நிச்சயமாக கமலஹாசன் கலக்கல் தமிழன்… இன்னும் பிற…

சு.சாமி தமிழ்பொறுக்கி தமிழ்பொறுக்கி என சொல்லிகொண்டிருப்பதற்கு மிக சரியான பதிலை கமலஹாசன் சொல்லியிருந்தார்

“ஆம், நாங்கள் தமிழ்பொறுக்கிகள். உங்களை போல டெல்லியில் பொறுக்குபவர்கள் அல்ல”

இப்படி நெற்றியில் அடித்து சொன்னபிறகும் இந்த சு.சாமி இன்னும் தமிழ்பொறுக்கி, தமிழ்பொறுக்கி என சொல்லிகொண்டே இருக்கின்றார்

இவரை அடக்க அழகான வழி உண்டு

ராஜிவ் கொலைசதியினை மீண்டும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கைகள் வைத்தாலே போதும், அன்னார் அடங்கிவிடுவார்

கடும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ராஜிவிற்கான கருப்பு பூனை பாதுகாப்பினை இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் விலக்கினார், அதன் மூலம்தான் தனு ராஜிவினை கொல்லமுடிந்தது

ஏன் அப்படி விலக்கினார்? யாருக்கு சிக்னல் கொடுத்தார் என்பது மர்மம்

ஆக தமிழ்பொறுக்கிகள் செய்யவேண்டியது, ராஜிவ் கொலைவழக்கு சதியினை மீண்டும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கை வைப்பதே

எப்படி விசாரித்தாலும் புலிகள் கூலிப்படைதான், வேலூர் சிறைவாசிகள் எல்லாம் நிச்சயம் குற்றவாளிதான் ஆனால் ஒழுங்காக விசாரித்தால் சு.சாமி சிக்குவது மகா உறுதி..

கூடவே வை.கோவும் சிக்குவது உறுதி, ஜெயலலிதா ஏன் ராஜிவோடு மேடையேறவில்லை என்ற மர்மம் மட்டும் கலையாது, அவரை எழுப்பவா முடியும்?

பொறுக்கித்தனம் என்றால் என்ன? கொழும்பில், லண்டனில், அமெரிக்காவில், டெல்லியில், சந்திரசாமி ஆசிரமத்தில் இவர் “பொறுக்கியது” எப்படி என்பதெல்லாம் அப்பொழுதுதான் தெரியவரும்…

நிச்சயமாக கமலஹாசன் கலக்கல் தமிழன் தான்

“ஆம், நாங்கள் தமிழ்பொறுக்கிகள். உங்களை போல டெல்லியில் பொறுக்குபவர்கள் அல்ல…”


கச்சத்தீவை தாரைவார்த்தது கலைஞர் – விஜயகாந்த்

இந்திரா காந்தி என்றொருவர் இருந்தது கூட இவருக்கு தெரியவில்லை, இப்படியும் ஒரு வெள்ளந்தியான மனிதரா?

இவரையா கூட்டணி என்ற பெயரில் ஏமாற்றினார்கள்?

கலைஞரோடு சேர்ந்திருந்தால் குறைந்தபட்சம் 20 எம் எல் ஏக்களோடு எப்படி வளைய வந்திருப்பார்.
சட்டசபை களபேரத்தில் நாக்கை துருத்தியிருந்தால் சபை அரண்டிருக்கும்..

கூட்டணி என்ற பெயரில் இப்படி அரைபைத்தியம் லெவலுக்கு வந்துவிட்டாரே, அய்யோ பாவம்…

“இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா.. “


 பாத்திமா பாபுவினையும், லதாவினையும் “பத்தினி தெய்வங்கள்” என நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டதால் சர்ச்சை

நாஞ்சில் சம்பத்தின் நாக்கு உளற ஆரம்பித்து நெடுங்காலம் ஆயிற்று, அதுவும் ஜெயா மறைந்தபின் மனிதரின் மூளையே மளுங்கிற்று

அவர் உளரட்டும், ஆனால் பதிலுக்கு பதில் செவிட்டில் அடித்தாற் போல சொல்லமுடியாத நிலையில் லதா சிக்கிகொண்டார்

அந்த .. மட்டும் பத்தினி தெய்வமா? என கேட்டுவிட முடியாத நிலையில் பாத்திமாவும், லதாவும் சிக்கிகொண்டதுதான் பெரும் சோதனை

உண்மையினை வெளிசொல்லமுடியாத இம்மாதிரியான இக்கட்டு யாருக்கும் வரகூடாது, பரிதாபம்..


 


 

எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் உச்சகட்ட உளறல்

ஒரு உச்சகட்ட உளறல் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் சமீபத்திய சர்ச்சை பேச்சுதான் சாட்சி

மனிதர் திருப்பலியில் ஒயின் குடித்தாரா? இல்லை டாஸ்மாக் சரக்கினை ஊற்றி வைத்துவிட்டு பேட்டிக்கு அழைத்தார்களா என தெரியவில்லை, அப்படி ஒரு அபத்தம்

இவர் ஆயரோ, மேய்ப்பரோ அது தேவையில்லை, ஆனால் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த இந்தியகுடிமகன், இந்நாட்டு வரலாறு அவசியம் அவர் படித்திருக்கவேண்டும்

இந்தியாவில் மொகலாயர் நல்லாட்சி நடத்தினர், ஆங்கிலேயர் நல்லாட்சி நடத்தினர் என அப்படி அபத்தமான உளரல்

மொகலாயர் நலலாட்சி நடத்தினால் ஏன் சிவாஜியும், நாயக்கர் அரசும் எழும்பபோகின்றது? கிழக்கிந்திய கம்பெனி நடத்திய அராஜகத்தை கண்டே பிரிட்டன் அரசு இந்தியாவினை கையகபடுத்தியது, அதன் ஆட்சி வெறும் 90 ஆண்டுகளே

இந்தியாவில் எப்பொழுதும் அந்நியருக்கெதிரான ஒரு எதிர்ப்பு இருந்துகொண்டே இருந்தது, எந்த அந்நியனும் அமைதியாக ஆளவில்லை. ஆளவும் முடியாது

அப்படியும் பென்னிகுயிக், ஐடா ஸ்கேடர் போன்ற மிஷினரிகளை பற்றி சொன்னாரா என்றால் அதுவுமில்லை. அதனைத்தான் ஆயர் சொல்லியிருக்கவேண்டும்

இந்த ஆயர் சுத்தமாக சரியில்லை, நாட்டுபற்று இல்லாத, இந்திய வரலாறு தெரியாத எந்த மத தலைவனும் இம்மண்ணிற்கு தேவையில்லை

இனி இந்த ஆயர் இப்படி எல்லாம் உளறலாமலிருக்க, அவர் திருப்பலி மட்டும் வைத்துவிட்டு சும்மா இருக்கும்படி கிறிஸ்தவர்கள் சார்பாக கேட்டுகொள்கின்றோம்

அவர் வாயினை மூடி இருப்பதை விட கிறிஸ்தவத்திற்கு பெரும் உதவி செய்யமுடியாது,

இது இருக்கட்டும்

கமலஹாசன் எது செய்தாலும் இந்துமதத்தினை கேவலபடுத்துகின்றார் என பொங்குபவர்களுக்கு “செந்தூரா..செந்தூரா” என ஒரு பாடல் வந்திருப்பது தெரியவில்லை போலும்

சிகப்பான, செந்தூரமான ஊர் செந்தூர், அது திருசெந்தூர் என அழைக்கபட காரணமும் அதுவே, தேரிகாட்டு முருகனுக்கு செந்தூரன் என பெயர்,

கொஞ்ச நாளாக “செந்தூரா.. தூரா..தூ” என ஒரு பெண்குரலில் ஒரு பாட்டு ஒலிக்கும் பொழுதெல்லாம் இது ஏதோ முருகன் பாடல் என நினைத்ததுண்டு, இப்பொழுதுதான் தெரிந்தது அது சினிமாபாடலாம்

முருகனை குறிக்கும் சொல்லை , இப்படி “தூரா, தூரா.தூ” என ஒரு பெண் உச்சஸ்தானியில் பாடி கேவலபடுத்துகின்றார், ஒரு எதிர்ப்புமில்லை. ஒரு சத்தமுமில்லை

இதே கமலஹாசன் படத்தில் ஒரு பெண் “செந்தூரா” என அவரை நோக்கி பாடியிருந்தால் விடுவார்களா? இந்நேரம் வேலினை தூக்கிகொண்டு சூழ்ந்திருப்பார்கள்

ஆக இவர்களுக்கு இந்துகடவுள்கள் பற்றிய அறிவினையும், உணர்ச்சியினையும்
கொடுக்க கமலஹாசன் தான் தேவைபடுகின்றார்

ஏ காவி கும்பல்களே, இனியாவது அவரை புரிந்துகொள்ளுங்கள். இந்த செந்தூரா …. எனும் ஒப்பாரிக்கு முணுமுணுப்பாவது கொடுங்கள்

முப்பாட்டன் முருகனை “செந்தூரா….தூரா” என சினிமா பாடலில் பாடுவதை அங்கிள் சைமன் எப்படி பொறுத்துகொண்டார்?

அதானே, சினிமாக்காரர்களை என்றைக்கு அங்கிள் கண்டித்தார்?


கேரள முதல்வருடன் வை.கோ சந்திப்பு

எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபிக்கு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமோ, அங்கெல்லாம் அன்னார் செல்வார் என்பது தெளிவாக புரியும் இன்னொரு நேரமிது

ஆர்எஸ்எஸ் Vs விஜயன் சர்ச்சை முற்றி நிற்க இவர் ஏன் இப்பொழுது அங்கு செல்லவேண்டும்? நியூட்ரினோ பற்றி பேசபோனாராம். அத்திட்டம் என்ன நேற்று நள்ளிரவில் அறிவிக்கபட்டதா?

இருந்து பாருங்கள், சில நாட்களில் முல்லைபெரியாறு, சிறுவாணி என அணை சர்ச்சைகள் வந்தாலும் வரலாம்

அப்படி வரும் பட்சத்தில் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.


இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது: ஓபிஎஸ் கண்டனம்

ஆமாம், ஜெயலலிதாதான் தமிழக படைகளை அனுப்பி இலங்கை கடற்படையினரை மிரட்டி வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது

ஜெயா காலத்தில் தமிழக மீணவர்கள் இலங்கை தாண்டி, இந்தோனேஷியா வரை சென்று மீன்பிடித்தனர் என நம்பிகொள்ளுங்கள்

மெரினாவினை சுத்தபடுத்துகின்றேன் என சொல்லி சொந்த தமிழக மீணவர்களை சுட்டுகொன்றவர் எம்ஜிஆர், எத்தனை பேர் செத்தார்கள் என்பது இதுவரை தெரியாது

இடிந்தகரை மீணவ‌ மக்கள் அடித்து நொறுக்கபடும் பொழுதும், சிலர் சாகும்பொழுதும் ஒன்றுமே தெரியாதவர் போல இருந்தவர் ஜெயலலிதா

மணல் ஆலைகளால் தென்னக மீணவர்கள் படும்பாட்டினை காதுகொடுத்து கேட்கவும் அவர் தயாராக இல்லை

இப்படி என்றுமே மீணவர் விரோத அரசாக இருப்பதுதான் அது.

அந்த அதிமுகவின் ஜெயலலிதாதான் ராமேஸ்வர மீணவர்களை காப்பாற்றினாராம்

ஆனாலும் பன்னீருக்கு இம்ம்புட்டு ஆகாது..

மீணவர்களும் சும்மா இல்லை, இவ்வளவு பட்டும் அதிமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள், மானிய விலை டீசல் கொடுத்த காமராஜரை கூட நினைக்கமாட்டார்கள்

காமராஜர் என்ன படகோட்டி, மீணவநண்பன் என்றா நடித்தார்?

எம்ஜிஆர் அல்லவா அவர்களுக்காக நடித்தார்.

 
 
 

உண்ணாவிரத அரசியல்…

அக்கட்சியினர் பெரும்பாலும் பொதுபிரச்சினைக்கு போராடமாட்டார்கள், பெரும் போராட்டமெல்லாம் நடத்தமாட்டார்கள், ஆனால் தேர்தலில் மட்டும் ஜெயிப்பார்கள்

அவர்கள் பிதாமகன் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தது ஒருமுறை இந்திரா தமிழகத்திற்கு அரிசியினை குறைத்தார் என்பதர்காக‌

இன்னொருமுறை ஈழத்தில் படுகொலை நடந்தது என்பதர்காக. ஆனால் அவர்தான் முதல்வர், அவர் ஏன் பதவியினை ராஜினாமா செய்ய கூடாது என ஒருபயலும் கேட்கவில்லை, அவர் ஜாதகம் அப்படி

1993ல் ஜெயலலிதா ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தார், அது காவேரிக்காக, அப்போது அவர்தான் முதல்வர்

அதன்பின் அக்கட்சியினர் உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் அம்மாவினை விடுதலை செய் என நீதிமன்றத்திற்கு எதிரான உண்ணாவிரதம், போராட்டம், அழிச்சாட்டியம்.

இன்று பன்னீர்செல்வம் அவர்கள் முன்னாள் தலைவி மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதம் இருக்கின்றாராம்

நீதி என்றால், ஜெயலலிதா மருத்துவமனை செல்வது முதல் புதைக்கபடும் வரை அருகிருந்த சசிகலாவின் மீது விசாரணை வேண்டும் என்பது பொருள்

ஆக மகளிர் தினத்தில், ஒரு பெண்ணின் மரணத்திற்கு, இன்னொரு பெண்ணை விசாரிக்க சொல்லி உண்ணாவிரதம் இருக்கின்றார் முன்னாள் முதல்வர்

கொஞ்சம் ஓவராகத்தான் தமிழ்நாடு பெண்ணுரிமை கொடுத்துவிட்டது போல…

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்…

Image may contain: 1 person

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம்.

காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர்.

பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது.

இந்த போராட்டத்தின் தலைவிகளான‌ (கவனிக்கவும் நான் புரட்சியின் தலைவிகள் என சொல்லவே இல்லை..) கிளாரா ஜெட்கின், ரோஸா லக்ஸம்பர்க் ஆகியோரின் பெருமுயற்ச்சியால் 1910 ஆண்டு கோபன்ஹேகனின் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டபோது அந்த மார்ச் 8ஐ “சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக” ஆண்டுதோறும் கொண்ட முடிவெடுக்கப்பட்டது.

இன்றும் “காண்ட்ராக்ட் ஸ்டாப்” என ஒப்பந்தமிட்டு உழைப்புரிஞ்சும் அமெரிக்கா எளிதில் ஒத்துக்கொள்ளுமா? காவேரியில் கன்னடத்திடம் நீர் கேட்பது போல மிக வேகமாக மறுத்தார்கள்.

1945ல் ஐ.நா சபையிலும் இதே கோரிக்கை வைக்கபட்டபொழுது மறுத்தது அமெரிக்கா, (ஐ.நா சபையின் நிலமை நமது முதல்வர் பழனிச்சாமியினை விட‌ மகா மோசம்,70 வருட வரலாறு அப்படித்தான் ஐ.நா சபைக்காக அழுகிறது..)

இக்கால கட்டத்தில் இந்திய ஆண்களே சொத்து இருந்தால்தான் வோட்டளிக்க முடியும், அப்படியானால் பெண்களின் நிலை கிட்டதட்ட அதிமுக கருணாஸ் நான் தான் அடுத்த முதல்வர் என சொல்லிகொள்வது போல, கனவுகூட காணமுடியாத கற்பனை.

1925க்கு பின்னர் அமெரிக்காவின் எதிரியான சோவியத்யூனியன் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து என்னலாமோ செய்தது, குறிப்பாக 2 கோரிக்கைகள்

ஆண்களுக்கு நிகரான சம்பளம் (கம்யூனிசத்தில் ஆணெண்ண பெண்ணெண்ண எல்லாம் ஒரே தொழிலாளர்தாம், சம்பளம் கொடுத்தால்தான் பிரச்சினை, தேவைகள் எல்லாம் அரசு பார்த்துகொள்ளும்,வீணாக மக்கள் கைகளில் பணம் இருக்கவேண்டாம்) ஏற்றுகொள்ளபட்டது

8 மணிநேர வேலை (கம்யூனிச சித்தாந்தமே தொழிலாளர் நலன்பற்றியது, அதுவும் கம்யூனிசபூதம் தோழர்,தோழி என உலகை மிரட்டிய காலம் ) உடனே நிறைவேற்றி உலகிற்கு அறிவித்தது

பெண்களை அடக்கி வைத்திருந்த மதங்களுக்கு (உண்மையும் கூட) அடி கொடுத்தாகிவிட்டது, முதலாளி உலகின் தொழிலாளர்களை உசுப்பேத்தியாகிவிட்டது, அமெரிக்காவிற்கும், அதன் அடிப்பொடிகளுக்கும் செக் வைத்தாகிவிட்டது.

எந்த கிறிஸ்தவ திருச்சபை பெண்களை அடக்கி வைத்திருந்ததோ அவர்கள் முகத்திலும் கரிபூசியது.

உலகில் சாதாரண தீவிரவாதி மாரடைப்பில் செத்தாலே, தான் கொன்றதாக தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கவிற்கு இது தாங்குமா?

கொஞ்சம் கொஞ்சமாக குழம்பி 1975ல் அப்படியே “சர்வதேச உழைக்கும் பெண்கள் தின” கோரிக்கையை (அப்படியே ஏற்றுகொண்டால் அமெரிக்க கெத்து என்ன ஆவது??, திருத்த சொல்லி ஏற்றுகொண்டால் தானே உயரதிகாரி) திருத்த சொன்னது, பின்னர் ஏற்றுகொண்டது.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம் ஆன கதை இப்படித்தான்.

உண்மையில் உழைக்காத பெண்கள் என்று எந்த பெண்ணையாவது காட்டமுடியுமா? அடுப்படியோ இல்லை கிணற்றடியோ ஏதோ ஒரு வேலையை பெண்கள் செய்துகொண்டேதான் இருப்பார்கள், உழைத்து ஓய்ந்த முதியவர்களை தவிர.

இன்று எல்லா தமிழக அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிப்பார்கள், நாமும் தெரிவித்து கொள்வோம், முகநூலில் இருக்கும் சகோதரிகள் மட்டுமல்ல, உலகின் மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

லக்ஸ்,பேரல் லவ்லி இன்னபிற அழகு சாதன கம்பெனிகள் தங்களின் அழகான மாடல்கள்,நகை கடைகளின் நடிகைகள் என செயற்கை புன்னகையோடு வாழ்த்துக்களாக தெரிவிப்பார்கள்.

ஆனால் உண்மையில் டாஸ்மாக்கில் எல்லாம் இழக்கும் கணவனோ,மகனையோ பெற்ற பெண்கள். வரதட்சனை கொடுமையால் வாழ முடியாத பெண்கள்,

உழைக்கும் இடத்திலும்,பொது இடத்திலும் பாதுகாப்பில்லாத பெண்கள், சரிகா ஷா,டெல்லி சம்பவம், நந்தினி சம்பவம் வரை வெளியில் தெரிந்த, இன்னும் தெரியாத ஏராளமான பெண்களுக்கெதிரான‌ கொடுமைகள் நடக்கும் நாட்டில் தான், இன்னும் பெண் பல கண்ணீரோடு வாழும் நாட்டில்தான்

3000 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக்காக அரசனை எதிர்க்க துணிந்த கண்ணகியும்,

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் பிரச்சினைக்கு முன்பாகவே

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம்” என உலகிற்கு சொன்ன மகாகவி பாரதியும்,

1925 முதல் போராடி பால்ய விவாகம், தேவதாசி முறை இவற்றை ஒழிக்க அரும்பாடு பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்

1945 உலக மாநாட்டிற்கு முன்பே “பெண்களெல்லாம் ஆண்களை போல முடிவெட்டிகொண்டு, உடையணிந்துகொண்டு தன் சொந்த சம்பாத்தியத்தில் வாழும்வரை பெண்விடுதலை இல்லை” என இக்கால உண்மையினை அன்றே சொன்ன பெரியாரும்,

இந்த தமிழகத்திலிருந்து உலகிற்கே முதலில் மகளிர்வாழ்த்து சொன்னவர்கள்.

இந்த நவீன காலத்தில் பெண்ணுரிமை புரட்சியினை நிச்சயம் சோவியத் யூனியனே தொடக்கி வைத்தது, பெண்களுக்கு உரிமை, கல்வி , இன்னும் பல சலுகைகளை அதுதான் கொடுத்தது

சாதாரண பால்காரி தெரஸ்கோவாவினை விண்வெளிக்கு அனுப்பி வரலாற்றின் முதல் விண்வெளிபெண் என பதிந்தது

அந்த லெனின் இயக்கத்திற்கு பின் உலகம் தங்கள் நாட்டிலும் அப்படியான பெண் புரட்சிகள் வரலாம் என கருதி பெண்களுக்கு வாய்பளித்தன‌

உலகம் முழுக்க அதன்பின் பெண்கள் ஜொலிக்கவந்தார்கள், நிச்சயமாக அந்த வாசலை திறந்து வைத்தது சோவியத் சாதனை

இந்த லெனின் இயக்கத்திற்கு பின் பெண்களை கவுரவபடுத்திய இயக்கம் எம்ஜிஆர் அஇஅதிமுக இயக்கமே

தமிழகத்தின் இரு பெண் முதல்வர்களை அதுதான் கொடுத்தது, மூன்றாம் பெண் முதல்வர் மயிரிழையில் வாய்ப்பினை தவறவிட்டார்

30 வருடமாக அக்கட்சி பெண் தலமையில்தான் செயல்பட்டது, இன்னும் 20 வருடம் அப்படித்தான் செயல்படும் போலிருக்கின்றது, இன்றும் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி , கோகுல இந்திரா என பெண் தலைவர்கள் வரிசை அங்கும் உண்டு

அக்கட்சியின் சமீபத்திய பிரிவு கூட தீபா எனும் பெண் தலமையிலும், பன்னீர்செல்வம் அணியில் கூட பாத்திமாபாபு எனும் பெண்ணின் முன்னணியிலும் நடக்கின்றது

சினிமாவிலும், அரசியலிலும் எம்ஜி ராமசந்திரன் செய்த பெண் விடுதலை புரட்சிகள் கொஞ்சமல்ல, மனிதரை மகளிர் தினத்தில் மறக்கவே முடியாது.

அதனால் தமிழகத்தில் மகளிர் வாழ்த்து சொல்லும் பெரும் உரிமை அவர்களுக்கே இருக்கின்றது

இருக்கட்டும்

இன்றைய இந்தியாவில் எத்தனையோ பெண்கள் சாதிக்கின்றார்கள், தனி மனுஷியாக குடும்பத்தை காக்கும் பெண் முதல் 104 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திய பெண் விஞ்ஞானிகள் வரை வாழ்த்துகுரியவர்கள்

இப்படி பல வாழ்த்துகுரியவர்கள் இருந்தாலும், அபிமானத்திற்குரியவர் ஒரு பெண்ணாக இருந்துவிட்டால் வாழ்த்தாமல் இருக்கமுடியுமா?

யாரும் இல்லாமல் 1986களில் சினிமாவிற்கு வந்து, அப்பா, அண்ணன், மாமன், மச்சான் என யாருமில்லாமல் தனித்து போராடி அதில் தனக்கொரு இடமும் பெற்று

தமிழ்நாட்டில் காலூன்றி, எத்தனையோ எதிர்ப்புக்கும் அவமானங்களுக்கு இடையிலும் மிக தைரியமாக எல்லா எதிர்ப்புகளையும் அடித்து நொறுக்கி இன்று தனக்கென தனி இடம் பெற்றிருக்கும் குஷ்பூ நிச்சயம் தன்னம்பிக்கையின் வடிவம்

எத்தனையோ நெருக்கடிகள், வழக்குகள், மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று அசைக்கமுடியாத இடத்தினை அவர் பிடித்துவிட்டார்

ஜெயலலிதா போல அவருக்கு சினிமா வழிகாட்டிகளோ, அரசியல் வழிகாட்டிகளோ இல்லை. ஆனால் தனக்கான பாதையினை நதி கண்டுபிடித்து நடப்பது போல வெற்றிபடி ஏறிகொண்டிருக்கின்றார்

அவருக்கொரு ஸ்பெஷல் வாழ்த்து

மற்ற எல்லா மகளிருக்கும் வழக்கமான மகளிர் தின வாழ்த்து.