அப்பல்லோவிற்கு மோடி ஏன் வரவில்லை?

2011ல் மோடி ஜெயலலிதாவினை கவனித்துகொள்ள நர்ஸ் அனுப்பினார் எனவும் அந்த நர்ஸ் விரைவிலே விரட்டபட்டார் எனவும் சில தகவல்கள் கசிகின்றன‌

அதனை தொடர்ந்து கோபமுற்ற மோடி உங்கள் உணவில் கவனமாக இருங்கள் என சொன்னதாகவும் செய்திகள் வருகின்றன.

அவர் பொதுவாக அப்படி கூறினாரா அல்லது சில விவகாரங்கள் பற்றி தெரிந்த பின் அப்படி ஜெயலலிதாவை எச்சரித்தாரா என்பது பற்றி தெரியவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது.

இதே 2011ல்தான் மன்னார்குடி கும்பலும் போயஸ்கார்டனில் இருந்து விரட்டபட்டதும் குறிப்பிடதக்கது

இதே காலகட்டத்தில் மன்னார்குடி கும்பல் மீது ஜெயா சாட்டிய குற்றசாட்டுக்களும் பயங்கரமானவை.

சோ ராமசாமிக்கும், மோடிக்கும் இருந்த நெருக்கம் உலகறியும்.

ஆக குஜராத் முதல்வராக மோடி இருந்தபொழுதே போயஸ் கார்டன் மீது அவருக்கு சந்தேக பார்வை விழுந்திருக்கின்றது தெரிகின்றது

ஜெயலலிதாவினை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை மோடி கவனித்துகொண்டே இருந்திருக்கின்றார்.

எய்ம்ஸ் டாக்டர்கள் வந்து சென்றபின்னும் அப்பல்லோவிற்கு மோடி ஏன் வரவில்லை? என்ற கேள்விக்கும் சில பதில்கள் புரிகின்றன, அவருக்கும் புரிந்திருக்கின்றது

உத்திரபிரதேச தேர்தலை முடித்துவிட்டு மோடியின் சீற்றபார்வை இங்கு விழ வாய்ப்பிருக்கின்றது என்கின்றார்கள்

இருக்கலாம், இல்லை என்றால் ஏன் நர்ஸ் கதையினை இப்பொழுது கசியவிடுகின்றார்கள்??

தமிழகத்தில் பெண் சுதந்திரமும் சர்வதேச மகளிர் தினமும்..

Image may contain: 2 people, people standing

பெண்களிடம் மிக பெரிய பொறுப்பினையும் கொடுத்து, அவர்கள் ஊழல் செய்யவும் அனுமத்தித்தோடு மட்டுமல்லாமல்..

இன்னும் அவர்களை அம்மா, சின்னம்மா, இளவரசியம்மா என வணங்கும் தமிழகத்தை விடவா பெண்களுக்கு உலகில் இன்னொரு இனம் மரியாதை கொடுத்துவிட்டது?

நாட்டின் உச்சநீதிமன்றமே ஜெயா, சசிகலா, இளவரசி, கனிமொழி என தமிழக பெண்களை விசாரித்திருக்கின்றது

பெரும் பொறுப்பு கொடுக்காமலா அவர்கள் மீது குற்றம் சாட்ட முடியும்?

இதனை விடவா பெண்களை உலகம் பெருமைபடுத்திவிட்டது?

அமெரிக்காவில், ரஷ்யாவில், ஜப்பானில், தென்கொரியாவில், அரேபியாவில் எங்காவது இப்படி ஒரு காட்சி உண்டா?

பதவிக்கு வருமுன்னே ஹிலாரி ஊழல்வாதி என விரட்டியவர்கள் ஆணாதிக்க அமெரிக்கர்கள், நாமோ ஊழல் முத்திரை குத்தபட்டபின்னும் 3 முறை முதல்வராக்கியிருக்கின்றோம்

ஆக பெண்ணுரிமையினை மதித்தது அமெரிக்காவா? தமிழகமா?

ஆங்சான் சூகி எனும் பெண்ணை பெண் என்றும் பாராமல் வீட்டு சிறையில் வைத்தது பர்மா அரசு, மனிதர்களா அவர்கள்?

இங்கு 122 எம் எல் ஏக்களை ஒரு பெண்மணியால் கூவத்தூரில் 10 நாட்கள் அடைத்து வைக்கும் அளவிற்கு பெண் சுதந்திரம் கொடுக்கபட்டிருக்கின்றது

ஒரு பெண் அதிபரும் அவர் தோழியும் ஊழல் செய்தார்கள் என பெரும் கிளர்ச்சி வெடித்தது தென்கொரியாவில்

இங்கோ அப்படி நிரூபிக்கபட்டும் அரசு விழாக்களில் அவர்கள் படம் இடம்பெறுகின்றது, இந்த பெண் சுதந்திரம் எந்த நாட்டில் உண்டு?

ஒரு பெண் சமாதிக்குள் இருந்து வோட்டு வாங்குகின்றார், ஒரு பெண் சிறையிலிருந்தே ஆட்சி நடத்துகின்றார்

குற்றவாளி என ஆண் ஆதிக்க கோர்ட் சொன்னாலும், கொஞ்சமும் வருத்தமின்றி அவர்கள் பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்கள்தான் எங்கள் வழிகாட்டிகள், தலைவர்கள் என கொண்டாடும் சமூகம் எங்காவது உண்டா?

சேலைகளும் நகைகளும் சொத்தும் எப்படி வந்தது இது தவறு என நீதிபதி சொன்னால், இரு பெண்கள் 10,500 சேலை வைக்காமல் வேட்டி சட்டையா வைப்பார்கள் என பதில் சொல்கின்றது தமிழகம்

ஆண்டாண்டு காலம் அடிமைபட்ட பெண் இனம் கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் பங்களா கட்டி ஆண்டால் என்ன தவறு என புது புரட்சி கேள்வி கேட்டது தமிழகம்

பெண்கள் பாரில் அட்டெண்டராக இருந்த காலத்தை, பெண்கள் சாராய ஆலை நடத்தலாம் எனும் அளவிற்கு மாற்றி புரட்சி செய்திருப்பது தமிழகம்.

இவ்வளவு நிலபுலன்கள் எப்படி வந்தது என்றால், ஏன் நிலகிழார்கள் இருக்கும் மாநிலத்தில் நிலக்கிழவிகள் இருக்க கூடாதா? இது பெண்விடுதலை என சொல்கிறது தமிழகம்

இத்தனை தொழில்கள் எப்படி என கேட்டால், அம்பானி எனும் ஆண் சொத்துகுவிக்கும்பொழுது சசிகலா எனும் பெண் குவிக்க கூடாதா? இது புரட்சி என சொன்னது தமிழகம்.

இதுவல்லவா பெண் உரிமை மலர செய்த புரட்சி பூமி, இது அல்லவா பாரதி சொன்ன பெண் விடுதலை பூமி

உலகிற்கே அந்த பெருமையுடன் மகளிர் தின வாழ்த்தினை சொல்ல தயாராகின்றது தமிழகம்

சிறைபட்ட சிங்கமும், மறைந்துவிட்ட தங்கத்தின் முகங்களோடு உலகெல்லாம் மிக பெருமையாக தமிழகம் சொல்கின்றது

இந்த அளவு அதி உச்ச விடுதலையினை பெண்களுக்கு கொடுத்த சமூகம் எங்காவது இருக்கின்றதா?

இல்லை, இல்லவே இல்லை

அதனால் இத்தமிழகமே மகளிர்தின வாழ்த்தினை உலகிற்கு முதலில் சொல்ல உரிமை பெற்றிருக்கின்றது.

இன்றைய தேதியில் உலகில் எந்த இனத்திற்கும் மகளிர் வாழ்த்து சொல்ல உரிமையே இல்லை, நமக்கு மட்டுமே இருக்கின்றது

பெண்களை ஒரு இனம் வாழவைத்தால் இப்படி தமிழகத்தை போல வாழவைக்க வேண்டும்

ஹேப்பி விமன்ஸ் டே…

 
 

ஹேப்பி பர்த்டே விவியன் ரிச்சர்ட்ஸ்

Image may contain: 1 person, playing a sport, baseball and outdoor

கிரிக்கெட்டை நேசித்தால் அவரையும் நிச்சயமாக நேசித்தே தீரவேண்டும்

இன்றைய டி20 மேட்ச்களை அன்றைய டெஸ்ட் மேட்சிலே ஆடியவர், அதுவரை ஸ்டைலாக மெதுவாக ஆடவேண்டிய ஆட்டம் என்றிருந்த கிரிக்கெட்டினை அதிரடி ஆட்டத்திற்கு மாற்றி காட்டியவர்

அவர் ஆட வந்தபின்புதான் உலகம் கிரிக்கெட்டை ரசிக்க முடிந்தது, அவரை முன்மாதிரியாக கொண்டுதான் ஸ்ரிகாந்த், டெண்டுல்கர், லாரா
மியான்டட், உல்ஹக், டோனி, கெயில் என எல்லோரும் உருவானார்கள்

கம்பீரமான உருவத்துடன் கையில் மட்டையுடன் அவர் களமிறங்கினால், அவர் உருவத்திற்கு அது குச்சி போலிருக்கும், பந்து எங்கு செல்கிறது என தெரியாமலே விளாசுவார்

அதுவும் அவுட் ஆகாமலே விளாசுவார். எந்த பந்தும் அவரை கட்டுபடுத்தியதாக சரித்திரமே இல்லை

எதற்கும் மனிதர் சிரமபட்டது இல்லை, யானை துதிக்கையினை ஆட்டுவது போல அசால்ட்டாக மட்டையினை சுழற்றுவார்.

எசக்குபிசகாக கேட்ச் ஆனால் உண்டு, மற்றபடி பந்துக்கு அவர் திணறியதாக குறிப்புகள் இல்லை

6,6,6,6,6 ,4,4,4,4.. என்ற வரிசைகளை முதன் முதலில் அவர்தான் கொடுத்தார்.

அவருக்கு பந்துபோடும் பவுலர்கள் எல்லாம் சசிகலாவினை சந்திக்க செல்லும் அமைச்சர்கள் போலவே டென்ஷனாக இருந்தார்கள்..

ஒருநாள் கிரிக்கெட்டில் எல்லோரும் 50 ரன்னுக்கு திணற, அவரோ 189 நாட் அவுட் என நின்றுகொண்டிருந்தார், பின்னாளின் பாகிஸ்தானின் அன்வர் உடைக்கும் வரை அந்த சாதனை அவருடையது.

எத்தனை அருமையான ஷாட்கள், எவ்வளவு வலுவான அதிரடி, கொஞ்சமும் சளைக்காமல் மிஷின் போல அவர் ஆடும்பொழுது ஏதோ பிசாசொன்று ஆடியது போலிருகும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், உலக கோப்பையும் அவரால்தான் களைகட்ட தொடங்கின‌

முதல் இரு உலககோப்பைகளை வெஸ்ட் இண்டீசுக்கு அவர்தான் கொடுத்தார், மூன்றாம் போட்டியில் அவர் கபில்தேவால் பிடிபடும் வரை ஆட்டம் அவர்களிடம் தான் இருந்தது

இனி அப்படி ஒரு ஆட்டக்காரன் வரமாட்டான் என்கின்றது கிரிக்கெட் உலகம், அதனால் எக்காலத்திலும் சிறந்த ஆட்டக்காரர் என சொல்லி அங்கீகரித்தது.

எத்தனை கெயில், எத்தனை ஹோலி டோனி வந்தாலும், “கிரிக்கெட்டின் ராஜா” என்றென்ன்றும் அவரே

அவர் வெஸ்ட் இண்டீசின் வீவியன் ரிச்சர்ட்ஸ்

அந்த கிரிக்கெட் வேதாளத்திற்கு இன்று பிறந்தநாள், கிரிக்கெட் அறிந்தோர் எல்லாம் அவரை வாழ்த்தி கொண்டிருக்கின்றார்கள், நாமும் வாழ்த்தலாம்

ஹேப்பி பர்த்டே விவியன் ரிச்சர்ட்ஸ்

அந்த கிரிக்கெட் வேதாளம் பல்லாண்டு வாழட்டும்

 
 

ராமேஸ்வரமும் சிங்கமும் : 02

ராமேஸ்வரமும் சிங்கமும் : 02

Image may contain: text

உலகின் சில சுவையான மீன்கள் கிடைக்கும் பகுதி என இப்பகுதிக்கு பெயர், அதன் நில அமைப்பு அவ்வாறானது, குறிப்பாக இறால்,நண்டு வகைகள் அதிலும் சிங்க இறால் மற்றும் நீலக்கால் நண்டு மகா பிரசித்தி, எல்லாம் பெரும்பாலும் ஏற்றுமதி ரகம், சிங்கப்பூரின் நட்சத்திர விடுதிகளில் எல்லாம் இவைதான் அலங்கரிக்கும்.

இன்னொரு மகா முக்கியமான அம்சம் விஞ்ஞான மாற்றம், தரையினை எடுத்துகொள்ளுங்கள், சாலையிலே எவ்வளவு வாகனம். விவசாயத்திற்கு மோட்டார்,டிராக்டர், அறுவடை இயந்திரம் என வந்தாயிற்று,

சாலையின் ஓரங்களில் எங்கு திரும்பினாலும் கனரக எந்திரங்கள் வரிசை கட்டி நிற்கின்றன, புல்டோசர், கிரேன் என வரிசைகட்டி நிற்கின்றன‌

இதே கனரக படகுகள் முன்னேற்றம் மீன்பிடியிலும் வந்தாயிற்று.

நவீன பெரும் படகுகள், இரட்டைமடி வலைகள் (ஒரு கடல் குச்சி கூட மிஞ்சாது), என ராமேஸ்வரம் பகுதி மாறிற்று, எல்லா அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்களுக்கும் நவீன படகு இருக்கிறது என்பதும் செய்தி, இப்படியாக 100 கட்டுமர படகுகள் இருந்த இடத்தில் 1000 நவீன படகுகள் நிற்கின்றன.

அதாவது மக்கள் தொகை, பெரு நவீன படகுகள் பெருத்திருக்கின்றன, மீன்பிடி வசதிகள் பெருகிவிட்டன, நெருக்கடிகள் அதிகரிக்கின்றன‌

ஆனால் கடல் அகலமாவாது அல்லவா?

அப்பக்கம் யுத்தத்தால் சீரழிந்த இலங்கை மீணவர்களுக்கு இந்த முன்னேற்றம் இல்லை, வசதிகள் இல்லை. அவர்கள் பின் தங்கியும் இருக்கின்றார்கள். இந்திய மீணவர்கள் எல்லை தாண்டி செல்வது அவர்களுக்கே தெரியாது, கடல் அப்படியானது, மீன்களை குறிவைத்து செல்வார்கள் , பிடிப்பார்கள்.

இந்த நவீன பெரும் படகும், இரட்டை மடியினையும் நிச்சயம் இலங்கை மீணவர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை. அவர்கள் தொழில் அழியும் நிலை, அதனால்தான் அது சிங்கள அரசாயினும், நாட்டு மக்களுக்காய் ஓடிவந்து நிற்கும், இன்னொன்று இந்தியாவினை சீண்டிகொண்டிருப்பதில் அதாவது இந்தியா தங்களிடம் தாங்கி தாங்கி பேச்சு நடத்துவதில் அவர்களுக்கும் சந்தோஷம்.

ஒரு நாட்டின் கடல் பகுதியில் இன்னொரு நாடு செல்லமுடியாது என்பது சர்வதேச விதி, அதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கும் உண்மை. கச்சத்தீவை திரும்ப வாங்கினால் மட்டும் பிரச்சினை தீருமா?

இந்த மீன்பிடி வெறிக்கு அது நிச்சயம் தீராது, காரணம் அதனை தாண்டினால்தான் மீன்கள் கிடைக்கும் நிலை. கச்சதீவில் ஓய்வெடுக்கலாமே தவிர இப்பிரச்சினை தீராது. அப்படி கச்சத்தீவு மீட்கபட்டாலும் பிரச்சினை நெடுந்தீவிற்கு மாறும் என்பதுதான் உண்மை.

நிச்சயமாக அவர்கள் நாட்டு மீன் வளம் அவர்களுக்கு, நமது நாட்டு வளம் நமக்கு. பாருங்கள் இருவரும் தமிழர்கள்தான், ஆனால் இந்திய தமிழ் மீணவர்களின் நவீன வசதிக்கு நிற்கமுடியாமல் அவர்கள் மன்றாடுகின்றார்கள். இன்னொன்று இரட்டைமடி நிச்சயம் அபாயமானது, தடுக்கபட வேண்டியது, ஆனால் செய்வது யார்?

உங்கள் மக்கள்தொகை போலவே படகுகள் அதிகம், எமக்கோ குறைந்த மக்கள் தொகை அதுவும் வசதிகளும் குறைவு, அதனால் நீங்கள் பிடித்துவிட்டு சென்றால் எங்களுக்கு நெத்திலி கூட மிஞ்சாது என கதறுவது நிச்சயம் தொப்புள் கொடி உறவுகள்தான்.

தமிழக மேடைகளில் ஈழதமிழருக்காய் முழங்குபவர்கள் யாரேனும் இதனை பற்றி பேசுவார்கள்? தமிழன் இன்னொரு நாட்டு தமிழனின் மீனை பிடித்து அவன் வயிற்றில் அடித்தால் பிரச்சினை இல்லை என்பது இவர்கள் நிலைப்பாடு, இது அரசியல் அப்படித்தான் இருக்கும்.

பொதுவாக அரசியல்வாதிகளால் ஒருநாளும் பிரச்சினை தீராது, அதை உணர்ந்த இரு நாட்டு மீணவ பிரதிகளும் கலந்து பேசினார்கள், நம்மவர்கள் செவிசாய்க்கவில்லை, அவர்கள் அடிபட்டு வறுமையில் கிடப்பவர்கள், நம்புவது உங்கள் விருப்பம்,

ஆனால் அவர்களுக்கும் பாதிப்பு உண்டு என்பது உண்மை.

ஆனால் சிங்களனிடம் அழுதார்கள், அது பல திட்டம் தீட்டிற்று.
அதிலொன்றுதான் 15 கோடி அபராதம், எங்கள் கடலில் சம்பாதித்ததை எங்களுக்கே கொடுங்கள் எனும் ஒருவகை திட்டம்.

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு? அது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு நாட்டின் குறிப்பிட்ட எல்லைக்கு பின் சர்வதேச கடல்பகுதி வரும், அங்கு யாரும் மீன் பிடிக்கலாம், அப்படித்தான் குளச்சலுக்கு சற்று தொலைவில் ஜப்பானிய கப்பல்கள் நெத்திலி பிடித்துகொண்டிருக்கும்.

அதனை போல கொஞ்சம் தாண்டி சென்றால் அது சர்வதேச கடல் பகுதி, அங்கு யாராலும் எந்த பிரச்சினையும் செய்யமுடியாது, அதுவும் இலங்கைக்கு கிழக்கே பெரும் திறந்த கடல்வெளி.
அம்மாதிரி பெரும் வசதிகளை தமிழக மீணவர்களுக்கு செய்துகொடுத்தால், அவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு பழகிகொள்வார்கள்,

பெருத்துவரும் உலகில் இதுவும் ஒரு தீர்வு முயற்சி.

தாத்தா காலத்தில் 10 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், இன்று 600 அடியில் கிடைக்கின்றது அல்லவா? அப்படித்தான் கடலிலும் உள்செல்ல வேண்டும்.

கச்சத்தீவினை கொடுத்த காலங்கள் வித்தியாசமானவை, அது இந்தியா அணுகுண்டு சோதனை செய்த காலங்கள், பாகிஸ்தானை தவிர எல்லா நாடுகளுடனும் நட்புறவு தேவைபட்டது, இலங்கை ஐ.நாவில் அலறினால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தும், அதனால்தான் ராஜதந்திரமாக அவர்கள் வாயினை அடைத்தார் இந்திரா.

இன்று இல.கணேசன் சொல்கின்றார் அல்லவா?, நாட்டிற்காக ஒரு பகுதியினை தியாகம் செய்யலாம் என்று, அந்த தியாகத்தை அன்றே தமிழகம் செய்துவிட்டது

இன்னொன்று கடத்தல்காரர்களின் அட்டாகசம் நிறைந்த பகுதி தமிழக காவல்துறைக்கும் சவாலாக இருந்தது, தலைமுழுகினால் போதும் எனும் நிலைக்கு செல்லுமளவிற்கு ரகசிய அறிக்கைகள் உண்டு என்பார்கள்

இன்று அதனை திரும்ப பெரும் வாதங்கள் வலுக்கின்றன, திரும்ப பெற்றால் சிக்கல் இல்லைதான் ஆனால் பிரச்சினை தீராது. சர்வதேச சிக்கல்கள் அப்படி.

இரு ஆண்டுகளுக்கு முன்னால் குமரி மீணவர்களை இங்கிலாந்து கடற்படை கைது செய்தது? ஏன் நம்மவர்கள் இங்கிலாந்துக்கு சென்றார்கள் என்றா? இல்லை.

அமெரிக்க மர்ம தீவான டீகோ கார்சியா இங்கிலாந்தின் தீவு அமெரிக்கா குத்தகைக்கு எடுத்திருக்கின்றது, அதன் அருகே (வெகு தொலைவு அது, அவர்கள் முன் ஓடி வந்து கைது செய்தனர்) சென்ற குமரி மீணவர்களை இங்கிலாந்து இது எமது எல்லை என கைது செய்தது, என்ன நடந்தது? யாராவது இங்கிலாந்து ஒழிக, அமெரிக்கா ஒழிக என சத்தமிட்டோமா?

அது இங்கு நடக்காது, நமது ஊடகங்கள் அப்படி.

உண்மையில் நமது மீணவர்கள் நலன் காக்க வேண்டுமானால் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டும், அவர்களை ஆழ்கடல் பயிற்சிக்கு பழக்கவேண்டும், அதற்கான வசதிகளை அரசு செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் இந்த குறுகிய கடலுக்குள் ஏற்படும் சச்சரவுகளை கச்சத்தீவினை திரும்ப பெறுவதால் மட்டும் தீர்த்துவிடமுடியாது. அல்லது கடற்படையினை நிறுத்தி இலங்கையினை அச்சுறுத்தவும் முடியாது,

முடியவேண்டும் என்றால் பல வகைகளில் இந்தியா முன்னேறி இருந்து, பொருளாதார தடைகளை தாங்கும் சக்தி பெற்றிருக்க வேண்டும், இப்போதைக்கு அது சாத்தியமில்லை.

“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை..” என்பது பழமொழி, அதுவும் இந்த வியாபாரகாலத்தில் மிஞ்சி நிற்பது ஒன்றுமில்லை, மிக பரிதாபகரமான தொழில் அது.

என்ன செய்வது? நமது நாட்டில் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் அதனை அரசியலாக்கியே பழகிவிட்டார்கள், அதனை வைத்து வெறியூட்டவும் கற்றுகொண்டார்கள், மற்றபடி எந்த பிரச்சினையினையும் தீர்க்கமாட்டார்கள்.

ஆனால் பாதிக்கபடுவது அடிமட்ட மக்களாக இருக்கும், அது விவசாயியோ அல்லது மீணவனோ. ஆனால் இந்த அடிமட்டங்கள்தான் பின்னாளில் அரசுகளை புரட்சி எனும் பெயரில் மாற்றி இருக்கின்றன என்பதுதான் வரலாறு.

அந்த வரலாறு இவர்களை விடுதலை செய்யட்டும், ஜல்லிகட்டுக்கு பொங்கியது போல மொத்தமாக தமிழகம் பொங்கினால் இந்த சிக்கல்கள் தீர்க்கபடலாம்

அப்படி தீர்க்கபட்டாலும் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீணவர் நுழைவது தடுக்கபடும், இவர்களுக்கு மீன்பாடு சிக்கலே, தொழில் பாதிக்கபடும்

நாங்கள் அப்படித்தான் அத்துமீறி இலங்கை கடலில் நுழைவோம் எனவும் செல்லமுடியாது

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மாறாமல், புதிய வழிதடங்களை மீணவர்களுக்கு காட்டாமல் எதுவும் சாத்தியமில்லை

அவர்கள் பிழைப்பு கெடுகின்றது என இந்திய மீணவனௌ சுட்டுகொல்வதை ஏற்றுகொள்ளவே முடியாது, இதனை இந்தியா பெரும் கோபத்தோடு கண்டித்து சீறலாம்

ஆனால் செய்யாது, உலக அரசியல் அந்த லட்சணம்

இனியாவது எந்த தமிழ் மீணவனும் சாகாமல் இருக்கட்டும்…அதற்கான நடவடிக்கைகளை மோடி எடுக்கட்டும்

மோடி வந்தபின் துப்பாக்கி சூட்டினை நிறுத்தியிருந்த இலங்கையன் மறுபடியும் தூக்கியிருக்கின்றான்

மோடி இதனை எப்படி எதிர்கொள்கின்றார் என பார்க்கலாம், இனி ஒரு தமிழ் மீணவன் சாகாமல் இருக்கட்டும்

 
 

ராமேஸ்வரமும் இலங்கையும் : 01

ராமேஸ்வரமும் இலங்கையும்  : 01

Image may contain: ocean, sky, outdoor and water

1970 வரை இது பெரும் பிரச்சினை அல்ல, கச்சத்தீவு (கச்சம் என்றால் ஆமை என பொருள்) எனும் மனிதர் வாழா தீவினை, (அங்கு நல்ல நீர் கிடைக்காது),

இலங்கைக்கு கொடுத்தபின்னும் பெரும் பிரச்சினை இல்லை. இலங்கை மீணவர்களும், இந்திய மீணவர்களும் சந்திக்கும் இடமாகவே அது மாறிற்று,

அதுவும் மீணவர்களின் பாதுகாவலர் எனநம்மபடும் புனித அந்தோணியாரின் திருவிழா அங்கு இருவராலுமே நடத்தபட்டது, மதங்களை தாண்டி. எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

1980களில் தமிழக போராளிகள் தமிழகம் வந்து செல்லும்பொழுது, பாதுகாப்பு சோதனை எனும் பெயரில் சிங்கள கடற்படை வந்து நின்றபின்புதான் சிக்கல் தொடங்கிற்று, அதாவது போராளிகளுக்கு இதுதான் சப்ளை ரூட் என்பது சிங்களரின் நம்பிக்கை என ஏகபட்ட சிக்கல்கள். போராளிகளுக்கு இந்தியாவின் ஆசி உண்டென்பது பரம ரகசியம் அல்ல.

ஆனால் பின்னர் நிலமை மகா மோசமாயிற்று, 1983க்கு பின் புலிகள் விஸ்வரூபமெடுக்க பதிலுக்கு சிங்களமும் மல்லுகட்ட, முதல் துப்பாக்கி சூடு 1983ல் தொடங்கிற்று.

அமைதிபடை காலத்திலும், பின் 1991க்கு பின் இந்திய ஈழபார்வை முற்றிலும் மாறிபோக, புலிகளின் கையும் கடல்பரப்பில் ஓங்கி நிற்க இந்தியா தடுமாறிற்று.

பின் அவர்கள் எல்லை என ஒன்றை காட்டி, இதனை தாண்ட கூடாது என்றனர், பின் இன்னும் மோசமாக கச்சத்தீவு பக்கம் வரகூடாது என்றனர், உண்மையில் இந்திய ஒப்பந்தபடி இலங்கையின் கச்சதீவிற்கு இந்தியர்கள் எப்பொழுதும் செல்லலாம், விசா தேவை இல்லை என்பது குறிப்பிட தகுந்த விஷயம்.

இந்த கடல்கட்டுப்பாடு புலிகள் கையில் சென்றபின் சிக்கல் தொடங்கியது, அடிக்கடி சிங்கள கடற்படையினை தாக்குவர், சிங்களருக்கு ஒரே நம்பிக்கை, தமிழகத்திலிருந்துதான் பொருள் இவர்களுக்கு வருகின்றது, போட்டு சாத்துவோம், 4 அப்பாவிகள் செத்தாலும் 40 கடத்தல்காரர் பயப்படுவார்கள்.

1995ல் இதனை குறிவைத்துதான் சிங்களம் யாழ்பாணத்தை மீட்டது, மீட்டபின்பு அந்த கடல்பாதையினை தன் கட்டுபாட்டில் வைத்துகொண்டது, யாழ்பாண மீணவர்களும் பாதிக்கபட்டார்கள், அதாவது சிங்கள மீணவர்களுக்கு முன்னுரிமை வழங்கபட்டது, ஒரு மாதிரியான அரசியல் இது.

இதில் அடிக்கடி இந்திய மீணவர்கள் எல்லை தாண்டுவதும், அவர்கள் சுடுவதும் நடந்துகொண்டே இருக்க, இந்தியா கண்டனம் தெரிவிக்கும் ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை, காரணம் உலக சிக்கல், அரசியல் இன்னும் ஆயிரம் அட்டகாசங்கள், புலிகள், ராணுவம், கடத்தல்கள் என ஏக சிக்கல்.

ஆனால் மோடி வந்தபின் ஒருவிஷயம் குறைந்தது அது சுட்டுகொல்வது. நிச்சயம் மோடியின் சாதனை அது.

அதன் பின் இப்பொழுது சுட தொடங்கிவிட்டார்கள்.

போர் முடிந்த முடிந்தபின்னும் இந்த சண்டைகள் ஏன்? இப்பொழுது புலிகள் இல்லை, ஆனால் பிரச்சினைகள் ஏன்? என்றால் பெரும் சிக்கலான விஷயம் இது.

புலிகள் பிரச்சினை இல்லாத இந்த காலகட்டத்தில், சிங்களரை பிடித்துவந்து இந்திய தமிழ் மீணவர்களை விரட்டுங்கள் என சொல்வது யார்? சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர்கள் வடக்கு கரை இலங்கை தமிழக மீணவர்கள்.

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது சாட்சாத் தமிழக மீணவர்கள் அதாவது இந்திய தமிழ் மீணவர் மற்றும் இலங்கை தமிழ் மீணவர் பிரச்சினை, உண்மையில் மோதிகொள்வது தமிழினம்.

அவர்களுக்கு சிங்கள அரசு, அதனால் ஓடி சென்று முறையிடுகின்றார்கள், சிங்களனுக்கு எதனையாவது காட்டி அரசியல் செய்யவேண்டும், அதுவும் இந்தியா அவர்களுக்கு எந்நாளும் எதிரி. வெளியில் நண்பன் என சொல்லிகொண்டே சீனாவிடம் விசாரிப்பார்கள், என்ன உங்கள் நீர்மூழ்கி கொஞ்ச நாளாக காணவில்லை.

அவர்கள் அப்படித்தான், நடிப்பில் கை தேர்ந்தவர்கள், பூகோள முக்கியத்துவம் அப்படி, அதனால்தான் அடிக்கடி இந்தியா,பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா என பல படபிடிப்பு நடக்கும்.

அப்படியான சிங்களம் என்ன சொல்லும், பார்த்தீர்களா இலங்கை தமிழ் மீணவர்களுக்காக இந்தியாவினையே எதிர்க்கின்றோம் என சொல்லி, வடக்கு பகுதியில் ஆதரவு திரட்டும், மக்களும் ஆதரவு கொடுக்கின்றனர், நடக்கின்றது.

தமிழனை சிங்களன் நடுகடலில் சுட்டுகொல்கின்றான் உறவுகளே என முழக்கமிடுபவர்களுக்கு, அங்க சுட சொல்வதும் தமிழன், சுடபடுவதும் தமிழனுக்காக என்பது தெரியாததல்ல, சொல்ல மாட்டார்கள்.

அப்படி சொன்னால் தொப்புள் கொடி, அகண்ட தமிழகம், என இவர்களால் முழங்க முடியாது, அதனால் மறைத்துகொண்டு மத்திய அரசு, தமிழக அரசு, சிங்களம் என வெறி ஏற்றுவார்கள்.

எதற்காக இப்படி மல்லு கட்டுவது? பிண்ணணியில் யார்? தமிழக மீடியாக்களை பார்த்து மன்மோகன், மோடி என புலம்பி திரியும் தமிழர்களுக்கு என்றாவது வட இலங்கை மீணவர்களின் துயரம் தெரியுமா?

ஈழ பிரச்சினை என்றால் மலையக மக்களை பற்றி பேசமாட்டோம், வடக்கு கிழக்கினை இணைப்பதில் ஈழ தமிழருக்கு என்ன பிரச்சினை என கேட்கமாட்டோம், தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கு ஈழத்தில் இடமில்லையா? ஏன் என கேட்கமாட்டோம்.

உள்ளூரில் ஒரு பிரச்சினையினை ஒழுங்காக தீர்த்திருந்தால்தானே அடுத்த ஊர் பிரச்சினை முழுமையாக தெரியும்?, நமக்கு தெரிந்ததெல்லாம் ஈழம், பிரபாகரன், புலிகள் மற்ற எல்லோரும் துரோகிகள், கடலில் மீன்பிடி பிரச்சினையா சிங்களன் ஒழிக, தமிழன் முதல்வரானால் எல்லாம் சரியாகும், வந்தேறி நாயக்கர் ஒழிக, வரப்பேறி பார்ப்பான் ஒழிக, எல்லோரும் ஒழிக……..

தமிழன் பிரதமரானால் கூட தீர்க்கமுடியா சிக்கல் இது என்றால் ஒப்புகொள்ளமாட்டோம்.

பிரச்சினையினை ஒரே கோணத்தில் பார்ப்பது தமிழக மீடியா, அதனை கட்சிகளும் ரசிக்கும், அது அரசியலானதும் பின் ஆர்ப்பரிப்பார்கள், இப்படியான ஒரு நிலை தமிழகத்திற்கு.

ராமேஸ்வரம் மீணவர்களின் கண்ணீரை போலவே வட இலங்கை மீணவர்களின் கண்ணீரும் கொடுமையானது, அதிலும் சில நியாயங்கள் உண்டு.

அவர்களை வைத்து அரசியல் செய்வது சிங்களம், ராமேஸ்வர மீணவர்களை வைத்து அரசியல் செய்வது தமிழக மீடியாக்கள்.

உண்மையில் கண்ணீர் விடுவதும், உயிரினை விடுவதும் ராமேஸ்வர மீணவர்கள்தான், அதே நேரம் வடக்கு இலங்கை மீணவர்களின் கண்ணீரிலும் சில நியாயங்கள் உண்டு

எப்படி? அது விசித்திரமானது, வெளி வராதது. தீர்வு உண்டா? நிச்சயம் உண்டு

கலைஞர் நல்லவரா? கெட்டவரா?

கலைஞரை பற்றி எழுதும் பொழுதெல்லாம், அவர் ஒரு கரிநாய் என்று ஒரு சொரிநாய் பின்னால் வந்து சொல்லிகொண்டே இருக்கின்றது

கலைஞர் நல்லவரா? கெட்டவரா? எனும் நாயகன் வசனம் எல்லாம் பேச வேண்டியதில்லை

ஒரு மாநிலத்தை எப்படி ஒரு சாதாரண எழுத்தாளன் பாதிக்கமுடியும்? எப்படி ஆட்சியினை மாற்றி அமைக்க முடியும் என செய்து காட்டியவர் அவர்

அவரை மனதார ரசித்தே பல மாநிலங்கள் உணர்வே பெற்றன. இந்தியா முழுக்க பலருக்கு வழிகாட்டி நிச்சயம் அவர்தான்

அவ்வகையில் பலமாநிலங்களில் அவருக்கான அபிமானம் இன்றளவும் உண்டு.

கடந்த 50 ஆண்டுகளாக அவரால் உருவாக்கபட்டவர்கள்தான் இம்மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கின்றார்கள், இன்று ஆளும் நடராஜன் வரை, அவர் பின்னால் தமிழ் வாழ்க என கோஷமிட்டவரே

அதாவது உரிமை குரலை எப்படி எழுப்புவது என தமிழகத்திற்கு சொல்லிகொடுத்ததே கலைஞர்தான், அந்த தைரியம் அவரால்தான் ஊட்டபட்டது

இன்னும் 100 ஆண்டுகளுக்கு அவரால் உருவாக்கபட்டவர்கள் தான், அவரின் பாதிப்பில் வந்தவர்கள்தான் தமிழநாட்டினை ஆளமுடியும்

கலைஞரின் பாதிப்பின்றி இனி தமிழக அரசியல் அமையாது

அப்படி ஒரு நிலைவரினும், இந்த இடத்தில் கலைஞர் எப்படி சமாளித்தார் என அவரைத்தான் திரும்பி பார்ப்பார்கள்

இது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று

ஆக பெரும் மாற்றத்தை இந்த தமிழகத்தில் கொடுத்த தலைவர் அவர், காமராஜரை எதிர்த்ததை விட அவர் பெரும் தவறு ஏதும் செய்யவில்லை

ஆனால் கலைஞர் இல்லாவிடாலும் , காமராஜரை வீழ்த்த இந்திரா இன்னொருவரை நிச்சயம் தயாரித்திருப்பார், அது இன்னமும் மோசமானதாக உருவாகியிருக்கும்

கலைஞர் அரசியலுக்கான சில தன்மைகளை மாற்றினார் என்றால், இந்திரா செய்தது எம்மாதிரி அரசியல்? பாஜக செய்தது எம்மாதிரி அரசியல்

அரசியல் அப்படித்தான், அதனை முன்கூட்டியே கணித்து களமிறங்கிவர்தான் கலைஞர்

அவரை முழுவதுமாக ஏற்றுகொள்ளமுடியாவிட்டாலும், அவரை நிராகரித்துவிட முடியாது

ஒரு இடத்திற்கான தேவை தமிழகத்தில் இருந்தது, காலம் அதனை கலைஞராக உருவாக்கிகொண்டது

அவரை குருவாக கொண்டுதான் ஆனானபட்ட எம்ஜிஆர் கூட செயல்பட்டார், கலைஞர் மீது அவருக்கொரு மரியாதை என்றும் இருந்தது

கலைஞர் இல்லாவிட்டால் தன் அரசியல் வாழ்வு இல்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் ஜெயலலிதா

அவரை துச்சமாக மதித்தவன் எல்லாம் வைகோ போல பைத்தியமானார்கள், அல்லது பிரபாகரன் போல அழிந்தார்கள்

இது பெரும் உண்மை, வரலாற்றை புரட்டினால் அந்த சொரிநாய்க்கு விளங்கும்

சொரியாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது என தெரியாது என்பார்கள், அது உண்மை போலிருக்கின்றது

இன்னும் வந்து கரிநாய் என அந்த சொரிநாய் ஊளையிட்டால் அது விரட்டபடுவது உறுதி

அவரின் சாதனையில் கோடியில் ஒருபங்கினையவது செய்துவிட்டு சொரிய தொடங்கு முடியாதல்லவா?

அதனால் மிஸ்டர் சொரிநாய், இத்தோடு உன் சொரியலை நிறுத்துவது நல்லது

 
 
 

இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர்

சவுதி மன்னருடன் 25 இளவரசர்கள், 10 அமைச்சர்கள், 100 பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம்1,500 பரிவாரங்கள் என 36 விமானங்களில் இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர்

ஏன் இப்படி மொத்த அரண்மனையோடு பயணித்தார்?

ஒருவேளை தனியாக சென்றால், திரும்பி வரும்பொழுது யாரும் அடுத்த மன்னராக இருந்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருந்திருக்குமோ?

மொத்த குடும்பத்தையும் மொத்தமாக அழைத்துசென்று கண்காத்திருப்பாரோ?

ஆக சிம்மாசனத்தையும் கூடவே சுமந்துசென்றிருக்கின்றார் சவுதி மன்னர்.

இதுவும் ஒருவகை ராஜ தந்திரமாக இருக்கலாம்..

கூவத்தூர் செய்திகளை மன்னர் படித்திருக்க வாய்ப்பு உண்டு, அது சவுதி மன்னரை பாதித்திருக்கலாம்