ராமேஸ்வரமும் சிங்கமும் : 02

ராமேஸ்வரமும் சிங்கமும் : 02

Image may contain: text

உலகின் சில சுவையான மீன்கள் கிடைக்கும் பகுதி என இப்பகுதிக்கு பெயர், அதன் நில அமைப்பு அவ்வாறானது, குறிப்பாக இறால்,நண்டு வகைகள் அதிலும் சிங்க இறால் மற்றும் நீலக்கால் நண்டு மகா பிரசித்தி, எல்லாம் பெரும்பாலும் ஏற்றுமதி ரகம், சிங்கப்பூரின் நட்சத்திர விடுதிகளில் எல்லாம் இவைதான் அலங்கரிக்கும்.

இன்னொரு மகா முக்கியமான அம்சம் விஞ்ஞான மாற்றம், தரையினை எடுத்துகொள்ளுங்கள், சாலையிலே எவ்வளவு வாகனம். விவசாயத்திற்கு மோட்டார்,டிராக்டர், அறுவடை இயந்திரம் என வந்தாயிற்று,

சாலையின் ஓரங்களில் எங்கு திரும்பினாலும் கனரக எந்திரங்கள் வரிசை கட்டி நிற்கின்றன, புல்டோசர், கிரேன் என வரிசைகட்டி நிற்கின்றன‌

இதே கனரக படகுகள் முன்னேற்றம் மீன்பிடியிலும் வந்தாயிற்று.

நவீன பெரும் படகுகள், இரட்டைமடி வலைகள் (ஒரு கடல் குச்சி கூட மிஞ்சாது), என ராமேஸ்வரம் பகுதி மாறிற்று, எல்லா அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்களுக்கும் நவீன படகு இருக்கிறது என்பதும் செய்தி, இப்படியாக 100 கட்டுமர படகுகள் இருந்த இடத்தில் 1000 நவீன படகுகள் நிற்கின்றன.

அதாவது மக்கள் தொகை, பெரு நவீன படகுகள் பெருத்திருக்கின்றன, மீன்பிடி வசதிகள் பெருகிவிட்டன, நெருக்கடிகள் அதிகரிக்கின்றன‌

ஆனால் கடல் அகலமாவாது அல்லவா?

அப்பக்கம் யுத்தத்தால் சீரழிந்த இலங்கை மீணவர்களுக்கு இந்த முன்னேற்றம் இல்லை, வசதிகள் இல்லை. அவர்கள் பின் தங்கியும் இருக்கின்றார்கள். இந்திய மீணவர்கள் எல்லை தாண்டி செல்வது அவர்களுக்கே தெரியாது, கடல் அப்படியானது, மீன்களை குறிவைத்து செல்வார்கள் , பிடிப்பார்கள்.

இந்த நவீன பெரும் படகும், இரட்டை மடியினையும் நிச்சயம் இலங்கை மீணவர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை. அவர்கள் தொழில் அழியும் நிலை, அதனால்தான் அது சிங்கள அரசாயினும், நாட்டு மக்களுக்காய் ஓடிவந்து நிற்கும், இன்னொன்று இந்தியாவினை சீண்டிகொண்டிருப்பதில் அதாவது இந்தியா தங்களிடம் தாங்கி தாங்கி பேச்சு நடத்துவதில் அவர்களுக்கும் சந்தோஷம்.

ஒரு நாட்டின் கடல் பகுதியில் இன்னொரு நாடு செல்லமுடியாது என்பது சர்வதேச விதி, அதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கும் உண்மை. கச்சத்தீவை திரும்ப வாங்கினால் மட்டும் பிரச்சினை தீருமா?

இந்த மீன்பிடி வெறிக்கு அது நிச்சயம் தீராது, காரணம் அதனை தாண்டினால்தான் மீன்கள் கிடைக்கும் நிலை. கச்சதீவில் ஓய்வெடுக்கலாமே தவிர இப்பிரச்சினை தீராது. அப்படி கச்சத்தீவு மீட்கபட்டாலும் பிரச்சினை நெடுந்தீவிற்கு மாறும் என்பதுதான் உண்மை.

நிச்சயமாக அவர்கள் நாட்டு மீன் வளம் அவர்களுக்கு, நமது நாட்டு வளம் நமக்கு. பாருங்கள் இருவரும் தமிழர்கள்தான், ஆனால் இந்திய தமிழ் மீணவர்களின் நவீன வசதிக்கு நிற்கமுடியாமல் அவர்கள் மன்றாடுகின்றார்கள். இன்னொன்று இரட்டைமடி நிச்சயம் அபாயமானது, தடுக்கபட வேண்டியது, ஆனால் செய்வது யார்?

உங்கள் மக்கள்தொகை போலவே படகுகள் அதிகம், எமக்கோ குறைந்த மக்கள் தொகை அதுவும் வசதிகளும் குறைவு, அதனால் நீங்கள் பிடித்துவிட்டு சென்றால் எங்களுக்கு நெத்திலி கூட மிஞ்சாது என கதறுவது நிச்சயம் தொப்புள் கொடி உறவுகள்தான்.

தமிழக மேடைகளில் ஈழதமிழருக்காய் முழங்குபவர்கள் யாரேனும் இதனை பற்றி பேசுவார்கள்? தமிழன் இன்னொரு நாட்டு தமிழனின் மீனை பிடித்து அவன் வயிற்றில் அடித்தால் பிரச்சினை இல்லை என்பது இவர்கள் நிலைப்பாடு, இது அரசியல் அப்படித்தான் இருக்கும்.

பொதுவாக அரசியல்வாதிகளால் ஒருநாளும் பிரச்சினை தீராது, அதை உணர்ந்த இரு நாட்டு மீணவ பிரதிகளும் கலந்து பேசினார்கள், நம்மவர்கள் செவிசாய்க்கவில்லை, அவர்கள் அடிபட்டு வறுமையில் கிடப்பவர்கள், நம்புவது உங்கள் விருப்பம்,

ஆனால் அவர்களுக்கும் பாதிப்பு உண்டு என்பது உண்மை.

ஆனால் சிங்களனிடம் அழுதார்கள், அது பல திட்டம் தீட்டிற்று.
அதிலொன்றுதான் 15 கோடி அபராதம், எங்கள் கடலில் சம்பாதித்ததை எங்களுக்கே கொடுங்கள் எனும் ஒருவகை திட்டம்.

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு? அது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு நாட்டின் குறிப்பிட்ட எல்லைக்கு பின் சர்வதேச கடல்பகுதி வரும், அங்கு யாரும் மீன் பிடிக்கலாம், அப்படித்தான் குளச்சலுக்கு சற்று தொலைவில் ஜப்பானிய கப்பல்கள் நெத்திலி பிடித்துகொண்டிருக்கும்.

அதனை போல கொஞ்சம் தாண்டி சென்றால் அது சர்வதேச கடல் பகுதி, அங்கு யாராலும் எந்த பிரச்சினையும் செய்யமுடியாது, அதுவும் இலங்கைக்கு கிழக்கே பெரும் திறந்த கடல்வெளி.
அம்மாதிரி பெரும் வசதிகளை தமிழக மீணவர்களுக்கு செய்துகொடுத்தால், அவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு பழகிகொள்வார்கள்,

பெருத்துவரும் உலகில் இதுவும் ஒரு தீர்வு முயற்சி.

தாத்தா காலத்தில் 10 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், இன்று 600 அடியில் கிடைக்கின்றது அல்லவா? அப்படித்தான் கடலிலும் உள்செல்ல வேண்டும்.

கச்சத்தீவினை கொடுத்த காலங்கள் வித்தியாசமானவை, அது இந்தியா அணுகுண்டு சோதனை செய்த காலங்கள், பாகிஸ்தானை தவிர எல்லா நாடுகளுடனும் நட்புறவு தேவைபட்டது, இலங்கை ஐ.நாவில் அலறினால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தும், அதனால்தான் ராஜதந்திரமாக அவர்கள் வாயினை அடைத்தார் இந்திரா.

இன்று இல.கணேசன் சொல்கின்றார் அல்லவா?, நாட்டிற்காக ஒரு பகுதியினை தியாகம் செய்யலாம் என்று, அந்த தியாகத்தை அன்றே தமிழகம் செய்துவிட்டது

இன்னொன்று கடத்தல்காரர்களின் அட்டாகசம் நிறைந்த பகுதி தமிழக காவல்துறைக்கும் சவாலாக இருந்தது, தலைமுழுகினால் போதும் எனும் நிலைக்கு செல்லுமளவிற்கு ரகசிய அறிக்கைகள் உண்டு என்பார்கள்

இன்று அதனை திரும்ப பெரும் வாதங்கள் வலுக்கின்றன, திரும்ப பெற்றால் சிக்கல் இல்லைதான் ஆனால் பிரச்சினை தீராது. சர்வதேச சிக்கல்கள் அப்படி.

இரு ஆண்டுகளுக்கு முன்னால் குமரி மீணவர்களை இங்கிலாந்து கடற்படை கைது செய்தது? ஏன் நம்மவர்கள் இங்கிலாந்துக்கு சென்றார்கள் என்றா? இல்லை.

அமெரிக்க மர்ம தீவான டீகோ கார்சியா இங்கிலாந்தின் தீவு அமெரிக்கா குத்தகைக்கு எடுத்திருக்கின்றது, அதன் அருகே (வெகு தொலைவு அது, அவர்கள் முன் ஓடி வந்து கைது செய்தனர்) சென்ற குமரி மீணவர்களை இங்கிலாந்து இது எமது எல்லை என கைது செய்தது, என்ன நடந்தது? யாராவது இங்கிலாந்து ஒழிக, அமெரிக்கா ஒழிக என சத்தமிட்டோமா?

அது இங்கு நடக்காது, நமது ஊடகங்கள் அப்படி.

உண்மையில் நமது மீணவர்கள் நலன் காக்க வேண்டுமானால் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டும், அவர்களை ஆழ்கடல் பயிற்சிக்கு பழக்கவேண்டும், அதற்கான வசதிகளை அரசு செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் இந்த குறுகிய கடலுக்குள் ஏற்படும் சச்சரவுகளை கச்சத்தீவினை திரும்ப பெறுவதால் மட்டும் தீர்த்துவிடமுடியாது. அல்லது கடற்படையினை நிறுத்தி இலங்கையினை அச்சுறுத்தவும் முடியாது,

முடியவேண்டும் என்றால் பல வகைகளில் இந்தியா முன்னேறி இருந்து, பொருளாதார தடைகளை தாங்கும் சக்தி பெற்றிருக்க வேண்டும், இப்போதைக்கு அது சாத்தியமில்லை.

“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை..” என்பது பழமொழி, அதுவும் இந்த வியாபாரகாலத்தில் மிஞ்சி நிற்பது ஒன்றுமில்லை, மிக பரிதாபகரமான தொழில் அது.

என்ன செய்வது? நமது நாட்டில் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் அதனை அரசியலாக்கியே பழகிவிட்டார்கள், அதனை வைத்து வெறியூட்டவும் கற்றுகொண்டார்கள், மற்றபடி எந்த பிரச்சினையினையும் தீர்க்கமாட்டார்கள்.

ஆனால் பாதிக்கபடுவது அடிமட்ட மக்களாக இருக்கும், அது விவசாயியோ அல்லது மீணவனோ. ஆனால் இந்த அடிமட்டங்கள்தான் பின்னாளில் அரசுகளை புரட்சி எனும் பெயரில் மாற்றி இருக்கின்றன என்பதுதான் வரலாறு.

அந்த வரலாறு இவர்களை விடுதலை செய்யட்டும், ஜல்லிகட்டுக்கு பொங்கியது போல மொத்தமாக தமிழகம் பொங்கினால் இந்த சிக்கல்கள் தீர்க்கபடலாம்

அப்படி தீர்க்கபட்டாலும் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீணவர் நுழைவது தடுக்கபடும், இவர்களுக்கு மீன்பாடு சிக்கலே, தொழில் பாதிக்கபடும்

நாங்கள் அப்படித்தான் அத்துமீறி இலங்கை கடலில் நுழைவோம் எனவும் செல்லமுடியாது

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மாறாமல், புதிய வழிதடங்களை மீணவர்களுக்கு காட்டாமல் எதுவும் சாத்தியமில்லை

அவர்கள் பிழைப்பு கெடுகின்றது என இந்திய மீணவனௌ சுட்டுகொல்வதை ஏற்றுகொள்ளவே முடியாது, இதனை இந்தியா பெரும் கோபத்தோடு கண்டித்து சீறலாம்

ஆனால் செய்யாது, உலக அரசியல் அந்த லட்சணம்

இனியாவது எந்த தமிழ் மீணவனும் சாகாமல் இருக்கட்டும்…அதற்கான நடவடிக்கைகளை மோடி எடுக்கட்டும்

மோடி வந்தபின் துப்பாக்கி சூட்டினை நிறுத்தியிருந்த இலங்கையன் மறுபடியும் தூக்கியிருக்கின்றான்

மோடி இதனை எப்படி எதிர்கொள்கின்றார் என பார்க்கலாம், இனி ஒரு தமிழ் மீணவன் சாகாமல் இருக்கட்டும்

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s