரிபோட்டுவிட்டால் அம்மணி சும்மா இருக்கமாட்டார், மக்களின் நலன் அவருக்கு அவ்வளவு முக்கியம்


அன்று குஷ்பூ ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவர் தமிழக கலாச்சாரத்தை கேவலபடுத்துகின்றார் என்றவர்களையும்

சிம்பு பெண்களை கொச்சைபடுத்துகின்றார் என சென்னை வெள்ளத்திலும் ஊர்வலம் போனவர்களையும்

தனுஷ் பெயரோடு சுசித்திரா ஆதாரபூர்வமாக போட்டோ, வீடியோ என ரிலீஸ் செய்யும்பொழுது காணவே இல்லை

குஷ்பூ, சிம்புக்கு எதிராக பொங்கும் சங்கங்கள், ரஜினியின் மருமகன் என்றால் ஏன் மண்ணுக்குள் தலையினை இட்டுகொள்கின்றன என்பதுதான் மர்மம்

ஆக தமிழினமே, தமிழக கலாச்சாரத்தை கெடுக்கும் உரிமை தனுஷூக்கும் சுசித்திராவிற்கும் இன்னும் சிலருக்கும் உண்டு உண்டு,

அவர்கள் கெடுக்கலாம்., தமிழக கலாச்சார‌ சங்கங்கள் அவர்களுக்கு முழு உரிமை கொடுத்திருக்கின்றது.

ஆனால் வேறு யார் செய்தாலும் தமிழக கலாச்சார‌ சங்கங்கள் பொறுக்காது ஆமாம், சங்கங்கள் சமரசமே செய்துகொள்ளாமல் பொங்கிவிடும்


 

வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் : வைகோ

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

இந்த அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவித்தவரும் இவர்தான், ரகசிய வாக்கெடுப்பு தேவையில்லை, பழனிச்சாமி முதல்வர் ஆக வேண்டும் என சொன்னவரும் இவர்தான்

இன்று ஒப்பாரி வைப்பவரும் இவர்தான்

இவரை பற்றி சமீபத்தில் ராதாரவி சொன்னதுதான் மிக‌ சரி

ராதாரவியின் பேச்சு ஒன்றும் மாற்று திறனாளிகளை கிண்டல் செய்யவில்லை, மாறாக குறைபிரசவ குழந்தை, ஒப்புக்கு சப்பாணி என வழக்கில் இருக்கும் சொற்களைத்தான் சொன்னார்

இது மாற்றுதிறனாளிகளை குறிக்கிறது என்றால், கண்டிக்கபட வேண்டும் என்றால்

முடவன் பைபிள் கொம்பு தேனுக்கு ஆசைபடலாமா, செவிடன் காதில் ஊதிய சங்கு எனும் பழமொழியினை எல்லாம் மாற்றவேண்டும்,

குருடன் குருடனுக்கு வழிகட்டலாமா என இயேசுவும், திருமூலரும் சொன்ன கருத்துக்கள் எல்லாம் கண்டிக்கபடவேண்டும், மாற்றபட வேண்டும்

அந்த புனித நூல்களை, பழமொழிகளை எல்லாம் அப்படியே வைத்துவிட்டு ராதாரவி ஏதும் சொன்னால் மட்டும்பொங்கிவிடுவார்களாம்

அவ்வளவு ஏன்? சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்ததும் நடக்க முடியாதவன் எல்லாம் நாடாள நினைக்கலாமா? என அதிமுகவினர் கேட்டது என்ன ரகம்?

அப்பொழுது எந்த மாற்றுதிறனாளியும் பொங்கியதாக தெரியவே இல்லை..

இலங்கை பொன்சேகா கூடத்தான் வைகோ கோமாளி என்றார், எந்த சர்க்கஸ் கோமாளியாவது கொந்தளித்தானா? அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது ஆம், வைகோ நம்மில் ஒருவர்.

இன்னும் புரியவில்லை என்றால் வைகோவின் சசிகலா ஆதரவினையும், இன்று பொங்கும் திடீர் தமிழக பாசத்தையும் நினைத்து பார்க்கவும்